பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 34

கடல் வழியே பிறந்த ஆதவனும்  எழுந்து விடியலைக் கொடுத்த வேளை அது. சூரியனுக்கு நிகராக சூடாக இருந்தாள் பெண்ணவள். தன்னை மீறியே அனைத்தும் நடக்கிறது என்று தாமதமாகவே புரிந்துக் கொண்டாள் அம்மடந்தை.

மயூரனை, உடன் அழைத்துச் செல்ல,  பலராமன் வேண்டிய  நிற்பதில் கூட ஏழாத சந்தேகம், அவனிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்க, அவன் கூறிய இடம் தான் அவளை மேலும் அதிர வைத்தது…

பலராமன், கல்லூரியில் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்து இரண்டு நாள் சென்று வருவதைக் கண்டவளுக்குத் தானும் வேலைக்குச் செல்ல வேண்டும் எண்ணம் உதிக்க, பலராமனிடம் கலந்துப் பேசி, அவருடைய கல்லூரித் தோழனின் மனைவி ‘ தின நாளேடு ‘ நாளிதழில் முதன்மை ஆசிரியராக வேலைச்  செய்கிறார்… அந்த நாளிழலில் வேலை இருப்பதாவும் அவர் கூற, தனது சான்றிதழையும்  எடுத்துக் கொண்டு இருவரும் அங்கு விரைந்தனர்.  

முதன்மை ஆசிரியர் மல்லிகா விடம் விவரத்தைச் சொல்ல. அவரும்    அவளிடம் சில கேள்விகளைக் கேட்டு, பின் அவளை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.

அவள் சென்று ஒரு நாள் தான் ஆனது அதற்குள்  மயூரனும், ” தின நாளேட்டில், செய்தியாளராக, வேலைக்குச் சேர்ந்து இருப்பதையும் அங்குத் தான் செல்லவேண்டும் என்பதையும் கூற, தையலவளுக்கு வீட்டினரும் மயூரனும் போடும் திட்டம் புரிந்தது.

ஏற்கெனவே தனக்கே தெரியாமல் திட்டம் போட்டு  தன்னை ஏமாத்திய கூட்டம் தானே. இதைச் செய்வதில் என்ன பெரிய ஆச்சரியம். அவளுக்கு ஒன்று தெளிவாகப்  புரிந்தது, தன்னை மயூரனிடம் சேர்த்து வைப்பதே இந்தக் குள்ளநரிக் கூட்டத்தின் லட்சியம் என்பது.

‘ குடும்பமாயா இது, எல்லாரும் புரூட்டஸ் இருக்கானுங்கலே… சரியான ஃபிராடுங்க எல்லாம் இந்த அப்பா பண்ணின வேலை தான். என் கூட இருந்துட்டு அவனுக்கு ஒற்றன் வேலைப் பார்க்கிறார். இப்படி ஒரு குடும்பத்தை நான் பார்த்ததே இல்ல.. இன்னும் என்ன என்ன நமக்கு எதிரா பண்ணா போறாங்களோ! கடவுளே காப்பாத்து!’ மானசீகமாக வேண்டிக் கொண்டவள் எதுவும் சொல்லாமல் கையை வாசல் புறம் நீட்டினாள்.

அவளும் ஏதாவது பேசுவாள் வம்பு வழக்கலாம் என்று எண்ணியவனுக்கு ஏமாற்றமே இருக்க, முன்னே சென்றான் அமைதியாக.

” இதெல்லாம் உங்க வேலையா அப்பா? அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு அந்தக் கரடி, கிட்ட என்னைப் பிடுச்சுக் கொடுக்க…  அப்பா  செய்ற வேலையா இது?” அவர் முன் வந்து நின்று கேட்டாள். அவர்தான் இதுக்கெல்லாம் மூலக்காரணம் அல்லவா.

” என்னமா பண்ணா,  அப்பானா என் கடமையை நான் செய்யணுமே. பொண்ணும் மாப்பிள்ளையும் பிரிஞ்சு இருந்தா, வீட்டுல பெரியவங்க பேசி சேர்த்து வைக்கிறது தானே வழக்கம்.. நானும் அதை தான் மா பண்றேன். என் பொண்ணும் மாப்பிள்ளையும் ஏதோ காரணத்தால் பிரிஞ்சு இருக்காங்க, அப்பானா எப்படி கைக் கட்டிப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்? ஏதோ என்னால முடிஞ்சதைச் செய்றேன்.. இனி மாப்பிள்ளையே எல்லாம் பார்த்துப்பார்..”
அலட்டிக் கொள்ளாமல், முறுவலுடன், கூறும் தந்தையைக் கண்டு விகிர்த்துப் போனாள்.

” அப்பா, என்ன பேசறீங்க? அவன் எப்போ உங்களுக்கு மாப்பிள்ளையானான்? அவன் உங்க தங்கச்சி மகன் அவ்வளவு தான்.. அவன் என் புருஷன் இல்ல… ” 

“மயூ, உன் புருஷன் இல்லைனா, ஏன் மா அவரோட தாலியைச் சுமக்கிற? தாலிக்கு மதிப்புக் கொடுத்தா? இல்லை இந்த தாலியைக் கட்டினவருக்கு மதிப்புக் கொடுத்தா, எதுக்கு மா நீ இதைச் சுமக்கிற சொல்லுமா? மணமானப் பெண்கள் தான் தாலியைச் சுமக்கணும், இப்ப, சொல்லு அப்பா நினைக்கிறது தப்பா? ” என்று கேட்டு அவள் வாயை அடைத்தார். 
பதில் சொல்ல முடியாமல் தவித்துத் தலை குனிந்து நின்றாள்.

 ” போமா போ, கீழ மாப்பிள்ளை காத்துட்டு இருக்கார் போமா…” அனுப்பிவைக்க, அமைதியின் சொரூபமாய்ச் சென்றாள்.

வீரலிங்கம், அவள் வேலைக்குச் செல்வதால், வீட்டில் நின்றுருந்த பழைய ஸ்கூட்டியை,அவள் வேலைக்குச் சென்றுவர உதவியாக இருக்கும் என்று சரி செய்து கொடுத்தார்.

அதன் மேல் சாய்த்துக் கொண்டு, கண்ணாடி வழியே தனது கேசத்தைக் கலைத்தும் சரி செய்வதுமாக இருந்தான்.

அதனைக் கண்டதும் கடுப்பானவள், ” கொஞ்சம் கூடக் கருணை இல்லாமல் படுத்துறான். என்னைக்கு இவனைப் பார்த்தேனோ அன்னைலிருந்து பிரச்சனை மட்டும் தான் பார்த்துட்டு வரேன். கனவுல வந்தது பாத்தாதுன்னு நேர்ல வந்து இம்சைப் பண்றான்..

இன்னும் என்ன என்ன பண்ண யோசிச்சு வச்சுருக்கானோ, போதாக் குறைக்கு என் அப்பா வேற, இவனை மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு தலையில் தூக்கி வச்சுக் கொண்டாடுறார்.நமக்கு எதிரா  எல்லாரும் சதிப் பண்றாங்க. எப்படியாவது இதுல இருந்து தப்பிக்கணும்…’ எண்ணியவள், அவன் அருகே சென்றாள்..

” எத்தனை முறைப் பார்த்தாலும், அதே மைத்தாமாவு மூஞ்சித் தான் இருக்கும், வேற மூஞ்சி வர்றாது…” என்றாள்.

” ம்ம்.. உண்மை. வேற மூஞ்சி வர்றாது தான்… ஆனா,  என் பொண்டாட்டிக்குப் பிடிக்கிறது மாதிரி என் மூஞ்சி இருக்கணும்ல தான் பார்க்கிறேன்.” என்றான்.

” முகத்தைப் பார்த்து தான் பிடிக்கும் இல்ல, உள்ள இருக்க, அன்பு , பாசம் , குணம் தான் ஒருத்தருக்கு  ஒருத்தரைப் பிடிக்க வைக்கும் மிஸ்டர் மயூரன்…”

” ம்ம்ம்…. எல்லாம் என்கிட்ட இருக்கு அப்றம் ஏன் என் பொண்டாட்டிக்கு என்னைப் பிடிக்கல? “மறு கேள்விக் கேட்டு அவளை மடக்கினான்..

” அது இருந்தா மட்டும் ஒருத்தரைப் பிடிக்கும்ன்னு இல்ல…” 

” ஒ… அப்பா வேற என்ன இருக்கணும்? ” கைக்கட்டிச் சாவகாசமாக வண்டியில் சாய்ந்துக்  கொண்டு கேட்டான்.

“பச்…. எனக்கு ஆஃபீஸ் நேரமாச்சு மிஸ்டர்…  தேவை இல்லாமா கேள்விக் கேட்டு , என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. தள்ளுங்க…” என்றாள் சிடு சிடுவென சிடுத்துக் கொண்டு..

” நானா, தேவை இல்லமா கேள்விக் கேட்டேன்.. இந்தப் பொண்ணுங்களே இப்படிதான் போல” என்றான் முணுமுணுத்துக் கொண்டு,

அவனை முறைத்தவள், ” வழியில நிறையா ஸ்பீட் பிரேக்கர் வரும். சடன் பிரேக் போடுவேன், அப்ப மேல மோதுறது, இடுப்பப் பிடிக்கிறதுன்னு  இருந்த, நடு ரோட்ல இறக்கிவிட்டுட்டுப் போயிட்டேன் இருப்பேன். ஒழுங்க வண்டிப் பின்னாடிப் பிடிச்சிட்டு வா” என எச்சரித்தாள்..

” ம்க்கும் , இதுவேறையா? இங்க எங்கம்மா இடுப்பு இருக்கு? நகைக்கடைப் பொம்மைக்குக் கூட வளைவு சுழிவு இருக்கும். கோயில் இருக்கத் தூன் மாதிரி இருந்துட்டுப் பேச்சபாரு..” மீண்டும் அவள் காதில் விழுமாறு முணு முணுத்தான்..

“ஹலோ, வாயை மூடுறீயா? ” என்றவள் ரோட்டைப் பார்த்து ஓட்டினாள்.

அவளுக்கு மட்டுமே அது சாலையாக இருந்தாது.. அவனுக்கோ  பால்வெளியில் உலா வருவது போலவே இருந்தது..

புழுதிக் காற்றும்
தென்றல்
போல்
வீச…
வாகன
இரைச்சலும்
இன்னிசையாக…

அவளோடு கனவில் காதலித்து, வெறும் நிழற்படத்தோடு வாழ்ந்தவன், இன்று நிஜத்தில் அவளோடு சஞ்சாரிக்கும் ஒவ்வொரு  நிமிடமும் வேறு உலகத்திற்கே சென்று கொண்டிருந்தான்.

சொல்லோண்ணா உணர்வைக் கொண்டு பகிரா நிலையே அவனுக்கு…

‘தின நாளேடு ‘ நாளிதழுக்கு முன் வண்டியை நிறுத்துனாள்… பறந்துக் கொண்டதிருந்தவன் பொத்தென்று கீழே விழுந்தது போலவே எண்ணியவன் திருத் திருவென முழித்தான்..

” இறங்கறீயா இடம் வந்துருச்சு…” என்றதும் நடப்புக்கு வந்தவன், இறங்கி அவள் முன் வந்து நின்றான்.

” சார், எந்தக் கிரகத்துக்குப் போயிட்டு வந்தீங்க? ” நக்கலாகக் கேட்க,

” காதல் கிரகத்துக்கு, சும்மா சொல்லக்கூடாது.  நோ பொல்லுஷன், நோ நோய்ஸ்..  அப்படி ஒரு கிரகம்… நீ தான் மிஸ் பண்ணிட்ட. பட் இன்னும் வாய்ப்பு இருக்கு நீயும் வர்றீயா?  எனவும்..

” எனக்கு வேலை இருக்கு… நீங்களும் வந்த வேலையைப் பார்க்கறீங்களா மிஸ்டர் மயூரன்…”

“நானும் வந்த வேலையைத் தான் பார்க்கறேன் மிஸ்ஸ் மயூரன்…” என்றவன் அவளது பெரும் முழியையும் பொருட்படுத்தாது உள்ளே சென்றான்.
அவளும் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள்.

சீஃப் ஹெட் அறை வாசலில் நின்றுக் கதவைத் தட்டி ” மே ஐ கம் மின் ” என்றான்.

” எஸ் கம்மின் ” என்றதும் உள்ளே நுழைந்தவன், ” குட் மார்னிங்  மேம்…” என்றான்.

” குட்மார்னிங் மிஸ்டர் மயூரன்… டேக் யூர் சீட்…” என்றார் இடத்தைக் காட்டி.

” மிஸ்டர் மேத்தா உங்களைப் பத்திச் சொல்லிருக்கார். ஏன் நீங்க அங்க இருந்து இங்க வேலைக்கு வரணும் எனி ரீசன்? “

” இந்த ஊருக்கு வந்ததே என்னுடைய பெர்சனல்  வொர்க்காகத் தான் மேம்… இங்க வந்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது. பட்  ஐ ஸ்வீர்,நான் என் வேலையைப் பொறுப்பாகப் பார்ப்பேன். ட்ரஸ்ட் மீ மேம்…” என்றான் நெஞ்சில் கை வைத்து..

” இட்ஸ் ஓ.கே மயூரன்,ஐ ட்ரிஸ்ட் யூ…உங்களுக்கான வேலையை நான் சொல்லித்தான் தெரியணும் இல்ல, தின நாளேடு வெறும் நாளிதழ்  மட்டும் இல்ல இது எங்கக் குடும்பம் அதுல நீங்களும் இணைந்தது  ரொம்பச் சந்தோசம்… ” என்றவர் அருகில் இருந்த பெல்லை அழுதினார்..
” எஸ்க்யூஸ் மீ மேம்”  உள்ளே நுழைந்தார் துணை முதன்மை ஆசிரியர்.

“ஜீவா,நீங்க சாரைக் கைடுப் பண்ணுங்க, அப்றம் புதுசாகச் சேர்ந்த விஷ்ணுக் கிட்ட, இவருக்கு அஸ்ஸிடன்ட் இருக்கச் சொல்லுங்க ” என்றார்..

” ஓகே மேம்… வாங்க, சார்…” என்றார்.

” நான் மயூரன், பேரைச் சொல்லியே  கூப்பிடுங்க சார் ” என்றான் நட்புக் கரம்  நீட்டி..

” ஓ.கே மயூரன், ஐ யம் ஜீவா?” என்றார்.. இருவரும் பேசியவாறே விஷ்ணு அமர்ந்து இருக்கும் இடத்திற்கு வந்தனர்..

” விஷ்ணு….” அவர் அழைக்க மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்.

” குட் மார்னிங் சார்…”

” குட் மார்னிங் விஷ்ணு, இவர் மயூரன், இவரும் இனி இங்க தான் வேலைச் செய்யப் போறார்… மேடம் உன்னை, இவருக்கு அசிஸ்டண்ட் இருந்து வேலையைக் கத்துக்கச் சொல்லிருக்காங்க…  இவங்க விஷ்ணு, இப்பதான் ஜாயின் பண்ணிருக்காங்கப் பார்த்துக்கோங்க..” எனக் கூறி விட்டு அவர் அகல, அவ்ளோ அவனைக் கொன்று விடும் அளவு முறைத்தாள்

” என்னை ஏன் மா முறைக்கிற, நான் என்னவோ அடம் பிடித்து, விஷ்ணுத் தான், எனக்கு அசிஸ்டண்ட் வேணும் சொன்ன மாதிரி இருக்கு உன் பார்வை… உனக்கு இஷ்டம் இல்லைன்னா உள்ளே போய்ச்  சொல்லிடு மா… எனக்கு எந்த ஆப்ஜெக்ஷன் இல்ல…” என்றான் நாவால் கன்னத்து மேடையை உயர்த்தி முறுவலித்தான்..

அவள் எதுவும் சொல்லாமல் அமர, ” நன்றி” உதித்தவன் அமைதியாக அவன் அறைக்குச் சென்றான்.
அன்றைய நாள், அவன் அவளுக்குஒரு ஆசிரியராகவே இருந்தான். அவனது இத்தனை வருட,  பட்டறிவைக்  கண்டு வியந்துப் போனாள். அவன் ஆசானாக இருக்கும் போது அவனது பார்வை, சிந்தனை எதிலும் மாற்றம் இல்லாமல் காரியமே  கண்ணாக இருந்தான்..
ஒரு செய்தியாளருக்கு இருக்க வேண்டிய பண்புகள்.
செய்தி மோப்பத் திறன்,நல்லக் கல்வியறிவு,சரியாகத் தருதல்,விரைந்து செயல்படல்,நடுநிலை நோக்கு, செய்தித் திரட்டும் திறன்,பொறுமையும் முயற்சியும்
, சொந்த முறை,நல்லத் தொடர்புகள்
நம்பிக்கையைக் கட்டிக் காத்தல், நேர்மை, கையூட்டுப் பெறாமை,செயல் திறன்,ஏற்கும் ஆற்றல்
,தன்னம்பிக்கை,இனிய ஆளுமை, தெளிவாகக் கூறும் ஆற்றல்,மரபுகளைப் பற்றிய அறிவ,சட்டத் தெளிவு..

ஆகிவற்றை ஒரு நிருபருக்கு இருக்கவேண்டிய  தகுதிகளும் பண்புகழும் அதை அவளுக்கு அவன், தெளிவாக எடுத்துரைத்ததான்.

அவன் தன்னவன், என்று மாறி ஒரு ஆசானாய் இருந்தான்..

அந்தி நேரம், அவர்கள் வேலை முடிய, இருவரும் அமைதியாகச் சேர்த்தே இறங்கி வந்தார்கள். இன்னும் அவன் மீது படிந்தப் பிரமிப்பு மறையவில்லை அவளுக்கு.. ஒரீரு முறையாவது பார்த்து விடுவாள்.. அதைக் கடைக்கண்ணால் கண்டாலும் பார்க்காதது போலவே வந்தான்..

அவள் பார்க்கிங் ஏரியாவில் இருந்து ஸ்கூட்டியை எடுத்து வந்து அவன் முன் நிறுத்த, அவனும் பின்னால் அமர்ந்து பின்னால் பிடித்துக் கொண்டான்.

இருவரும் சாலையில் பயணிக்க, ” விஷ்ணு… எனக்குக் காபி வேணும் வாங்கித் தா…” கொஞ்சம் உரிமையிலும் கெஞ்சலிலும் கேட்க, அவள் மனம், அதை  மறுக்காமல், மூளை விடுத்த கட்டளையாய்ச் செயல் படுத்த தொடங்கினாள்.

மதுரையில் காபிக் கென்று பெயர்பெற்ற கடைக்கு அழைத்துச் சென்றாள்..
அங்கே தனது வாகனத்தை  நிறுத்தி உள்ளே செல்கையில் எதிரே இருந்த உணவு கடையில் இருந்து ஒரே சலசலப்பு…

ஒரு பெண்ணைக் கூட்டமாக அடித்து வெளியே அனுப்பினர். அதைக் கூட்டமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்…

அவளுக்கோ கோபம் தலைக்கு ஏற, வேகமாகச் சாலையைக் கடக்கச் சென்றாள் .” ஹேய் விஷ்ணு எங்கப் போற நீ? ” அவனும் பின்னே சென்றான்..

சாலையைக் கடந்து, கூடத்தை விலக்கியவள், அந்தப் பெண்ணைத் தன் பக்கம் இழுத்து, அந்தப் பெண்ணை, அடிக்கும் ஆணைப் பிடித்துத் தள்ளியனாள். அவன் தடுமாறி கீழே விழுந்தான். அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்க்க, அவளைக் கண்டு அதிர்ந்துப் போனாள்.

கொள்ளை தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!