கொள்ளை 25
சீமாவின் பேச்சை உள்வாங்கிக் கொண்டவளுக்கோ, தான் செய்த செயலின் தவறு புரிந்தது. கணவன் இழந்த பிறகும் பெண்கள் வாழவில்லையா? தன் குடும்பத்துக்காக தன் குழந்தைகளுக்காக வாழவில்லையா?… ஐந்து வருட காதலுக்காக, தன்னைப் பத்து மாதம் சுமந்து காத்து, இருபத்தி நான்கு வருடம் வளர்த்து, அக்கறைக் கொண்டு அனைத்தும் செய்த பெற்றோரை மறந்து இந்தச் செயலைச் செய்யத் துணிந்தது சரியா? காதல் கண்ணை மறைத்து விட்டாதோ!…. வருண் என்ற ஒரு உறவுக்காக, தன் மேல் பாசம் வைத்த அனைத்து உறவையும் ஏமாற்ற நினைத்தோமே! என்றவள் தன்னையே கடிந்துக்கொண்டாள்.. கல்லூரியில் தன் தோழி, வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தற்கொலை முயலும் போது கூட அவளைத் திட்டி, ஆறுதல் கூறிய நானா இந்த முடிவை எடுத்தேன் என்று சகமனிசியாய் தன்னை நினைத்து பார்க்கும் போது அவள் மேல் அவளுக்குக்கே கோபம் வந்தது.
சில நேரம் நாமெடுக்கும் முடிவு சரியென்று தான் நிற்போம் மற்றவர்கள் வந்து புரிய வைக்கும் வரை. அது போலத்தான். சீமாவின் பேச்சில் விஷ்ணுவின் தவறு வெளிப்பட்டது…
மயூரனை நேராகப் பார்க்க கூட முடியவில்லை… அந்தளவுக்கு அன்றைய நாளில் அவ்வாறு நான் அவனைப் பேசியிருக்கிறேன்.. குறிப்பாக தன் தந்தையிடம் தான் அதிகம் பேசி வார்த்தைகளால் குத்தி காயப்படுத்திருக்கிறேன் என்பது புரிந்தது. தந்தையிடம் பேச வேண்டும் என்று எண்ணம் தோன்றினாலும், அவரைப் பார்க்க, மனதில் திடம் இல்லை அவளுக்கு.
நீதிமன்றத்திலிருந்து, அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டவன், வருணைப் புதைத்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்…. அது ஒரு கிறஸ்தவ கல்லறையாக இருந்தது.. வருணை சிறு வயதிலிருந்து வளர்த்தது ஒரு ஃபாதர் தான். அவர் கிறஸ்தவ வழியிலே அவனை வளர்த்ததால் அவனைக் கிறஸ்தவ முறைப்படி அடக்கம் செய்தனர்.
மலர் கொத்தோடு மெழுகுவர்த்திகளையும் வாங்கிக் கொண்டு வந்தான். முதலில் புரியாமல் அவனுடன் வந்தாள். அங்கே வருணின் கல்லறையில் அவனது புகைப்படத்தோடு தோற்றமும் மறைவு எழுதி இருந்தது.
என்றும் வாடாத சிரிப்பைக் கொண்டிருந்தது அவனது முகம். அதைப் பார்த்தவள் அங்கே மண்டியிட்டு அழுதாள்…
மனதில் அவனுக்காய் தேக்கி வைத்த காதலைக் கண்ணீரால் கரைந்து விடட்டும் என்றெண்ணி அழுக விட்டான் மயூரன்.
வருண், விஷ்ணுவிடம் தான் வளர்ந்த விதத்தைச் சொல்லும் போதெல்லாம் அவள் கண்கள் கலங்கியிருக்கும், அதனைத் துடைத்து விட்டு அணைத்துக் கொண்டு கேட்பான், ” எப்பொழுதும் என்னோடு இருப்பாய் தானே?! ” என்று.
அவன் கேட்கும் பொழுதெல்லாம் அவனை இறுக்க அணைத்தும் முத்தமிட்டும் பதில் கூறவே எண்ணுவாள், நாகரிகம் கருதி வார்த்தைகளாலும் தலையசைவிலும் பதிலுரைப்பாள்.. அவள் கண் கலங்கும் போதெல்லாம் துடைக்க இருக்கும் அவனது கை. அதற்காகவே அழுகையும் அவளுக்குப் பிடித்துப்போனது…
என்றும் கண்ணைத் தாண்டும் முன்னே, அவன் கரங்கள் தாங்கியிருக்கும் அந்தக் கண்ணீரை. இன்றோ கன்னம் தாண்டி வழிந்தும் அவன் கை வர்றாமலிருக்க, பெரும் இழப்பைத் தான் பெண்ணவள் கொண்டிருக்கறாள்.
” நான் அழும்போதெல்லாம், உன் கை என் கண்ணீரைத் துடைக்குமே! வருண். இப்ப நான் அழுதிட்டுறேன் எங்க போச்சு உன் கை? ஏன் வருண் வர மாட்டிகிற? எங்க போன நீ? வா வருண், நான் அழுகிறேன். என்னை அணைச்சுக்கோ, உன் நெஞ்சுல என்னை சாய்ச்சுகோ! வாடா… ஏன்டா என்னை விட்டுப் போன? என் கிட்ட கேட்பீயே எப்போதும் என் கூட இருப்பீயான்னு? இப்ப நீ எங்க டா போன? நீ ஏன்டா என்னை விட்டுப் போன? என்னைத் தனியா தவிக்க விட்டுப் போயிட்டேல! இனி உன் முகத்தை எப்படி டா பார்ப்பேன்.. யார் என் கண்ணீரைத் துடைக்க வருவா?! யார் எனக்கு தோள் தருவா?! ” என அழுதவாறே அவன் முகம் பார்க்க, அந்தப் பளிங்கு கல்லில் வருணின் முகத்தில் மயூரனின் முகம் பிரதிபலித்தது.. அதைக் கண்டவள் சட்டென மயூரனைக் காண தலை குனிந்தவாறு கண்ணீர் வடித்து அமைதியாக இருந்தான்..
அவள் கதறிக் கேட்க்கும் கேள்விகளுக்குப் பதில் மயூரனிடமே இருக்கிறது என்பதை வருணும் உணர்த்த, தையலவளுக்கோ மூளையில் பதியவில்லை. ‘ நான் இருக்கிறேன்’ என்றுதொண்டைக் குழி வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டான் மயூரன்.
இல்லாத ஒருவனிடம் கண்ணீர் விட்டுக் கரைக்கிறாள். தனக்காக கரையும் ஒருவனை மறந்தும்..
அவனோ உள்ளுக்குள் மருகிக் கொண்டிருக்கிறான்.
கொஞ்ச நேரம் விசும்பலோடு அவள் அமர்த்திருந்தாள். மெழுவர்த்தி ஏத்தி பூங்கொத்தையும் வைத்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
புல்வெளியை போர்வையாய் போத்திய நிலம் போல் இருப்பாங்காய் இருக்க, நடுவில் பாதை அமைந்திருந்தது..
செடிகோடிகளின் நறுமணம் இடமெங்கும் மணந்து கிடக்க, அங்கே இயற்கை மட்டுமே குடிக்கொண்டிருந்தது அந்தப் பூங்காவில். மும்பையில் மலபார்ஹில்லில் உள்ள சாகர் உபவன் பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.
‘ இங்கே எதற்காக அழைத்து வந்தான்…’ அவன் முகத்தையே பார்த்தவாறு வந்தாள்.
” என் முகத்துல நான் எந்த பதிலையும் எழுதி வைக்கல விஷ்ணு. அதுனால உனக்குப் பதில், நீ கேள்வி கேட்டா தான் கிடைக்கும். என்ன கேக்கணுமோ கேளு! ” சிறு சிரிப்போடு கேட்டான்.
” அது, விட்டுக்குப் போகாம இங்க ஏன் வந்திருக்கோம் மயூரன்? ”
” இப்படி அழுத முகத்தோடு போனா வீட்டுல கண்டுபிடுச்சிடுவங்க. அதான் கொஞ்சம் ரெபிரேஷ் பண்ணிட்டுப் போலாம்னு இங்க அழைச்சிட்டு வந்தேன். உனக்கு ஓகே தானே இல்ல வீட்டுக்குப் போகணுமா?” எனவும்
” இல்ல இருக்கட்டும் மயூரன்.. நாம இங்க இருந்துட்டுப் போலாம்…” சுற்றிலும் தன் கண்களைச் சூழல விட்டவாறு கூறினாள். அவள் காண சுத்தி எங்கும் பச்சையாக இருந்தது..
” விஷ்ணு, ஏன் மரங்கள் பச்சையா இருக்கு தெரியுமா? ” எனக் கேட்க.
” ஏன்னா அது பச்சையா இருக்கிறனால பச்சையாக இருக்கு…. “என்றாள் அவனைப் பாராமல். அவளது பதிலை எதிர்பாராதவன் நின்றுவிட்டான்.
அவள் முன்னே நடந்தவள், அவன் உடன் வராமல் இருக்க திரும்பிப் பார்த்தாள். பழைய விஷ்ணு வந்து போனதை எண்ணி கொஞ்சம் மகிழ்ந்தான்.
” இதெல்லாம் 90’கிட்ஸ் பதில்.. இன்னுமா சொல்லிட்டு இருக்க? டூ யூ கினோவ் ஒய் ட்ரீஸ் அர் க்ரீன்? ” மீண்டும் அவன் கேட்க.
” மயூ, நீ ஜெனர்லிஸ்ட் தானே! அப்றம் ஏன் சயின்ஸ் வாத்தியார் மாதிரி கேள்வி கேக்குற? எனக்கு சயின்ஸ் சுத்தமா பிடிக்காது.. பத்தாவது வரைக்கும் அந்த சயின்ஸ் படிக்க நான் எவளோ கஷ்டபட்டேன் தெரியுமா. பிரட்டிக்கல் நோட் எழுத சொல்லி அந்த வாத்தியார் என்னைக் கொன்னுட்டான். பாஸ் மார்க் எடுக்க எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” தனது கடந்தக் காலத்தைக் கூறினாள்…
” ம்ம் தெரியும். எக்ஸாம் முடிஞ்சதும் அந்த வாத்தியார் மண்டையை உடைச்சதும் தெரியும்.” என்றதும் “ஈஈஈஈ…. ” என வழிந்தாள்.
“பின்ன நீ எல்லாம் ஃபெயில் தான் ஆவன்னு சொன்னா கோபம் வராதா! அதான் நேரம் பார்த்து அவர் மண்டைய ஒடைச்சுட்டேன்.”
” ம்ம்… நீ செய்த அடாவடி எல்லாத்தையும் உன் அப்பா, எங்களுக்கு லெட்டர்ரா எழுதி அனுப்பிருக்கிறார். எனக்கும் என் அம்மாக்கும் பொழுது போறதே உன்னால தான். எங்களுக்குச் சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்கும்” குறும்போடு சொன்னான்.
” ம்ம்.. நான் உங்களுக்குப் பொழுதுபோக்கியா இருந்திருக்கேன். எனது அருமை பெருமை எல்லாம் மும்பை வரைக்கும் பரவியிருக்கு. அது கூட தெரியாம ஒரு ஜீவனா நான் இருந்துருக்கேன்… ” உதட்டை வளைத்தாள்
” ம்ம் எப்போ டா மாமா கிட்ட இருந்து லெட்டர் வரும். இந்த வாரம் நீ என்னென்ன சேட்டை பண்ணிருப்பன்னு தெரிஞ்சுக்க காத்துட்டு இருப்பேன். நாளிதழில் வரும் தொடர் கதைப் போல ஆர்வமா காத்திட்டுருப்பேன்.. நீ பண்ற சேட்டையயைப் படிக்கும் போது என்னை அறியாமலே நான் சிரிச்சுருப்பேன்… நேர்ல பார்த்த ஒரு பீலிங் வரும்.. உன் கூட உன் அத்தை பையனா வாழ்ந்திருந்தா எப்படி இருக்கும் கற்பனை பண்ணிருக்கேன். உன்கூட எப்படி எல்லாம் இருக்கணும் நிறைய கற்பனைகள் எனக்குள்ள இருக்கு. அதெல்லாம் உன்கிட்ட சொல்லணும். உன்னை நிறைய காதலிக்கணும். திகட்ட திகட்ட காதல் செய்யணும். நிறைய ஆசை இருக்கு விஷ்ணு. ” அவளைப் பார்க்காமலே கூற, விழி அகற்றாது அவனையே பார்த்து நின்றாள். அப்போது தான் தன்னை மறந்து விட்ட வாரத்தைகளை உணர்ந்தான்.
” ஐ அம் சாரி விஷ்ணு ” மொழிந்து விட்டு முன்னே நடக்க, அவள் நின்ற இடத்திலே நின்றாள். ” என்னை மீறி என் மனசுக்குள்ள இருக்கிறத்தை விசயத்தை உன் கிட்ட சொல்லிட்டேன் விஷ்ணு சாரி சாரி தப்பா எடுத்துக்காத ” எனவும்
” மரம் ஏன் பச்சையா இருக்கு மயூ ? ” அவள் கேட்டதும் அவள் தன்னை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றெண்ணி நிம்மதி அடைந்தது அவன் மனம்.
“பொதுவா பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி சொல்லுவாங்க… பச்சை நிறம் நாம மனசுல இருக்க மன அழுத்தத்தை குறைக்கும். மன உளைச்சல் இருக்குறவங்க பச்சை நிறத்தை பார்த்தாலே போதும் எல்லாம் குறைஞ்சுடும்… வலி உணர்ச்சிகளைக் குறைத்து இயல்பாக மாத்துவது இந்தப் பச்சை நிறம் தான். மனுசனுக்குள்ள எவளோ ப்ரசர் இருந்தாலும் மரம் செடிக் கொடிகளோடு இருந்தால் போதும் பிரஷர் குறைஞ்சு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.. இயற்கையைத் தான் நம்ம மனசு அதிகம் விரும்பும்.. ரொம்ப கவலையா இருக்கும் போது தனியா மரத்தடியில் உட்கார்ந்தாலே போதும் மன பாரம் எல்லாம் குறைந்து மனசு லேசாகிடும்.. அதுனால தான் கடவுள் இயற்கைக்குப் பச்சை நிறத்தைக் கொடுத்திருக்கார். உன்னோட மன பாரமும் வலியும் குறையணும் தான் உன்னை இங்கக் கூட்டிட்டு வந்தேன்… ” என்றான்.
” தங்க்ஸ் மயூ, ஆனா பாரு என்னை இந்த இயற்கையைக் கூட ரசிக்க விடாம பண்ணிருச்சு உன்னோட இந்த சயின்ஸ் கிளாஸ்… அண்ட் இன்னொரு விஷயம் நீ மட்டும் க்லோராப்ளஸ்ட் க்ளோரோபில் சொல்லிருந்த மவனே என் சயின்ஸ் வாத்தியாருக்கு நடந்தது தான் உனக்கும்… ” அவள் மிரட்ட சிலையாய் நின்றுவிட்டான். ‘ வந்துட்டான் பெரிய அடவைஸ் அதிகாரியாட்டம்… இப்ப யாரு இதெல்லாம் கேட்டுட்டு இருக்கா ?’ அவனைக் கடிந்துக் கொண்டு முன்னே நடந்தாள்.
‘மயூ. இது உனக்கு இரண்டாவது முறையாகக் கிடைக்கும் மிரட்டல்… மண்டைய பத்திரமா பார்த்துக்க..” என தனக்குத் தானே எச்சரிக்கைச் செய்துக் கொண்டான்.
வெகு தூரம் நடந்ததால் கால் வலிக்க அருகே உள்ள கதிரையில் அமர்ந்தாள். அவனும் அவள் அருகில் கொஞ்சம் இடம் விட்டு அமர்ந்தான்.
” பழைய விஷ்ணுவா உன்னைப் பார்க்கும் போது சந்தோசமா இருக்கு. இதே போல நீ இருக்க நான் சயின்ஸ் கிளாஸ் என்ன மத்ஸ் , சோசியல் , இங்கிலிஷ் , தமிழ் எல்லா கிளாஸ்ஸும் எடுக்கத் தயார்.. ” என்றான் குறும்போடு.
” அதேல்லாம் யாரு கேக்கறது போயா!..” என்றதும் சிரித்தே விட்டான் மயூரன்.
” மயூ, நான் சென்னைக்குப் போய், அங்க ஏதாவது காலேஜ்ல வேலைப் பார்த்துட்டு அப்படியே வாழலாம் இருக்கேன். இங்க என்னால இருக்க முடியல.. தாத்தா கிட்ட நாம உண்மையை சொல்லிடலாம் மயூ” என்றாள். சற்று முன் அவனுக்குச் சிரிப்பைக் கொடுத்தவள் நொடி பொழுதில் அதனைப் பறித்தும் கொண்டாள்..
இப்போது அவளிடம் தன் காதலையை புரிய வைக்க முடியாது நிலையில் தான் அவனிருக்கிறான்..
” ம்ம் சொல்லிடலாம் விஷ்ணு. நீயும் சென்னைக்குப் போயிடுவ… உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல.. ஆனா என்னையும் ஷாலுவையும் நெனச்சு பார்க்கலேல நீ. நீ போயிட்டா எனக்கு ஷாலுவைக் கட்டிவைப்பாங்க.. எங்க வாழ்க்கை எப்படி போனா உனக்கென்ன? அதைப் பத்தி நீ ஏன் கவலைப் படணும்? எங்க காதல் மேல நீ ஏன் அக்கறை காட்டணும்? நீ என் மனைவி இல்லைன்னு தாத்தா கிட்ட உண்மையைச் சொல்லிடலாம் விஷ்ணு… வா போலாம் ” என்று எழுந்தான்.
” மயூ…” அவன் கூறிய வார்த்தைகளில் அவனது வலியினை உணர்ந்தவளுக்கு பேச வார்த்தைகள் இல்லை…
” இல்ல விஷ்ணு… எல்லாருக்கும் அவங்க அவங்க வாழ்க்கை தான் முக்கியம். அடுத்தவங்க வலியோ, கண்ணீரோ நமக்கு எதுக்குச் சொல்லு. வா போலாம் விஷ்ணு… ” அவன் செல்ல, கையைப் பற்றியவள் ” சாரி மயூ, என் தப்பு தான்.. நான் செல்பிஷ்ஷா யோசிச்சுட்டேன் என்னை பத்தி மட்டும் நெனச்சுட்டேன் சாரி.. ” விஷ்ணு அழுதாள்.
” அழாத விஷ்ணு, நீ எனக்காக இல்லேனாலும் ஷாலுக்காகவாது பொறுத்துகோ. என் காதல் தான் எனக்கு கிடைக்கல அவ காதலாவது அவளுக்கு கிடைக்கட்டுமே. அவளுக்குக் கல்யாணம் ஆகுற வரைக்கும் இரு விஷ்ணு. அப்றம் உன் இஷ்டம் போல நீ எங்க போகணும் நினைக்கிறியோ போ.. நான் தடையா இருக்க மாட்டேன் ப்ளீஸ்! ” அவன் கெஞ்ச ஒத்துக்கொண்டாள்…
” நன்றி விஷ்ணு ” என்றதும் தலையை அசைத்தவள் முன்னே நடக்க..
பெருமூச்சை விட்டவன், “டேய் மயூ, உனக்கு இது செகண்ட் சான்ஸ்ஸா கெடச்சுருக்கு.. கரெக்ட்டா யூஸ் பண்ணி விஷ்ணுவ மிஸஸ். மயூவா மாத்ற வழிய பாருடா… கடவுளே கைன்ட்லி ஹெல்ப் போர் மீ…,’ என எண்ணிக் கொண்டவன் அவளோடு சென்றான்…
இருவரும் வீட்டுக்குள் நுழைய.. அங்கே பெரும் வாக்குவாதம் நடந்துக்குக் கொண்டிருந்து..
இருவரும் அவர்களோடு இணைந்தனர்…
“நிவிக்கா என்ன பிரச்சனை? ஏன் மாமா கிட்ட சண்டை போடுறீங்க?”
“விஷ்ணு, கபிக்கு ஃபான்சி ட்ரஸ் காம்பேட்டிஷன் வருது. அதுவும் ஃபரீடம் ஃபைட்டர் போல வேசம் போட்டு தான் வரணுமாம். நான் நேதாஜி போல ட்ரெஸ் பண்ணலாம் சொல்லுறேன். இவர் காந்திஜி போல ட்ரெஸ் பண்ணலாம் சொல்றார். என்னால என் பையனுக்கு மொட்டை வேசம் போட முடியாது ” என்றாள்.
” அட இன்னுமா இந்தப் போட்டி எல்லாம் வைக்கிறானுங்க? ” மயூரன் கேட்க.
” வைக்கிறானுங்கலே, இப்ப என்ன பண்ண? ஈசியா ஒரு துண்டைப் போட்டு வேட்டி கட்டுவிடலாம் சொன்னா. இவ வேணாம் சொல்றா! போன முறை தான் நேதாஜி போல ட்ரெஸ் பண்ணிட்டுப் போனான் இப்பையும் அதே வா..” என ஆதியும் குறை பட..
” ஏன் எப்ப பாரு காந்திஜி , நேதாஜி வேசமே தான் போடணுமா ஒரு மாறுதலுக்கு ஹல்க் , ஐயன் மேன், தோர்.. அட்வென்ஜர்ஸ்ல வர ஹீரோ மாதிரி ட்ரெஸ் பண்ணி விடலாமே! “என்றாள்.. எல்லாரும் அவளையே பார்த்தனர்..
” என்ன எல்லாரும் அப்டி பார்க்கிறீங்க அவங்களும் ஃபைட்டர் தானே! ” எனவும் (தில் வால்லே பூஜ் கே கே யார்..,) அவள் சொல்ல அங்கே சிரிப்பலைகள் தான்..
” ஹேய்! விஷ்ணு நான் ஐயன் மேன் போல ட்ரெஸ் பண்ணிக்கிறேன்.. ” என கபியும் குதித்தான்.
” அடேய் நீ வேற விவரம் புரியாம.. ஒரு வாரம் தான் டைம் விஷ்ணு. அதுக்குள்ள இவனுக்குப் பிரக்டிஸ் கொடுக்கணும்.. சீக்கிரமா யாராவது சொல்லுங்களேன். ” நிவி பதற்றம் கொள்ள..
” நான் சொல்லுறேன் நிவிக்கா! அந்தத் தலைவர் போல கபிக்கு வேசம் போடுறோம் சும்மா தெறிக்க விடுறோம்.. ” தனது கையை அசைத்து விஷ்ணு சொல்ல அனைவருக்கும் ஆர்வம் பொங்கியது….
கொள்ளை தொடரும்..