பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 16

குளிர் நிறைந்த அந்த அறையிலும் அவன் முகம் முழுதாய் வியர்த்துப் போயிருந்தது. இன்னும் அந்த நடுக்கம் மறையவே இல்லை… தான் செய்த காரியம் கனவாக இருக்கக் கூடாது என்றிருந்தது அவனுக்கு.

ஒவ்வொரு  முறையும் அவனுக்கு இது கனவாகவும் இல்லை, அவன் மனக்கண்ணில் காணும் கனவாகவும் தான் இருக்கும்.. அப்பொதெல்லாம் இதயத்தில் பனிமழை பெய்வது போலவும் இனிப்பை உண்டது போலிருக்கும்..

ஆனால் இன்றோ, அவள் பார்த்த பார்வையும் தான் செய்த காரியம் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது.. தன்னை நம்பி வந்தவளுக்கு, என்ன என்னக் கஷ்டங்களை இழைத்துக்கொண்டிருக்கேன் என்பதைப் புலம்ப மட்டுமே முடிந்தது அவனால்.. 

கணவன் மனைவியாக நடிக்க வந்தாலும், தன்னை விட அவளுக்கே அதிக சோதனையும் கஷ்டமுமே வந்தது.. சடங்குச் சம்பரதாயங்களில் மாட்டிக்கொண்டு இன்றுவரை  அவளை அந்த வீட்டார் படுத்தி எடுத்திக்கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு முறையிலும் அவள் தப்பித்துக்கொண்டிருந்தாலும் இம்முறை அவள் மட்டுமின்றி அவனும் வசமாய் மாட்டிக்கொண்டான்.

அந்த நிகழ்வை எண்ண, உடல் அதிர்வைக் கண்டது.. 

வெறும் மஞ்சள் கயிறைத் தாலியாக அணிந்திருந்தாள் விஷ்ணு.. ஒரு முறை தனா படுத்தியப் பாட்டால், அவளுக்குத் தாலியைப் பிரித்து  தங்கத்தில் போட வேண்டும் என்று சகு சொல்லிருக்க, அந்த நாளும் வந்தது….  அருகில் வசிக்கும் சில சுமங்கலிப்  பெண்களை அழைத்திருந்தார் சகு..

நல்ல நேரத்தைப் பார்த்து தமிழ் வழக்கப்படியே தாலியில் காசு , குண்டு என அனைத்தையும் கோர்த்து வைத்திருந்தனர்.. கடவுள் முன் அனைவரும் அமர்ந்து பூஜை நடந்திக்கொண்டிருந்தனர்..

விஷ்ணுவோ, ‘ ஆள் இல்லாத டீக்கடைக்கு யாருக்கு தான் இவங்க டீ ஆத்துறாங்களோ! தாலியே நான் கட்டினது தான் அதுக்கு எதுக்கு இவ்வளவு சம்பரதாயம்.. எந்தப் பந்தத்தையும் உணர்த்தாத இந்தத் தாலி, வெறும் கயிறு தான்., இந்தக் கயிறுக்கு இத்தனை அலங்காரம் தேவையா? ‘ என்பது போல தான் அவர்கள் மத்தியில் அமர்ந்திருந்தாள் விஷ்ணு.

இங்கோ மயூரனோ அதற்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல, சீமாவைப் பார்த்ததையும் அவள் கூறியதைப் பதிந்து வைத்திருந்த வீடியோவையும், மேத்தாவிடம் காட்ட அதனை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே கிளம்பினான். அவனைத் தடுத்தது சகுவின் குரல்.

” எங்க கிளம்பிட்ட மயூரன், இங்க வீட்டுல விஷேசம் நடுக்கும் போது? ” என கேட்க..

” எனக்கு முக்கியமான வேலை இருக்கு சகு, இது லேடிஸ் பங்சன் தானே! நான் எதுக்கு ? ” எனவும்…

” என்னடா லேடிஸ் பங்சன்? இது லேடிஸ் பங்சனா இருந்தாலும் பங்சன் உன் பொண்டாட்டிக்கு தான். அவளுக்கு நடக்கிற நல்லது கெட்டதுல நீ  கூட இருக்கணும். இப்படி அம்போன்னு விட்டுப் போகக் கூடாது மயூ! வா வந்து அவ பக்கத்தில் உட்கார்….” என்றார்…

அவனும் அவள் அருகில் வந்து அமர்ந்தான்…

விஷ்ணு அவனைப் பார்த்து முறைத்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.. ” உனக்கு என்னம்மா கோபம் என்மேல? ” எனவும்..

” உனக்குப் பொறுப்பே இல்ல மயூரன்.. நானா இருக்க அமைதியா இருக்கேன். இங்க உன் பொண்டாட்டி இருந்திருந்தா உன் நிலமையை நினைச்சு பாரு! ” எனவும் சிரித்தவன், ” அதுக்குத் தான் நான் கல்யாணமே வேணான்னு சொல்லுறேன்.. இந்தச் சடங்கு சம்பரதாயம், ஐ ஹேட் சச்ச திங்க்ஸ்… எனக்கு இதெல்லாம்  சுத்தம்மா பிடிக்கல!… ” என்றான்.

” உன் முடிவும் சரிதான் மயூரன். இல்லைன்னா, ஒரு பொண்ணோட சாபத்துக்கு நீ ஆளாகிருப்ப! குட் தாட் இதே பாலோவ் பண்ணு… “என்றாள்..

இருவருமே இருவருக்கு மட்டும் கேட்கும் படியே பேசினர்..  பூஜைகள் முடிய, தங்கசெயினின் இருபக்கத்திலிலும் அந்த மஞ்சள் கயிறைக் கட்டினர்.. அந்தத் தாலிச் செயினை மயூரனின் கையில் கொடுத்தவர், ” தம்பி, இதை உன் பொண்டாட்டி கழுத்துல போடுபா… ” என்றார் அந்தப் பெரிய மனுசி!..

‘ தான் கேட்டது சரிதானா? ‘ என அவன் அவரைப் பார்க்க, ” என்னப்பா முழிக்கிற? இந்தத் தாலிச்செயினை அந்தப்பொண்ணு கழுத்துல போட்டு விடுப்பா! ” என்றார்..
மயூரன், விஷ்ணுவைப் பார்க்க, அவளது உலகம் என்றோ  சுழல மறத்து நின்றது. 

 ” மயூரன், அதை வாங்கி அவ கழுத்தில போட்டுவிடுப்பா! ” வேதாவும் கூற, தன் அன்னையை ஒருமுறைப் பார்த்தான். அவரோ தவித்துக் கொண்டிருந்தார்.

பெரியவர்கள் மயூரனை வித்தியாசமாகப் பார்த்தனர்.. ” என்ன மயூ, மறுபடியும் விஷ்ணுக்கே தாலிக்கட்டணுமான்னு யோசிக்கிறீயா? ”   என ஆதி நக்கல் பண்ண,” அடேய்! சும்மா இருடா, இதைக்கேட்டு அவன் விஷ்ணு கையால அடிவாங்கிட போறான்டா! ” என்றார் ராமனும் அவனது அவஸ்தை அறியாமல் இருவரும் கலாய்க்க. 

” ஏன்பா! மயூ, உன் கல்யாணத்தைத் தான் நாங்க பார்க்கல, இந்த வாய்ப்பை வைத்தாவது பார்த்துகிறோமே! ” என ராஜசேகரும் தன் பங்குக்குப் பேச. ” எல்லாரும் அமைதியா இருங்க, மயூ செயினைப் போட்டுவிடு நல்ல நேரம் போறதுகுள்ள… ” என்றார் வைகுண்டம்.. 

நடுங்கும் கைகளால் அதை வாங்கியவன் விஷ்ணுவைப் பார்க்க, அவள் கண்களில் இப்போவா அப்போவா என்று கொட்ட காத்திருந்தது கண்ணீர்.. தன்  அன்னையை ஒரு முறைப் பார்த்தான்.. 

” அத்தை, பெரியவங்க நீங்க அவ கழுத்துல தாலிச் செயினைப் போட்டுவிடுங்க, அது அவளுக்கு ஆசிர்வாதமா இருக்கும்…, ” என்றார் முத்து, தன் மகனையும் மருமகளையும் இந்த, ஹோதாவிலிருந்து காப்பாத்த… ஆனால் அதுவோ பூஜ்ஜியத்தில் முடிந்தது.. 

” என்ன பேசுற முத்து? இதெல்லாம்  புருசன் தான் போட்டு விடணும்.. மயூரன் சீக்கிரமா போடு… ” என்றார் சகு. அவளிடம் கண்களால் கெஞ்சியவன், அதை அவள் கழுத்தில் அணிவித்தான்.. அவர்கள் நீட்டிய குங்குமத்தைத் தாலியிலும், நெற்றிலும் வைத்தான்,. கண்களில் நீர் வழிய,  ” என்ன அண்ணி மறுபடியும் அண்ணா கிட்டயே மாட்டிக்கிட்டேன் அழுகிறீங்களா? ”  என சிரித்துக்கொண்டே வாணி கேட்க. அவள் தலையில் குட்டு வைத்தாள் நிவி…   அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டனர்.,

” ஒரு வழியா மாமா கல்யாணத்தை ரிடெலிகேஸ்ட் பண்ண வச்ச  பெருமை சகுவையே சேரும் ” என்றாள் ஷாலு எல்லாரும் சிரிக்க, மயூரனோ விஷ்ணுவின் முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தவித்தான்.

விஷ்ணுக்கோ  இதுவரை வெறும் கயிறாக நினைத்திருந்தது. இன்று கழுத்தை நெறிக்கும் கயிறாக மாறிப்போயிருந்தது… தங்கத்தில் தூக்கு கயிறு என நினைத்துக்கொள்ள உள்ளுக்குள் ஒரு வெற்று புன்னகை வந்துப்போனது…

 இந்த தங்கத் தூக்குக் கயிறு வேண்டாம் என்று தானே வீட்டைவிட்டு ஓடிவந்தாள்.. இங்கு வந்தும் அதை அவள் கழுத்தில் விழ, பெண்ணவள் ஒடிந்துப் போனாள்…

வருணின் தாலியை சுமக்க வேண்டிய கழுத்து வேறொருவரின் தாலியைச் சுமப்பதை நினைக்க, அதை அறுத்தெரிந்து இவன் என் புருசன் இல்லை என்று கத்தவேண்டும் போலிருந்தது..
அறியாது தலையைக் கொடுத்த ஆடாய் அவளது நிலமை இருந்தது..

மயூரனுக்கே பெரும் ரணத்தை தந்தது. கண்களில்  தன் மேல் அவள் கொண்ட காதலைக் கண்டு, அவள்  கழுத்தில் தாலியை அணிய எண்ணியவனுக்கோ, பெரும் ஏமாற்றம். கண்களில் அத்தனைக் கோபம், தன்னைக் குற்றம் சாடிருக்கும் அந்தக் கண்களைக் கண்டு அதனை அணியும் நிலை அவன் எண்ணிப் பார்க்காத நிலை,…  அவனும் உள்ளே நொருங்கிப்போனான்… 

இருவரின் மனநிலயை அறியாதவரா முத்து… இங்கிருந்து மேலும் அவர்களுக்கு ரணமளிக்க வேண்டாம் என்று எண்ணி.. ”  மயூ, வேலைக்குப் போகணும் சொன்னீயே போ பா… நீயும் போமா… ” என்று அனுப்பிவைத்தார்.. அவள் முன்னே செல்ல அவன் தொடர்ந்தான். 

இதுவரை அடக்கி வைத்த மொத்த அழுகையும் அழுதுக் கொட்டினாள், வேகமாக அறையின் உள்ளே வந்தவள், குளியலறைக்குள் புகுந்து தாளிட்டு கொண்டாள்.. 

” விஷ்ணு, கதவை திற விஷ்ணு.. விஷ்ணு ப்ளீஸ் கதவை திற… ” என கத்த, அவள் காதலில் விழவே இல்லை, சவரைத் திறந்து அதன் அடியில் அமர்ந்துவிட்டாள். 

அவனது போன் ஒலிக்க, எடுத்து பேசியவன்  ” இதோ வருவதாக ” கூறி வைத்தான்… மீண்டும் தட்ட திறப்பதாக இல்லை..

அவளை விட்டு வேகமாக வெளியேறியவன்.. முத்துவிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வேலைக்கு வந்து சேர்ந்தான்..

” மயூ….” என அவனை உலுப்பவே நடப்பிற்கு வந்தான்… ” ஏன்டா உன் முகம் வேர்த்துப் போயிருக்கு, என்னாச்சுடா?  ” எனவும்.. 

 தன் நண்பனிடம் கூட  விஷ்ணுவைப் பற்றி பகிராது இருந்தான். அதனால் இன்றை நிகழ்வைச் சொன்னால் முழுதாய் சொல்லும் படியாக  இருக்கும் என்று  மறைத்தவன்.. ” வர வழியில சின்ன ஆக்சிடேன்ட் அதான் கொஞ்சம் பயந்துட்டேன்… வேற ஒண்ணுமில்லை  ”  என்று சமாளித்தான்…

இருவரும் மேத்தா விடம் உண்மையை கூறுவதற்காகக் காத்திருந்தனர்..,

இங்கோ விஷ்ணுவைத் தேடி உள்ளே முத்து வர, அங்கே அவள் இல்லை, குளியலறையில் தண்ணீர் சலசலப்பு கேட்க, விஷ்ணு, விஷ்ணு என கதவைத் தட்டி அழைக்க, அவளிடம் எந்த அரவம் இல்லை.. மேலும் மேலும் அழைக்க கதவைத் திறந்த பாடில்லை… பயந்தவர், கீழே அனைவரையும் அழைக்க, அனைவரும் வந்தனர்.. 

ஆதித்தன் தன் கடும் முயற்சியால் கதவைத் திறக்க, அவளோ தண்ணீரில் முழுதாய் நனைத்து போய் மயங்கி இருந்தாள்.. 

 ” ஐயோ விஷ்ணு… ” என அலறியவர் சவரை மூடிவிட்டு அவளைத் கைத்தாங்களாக  சோபாவில் அமர்த்தினார்.. 

” விஷ்ணு பேட்டிக்கு என்னாச்சு நல்லாதானே இருந்தா?  ” என சகுவும் பதற்றம் கொள்ள,  ”  சகு, விஷ்ணு  மயங்கி விழுந்திருக்கா! காலையில சாப்பிடல அதுனால தான் இருக்கும்.. அவளுக்கு உடனடியா  ட்ரஸ்ஸை மாத்தனும்.. இல்லைன்னா பிக்ஸ் வந்திடும். நீங்க போங்க. நானும் முத்து அத்தையும் பார்த்துகிறோம்..” என்றாள் ஷாலு..

அவள் சொல்படி அனைவரும் அறையை விட்டு வெறியேற, அவளது உடையை கழட்டும் வேலையில் முத்து இருக்க, அவளது உடையை எடுக்க, கப்போர்டை திறந்தாள்.  அவளது உடை எடுக்கும் போது டைரி வந்து விழுக அதிலிருந்த வருணின் போட்டோவும் விழுந்தது… 

அதை எடுத்துப் பார்த்தாள்.. ‘  இது மாமா பிரண்ட் நிர்மல்ல, இந்த டைரியில  ‘ என யோசிக்க, அவளது டைரியைத் திறக்க அதில் ” லவ் யூ வருண்.. ” எழுதியும் இருந்தது. அதனைக் கண்டவளுக்கு  தூக்கிவாறிப் போட்டது.. அடுத்தப்பக்கம் திறக்கும் போது முத்து அழைக்க அதை வைத்துவிட்டு. ஆடையை அவரிடம் கொடுத்தாள்.. 
ஆடையை மாற்றிவிட்டு அவளைப் படுக்க வைத்தாள்…  கைக்கால்களை  தேய்த்து விட்டார்.. தீடிரென அவளுக்கு வலிப்பு வர ஆரம்பித்து பயத்தில் கத்தி விட்டார்..

ஷாலு தனக்குத் தெரிந்த டாக்டரை அழைத்தாள்.. முத்து, மயூரனை அழைத்தாள்..

மேத்தாவிற்காக இருவரும் காத்திருக்க, மயூரனின் போன் அலறியது. அதை அட்டன்ட் செய்தவன், ” என்னம்மா? ” எனவும் விசயத்தைக் கேட்டவனின் முகம் அதிர்ச்சியில்  நின்றது., ” இதோ வரேன் மா.. ” என்று போனைக்  கட்செய்தவன். 

” டேய் மச்சி, வீட்டுல சின்னப் பிரச்சனைடா.. நீ அவர்கிட்ட எதையாவது சொல்லி சமாளி! நான் நாளைக்கு வரேன்டா… “என்று அங்கிருந்து சென்று விட்டான்…

டாக்டர் அளித்த மருந்து வீரியத்தால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது அவளது வலிப்பு… எல்லார் முகத்திலும் பதட்டம் அப்பியிருந்தது.. ” ஒண்ணும் இல்லை, சின்ன அதிர்ச்சினாலே, அதிக எமோசனால வந்திருக்கும்., நான் இன்ஐக்சன் போட்டுருக்கேன் நல்ல தூங்கி எழுந்தால் சரியாகிடும்  ” என்றவர் கூறிவிட்டுச் செல்ல மயூரன் அங்கு வந்து சேர்ந்தான்.

அவனைக்கண்டதும் வைகுண்டதுக்குக் கோபம் வந்தது.. ” என்ன பொறுப்பில்லாத தனம் உனக்கு.. எப்ப பாரு வேலை வேலை தானா? அவ உள்ள போயிருக்காளே என்ன எது பார்க்காம அப்படியே வேலைக்குப் போயிடுவீயா? அப்படி என்ன தலைபோற காரியம்? அவ உயிருக்கு எதுவும் ஆபத்து வந்தா என்ன பண்ணுவ? போடா போடா இனியும் வேலைன்னு ஓடாம அவ சரியாகிற வர அவ கூடயே இருந்து  பார்த்துக்க!  ” என்று கத்திவிட்டுச் செல்ல கலங்கியிருந்தான்… 

அனைவரும் அமைதியாகச் செல்ல, அவள் வலிப்பால் துடித்ததைப் பார்த்த  தனா மிரண்டுப் போயிருந்தார்… அவனைத் தனியே விட்டு அனைவரும் வெளியே சென்றனர்..

விஷ்ணுவைப் பார்க்க, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவளைக் கட்டிணைத்துக்கொண்டான்… “ஐம் சாரி விஷ்ணு, இவ்வளவு அஜாக்கிறதையா இருந்துட்டேன்.. ஐ யம் சாரி டி… உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாது விஷ்ணு.. எனக்குத் தெரியும் நீ உள்ளுக்குள்ள எவ்வளவு வலியை சுமந்துட்டு இருக்க? ஆனா எல்லாம் கொஞ்ச நாளுக்குத் தான் டி.. எனக்கு நீ வேணும் விஷ்ணு, என் விஷ்ணு, என் விஷ்ணுவா மட்டும் எனக்கு நீ வேணும்.. அதுக்காக தான் டி போராட்டிட்டு இருக்கேன்.. விஷ்ணு, ஏன்டி இப்படி பண்ண? உன்னைவிட்டுப் போன வருணுக்காக சாக முடிவெடுத்தியா? உனக்காக நான் இருக்கிறது தெரியலையா டி… உன் கழுத்துல என் தாலி தான்டி ஏறணும்.. அதை தானே நான் இன்னைக்குச் செய்தேன்.. அதுக்கு இப்படி ஒரு முடிவெடுப்பியா? முட்டாள்… நீ எனக்காகப் பொறந்தவ டி,. எனக்கும் மட்டுமே சொந்தமானவ, உன்னை யாருக்காகவும் இழக்க மாட்டேன் டி.. உன்னை யாருக்கும்  தரமாட்டேன். நீ வேணும் விஷ்ணு, எனக்கு நீ வேணும் விஷ்ணு… புருஞ்சுக்கோடி,  நீ இல்லைன்னா நான் இல்லைடி… நீ என் டாலு டி. சின்ன வயசில இருந்தே உன் நினைவை மட்டுமே வச்சு வளர்ந்தவன் டி… அந்த வருணைவிட நான் தான்டி உன் மேல அன்பு அதிகமாக வச்சிருக்கேன்.. அவன் லவ் மூணு வருசம் இருக்குமா? ஆனா என் காதல் இருபத்தி ஐந்து வருசம் டி.. இதை உன் கிட்ட எப்படி சொல்லிப் புரியவைப்பேன்? விஷ்ணு ப்ளீஸ் இனி இப்படி ஒரு காரியத்தை என்னைக்கும் பண்ணிடாத டி.. என்னை விட்டுப் போகணும் நினைக்காத டி.. நான் செத்துருவேன் டி… ”  என்று அவளை இறுக்க அணைத்துக்கொண்டு அழுதான்.

அவளைக் கட்டிணைத்து சுமந்து அழுகும் மகனைத் தேற்ற வழித்தெரியாது போனார் முத்து….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!