பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 18

 

இரவின் பிடியில் அந்த வெண்தாரகையும் விண்தாரகையும்  வானில் சூழ ஆட்சித் தொடங்கப்பட்டது…

விஷ்ணுவைச் சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க, அவள் மடியில் கபி அமர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.
” நல்லா சாப்பிடுமா! இங்க வந்து தான் தேறியிருக்க மாதிரி இருக்கு!  காலையில நேரத்துக்குச் சாப்பிடு! இனி உனக்கு மட்டும் இங்க விரதம் கிடையாது… நாங்க ரொம்ப பயந்து போயிட்டோம்.. உன்னை அந்த நிலைமையில பார்த்து…” என கலங்கிப் போனார் சகு, 

மயூ, ஷாலு , முத்துவைத் தவிர, அங்கிருக்க அனைவரும் அவள் சாப்பிடாமல் மயக்க மடைந்திருக்கிறாள்  என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அந்த மூவருக்கு மட்டுமே தெரியும் அவள் அழுது மயங்கி விழுந்திருக்கிறாள் என்று… 

”  அழாத சகு..  இனி நான் நல்லா சாப்பிட்டு தெம்பா இருப்பேன்… ப்ளீஸ்! ” என அவரது கண்ணீரைத் துடைத்து விட, 

” விஷ்ணு, உனக்கு வலிப்பு வருமா? ” வேதா கேட்க, ” அது… அது…  ” என மயூரனைப் பார்த்தாள்.

” விஷ்ணு நனைஞ்சு போனதால வந்திருக்கும். இத போய் கேட்டுட்டு என்ன வேதா? ” என்றார் ராமன்.

” இல்லங்க, அவளுடைய உடல் நலத்தைப் பத்தி,  நாம தெரிஞ்ச வச்சக்கணும்.. அவ இந்த வீட்டுப் பொண்ணுங்க.  அதுக்கு தகுந்த மாதிரி அவளைப் பார்த்துக்க வேணாமா? அதுக்கு தாங்க கேட்டேன் ”  என்றார் அவள் மீது கொண்ட அக்கறையில்.

 ” சரிதான், விஷ்ணு பேட்டி உனக்கு வலிப்பு வருமா? இதுக்கு முன்னாடி எப்பையாவது வந்திருக்கா? ” 

” சகு, அவளுக்கு இது தான் முதல் தடவை…  அவளுக்கு வலிப்பு வராது…  ” என்றான் மயூரன். அவளைப் பற்றி சிறுவயதிலிருந்து அறிந்தவன் அல்லவா அவ்வாறு கூற சட்டென அவனைப் பார்த்தாள் விஷ்ணு. ‘ இதான் முதல் தடவை இவனுக்கு எப்படி தெரியும்? ‘ என எண்ண அதனைக் களைத்தாள் ஷாலு,

 ” சகு,  மூளை மற்றும் நரம்பு பிரச்சனை இருக்கிறவங்களுக்கு தான் வலிப்பு அடிக்கடி  வரும். மன உளைச்சல் இருந்த கூட வரும்… சில வலிப்புக்குக் காரணம்  இருக்காது.. விஷ்ணுக்கு மூணாவது ரகம் தான்… இனி இது போல  நடக்காம பார்த்துக்கலாம் “என்றாள் ஷாலு.

”  பரவாயில்லையே! மாமா, நாம படிக்க வைக்கிறது வீண் போல! பிள்ளை தெளிவா பேசுது ” என்றாள் வாணி, ஷாலுவை வம்பிழுக்க, 

” அதான்டா,  இருந்தாலும் சந்தேகமா தான் இருக்கு… சொன்னது எல்லாம் சரியா ஷாலு. ”  என்று சேகர் வாணியோடு சேர்ந்துக்கொள்ள., “அப்பா, நீங்களும்? ” என சிணுங்கினாள்..

” சரி சரி போலச்சு போ! நீ  டாக்டர் நம்புறோம்.. ” என்றான் ஆதித்தன்.. ” அந்த பயம் இருக்கட்டும்.. இல்ல எல்லருக்கும் ஊசிப் போட்டு விட்டுருவேன்… ” என்றாள்.. 

அங்கே சிரிப்பலைகள் ஒலிக்க, ” முத்து, விஷ்ணுவுக்குச் சாப்பாடு கொடுமா. அவ சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும் ”  என்றார். 

” வேணா சகு! நானே கீழ இறங்கி வரேன் . ” என்றாள்.. 

” அதெல்லாம் ஒண்ணு வேணாம். ஷாலு போ போய் அவளுக்குச் சாப்பாடு எடுத்துட்டு வா…  சரியானதும் நீ கீழ இறங்கி வா.., ” என்றார் தனா…

எல்லாரும் அதிர்ச்சியாகப் பார்க்க, “என்ன அப்படி பார்க்கிறீங்க? நான் என்ன சொல்லிட்டேன்? ”  அவரும் தான்எதுவும்  தவறாக சொல்லிவிட்டோமா என எண்ண..

” இல்ல தனா, எப்பையும் நீ விஷ்ணுவை திட்டுவியா! இன்னைக்கு இப்படி பேசினது ஆச்சரியமா இருக்கு  ” என்றார் லட்சணன்..

” ஆமா, அம்மா, எங்க விஷ்ணுவுக்கு மறுபடியும் வலிப்பு வந்தாலும் ஆச்சரிய பட இல்ல! ” என்றாள் நிவி..

” போதும் போதும் என் அம்மாவ கிண்டல் பண்ணினது. கோபம் கூட ஒருவகை அன்பின் வெளிப்பாடு தான்… என் அம்மாவும் அப்படிதான் யாரும் கிண்டல் பண்ணாதீங்கப்பா! ” அவருக்காகப் பரிந்து பேசினாள் விஷ்ணு.. 

 அவர் கண்கலங்க,  ” உன்னைப் அப்படி பார்த்ததும் மனசுக் கேட்கல டி.. நான் அந்த இடத்துல ஷாலுவை தான் பார்த்தேன். அந்த இடத்துல அவ தான் இருந்தா! அப்ப தான் கடவுள் என் புத்தில அடிச்சது போல அதுவும்  உன் பொண்ணு தான் சொன்னது போல இருந்துச்சு.. நான் உன்னை கஷ்டபடுத்திருந்தா மன்னிச்சிடு விஷ்ணு  ” என மெய்யாய்  வருந்திக் கேட்க, 

” மா, ஒருத்தர் இன்னொருத்தர் மேல காட்டுற எந்த உணர்வும் உரிமை அடிப்படையில தான் வரும்.. உங்க கோபம் கூட என்மேல இருந்த உரிமையின் அடிப்படையில தான்., இத்தனை நாள் இதெல்லாம்  கிடைக்காதா ஏங்கிய நாட்களும் உண்டு.. அது இப்ப எனக்கும் கிடைக்கும் போது, அது எந்த உணர்வா இருந்தாலும் எனக்கு சந்தோசம்   ” என்றாள் கண் கலங்கியவாறு…, மயூரன் அவளை ஆழமாகப் பார்த்தான்..

அதன் பின் கூட்டங்கள் சென்றிட, சாப்பிட்டு மாத்திரைப் போட்டவள் படுத்துக்கொள்ள, அவனும் மறந்து அவளருகில் படுத்துக்கொண்டான்.

” ஹேய் என்ன என் பக்கத்துல வந்து படுக்கிற?  எனக்கும் ஒண்ணுமில்ல, நான் நார்மல் ஆயிட்டேன். நீ எப்பையும் படுக்கிற இடத்தில போய் படு! ” என்றாள்.. ” நீ நார்மலாகிட்டன்னு உன் பேச்சுலே தெரியது. இருந்தாலும் நடுவுல குளிர் சாஸ்தியாகி உனக்கு குளிர்காய்ச்சல் வந்திருச்சுன்னா, அந்த நேரத்துக்கு ஹாஸ்பிட்டலுக்குப் போறது கஷ்டம். பெஸ்ட் ட்ரீட்மெண்ட் அணைச்சுட்டு தூங்குன்னா சரியாகிடும்  ” என்றான் அமர்த்தலாக..

” நீயே எனக்கு குளிர்காய்ச்சல் வரணும் வேண்டுவ போல… அதெல்லாம் எனக்கு வராது உன் இடத்தில போய் படு! ”  

” நான் தூங்கிட்டேனா எழுந்திருக்க மாட்டேன்.,உனக்கு எதாவது ஆச்சனா! நான் கொலை கேஸ்ல உள்ள போக விரும்பல. நான் இங்க தான் தூங்குவேன்.. ” என்றான் அதே ரீதியில்..

” அதானே! என்னடா சார்க்கு அக்கறை பொத்துக்கொண்டு வருதேன்னு… நீ ஜெயிலுக்குப் போக கூடாதுன்னு தான் இந்த அக்கறையா! எனக்கு ஒண்ணும் ஆகாது மிஸ்டர் மயூரன். ஆண்ட் எனக்கு உதவி பண்ற உங்களை ஜெயிலுக்கு அனுப்பமாட்டேன். ப்ளீஸ்! ” என்றாள் அவனது இருக்கையைக் காட்டி…

அவளுடன் உறங்கிய அந்த நேரம் போல் இனி ஒரு பொழுதும் வாராதா? என ஏங்கிப்போனான்…

” ம்ம்…  ஒ.கே ” என்றவன் சோபாவில் படுத்துக்கொண்டான். இன்னும் உடல் வலி அவளுக்குள்ளே இருக்க, காலையிலிருந்து இரவு வரை உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு உறக்கம் வரவே இல்லை.. 

அவளது மனமும் உடலும் வருணைத் தேடியது எழுந்து சென்று அவளது டைரியிலிருக்கும் வருணைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாள்…. இதைக் கவனித்த மயூரனோ, அவளருகில் சென்று தோளை அழுத்த, ” வருணை பார்க்கணும் போல இருக்கு மயூ! வருண் எனக்கு வேணும்.. எப்போ வருவான்? ” என கண்ணீர் வடிக்க,

அவனும் காதலித்திருக்கிறான் அவளது வலியை அவனால் உணர முடிந்தது,. ” வா விஷ்ணு! ” அவளை அழைத்துக்கொண்டு தன் மடியில் போட்டுக்கொள்ள, அவன் ஒரு ஆண் என்பதையும் மறந்து அவனிடம் தாய்மடியென தஞ்சம் கொண்டாள். அவன் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டாள். அவன் தட்டிக்கொடுக்க, சிறிது நேரத்தில் விசும்பல் நிற்கவே உறங்கிப்போனாள். அவளை சரியாகப் படுக்க வைத்துவிட்டு அவளருகில் அவளைப் பார்த்திருந்தவன் உறக்கத்தை தழுவினான்.

அழகாய் விடியல் புலர்ந்தது.. ஒவ்வொரு நாளும் விடியவே  மனதில் மகிழ்ச்சி கனி கனிந்து அந்த நாளைச் சுவையாக ஆரம்பிக்க. இங்கே இவர்களுக்கோ இந்நாள்  கசந்து போனது, 

தன் மானத்திற்காக உயிரைக்கொடுக்கவும் உயிரை எடுக்கவும் தயங்காத ஜீவராசிகளும்  வாழத்தான் செய்கிறார்கள்..  காதலை அழிக்க,மனிதன் கண்டுபிடித்த ஆயுதம் ஜாதி, மதமே! இதை தவிர்த்து ஒரு ஆயுதம்  கௌரவம்.. கௌரவத்தின் கிரீடத்தை பாதுகாத்துக்கொள்ள காதலை அழித்து காதலர்களைக் கொன்று அதன் மேல் தனது கௌரவத்தையும் மானத்தையும் நிலைநாட்ட எண்ணும் மனிதமற்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

ஓடிப்போன பேத்தி கார் விபத்தில் இறந்ததாகக் கூறி அவளுக்குப் பதினாறாம் காரியம் செய்து அங்காளி பங்காளியை அழைத்து விருந்து போடவே வந்தவர்கள் பெயருக்கென்று வருந்தி விட்டு. வயிறார உண்டு விட்டுச் சென்றார்கள். வீட்டில் பலராமன்,சாரதி மற்றும் பெண்களைத் தவிர அனைவரும் சாப்பிட்டனர்.

ருக்கியிலிருந்து குட்டீஸ் பவ ,ஜெயஸ்ரீ வரைக்கும் சாப்பிடாமல் இருந்தனர்…

” ருக்கு, அம்மா , சித்தி வாங்க சாப்பிட நாங்க எல்லாரும் சாப்பிட்டோம்.. வாங்க ” என அர்ஜூன் அழைக்க,

” ஆமா, ரொம்ப முக்கியம் டா.. நாங்க சாப்பிடலன்னு யாரு இங்க அழுகபோறா? உயிரோட இருக்கிற புள்ளைய செத்துட்டான்னு மாலைப் போட்டுச் சடங்கு சம்பரதாயம் பண்ணிட்டு கறியும் சோறுமா எப்படி சாப்பிட உங்களுக்கு மனசு வருது? ச்ச! ” எனவும்

 ” பின்ன, அவ ஓடி போயிட்டான்னு வெளிய சொல்லி நம்ம மானத்தை பங்கு போட சொல்லுறீயா அப்பத்தா! அந்தக் கொழுப்பு ஏறிபோன கழுதை, ஒழுங்க தாத்தா பார்த்த மாப்பிள்ளைக் கட்டியிருந்தா, இந்நேரம் விருந்துல வச்சிருப்போம். அவ ஓடிப்போய் , கருமாதி பண்ண வச்சுட்டா! நாங்க என்ன பண்ண? ” என அதே கௌரவம் இரத்தத்தில் கலந்திருக்க, திமிராய் பேசி நின்றான்.

” நீ ஒண்ணும்  பண்ண வேணா ராசா! பெத்த வயிறு எனக்கு தான் அந்த வலி தெரியும் எட்ட இருந்து பார்க்கும் உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க தான் மானத்தை கௌரவத்தையும் உள்ளவச்சுட்டு அன்பு பாசத்தை தான் சுத்தமா தொடச்சு எடுத்துட்டீங்களே! உங்ககிட்ட அதை எப்படி எதிர் பார்க்க? விடு அர்ஜூன் எங்களுக்கு பசிக்கல! ” என்று அவர் அறைக்குச் சென்று விட்டார். விஷ்ணுவைப் பெத்த மகராசி சசிகலா.. 

அவனுக்கோ துளியோ ஈரம் இல்லை, அவர் பேச ஒரு துளி சோகத்தையோ முகத்தில் காட்டவில்லை.. ” டேய் சாரதி நீ வாடா! ” என அவனை அழைக்க., அவனை ஒரு மனிதனாக கூட மதிக்காமல் சென்று விட்டான்.. 

தன் அறைக்கு வர, அங்கே கண்களில் நீரோடு அமர்ந்திருந்தார்  பலராமன்.. ” என்னங்க கறியும் சோறையும் தின்னுட்டு செறிக்காம உட்கார்ந்து இருக்கீங்களா? ” என கேலிக்கையோடு கேட்க. 

” ஏன் சசி நீயும் என்னைக் கொல்லுற? எனக்கு நம்ம பொண்ணு மேல பாசமில்லன்னு நினைக்கறீயா? என்னால அப்பாவை எதிர்த்து பேச முடியலமா… எங்க பேசி அவ இருக்கிற இடத்தை சொல்லிட்டா! அவளை எதாவது பண்ணிடுவாரோ பயம். அதான் அமைதியா இருக்கேன்.. ” என்று அவரும் அழுக, ” ஏங்க நம்ம பொண்ணு நல்லா இருக்காளா? உங்க தங்கச்சி போன் பண்ணாங்களா? ” என கேட்க

 ” நம்ம பொண்ணு மாப்பிள்ளையோடு சந்தோசமா இருக்காமா! இந்த இரண்டு நாள் தான் போன் பண்ணல! அவளுக்கு ரிசப்சன் வச்சிருக்காங்களாம் என்னையும் உன்னையும் கூப்பிட்டு இருக்கா போகணும்  ” என்றார்.

” நானும் வந்தா சந்தேகம் வரும் நீங்க போய், ஆசிர்வாதம் பண்ணிட்டு நம்ம பொண்ணைப் பார்த்துட்டு வாங்க… ” என்றார், ” அழாத சசி! இதெல்லாம் நாடகம் தான். நம்ம பொண்ணு நல்லா இருக்கா. எதையும் போட்டு குழப்பிக்காம போய் சாப்பிடுமா! ” ஆதுரமாய் பேச, அவரை அணைத்துக்கொண்டார் சசி.. 

இங்கோ காலையில் தெம்போடே வலம் வந்தாள் விஷ்ணு., வீட்டில் அனைவரின் கவனிப்பில் அன்றே ஒருசுற்று கூடியிருந்தாலும்  வியப்பல்ல! அவள் நன்றாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டவன் வேலைக்குச் சென்றான்.

அங்கே மேத்தாவைப் பார்த்தவன் விசயம் அனைத்தையும் கூற அதிர்ந்து போனார்..

“எனக்கு தெரியும் மயூரன், ஷ்பனா தப்பு பண்ணிருக்க மாட்டா, அவன் துடிச்ச துடிப்பு இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கு மயூரன்.. என் பிரண்ட், தன்னோட சொந்த கால் நின்னு நியாயமா உழைச்சு முன்னேறி வந்தவன். அவன் பொண்ணுக்கும் அதைச் சொல்லித் தான் வளர்த்தான். அந்தப் பொண்ணு எப்படி தப்புப் பண்ணும் எனக்கும் சந்தேகம் இருந்தது? அந்தப் பொண்ணு ரொம்ப அமைதியானப் பொண்ணு! அவன் மேல உயிரா இருப்பா! அப்பாக்காக இதை செய்வேன் சொல்லுவா, ஸ்போடிவ்வா பேசுற பொண்ணு இப்படி ஒரு தப்பை பண்ணுவா  நாங்க நம்பல! ஆனா நாங்க நிறுப்பிக்கிறோம் எவ்வளவோ ஆறுதல் சொன்னோம். ஆனா அந்தப் பொண்ணு கேட்கல தற்கொலைச் செய்துட்டா, அவன் அழுத அழுகைக் கொஞ்சம் இல்லை.. ஓரே பொண்ணு.. என்னால தாங்கிக்க முடியல, அந்தப் பொண்ணுமேல தப்பில்லை நிறுப்பிக்க  உண்மையைத் தெரிஞ்சுக்க நிர்மல் கிட்ட அந்த கேஸ்ஸைக் கொடுத்தேன்.. ஆனா, அவனையும் இழப்பேன் நினைச்சு பார்க்கல, துடிப்பான பையன், சீக்கிரமா அந்தக் கேஸ் பத்தின ரீப்போட்டைக் கொடுப்பான் நினைச்சேன். ஆனா… என்னால தான் அவன் இறந்து போனது.. ” என்று தன் கண்ணாடி கழற்றி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார்..

”  சார், பீல் பண்ணாதீங்க, நிர்மலோட சாவுக்கும் சேர்த்து  நியாயம் கிடைக்கும் சார்… அவங்க ஆத்மா சாந்தி அடையும்… இந்த ஆதாரத்தையும்  சீமாவையும் போலீஸ்ல ஒப்படைக்கணும், நம்ம நியூஸ் சேனலை இவங்க இறப்பைப் பற்றின முழுவிவரத்தையும் ஒளிபரப்பனும் சார்.. ” என்றான்

” கண்டிப்பா மயூ! இப்ப நம்ம மும்பைக்கு  தமிழ்நாட்டில இருந்து ஒரு புது கமிஷ்னர் அப்பாய்மெண்ட் பண்ணிருக்காங்க… அவர் எங் ஆண்ட் ஜென்டில்மென்.. அவர்கிட்ட இந்த எவிடன்ஸ் கொடுக்கலாம் இந்த நியூஸ் பத்தி சொல்லலாம். அவர் லஞ்சம் வாங்க ஸ்ட்ரீட் ஆபிஸர் கேள்விப் பட்டேன். அவர்கிட்ட பெர்சனலா ரெக்ஸ்வஸ்ட் பண்ணலாம்.. நீ சீமாவைப் பத்திரமா  பார்த்துக்கோ. அப்புறம் நீங்க  இரண்டு பேரும் கேர்புல இருங்க! நீங்க இரண்டும் பெரும் எனக்கு முக்கியம் பீ கேர்புல் ” என்றவர் கடைசி வார்த்தையை அழுத்தியே சொன்னார்..

இருவரும் விடைப்பெற்று வர, அப்துலிடம் தனது திட்டத்தைக் கூற, அவனோ செயல் பட  தொடங்கினான்.

நிசாப் ஆட்களுக்குத் தெரியாமல் சீமாவை அழைத்து வந்தான் அப்துல்.. அவளை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தான் மயூரன். வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் அவளை கெஸ்ட் அவுஸ்ஸில் ரூம்மில் எல்லா வசதியும் செய்துகொடுத்து  இருக்கச் சொன்னவன். கதவைப் பூட்டிவீட்டு வந்தான்… இரவு அனைவரும் உறங்கிய பின் அவளுக்கு உணவு எடுத்துச் செல்ல, அதனைப் பார்த்து விட்டாள் விஷ்ணு. அவன் அறியாமலே அவனைத் தொடர அங்கே யாரோ இருக்கிறார்கள் என்பதை அறிந்தவள்., மறுநாள் அவன் சென்றபின்னே!  

அந்தக் கெஸ்ட் அவுஸ்க்குள் செல்ல சீமாவைக் கண்டு அதிர்ந்தவள், அவளிடம் அவள் யாரென விசாரிக்க அவளோ வருணைப் பத்தி கூற தொடங்கினாள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!