பூவிதழ் – 8

b94c9e3c03a96c8666f9a00d1a41b348-a8807048

அத்தியாயம் – 8

அவனது வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த தேன்மொழியிடம் பால் சொம்பைக் கொடுத்து, “நாங்க சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல. அவனிடம் கொஞ்சம் தணிந்துபோம்மா” என்று அறிவுரை சொல்லி அவளை அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

அவர்கள் சொன்னதை சிந்தித்தபடி அவள் அறைக்குள் நுழைய, “என்ன மேடம்! முதலிரவு அறைக்குள் சோகமாக வரீங்க?” நக்கலாகக் கேட்டபடி அவளின் கையிலிருந்த பால் சொம்பை வாங்கி டேபிளின் மீது வைத்துவிட்டு அவளின் பக்கம் திரும்பினான்.

தேன்மொழி இதழ்களில் புன்னகையை ஏந்தி நிற்பதைத் தவறாக புரிந்து கொண்டான். அவளின் சிரிப்பிற்கான அர்த்தம் கோபம் என்பதை உணராமல், “ம்ஹும்! இப்போ பார்க்க ரொம்ப அழகாக இருக்கிற” என்றவனின் கரம் அவளின் கன்னத்தைப் பதம் பார்த்தது.

அவனிடம் அடி வாங்கிய அதிர்ச்சியுடன் அவள் நிமிர்ந்து பார்க்க, “இப்போ அந்தக் கையை ஓங்கு பார்க்கலாம்” என்ற அவன் விழிகளில் கனல்வீசியது.

அவளைப் பழிவாங்கும் வெறியுடன் கலை அவளை நெருங்க, “இங்கே பாரு என்னோடு மோதினால் சேதாரம் உனக்குத்தான். நான் மத்த பொண்ணுங்க மாதிரி உனக்கு அடங்கியொடுங்கி சலாம் போடும் ரகம் கிடையாது” அழுத்தம் திருத்தமாக கூறியவளின் வலதுக்கரம் அவனை அடிக்கச் சென்றது.

இடதுகையால் அவளைத் தடுத்தவன், “இது இந்த திமிர்தான்டி எல்லாத்துக்கும் காரணம்” என்று சொல்லி அவளின் முகத்தை அருகே இழுத்து, அவளின் செவ்விதழை தன் இதழ்களால் அழுத்தமாய் மூடினான்.

அவன் இதழ் முத்தத்தில் அவள் மனம் மயங்க மறுத்தது. பல பூவினில் தேனெடுத்தவன் தன்னையும் அதில் ஒருத்தியாய் நினைத்து தீண்டுவதை அவள் மனம் ஏற்க மறுத்தது. அவளின் கரங்கள் அவன் நெஞ்சினில் கைவைத்து தள்ளிவிட முயற்சி செய்ய, அதை வெற்றிகரமாக தோற்கடித்து அவளின் இதழில் தேனைப் பருகினான்.

இருவரின் நுரையீரலுக்கும் சுவாசம் தேவை என்னும் வேலை அவளைவிட்டு அவன் விலகியவன் காட்டிய வன்மையில் அவளின் இதழ்கள் தடித்திருந்துச் சிவந்திருந்தது. அவளின் நெஞ்சில் ஏதோவொன்று சுக்குநூறாக உடைந்தது. அது அவளின் தைரியமா? தன்னம்பிக்கையா? துணிச்சலா? என்பதை அவளே அறியாள்!

அவளை இரு கரங்களில் ஏந்திச்சென்று படுக்கையில் போட்டு, அவளின் மீது பரவிப் படர்ந்தான். தேன்மொழி தன் பலத்தை பயன்படுத்தி  அவனிடமிருந்து விலக எவ்வளவோ தூரம் போராடினாள். அவன் கரங்கள் கூந்தலில் தொடங்கி படிப்படியாக கீழே இறங்கியது. அவன் கரங்கள் படிந்த இடங்கள் அவளுக்குள் கலவரத்தை உண்டாக்கியது.

அவளின் உள்ளுணர்வுகளை உன்னிப்பாக படித்தவன் போல, “எத்தனையோ பெண்களைத் தொட்ட கரங்கள் உன்னை ஆளும்போது அவமானமாக இருக்கா? இல்ல அருவருப்பாக இருக்கா?” என்று காதோரம் மெல்லியக் குரலில் கேட்டான்.

அவன் மீதிருந்த கோபத்தில் சுற்றிலும் தேடியவளுக்கு கையோடு கொண்டு வந்த பால் சோம்பு நினைவு வர, சட்டென்று அவனிடமிருந்து விலகியவள் கொதிக்கின்ற பாலை எடுத்து அவன் மீது ஊத்தினாள்.

அவளைப்போல சூடாக இருந்த பால் அவனது தேகத்தில் எரிச்சலை உருவாக்கிட, “ஏய் உன்னை இன்னைக்கு என்ன செய்யறேன் பாரு” என்று கத்தியபடி கொத்தாய் அவளின் கூந்தலைப் பற்றி இழுத்தான்.

அவனின் ஆசைக்கு இணங்காமல் திமிறிய தேன்மொழி, “உன்னைக் கொல்லும் அளவிற்கு கொலைவெறியுடன் இருக்கேன். படுக்கையில் படுக்க பெண் வேணும்னா பணம் கொடுத்தால் எத்தனையோ பேர் வருவாங்களே! அதை விட்டுட்டு ஏன்டா கல்யாணம் என்ற பேரில் என் நிம்மதியைக் கெடுக்கிற” என்றவள் கோபத்தில் கேட்க, அடுத்த கணம் அவனது வலதுகரம் அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது.

அவள் கோபம் குறையாமல் அவளை நிமிர்ந்து பார்க்க, “படுக்கை சுகம் வேணும்னா அதைத் தணிக்க எத்தனையோ பெண்கள் இருக்காங்க. ஆனால் எனக்கு தேவை அது இல்ல. என் மனக்காயத்திற்கு மருந்து நீ மட்டும்தான். உன்னால் ஏற்பட்ட அவமானத்திற்கு உன்னையே மருந்தாய் பயன்படுத்த கல்யாணம் பண்ணினேன்” என்றவன் வன்மையுடன் அவளை இழுத்து அணைத்தான்.

அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தபோதும், அவளின் வார்த்தைகள் அவன் இதயத்தை இரண்டாக கூறுபோட்டது. அவளுடன் இயல்பாக கூடலில் ஈடுபட முடியாமல், “ஐயோ” என்று கோபத்தில் கத்தினான்.

அவன் நெஞ்சினில் இரு பிம்பங்கள் எழுந்து அவனை ஆட்டி வைக்க, “எனக்கு பிடிக்காத விஷயத்தை ஏன் செய்ய சொல்றீங்க. எனக்கு இந்த விஷயம் சத்தியமாக பிடிக்கல” என்ற குரல் விகாரமாக அந்த அறையெங்கும் எதிரொலிக்க, அவள் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள்.

“இல்ல நீ இதை செய்யணும்” என்று பிம்பங்கள் அவனை மிரட்டிட,

“முடியாது! முடியாது! முடியாது!” என்று இரு காதுகளையும் மூடி வெறிபிடித்தவன் போல கத்திய கலைச்செல்வன் அவளை விட்டு விலகி, அந்த அறையில் இருந்த மதுபானத்தை எடுத்து அப்படியே தொண்டையில் சரித்தான்.

இப்போது அந்த பிம்பம் அவனைவிட்டு விலக, “தேன்மொழி” என்றபடி படுக்கையின் அருகே வந்தவன், மெல்ல அவள்மீது பரவிப் படர்ந்தான். அழகிய பூவின் இதழில் தேனெடுக்கும் வண்டாய் மாறி அவளைத் தீண்டினான்.

அவளின் நாணம் என்ற தடையை உடைத்து முன்னேறியவன், “என் தேன்மிட்டாய்” என்றபடி அவளின் நெற்றியில் முத்திரை பதித்து அவன் ஆழ்ந்த நித்திரைக்குச் செல்ல, அவன் தேடலில் வாடியக் கொடியாய் மாறியவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

அவளைப் பழிவாங்க துடிக்கும் இதயம் இருக்கும் நெஞ்சத்தை அவளுக்குத் தலையணையாய் கொடுத்துவிட்டு கண்ணயர்ந்தான். முதலிரவு முடிந்த மறுநாள் கண்விழித்த தேன்மொழியின் விழிகளில் கண்ணீர் கரையுடைத்தது.

இரவு அவன் வன்மையாக நடந்தபோது வராத அழுகை இப்போது வந்து அவளை இம்சித்தது. அவனிடம் தோற்றுப் போய்விட்ட அவமானத்தில் அவள் துவண்டு போனாள்.

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு அழகான விஷயம். தன்னை மட்டும் நேசிக்கும் ஒருவனை மாலையிட வேண்டும் என்ற கனவினை கலைத்து, தன் விருப்பம் இல்லாமல் மணந்தவன் மீது அவளுக்கு காதல் இல்லைதான்.

ஆனால் தாம்பத்தியம் என்ற பந்தத்தில் இணைய அவன் அவகாசம் தருவான் என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி முதலிரவை கொண்டாடிய கலைச்செல்வனின் மீது அவளுக்கு கோபம் வந்தது.

அதைக் காட்ட முடியாமல் ஏதோவொன்று அவளைத் தடுத்தது. உடனே அவனைவிட்டு விலகி எழுந்த தேன்மொழி கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தாள்.

அவள் முகத்தில் சுடர்விடும் தன்னம்பிக்கை, தைரியம் இரண்டையும் தொலைத்துவிட்டு, இருள் சூழ்ந்து கிடந்த முகம் கண்டு, “இது நான் இல்ல” என்றவள் கைக்கு கிடைத்த பொருளைத் தூக்கி கண்ணாடியின் மீது விட்டெறிந்தாள்.

அது கனமான பொருள் என்பதால் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. அந்த சத்தத்தில் கண்விழித்த கலைச்செல்வன், “ஏய் இப்போ எதுக்காக கண்ணாடியை உடைச்சே” அவனின் தூக்கம் தடைபட்டுவிட்ட கடுப்பில்!

“நான் நானாக இல்லை என்று சொன்ன பிம்பத்தை உடைச்சிட்டேன்” என்றவள் கோபத்துடன் கண்ணாடியின் மீது ஏறி சென்று பின்கதவைத் திறந்துக்கொண்டு வெளியே சென்றாள்.

அவளின் பின்னோடு சென்ற கலைச்செல்வனோ, “எனக்கும் அதுதான் வேணும். மற்றவர்களுக்கு ஒளி தரும் எண்ணத்தில் மெழுகுவர்த்தி தன்னை தானே அழிச்சுக்கிற மாதிரி நீயும் உன்னை அழிச்சுக்கணும்” என்று கூறியவனை, எரிக்கும் நோக்கத்துடன் பார்த்தாள்.

அவனை ஆழ்ந்து நோக்கிய தேன்மொழி, “அந்த தீயில் உன்னோட பொய்யான முகமூடியையும் கிழித்து எறிவேன். நீ போட்ட சவாலில் இன்னைக்கு ஜெய்த்து இருக்கலாம். ஆனால் அதை வெற்றி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தேன்மொழி யாருன்னு உனக்கு காட்டுறேன்” என்று அவள் சவால்விட, அவன் கலகலவென்று சிரித்தான்.

“உன்னால என்னைக்குமே என்னைத் தோற்கடிக்க முடியாது” என்று அவன் கர்வத்துடன் கூற, “அதையும் பார்க்கலாம்” என்று திமிராக கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

சற்றுமுன் அழுததால் மனதில் இருந்த பாரம் கொஞ்சம் இறங்கியிருக்க, சில்லென்ற தண்ணீர் பட்டவுடன் உச்சந்தலை குளிர்ந்தது. நேற்று இரவு நடந்தது அவள் மனதில் படமாக ஓடியது. கலைச்செல்வன் நடந்து கொண்ட விதமே வித்தியாசமாய் தோன்றியது.

மனிதனின் உடலும், மனமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஒரு மனிதனின் மனதைப் பாதிக்கும் விஷயம் காலப்போக்கில் மனநோயாய் மாறிவிடும் என்று அவள் எங்கோ படித்தது இன்று அவளின் நினைவிற்கு வந்தது. ஒருவன் இயல்பில் கெட்டவனாக இருப்பதற்கும், அதுவே இடையில் அவன் மாறுவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இரவு அவன் பேசியதை வைத்துப் பார்க்கும்போது, ‘அவன் இயல்பாகவே கெட்டவன் கிடையாது என்றால், அப்போ அவனின் நேற்றைய நிலைக்கு யார் காரணம்’ என்ற தீவிரமான சிந்தனையுடன் குளித்துவிட்டு வெளியே வந்தவளின் எதிரே வந்தான் கலைச்செல்வன்.

அவளைச் சுடிதாரில் பார்த்தும், “இது எனக்கு பிடிக்கல. முடிந்தவரை புடவை கட்டு. அதுதான் உனக்கு நல்லா இருக்கு” என்று அவன் ரசனையுடன் கூற, “ஸாரி எனக்கு இதுதான் வசதியாக இருக்கு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர நினைத்தாள்.

அதற்குள் அவளின் கையைப்பிடித்து இழுத்தும் அவன் மீது மோதும் முன்பே சுதாரித்து விலக, “எனக்கு எது வசதியோ அதைதான் நீ உடுத்தணும். உனக்குப் பிடித்ததைப் போட்டுக்கொண்டு நீ சுற்ற முடியாது. என்வீட்டில் நீ என் விருப்பபடி இருக்கணும். அவ்வளவுதான்” என்றான் அழுத்தத்துடன்.

அவனின் விழிகளைப் பார்த்து, “உன் விருப்பத்திற்கு முக்கியத்துவம் தரும் ஆள் நானில்லை. கொஞ்சநேரத்திற்கு முன்னால் சொன்னேனே! அதுக்குள் மறந்து போயிடுச்சா?” என்று கேள்வியாக இடதுபுருவத்தை ஏற்றி இறக்கியபடி அங்கிருந்து சென்றாள்.

“என்ன செய்தாலும் மசியாமல் இரும்பு மாதிரி இருக்கும் இவளை!” என்று பல்லைக் கடித்தபடி குளியலறைக்குள் புகுந்தான் கலைச்செல்வன்.

அவள் அறையைவிட்டு வெளியே வரும்போது ராமாத்தாள் பாட்டியும், செந்தாமரையும் சமையலறையில் இருக்க, தங்கைகள் இருவரும் கல்லூரி செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

முதல் வேலையாக பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி சாமி கும்பிட்டு வெளியே வரும்போது, “என்னம்மா இப்போதான் எழுந்தியா?” என்றபடி ஹாலுக்கு வந்த தாயை இழுத்துச்சென்று, வீட்டின் பத்திரத்தை அவரின் கையில் கொடுத்தாள்.

அத்துடன் தங்கைகளுக்கு பீஸ் கட்டிய பில்லையும் தாமரையிடம் கொடுத்து, “ஒரு மகளாக என் கடமையில் இருந்து எள்ளளவும் நான் விலகவே இல்ல. ஆனால் தாய் என்ற கடமையில் இருந்து நீங்க விலகி கிட்டத்தட்ட ஒருமாசம் ஆகிடுச்சு. இப்பவும் நான் அமைதியாக இருக்க ஒரே காரணம் என்னோட முடிவு யாரையும் பாதிக்கக்கூடாது என்றுதான். நான் சொல்வது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்றவள் தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவளின் பேச்சில் ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தார் செந்தாமரை. சிலநொடிகள் சிந்தனைக்கு பிறகுதான் அவள் தன்னை அம்மா என்று அழைக்கவில்லை என்ற உண்மையை அறிந்தார். அவளின் விஷயத்தில் தவறு செய்துவிட்டதை நினைத்து அவரின் மனம் வலித்தது.

அதே சமயத்தில் குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி வீட்டிற்குள் நுழைந்தவன், “பாட்டி மதியம் சாப்பாடு செய்ய வேண்டாம். நானும், தேனுவும் மேகமலை கிளம்பறோம்” என்று கூற, “சரிப்பா” என்றார் ராமாத்தாள்.

அங்கே திகைத்து நின்றிருந்த செந்தாமரை முகத்தைப் பார்த்து, “அத்தை என்ன சிலைபோல நின்னுட்டு இருக்கீங்க? உங்க மகள் காலையிலேயே மந்திரிச்சு விட்டுட்டாளா?” என்று கேட்க, அவரும் ஒப்புதலாக தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

காலை உணவை வீட்டில் முடித்த கையுடன் மேகமலை கிளம்ப தேவையான அனைத்தையும் அவன் எடுத்து வைக்கும் போதுதான் கவனித்தான். அவள் சுடிதார் எடுத்து வைப்பதைக் கண்டு கோபத்தில் அதை எடுத்து கிழித்து எறிந்தான்.

அவனின் ஒவ்வொரு செயலில் இருந்தும், அவள் மீதான உரிமை வெளிபட்டது. அதன்பிறகு அவன் சேலை எடுத்து வைக்க கண்டு, “என் விருப்பத்தை தடுக்க நீங்க யாரு?” என்று கோபத்துடன் கேட்டாள்.

“நான் யாரு என்பதில் உனக்கு சந்தேகம் இன்னும் இருக்கா?” என்ற கேள்வியுடன் கலைச்செல்வன் அவளை நெருங்க, “ஏய் கேட்ட கேள்விக்கு அங்கேயே நின்று பதில் சொல்லலாம். அதுதான் ஆண்டவன் உனக்கு வாய் பேசும் திறனை கொடுத்திருக்கிறார் இல்ல”என்று கேட்டாள்.

அவள் பேசுவதைக் காதில் வாங்காமல், “நீயெல்லாம் வாயால் சொன்னால் கேட்கும் ரகம் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று சொல்லி கண்ணிமைக்கும் நொடியில் அவளை இறுக்கியணைத்து, தன் இதழை அவளின் இதழோடு உறவாட விட்டான்.

அவளைவிட்டு விலகிய கலைச்செல்வனிடம், “காதல் இல்லாமல் ஒரு பெண்ணைத் தீண்டுவது வேசித்தனத்திற்கு சமம்னு உனக்கு தெரியாது” என்று அவன் கேட்க, ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்” என்று இயல்பாக கூறிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

அவன் முதுகின் மீது பார்வையைப் படரவிட்டு இருந்த தேன்மொழியோ, “உன்னைப் பார்க்கும் போது மட்டும், டோண்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர்ன்னு தோணுது” என்று அவள் அழுத்தமாய் கூற, சிலகணங்கள் அசைவற்று சிலையாகி நின்றான் கலைச்செல்வன்.

ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடக்கூடாது என்பதுபோலவே, அவனைப் பார்த்தும் தவறு செய்பவன் என்று எடைபோட்டது தவறென்று ஒரே நாளில் புரிந்து கொண்டாள். ஒருவன் கெட்டவனாக உருவெடுக்க அவன் மட்டும் காரணமில்லை. அவனுக்குப் பின்னால் ஏதோவொரு அழுத்தமான காரணம் இருக்கும் என்ற முடிவிற்கு வந்தாள்.

பால் விஷமாக யார் காரணம் என்ற சிந்தனையில் அவள் மனம் இறங்க, “சரி வா கிளம்பலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு மேகமலை கிளம்பினான் கணவன். அவன் உண்மை முகம் என்னவென்று அறிவாளா தேன்மொழி.