பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 20…

நிசாப் ஆட்கள், மயூரனை   கண் காணித்தனர்…. அவனை ரிப்போட்டர் என எண்ணி இருந்தவர்கள். அவன் என்.சி சேனலின் டேரக்டர் என தெரிய வரவே அதிர்ந்தனர்.. மூன்று வாரங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட வருண் கூட, அந்தச் சேனலில் ரிப்போட்டாராக வேலைச் செய்தவன்.. வருணைப் பற்றிக் விசாரிக்காது எதற்குச் சீமாவைப் பற்றி விசாரிக்க வேண்டும்.. அவள் தான் ஷ்பனா வழக்கில் சாட்சியாக வந்தவள், அவளையும் சேர்த்து தானே கொன்றோம்.. அவள் இறப்பும் அவள் யாரென தெரிய வந்திருக்குமா? ‘ நிசாப்பிற்கும் நிசாப்பின் ஆட்களுக்கும் சந்தேகம் எழுந்தது..

” சீமா தான் இறந்துட்டாளே! ஏன்  அவன் சீமாவைத் தேடி அலையணும்? சீமாவைப் பற்றி விசயங்களை  அந்த வருண் அவன் கிட்ட சொல்லிருப்பானா? அந்தச் சேனலைக் கண்டு  அரசியல் வாதிகளே பயப்படுறாங்க, என்னைப் பத்தித் தெரிந்தால், காமத்திப்புரால நான் பண்ற தொழில் எல்லாமே வெளிய வந்திடும்.. அடுத்து இங்க என்னால தொழில்  பண்ண முடியாது.. என் மேல இருக்க பயம் போயிடும்…” 

” பையா! நீங்க ஏன் பயப்பிடுறீங்க? போலீஸ் நம்ம பக்கம் இருக்கு. உங்க மேல இன்னும் இந்த காமத்திபுரா மக்களுக்கு பயம் இருக்கு! அவன் என்ன தேடினாலும் ஷ்பனா வழக்குல நீங்க தான் சம்பந்தம் பட்டிருக்கீங்க தெரியாது. இல்லைன்னா சொல்லுங்க அவனையும் தூக்கிடலாம்…. ” 

” இல்ல தவீப், இப்ப வந்திருக்க,  கமிஷ்னர் ரொம்ப ஸ்ட்ரீட்.. நமக்கு சப்போட்ர்ட்க்கு போலீஸ் இருக்குன்னு தெரிஞ்சா! அவங்களையும் வேலையை விட்டுத் தூக்கிடுவான்… நமக்கு நிச்சயம் தண்டனைக் கிடைக்கும்.. நீ சொன்ன மாதிரி அவனைக் கொல்லணும். என் கோட்டைய தகர்த்த நினைக்கிற சின்ன துரும்பைக் கூட விட்டு வைக்க கூடாது தவீப், அவனையும் அந்த ரிப்போர்டர் போல முடிச்சிடு!” என்றான்….

தவீப், தன் ஆட்களை அழைத்துக்கு கொண்டுச் சென்றான்…

இங்கோ நிசாந்தன் எதிரில் அமர்ந்திருந்தனர் மேத்தாவும் மயூரனும்.. ” சார் நாங்க உங்க கிட்ட ஒரு வழக்கைப் பத்தி பேச வந்திருக்கோம் ” என்றனர்…

” சொல்லுங்க.. ” 

ஷ்பனாவின் புகைப்படத்தைக் காட்டியவன், அந்த வழக்கின் சம்பந்தப்பட்ட ஆணவங்களையும் முன் வைத்தான்… 

“இந்தப் பொண்ணு பெயர் ஷ்பனா, இவ ஒரு மெடிக்கல் ஸ்டுடன்ட்… இவ,  மும்பை சிட்டியில வளர்ந்து வரும் தொழிலதிபர் கல்யாண சுந்திரத்தோட பொண்ணு.. இவ, போன மன்த் தற்கொலைச் செய்துக்கொண்டாள். காமத்திபுரால இருக்க ஒரு கும்பல் கல்யாணசுந்தரத்தை  மிரட்டி பணம் கேட்டிருக்காங்க, அவர் கொடுக்க மறுத்து போலீஸ் கம்பளைண்ட் பண்ணிருக்கார். அது தெரிஞ்ச அந்தக் கும்பல் அவருடைய பொண்ணு ஷ்பனாவைக் கடத்தி. கற்பழித்து, அவளைப் ப்ராஸ்ட்டியூட் சொல்லி அரெஸ்ட் பண்ணிருக்காங்க..

அவளை ட்ரக் அடிட்டர் வேற சொல்லிருக்காங்க கோர்ட்ல அதுனால மனசு ஒடைஞ்சு போனா ஷ்பனா தற்கொலைப் பண்ணிக்கிட்டா!… அவமேல தப்பில்லை நிருப்பிக்க எங்க சேனல் ரிப்போர்ட்  வருண்நிர்மல் கிட்ட இந்த வழக்கை மேத்தா சார் சீக்ரட்டா விசாரிக்கச் சொல்லிருக்கிறார். ஆனால் போதாத நேரம், அந்த நிசாப் ஆட்களுக்கு உண்மை தெரிந்து இவனையும் கொன்னுட்டாங்க… ஆனால் போலீஸ் அதை அக்சிடென்ட் சொல்லி சாயம் பூசிட்டாங்க…

என் நண்பன், ஷ்பனா வழக்கில கிடைத்த சாட்சியைக் கூட்டிட்டு வரும் போது

நிசாப் ஆட்கள், அவன் பயணப்பட்ட காரை இடித்து ஆக்சிடேன்ட் போல செய்து கொன்னுட்டாங்க… இப்போ அவனும் உயிரோட இல்லை…  இவங்க இரண்டு பேரோட இறப்பு காரணமான அந்த நிசாப் மேல கம்பளைண்ட் கொடுக்க வந்திருக்கோம் சார்.. எப்படியாவது அவனையும் அவனோடு கும்பலை நீங்க அரெஸ்ட் பண்ணனும்…” என்றவன் நிசாப் மேல் கம்பளைண்ட் எழுதி அவனிடம் கொடுத்தான்.. 

” இங்க உங்களுக்கு கீழ் இருக்க போலீஸ் கூட நிசாப்க்கு தான் சார் சப்போர்ட் பண்றாங்க! ப்ளீஸ் சார் எப்படியாவது அவனை அரெஸ்ட் பண்ணுங்க.” என்றான்.

” கண்டிப்பாக மிஷ்டர் மயூரன், இது எங்க கடமை. இப்போ தான் ஜார்ஜ் எடுத்துருக்கேன்…. இந்த கேஸ்ஸை விசாரித்து அந்த நிசாப்பையும் அந்தக் கும்பலை பிடித்து கைது பண்ணுவேன். நீங்க சொன்னது போல இங்க சில போலீஸ் அவனுக்கு ஆதரவா இருக்கலாம், கொஞ்சம் டைம் கொடுங்க, உங்க ப்ரண்ட் ஆண்ட் ஷ்பனாவிற்கு  நியாயம் கிடைக்கும்.. மிஷ்டர் மயூரன் வருண் கூட்டிட்டு வந்த சாட்சி யாரு? இப்ப உயிரோட இருக்காங்களா? ” என்றார்..

 ” எஸ் சார். ஷ்பனா கேஸ்ல சாட்சிச் சொல்ல வந்தது காமத்திபுரால வசிக்கும் ஒரு பெண், அவங்க பெயர் சீமா! அவங்களை நான் தான் நிசாப் ஆட்களிடம் இருந்து பாதுகாப்பா  தங்க வைச்சிருக்கேன் சார்… ” 

” ஓ.கே குட். இப்பதைக்கு அவங்களை பத்தி  நியூஸ்  வெளிய தெரிய வேணாம்… நீங்க இதை நியூஸ் சேனல் இப்பதைக்கு ஒளிப்பரப்ப வேண்டாம்.. இந்தக் கேஸ்ல நான் அவங்கள அரெஸ்ட் பண்ண பின்னே நீங்க உங்க நியூஸ் சேனல்ல போடுங்க!   நியூஸ் மூலமாக தெரியவந்து அவங்க தலைமறைவாக வாய்ப்பிருக்கு! ப்ளீஸ்”  எனவும்  இருவரும் அதை ஆமோதித்தனர்.

நன்றியோடு புன்னகைத்து விட்டு விடைப்பெற்று வெளியே வந்தனர்… 

“மயூரன், எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு. சார் சொன்னது போல, அவங்க அரெஸ்ட் பண்ணதுக்கு அப்புறமா நாம நம்ம சேனல் ஒளிபரப்பு செய்யலாம்… ” என்றார்.

” எஸ் சார்… வருண் சாவுக்கு, ஒரு தீர்வு கிடைத்தது போல  ஒரு உணர்வு சார்… ” என்றவன் பார்க்கின் ஏரியாவில் தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்ப பாதி தூரம்   கடந்ததும் எதிரே லாரி தவறான பாதையில் வருவதை உணர்ந்தவன் லாரியில் மோதாது வண்டியை திருப்ப, அது போஸ்ட் மரத்தோடு சென்று மோத, லாரி அங்கு நிற்காமல் சென்றது…. 

சீட் பெல்ட் போட்டிருந்ததால் இருவரும் தப்பித்தனர்… அவனுக்கு வலதுகையில் அடியும் ஸ்டெரிங் மோதி தலையில் அடிபட, மேத்தாவிற்குமே தலையில் அடிப்பட்டது… 

அங்கிருக்க மக்கள் இருவரையும் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்..

இங்கே கபியின் மூலம் வருண், மயூரனின் நண்பன் என அறிய அப்படியே அமர்த்துவிட்டாள்.. ‘ வருண், மயூரனோட நண்பனா? ஏன் மயூரன்  எங்கிட்ட இருந்து மறைக்கணும்? அவனோட ப்ரண்ட்ன்னு சொல்லிருக்கலாமே! இவ்வளவு  நாள் அவனைத் தெரியாது போல தானே இருந்தான். தன் நண்பனோட காதலின்னு தெரிஞ்சும் ஏன் எங்கிட்ட அப்படி பழகணும்? என் வருணைத் தேடுறேன் பொய் சொல்லணும். வருண் நண்பன்னா இருந்தா அவனைப் பத்தி தெரிஞ்சிருக்குமே! எதுக்காக மறைத்தான்? வருண் எங்க? ஒரு வேள வருண் தான் இறந்ததா? அவனோடா சாவுக்கு தான் இவ்வளவும்  செய்றானா? இருக்காது வருண் செத்துருக்க மாட்டான், அவன் உயிரோட தான் இருக்கான். இல்ல இது வேற ஆள், வருணா இருக்காது… அப்ப வருண்? ”  என அவளை அவளே குழப்பிக்கொண்டுருக்க. அழைப்பு மணி ஓசையைக் கூட கேட்காது அவளது சிந்தனை எங்கோ இருந்தது..

” என்னாச்சு இவளுக்கு போன் அடிச்சிட்டே இருக்கு, என்ன யோனையில இருக்க? காதுல கூடவா விழுகல? ” வேதா எண்ணிக்கொண்டு போனை எடுத்து காதில் வைக்க, ” ஹலோ! சொல்லுங்க யார் வேணும்? ” எனவும்

 ” …… ” 

“மயூக்கு என்னாச்சு ? எந்த ஹாஸ்பிட்டல் ? ” அவரது பதட்டம் நிறைந்த கேள்வி அனைவரையும் அங்க கூட வைத்தது.. ” சரி சார் பார்த்துக்கோங்க நாங்க வந்திடுறோம்.. ” என்று போனை வைத்தவர்.. ” மாமா, நம்ம மயூக்கு ஆக்ஸிடென்ட்ஆயிருச்சு.***** ஹாஸ்பிட்டல் சேர்த்திருக்காங்க மாமா! ” என்றதும். முத்துவிற்கு நெஞ்சு அடைக்காத குறைத்தான்.. ” ஐயோ மயூ… ” என கத்தினார்.

 ” அத்தை, மயூக்கு ஒண்ணுமிருக்காது. நீங்க எதையும் நினைச்சு பயப்பட வேண்டாம்.. வாங்க போய் பார்க்கலாம்… ” விஷ்ணு அழைக்க, வீட்டில் ஆண்கள் வேலைக்குச் சென்றிருக்க, வைகுண்டம் மட்டுமே இருந்தார்.. வாணியும் ஷாலுவும் கல்லூரிக்குச் சென்றிருக்க, மற்ற பெண்களை அழைத்துக்கொண்டு சென்றார் மருத்துவமனைக்கு..

நிகழ இருந்த பெரிய ஆபத்தில் இருந்து மயூரனின் யூகத்தில் இருவரும் சிறு அடிகளோடு தப்பித்தனர்.. மேத்தாவிற்கு தலையில் சிறு அடி என்பதால் அவரே மயூரனின் வீட்டிற்கு அழைப்பை விடுத்தார்…

மயூரனின் குடும்பம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.. அங்கே மயக்கத்தில் இருந்தான் மயூரன்.. வலது கையிலும் தலையிலும் கட்டிருந்தது… 

” டாக்டர் என் பேரனுக்கு இப்போ எப்படி இருக்கு? ” 

” பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்சிருக்கார் . வலது கையில சின்ன பிரேக்சர்.. அவ்ளோதான்.. மத்தப்படி அவருக்கு எந்தப்பிரச்சனையும் இல்ல. ஹிஸ் இஸ் இன் நார்மல்…. பேசண்ட்டை டிஸ்டர்ப் பண்ண வேணாம்.. அவர் கண்முழிச்சதும் பாருங்க  ” என்றனர்…

” பகு,நீ அழுகாத மயூரனுக்கு ஒண்ணுமில்லை டாக்டர் தான் சொல்லிட்டாரே! நாம வணங்குற கடவுள் தான் அவனைக் காப்பாத்திருக்கார்…”

அவரது கையைப்பற்றியவர்.. ” அவனை என்னால இப்படி பார்க்க முடியல அத்தை… அவன் வலி தாங்க மாட்டான் உங்களுக்குத் தெரியும் தானே! ” அவர் அழுக, அவரது தலையை வருடினார்.

 விஷ்ணு, மேத்தாவைக் கண்டதும் அவரிடம் சென்றவள்.. ” சார், அவனுக்கு எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு? நீங்க அவன் கூட தான் இருந்தீங்களா? ” எனவும் ‘ இவள் யாரென? ‘ விழித்தார்..

“சார், இது மயூரனோட மனைவி விஷ்ணுப்பிரியா! “

” என்னப்பா சொல்லுறீங்க, மயூரனுக்கு கல்யாணம் ஆச்சா! என் கிட்ட சொல்லவே இல்ல.. இதைப் பத்தி… ” எனவும் அவர்களும் புரியாமல் விழித்தனர்.

 ” எங்களுக்கு லவ் மேரேஜ். மேரேஜ் ஆகி டூவ்க்ஸ் ஆயிருக்கு, மயூரன் ஏன் உங்க கிட்ட மறைச்சான் தெரியல? ஆனா, இது ஆக்ஸிடென்ட் தானா? ஏற்கனவே அவனுடைய நண்பனையும் இப்படிதான் ஆக்ஸிடென்ன்ட் பண்ணிக் கொன்றுக்காங்க, இப்ப மயூரனுக்கும், எனக்கு பயமா இருக்க சார்! உண்மை சொல்லுங்க சார் இது ஆக்சிடென்ட் தானா? ” 

” எங்களுக்குத் தெரியலமா நாங்க கமிஷ்னர் ஆபிஸ்ல இருந்து வரும் போது தான் இந்த ஆக்சிடேன் நடந்துச்சு.. தவறான வழியில வந்த லாரி எங்கக் காரை மோத வந்தது, மயூரன் சுதாரித்து காரைத் திருப்பிட்டான். போஸ்ட் மரத்தில் கார் மோதிருச்சு.,” என்றார்.

” தாத்தா, நாம போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாமா? எனக்கு இது ஆக்ஸிடென்டா   தோணல… ” என்றதும் அவரும் யோசித்தார்….

” வேணாம்மா! போலீஸ் கம்பளைண்ட் போனா, லோக்கல் இருக்க போலீஸ்க்கிட்ட முழுவிரம் சொல்லணும்… இந்த வழக்குப் பத்தின விவரம் சீக்ரெட் இருக்கிறது நல்லது, இங்க இருக்க போலீஸ்ஸும் அந்தக் கும்பலுக்கு தான் துணையா இருப்பாங்க.. நான் கமிஷனர் கிட்ட இந்த விசயத்தைச் சொல்லிடுறேன் மா… ” 

அவள் அமைதியாக இருக்க, நர்ஸ் மயூரன் கண் விழித்ததைக் கூறினார்…

“மயூ பேட்டா… இப்ப எப்படி இருக்கு? ”  அருகே சென்று அவன் தலையை வருடினார் சகு.. ” சகு… கையில தான் கொஞ்சம் ப்யேன் இருக்கு… ” என்றவன் தன் அன்னையைக் காண அவரோ தன் மகனைக் கண்டதும் மேலும் அழுதார்.. ” மா… எனக்கு ஒண்ணுமில்ல நான் நல்லா தான் இருக்கேன்… அழுது என்னை மேலும் வீக் ஆக்காத மா… ப்ளீஸ்! “என்றான்.

தன் கண்ணைத் துடைத்தவர்.. ”  எவ்வளவோ தலப்பாட அடிச்சுகிட்டேன் இந்த வேலை வேணான்னு கேட்டியா? எனக்கு பயமா இருக்கு மயூ! “என புலம்ப ஆரம்பித்தார்.. 

” மா,.. ” என்றவன் வலியில் முகம் சுளித்தான். ” சகு, முத்துவ வெளிய கூட்டிட்டுப் போ…  ” என்றார். அவர் அவரை அழைத்துச் செல்ல. வேதாவும் தனாவுடன் சென்றனர்..

” என்னப்பா இது?ஆக்ஸிடென்ட் தானா? இல்ல கொலை முயற்சியா? விஷ்ணு ஏதோ சொல்லுற? நீ எதுவும் ஆபத்துல இருக்கீயா மயூரன்? ” என நேரடியாவே கேட்க, 

” தாத்தா… இது வேறு ஆக்ஸிடென்ட் தான்… எனக்கு ஆபத்தா?  அப்படி எதுவும் இல்ல தாத்தா.. நீங்க எதுவும் கற்பனை பண்ணிக்காதீங்க! ” என்றவரை சமாதானம் செய்ய, அவரும் அமைதியாக வெளியே செல்ல.. 

” மயூரன், நான் கமிஷனர் கிட்ட நம்ம ஆக்ஸிடென்ட் பத்தி சொல்லிருக்கேன். அவர் வந்து பார்க்கிறேன் சொல்லிருக்கார். நீ  உன் ஹேல்த் பார்த்துக்கோ, சரியானதும் வா… ” என்றார்.

” எஸ் சார். நீங்களும் கொஞ்சம் கேர்ஃபுல் இருங்க… ” என்றான். அவர் செல்ல, அவனது விழிகள் விஷ்ணுவின் பக்கம் திரும்பியது.. ” பயந்துட்டீயா?” எனவும் தலையை ஆட்டிவைத்தாள்..

” நான் போயிட்டா, வருணைத் தேடி கண்டுப்பிடிக்க முடியாதுன்ற பயமா? ” என நக்கலாக கேட்க. 

” பச்… என் தாத்தா கிட்ட இது ஆக்ஸிடென்ட் பொய் சொன்ன? இது ஆக்ஸிடென்ட் இல்ல தானே! உண்மையைச் சொல்லு மயூரன்.. எனக்கு பயமா இருக்கு! ” என அவன் கைப்பற்ற..

” எதுக்கு பயம் விஷ்ணு? ” 

சற்று தயங்கியவள், ” எனக்கு இப்போ இருக்கிற ஒரே நம்பிக்கை நீ மட்டும் தான் மயூ… நீ என் காதலனோ! புருசனோ! இல்லை. ஆனா நீ கூட இல்லாத என்னால அந்த நிமிசத்தை நினைச்சுப் பார்க்க முடியல! ” என அவள் கைகளை நெற்றி முட்டி அழுதாள்..

” விஷ்ணு! ப்ளீஸ் அழுகாத…  நிசாப்போட ஆட்களுக்கு என்னைப் பத்தி தெரிஞ்சிருக்கு, அதான் அவங்க வேலையைக் காட்டிருக்காங்க… வீட்டுல இதைச் சொல்லிடாதா! கமிஷ்னர் கிட்ட கம்பளைண்ட் கொடுத்திருக்கோம்… அந்த நிசாப் அந்தக் கும்பலையும் கைது பண்ணிடுவாங்க… என் ப்ரண்ட்க்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கும்… ” என்றார்.,. அவனது கடைசி வரியை கேட்டது அவனைக் கண்டவள், ‘ இந்நிலையில் இருப்பவனிடம் கேட்கலாமா? ‘ என்ற தயக்கத்தில் இருந்தது. விசயம் தெரிந்து மயூரனின் பெரியப்பா, மாமா. அப்பா, அண்ணன் என படையெடுத்து வர கேட்க எண்ணியத்தை தள்ளிப் போட்டாள்.. 

அதன் பின் இரண்டு நாட்கள் அங்கே அவனிருக்க மாறி மாறிப் பார்த்துக்கொண்டனர்.. நிசாந்தனும்  ஆக்ஸிடென்ட்டை பத்தி விசாரித்தவன்… தனது விசாரனைத் தொடங்கிருந்தான்.

மயூரனை சோதித்த மருத்துவர்., அவனை வீட்டிற்கு அழைத்து போகச் சொன்னார்..  கட்டுகளைப் பிரித்தவர்,  வலது கைக்கு மட்டும் பெல்ட்டை மாட்டிக்கொண்டான்.

வீட்டிற்கு வர, அவனைக் கவனித்துக்கொண்டது எல்லாம் விஷ்ணு தான்.. முத்து, அவளிடம் அந்தப் பொறுப்பைக் கொடுக்க தயங்கியவர் தானே பார்த்துக் கொள்வதாக கூற சகு, ” விஷ்ணு தான் மயூரனைக் கவனிக்கணும்… உன்புள்ளை தான், ஆனா  இப்ப அவளுக்குப் புருசன் அவள் தான் பார்க்கணும்.. ” என்றனர்.. 

இவளும் தயக்கமின்றி, முகச் சுளிப்பின்றி அவனைப் பார்த்துக்கொண்டாள்…  மூன்றுவேலை உணவை ஊட்டிவிடுவது, அவனுக்கு உடம்பைத் துடைத்து விடுவதென அவளே பார்ப்பாள்…

அன்றும் அதே போல் ஒத்தடம் கொடுக்க அவன் அருகினில் அமர்ந்தாள்… ” விஷ்ணு, உனக்குச் செய்ய தயக்கமாவோ, கஷ்டமாவோ, சங்கடமாவோ இருந்தால் செய்யாத, நீ அம்மாகிட்ட கொடுத்திடு! இங்க இருக்கிறவங்களை நான் சமாளிச்சுகிறேன்.. இதெல்லாம் நீ செய்ய வேணாம் விஷ்ணு… ”

அவளோ சிறு மூரலுடன்.. ” புருசனுக்குப் பொண்டாட்டி  தானே செய்யணும்… ” என்றதும் அதிர்ந்தவன்.. ” வாட்? ” 

” மயூ, வெளிய இருக்கிறவங்களுக்கு, நாம புருசன் பொண்டாட்டி… அதுனால நான் தான் உனக்குச் செய்யணும்.. நடிக்கிற தான் நடிக்கிறோம் பெர்ஃபெக்ட் நடிக்க வேணாம்மா? ”  என்றதும் அவன் சொன்னதை அவள் சொல்ல, சிரித்துவிட்டான்., ” மயூ, நீ என்னோட ப்ரண்ட், ஒரு ப்ரண்ட்காக இதைக்கூட செய்ய மாட்டேனா? எனக்கு தயக்கமோ சங்கடாமோ இல்லை… ” என்றவள், அவன் அணிந்திருந்த பணியனைக் கழட்டினாள்..  துணியினை நனைத்து பிழிந்தவள் அவனது நெஞ்சில் துடைத்துவிட்டாள்.. 

அவளது வாசனையும் மூச்சுக்காற்றும் அவனைக் கிறங்கடிக்க.அவளை அணைக்க துடித்த இடது கரத்தோடு போராட்டம் செய்துக்கொண்டிருந்தான்.. 

வேறு சட்டை அணிவிக்க முயன்றாள், அவளது கை அழுத்ததால் வலது கைவைக்க  வலியில் அவளது இடையைப் பற்றிக் கொண்டான்… 

சட்டென அவனை விட்டு விலகினாள், அவனுக்குள் ஏதோ போல் இருக்க, முகத்தை வேறு புறம் திருப்பியவன், ” சாரி விஷ்ணு, வலிச்சதும் தெரியாம… ” என முடிக்க முடியாமல் இழுக்க, ” பரவாயில்லை மயூ… ” என்றவள் வேலையை முழுதாய் முடித்தாள்.. 

அங்கிருந்து அவள் செல்ல, தன்னை மானசிகமாய் திட்டிக்கொண்டான்… பின் அவள், அவனுக்கு இரவு உணவு எடுத்துக்கொண்டு வந்தாள்.. அவனுக்கு ஊட்டிவிட அதனைப் பெற்றுக்கொண்டே புக்கொன்றைக் கையில் வைத்து படித்தான்.

” மயூ, நான் உன் கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா? ” எனவும். ” ம்ம்… கேளு விஷ்ணு  ” என்றான்.. 

“ஏன் மயூ என்கிட்ட பொய் சொன்ன? வருண் உன்னோட ப்ரண்டு தான் ஏன் என்கிட்ட இருந்து மறைச்ச? இறந்து போன உன்  ப்ரண்ட்  வருண் தானா? ” என்றதும் உள்ளே சென்ற உணவை முழுங்க முடியாமல் வெளியே துப்பியவன் விஷ்ணுவைக் காண கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தாள்… 

கொள்ளை தொடரும்….

மக்களே

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!