பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 22

தனது மேல் அதிகாரியிடம் நிசாப்பை கைது செய்ய உத்தரவு வாங்கியவன். அதனைச் செயல் படத் தொடங்கியிருந்தான்… தனது கீழ் இருக்கும் காவல் அதிகாரிகளை நம்புவது முட்டாள் தனம் என்றெண்ணியவன். தனது நண்பன் ப்ரணவிடமும், தீராவிடம் உதவிக் கேட்டான்…( தீரா(து)காதல் கதை)

தமிழ் நாட்டில் ஆசிஸ்டென்ட் கமிசனராக இருக்கிறான் ப்ரணவ்… ரவுடியாக தன்னைக் காட்டிக்கொண்டு வாழ்ந்த தீரவர்த்தனும் தாத்தாவின் பணியினை ஏற்றுக்கொண்டு  தொழிலதிபராக இருக்கிறான்… 

இன்றளவும் மூவரும் நண்பர்களாகவும் குடும்பமாகவும் இருந்து வருகின்றனர்… 

கான்பிரண்ஸ் காலில் இருவரையும் அழைத்தான் நிசான்..

“சொல்லுடா கமிஷ்னரே! எப்படி இருக்க? வேலை எப்படி இருக்கு? ” என ப்ரணவ் கேட்கவும். ” இருடா!  ” என்றவன் தீராவையும் அழைத்தான்..” சொல்லுங்க மும்பை கமிஷ்னரே! ரொம்ப பிஸி போல, போனதும் ஒரு போனைக் கூட காணோம்.” என்றான்..

” மச்சீஸ்! இங்க அடுத்து அடுத்து கேஸ் அதிகமா வருது டா! இப்ப கூட ஒரு பெரிய கேஸ் வந்திருக்கு! எனக்கு உங்க உதவி வேணும்.., இங்க எனக்கு கீழ் இருக்க காவல் அதிகாரியை நம்ப முடியல, அதுனால ப்ரணவ், நம்ம ப்ரண்ட்ஸ் சர்கில் இருக்க போலீஸைஅனுப்புடா, தீரா, நீயும் உன் ஆட்களை அனுப்புடா. ஒரு கேங்கயே பிடிக்கணும்… இது அவ்வளவு சாதாரண கேஸ் இல்ல மச்சி. ” என நிசாப்பைப் பற்றியும் அவனது வழக்கையும்  பற்றியும் முழுவதுமாகக் கூறினான்.

” தமிழ் நாட்டை விட ரொம்ப மோசமா இருக்கும் போலவே டா… சரி நிசான் நான் நம்ம ஆட்களை அனுப்புறேன்,.. ” என்றான் ப்ரணவ்

 ” டேய் எந்த ஊரா இருந்தா என்னடா? எல்லா குற்றமும் நடக்கத்தானே செய்து….  தீரா, நீ என்ன பதில் சொல்லாம இருக்க? ” எனவும்.

” இல்ல நிசான், முதல் நம்ம பசங்க தனியா இருந்தானுங்க அனுப்பி வைப்பேன்..  ஆனா, இப்ப குடும்பமா இருக்கானுங்க அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு நிசான்..” என்றான்.

” என்ன தீரா? நீயா இப்படி பேசுற? யாருக்கு தான் குடும்பம் இல்லை? இது போல எத்தனை பெண்கள் அவனால தற்கொலை செய்ய போறாங்களோ! இன்னும் எத்தனை ரிப்போட்டர் அவனால கொல்லப்படுவாங்களோ!.. இங்க ஒரு ஏரியாவையே தன் கட்டுப் பாட்டுக்குள்ள வச்சிருக்கான். நிச்சயம் அவனைப் பிடிக்கிறது கஷ்டம் இந்த விசயம் கொஞ்சம் லீக் ஆனாலும் அவன் பதுங்கிடுவான்.. அப்புறம் அவன் மேல கேஸ் கொடுத்த அந்த மயூரனை, சீமாவையும் கொன்னுடுவான் தீரா, கொஞ்சம் யோசி  ” என்றதும்,, ” சாரி, நிசான்… நான் பசங்களை அனுப்பிவைக்கிறேன். என் உதவி தேவைப்பாட்டாலும் சொல்லு நான் வாரேன்.., ” அதன் மூவரும் பேசிவிட்டு வைத்தனர்.

தமிழ்நாட்டிலிருந்து அவர்களும் வரவே! தனது திட்டத்தை விவரித்தான். அதைப் போலவே காமத்திபுராவில் அவன் இருந்த இடத்தை வளைத்தனர் நிசானின் ஆட்கள்… 

சிவாவும் கணேஷ்ஷூம் நிசாப்பின் ஆட்களிடம்  போதைப் பொருளை சப்பளைப் பத்திப் பேசி, நிசாப்பை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர்.. 

இருவரும் நிசாப்பைச் சந்தித்தனர்.முதலில் அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கிறதா? சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்திருந்தனர்…

அவர்கள் டீலீங் பேச,அவர்கள் அசந்த நேரம் நிசான் உள்ளே நுழைந்தான்.. நிசாப்பின் கழுத்தில் துப்பாகியை வைத்தான்.. அங்கிருக்கும் ஒட்டு மொத்த ஆட்களையும் வளைத்துப் பிடித்தனர்…

நார்காட்டிக்ஸ் டிப்பார்மெண்ட் அந்த இடத்தில் இருந்த போதைப் பொருளை சீஸ் பண்ணினார்கள்… 
நிசாப் கைதான செய்தியைக் கேட்தும் ரிப்போர்ட்களும் ஒன்றுக் கூடினார்கள்.. 

” ஷ்பனா கொலை வழக்குல தான் நாங்க நிசாப்பையும் நிசாப் ஆட்களையும் கைதி செய்தோம். அந்த வழக்கைப் பற்றி தகவல் சேகரிக்கச் சென்ற என்.சி சேனல் ரிப்போர்ட்டர் வருண் நிர்மலையும் கொன்றுருக்காங்க… தகுந்த ஆதரங்களோடு தான் நாங்க அவனையும் அவன் ஆட்களையும் கைது செய்தோம்.. ” என்றவன் கூறிச் சென்றுவிட்டான்..
அனைத்து தொலைக்காட்சியிலும் இதுவே முக்கிய செய்திகளாக இருந்தது…. 

பலராமன், மும்பை இரயில் நிலையத்தில் வந்து இறங்கியவர் , ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டு குளித்து முடித்து தயாராகி வந்தவர். தன் தங்கையை அழைக்க. அவருக்கோ அப்பொழுது தான் நியாபகமே வந்தது… தன் அண்ணனை வரவேற்பு விழாவிற்கு அழைத்தது.. நேற்று இரவே   அவர்  லட்சணனிடம்  தகவலைச் சொல்லிவிட்டார். அதை தன் மனைவியிடம் கூற மறந்து போனார்.. 

இன்றோ அவர் வந்திருப்பதைத் தெரிவிக்க, கலக்கம் கொண்டவர் கோயிலுக்குச் செல்வதாக அனைவரிடம் கூறினார்.. விஷ்ணுவும் தானும் உடன் வருவதாகச் சொல்லவும் அவளை அழைத்துக்கொண்டுச் சென்றார் கோயிலுக்கு.

‘ பிள்ளையார்ப்பா! என் அண்ணனைப் பார்த்ததும் இவ என்ன சொல்ல போறாளோ!  வரப் போற பிரச்சனையை சமாளிக்க தைரியத்தைக் கொடுப்பா! ‘  என வேண்டிக்கொண்டார்..

‘ பிள்ளையார்ப்பா! வருணை என் கிட்ட சேர்த்துவைச்சிடு!..  எனக்கு அவன் வேணும்.. அவனுக்கு ஒண்ணும் ஆகிருக்க கூடாது.. மயூரனோட இறந்து போன நண்பனா வருண் இருக்கவே கூடாது.. ‘ அவளது வேண்டுதலையும் வைக்க, பாவம் அவர் என்ன தான் செய்வார் யாரு வேண்டுதலைத் தான் நிறைவேற்றுவார்.

இங்கோ மயூரனுக்கோ மேத்தாவின் மூலம் விசயம் வந்து சேர, டீ.வியை ஆன் செய்து பார்த்தவனுக்கு, ஒரு பக்கம் சந்தோசம் என்றால் மறு பக்கம் கலக்கமும் இருந்தது. இதை விஷ்ணுக் கண்டால் என்ன ஆகுமோ? அவள் என்ன முடிவெடுப்பாளோ! ‘ என யோசிக்கும் போதே நடுங்கிப் போனது அவனது ஊண்.

 ” அப்பா! நிசாப்பை கைது பண்ணிட்டாங்களாம்.. டி.வி பேப்பர்  முழுக்க இந்த நியூஸ் தான் போயிட்டு இருக்கு! நிச்சயம் விஷ்ணுக்குத் தெரிந்திடும்பா… அடுத்து அவ என்ன முடிவெடுப்பா என்னால யோசிக்க கூட முடியலப்பா? ரொம்பவே பயமா இருக்குப்பா! ” என்றவனின் குரலில் அப்பட்டமாகவே பயமிருந்தது.

” மச்சானும் வந்திருக்கார் மயூ! முத்து அவரைத்தான் பார்க்க போயிருக்கா! விஷ்ணுவும் கூட அழைத்துப் போயிருக்கா! ” என்றதும் மேலும் அதிர்ந்தவன்,

” அம்மா என்கிட்ட எதையும் சொல்லலயே! ஐயோ வருண் செத்தது தெரிந்தாலே தாங்கிக்க மாட்டா! இதுல இந்த அதிர்ச்சியும் தெரிய வந்தா, நீங்க அம்மாக்கு போன போட்டு அவளை அழைச்சுட்டு வர சொல்லுங்கப்பா. ” என்றான் பதட்டம் நிறைந்தே!

 அவரும் முயற்சி அவரது அழைப்பை அவர் ஏற்கவில்லை.., இங்கோ கோயிலை விட்டு வெளியே இருவரும் வர. அங்கே பலராமன் இருவருக்காகவும் காத்திருந்தனர்.

 ” முத்து, நீ ஏன் பதட்டமாவே இருக்க? என்னாச்சு உனக்கு? ” என கேட்டுக்கொண்டே வந்தாள். ” அதெல்லாம் ஒண்ணுமில்ல விஷ்ணுமா… ” என சமாளித்தாலும் பயம் அப்பட்டமாகவே தெரிந்தது. ” விஷ்ணுமா… உன் கிட்ட இருந்து ஒரு உண்மையை மறச்சுட்டேன். அந்த உண்மையைத் தெரிந்ததும் இந்த முத்துவை நீ வெறுத்திட மாட்டேல என் மேல கோபட மாட்டேல… ” என பீடிகைப் போட. 

” நான் வெறுக்கிற அளவுக்கு அப்படி என்ன உண்மையை நீ மறைச்ச  முத்து?.. ” எனவும் அமைதியாக நின்றார். ” இங்க பாரு , இந்த சீரியல் வர தயங்கி தயங்கி நின்னு உன் முகத்தை நூறுதடவ கட் பண்ணிக்காட்டி இந்த சீன் எல்லாம் வேணாம்  சீக்கிரமா சொல்லு என்ன உண்மைன்னு?” என்றதும்..

” நான் தான் உன்னோட அத்தை… வீட்டை விட்டு ஓடிவந்த உன் அத்தை முத்து லட்சுமி நான் தான். உன் அப்பா என் அண்ணன்…. ” என்றதும் எதிர்பாராதவளோ அடுத்து என்ன கேட்க சொல்வதென்றே புரியாமல் விழித்தாள்.. 

” என் அண்ணன், உன் அப்பா உன்னைப் பார்க்க வந்திருக்கார்..” அவரை நோக்கிக் கை காட்ட அங்கே தன் மகளைப் பார்த்த சந்தோசத்தில் இருந்தார்.. 

இதுவரைக் கேட்டதெல்லாம் ஒரு கணம் மறந்து போனது அவரைக் கண்டதும்.. எங்கோ மூலையில் தன் குடும்பத்தைப் பத்தின ஏக்கம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. யாரெனும் ஒருவராவது தன்னை தேடி வரமாட்டார்களா? தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா ? என்ற எண்ணம் இருந்தது.., தன் குடும்பத்தை எண்ணும் போது, சொரனை கொஞ்சம் மட்டு பட்டுதான் போனது.. ஒடிச்சென்று அவரை அணைத்துக் கொண்டாள்… ” அப்பா! என்னைத் தேடியா வந்தீங்க? ” அவள் கண்களில் அன்பு நீராய் நின்று பணித்தது.. ” ஆமாடா விஷ்ணு! நல்லா இருக்கீயா? ” எனக் கேட்டவரின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள்…. அதன் பின்னே நினைவுக்கு வர, ” அப்பா, அவங்க சொன்னது உண்மையா? அவங்க தான் என் அத்தையா? ” என்றதும் ஆமாம் என்று தலையசைக்க, அவளுக்குத் தலைச்சுற்றுவது போலிருந்தது.

” நான் இங்க தான் இருக்கேன்.  உங்களுக்கு இவங்கச் சொல்லித்தான் தெரியுமா? இவங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்? ” என கேட்க. அவர் தயக்கத்தோடு சொல்ல வருவதற்குள் அங்கே அருகே இருந்த,  எல்க்ட்ரானிங்ஸ் பொருட்கள் இருக்கும் கடையில் மாடலாக வைத்திருந்த எல்.ஈ டி  டீ. வியில் அன்றைய நியூஸ் ஒளிப்பரப்பானது.. மக்கள் கூட்டமாக சத்தம் போட்டுக்கொண்டு அதனைப் பார்த்துக்கொண்டிருந்தனர்… 

அதில் ஆங்கில நியூஸ் சேனலும் ஒளிப்பரப்பாக…. அதில் வருணின் புகைப்படம் வர அதனைப் பார்த்தவள் அருகே செல்ல. அவன் இறப்பைப் பற்றிக் கூறிக்கொண்டிருக்க, நெஞ்சடைக்க மயங்கி சரிந்தாள்… 

அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர் இருவரும்… 

அவளைப் பரிசோதித்த மருத்தவர் “ஒண்ணுமில்ல, அதிர்ச்சியில் மயங்கி இருக்காங்க, கண்விழிச்சதும் பாருங்க  ”  என்று கூறிவிட்டுச் சென்றார்., முத்து தகவலை கூற  மயூரனும் லட்சுமணனும்  கிளம்பி அங்கு வந்தனர்… 

” என்னம்மா ஆச்சு? ஏன் அவ மயங்கி விழுந்தா? ” 

” மயூ! நான் என்னைப் பத்தியும் அண்ணனை பத்தியும் சொல்லும் போதே! அங்க  எலக்டானரினிங்க்ஸ் கடையில மாடலுக்காக வச்சிருந்த டீ.வில வருணைப் பத்தினநியூஸ் வந்தததைப் பார்த்து மயங்கிட்டா மயூ! ” என்றார்..

” ஏன் தம்பி, நீங்க இன்னுமா  வருணைப் பத்திச் சொல்லல? உங்களுக்கு ரிசப்சன் சொன்னதும் என் பொண்ணு உங்களை ஏத்துக்கிட்டா சந்தோசப்பட்டேன்.. அவளைப் பார்க்கணும் ஆசையில தான் வந்தேன். ஆனா.. எனக்கு பயமா இருக்குத் தம்பி.. ” என அவனது கையைப்பற்றி அழுதார்..

” எனக்குத் தைரியம் இல்ல மாமா உண்மையைச் சொல்ல!… வருண் கிடைக்கலேன்னா  நான் செத்துருவேன் அவ சொல்லும்  போதெல்லாம் எனக்குள்ள பயம் இருந்தது உண்மைதான். அதுவே என்னை அவகிட்ட சொல்லாம தடுத்தது மாமா.., கண் விழிச்சதும் அவ என்ன கேட்பா தெரியல? ” என அவரது கையை அழுத்தி அழுதான்..

நால்வரும் அவளைக் காண உள்ளே சென்றனர். மெது மெதுவாக விழித்திறக்க, கண்களில் கண்ணீர் வழிந்தது. ” விஷ்ணு…. ” என அவளருகில் அமர்ந்திருந்த பலராமன் அழைக்க, சுயநினைவை அடைந்தவள், தன் கையில் இருந்த வென்பிளானை கழட்ட முயற்சித்தாள்..

” விஷ்ணு, என்ன பண்ற நீ? அதை ஏன் மா நீ கழற்ற ? ” என தடுக்க முயற்சிக்க,   ” நான் வருணைப் பார்க்கணும். அவன் எனக்கு வேணும்.நான் வருணைப் பார்க்கணும் விடுங்கப்பா… ” என ஆர்பாட்டம் செய்ய, ” வருண் உயிரோட இல்ல மா அவன் இறந்துப் போயிட்டான்… ” 

” நீங்க பொய் சொல்லுறீங்க! வருண் உயிரோட தான் இருக்கான், அவன் சாகல… செத்தது என் வருண் இல்ல… அது என் வருண் இல்லை,.. ” என மீண்டும் அதையே சொல்ல.. “விஷ்ணுமா, வருண் இறந்து ஒரு மாதம் ஆக போகுது. வருண் உயிரோட இல்லை.. இதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.,”  என முத்து கூற அதிர்ந்து போனவள். ” வருண் இறந்து ஒரு மாசம் ஆகப்போகுதா? ஏன்  எல்லாரும் என்கிட்ட இருந்து மறைச்சீங்க? எதுக்கு இந்த ட்ராமா? ஐயோ வருண்… “என தலையில் அடித்து அழுத்தாள்.. 

” விஷ்ணு  அழாதடா! ஏற்கனவே உனக்கு உடம்பு சரியில்ல,.. வா டா வந்து படுத்துக்கோ… ” என அவர் கெஞ்ச.. ” இனி நான் எதுக்குப்பா உயிரோட இருக்கணும்? என் உயிரே இல்லையே.. இனி நான் எதுக்கு வாழணும்? விடுங்கப்பா! நானும் அவன் கூடயே போறேன்..” என கத்தி அழுக,

 ” விஷ்ணு, நாங்க இருக்கோம்மா, எங்களுக்கு நீ முக்கியம் விஷ்ணு! போனவனை நினைச்சு அழுகாதடா.. ” என அவளை சமாதானம் செய்ய முயல. 

” எப்படி நினைக்காம இருக்க சொல்லுறீங்க? அவன் என் உயிருப்பா… என்னை விடுங்க நான் செத்து போறேன்… ” என கதற..

” விஷ்ணு! முட்டாள் தனமா நடந்துக்காத.. வருண் மட்டும் தான் உனக்கு உறவா நாங்க இல்லையா? உங்கப்பா விட அவன் முக்கியமா? ஏன் இப்படி நடந்துகிற? ” 

 ” ஆமா, எனக்கு வருண் தான் முக்கியம்… என்னைப் பொண்ணா மதிச்சது என் வருண் தான்.. எனக்கு அன்புன்னு ஒண்ணுக்  காட்டுனது அவன் தான்… அவன் தான் எனக்கு முக்கியம்… இவர் அப்பாவா இருந்தாலும்.. என் மேல பாசமா பேசிருப்பாரா? 
இவர் அவருடைய  அப்பாக்கு மகனா தானே நடந்திருக்கார். எனக்கு அப்பாவா எப்போ நடந்திருக்கார்? எனக்கு தந்தைப் பாசத்தைக் காட்டினது என் வருண் தான்…  ” 

” என்னை மன்னிச்சிடுமா! நான் அப்படி ஒரு சூழ்நிலை மாட்டிக்கிட்டேன். அப்பாவுக்குப் பயந்து என்னால ஒரு அப்பாவா இருக்க முடியல! ” என தன்னை தானே நொத்துக்கொண்டார்…

” எப்படியும் நான் செத்துடேன் தானே உங்கப்பா சொல்லி வச்சிருப்பார்… அது அப்படியே இருக்கட்டும்,, இந்த உலகத்தில எனக்குன்னு இருந்த ஜீவன் என் வருண் மட்டும் தான். அவனே இல்லாத போது நான் ஏன் உயிர் வாழணும்?  என்னை விடுங்க நான் செத்து போறேன்.. ” என அருகில் இருந்த சிறு கத்தியை எடுக்க, தன் கையை அறுக்க முடிவெடுக்க அவளைப் பிடித்து தடுக்க, உள்ளே வந்த டாக்டர் அவள் கையில் ஊசிப் போட்டார். மருந்து வீரியத்தில் மயங்கிப்போனாள்…

தன் தவறை உணர்ந்தவர்  தலையில் அடித்துக்கொண்டார்… ” மாமா என்ன பண்றீங்க ? ” அவர் கைப்பிடித்து தடுத்தான்.

” என் பொண்ணோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன் மாப்பிள்ளை.. என் அப்பா பேச்சைக் கேட்டு அவருக்குப் பயந்து அவளுக்கு ஒரு அப்பான நான் காட்ட வேண்டிய பாசத்தைக் கூட காட்டாம விட்டுடேனே மாப்பிள்ளை…. அவ கேட்ட கேள்வி,என் நெஞ்சையே கிழிக்கிது மாப்பிள்ளை… ”  

” அழாத அண்ணா! இனியாவது,அவளுக்கு அன்பை பாசத்தைக் காட்டுண்ணா! அவள் வருணை மறக்க, நாம தான் கூட இருக்கணும்…. அவளை தேத்தி மாத்தவேண்டியது நம்ம கடமை அண்ணா.. தைரியமா இரு! ” என்றார் முத்து.நேரம் செல்ல முத்துவையும் லட்சமனனையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தான்..

இரவாக, அவளருகில் அமர்ந்து இருந்தவாறு உறங்கிப்போனான் மயூரன்… அவளுக்கு விழிப்பு தட்ட, எழுந்தவள் மீண்டும் வென்பிளானைக் கழட்டி, மெத்தையிலிருந்து இறங்கியவள். அந்த அறையிலிருந்த பால்கனிக்கு விரைந்தாள்… அங்கிருந்து குதிக்க, முயல அவளைக் கைப்பற்றி இழுத்தவன் ஒரு அறைவிட கீழே சுருண்டு விழுந்தாள்….

கொள்ளைத் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!