பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 38

அந்தக் காலத்திலிருந்தே, கருவுற்று இருக்கும் தாய்மார்களிடம் வீட்டிலுள்ள, பெரியவர்கள் எதிர் பார்ப்பது ஆண்பிள்ளைகளைத் தான்.. அவன் தான் குலத்தைத் தழைக்க வந்த வாரிசு. பெண் பிள்ளைகள் பிறந்தால் தரித்திரம் , செலவு என்றே எண்ணி ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் ஆண் உதவினாலும் அவளின்றி வாரிசு வந்திடுமா? அன்றிலிருந்து பெண் , ஆண் குழந்தைகளிடம் ஒரு பாரபட்சம் இருக்கும்.

இன்று சிலர் பெண் பிள்ளைகளை எதிர் பார்த்தாலும் , ஆண் வாரிசும் வேண்டும் என்கின்றனர்.

மகாவிற்கு, பிறந்த இரண்டுமே  பெண் மகவுத் தான்… மூன்றாவதாக ஆண் வாரிசு  வேண்டும் என்று நச்சரித்தனர் அவளை. ஆனால், மருத்துவர்களோ இதற்கு மேல் நீங்கள் கருவுற்றால், உங்கள் உயிருக்கே ஆபத்து என்றும், அந்தக் கருவைத் தாங்கும் சக்தி இல்லை  என்றனர்.. மகாவிடமும் அவளது கணவரிடமும்.

ஆனால் சிறிதும் கவலை இன்றி, அவளிடம் கரர்ராகச் சொல்லிவிட்டனர். ஆண் பிள்ளையைப் பெத்துக் கொடு, இல்லையென்றால்
என் மகனுக்கு வேறொரு திருமணத்தைச் செய்து வைப்பேன் என்றார் மகாவின் கணவர் சுந்தரத்தின் தாயார் சரோஜா.

கொஞ்சம் கூட, ஈவு இல்லை அவர்களது உள்ளத்தில்.  மகாவின் உடல் நலத்தைப்பற்றிச் சிறிதும் யோசிக்கவே இல்லை.

அவளை,  அவளதுதாய் வீட்டில் விட்டுச் சென்றான். வாசுதேவ்கிருஷ்ணனிடம் இவர்கள் பக்கம் தான் நியாயம்  இருக்கிறது போலப் பேசிவிட்டுச் சென்றனர் சரோஜாவும் சுந்திரனும்..

“டாக்டர் ஆயிரம் சொல்லுவாங்க, அதுக்காகப் பிள்ளையே பெத்துக்க மாட்டேன்னா சொல்லுறது?
அப்பெல்லாம் பத்து பன்னிரெண்டு பிள்ளைக்களைப் பெத்துப் போட்டாங்க பெரியவங்க, அவங்க எல்லாரும் நல்லாதானே இருந்தாங்க? இவ என்ன குழந்தைப் பெத்துக்கிறதுக்கு யோசிக்கிறா? பெத்துப் போடுறதை விட வேற என்ன வேலை  இருக்கு அவளுக்கு? இப்படி முரண்டு பிடிச்சிட்டு இருந்தா,அவன் வேற கல்யாணம் பண்ணிட்டு போயிருவான்.. அப்ப  கண்ணைக் கசக்கிக்கிட்டு என் முன்னாடி வந்து நிக்கக் கூடாது…” வாசுவும் தன் பேத்தியின் உடல் நிலையை எண்ணாமல், தன் பெயருக்கும் கெளரவத்துக்கும் இழுக்கு வந்திடுமோ என்று அஞ்சினார்.

“இவரு எல்லாம் மனுஷன் ஜென்மம் தானா? இன்னமும் மன்னாங்கட்டிக் கெளரவத்தைத் தான் கட்டி அழுகுறார்..  எப்போ இவரெல்லாம்  திருந்த போறாரோ… இந்த மனுஷனுக்கு ஒரு சாவு வந்தால் தான் இந்த வீட்டில நிம்மதிக் கிடைக்கும்.. ” ருக்குவும் புலம்பி விட்டுச் செல்ல,

மேகலாவும் மகாவும் அழுதனர், ஜெயராமனுக்கோ கோபம் வந்தது… தன் தம்பி சொன்னது உண்மைத் தான். இவருக்குக் குடும்பத்தை விட, பாழாப் போன, கெளரவம் தான் முக்கியம் என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறார்.

“அண்ணா, நாம வேணா மாப்பிள்ளைக்  கிட்ட, பேசுவோமா? பொண்ணோட வாழ்க்கை அண்ணா, நாம அவரைப் போல இருக்க  முடியாது. மகாவுக்காகப் பேசித்தான் ஆகணும்” பரதனும். அண்ணனின் வேதனை அறிந்துத் துணை நிற்க, இருவரும் சுந்தரனின் வீட்டிற்குச் சென்று பேசச் சென்றார்கள். அண்ணன் வாசுதேவகிருஷ்ணன்  உடன் இருப்பதால், சரோஜாவிற்கு ஏகபோகத் தைரியம். அவர்கள் எதற்கும் மசியவே இல்லை.

கோபமாக வீட்டுக்கு வந்த ஜெயராமனோ, “எனக்கு என் பொண்ணோட உயிர் தான் முக்கியம்.. அவள் இங்கயே இருக்கட்டும் ” என்றுகூறி விட்டு நகர்ந்தார்.

மேகலாவின் மடியில்  தலை வைத்து அழுதாள் மகா. எவ்வளவு ஆறுதல் சொல்லியும் அவள் அழுகை ஓய்ந்தப் பாடில்லை.

இவை யாவும் அறியாத அர்ஜுனோ,தோழர்களுடன் ஊர்ச் சுற்றி விட்டு வந்தான்… மகாவின் அழுகையைக் கண்டவனுக்கு  அதைத் தாண்டிச் செல்ல  முடியவில்லை.. மனது பிசைய அவர்கள் அருகில் வந்தவன், ” எதுக்கு மா இவ அழுகிறா? என்னாச்சு இவளுக்கு? ” எனவும்

அவருக்கு அவன் மேல் கோபம், கஷ்ட நஷ்டங்களிலுக்கும் நல்லதுக்கெட்டத்திலும் உடன் இருப்பவர்கள் தான் உடன் பிறந்தவர்கள், திருமணமானப் பின்னும் பெண்கள் கணவன் வீட்டிற்கு வந்தாலும், அவர்களுக்கு, தாய் வீட்டு அரவனைப்பைத் தருவது அவர்கள் உடன் பிறந்தவர்கள் தான் … அப்படி இருக்கையில்,  அவளுக்கு உடன் பிறந்தவன் இருந்தும் துணை நிற்காமல், எதற்கும் உதவாமல் இருப்பதை எண்ணி அவருக்குக் கோபம் வந்தது, “உன்கிட்ட, சொன்னா மட்டும் என்ன செஞ்சிட போற நீ? போ பா போ… போய் உன் பிரண்ட்ஸோட சந்தோசமா இரு ..” என்றார் கடுப்பில்.

“பச்…. மகா, எதுக்கு இப்ப நீ அழுத்துட்டு இருக்க? உனக்கு என்னாச்சு? ”

” அவ, ஒரு மாசமா இங்க தான் இருக்கா? உனக்கு இப்பதான் கேட்கத் தோணுச்சுல, உன் மாமா, உன் அக்காவை  வேணாம்னு சொல்லி அனுப்பிட்டார் போதுமா?” என்றவர்  முந்தானையைக் கொண்டு மூக்கை உறிஞ்சியவர், புரியாமல் நிற்கும் அவனிடம்  விஷயத்தைக் கூறினார்..

முதன் முதலாக, தன் தமக்கையை எண்ணித் துடித்தான்…அவனுக்குச் சுந்தரன் மேல அலாதிக் கோபம் வர்ற, விறு விறுவென்று ஹாலுக்குச் சென்றான்.

அங்கே  கணக்கு வழக்கைப்  பார்த்துக் கொண்டிருந்தார் வாசுதேவ்கிருஷ்ணன்.

தன் முன்னே கொதித்துப் போய் நிறுக்கும்  அர்ஜுனையும் உடன் இருக்கும் மகாவையும் கண்டார்..

கோபத்தில் அவளையும் கையோடு இழுத்து வந்தான் அர்ஜுன்..

”  அக்காக்கு ஒரு நியாயம் சொல்லுங்க  தாத்தா! ” என்றவன், குரலை உயர்த்தினான்.

தாத்தா என்று மூச்சுக்கு முன்னூறுத் தடவை அழைத்துத் தான் சொன்னதைச் செய்யும் பேரன், இன்று தன் முன் குரலை உயர்த்துவதைக் கண்டு, அதிர்ந்துத் தான் போனார்..

“என்ன நியாயம் சொல்லுணும் ?”என்றார் திமிராக,

” இன்னொரு குழந்தையைச் சுமக்கிற அளவுக்கு அவளுக்குத் தெம்பு
இல்ல, அவ உயிருக்கே ஆபத்தன்னு  டாக்டர் சொல்லிருக்கார்… இருந்தும் ஏன் அவளைக் கொடுமைப் பண்றீங்க? உங்களுக்குப் புரியலையா தாத்தா? அவ உயிர விட, அந்தக் குடும்பத்துக்கு ஆண் வாரிசு தான் இப்ப முக்கியமா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அவங்க தான் பேசுறாங்கன்னா , நீங்களும் ஒத்து ஊதுறீங்க.. கொஞ்சமாவது பெரிய மனுஷனா  நடங்க தாத்தா..” என்றதும் சுருக்கென்று வலித்தது..

“அர்ஜுன்…” கத்தியவரின் கண்கள் சிவந்து இருந்தது .. சுற்று முற்றுப் பார்த்தார்.. தன் முழுக் குடும்பமும் இருந்தது.

ஆனால் யாரும் எதுவும் சொல்லவுமில்லை அவனைத் தடுக்கவுமில்லை… தன் இரு மகன்களும், மருமகள்கள்  இருந்தும் தடுக்காமல்  நிற்க, அவருக்கு அவமானமாய் இருந்தது.

“கத்தாதீங்க தாத்தா…. உங்க பேத்தி தானே அவளும் கொஞ்சம் கூடக் கருணை இல்லையா உங்களுக்கு?இவ புருஷன்னும் உங்க தங்கச்சியும் ஆண் வாரிசு வேணும் கேக்கும் போதே நீங்க திட்டி அனுப்பிருந்தால் உங்க மேல இன்னும் மதிப்பு கூடி இருக்கும். ஆனா, நீங்க ச்ச.. சொல்லுவே அறுவருப்பா இருக்கு. அவளைப் பெத்துக் கொடுக்கச் சொல்லுறீங்களே, பிள்ளை பிறந்து அவ இறந்து போனா, அந்த மூணு
குழந்தைகளை நினைச்சுப் பார்த்தீங்களா? இவ நாளைக்கு பெத்துப் போட்டுச் செத்து போயிருவா! அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருப்பான்.. அந்தக்  மூணு குழந்தைகளும் அனாதையா நிற்கணும் அதான் உங்க ஆசையா?

முடிவா கேக்குறேன் இவளுக்காக  உங்க  தங்கச்சி மகன் கிட்ட பேசுறீங்களா? இல்லையா? ” அதிகாரமாய்க் கேட்டான் . பதிலின்றி அங்கிருந்துச் சென்று விட்டார்..

முதல் முறையாக, அவனை மெச்சுத்தல் பார்வைப் பார்த்தனர் அந்தக் குடும்பத்து ஆட்கள்… ” அப்பா, இவ சம்மதம் இல்லாம, மாமாவால கல்யாணம் பண்ணிக்க முடியாது ப்பா. நாம, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போலாம்” என்றவன் அதற்கு ஒரு தீர்வு கட்ட எண்ணினான்.

” இல்ல, அர்ஜுன், அவனுக்கு அப்பா, கூட இருக்கிறார்ன்ற தைரியம்… இங்க இருக்கிற போலீசை எல்லாம் கைக்குள்ள போட்டு வச்சுருக்கான். நம்மால, ஒண்ணும் பண்ணமுடியாது டா…” என்றார் பரதன், ஜெயராமனும் பரதனும் சென்று சுந்தரனிடம் பேச, அவன் திமிராகக் கூறியது இதுவே. போலீஸும் அவன் பக்கம் தான் இருக்கிறது என்று காலரைத் தூக்கி விட்டுக்குக் கொண்டான்.

” இதுக்கு நான் ஒரு முடிவுக் கட்டுறேன் பா..” என்றவன் அங்கிருந்து வெளியே வந்தான்.

முதலில் என்ன செய்வதென்று யோசித்தவனின் மனக் கண்ணில் வந்தது அவன் சித்தப்பா, பலராமன் தான்… அவரிடம் முதலில் பேசத் தயங்கியவன், வேறு வழியின்றிப் போனில் அழைத்து, அவனிடம் கூறி அழுது விட்டான்.

அவர் கல்லூரியில்  இருந்ததால், அவரால் சரியாகப் பேச முடியவில்லை..  விஷ்ணுவைப் போய்ப் பார் என்று அனுப்பிவைத்தார். அவர் கொடுத்த விலாசத்திற்குச் சென்றான்.

“அக்கா வாழ்க்கையைக் காப்பாத்து விஷ்ணு, இந்தப் பிரச்சினை இப்படியே தொடர்ந்தால் , அவ வீட்டோட தான் இருக்கணும்.. இல்லேன்னா, குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்டு செத்துப் போகணும்… இந்த இரண்டைத் தவிர வேறு வழி இல்லை அவளுக்கு.. சுந்தரன், ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கத் தயங்கவே மாட்டான்.. நீ தான் ஏதாவது பண்ணனும் விஷ்ணு… ” அவள் கையைப்பற்றிக் குலுங்கிக் குலுங்கி அழுதான்..

” அண்ணா, மகா என் அக்கா, வீட்டை விட்டு தான் வந்திருக்கோம் உறவை விட்டு இல்லை… கண்டிப்பா, நான் மகாவோட, வாழக்கையைச் சேவ் பண்றேன் அண்ணா. பெத்தப் பிள்ளை வீட்டை விட்டு வந்ததை நினைச்சுக் கவலைப் படல, பேத்தி வாழ்க்கை அழியப் போதேன்னு  ஒரு பயம் இல்ல… இன்னும் அந்தச் சண்டியர்மீசையை,  கெளரவம்ன்னு  சொல்லி முறிக்கிட்டுத் திரியிறார்… அந்த மீசைக்கு,ஒரு நாள் இருக்கு. நீ கவலைப் படாத அண்ணா, நான் பார்த்துகிறேன்..” என்றவள் ஆறுதல் உரைக்க,

“என்ன விஷ்ணுப் பண்ண போற? அவனுக்குப்  போலீஸ் பலம் இருக்கு. அவனை நம்மால் ஒண்ணும் பண்ண முடியாது விஷ்ணு” என்றான்.

” ஏன் முடியாது மச்சான்? அவனோட பலம் உள்ளூர் போலீஸ் தான்… அவங்கள வேணாம் அவனால கைக்குள்ள போட முடியும் . கமிஷனரைக் கைக்குள்ள வச்சுக்க முடியுமா? இந்தப் பிரச்சனையை நான் சால்வ்  பண்றேன். நீங்க தைரியமா இருங்க..” என்றவன் வாக்களிக்க, ஏனோ இன்னும் மயூரன்,   அவனுக்குச் சொந்தமென மனதில் ஒட்ட வில்லை. அன்னியம்  போலவே நினைத்தான்..

” தங்க்ஸ் சார்… அவ, வாழக்கையைச் சேவ் பண்ணா போதும் வேற எதுவும் எனக்கு வேணாம்…” என்றான் கண்ணைத் துடைத்தவாறு .அவனது’ சார்’ ல்  இன்னும் அவன் சொந்தமாய் ஏற்றுக்கொள்ள வில்லை என்றெண்ணி சிரித்தவன், பிறகு பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டான்.

“அண்ணா , கேக்குறேன் தப்பா  எடுத்துக்காத … நீ எப்போல இருந்து இப்படி மாறுன்னா? உனக்கும் அந்த மீசைப் போலப் பொண்ணுங்கன்னா, பிடிக்காதே.. எப்படி, அண்ணா இப்படி மாறுன்னா? அதிவும் மகாக்காக, அழுகிற… காப்பாத்த எண்ணுற எப்படி அண்ணா? ” மனதில் அவனிடம் கேட்டு நச்சரித்துக் கேள்வியைக் கேட்டே விட்டாள்..

” அதுவா மா, என் நண்பனோட அம்மா கதறல் தான் , என்னை மாத்துச்… அவங்க வீட்டுக்காரர் இன்னொரு கல்யாணம் பண்ணித் துரோகம் பண்ணத்தைச் சொல்லும் போதும், அந்தக் கண்ணீர் என் ஆணவத்தைக் கரைச்சிருச்சு… அதே நிலைமை என் அக்காவுக்கு வர்றக் கூடாது நினைச்சேன்… என்னை  மன்னிச்சுடு விஷ்ணுமா… உனக்கு நான் ஒரு சரியான அண்ணா இல்லாம போனதுக்கு..  எப்படி யாவது, தாத்தா எண்ணத்தை மாத்தி,நம்மகுடும்பத்தை ஒண்ணுச் சேர்க்கணும்… ” என்றான்.

அவன் மாறியதே ஆச்சர்யம் என்றால், சேர்த்து வைக்கிறேன் சொன்னது பேராச்சர்யமே. ” அண்ணா, வா வீட்டுக்குப் போலாம்..” ,

“இல்லமா இன்னொரு நாள், வரேன் “என்றவன் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

இருவரும் அங்கே அமர்ந்திருக்க, மயூரன் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். ” மயூ, என்ன பண்ணலாம்? போலீஸ் கிட்ட போலாமா?.. அவனைத் தூக்கி ஜெயில் போடணும் அப்ப, தான் திருந்துவான் அவன்…” என்றாள் பல்லைக் கடித்தவாறு.

” இல்ல விஷ்ணு, இது நம்மக் குடும்பப் பிரச்சனை.. போலீஸ் கிட்ட போக வேணாம்.. நான் பார்த்துகிறேன் இந்தப் பிரச்சனையை. நான் சால்வ் பண்ணினா தான்,  இங்க எதுக்கு  வந்தேனோ அதை நிறைவேத்த முடியும்” என்றான் சிறு முரலோடு..

“எதுக்கு இங்க வந்த? “

” குடும்பத்தைக் ஒண்ணும் சேர்க்கத் தானே வந்தேன்.. இந்தப் பிரச்சனை, எனக்கு ஒரு என்ட்ரி டிக்கெட். கண்டிப்பாக இந்தப் பிரச்சனை வச்சு நான் குடும்பத்தை ஒண்ணுச் சேர்க்கணும்..” என்றான் தீர்க்கமாக..

“அப்ப, நீ எனக்காக வர்றலையா? ” சட்டென கேட்டவள் நாக்கைக்கடித்துக் கொண்டாள்.
அவன் முகத்தில் படர்ந்த காதல் ரேகையும் கண்ணில் மின்னிய குறும்பும் அவளை வெட்கத்தில் ஆழ்த்தியது.

அவள் பின்னந்தலையை அழுத்தி, தன் அருகே அவள் முகத்தைக்  கொண்டு வந்தவன்…” ஓய் பேட் இமாஜினர், உனக்காகத் தாண்டி வந்தேன் . என் மேல் உனக்கு காதல் வந்ததும் உன்னைக் கூட்டிப் போய் வாழ, நான் சுயனலவாதி இல்லை.. நம்ம ரெண்டு குடும்பத்தையும் சேர்த்து ஊரறிய, உன் கழுத்துல தாலிக்கட்டி வாழணும்… அதுக்குத் தான் வந்தேன் போதுமா” என்றதும் அவனிடம் விலகினாலும்..
உள்ளே ஒரு குறுகுறுப்பு  அவனால்  தான் ஏற்பட்டது. அவள் முகத்தில் அப்பட்டமாக வெளிப்படும் நாணத்தை மறைக்க, முகத்தைத் திருப்பிக் கொண்டவள் ..” வீட்டுக்கு போலாம் மயூ,… ” என்று எழுந்துக் கொள்ள… அவனும் உடன் எழுந்து நடந்தான்..

இருவரும் இல்லம் வர்ற, மயூரன் பலராமனிடம் விஷயத்தைக்குக் கூறினான் . அவரும் வேதனைக் கொள்ள, ஆறுதல் அளித்தான்.. மறுநாள் விடிய, மயூரன் நேரமாக எழுந்து எங்கோ சென்றிருந்தான்..

விஷ்ணு, அவனைப்பற்றித் தாய் தந்தையிடம் வினவ, அவர்களோ தெரியாது என்றனர்..

தனியாகத் தான் அலுவலகத்திற்கு வந்தாள். ஒரு வேளை வேலைக்கு  வந்திருப்பதானோ என்றேண்ணி அவன் அறைக்குச் செல்ல, வெற்று இடமே அவளை வரவேற்றது..

எங்குச் சென்றிருப்பான், என்ற எண்ணமே காலையிலிருந்து அவளுக்கு வேலை, ஓடவே இல்லை.” என்ன விஷ்ணு, மயூ தம்பி இல்லாம வேலைச் செய்ய முடியல போல? ”  நக்கலடித்துக் கொண்டு அவள் பக்கவாட்டில் காபியை வைத்தாள் வினோதினி.

” ஐயோ அக்கா, அப்டி எல்லாம் இல்லை” வெட்கம்  கொண்டு சமாளித்தாள். ஆனால் அது தான் உண்மை. நேரம் செல்லசெல்ல நரகமானது அவளுக்கு.  மாலை அலுவலகம் முடியும் தருவாயும் வந்தது .இதற்கு மேல்  இங்கு இருக்க முடியாது, சொல்லி விட்டு கிளம்பிலாம்  என்றெண்ணியவள் இருக்கையை விட்டு ஏழ, மயூரன் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டு கொதித்துப் போய் இருக்க, கூலாக விசில் அடித்தவாறு வந்தவன், அவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு தன்னறைக்குச் சென்றான்..

‘ கொப்பமவனே! இங்க நான் கொதிச்சு போயிருக்கேன். கூலா வந்ததும் இல்லாம, கண்ணடிக்கிறீயா? இருடா வரேன் ‘  வேக வேகமாக அறைக்கதவைத் திறந்த, உள்ளே நுழைந்தவள் காளியாய் வந்து நின்றாள்.

” என்னாச்சி விஷ்ணு, ஏன் கோபமா இருக்க? “

” ஏன் உனக்கு தெரியாதா? எங்கடா போனா சொல்லாம… அப்படி என்ன தலைபோற காரியம் சொல்லாமா போறளவுக்கு? “

” என்னை மிஸ் பண்ணியா பேபி? ” 

” மன்னாங்கட்டி, நான் இருக்க கோவத்துக்கு உன்னை….”
மேசையிலிருந்த வெய்டரை எடுத்தவள்.

” மண்டைய பொழந்திருவேன், உண்மையை சொல்லு எங்க போய்ட்டு வர்ற? “

” ஹேய் போடுறாதடி அப்றம் உன் மாமா, கோமா தான்…” என்று கேலிச் செய்ய,” பச்….” எறிவது போல் மேலும் கையை உயர்த்த, “ஒகே ஒகே கூல்… சொல்லுறேன் உங்க அக்காவையும் மாமாவையும் சேர்த்து வச்சுட்டு வரேன் விஷ்ணு…” என்றதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரியா, அவனோ, அவள் கையில் இருந்த வெய்ட்டரை வாங்கி வைத்தான். 
 
கொள்ளை தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!