பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 27

 

நீடிக்கும் காரிருள், வெளிச்சத்தில் தான் விடியும்.. நீளும் கவலைகளும் சந்தோஷத்தில்  தான் நீங்கும் என நினைத்து வாழ்க்கையை  வாழ்வது தானே வழக்கம்… 

தனக்குள் வைத்திருக்கும் கவலைகளை வெளிய காட்டிக் கொள்ளாது வாழ்வதும் மனிதனின் பழக்கமே..

இறந்த காதலனின் இழப்பு ஒரு பக்கம் என்றால்.. தன்னை நினைத்துக் கொண்டு வாழ்க்கையை  இழக்கும் மயூரனை எண்ணியும் கவலைக் கொண்டாள்.. இந்தக் குடும்பத்தை ஏமாற்றுவதும் கவலையாக இருந்தது. கவலைப்படுவத்தில் படு பிஸியாகி போனாள் விஷ்ணு.

தனக்குள் சேர்த்து கொண்டே போகும் கவலைகளும் வருந்தங்களும்  உள்ளத்தையும் உடலையும்  அழுக்காக்கி விடும் வெளியே கொட்டி சுத்தம்  செய்யாதவரை.. 

அவளது நாட்கள் இவ்வாறு தான் சென்றது… கபிக்கு உதவியத்தோடு பரிசையும் பெற உதவினாள்..  இப்படியே அங்கிருக்கும் உறவுகளோடு நாட்களைக் கடத்தினாள்.

மும்பை சிறையில் நிசாப்பும் அவனது ஆட்களும் சிறை வாசத்தில் இருக்க. நிசாப்பின் நண்பன்,  தொழிலில் பாட்னாருமானா சின்னா என்பவன், நிசாபைக் கைது செய்த விஷயத்தைக் கேட்டு அவனைக் காண சிறைக்கு வந்திருந்தான்.. 

“என்ன நண்பா! இவ்வளவு அஜாக்கிறதையா இருந்திருக்க? யார் காரணம் சொல்லு அவனைத் தூக்கிறேன். ” என்றான்.

இன்னமும் கோபம் குறையாமல் மயூரன் மேல் வன்மம் வைத்தவன், எப்படியாவது அவனைக் கொல்லத் துடிக்கும்  நிசாப், தேடி வந்த உதவியை விடுவானா? அவனிடம்  தன் திட்டத்தைக் கூற அப்படியே செய்கிறேன். விஷயம் உன் காதை எட்டும் ” என்று  சொல்லிச் சென்றான் சின்னா.

 ‘சிறையில் இருந்தவாறே உன்னைப் பழி வாங்குறேன் மயூரா ‘ வன்மமாய் சிரித்தான் நிசாப்.. 

வரும் வழியெல்லாம் அமைதியே சரணம் என்று வந்தாள் விஷ்ணு. அவளை அவ்வப்போது  நோட்டம் விட்டுக்குக் கொண்டே வந்தான் மயூரன். 

” ஏன் விஷ்ணு அமைதியா வர? எந்தக் கடவுளுக்கு இந்த வேண்டுதல்? ” குறும்புடன் சிரித்த படியே வினவ.

“ஆங்… அமைதியானந்தா சுவாமிக்கு இந்த வேண்டுதல்” அவளும் நக்கலாக பதில் அளித்தாள்..

” புதிய ஆனந்தாவா, இவரெங்க வைகுண்டத்துல யா இருக்கார்?” மீண்டும் அதே போல் நக்கலடிக்க..

” ரொம்ப கடிக்காத காது வலிக்குது” என்றாள்.
” மக்கும்.. ஏன் விஷ்ணு நாம எங்க போறோம்  என்கிட்ட கேக்கல நீ ? என் மேல அவ்வளவு நம்பிக்கையா?” ஆர்வமாய் அவளிடம் கேட்க, 

” எப்படியும் நீ ஏதாவது பார்க் கூட்டிட்டு போய் கிளி ஏன்  பச்சையா இருக்கு? , மரம் ஏன் பச்சையா இருக்கு? கேள்வி கேட்டு சயின்ஸ் கிளாஸ் எடுக்கத் தான் போற. வேற என்னத்த நீ பெருசா பண்ணிட போற?  உன் மேல பயம் வரதுக்கு.. ” என்றதும் தலையைத் தொங்கப் போட்டான்.. அவனைக் கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.

‘ அமைதியா வந்த பிள்ளையை பேச  வச்சதும் இல்லாமல் வான்ட்ட போய் அசிங்க படுறியே மயூரா இதெல்லாம் தேவையா உனக்கு…’ எண்ணிக் கொண்டவன் இப்போது அமைதியின் திருவுருவமாய் வந்தான்.. 

இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் அவளும் வந்தாள்.. மகிழுந்து நேராக அந்தப் பெரிய ஹோட்டலுக்கு முன் நின்றது.. அவனைப் புரியாமல் பார்க்க, ” இறங்கு” என்றான்.

இருவரும் உள்ளே நுழைந்து லிஃப்டடில் ஏறி முன்றாவது தளத்திற்குச் சென்றனர்..
இருபத்தி நான்காம் எண் கொண்ட  அந்த அறையைத் தட்டினான். அறையின்  கதவு திறக்கப் பட.. அந்த  அறையிலிருந்து வரும் தன் தந்தையைக் கண்டு அதிர்ந்தாள்.. 

” உள்ள வாங்கப்பா” இருவரையும் உள்ளே அழைத்தார் தயக்கத்தோடு. அவளும் அதே தயக்கத்தோடு நுழைந்தாள்.. 

அன்று மருத்துவமனையில்  சந்தித்தோடு சரி அதன் பின்.. தன் தந்தையைப் பற்றி ஓரமாக சிந்தனை இருந்தாலும் அதை விட வருணின் இறப்பின் வலியே  அதிகம் இருந்தது ..

முவருக்குள்ளும் பேராமைதியே நிலவியது. அதை முதலில் கலைத்தது மயூரன் தான்.. 
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில. இரண்டு பேருக்குள்ளயும் நிறைய மனஸ்தாபங்கள் இருக்கு. பேசி சரி பண்றது தான் உறவுகளுக்கு நல்லது. அதுவும் அப்பா பொண்ணு உறவு மேகமும் மழைப் போலத்தான்…  மேகத்திலிருந்து மழை உருவாகினாலும் அது மண்ணுக்கு வருவது இயல்பு. அதற்காக மேகத்துக்கும் மழைத்துளிக்கும்  சம்பந்தம் இல்லேன்னு ஆகாது. மேகத்துல  இருந்து  மழை விழுவதாலையும் மழைத்துளி மீண்டும் மேகத்தோடு தான் சேருது.. மேகத்து  மேல  மழைக்குக் கோபம் வந்தா  நமக்கு மழையே கிடையாது. அதே போல தான் உறவுகுள்ள சின்ன சின்ன மனஸ்தாபம் கோபம் வரும்.. அதுக்காக அந்த உறவே வேணாம் சொல்லுறது தப்பு மா.

இத்தனை வருசமா பாசம் கட்டாம  இருந்தாலும் உன் மேல அன்பு இல்லாம இல்லை. அக்கறை இல்லாம இல்லை . எதனால அவர் அப்படி இருந்தார் நீ தான் கேட்டு தெரிஞ்சுக்கணும். அவருக்கும் வாய்ப்பு கொடு விஷ்ணு. அவர் பக்கம் நியாயம் இருக்கோ இல்லையோ கேளு. என்னால இருபத்தி நான்கு வருடத்தை திருப்பி தர முடியாது இந்த நாளைத் தரேன் பேசு , திட்டு , சண்டை போடு அழு.. உனக்கு என்ன என்ன கேட்கணுமோ கேளு. பேசி உங்களுக்குள்ள இருக்க மனஸ்தாபத்தைப் போக்கிடுங்க.. நான்  ஈவினிங் வரேன் மாமா..  நீங்களும் அவ கிட்ட பேசுங்க” அவளை ஒரு முறை பார்த்து விட்டு  அங்க இருந்து சென்றான்..

அவளுக்குத் தான் மூச்சு முட்டியது போல் ஆனது… 
அமைதியாக அமர்ந்திருந்தாள். அப்பா மகள் உறவென்றால், உதிரத்தால் இணைந்து உணர்வோடு கலந்தது. ஒரு பெண்ணுக்கு அறிமுகமாகும் முதல் ஆண் தந்தை. முதலாவது இடம் எத்தனை முக்கியம் மானது. அவனது சாயலைக்  கொண்டு அவனைப் போலவே   அவனோடு நடந்து. உலகம் அறிந்து உறவுகளை அறிந்து உணர்வுகளை அறிந்து வாழக் கற்று தருவது தந்தை தானே . ஆசானாய் தோழனாய் இருப்பவனும் அவன் தானே.. அவனது இடத்தை யாருக்கும் தர முடியாது .. அவனது இடத்தை வேறொருவரால் நிரம்பிடவும் முடியாது… 

வாழ்க்கையில் மிக முக்கியமான உறவாகி இருக்கும் தந்தையே யாரோ பெற்ற மகளாய்ப் பார்ப்பதும் யாரிடமோ பேசுவது போல் பேசுவதும் யாருக்கோ செய்வது போல் தேவைகளைச் செய்யவும் இருந்தால்… எப்படி  தான் தந்தை மேல் பாசம் வரும்? அவர் மட்டும் இல்லை அங்கிருக்கும் அனைவரும் அப்படிதான்..  வீட்டில் கிடைக்காத அன்பு வெளியாட்களிடம் தேடி வருந்தி வாழ்க்கை இழக்கிறார்கள் இன்றைய  வாசிகள்.

அங்கே இருந்த தண்ணீரைப் பருகியவள் அமைதியாகச் சென்று அமர்ந்தாள்.

” சாப்டியா விஷ்ணுமா?” அன்போடு அவர் கேட்க, ‘ இந்த வார்த்தை இந்த வார்த்தை கேட்டு எத்தனை வருடங்கள் ஆனது. பெண்ணாகப் பிறந்தது என் தவறில்லையே! இன்னோரு வீட்டிற்கு அவள் சென்றிவிடுவதால் அவளிடம் அன்பு பாசம் காட்ட கூடாதா? ‘ அவளது ஏக்கம் எண்ணங்களானது.. 

” ம்ம் சாப்பிட்டேன்… ” என்றாள் எங்கோ பார்த்து… அடுத்து அவள் கேள்வி கேட்கவில்லை… 
அவரும் எதிர் பார்த்து ஏமாந்து தான் போனார். அந்த அறையை நோட்டம் விட்டாள்.. அங்க அவர் போடும் மாத்திரைகள் நிறைந்த அட்டைகள்  இருந்தது. அங்கே சென்று அந்த மாத்திரை எடுத்து பார்க்க பிரஷர் மாத்திரையாக  இருந்தது.. 

” இது எப்போ இருந்து போடுறீங்க?” 

” ரொம்ப வருசமா போடுறேன் மா” வெற்று சிரிப்புடன்.. ” ரொம்ப வருசமா! என்னப்பா சொல்லுறீங்க? நான் இருக்கும் போதும் போட்டிங்கலா? உங்களுக்கு எதுக்குப்பா பிரஷர் வந்தது.” அவள் வினவ.

” எல்லாம் உன்னை நினைச்சு தான் மா? எப்போ நீ மகளா என் கைக்கு வந்தியோ அப்ப இருந்தே பயம், கவலை. தன்னோட சொந்த மக மேலயே பாசம்  காட்ட முடியாது பாவி ஆயிட்டேன் மா நான்…

உன்னைத் தூக்கி கொஞ்சும் போதெல்லாம் என் அப்பாவோட பேச்சு இது தான் மா! ” இப்படி கொஞ்சி கொஞ்சி பாசம் காட்டினவ தான் ஓடிப்போயிட்டா! இவளையும் கொஞ்சி பாசம் காட்டி வள.. அவளும் ஓடி போவா!  அந்த வார்த்தையைக் கேக்க ரணமாச்சு… நீ   ஒவ்வொரு போட்டில ஜெய்ச்சுட்டு ‘அப்பா’ ஓடிவரும் போது  உன்னைத் தூக்கி சுத்தனும் கொஞ்சணும் தோணும். ஆனா, என் அப்பா, உன்னைத் தான் திட்டுவார்.. ” பொட்ட பிள்ள படிக்க அனுப்பிச்சா, அது ஏதோ காத்துகிட்டு வந்து நிக்கிது பாரு.. பொட்ட பிள்ளை என்ன கத்துக்கனுமோ அதைக் கத்துகிட்டா போதும் சொல்லும் போது ஒரு மகனா இருக்கவா ஒரு தந்தையா பேசவா குழம்பித் தவித்தது உண்டு. என் மேல கோச்சுக்கிட்டு சாப்பிடாம தூங்குன! அப்ப கூட என்னால ஒண்ணும் பண்ண முடியல. துங்கற குழந்தைய கொஞ்ச கூடாது சொல்லுவாங்க..  நீ தூங்கும் போது தான் என்னால உன்னை கொஞ்ச முடியும்.. அறைக்குள்ள, கூட நீ அப்பாவா இருக்கக் கூடாதா நீ கேட்கலாம்? என்னால நீ வளர்ந்ததற்கு அப்புறமா  இருக்க முடியல..  உனக்காக ஆசை ஆசையாய்  ஆடை வாங்கி ரூம் குள்ள போட்டு அழகு பார்த்தேன். ஆனா நீ  பாட்டிக் கிட்ட கட்டுறேன் சொல்லி வெளிய வரும் போது அப்பா பார்த்து பொம்பல பிள்ளைக்கு இப்படி வாங்கி செல்லம் கொஞ்சு ஒருநாள் உன்னை ஏமாத்திட்டு போயிருவா..” சொன்னார்.. 

அவர் சொல்லும் போது ஏன்டா பிறந்தோம் எண்ணம் எனக்கே தோணஆரம்பிச்சது.. ஒரு நல்ல தகப்பனா இருக்க முடியாத என் கையாலாகாத தனத்தை நினைச்சு நொந்திருக்கேன்.. அப்றம் நீ பெரிய மனுசிய ஆகிட்ட.. அதுக்கு அப்புறம் உன் பேச்சு உன் நடவடிக்கையும் மாறி இருந்தது.. எல்லாரையும் எதிர்த்து பேச யாரையும் மதிக்காம வளர ஆரம்பிச்ச.. நீ என்கிட்ட பேசுறத்தையும் குறைச்சுட்ட.. நீ படிக்கணும் அடம்பண்ணும் போது  எனக்கு சந்தோசம். ஆனா, அப்பா என்னை மறைமுகமா பேச ஆரம்பிச்சார்… என் மனசுல இருக்கிற வலியை  யார்கிட்டயும் பகிர முடியல.. என் தங்கை போல நீ இருக்க, அவ மேல வீட்டுல நான் தான் அதிகம் பாசம் வச்சேன்.. அவளோட வாழ்க்கை எனக்கு முக்கியம்ன்னு பட்டுச்சு அதான் நான் அவளை லட்சுமணன் கூட அனுப்பிவைத்தேன். அது அப்பாக்கு தெரியாது. நீ பள்ளி படிப்பை முடிந்ததும் உனக்கு கல்யாணம் கட்டிவைக்க  நினைச்சங்க. ஆனா, உன் ஆசை ஜன்ர்லிஸ்ம் சாரதி மூலம் தெரிஞ்சு கிட்டேன்.  மதுரை ல வேணாம் மெட்ராஸ் படிக்க சொன்னதே நான் தான் சாரதி மூலமா.. நீயும் வீட்டுல சண்டைப் போட்டு படிக்கப் போன.. கொஞ்சநாள் நீ நிம்மதியா இருப்பேன் சந்தோசம் பட்டேன்..  ஆனா உன்னைப் பிரிஞ்சு இருக்க முடியாது வருத்தமும் பட்டேன்.. வீட்டுல அப்பா உன் கல்யாணத்தைப் பத்தி பேச ஆரம்பிச்சார். அதுவும் என் அத்தை பையனைக் கட்டிக் கொடுக்க… அவன் எப்படி பட்டவன் தெரிந்தும் கட்டிக் கொடுக்க பேச்சை எடுத்தார்.. நான் என் தங்கை கிட்ட சொன்னேன்.. அப்போ மயூரன் உன்னை விரும்புறது எனக்கு தெரிய வந்தது… நீ படிப்பை முடிந்ததும். ஏதாவது செய்து உன்னை மும்பைக்கு அனுப்ப எண்ணினேன்… எல்லாரும் உன் படிப்பு  முடிக்கிற வரைக்கும் காத்துட்டு  இருந்தாங்க..  நானும் நீ வருவ உன்கிட்ட மயூரனைப் பற்றி சொல்லி  உன்னை அங்க அனுப்பி வைக்க எண்ணம்.. ஆனா என்னால உன்கிட்ட சொல்ல முடியல.. இத்தனை நாள் இல்லாத அக்கறை யா இப்போ வந்திருச்சுன்னு கேட்டுருவீயோ பயம். மயூரன் மூலமா வருண் இறந்தது.. நீ ஓடி போக நினைத்ததையும் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா இங்க நிலமை கை மீறி போச்சு.. மாப்ள கிட்ட உதவிக் கேட்டேன். அவரும் உன் மேல உள்ள காதல் உதவி செய்றேன் சொன்னார்,  செய்யவும் செய்தார்.. நான் சாரதி கிட்ட சொல்லி கார் புக் பண்ண சொன்னேன். தோட்டத்தில்  இருந்த ஆட்களையும் அங்க  இருக்க விடாம செய்தேன்.. இப்படி மறைமுகமாக ஒரு அப்பனா உனக்கு செய்ய  வேண்டியதை செய்தாலும் உன் கண்ணுல அந்த சந்தோஷத்தையும் எனக்கான அன்பை அதில பார்க்க முடியலன்ற வருத்தம் இருந்தது.. இப்ப கூட என் பொண்ணோட வாழ்க்கை நினைச்ச கவலை தான் அதிகமாக இருக்கும்.. உயிரோட நீ இருந்தும் செத்து போயிட்டேன்னு உனக்கு காரியம் பண்ணும் போது எனக்கு பண்ணினது போல இருந்தது.. அதையெல்லாம் தாண்டி  ஒரு நிம்மதி  தந்ததுன்னா அது நீ அங்க சந்தோசமா இருப்பேன்னு தான் .. அப்பாவ மன்னிச்சுடும்மா…” கதறி கைகூப்பி அழுக..  

” அப்பா! …. அவரது கையைப் பற்றியவள், “அதெல்லாம் கேட்காத்திங்கப்பா.. உங்க கடமை நீங்க சரியா தான் செய்திருக்கிங்க ஆனா நான், அதைப் புரிஞ்சுக்காம உங்களைத் தவறா நெனச்சுடேன்ப்பா. என்னை மன்னிச்சுடுங்கப்பா.. உங்க அன்பைத் தப்பா பேசிட்டேனே ப்பா… எனக்கு மன்னிப்பே இல்ல..  என்னை மனிச்சுடுங்கப்பா.. வருணோட அன்பு தான் பெருசு அவன் தான் அன்பு காட்டிருக்கான்னு நினைச்சுடேன்.  நீங்க தாத்தா பேச்சைக் கேட்டு வாழ்றிங்கன்னு உங்க மேல எனக்கு கோபம் இருந்தது.. அதுவே என் கண்ணையும் மறைச்சுருச்சுப்பா…  ” அவர் மடி சேர்ந்து அழுதாள். அவள் தலையை மெல்ல வருடியவர். “உன் மேல கோபம் இல்லடா.. உனக்குத் தெரியாதா போது நானே உன் இடத்துல இருந்தாலும் கோபப்பட்டுருப்பேன். நீ அழுகாதடா இப்ப தான் நீ நல்லா ஆயிட்டு வர.. இப்ப அழுது உடம்ப கெடுத்துகாதடா..” என்பவரின் அன்பான பேச்சு இத்தனை நாட்கள் ஏங்கியதற்கு  கிடைத்தது பலனானது. 

“சாப்டிங்களா அப்பா?” அவளும் கேட்க, அந்த அழுகையிலும் முறுவலித்தார்.. ” சாப்பிட்டேன் டா…” என்றார்.. அவர் மடியிலே  படுத்திருந்தாள்.. அங்கே அமைதி நிலவ… அதனை அவரே உடைத்தார்..” நீ என்னம்மா முடிவு எடுத்திருக்க? ” அவர் கேட்க புரியாமல் தலையைத் தூக்கி அவரைப் பார்க்க.. ” வருண், இப்ப  உயிரோட இல்லமா.. அவன் இருந்தாலும் நீ அவனைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழந்திருப்ப. ஆனா, இப்ப உன் வாழ்க்கையை நினைச்சா எனக்கு கவலையா இருக்குமா? எத்தனை நாளைக்கு  நடிக்க போற விஷ்ணு. உன் வாழ்க்கை நினைச்சு பார்த்தியா? “

“ஷாலு, கல்யாணம் வரைத் தான் இங்க இருப்பேன். அதுக்கு அப்றம் சென்னை போலாம் இருக்கேன்ப்பா” என்றாள் சிறு குழப்பத்தோடு… 

” நீ நம்ம மயூரனை,நெனச்சே பார்க்கலயே மா. அவன் உன்னை மட்டும் தான் விரும்புறான். அவனோடு வாழ்க்கையே நீ  தான் வாழ்ந்துட்டு இருக்கான்… அவனைக் கல்யாணம் பண்ணிக்கோ விஷ்ணு..” 

” எப்படி பா வருணை விரும்பின நான், மயூரனை, அதுவும் என் புருசனா அவனை நெனச்சு கூட பார்க்க முடியல பா. வேணாம் எனக்கு கல்யாணமே வேணாம் உங்க பொண்ண இருந்துகிறேன் பா.. மயூரன்  கிட்ட நான் பேசி வேற கல்யாணம் செய்துக்க சொல்றேன் பா..” என்றாள்.

”  ஐந்து வருஷம் விரும்பின வருணையே நீ  மறக்கல.. உன்னை சின்ன வயசுல இருந்து விரும்பினவன் உன்னை விட்டு வேற கல்யாணம் எப்படி பண்ணுவான்? என்றதும் அமைதியாக தலை குனிந்தாள்.. ” விடுமா உன் இஷ்டம் தான் அப்ப போர்ஸ் பண்ணல…”அவளது தலை வருடியவாறு கூறினார். அப்படியே அவளும் உறங்கி போக. மெல்ல அவளை மெத்தையில் கிடத்தினர்..

தன் தங்கையிடம் கூறி சந்தோசத்தைப் பகிர்ந்தார்..  நண்பகல் உணவும் வர அவளுக்கு ஊட்டிவிட்டார்.. இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.. அதன் பின் சசிகலா சாரதியிடம் பேசி மகிழ்ந்தாள்.. இருவரும் வெளிய செல்லலாம் என்றெண்ணி கிளம்பினார்கள்.. 

தன் தந்தை யின் கைப்பிடித்து ஊர் சுற்றினாள்.. அவளது ஆசை அங்கு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்க.. சட்டென்று அவள் முன்னே வந்த நின்ற மகிழுந்தலிருந்து இறங்கிய ஆட்கள் அவளை இழுத்து உள்ளே போட்டுகொண்டுப் பறந்தனர். கண் இமைப்பதற்குள் அரங்கேறியது அந்த நிகழ்வு..

” விஷ்ணு… விஷ்ணு…. என் பொண்ணு என் பொண்ணு… ” முடிந்த மட்டும் ஓடியவரால் அந்த மகிழுந்தைப்  பிடிக்க முடியவில்லை.. தனது அலைபேசி எடுத்து  மயூரனுக்கு அழைப்பை விட ஸ்விட்ச ஆப் என்று வந்தது.. மீட்டிங்கில் இருந்தான் அவன்.

என்னசெய்ய யோசிக்க, தான் தங்கையை அழைக்க, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று வந்து. நேராக வீட்டிற்குச் சென்றார்.. 

வாசலில் நின்றவர் முதலில் தயங்க.. பின் மகளை எண்ணி உள்ளே சென்றார்.. 
அவரைப் பார்த்த ராம் அதிர்ந்தார்.. ” யாரு ராம் வந்திருக்கா? ”  வைகுண்டம் கேட்க,

அவரை உள்ளே அழைத்ததார்.. பலராமனைக் கண்ட வைகுண்டம் அதிர்ந்தாலும் அவரது நிலையைக் காணப் பயந்தவர்.. தண்ணீர் கொடுக்கச் சொல்ல அவரிடம் கெஞ்சினார்.. ”  என் பொண்ண  காப்பாதுங்க மாமா.  அவளை யாரோ கடத்திட்டுப் போய்ட்டாங்க.. உங்க பேத்தியைக் காப்பாதுங்க  மாமா.. ” கதற.. 

“அய்யோ அண்ணா விஷ்ணுக்கு என்னாச்சு?”  எனவும் அவர் நடந்ததைக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்..  அவர்கள் ஏமாற்றியதைப் பத்தி கேட்டுக் கொள்ளாமல்.. அவளைத் தேட அடுத்த முயற்சி எடுத்தனர். ராமமும்  ஆதியும் ஒரு புறமும் தேட.  லட்சுமணனும் பலராமனும்  தேடச் சென்றனர். 

இதற்கிடையில் மயூரனுக்கு தகவல் சொல்ல சிலைப் போல அமர்ந்த விட்டான்… ” மயூ , என்னாச்சு? ”  அவனை உலுக்க, ” விஷ்ணுவ யாரோ கடத்திட்டாங்கலாம் சார்..” இரு கைகளையும் தாங்கி அமர்ந்து விட்டான். 

“மயூ, இப்படி உட்காராம.. வா நம்ம கமிஷனர் சார் கிட்ட போய் கம்பலைன்ட் கொடுக்கலாம்…” அவனைஅழைத்துக் கொண்டு புறப்பட்டார் மேத்தா. அவளைக்  கட்டிபோட்டு இருட்டறையில விட்டுக் கதவை சாத்திட.. கண்ணீர் விட்டு அழுதாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!