பெண்ணியம் பேசாதடி – 07

பெண்ணியம் பேசாதடி – 7

 

எழுத்தாளன் நியாயம் கேக்கிறேன்,

என் காதலுக்கு என்ன வழி?

என் காத்திருப்புக்கு என்ன வழி?

என் தேடலுக்கு என்ன வழி?

விளக்கம் சொல்லி விலகி செல்ல பார்த்தால்,

இரக்கம் கொள்ளாமல் இறுக்கி கொள்வேன்,

வசதி எப்படி?

 

நியாயம் கேட்கும் எழுத்தாளரே,

ஒரே வரியில் என் பதில்,

ரசிகையின் உறவு ரசனையோடு மட்டுமே ……………..

 

அடுத்த நாள் விடிந்தும் இன்னும் வாமணன் வீட்டுக்கு வரவில்லை வளவனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது உடனே ரமேஷுக்கு அடிக்க.போன் அலறியதில் அடித்துப் பிடித்து எழுந்தான் “என்னடா காலையிலே போன் பண்ணியிருக்க”.

“அப்பா இன்னும் வரல ரமேஷ் பயமா இருக்கு” அவன் சொன்னதும் தூக்கம் தூரம் போக. “டேய் உங்க தாத்தா வீட்டுக்குப் போன் போட்டு கேளு, நான் ஓர் அரை மணி நேரத்துல கிளம்பி வரேன்”

 

“ சரிடா சீக்கரம் வாடா பயமா இருக்கு”.

 

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது ரொம்பப் பயப்புடாத உங்க அப்பா உலகத்தையே வித்துடுவாரு”.

 

“டேய் ஜோக்கா? வாடா கிளம்பி நேரம் காலம் தெரியாம” போனில் வளவன் கத்த.

 

“கத்தி தொலையாதடா வரேன்,பயமா இருக்காம் பயமா அந்த மகராசன் தேன்நிலவு போயிருப்பாரு” முனகி கொண்டே போனை வைத்தான்,வாமணனை சரியாகக் கணித்து வைத்திருந்தான் .

 

நண்பனிடம் பேசிய கையோட தாத்தாவிற்கு அழைக்க,அவர் சொன்ன பதிலில் இன்னும் சோர்ந்து போனான் வளவன்.

 

இவர்கள் அல்லாட அங்கு நல்ல உறக்கத்தில் இரு ஜீவன்கள் பல வருடங்கள் கழித்து ஆழ்ந்த உறக்கத்தில் பேரிளம் பெண் என்றால், நிம்மதியான உறக்கத்தில் எழுத்தாளர்.இருவரும் விழிப்பதற்காக விதியே சற்றுப் பொறுமை காத்தது தான் விந்தை.

 

*********************************************

அனைவரையும் தவிக்க விட்டு வாமணனும் பேரிளம் பெண்ணும் ஒருவழியாக மதிய உணவுக்கு வந்து சேர்ந்தனர்.கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வளவனும் ,ரமேஷும் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர்.

 

ரமேஷுக்கு விடயம் தெரிந்தாலும் நேரில் வந்து இறங்கிய இருவரையும் பார்க்கும் பொது நெஞ்சு வலிக்கத் தான் செய்தது. வளவனுக்கோ பேரிளம் பெண்ணைப் பார்த்ததும் பயம் போய்க் கோபம் வந்து விட்டது .அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

 

அவனிடம் வந்த பேரிளம் பெண் “டேய் எரும வழிய மறைச்சுக்கிட்டு நின்னா நான் எப்புடி உள்ளுற போறது” அவனைப் பேசியது மட்டும் இல்லாமல் இடித்துக் கொண்டு உள்ளே சென்றாள். ஆம் நீங்கள் எண்ணுவது சரிதான் பேரிளம் பெண் வேறு யாருமில்லை நம் காஞ்சனை தான்.

 

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வாய் அடிக்கும் கஞ்சனையை வெட்டவா குத்துவா என்பது போல்  பார்த்து வைத்தான் ரமேஷ்.அவன் பார்வையை எதிர் கொண்டவள் “நீ என்னடா ஆடு திருடுன பைய மாதிரி முழுச்சு கிட்டு இருக்க”

 

சொன்னது தான் தாமதம் பொங்கிவிட்டான் நமது ரமேஷ் “யாரு நான் திருடனா….. நீ தான் சித்தி பிராடு,பார்த்தாலும் பார்த்தேன் உங்க குடும்ப மாதிரி பார்க்கலடா சாமி”

 

“ஏன்டா எங்க குடும்பத்துக்கு என்ன குறைச்சல்”.

 

“ஒரு குறையும் இல்லையே எல்லாமே நிறைஞ்சு கடக்கு தாயி” 

 

“அது……. “என்றவளை கை பற்றி இழுத்துச் சென்றான் வளவன் “இன்னும் உன் வாய் அடங்குதா” என்றவனைப் பார்த்து “துரோகி கைய விடுடா”.

 

“நீ தான் துரோகி நான் இல்ல,ஒழுங்கா வா”.

 

இருவரும் வழக்காடுவதை ஆச்சிரியமாகப் பார்த்தார் வாமணன்.அவருக்கு இவர்களது உறவு தெரியாது அல்லவா,அவர் மாமனார் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தால் தெரிந்திருக்கும்.மது இருந்த போதே அவர் தங்கியது இல்லை,அவள் இறந்த பின்பு இன்னும் உறவு தூரம் தான்.

 

இவர்களது உறவை பார்த்து வாய் பிளந்து நிற்கும் தந்தையிடம் சென்றவன் அவரை இறுக்க அனைத்துக் கொண்டான் “ஐ மிஸ் யூ அப்பா”.அவரும் அவனை அனைத்துக் கொண்டார்.காஞ்சனை முகத்தில் சிறு புன்னகை என்றால்,ரமேஷ் முகத்தில் பெரும் எரிச்சல்.

 

பின்பு அனைவரும் கூடத்தில் அமர சங்கடமான அமைதி அங்கு.மூவரையும் மாறி மாறி பார்த்தவாறே ரமேஷ் அமர்ந்த இருந்தான்.முதலில் துவங்கியது வளவன் தான் “ஏன் சித்தி இப்புடி பண்ணுன”

 

“எப்பூடி…….. எதிர் கேள்வி கேட்டவளை”. “இங்க பாரு நான் கோபமா பேசிகிட்டு இருக்கேன் எதுக்கு எங்க அப்பாவ ஏமாத்துன”

 

“அடிங்க ….. யாருடா ஏமாத்துனா உங்க அப்பன” என்றவளை கன்னத்தில் கை ஊன்றி ஸ்வாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார் பேரிளம் பெணின் எழுத்தாளர்.

 

“பின்ன நீ பண்ண வேலைக்குப் பெரு என்ன?இத்தனை வருஷம் வீட்டுல இருந்து கிட்டு யாருக்கும் தெரியாம அப்பாவ லவ் பண்ணி இருக்க” வளவன் சாட்டிய குற்ற சாட்டை அதுவும் காதலிப்பதாகச் சொன்னதை எண்ணி வமணனுக்கே சிரிப்பு தான்.

 

வளவன் சொன்னதைக் கேட்டு நெஞ்சில் கை வைத்த காஞ்சனை “அடேய்! கிறுக்கா யாருடா சொன்னது நான் லவ் பண்ணுனேனு”.

 

அவளது கேள்விக்கு இரு வரேன் என்றவன் உள்ளே சென்று கை கொள்ளாக் காகிதங்களையும், டைரியும் எடுத்து அவள் பக்கம் இருந்த டீபாய் மேல் போட்டான் .அதில் முழுக்க வாமணனின் கவிதைகள்,காதல் கிறுக்கல்கள் என்ற சிறு புத்தகம்,அவரது கையப்பம் இட்ட துண்டு காகிதங்கள் என்று வாமணனே காகிதம் முழுமையுமே நிரம்பி இருந்தார்.

 

“இதுக்குப் பெரு என்ன எல்லாம் உன் ரூம்ல இருந்து தான் எடுத்தேன்,இனியும் பொய் சொல்லி தப்பிக்காத பிராடு. உன் அக்காக எங்க அப்பாவ விட்டு கொடுத்துட்டியா? இல்ல, எங்க அம்மா லவ் பண்ணங்களா அப்பாவ, அதுனால தாத்தா உங்கிட்ட விட்டுக் கொடுக்கச் சொன்னார்களா?,லவ் சொல்ல போற நேரத்துல அப்பாகும் அம்மாக்கும் கல்யாணம் பேசிட்டாங்களா அதான் உன் லவ் சொல்லலையா?”

 

இப்புடி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று உண்மை தெரிந்த நாள் முதலாகக் குழப்பிக் கொண்டு இருந்த அத்தனைக் கேள்விகளையும் கேட்டு வைத்தான் வளவன்.அவன் கேள்வியில் காண்டன காஞ்சனை,

 

“டேய் மரியாதையா ஓடி போய்ட்டு யாருடா சொன்னா உனக்கு நான் உங்க அப்பன லவ் பண்ணுனேன்” என்றவள் வாமணன் புறம் திரும்பி “நீங்க தான் அவன்கிட்ட சொன்னிங்களா” என்று கேட்டு வைக்க. அதுவரை சிறு சிரிப்புடன் அவர்கள் வழக்காடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்,காஞ்சனை திரும்பியதும் முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு,தன்னை நோக்கி திரும்பிய கஞ்சனையைக் கடுமையாக முறைத்தார்.

 

அவர் பார்வை அள்ளுவிட நல்ல பிள்ளையாகக் காஞ்சனை “இல்ல எழுத்தாளரே சின்னப் பையன் அவன் கிட்ட யாரு இது மாதிரி கிறுக்குத் தனமா சொல்லி வச்சான்னு கேட்டேன் வேற ஒன்னுமில்லை” அநியாயத்துக்குக் குரல் குழைந்து வந்தது.

 

“ஓ….. என்ன காதலுக்குறது உனக்குக் கிறுக்கு தானாமா எனக்குத் தேவதாண்டி இது” என்றவரை கலவரமாகப் பார்த்த காஞ்சனை ‘ஐயோ இந்த மனுஷன் கோபமாகி பசங்க முன்னாடி எசகு பேஸாகப் பேசி வச்சுட போறாரு’ மனதுக்குள் அலறியவள் தப்பிக்கும் பொருட்டு.

 

சடாரென வளவனிடன் திரும்பினாள் “உனக்கு என்ன இப்போ தெரியணும் நான் உங்க அப்பாவ லவ் பண்ணுனேனா? இல்லையா? அதானே”.

 

“நான் மதுவோட புருஷனையும் வளவனோட அப்பாவையும் விரும்பல,நான் விரும்புவது என்னோட  எழுத்தாளரை அவரோடு எழுத்த,இன்னும் சொல்ல போனா என் காதல் கவியோட மட்டும் கவிஞரோட இல்ல”.தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசினாள் காஞ்சனை.

 

“இங்க பாரு வளவன் எனக்குச் சின்ன வயசுல இருந்தே தமிழ் கவிதைகள்,கதைகள் படிக்கப் புடிக்கும்,அப்போதான் வாமணன் எழுத்தாளர் கவிதை அறிமுகம்.கொஞ்ச நாளாகி தான் தெரியும் வாமணன் மாமா தான் அதை எழுதுறாருனு,அவர் கவிதை மேல கிறுக்கு கூடி போன தருணம் தான் அவருக்கும் அக்காக்கும் கல்யாணம் பேசுனாங்க.அப்போ நான் இன்னும் சின்னப் பொண்ணு,

 

அதுக்கு முன்னாடி அவரு சொந்தம்,சின்ன வயசுல இருந்து மாமவ தெரியும் சகஜமா  பேசுவேன்.அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் சுத்தமா பேசுறத நிறுத்திட்டேன்,அக்காக்கும் இது தெரியும் எப்போப்பாரு ஓட்டிகிட்டே இருப்பா.எனக்கு கோபமா வரும் அதான் சுத்தமா ஒதுங்கிட்டேன்”.

 

“போதுமாடா நீ நெனைக்குற மாதிரி ஒண்ணுமில்லை,இப்பவும் சொல்லுறேன் எழுத்தாளர் மேல பைத்தியமா காதல் வச்சு இருக்கேன் ஒரு ரசிகையா.அக்கா புருஷன் மேல இல்ல”.

 

கஞ்சனையின் தெளிவான பேச்சில் அயர்ந்து தான் போனார்கள்,வளவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை பாவமாக வாமணனை பார்க்க,அவரோ கண்களை மூடி திறந்தார்.

 

“என்னடா நான் இங்க பேசிகிட்டு இருக்கேன், கண்ணு அங்க போகுது” மகனும்,தந்தையும் கண்களால் பேசிக்கொண்டதை பார்த்து விட்டாள் போலும் ராட்சசி.

 

“சரி நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன் ,இப்போ நான் கேட்குறேன். நானா இருக்கப் போய் உங்க அப்பா என்ன..ய்…யா ஈசியா தூக்கிட்டார் ,இதே வேற யாராவது இருந்தா  என்ன பண்ணி இருப்பீங்க,அது மட்டுமில்லாம உங்க அப்பாக்குப் பெண் ரசிகைகள் ஜாஸ்தி எல்லாரையும் உங்க அப்பாக்கு புடுச்சா?

 

அவள் கேட்பதும் சரிதானே தலையைக் குனிந்து கொண்டான் வளவன்,ரமேஷுக்கும் கஞ்சனையின் கேள்வி  நியாயமாகத் தான் பட்டது.

இன்னும் தெரிந்து கொள்ள நிறைய ரகசியம் இருந்தாலும் வளவனுக்குக் கஞ்சனையை வருந்த செய்து விட்டமோ என்ற கவலை, அதனால் அவளிடம் சென்று அமர்ந்து அவளது கை பிடித்துக் கண்கள் கலங்கி நிகழ்வாகச் “சாரி சித்தி” என்று கேட்க.

 

கன்னி தாய்க்குச் சுரந்தது அமுதம்,தாய்மை பெண்ணுக்கே உரிய கர்வம் அல்லவா பெற்றால்  தான் பிள்ளையா?அவனது நெற்றியில் முத்தம் வைத்து நெற்றி முட்டி அழகாகச் சிரித்துக் கண் மூடி கொண்டாள்.தனது காதல் புத்தகத்தில் முன்னுரையாக அக்காட்சியைப் பதிவு செய்து கொண்டார் வாமணன்.சொல்ல முடியாத சுகம்.

 

கண்கள் மூடிய வாக்கிலே “இப்புடி எல்லாம் எமோஷனலா பேசி என்ன கார்னெர் பண்ண பக்குறியா” பழைய கஞ்சனையாக மாறி வளவனிடம் வம்பு செய்யப் பார்க்க அவனோ “இனி என்ன வம்பு இழுத்த எங்க அப்பாகிட்ட சொல்லுவேன் தைரியமிருந்த எங்க அப்பாகிட்ட பேசிக்கோ”.

 

“பார்ரா உங்க அப்பாக்கு நான் பயப்புடுவேன்னு யாருடா உனக்குத் தவறான தகவல் கொடுத்தா” என்றவள் வாமணன் புறம் திரும்பி “என்ன வாமணன் சொல்லுறான்…. உங்க பையன்கிட்ட என்ன பத்தி கொஞ்சம் சொல்லி வைங்க” என்றவள் எழுந்து கொண்டாள் தனது வீட்டுக்கு செல்ல.

 

எங்க என்பது போலப் பார்த்தவர்களுக்கு “அப்பாவை பார்க்க வேணாமா என்ன கொண்டு போய் வீட்டுக்கு விடு”

 

கண்களால் மகனையும்,ரமேஷியும் அப்புற படுத்தியவர் அவர்கள் சென்றதை உறுதி படுத்திக் கொண்டு கஞ்சனையை நெருங்கினர்.அவர் கிட்ட செல்ல பெண் எட்ட செல்லவென அழகான காதல் நாடகம் அங்கு..

 

“எழுத்தாளரே! என்னது பசங்க முன்னாடி நான் வீட்டுக்கு போகணும்”.

 

“இது தான் உன்வீடு”

 

“அதெல்லாம் சரி வராது வாமணன்”

 

“வரும் நேத்து அதுக்குத் தானே படிவம் பூர்த்திச் செய்தோம்”.

 

அவரது நக்கலில் கோபம் கொண்டவள் “இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்”

 

“என்னடி சரியில்ல என் மகன் கிட்ட கேட்ட கேள்விக்கு, அவன் அப்பன் பதில் சொல்லுறேன் கேட்டுட்டு போ” அவரது பேச்சில் அரண்டவள் தப்பித்துச் செல்ல பார்க்க தோளில் தூக்கி கொண்டார் பேரிளம் பெண்ணை.

 

டேய் வாமண்……….ணா……. மரியாதை காற்றில் பறக்க அங்கே…………உஷ்…………………………

 

தவறு இளைத்தவன் தான் இல்லை என்பதற்கில்லை.தவறு செய்தவனை விட,தவறு செய்யத் தூண்டியவருக்குத் தான் தண்டனை அதிகமாம்,அந்த வகையில் தண்டனை யாருக்கு?

 

(எழுத்தாளரின் குமுறல் இந்தாங்க ரீடேர்ஸ்@ shasha @saroja  உங்களுக்கு மனசாட்சியே இல்லையா நானும் சஸ்பென்ஸா கதை எழுதலாம்னு நெனச்சுது ஒரு குத்தமாய்யா…. இரண்டவது எபிலே என் ரகசியம் புட்டுக்கிச்சு…………. நானும் ரவுடி தாணு நானும் எழுத்தாளருனு சுத்துனே……… போச்சே…………)