பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 17

மருந்து வீரியத்தில் உறங்கிக்கொண்டிருந்தவளுக்கு அவனது புலம்பல் செவியில் எட்டவே இல்லை… சொல்லப்படா காதலுக்கு எத்தனை வலிகள் இருக்குமென்பதை அவன் விழிவழிக் கண்ணீரே உணர்த்தியது, தனது உடலுக்குள் அவளை அடக்கிக்கொண்டு அழுதான்…

 சிறுவயதிலிருந்து விஷ்ணு மேல் அவன் கொண்ட  காதலை அறியாதவாரா? விஷ்ணு,  வருணைக் காதலிப்பதைத் தெரிந்த நொடியில் உடைந்துப் போனவன் உயிர்போனதாய்  தன் தாயிடம் சொல்லி அழுதிருக்கிறான். அது போலவே இன்றும் அவன் அழுவதை அவரால் பார்க்க முடியவில்லை. 

அவனது தோளில் கைவைக்க, தன் தாயைக் கட்டிக்கொண்டு அழுதான்.. ” மா, விஷ்ணுவைப் பாருங்கமா? நீங்க சொன்னது போல தானே செய்தேன்… இப்ப, விஷ்ணு இப்படி இருக்காளே மா.. அவளை எழ சொல்லுங்கமா… அவளை என் கிட்ட பேச சொல்லுங்க மா… என்னால அவளைப் பார்க்க முடியலமா? இதுக்கே அவ இப்படி பண்ணிகிட்டா! இதுல வருண் இறந்தது தெரிந்தா? என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல! பயமா இருக்குமா! இன்னும் ஒரு வாரத்துல வருணைப் பத்தின நியூஸ் டீ.வில பேப்பர்ல வந்திடும் அது தெரிந்தா? எனக்கு என்ன பண்றது தெரியலமா? ” என அழுக, அதனை வாசலில் நின்றவாறே கேட்டுக்கொண்டிருந்தாள்  ஷாலு…

” மயூ, அழுகாத வருணைப் பத்தி எத்தனை நாளைக்கு தான் மறைக்க முடியும். ஒருநாள் எல்லாமே  தெரிந்து தான் ஆகணும்.. உண்மை தெரியும் போதும் உடைந்து தான் போவாள் விஷ்ணு, நாம தான் அவளைத் தேற்றணும் மயூ.  நாம, அவ  கூடவே இருக்கணும் மயூரன், அவளைத் தேத்தி, உன்னை நினைக்க வைக்கிறது உன் கையில தான் இருக்கு… அவளை விரும்பின நீ, அவளுடைய நல்லது கெட்டதுல  இருக்கனும்.. அவளை மாற்ற உன்னால் மட்டுமே முடியும்.. உன்னால முடியும் மயூ.. ” என்றவர்  உச்சி முகர, அவரை அணைத்தே இருந்தான்…

இதை அணைத்தும் கேட்டவளுக்கு அதிர்ச்சி தான்.. இதை வீட்டில் சொன்னால், குடும்பத்தில் ஒரு சண்டமாருதம் வீசிவிடும். இதைப் பற்றி மாமாவிடம் பேசவேண்டும் என்று அங்கிருந்து சென்றுவிட்டாள். 

முத்துவும் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.. அவளை அணைத்தவாறு படுத்திருந்தான்..

காமத்திரபுறாவில்  சிறு பகுதியில் ஒரு பழமையான இடத்தில் தான் அந்த நிசாப்பின் பெரும் ஆட்சி இருந்தது… மும்பையில் இன்றளவும் தாத்தாக்களின் கைப்பிடியில் தான் இருக்கிறது… அதில் இவனது பங்கு கால்வாசி ஆகும்… அண்டர் கிரௌண்ட் வேலை செய்வதில் இவனும் கூட்டு. அந்த ஏரியாவின் தாதாவாக இருக்கிறான்.. அவனுக்கு கீழ் தான் அந்தக் காமத்திபுறா என்று மார்த்தட்டிச் சொல்லிக்கொள்வான்..

காமத்திபுறாவில் வசிக்கும்  மக்கள் இவனுக்கு பயந்து தான் வாழ்கிறார்கள்.. இவனுக்குத் தெரியாமல் ஒர் அணுவும் அங்கு அசையாது. இங்கிருந்து வெளியே செல்லும் எதுவும் அங்கிருந்து வரும் யாவையும் இவனிடம் அனுமதி பெற்றதாகவே இருக்கும்.. 

காமத்திப்புறாவை ஒட்டின இடங்களில் வசிக்கும் திருநங்கைகள் தான் சீமாவை காப்பாற்றி, அவளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள்., வருணோடு சீமாவைக் கொன்றதாகவே எண்ணிருக்கிறார்கள் நிசாப்பின் ஆட்கள்., 

ஆனால் இதுவரை சீமா உயிரோடு இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை..

அடிக்கடி காமத்திபுறாவிற்கு வந்து செல்லும் மயூரனையும், அப்துலையும் நோட்டம் விட்டே இருந்தனர் நிசாப்பின் ஆட்கள்.. அவர்கள் வந்துவிட்டுச் சென்றதைப் பார்த்தவர்கள்  நிசாப்பிடம் சொல்லக் காத்திருந்தார்கள்..
டெல்லி சென்று இன்று தான் அவனும் அவனிடத்திற்கு வருகைப் புரிந்தான்…

அங்கே மதுவும் மாதுவுமாக அவனைச்சுற்றி இருக்க, போதைக்கா பஞ்சம் பெட்டி பெட்டியாக அடிக்கிவைக்கப்பட்டிருந்தது அவ்விடம் முழுதும். கையில் பாட்டிலோடு ஒரு பொண்ணை இடையோடு வளைத்து இரண்டையும் பருகிக்கொண்டிருந்தான்…

 ” பையா! ஒருத்தன், நாம கொன்ன அந்தச் சீமாவோட புகைப்படத்தை வைத்து காமத்திப்புறா முழுக்கத் தேடிட்டு இருக்கான். அவனைப் பார்க்க  ரிப்போட்டர் மாதிரி  தெரியுது” என்றான்.

வேகமாக எழுந்தவன், ” உனக்கு இதைச் சொல்ல வெட்கமா இல்ல, ரிப்போட்டர் மாதிரி தெரியதுன்னு சொல்லுற! டெல்லில இருந்து நான் வந்ததும்   இதைச் சொல்லலாம்ன்னு காத்துட்டு இருந்தியா? யாரு என்ன எவன்னு அவனைப் பற்றி தெரிஞ்சு போட்டு தள்ளிருக்க வேணாமா? … சலா! அவன் யாரா வேணா இருந்துட்டு போகட்டும் ஆனா, அவன் எனக்கு நெருக்கடியாக இருக்கக் கூடாது… அவனைப் பத்தி விசாரிங்க அவனால் பிரச்சனை தெரிய வந்தால் முடிச்சிடுங்க.” என்றவன் செல்ல, அவர்களும் மயூரனைப் பற்றி விசாரிக்கச் சென்றனர்..

இன்னும் விழித்திறக்காமல் அவனோடு ஒன்றிக் கிடந்தால் விஷ்ணு.. அவளை அணைத்துக்கொண்டே எப்போது உறக்கத்தைத் தழுவினான் என்று அறியாமல் போனான்..,.

” மாமா… ” என்று ஷாலுக் கதவை தட்டவே விழித்திறந்தவன், விஷ்ணுவைக் காண இன்னும் உறங்கிக்கொண்டு தான் இருந்தாள்… 

அவளை விடுத்து எழுந்தவன், ” உள்ள வா ஷாலு  ” என்றான்.. இன்னும் கண்விழிக்காமல் இருக்கவும் அவள் கண்ணத்தைத் தட்டினான்… எழவே இல்லை.. ” என் ஷாலு இன்னும் எந்திருக்காம இருக்கா?  உடம்புவேற சில்லுன்னு இருக்கே எனக்கு பயமா இருக்கு ஷாலு.. ” என்று பதறினான்.

” மாமா, பயப்பிடாதீங்க. ரொம்ப நேரமா நனைந்து இருக்கா  அதான்… அவளுக்கு டாக்டர் ஊசிப்போட்டுருக்காங்க நல்லா தூங்கட்டும் இன்னும் கொஞ்ச நேரத்தில எந்திருச்சுவா! அவ கை கால்களை தேச்சு விடுங்க! சரியாகிடுவா… ” என்றாள்..

அவன் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான்.. ” மாமா, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா? ” எனவும்

 ” ம்ம்,..” என்று அவளுக்குப் போர்வை போர்த்தியவன், ஷாலுவோடு பால்கனிக்குச் சென்றான்..

” மாமா, உண்மையை சொல்லுங்க.உங்களுக்கும் விஷ்ணுவுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலையா? விஷ்ணு யார்? அவளை உங்ளுக்கு எப்படித் தெரியும்? உங்க ப்ரண்ட் நிர்மலை அவளுக்கு எப்படித் தெரியும், அவ, அவங்களைத் தான் காதலிக்கிறாளா? ” எனவும் அதிர்ந்தான் மயூரன்..

” மாமா, சொல்லுங்க மாமா, விஷ்ணுவை நீங்க காதலிக்கிறீங்க! ஆனா ஏன் நீங்க அவகிட்ட சொல்லல? ஏன் இரண்டு பேரும் புருசன் பொண்டாட்டியா நடிக்கணும்? ” என மீண்டும் கேட்க.

ஷாலுவிடம் தனது மனதில் இருந்த பாரத்தைக் கொட்டினான்… ” மாமா, நீங்க விஷ்ணு, அந்தளவுக்கு லவ் பண்றீங்களா? ஏன் மாமா அவகிட்ட மறைக்கிறீங்க? எல்லாத்தையும் சொல்லிடுங்க மாமா… அவளுக்கு உண்மைத் தெரியட்டும்.. ஒருநாள் தெரியத்தானே போகுது.. அவளுக்கு எதுவும் ஆகாம நாங்க கூட இருக்கோம்… நீங்க உண்மையை சொல்லிடுங்க மாமா,. ” என்றாள்.

” வருணைப் பத்தி சொல்லுறதுல பிரச்சினை இல்ல  ஷாலு! ஆனா, அவ என்ன முடிவெடுப்பான்னு தான் எனக்கு பயமே! அவளுக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாது ஷாலு.  தவறான முடிவை எடுத்திட கூடாதுன்னு தான் நான் உண்மையைச் சொல்ல இவ்வளவு யோசிக்கிறேன். என்னை நம்பி வந்தவளுக்கு என்னால எதுவும் ஆகக் கூடாது ஷாலு  ” என்றான்.

” புரியுது மாமா, இதுக்கு தீர்வு கிடைக்க, நாம விஷ்ணு கிட்ட உண்மையை சொல்லுறதை தவிர வழியில்லை மாமா..  வருணைப் பத்தி உண்மையை  நியூஸ் சேனல் மூலமாகத் தெரிய வருவதற்கு முன்னாடியே நாம பக்குவமா சொல்லுறது நல்லது…

இந்த உண்மை வீட்டுக்கும் தெரிய வந்தால் தாத்தா கோபப்படுவார் மாமா…  ” என்றாள்.

“ம்ம்..  இன்னும் நான் யார் யார் கோபத்துக்கு ஆளாகப் போறேன் தெரியல.. ஒரு பக்கம் ப்ரண்டோட இறப்பு, இன்னொருப் பக்கம் காதலி. இது போதாதது வீட்டுல சொல்லி வச்சிருக்க பொய்! முடியல ஷாலு… ப்ர்ச்சர்  ஏறுது, எதாவது செய்து கொள்ளலாமா இருக்கு! ” என்றதும் பதறியவள், ” மாமா, சட்டுன்னு எடுக்கிற முடிவு, ஆபத்துல தான் போய் முடியும்..  உங்களை அழுத்திக்கொண்டு இருக்கிற,விசயத்தால இப்படி பேசுறீங்க! பிரச்சினைக்கு இது தீர்வு இல்லை…  தீர்வை வேண்டுற நாம அந்தப் பிரச்சனை பார்த்து பயப்பிடாமல், தீர்க்க வழியைத் தான் தேடனும், உங்களுக்குத் துணையா நான் இருப்பேன் மாமா.. விஷ்ணு என் கூட பொறந்தவளா தான் நினைக்கிறேன். அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன் மாமா.., நீ கவலைப் படாதீங்க  ”   என்றாள்.

” தாங்க்ஸ் ஷாலு… ” என்றான் மென்னகைச் சிந்தி…  அங்கிருந்து அவள் செல்ல, விஷ்ணுவைப் பார்த்தவன் மீண்டும் அணைத்து அவளருகிலே படுத்துக்கொண்டான்..

வெகுநேரம் கழித்து சிரமத்தோடு எழுந்தவளுக்கு, ஏதோ அழுத்திட, என்ன என்று பார்க்க, தன்னருகில் தன்னை அணைத்து உறங்கும் மயூவை கண்டதும் அதிர்ந்தவள், ‘ எவ்வளவு தைரியம் இந்த மயூக்கு என்னை அணைத்துக் கொண்டிருக்கான்?  ‘ அவனது பிடியை அவளால் தளர்த்த முடியவில்லை..

‘  என்னத்த தின்னுவானோ! உடம்பு பிடியா இருக்கே ‘ என எண்ணியவள், ” மயூ,  எழுந்திரிடா… மயூ எழுந்திரி என்னால முடியல  ” என்று வலியில் முகம் சுளிக்க, அவளழைக்கும் அரவத்தில் விழி திறந்தான்.  இருவரனின் முகமும் அருகிலிருந்து, அவனது விழிகளை ரசனையில் இருக்க, மடந்தையவளின் விழிகள் கோபத்தில் இருந்தது. 

“டேய் எழுந்திரிடா! என் பெர்மிசன் இல்லாம, என் கண்டிசனையம்  மீறி என்னைக் கட்டிப்பிடிச்சு படுத்திருக்க, ஹவ் டேர் டூ லைக் திஸ்? ”  எனவும்.

அவனுக்குக் கோபம் வரவே, ” அப்படியே போட்டேனா வையேன்.. ” அவனது கையை அடிக்க ஓங்கிட மிரண்டு போனாள்.. ” எதுக்கு இப்ப அடிக்க வர்ற? ஏன் கட்டிப்பிடிச்சு படுத்திருந்தானே கேட்டேன்.. ” என பயந்து போன குழந்தையாய் அழுகை ஒருபக்கம்வர, தன் இதழை வளைத்தவாறு அவள் கேட்க, அவனுக்கு சிரிப்பே வந்தது. இதழை மடக்கி சிரிப்பை அடங்கியவன் கோபமாகத்  தன்னை காட்ட முயன்றான்.. 

”  நீ பாட்டு சாக முடிவெடுத்துட்ட, கொலை கேஸுல நான் உள்ள போகணுமா? எதுக்குடி சவர்ல போய் உட்கார்ந்து மயங்கி விழுந்த? உனக்கு உதவ வந்து, நான் ஜெயிலுக்குப் போகணுமா? என்ன நடந்துச்சுன்னு இந்த முடிவை எடுத்த நீ ? ” என தன் ஆதங்கத்தைக் கேட்க.

விசம்பினாள் பெண்ணவள், ”  பின்ன, நீ பாட்டுக்கு அவங்கப் பேச்சைக் கேட்டு தாலிசெயினைப் போட்டுவிட்டுட்ட, எனக்கு கஷ்டமா இருக்காதா?  என் வருண் கட்டின தாலியைத் தான் சுமக்கணும் இருந்த எனக்கு, இந்த விசயம் சந்தோசத்தையா கொடுக்கும்? அதான் அழுதிட்டே சவருக்க அடியில உட்கார்தேன்.. ரொம்ப நேரமா அழுததுல மயங்கிட்டேன்… ” என்றாள்.

” ஏன் இங்க உட்கார்ந்து அழுகக் கூடாதா? சவருக்கு  அடியில தான் அழுகணுமா? நான் தாலிச்செயினைப் போட்டதுக்காக அழுதியா? இல்லை வருணுடைய தாலி ஏறலைன்னு அழுதியா? அதாவது இனி அவனை திருமணம் செய்ய முடியாது நினைச்சு அழுதியா? ” எனவும் திரு திருவென முழித்தாள்.

 ” நீ அழுததற்க்கான காரணம் என்ன கேட்கிறேன்?  ” என்றான். ” அவளால் பதில் சொல்ல முடியவில்லை… ” இல்லை, நீ இந்தத் தாலிக்கு மதிப்புக் கொடுத்து என்னோட வாழப் போறீயா?  இது தாலி இல்லை செயின் நான் வருணோடு  தான் வாழ்வேன் நினைக்கிறீயா ? ” என மீண்டும் கேட்க, ” நா… நான்… வரு.. வருண் கூட தான் வாழப்போறேன்.. ” என்றாள், 

” அப்ப எதுக்கு இந்த முடிவு, தாலி நான் போட்டா, உடனே நீ எனக்கு பொண்டாட்டி ஆகிடுவீயா? நாம நடிக்கத்தான் வந்திருக்கோம் உனக்கு தெரியாதா? மறந்துட்டீயா? நீ பாட்டுக்கு சவர்ல போய் நிக்கிற, உனக்கு எதாவது ஆச்சுன்னா?  வருண் வந்தும்  என்ன பதில் சொல்ல! இல்ல உங்க வீட்டுக்குத் தான் நான் என்ன பதில் சொல்ல! கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீயா? அதானே மூளை இருந்தால்  தானே யோசிக்க.. ” என்றதும் அவள் முறைக்க, ” என்ன மேடம் என்னை ஏன் முறைக்கிறீங்க? நீ பண்ணதுக்கு நான் தான் உங்களை முறைக்கணும் திட்டணும்… ” என்றான்..

” அதை தான் செய்துட்டு இருக்கியே! ஏதோ ஒரு எமோசன்ல அழுகையைக் கட்டுபடுத்த முடியாம போய் நின்னுட்டேன்… அது கொஞ்சம் பிரச்சனை ஆச்சு, அதான் எதுவும் ஆகலயே. நல்லதானே இருக்கேன்.. ” என்றாள் அமர்த்தலாக..

ஆனால் அவன் தான் துடித்துப் போயிவிட்டானே! அவன் துடிப்பதைக் கண்டிருந்தால் அவள் இவ்வாறு பேசிருக்க மாட்டாள் போலும். பாவம் மேலும் மேலும் வாய் கொடுத்து மாட்டிக்கொள்கிறாள்..

” ம்ம். ஏன் மேடம் பேசாம மாட்டீங்க? இங்க உனக்காக எவ்வளவு பேர் துடிச்சாங்க தெரியுமா? என்னையும் சேர்த்து தான் சொல்லுறேன்.. என்னை நம்பி வந்தப் பொண்ணாச்சே! அவளுக்கு எதுவும் ஆயிருச்சோன்னு உயிரை கையில பிடிச்சு ஓடிவரேன். ஆனா நீ சவுடால பேசுவ! உனக்கு எதாவது ஆச்சுன்னா, உங்க வீட்டுல பதற மாட்டாங்க, பீல் பண்ண மாட்டாங்க? அதைக் கூடவா யோசிக்க மாட்டா? ” என்றதும் கேலிப்புன்னகை உதிர்த்தவள்.. 

” நான் இங்க வந்து ஒரு பத்துநாள் பதினைந்து நாள் இருக்குமா? இந்நேரம் எனக்கு பதினாறாம் நாள் கொண்டாட்டி இருப்பாங்க! நீ வேற நான் செத்துட்டேன் போட்டோக்கு மாலை போட்டு குங்குமம் வச்சு கெடாவெட்டி ஊரே திண்ணுட்டு இருக்கும்.. ” என்றதும் அதிர்ச்சியாக அவளைப் பார்க்க,

” ஆமா, இதுல அதிர்ச்சியாக ஒண்ணுமே இல்லை, எனக்கு ஒரு அத்தை இருக்கிறதே தெரியாது… ஒரு நாள் ருக்கு அழுகும் போது தான் எனக்கே தெரிந்தது அவங்க ஓடிப்போயிருக்காங்க! ஊர்ல எல்லார்கிட்டையும் அவ செத்துட்டான்னு சொல்லி வச்சிருக்கு என் மீசைக்கார பேமிலி! இப்ப என்னையும் அப்படித்தான் சொல்லிருப்பாங்க. எனக்கு அவங்களை பத்தி கவலையே இல்லை… ” என்றாள்..

அவள் கூறியதைப் போல தான் அங்கே  வீட்டில் இறந்த பின் பதினாறாம் நாள் கழித்து காரியம் செய்வது வழக்கம் அதுபோல அவளுக்குப் பிண்டம் கரைத்து காரியம் செய்து ஊருக்கே கெடாவெட்டு விருந்து வைக்க, இதையேல்லாம் பார்க்க முடியாமல் அழுதுக்கொண்டிருந்தனர் அவ்வீட்டுப் பெண்கள்….

கொள்ளை தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!