பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 41(2)

 

வானை முட்டுமளவு உயர்ந்த கட்டிடம், வண்ண வண்ண விளக்குளால் அலங்கரித்திருந்தது.  திசையெங்கும் பாட்டொலிக்க, சொந்தங்கள் புடைச் சூழ வந்தவர்கள் எல்லாம் வாசுவைத் தான் கேட்டு வைத்தார்கள்.

ஜெயராமனுக்கும் பரதனுக்கும் கடுகுச் செடியைப் போல் குற்ற உணர்வு சிறிதாய் இதயத்தில் எட்டிப்பார்த்தது. வீட்டில் நடந்த, பனிப்போர், வெளியே உள்ள சொந்தங்களுக்கு எப்படி தெரியும்? வீட்டின் பெரிய மனிதர், அவர் தான் முன்னின்று அனைத்தையும் பார்த்து, சொந்தப் பந்தங்களை வரவேற்கணும்.. ஆனால் அவர் தான் கெளரவமென்னும் கிளையைப் பிடித்துத்  தொங்குகிறாரே! எப்படி அவரை அழைக்க?  வந்தவர்களின் கேள்விக்குப் பதிலின்றிப் போக, மாமன்கள் தலைக் குனிந்து நிற்பதைக் கண்டு, வருந்தியவன், அர்ஜுனிடம் வண்டியை வாங்கி, அந்தப் பெரிய வீட்டை நோக்கிப் பயணித்தான்..

என்றும் சுகம் தரும்  நாற்காலிக்  கூட, எதிரியாகி விட்டது போல, அனலைக் கக்குகிறது. 

அவர் அதில் கொஞ்ச நேரமும் அமர்ந்திருக்க முடியவில்லை… அந்தப் பெரும் சுவர்களும், அவரிடம் வாதாடி, அவர் மேல் குற்றத்தைச் சுமத்த, தன்னை அதனிடம் நிரூபிக்க முடியாமல்,  அவ்வயதானவர் நொந்தார்..

மூச்சை இறுகப் பற்றியது போல இருந்தது, அவர் வீடு அவருக்கே கழுத்தை நெறிப்பது போல இருந்தது…  எதைப் பெரிதாக எண்ணி இருந்தரோ அதுவே இன்று அவரைத் தனித்து விட்டது… 

அவரது கம்பிரத் தோற்றம் வழுவிழந்தது..தன்னை ஒரு பொருட்டாய் மதிக்காமல், தன் மகன்களும் தன்னை ஒத்துக்கி வைத்து, குடும்பத்தோடு மகிழ்ந்தது இருப்பதை நினைக்க நினைக்க, மனம் படும் பாடு,பகிர முடியாமல் தவித்தது உதடுகள்..

இதெல்லாம் பார்த்தும், இன்னும் மடியாத இந்தக் கட்டையைக் காணக் காண .. ஆத்திரம் , இயலாமைப் போங்கியது, இனி யாருக்காக, இந்த உயிர்? மகளைத் தலை முழுகி, உயிரோடு இருக்கும் அவளைக் கொன்று விட்டோம்.. மனைவி, மருமகள், பேத்தி என பெண் தெய்வங்கள் சூழ இருந்தாலும் அவர்களிடம்
தன் ஆண்மையைக் காட்டிக் கெளரவச் சிறையில் அடைத்தார். அதில் தப்பித்த இருவரையும், இறந்தவர்கள் என்று முத்திரைக் குத்தினார் அந்த முரடன்(ர்ர்….)

இவ்வாறு,  வீட்டில் தானொரு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்ததை எண்ணித் தன்னைத் தானே வெறுத்தார்…. மனம் மாறி மன்னிப்புக் கேள் என்றது ஒரு மனது. மறு மனமோ, மன்னிப்புக் கேட்டால் மட்டும் மன்னித்து விடுவார்களா? உன்னால் அவர்கள் முன் நின்று மன்னிப்புக் கோர முடியுமா? அவர்களை, நேராய் காண திடம் உள்ளதா உன்னிடம்? என்று கேட்டு வைக்க , பித்துப் பிடித்து அங்கும் இங்கும் நடந்தவர், கடைசியாக அந்த முடிவுக்கே வந்தார்.. தற்கொலையே, இதற்கு தீர்வு என்றும், மடிந்து விட்டால், அவர்களை எதிர் கொள்ள, அவசியம் இருக்காதல்லவா…

அனுபவம் நிறைந்த மனமும்  சற்று, அடிசறுக்கிறது…  அந்த முதிர்ந்த மனமும் தற்கொலைக்கு முயன்றது.

கடைசியாகத் தன் மனைவியின் சேலையில் தூக்கிட்டுச் சாக எண்ணி செய்யவும் துணிந்தார்..

அவரது இந்தச் செயலைக் கைத் தட்டி ஊக்கமளித்தான் மயூரன்.’ யாரும் இல்லாத வீட்டில் , கைத்தட்டல்  கேட்டுத் திடுக்கிட்டு திரும்பினார்… அங்கு மயூரன், கதவில் சாய்ந்து நின்றான்..

அவனது முகஜாடை, தன் மகள் ஒத்த இருக்க யாரென கணித்தார்..

” என்ன தாத்தா, கதவையெல்லாம் சாத்தாம, தற்கொலைப் பண்ணிக்க போறீங்களா? உங்களுக்குத் தற்கொலைக் கூட பண்ணிக்க தெரில… கதவைச் சாத்திட்டு தான் தற்கொலைப் பண்ணனும்…” என்றவன் இடையில் யோசிப்பது போல், ” ஓ… ஒரு வேள யாரும் இங்க இல்லேன்னு கதவை திறந்து வச்சு சாக முடிவு எடுத்தீங்களா? இல்லை உங்களுக்கு யாருமே இல்லைன்னு இந்த முடிவை எடுத்தீங்களா? ” என்றதும் தன் மனதைப் படித்தது போல் சொல்லுபவனைத் திரனின்றிப்   பார்த்தார்.. அவரை உறுத்த விழிகளால் பார்த்தவன்… 

“உங்களை மதிக்காமல், யாரும் இந்த விசேஷத்தை வைக்கல தாத்தா… பரதன் மாமா, உங்கிட்ட  சொல்லி எல்லாத்தையும் செய்யணும்  நினைச்சார்.. ஆனால் நான் தான் அப்டி செய்ய வேணாம் சொல்லித் தடுத்தேன்” அவர் பார்வை இடைவெட்ட, ” நான் அப்டி சொல்லலேனா,இந்நேரம் நீங்க உங்கத் தவறை உணர்ந்து இருக்க மாட்டீங்க தாத்தா.. என்னை மன்னிச்சிடுங்க, ஆனால் நீங்க உங்க தப்பை உணரனும் தான்  செய்தேன்.. ஆனால் நீங்க இப்படி  பண்ணுவீங்க நான் நினைக்கல , உங்க மேல எல்லாருக்கும் பயம் விட்டு போச்சு நினைக்கறீங்க, மரியதையை இழந்துட்டேன் நினைச்சு இப்படி ஒரு காரியத்தைச் செய்ய துணிஞ்சுட்டீங்க… ஆனால், அவங்கஉங்க மேல வச்சது பயம் இல்ல மரியாதை , அன்பு , பாசம் மட்டுமே அது எப்பையும் குறையாது.. எங்களுக்கு எங்க தாத்தா வேணும்.. எங்களை மன்னச்சி ஏத்துப்பிங்களா?” என்றதும்  அவருக்கு வார்த்தைகள் தொக்கி நிற்க, அவரை அணைத்தான்.. ” லவ் யூ தாத்தா.. அம்மா பண்ணத் தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன்.. என்னையும் என் அப்பா,  அம்மா, வைகுண்டம் தாத்தாவை, அவர் குடும்பத்தையும் முழு மனசா ஏத்துக்கோங்க தாத்தா…”அணைப்பில் இருந்துக் கொண்டு கேட்டவனை… இறுக்க அணைத்தவர், அவன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாய் அணைப்பிலே கூறினார்.. 

” தங்க்ஸ் தாத்தா… வாங்க போலாம்… உங்களுக்காகத் தான் காத்துட்டு இருக்காங்க, வாங்க போலாம்…” என்று அவரை அவசரம் படுத்த
அவன் உச்சியினை நுகர்ந்தவர்..  

 ” இந்த தாத்தா மேல உனக்கு துளியும் கோபம் இல்லையா?  ” என்றதும் இடது வலதுபுறமாக ஆட்டினான்… ” என்னை மன்னிச்சிடு மயூ,…” என்றார் கண்ணில் நீர் வடிய.. 

அதனைத் துடைத்தவன், ” நீங்க எதற்கும் அழுகக் கூடாது, கம்பிரமா இருக்கணும்..” மீசையை நீவி விட்டான்.அதைக் கண்டு சிரித்தவர் அந்த மீசையை முறுக்கி விட்டார்..  அவரைக் கிளப்பிக் கொண்டு மண்டபத்திற்கு வந்துச் சேர்ந்தான்..

அனைவரின் கண்களும் கண்ணீரில் 
நனைந்தது..  தன் மகளைப் பார்க்க, ” அப்பா”என்று நெஞ்சில் சாய்ந்து அழுதார்.. 

“என் குலதெய்வமே உன்னை ஒதுக்கி வச்சு பெரிய தப்பி பண்ணிட்டேன் ராசாத்தி. இந்த அப்பனை மன்னிப்பியா?” கேட்டதும் தான் தாமதம் அவர் காலில் விழுந்துவிட்டார் முத்து.. ” பெரிய வார்த்தைப் பேசாதீங்கப்பா,  நான் தான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்கா பா. ” அழுதார்.. அங்கே மன்னிப்புக் கேட்டுக்கும் படலம் முடிந்தது.. சடங்கைத் தொடங்கி வைத்தனர்.. வீட்டின் பெரியவர் என்று முதல் மாலை பவஸ்ரீக்கு வாசுவே அணிவித்தார்.  

அதன் பின்சம்பரதாய சடங்குகள் முடிந்தது.  குடும்பமாய் ஒன்றிக் கூடி  உண்டு மகிழுந்து, அந்தப் பெரிய வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.. பெரிய  பூசணி ஒன்றைச் சுற்றி திருஷ்டி கழித்தனர்.

வாசு தேவ் கிருஷ்ணனுக்கு கேட்கத் தயக்கமாக இருந்தது.  அதைப் புரிந்துக் கொண்ட மயூரன் , வைகுண்டத்தைப் போனில் அழைத்து வாசுவிடம் கொடுத்தான் இரு பக்கமும் அமைதி நிலவியது.. 

“எய்யா.. வைகுண்டம்… “என்றதும் அங்கே அவருக்கு கண்ணீர் கொட்டியது.   ” என்ன மன்னிச்சிரு யா, இங்க வாயா,  இங்க வந்திடுயா..” கெஞ்சலில் மனம் இறங்கியவர்… அடுத்த பிளைட் டில் வந்துச் சேர்ந்தார்,  வாசுவின் ஆருயிர் நண்பன் வைகுண்டம்… இருவரும் கட்டியணைத்து தங்கள் நட்பினைப் புதுப்பித்தனர்.. 

ருக்குவையும்  கட்டிணைத்தார் அழுது தீர்த்தார்… இன்று தான் பாசம் , அன்பைக் கண்டு அந்த பெரிய வீடு. அனைவரின் மனமும் நிறைந்தது…

” அப்றம் என்ன, என் பேத்தி விஷ்ணுக்கும்  என் பேரன் மயூனுக்கும் சீக்கிரமா கல்யாணம்  பண்ணி வைங்க, என் பேரன் கஷ்டப்பட்டதே இதுக்காகத் தானே.. நாங்க அடுத்து மும்பை போறப்ப, விஷ்ணுவை எங்க வீட்டு பொண்ணா கூட்டிப் போகணும்… அதைப் பத்தி பேசுங்க அண்ணா” என்றார் சகு…  மயூரனின் வயிற்றில் பாலை வார்த்தார் சகு..  எங்கே இவர்களது  சந்தோசத்தில் தன்னுடைய கல்யாணத்தை மறந்திடுவார்களோ எண்ணி இருந்தவனுக்கு சகு பேச்சு, உடலில் சீதளத்தை பரவச் செய்தது. 

” விஷ்ணுக்கும் மயூரனுக்கும் இந்தக் கல்யாணத்துல சம்மதமன்னா, ஒரு நல்ல நாளால  பார்த்து  கல்யாணத்தை வச்சுக்கலாம் தங்கச்சி… நீங்க என்னப்பா சொல்லுறீங்க?   ” தன் மனைவி மற்றும் தான் பெத்த செல்வங்களிடமும் கேட்க, அவர்களும் ஆமோதிக்க,பின் விஷ்ணு விடமும் மயூரனிடமும் விருப்பத்தைக் கேட்டார்.

மயூரனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பலப் பிரகாசித்தது.. அவன் சம்மதம் தெரிவிக்க, விஷ்ணு, முழித்துக் கொண்டிருந்தாள்..” விஷ்ணு பேட்டி சொல்லுமா  உன் விருப்பத்தை…” என்றதும் முத்துவைப் பார்த்தவள், “எனக்கு கல்யாணம் வேண்டாம் சகு…” என்று அனைவருக்கும் ஷாக் கொடுக்க, ‘ ஐயோ மறுபடியும் மொதல்ல  இருந்தா’  என்று நொந்தான் மயூரன்.  

 ” உனக்கு என்னடி பிரச்சனை, ஏன் உனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்? என் புள்ள, உன் மேல உயரே வச்சுருக்கான்.. இன்னுமா உனக்கு புரியல… ஏன்டி என் புள்ள கஷ்டப்படுத்துற? ” அவளிடம் எகிறிக் கொண்டு வந்தார் முத்து.. 

” உங்க புள்ளை என்னை விரும்புறான்னு எனக்கு தெரியும். நானும் அவனை விரும்புறேன் தான்.. ஆனா, அவனுக்கு மட்டும் என்னை பிடிச்சா போதுமா, என் மாமியாருக்கும் என்னை பிடிக்க வேணாமா? அவருக்குத் தான் என்னைப் பிடிக்கலை..   எதுக்கு அவனைக் கல்யாணம் செய்துகிட்டு பிடிக்காதவர்  முன்னாடி நிக்கணும்..” 

” யாரடி சொன்னா, உன்னை எனக்கு பிடிக்காது ன்னு? “அவரும் அவள் பாணியில் பேசினார். 

” ஏன் சொல்லித்தான் தெரியணுமா? நீ இங்க வந்ததிலிருந்து என்கிட்ட பேசினீயா, நானும் எவ்வளவு முறை மன்னிப்பும் கேட்டேன்.  நீ முகத்தைத்  திருப்பிட்டு போன.. அதான் அப்டி சொன்னேன்.. அன்னைக்கு இருந்த சூழ்நிலையில  உன்னை விட்டுப் போனேன்.. அதுக்காக பேசமா இருப்பியா? ” குழந்தையைப் போல் உதட்டைப் பிதுக்கி கண்ணீர் வழிய பேசுபவளைக் காணா சிரிப்பே வந்தது அனைவருக்கும். 

இதுவரை மாமியார் மருமகளாய் சண்டைப் போட்டவர்கள், தாய் சேய்யாய் மாறி கொஞ்சினார்கள்.  

அவள் உச்சினை நுகர்ந்தவர்..” இனிமே உன்னை விட்டுப் போகமாட்டேன் முத்து…” என்று கட்டிக்கொள்ள, ” நானும் உன்கிட்ட பேசமா இருக்க மாட்டேன் விஷ்ணு…” இறுக்க அணைத்து கொண்டனர் இருவரும்..

ஒரு நல்லா நாளாகப் பார்த்து தேதிக் குறித்தனர்.. 

அன்று இரவு அனைவரும் உறங்க, தன் அறையில் விஷ்ணு மட்டுமே இருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தவள் யாரென்று பார்க்க, வேறு யாரு அவள் கள்வன் தான்.

வேகமாக, உள்ளே நுழைந்தவன், கதவைத் தாழிட்டு, அவளை இழுத்துக் கட்டிலில் சாய்த்து முகமெங்கும் முத்தம் வைத்தான். பெண்ணவள் அவன் இதழ் தீண்டலில் திண்டாடி போனாள்.. அவன் நெஞ்சில் கைவைத்து தடித்தவள், ” போதும் டா, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம் தான்…” என்றாள்.. 

” நமக்கு ஏற்கெனவே  கல்யாணம் ஆயிருச்சு…” 

” இருக்கட்டும் முறைப்படி எல்லாம் நடக்கட்டும், அவசர குடுகையாட்டம் எதுவும் பண்ணித் தொலைக்காத.. ” என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.. 

” விஷ்ணு , என்னை நீ முழுமனசா ஏத்துக் கிட்டியா? உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்?..’ என்றவன் கேட்க, 

நெல் மணி சுமந்த பயர் போல,  அவன் மேல் கொண்டு அதீத  காதலால், வெட்கம் கொண்டு தலையை தாழ்த்தி ஆம் என்றாள். அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தி, “சொல்லு விஷ்ணு என் கண்ணைப் பார்த்து… ” என்றவனின் விழிகளை நோக்கியவள், ” நீ மட்டும் தான் இருக்க, உன்னை நான் முழு மனசா ஏத்துக் கிட்டேன் மயூ, நீ  தான்டா என் புருஷன் டா..” என்றாள்.. 

” அப்ப  லவ் யூ சொல்லு..” என்றதும் மாட்டேன் என்று தலையை ஆட்டியவள், ” எனக்கு தோணும் போது தான் சொல்வேன்..”என்று உதட்டைச் சுளிக்க, அதை தன் இதழலால் சிறை எடுத்தான். அவளும் அதற்கு  இசைந்தாள் அவனோடு..  அந்த இரவு இருவரையும் சுகமான இரவானது..

வாழை மரங்கள் தோரணைக் கட்டு தோரணையாக இருந்தது அந்தப் பெரிய வீடு… சொந்தப் பந்தங்கள் நிறைந்து இருக்க, மயூரன் விஷ்ணுக் கல்யாண நாளும் வந்தது.. 

மாப்பிள்ளை தோற்றத்தில், கம்பிரமாய் அமர்ந்து இருந்தான்… அவன் பக்கத்த்தில் அரம்பை போல அமர்ந்திருந்தாள் விஷ்ணு..  ஐயர் தாலியைக் கொடுக்க, அவள் கழுத்துல அணிவித்தான்,  அவள் கண்களில் காதலைக் கண்டே !…

இதரச் சடங்குகளும் முடிந்தது.
தன் பேத்திக்கு கருமாதி வைத்து கறி சோறு போட்ட வாசு இன்று, பேத்தியின் திருமணத்திற்காக கறி விருந்தே போட்டார்( வெஜ்ஜூம் இருக்கிறது)

அர்ஜுன் விருந்தை  மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஒரு பெண் அவனை இடித்து விட்டுச் செல்ல, ” ஓய்…” என்று அவளை அழைக்க, அவனைத் திரும்பிப் பார்தத்தாள், பாவாடை தாவணி அணிந்த, அந்தப் பட்டாம்பூச்சி.

அவளைப் பார்த்த, கணம் சிலைப் போல நின்று இருந்தான் அர்ஜுன்.. ” சொல்லுங்க…” என்றாள் தரையைப் பார்த்தது, முந்தானையை முடிச்சிட்டவாறு நின்றாள்..

“நீ,யாரு… நான் உன்னைப் பார்த்ததே இல்லையே… இந்த ஊருக்குப் புதுசா…” அவளை விசாரிக்க,

” அதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்களே! அப்றம் எதுக்கு இதைக் கேக்குறீங்க?” இதழைச் சுளித்துக் கொண்டே கேட்டு வைத்தாள் அம்மடந்தை.

” நான் எப்போ உன்னைப் பிடிக்கலேன்னு சொன்னேன்… நான் உன்னைப் பார்த்தது கூட இல்லை… அப்றம் எப்படி?…” என்றவன் யோசிக்க,

” நான் உங்க தாத்தா, தங்கச்சி லக்ஷ்மி பேத்தி வைரம்மாள்.நீங்க தான் கல்யாணம் வேணாம் சொல்லிட்டீங்க… அப்போ என்னைப் பிடிக்கலைன்னு தானே அர்த்தம்…” என்றவள் விசும்பிட, தன் தவறை அப்போது தான் உணர்ந்தான்..

‘ வைரம்மாளின் பெயரைக் கேட்டதும்… பட்டிக்காட்டு, படித்தப் பிள்ளையாக இருக்க மாட்டாள்… ‘ என்றெண்ணி கல்யாணத்ததை மறுத்திருந்தான். ஆனால், அவளோ பெயருக்கு ஏற்றார் போல் வைரம் போல் இருந்தாள்.. ‘ அர்ஜுன், இந்த வாடிப்பேட்டி டைமெண்டை  மிஸ் பண்ணா பார்த்தீயே!’  என எண்ணிக் கொண்டவன்..

” அது வந்து… வைரம்….” என இழுக்க, அவளோ தாடையை வெட்டிக் கொண்டு கோபத்தில் செல்ல, பின்னே சென்றான் கொடுத்த வேலையையும் மறந்து..

வந்த சொந்தம்பந்தங்கள் கிளம்பிட, விஷ்ணுவின் அறையை முதலிரவுக்காக தயார் செய்துக்கொண்டு இருந்தனர்..

” அப்றம் மயூ,  சாதிச்சுட்டா, விஷ்ணு மனசை மாத்தி, பொண்டாட்டி ஆகிட்ட, இனி  மும்பைப் பக்கம்  வருவீயா? இல்லை வாழ்நாள் முழுக்க வாடிப்பெட்டி தானா? “

” அடேய், வந்துருவேண்டா… கொஞ்ச நாள் தான்… அப்றம் அங்க தான்… என்.சி விட்டுகொடுக்க முடியுமா?  வந்துருவேன்டா…” என்றான் அப்துலிடம்.

” காங்கிரட்ஸ் மயூ, .. லவ்ல ஜெய்க்கிறது அவ்வளவு சுலபம் இல்ல. காதலிச்ச, மனைவியை கல்யாணம் செய்றது பெருசு இல்லை… கடைசி வரைக்கும்  துணையாக இருக்கணும், அது தான். நீ ஜெய்ச்சதுக்கான அர்த்தம்…  விஷ்ணுவை நல்லா  பார்த்துக்க, அவளுக்கு இனி  நீ தான். நான் சொல்லணும் அவசியம் இல்லை… எனிவே ஹாப்பி மேரிட் லைஃப்…” என்றவரை அணைத்துக் கொண்டான் மயூ…

மேத்தா, அவனுக்கு குரு, வழிகாட்டி, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. அவன் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பவரல்லவா..

குட்டிப் போட்ட பூணையாய் , அந்த அறையைச் சுற்றி அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான் மயூரன்… அவனது பொறுமை காற்றில் கரையத் தொடங்கியது..

இங்கோ விஷ்ணுவிற்கு அறிவுரை வழங்கி, ஒரு வழியாகி விட்டனர் அவ்வீட்டுப் பெண்கள்..

குறித்த நேரத்தில், விஷ்ணுவை அறையில் விட்டுக் கதவைப் பூட்ட, இவளும் உள்ள தாழ்ப்பாள் இட்டாள்..

ஆடி அசைந்து வெட்கம் கொண்டு வரும் விஷ்ணுவைப் பார்த்தவன்… நிமிடமும்  காத்திருக்க முடியாது என்பது போல அவனது செயல் இருந்தது…

கண்ணிமைக்கும் நேரம் அவன் கைகளில் இருந்தாள் விஷ்ணு..

” அடேய், அவ்வளவு  அவசரமா டா… நானே வருவேன்ல….” விழி விரித்துக் கேட்டவளைச் சட்டை செய்யாது மஞ்சத்தில் சேர்த்தான்…

” ஏற்கெனவே , இருபது ஐந்து வருஷம் பொறுமையா இருந்துட்டேன். இதுக்கு மேலையும் நோ…. ” என்றவன் கழுத்துல முத்தம் வைக்க,” அடேய் நான் உன் பொண்டாட்டி தான் டா. இனி உன் கூட தானே இருக்கப் போறேன்.. கொஞ்சம் பேசலாம் பார்த்தால்… நீ என்னமோ…” என்றவளை இடைவெட்டியவன், ” வேணாம், நாளைக்கு நிறையா பேசலாம். இன்னக்கி, இப்போ நோ நோ… உன்னை பேச விட்டா, மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிப்ப… நான் மாட்டேன்…” என்றவன் முன்னேற, தலையில் கொட்டு வைத்தாள்..

” சாரிடி பொண்டாட்டி, நீ இன்னும் ஐ லவ் யூ சொல்லலேன்னு  பொறுமையா, நீ சொல்லுற வரைக்கும் காத்திருந்து, அதுக்கப்புறம் இதெல்லாம்.. நோவே டி. உனக்குத் தோணும் போது, நீ லவ் யூ, சொல்லிக்கோ… ஐ யம் வெய்ட்டிங்… பட் நௌ… ஹாப்பி மேரிட் லைஃப் பொண்டாட்டி…”  என்றவன் தன் இல்லாளோடு இல்லற வாழ்வில் இணைந்தான்..

மொட்டை மாடியில் வானை வெறித்து நின்றான் சாரதி…  ஒற்றை நிலவைக் காணும் போதெல்லாம் மதுவின் முகம் வந்து செல்ல, தன்னுள் வளர்ந்த காதலை எப்படி அவளிடம் சொல்லலாம் என்றெண்ணி தவித்தான்..

அவள் மதுரை வந்ததிலிருந்து, இன்றுவரை, அவனுடன் தான்  மாமா மாமா..  என்று சுற்றித்  திரிகிறாள்..
ஆனால் தனக்குள்  முளைத்த காதல் அவளுக்குள்ளும் இருக்கிறதா? அறிந்துக் கொள்ள ஆவலில் இருக்கிறான்.

” என்ன மாமா, தனியா என்ன பண்றீங்க? ஸ்டார்ஸ் எண்ணுறீங்களா? நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா? ” மதுவாணி வர்ற,

” ம்ம்…தரளாமா… ” என்றவனின் அருகில் வந்து நின்று எண்ணியவள்.. ” மாமா , இந்த ஸ்டார்ஸை எண்ணி முடிக்க வாழ்நாள் முழுக்க ஆகுமே…”

” ம்ம்ம்… ஆமா, வாழ்நாள் முழுக்க ஆகும் தான்…அந்த வாழ்நாள்  முழுக்க, நீ என்கூடவே  எனக்கு துணையா வருவீயா?.. எனக்கு எப்போதும் துணையா இருப்பியா?” என்றதும் முதலில் அதிர்ந்தவள், பின் அவள் வெட்கத்தில் சிவக்க, அவள் கைகளைத் தன் நெஞ்சில் வைத்தான்,. அவளோ அவனை  அணைத்துக் கொண்டாள்.. வானைப் போல நீளட்டும் அவர்கள் காதல் வாழ்க்கை..

விஷ்ணுவுக்கும் மயூரனும் திருமணமாகிப் பத்துநாட்களான நிலையில்,வைகுண்டத்தின் குடும்பம் மும்பைச் செல்லத் தயாராக இருந்தனர். மயூரன் மட்டும் வுகாசமாக  அமர்ந்து இருந்தான்…

” டேய் நீ வரல…”லட்சுமணன் கேட்க, ” இல்லப்பா நானும் என் பொண்டாட்டியும் தாத்தா வீட்டில இருக்கப் போறோம்….  நீங்க போங்க” என்றான்…

” ம்ம்ம் எல்லாம் மேத்தா சார் கொடுக்கிற செல்லம்.. போதாகக் குறைக்கு, என் அப்பா கொடுக்கிற செல்லம் … என்னமோ
  பண்ணு….” என்று தலையில் அடித்துக் கொண்டார் முத்து..

” இது என் பேரன் வீடுமா… அவன் இங்கே இருக்கட்டும். நான் பார்த்துக்குறேன்” அவனுக்காக பரிந்து வந்தார் வாசு..

” ம்ம்ம்.. உங்க பேரனை நீங்க வச்சுக்கோங்க தாத்தா, நான் என் மாமியார் வீட்டுக்குப் போறேன்.. ” என்றாள் விஷ்ணு..  அவளை முறைத்தவன், “இன்னும் ரெண்டு நாள்ல நானே வந்திடுவேன்… நீங்க போங்க… ” என்றான்..

தன் தந்தையிடம் , ருக்கு, அண்ணன்மார்களிடம் தம்பிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்..

அடுத்த வந்த நாட்கள், மயூரனின்  குறும்புகளே நிறைந்து இருந்தது..  இருவரும் மும்பை கிளம்பும் படலம் வர்ற பலராமனைக் கட்டிக் கொண்டு அழுத்தாள். எல்லாரிடமும் பேசியவள் தாத்தாவின் மீசையை இழுத்து விட்டுச் சென்றாள்.. அனைவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்..

கார் சீராகச் சென்றுக் கொண்டிருக்க, மயூரனின் தோளில் சாய்ந்தவாறு
வந்தாள்… காரை இரயிலில்  நிலையத்தில் நிறுத்த சொன்னவன்… அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்..

அவளுக்குப் புரியவே இல்லை.. ஏர்போர்ட் செல்லாமல் இங்க எதுக்கு அழைத்து வந்தான், அதுவும்  இழுத்துக் கொண்டு போகிறான்… சேலையின் மடிப்பை பிடித்துக் கொண்டு அவனோடு ஓடினாள்…  மெதுவாக நகர்ந்துக் கொண்டு இருந்த இரயிலில் அவனும் ஏறி அவளையும் ஏற உதவினான்..

இருவரும் கதவில் சாய்ந்து மூச்சு வாங்கினார்கள்… அவள் கண்கள் அவனைக் கேள்வியாய் பார்க்க, ”  இந்த ட்ரெயின், இந்த இடம், இங்க தான்  நம்ம இரண்டு பேரோட முதல் சந்திப்பு விஷ்ணு. அதை நினைவூட்ட,  தான்  ரெண்டு நாள் கழிச்சுப் போலாம் சொன்னேன்… லவ் யூ விஷ்ணு… உன்னைப் பார்க்காம காதலித்தாலும் நான் உன்னை
முதல் முறையாகப் பார்த்தது இங்க தான்…
ஒரு சின்ன சப்ரைஸ்… ” என்று கண்ணைச் சிமிட்டினான்..

விழி விரித்துப் பார்த்தவளால் இந்த ஆச்சர்யத்தை எதிர் கொள்ள முடியவில்லை… ”  லவ் யூ மயூரன்.. லவ் யூ சோ மச்…” என்று அவன் நெஞ்சில் முகம்  புதைத்தாள்..

தண்டவாளமும் இரயிலையும் போலவே பிரியாது அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரட்டும்…

முற்றும்…