பூவை வண்டு கொள்ளையாடித்தால்

கொள்ளை 13

‘ பொசு பொசு வென சூடான  மூச்சுக்காற்று அவளிடமிருந்து வெளியே வர்ற, நெஞ்சம் ஏற இறங்க, இடையில் கைவைத்தவாறு அவனை முறைத்துக்கொண்டிருந்தாள் விஷ்ணு,…

” இப்ப என்ன சொல்லிட்டேன்னு காளி அவதாரம் எடுக்கிற நீ? ” அவளின் நிலையைக் கண்டு அடக்கிய சிரிப்போடு கேட்டு நின்றான் மயூரன்…

” என்னைக் கட்டிப் பிடிச்சதுக்கே, உன் கையை உடைச்சுப்போட்டுருக்கணும் பண்ணாம விட்டேன்ல, அதான் நீ இன்னும் ஒரு படி மேல போய் மாமான்னு கூப்பிட சொல்லுற! இங்கப் பாரு, நான் மறுபடியும் உனக்கு  நியாபகம் படுத்திறேன். நான் இங்க நடிக்கத்தான் வந்திருக்கேன்… உன் கூட குடும்பம் நடத்த இல்ல. உன் லீமிட் ல தான்  நீ இருக்கணும்… அதை மீறனும் நினைச்ச, இந்த விஷ்ணுவோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியது வரும் மயூரன்… ” என்றவள் மிரட்டும் தோணிக் கூட அவனுக்கு அழகாகத் தான் இருந்தது. அதை ரசித்தவனுக்குக் கோபம் சிறிதுக்கூட எட்டிப்பார்க்கவே இல்லை.. அவளை வம்பிழுக்கவே மனம் துடித்தது..

” அந்த இன்னொரு முகமாவது நல்லா இருக்குமா? விஷ்ணு… இல்லை இந்த மூஞ்சிப்போல  தான் இருக்குமா? ” என மேலும் அவளை வம்பிழுக்க, ” ஏன் ஏன் இந்த மூஞ்சுக்கு என்ன? நல்லத்தானே இருக்கு. எங்க ஊருல நான் தான் பேரழகி  தெரியுமா? மிஸ் வாடிப்பட்டி பெயரெல்லாம் வாங்கிருக்கேன்… எங்க வீட்டுல நான் தான் கொஞ்சம் கலரான புள்ள… ” 

” ஆங்… எங்க ஊருல பார்த்தேல, இதெல்லாம் ஒரு கலரா? நல்ல வெள்ளையா வெண்ணெய்யைப் போல, சும்மா பன்னு கன்னத்தோட ஸ்டாராபேரி லிப்ஸ்ன்னு செம்ம அழகா இருக்காளுங்க… அந்தக் கலருக்கு ஈடாகுவீயா நீ? ” என தன் ஊர்பெண்களைப் பெருமை பேசினான்

சற்றுப் பொறாமை, அவளுக்குள் தலைத்தூக்க, தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்தாள். நம்மூரை ஒப்பிடும் போது அவள் வெள்ளையென்றாலும் மும்பைப் பெண்களோடு ஒப்பிட்டால் மாநிறம் தான் அவள்… 

” என்ன ஒத்துக்கிறீயா? நீ அவ்வளவு அழகெல்லாம் இல்ல.. உனக்கு அவ்வளவு சீன் இல்லம்மா ” என்றான்…

அவனை முறைத்தவள், ” ஆமா அழகு இல்லைத்தான். இப்ப என்னாங்கற? இங்க இருக்கிற பிள்ளைகளுக்கெல்லாம் இரத்தமே இல்லாம வெளுத்து போய் கிடைக்கிறனால தான் வெள்ளவெள்ளென்னு இருக்குதுங்க.. நாங்களெல்லாம் கறுப்பா இருந்தாலும் கலையானவங்க… வியாதி எல்லாம் எங்களுக்கு இல்ல. ” என்றவள் சிலாகித்துக்கொள்ள…

” உன்னால இங்க இருக்க குளிரை சமாளிக்க முடியுதா மிஸ் விஷ்ணு? போர்வையும் போர்த்தியும் ஏ.சியும் போடாமலே இப்படி நடுங்கற,  ஏ சியைப் போட்டா… உறைஞ்சு போய்டுவ. ஐஸ் பொம்மைன்னு கபி உன்னை விளையாட எடுத்துட்டு போயிருவான்… ” என்றவன் அவளை நக்கல் பண்ண,

” இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? ”  என சந்தேகமாகக் கேட்க. 

” உன் பல்லு தான் தினமும் தாளம் போடுதே.. பாவமே நானும் உனக்கு உதவிச் செய்யலாம் நினைப்பேன்.. ஆனா, நீ கட்டிபிடிச்சதுக்கே கத்துறீயே! ”  என்றவன் கூற்றுப் புலப்படாமலிருக்க, ” என்ன உதவி அது? ” 

” அதுவா? உன்னை அப்படியே கட்டி அணைச்சு,  என்னோடு உடல் சூட்டை உனக்குத் தரலாம் நினைச்சேன்… ” என்றதும் தான் தாமதம் அருகில்  எதையோ தேட..

” ஹேய்! அப்படி நினைச்சேன் தான் சொன்னேன். அப்படி பண்ணலையே!  அதுக்காக அடிக்கப் பொருளை எல்லாம் தேடக் கூடாதுமா,.. ” என்றான் அவளிடமிருந்து விலகி நின்று..

” நீ நடந்துகிறது சரியே இல்ல, கட்டிபிடிக்கிற! மாமான்னு கூப்பிட சொல்லுற! கட்டிபிடிச்சு தூங்கணும் நினைச்சேன் சொல்லுற.. என்னைச் சொல்லிட்டு நீதான் தப்பான எண்ணத்தை உள்ள வச்சிருக்க…  இன்னொரு வாட்டி இப்படிப் பேசிட்டு வந்த அப்புறம் நான் மனுசியாவே இருக்க மாட்டேன்.. ” 

” என்ன என்ன தப்பான எண்ணத்தை உள்ள வச்சிருக்கேன்.. கட்டிபிடிச்சேன் தான், என்ன உன்னை ரேப் பண்ற எண்ணத்திலையா கட்டிபிடிச்சேன்.. ஏதோ கொஞ்சம் எமோசனல் ஆயிட்டேன்.  உன்னைப் ப்ரண்டா  நினைச்சு தான் கட்டிப்பிடிச்சேன்..

நீ என்னை அண்ணனா நினைக்கிறேன் சொன்ன, அதான் உனக்கு நான் அண்ண இல்ல, எங்க அம்மா உனக்கு அத்தைன்னா. நான் உனக்கு மாமா முறைன்னு சொன்னேன். ஆமா ஷாலு அப்படித் தான் என்னை கூப்பிடுவா, அதான் அதே போல நீயும் கூப்பிடுன்னு சொன்னேன். அதுக்கு உன்னைப் போல என்னையும் நினைச்சீயா? பேட் இமாஜினர்.

அவனை முறைத்தவள், ‘ என்ன சொன்னாலும் தவள வாயனுக்கு நம்ம மேல பயம் வர்ற மாட்டிகிதே! இன்னும் பயிற்சி எடுக்கணுமோ? ‘ என அவள் யோசிக்க,

” நீ அந்த அளவுக்கு டெர்ரர் பீஸ் எல்லாம் இல்ல விஷ்ணு.. நீ பக்கா காமெடி பீஸ்… சோ , அதை டரை பண்றேன் காமெடி பண்ணாத, என் மாமன் மகளே! போய் படுத்து தூங்கு! ” என்றவன் சோபாவில் படுக்க, அவனை முறைத்து விடு மெத்தையில் படுத்தாள்.

இருவரது விழிகளிலும் உறக்கம் தழுவ சுகமான இரவானது.

மறுநாளும்  காலையில் 

கண்ணாமூச்சி ஆட்டத்தை அவள் தொடங்க அவனோ சிரித்துக்கொண்டே ஏற்றான்… அலுவலகத்துக்குச் செல்லத் தயாராகி வந்தவன் சாப்பிட அமர, முத்துவை வைத்தே விஷ்ணுவை அழைத்தான்..

 முத்து, ” விஷ்ணு, உன் புருசன் ஆபீஸ் போகணுமா, வந்து பரிமாறுமா. ” என்றவர் அவளை அழைத்து விட்டு உள்ளே செல்ல, அவன் டைனீங் டேபிளில் சாப்பிடாமல் அமர்ந்திருந்தான்.

கடுப்பாகி வந்தவள், “ஏன் சாருக்கு கையில்லையோ! போட்டு சாப்பிட்டு கிளம்ப வேண்டியது தானே! நானே தான் வரணுமா? ”  எனக் கடுக்கத்தவளை  உதட்டின் சிரிப்போடு ரசித்தவன், ” புருசன் சாப்பிட அமர்ந்தால் பொண்டாட்டி வந்து  பரிமாறனும் தெரியாதா விஷ்ணு உனக்கு? ” என அமர்த்தலாகக் கேட்க,

” ஏன் தெரியாது நல்லவே தெரியும், ஆனா, எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை மிஸ்டர் மயூரன்… இன்னொரு வாட்டி என் கிட்ட நீ இந்த மாதிரி பண்ணிட்டு திரிஞ்ச, அப்புறம் உன் உதவி வேணான்னு போயிட்டேன் இருப்பேன்” என்றவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவள் அவனுக்குப் பரிமாற, அவளுக்குப் பயந்தவன் போல அமைதியாக உண்ண ஆரம்பித்தான்..

”  விஷ்ணு, உள்ள குருமாவும் இருக்கு, அதையும் கொண்டு வந்து கொடுமா.. ” என்று கூறிவிட்டு முத்து செல்ல, அவளும் சமையலறைக்குள் சென்று, தனியாக சின்ன பைவுலில் குருமாவை ஊற்றினாள். அதையே பார்த்துக்கொண்டிருந்தவள்,  உப்பைக் கொட்டிக் கலக்கிவிட்டு எதுவும் நடக்காதது போலேகொண்டு வந்தாள்.

மயூரன்

சாப்பிட்டுக் கொண்டிருக்க, குருமாவை அருகில் வைத்தாள்.. ” இதை யாரு ஊத்திறது நானா? ஊத்தும்மா ! ” 

‘ சாவுடா மவனே! ‘ என எண்ணிக்கொண்டே ஊற்றினாள்… அவன் முதல் வாய் வைக்க, முகம் போன போக்கைக் கண்டு சிரித்தே விட்டாள்..

‘ சண்டாளி! உப்ப அள்ளிப் போட்டு பழிவாங்கிட்டாளே! டேய் மயூரன், உனக்கு தேவைத்தான்டா வாண்ட்டட் வாயைக் கொடுத்தேல… அனுபவி ‘  என்று தனக்குள்ளே கூறிக்கொண்டவன். அவளைக் காண, ” என் கிட்ட வம்பு வச்சுக்காதா? விஷ்ணு ரொம்ப மோசமானவ….. ” என்று கூறி விட்டுச் செலபவளை இழுத்து மடியில் அமர்த்தியவன். ஒருவாய் எடுத்து திமிறியவளின் வாயில்  திணிக்க, உப்புக் கரித்து காது வரைக்கூசியது.. அவனது இச்செயலைக் கண்டு வாயைப்பிளந்தது அவன் மடியில் அமர்ந்திருந்தாள்.

” மிஷ் விஷ்ணு, நீ பண்ற இந்த பிச்ஸ்கோத்து வேலைக்கெல்லாம் நான் பயப்பிட மாட்டேன்.. அப்புறம் நீ உண்மையைச் சொல்லணும் நினைச்சாக்கூட எனக்குக் கவலையில்ல தாராளமாக சொல்லிக்கோ.. பட் மிரட்டுறேன்னு முன்ன வந்து காமெடி பண்ணிட்டு இருக்காதா பேபி? ” என்றவன் அவள், எழுந்துக்கொள்ள வழிவிட்டான், அவன் மடியில் அமர்ந்திருந்தவள் சட்டேன எழுந்தாள்.. 

 

” வரேன் பேபி., ” என்றவளைக் கடுப்பாகி விட்டுச்சென்றான்.

அவனை முறைத்துவிட்டுத் திரும்ப  அங்கே  முத்து, வேதா, சகு, அவர்களின் ஆட்டுழியங்களை கண்டு நமட்டுச் சிரிப்புடன் நகர்ந்தனர். அதைக் கண்டவளோ தலையில் அடித்துக்கொண்டு மாடியெறிவிட்டாள்.

அதன் பின் ரிசப்சனுக்காகவும் கல்யாண நாள் கொண்டாடத்திற்கான ஏற்பாடுகளே அங்கு  நடந்துக்கொண்டிருந்தது. முத்து தன் மருமகளுக்காகப் பார்த்து பார்த்து ஆடையைத் தேர்வு செய்ய, அவளோ அவருக்குப் பார்த்து பார்த்து எடுத்தாள்.. இருவாரின் அன்னியோன்னியதைக் கண்டு சிறு பொறாமைக் கொண்டனர் சகு, வேதா, நிவி..

ஆடைத்தேர்வு முடிந்தது…  விஷ்ணுவிற்காக நகையைத் தேர்வு செய்தனர்.. அதன்பின் தாலியையும் எடுக்க, அவளுக்குள் கிலிப் பரவியது… இவ்வாறே குடும்பம் மொத்தமும் கொண்டாட்டத்திற்காக எதிர்நோக்கி இருக்க, 

இங்கோ, மயூரன் அப்துலை அழைத்துக்குகொண்டு காமித்திபுராவிற்குச் செல்ல, அங்கே விசாரித்த இடத்தைத் தவிர்த்து வேற இடங்களிலும் அந்தப்பெண்ணின் புகைப்படத்தைக் காட்டிக்  கேட்டான்…

அதில் ஒரு திருநங்கை அவர்களைக் கடக்க, அவரை அழைத்து அந்தப் புகைப்படத்தைக் காட்டிக் கேட்டான்.

” அக்கா, இந்தப் பொண்ணை  உங்களுக்குத்  தெரியுமா? இந்தப் பொண்ணு இங்க எந்த ஏரியால இருக்கான்னு சொல்ல முடியுமா? ” என அப்துல் கேட்க. அவனைப் ப்ளாரேன்று அறைய, மயூரனும் ஸ்தம்பித்து நின்றான்.

” என்னடா வேணும் உங்களுக்கு? இந்தப்பொண்ண நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்களா? பொண்ணா பொறந்தது எங்க தப்பா, இப்படி வாழ விடாமா  பண்ணிறீங்களே! உங்களுக்கு என்னடா ********* அங்க நிறையா இருக்காளுங்க அங்கப் போங்கடா,. இந்தப் பொண்ண விட்டுங்க டா… ” என்று கடைசி வரியைச் சொல்லிக்கொண்டே சென்றார்.

” என்னடா அடிக்கிறாங்க? என்னான்னு கூட கேட்காம இப்படி சொல்லிட்டு போறாங்க… அம்மா! இன்னா அடி… ” என்றான் கன்னத்தைத் தடவிக் கொண்டு..

” பீல்.. பண்ணாதாடா! இந்தப் பொண்ணும் பாதிக்கப்பட்டுருக்கா போல, அதான் அவங்க,  ஆதங்கத்தைக் காட்டிட்டுப் போறாங்க.. இந்தப் பொண்ணு இந்த ஏரியால தான் இருக்கணும். இன்னொரு நாள்  வந்து பார்க்கலாம்.. எல்லாரும் நம்மலைத் தான் பார்க்கிறாங்க, வா போலாம்.. ” என்று  அங்கிருந்து அவனை அழைத்துக்கொண்டுச் சென்றான்.

அதன் பொழுதுகள் கழிந்தது…. மறுநாள் வீடே  வண்ண விளக்குகளோடு அலங்கரித்து இருந்தது. வீடு முழுதும் விருந்தனரே நிறைந்திருந்தனர்.

விழாவின் நாயகியை அலங்கரிக்கிறேன் என்று படுத்தியெடுத்துக் கொண்டிருந்தனர், அந்த வீட்டு இளசுகள். அதே போல தான் லட்சுமணனையும் படுத்தி எடுத்தனர்..

தாத்தா, தனது நண்பர்களுடன் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்.. சகுவும் தான் தன் வயது தோழிகளோடு அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்..

ஒரு ஓரமாக இவையெல்லாம் காணமுடியாமல்  கடுப்போடு நின்றார் தனா.. அவரிடம் வந்து பேசுவோரிடம் வெறும் கடனுக்கே பேசிச் சிரித்தார்.

” என்ன தனா, இங்க தனியா வந்து நிக்கிற?இது  உன் அண்ணன் திருமணநாள் விழா, இழுத்துப்போட்டு வேலை  செய்யாம

யாரோ போல நிக்கிற? ” என சேகர் வந்து கேட்க, 

” நான் இங்க வேலைக்காரி இல்லங்க. இங்க இருக்கிறவங்க எல்லாரும் என் பேச்சைக்கேட்டா,  இதெல்லாம் பண்ணாங்க. வர்ற வர்ற  எனக்கு எங்கங்க,  மதிப்பு தர்றாங்க. அதான் இருக்கிற மரியாதை இழக்க வேணான்னு ஓரமா நிக்கிறேன் ” என்றார் சலிப்போடு.

” இது தப்பு தனா, நீ மாறிட்ட. எப்போ அந்த விஷ்ணு பொண்ணு இந்த வீட்டுக்கு வந்தாளோ! அன்னையிலிருந்து நீ நீயாவே இல்லை.. நம்ம பொண்ணு போல தான் அந்தப்பொண்ணு.  சொல்லப்போனால்,  நீ செய்ய வேண்டியதை அவ செய்திருக்கா, அவளைப் பாராட்ட வேணாம், ஆனா, அதை ஏத்துக்கவாது செய்யலாமே! ”  என்றவரை தனா முறைக்க, ” உன்னை இப்படிப் பார்க்க, அதிர்ச்சியா இருக்கு தனா. நீயா இதுன்னு… ” என்றவர் வருத்தம் கொண்டு அவரைக் கடந்து சென்றார்.

அதன் விழா ஆரம்பிக்க, லட்சுமணனும் முத்துவும் சகு, வைகுண்டம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

அதன்பின்னே பெரிய கட்டிக்கையை அவர்கள் முன்னே வைக்க, இருவரும் சேர்ந்து வெட்டினார்கள்.    வைகுண்டமும் சகுவும் தன் மகனுக்கும் மருமளுக்கும் ஊட்டிவிட்டார். லட்சுமணன்,  தனது மூத்தமகனான ஆதித்தனுக்கே முதலில் ஊட்டிவிட்டார். அதன்பின் வரிசையாக வந்து அனைவரும் வாங்கிக்கொண்டனர்.

அங்கே ஆடலும் பாடலும் தொடங்க ஹிந்திப் பாடலே ஒலித்தது. விஷ்ணு, தமிழ்  பாடலை ஒலிக்க விடச்சொன்னாள், முதல் பாடலே,  நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பெயரு விளங்க இங்கு வாழணும்  என்று ஒலிக்க, எல்லாரும் கதைத்தட்டி ஆமோதித்தனர்

அங்கே தமிழ்ப் பாட்டுக்கு ஆடினார்கள். ஷாலு, விஷ்ணுவை ஆடச் சொல்ல, அவளோ பெரியவர்களைக் கண்டுப் பயந்தாள்… ஷாலு நிவிடம் கண்ணைக்காட்ட, நிவியும் ஷாலுவும் இருவரும் சேர்ந்து அவளைத் தள்ளி விட்டனர். அவளோ விழிக்க, சகு அவளை ஆடச் சொன்னார்.

கோப்ரா படுத்தில் வரும் திருமணப்பாட்டொன்றை ஒலிக்கச் செய்தனர்.ஸ்ரேயா கோசல் குரலில் ஏர் ஆர் இசையில்,..

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோஇன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோஓ ஹோஜல ஜல் ஜல ஜல் மணியேஅவனிடம் இடை இறங்கிடு மணியேதனியே தனியே தனியேஅவன் உலகினில் நான் மட்டும் தனியேஎன் கள்ள சிரிப்பின் நீளம் நீயேதும்பி தும்பி தும்பி துள்ளல்லோஓ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

சடுகுடு சடுகுடு டி டிடி டி டம டம் டம்சடுகுடு டி டி டி டி டம் டம்கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணாரபூந்தென்றலாய் வன்னூ….

என்றே ஆரம்பிக்க, அனைவரின் சம்மதமும் கிடைக்க, ஆட ஆரம்பித்தாள்.. மயூரன், அவளை ரசிக்கலானான்.

தன் வருணையெண்ணி, அவ்வரிகளைத் தனக்குள் பதித்துக்கொண்டாள்.

கண் தூங்கும் நேரத்தில்நீ நீங்க கூடாதுகாதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமேதொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமேஅதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்

அவள் அவனோடு ஆடுவதாய்,  அவன் தன்னோடு ஆடுவதாய் ஒரு பிம்பத்தை  தனதருகே தனக்குள் இருக்கும்  அவன் மேல கொண்ட காதல், பிரிவு , ஏக்கம் அனைத்தும் உருவாமாக நிற்க அவனோடு கற்பனை உலகில் ஆடினாள்..

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோஇன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ…

முத்து மயூரனைத் தள்ளிவிட, அவளோடு மோதி நின்றான். அவனையும் ஆடச் சொல்ல அவளோடு ஆடினான்.

காரணங்கள் ஏதும் தெரியாமல்நாட்கள் போக கண்டேனேஉன்னிடம் வந்தேன் அந்த நொடியேஓர் அர்த்தம் சேர்ந்ததேஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்.

இளைஞர் பட்டாளாம் இருவரையும்  நடுவில் விட்டு, அவர்களைச் சுற்றி ஆடினார்கள். அவள் தயங்கி நிற்க, தனக்குள் தேக்கி வைத்திருந்த முழுக் காதலை,  மனதிலும்  கண்களிலும்  நிறைத்து அவளைக் கண்டான் மயூரன்.

ஆண் அழகன் காலு நம்ம பக்கம்கண்ணு மட்டும் பேரழகி பக்கம் நம்ம சத்தம் காதில் விழ வில்லையேவெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்

 நீங்க தர வேணும் நூறு புள்ளஆண் அய்யோபோதவில்லை உங்க பொறுப்பில் நம்மஜனத்தொகை இருக்குது

அனைவரும் சேர்ந்து ஆடினார்கள்,

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோஹாஆஇன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோஓ ஹோ ஜல் ஜல் ஜல ஜல் மணியேஅவனிடம் இடை இறங்கிடு மணியேதனியே தனியே தனியேஅவன் உலகினில் நான் மட்டும் தனியேஎன் கள்ள சிரிப்பின் நீளம் நீயே

இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து ஆடினார்கள்.. அதன் பின் விருந்தினர்கள் சென்றுவிட, வீட்டினர்கள் மட்டும் மாறி மாறி உண்டு ஊட்டிவிட்டுக்கொண்டு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

 ” மதுவந்தியும் இருந்தா நல்லாருந்திருக்கும், வர்றாம போயிட்டா! ” என்று முத்து வருத்தம் கொள்ள, ” விடு, முத்து, அதான் அவ தம்பி ரிசப்சனுக்கு வாரேன் சொல்லிருக்காளே! ”  என்றார் வேதாரணி. 

குடும்பமாய் அங்கே சேர்ந்து உண்பதைக் கண்ட, விஷ்ணுவிற்கு நெஞ்சம் பிசைய, அங்கிருந்து  தன்னறைக்குச் சென்று விட்டாள் விஷ்ணு. அதைக்கண்டு மயூரன் அவளைத் தொடர்ந்தான்.

” விஷ்ணு ஏன் இங்க வந்துட்ட? என்னாச்சு உனக்கு? ” எனக் கேட்க. கண்கள் கலங்கி அவன் முன்னே நின்றாள். ” ஏன் இப்ப அழுகிற விஷ்ணு? தனா அத்தை எதுவும் சொன்னாங்களா ? எதுக்கு அழுகிற? ” என்று நெருங்கியவனைத் தன் கையை உயர்த்தித்  தடுத்து நிறுத்தினாள்.

” உனக்குக் கொஞ்சம் கூட பீலிங்ஸ் இல்லையா மயூரன்? அவங்கள பார்த்தீயா, எவ்வளவு சந்தோசம் இருக்காங்கன்னு. அந்தச் சந்தோசம் நம்மலால மறையப்போகுது நினைக்கும் போது எனக்குள்ள ஏதோ செய்து . நாம  உண்மையைச் சொல்லிறது தான் நல்லது மயூரன். அதுவும் ரிசப்சன் வைக்கிறது முன்னாடியே சொல்லிடலாம் ப்ளீஸ் ” என அவள் கெஞ்சவும்,

 ” புரியாம பேசாத விஷ்ணு, இப்ப உண்மையைச் சொன்னா மட்டும், அவங்க சந்தோசம் போகாதா? ” 

” போகும் தான். ஆனா  ரிசப்சன் வைச்சதுக்கு அப்புறமா உண்மை தெரிஞ்சா,  அவங்க சந்தோசத்தோடு இந்தக் குடும்பத்தோட மானமும் போயிடும் மயூரன். என்னால அதைத் தாங்கிக்க முடியாது. குடும்பம் மானம் போனாலும் பரவாயில்லை என் வீட்டைவிட்டு வந்தவ தான் நான் இல்லைன்னு சொல்லல.  என் வீட்டுல கூட இவ்வளவு பாசத்தை யாரும் எனக்கு காமிச்சது இல்ல, அதுனால எனக்கு என் வாழ்க்கை தான் பெருசா தெரிஞ்சது.  ஆனா,  இப்ப என் வாழ்க்கை, எனக்குப் பெரிசா தெரியல, இவங்க அன்பு என்னை மாத்துது . ப்ளீஸ் மயூரன், அவங்க கிட்ட உண்மையைச் சொல்லிடலாம்.. நீ எனக்கு உதவிப் பண்ணது போதும்.. நானே என் வருணைத் தேடிக்கிறேன்.. ” என்றவள் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, ” வருண் கிடைக்கலன்னா என்ன பண்ணுவ? ” எனவும்

” அது என் பிரச்சனை மயூரன். அவனை  எப்படியாவது கண்டுபிடிச்சிடுவேன். ”  என்றாள்..

” வருண் கிடைக்க மாட்டான் விஷ்ணு. அவன் உனக்குக் கிடைக்கவே மாட்டான்.. ” என்றதும், கோபத்தில் அவனது சட்டையைப் பிடித்தாள்.

கொள்ளை தொடரும்…