பெண்ணியம் பேசாதடி – 09

பெண்ணியம் பேசாதடி – 09

பெண்ணியம் பேசாதடி – 9

 

சொந்தமில்லை, பந்தமில்லை,

மலர் மாலை இல்லை, மணவறை இல்லை,

பொன்தாலி கொண்டு மட்டும் திருமணமாம்,

உட்டறார் தூற்ற, ஊர் ஏச,

உலகம் பலிக்க,இது என்ன வேலை எழுத்தாளரே?

 

இதோ உன் பாணியில் என் பதில் ரசிகையே!

நான்,நம் மகன்,காதல்,காமம்,ரசனை,எழுத்து,கவிதை,

மட்டுமே உன் உலகம் இதில் எங்கு இருந்து ஏச்சு, தூற்று,பலி……..

 

தனது கழுத்தில் தொங்கும் பொன்தாலியை வருடியவாறே எதிரில் இருக்கும் வளவனை முறைத்துக் கொண்டு இருந்தாள் காஞ்சனை,அவனும் இந்த நிலைக்கு ஒரு காரணம் அல்லவா.

 

“என்ன லுக்கு,அப்பாகிட்ட சொல்லவா “

 

“என்னடா எதுக்கெடுத்தாலும் அப்பா அப்பனுட்டு, உங்க அப்பன் என்ன பெரிய ஆளா”

 

“புருஷன மரியாதை இல்லாம பேசக்கூடாது,உங்க அப்பா சொல்லித்தரலையா? என்ன மீசை உங்க பொண்ண இப்புடி வளர்த்து வச்சு இருக்கீங்க” தனது பக்கத்தில் உட்காந்து இவர்கள் பேச்சை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருக்கும் மூர்த்தியை வம்பு செய்தான் வளவன்.

 

“எங்க அப்பா வளர்ப்புக்கு என்ன குறைச்சல்,இப்புடியே பேசிக்கிட்டே இரு சித்தி கொடுமைன்னா என்னனு காட்டுறேன்”

 

அவள் எதோ ஜோக் சொல்லுவது போல உருண்டு பிரண்டு சிரித்தவன் “அந்த அளவுக்கு நீ ஓர்த்தில்ல  தெரியுமா”

 

“கொழுப்பாடா” அடிக்க வந்தவளின் கையைப் பற்றியவன் “கல்யாணம் ஆகி புகுந்த வீடு வந்து ஒரு மணி நேரம் ஆகல,அதுக்குள்ள அடிக்க வர ஹ்ம்ம்…… சரியில்லையே…” தாடையைத் தடவி யோசித்தவன் “கூடிய சீக்கரம் இதுக்கு ஒரு முடிவு எடுக்குறேன்” பெரிய மனிதனாகத் தோரணை காட்டி பேச தாங்க முடியவில்லை கஞ்சனைக்கு.

 

அடித்துத் துவைத்து விட்டாள் தூரத்தில் இருந்தே இவர்களது சண்டையைப் பார்த்த ரமேஷ் ‘இதுங்க திருந்தாதுங்க தனித்  தனியா இருக்கும் போதே சமாளிக்க முடியாது இப்போ ஒரே வீட்டுல, செத்தார் காதல் மன்னன் எங்க அந்த மனுஷனை மட்டும்  காணோம்” வாமனனை தேடியவரே உள்ளே வந்தான்.

 

மறந்தும் இவர்கள் இருவரையும் கண்டு கொள்ளவில்லை குதிரைக்குக் கடிவாளமிட்டது போல் நேராக வாமணனை தேடி அறை அறையாகச் சென்றான். எங்கே மனிதன் கண்ணில் சிக்கினால் தானே.

 

வீட்டில் இருப்பவர்களிடம் கேட்கலாம் என்றால் மனிதர்களாக இருந்தால் முறையான பதில் கிடைக்கும், அனைத்தும் தெய்வங்களாக அல்லவா இருக்கிறது.பெரும் யோசனைக்குப் பின் வளவனிடம் சென்று அமர்ந்தவன் “எங்க டா அப்பா” என்று கேட்டு வைக்க.

 

“கண்டுக்காம போன…….. எனக்குத் தெரியாது, அவுங்க வீட்டுக்காரம்மா இருக்காங்க பாரு அவுங்ககிட்ட கேளு” கோர்த்துவிட்டுருச்சு பயபுள்ள எண்ணியவன்.

 

அவளிடம் பார்வையை மட்டும் தான் திருப்பினான்  எதுவும் பேச கூட இல்லை பாவம் பிடித்துக் கொண்டாள் காஞ்சனை.

 

“ஏய் எங்கிட்ட சொல்லிட்டு போனாரா உங்க பாஸ்?இத்தனை நாள் எங்கிட்ட  தான் வந்து கேட்டியா?ஏன் போனில்ல அவருக்கு?” பாயாத குறையாகக் கேட்க,பொறுமை பறக்க எழுந்தவன்.

 

“இந்த வம்புக்கு தாண்ட உங்கிட்ட பேசாம போனேன்,உங்க இரண்டு போரையும் தெரிஞ்சும்  நான் பேசுவேனா”தலையில் அடித்துக் கொண்டவன் திரும்பியும் பார்க்காமல் வாயிலை நோக்கி கிட்டத்தட்ட ஓட வாய் விட்டு சிரித்தார் மூர்த்தி,காஞ்சனை, வளவன் இதழில் கூட அளவான புன்னகை.

 

                                           ******************************************

இரு தினங்களுக்கு முன்னாள்  வாமணனை கட்டி கொண்டு தன்னை மறந்து காதல் கொள்ள,அதனை சரியாக பற்றிக் கொண்டு திருமணத்தை நடத்தி முடித்து விட்டார் எழுத்தாளர்.

 

இறுதினகளுக்கு முன்……………

 

‘கல்யாணம் பண்ணிக்கலாமா காஞ்சனை’ முதல் முறையாக அவளை வெகு வருடம் சென்று பேர் சொல்லி அழைக்க மயக்கம் தெளிந்த காஞ்சனை அவரை முறைத்து விட்டு,

 

‘புரியாம அடம் பண்ணாதீங்க எழுத்தாளரே, நான் பக்கத்துல இருக்கப் போய்ச் சரி,என் இடத்துல வேறு யாராவது இருந்தா ?எனக்குத் தனியா குடும்பம் இருந்தா?’ புருவம் தூக்கி கேள்வி கணை தொடுக்க எரிச்சல் கொண்ட வாமணன்.

 

‘அந்த இருந்தா தான் இல்லையே? அப்புறம் என்ன தா.. தா… னு சரினு சொல்லுடி ஓணக்கம் பேசாத’

 

‘ப்ச்… தப்பு எழுத்தாளரே’

 

‘எது கல்யாணமா?’

 

‘இந்த வயசுக்கு மேல சஷ்டியர்த்த பூர்த்தித் தான் பண்ணனும்,மறுமணம் இல்ல’

 

‘கொழுப்பாடி உனக்கு இன்னும் அம்பது தொடல’

 

அதற்கும் பதில் பேசியவரை கொலை வெறியோடு பார்த்தவள் ‘யோவ் வாமணா நல்ல சொல்லிட போறேன்’ கை நீட்டி பேசியவள் கையை

முறுக்கி அருகில் இழுத்தவர், அவளது அதரங்களைப் பார்த்துக் கொண்டே ‘என்ன வாய்டி உனக்குச் சின்னதுல இருந்து பார்த்துருக்கேன், நீ இவுளோ பேசி பார்த்தது இல்லையே?

 

‘நீங்க என்ன பார்ததானே உங்க பொண்டாட்டிய மட்டும் தானே கண் தெரியும்’ மூணு முணுக்க அது சரியாக வாமணன் காதில் விழுந்து வைத்தது.

 

‘அப்போ பார்த்தா தப்புடி’

 

‘எப்போ பார்த்தாலும் தப்புதான்’

 

ப்ச்….. முதல இருந்தா? அடம் பண்ணாத நாளைக்கி பண்ணிக்கலாம் அசால்ட்டாகச் சொல்ல.

 

‘முடியாது என் சைடு கொஞ்சம் யோசுச்சு பாருங்க, நம்ம சொந்தமே போதும்,பேசியே கொள்ள,சொந்தமே இப்படின்னா மத்தவங்கெல்லாம் என்னால யாரையும் சமாளிக்க முடியாது, அதுவுமில்லாம நீங்களும் உங்க பையனும் கட்டுற கனவு கோட்டைக்கு நான் ஆள் இல்லை.

 

திருமணம் என்றாலே ஓடுபவளை,குழந்தை பெற்றுக் கொள்ளச் சொன்னாள் அவளும் என்னதான் செய்வாள்.இதில் உறுதியாக இருப்பது வளவன் தான்.என்ன விந்தையான உறவாட இது கற்பனை  கதைகளில்  பார்ப்பது போல்.

 

‘அதப்பத்தி எனக்கு கவலையில்ல’ பொறுப்பற்ற பதிலில் இன்னும் கோபம் வர அவரைத் தள்ளிவிட்டு சென்றாள் பேரிளம் பெண்.

 

‘ஏய் எங்கடி போற’ அவள் சற்றும் எதிர் பார்க்காத விபத்து அங்கே காஞ்சனை கை பிடிக்க  வந்தவர், அவள் திரும்ப இவர் கை பட்ட இடம் சர்ச்சைக்கு உரியது என்பதால் கோபம் வந்துவிட்டது  கஞ்சனைக்கு.

 

‘போடா பொறுக்கி’

 

‘ரைட்டு…. இருந்துட்டு போறேன்’ என்றவர் அடுத்து செய்கையால்…..முட்டி,மோதி,திட்டி,தேடி, கடித்து,கதறி,உருண்டு ஓடி எனத் திருமண ஒப்புதல் வாங்க இதோ இன்று எழுத்தாளரின் ரசிகை, காதல் மனைவியாக.

 

அதனை எண்ணியவள் ஒருவித பயத்துடன்  வாமணனின் வரவை எதிர் பார்த்திருந்தாள்.மனிதன் அடுத்து என்ன கோக்கு மாக்குத் தனம் செய்து தனது மானத்தைக் காற்றில் பறக்க விடுவாரோ என்ற அச்சம் வேறு.

 

வரட்டும் இன்று என்ன ஆனாலும் சரி  மனதில் இருக்கும் அனைத்தையும் மகனிடமும்,தகப்பனிடமும் பேசிவிட வேண்டும்.அவர்கள் செய்யும் கற்பனைக்கு அப்பர் பட்டது இந்தச் சமுதாயம் என்பதை எடுத்துரைக்க வேண்டும் என்ற உறுதியுடன் அவள்.

 

சற்று நேரம் ஓய்வு வெடுக்கலாம் என்று தங்களது அறைக்குச் செல்ல,இன்னும் சிறப்பு அங்கே.

 

எங்குச் சென்று முட்டி கொள்வது என்று தெரியவில்லை கஞ்சனைக்கு முதல் இரவு ஏற்பாடு “எந்தக் கூமுட்ட பண்ண வேல இது, மானத்தை வாங்குறானுக” கோபத்தில் மரியாதை மரணம் கொண்டது ஐயகோ……

 

மண உளைச்சலில் தலை வலி எடுக்கக் கோபத்தை அடக்கி கொண்டு கட்டிலில் படுத்துவிட்டாள். எத்தனை நேர தூக்கமோ? இரவு வாமணன் வந்து உணவுண்டு, அவளுக்கும் சேர்த்து எடுத்து வந்து, அவரும் படுத்து விட்டார்.இன்று அலைச்சல் சற்று அதிகம் மனிதருக்கு.

 

தூக்கம் தெளிந்தவள் பார்த்தது தனது பக்கத்தில் ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து,மறு கையைப் போனுக்குக் கொடுத்து,ஒய்யாரமாகக் காலை ஆட்டி கொண்டிருக்கும் வாமணனை தான் அதுவும் அவ்வப்போது வசீகரச் சிரிப்பு வேறு.

 

என்னத்த பார்த்து இந்த மனுஷன் இப்புடி பல்ல கட்டுறாரு எண்ணியவள் அவர் கருத்தில் படாது கள்ளத்தனமாக எட்டி பார்க்க அதில்….

 

‘என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா’ என்ற மெசேஜ் பார்த்து மெர்சல் ஆகிவிட்டாள்.

 

தனது பாரம் முழுக்க அவர் மீது தள்ளி அமுக்கி “பிராடு எங்க அக்கா போக,நான் போக இப்போ எவ அவ” என்று கட்டி உருள.

 

“ஏய் விடுடி” மூச்சுவாங்க அவளது பிடியை தளர்த்தி “அழகா பிறந்தது என் தப்பா” என்று வாய் வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் கேட்டு வைக்க,அடி தடி தான்.

 

கண்,காது,மூக்கு நெஞ்சு என்று கிடைக்கும் இடமெல்லாம் தாறு மாறாக விலாசி எடுத்தாள்.அவரை அடித்து விட்டு அவள் ஒரே அழுகை “நான் அப்பாகிட்ட போறேன், நீங்க வேணாம்,நீங்க தப்பு” சிறு பிள்ளை போல் ஏதேதோ சொல்லி அழுகை வளர்ந்த குழந்தை.

 

கள்ள சிரிப்பை உதட்டில் அதக்கி வாமணன் அவளை அணைக்கத் திமிறினாள் அவரது பேரிளம் பெண் “காமெடி பண்ணாதடி நீ வேற, ஜஸ்ட் இது ஒரு ப்ரோபோசல்”.

 

“உனக்கு தெரியுமே மலர் கொடி எனனோட ரசிகை உன்ன மாதிரியே,வளவன் நீனு  நெனச்சு அவுங்ககிட்ட பழகிட்டான்.எனக்கும் ஒரு சந்தேகம் அதான் நேருல வர சொல்லி பேசுனேன்,அவுங்க கிட்ட இருக்கப் பக்குவத்தைப் பார்த்து நீ இல்லனு புரிஞ்சுக்கிட்டேன்,இப்போ அவுங்களும் சிங்கள்,நமக்குக் கல்யாணம் ஆனது தெரியாதுல அதான் கேக்குறாங்க”

 

“கேட்டா கல்யாணம் ஆகிடுச்சு,சாரி பேசாதிங்கனு சொல்ல வேண்டியது தானே,அது என்ன அப்புடி சிரிப்பு”

 

“ஹே… இது என்ன வம்பு”

 

“சரி…. அது என்ன பக்குவம் ஜாஸ்தி அவளுக்கு”

 

“உண்மைத்தாண்டி நீ பேசும் பொது  சில நேரம் சின்னப் புள்ள மாதிரி பேசுவ அப்பவே கொஞ்சம் யோசுச்சேன்,இப்போதான் வளவன் கூடச் சரிக்கு சரி வம்பு பண்ணுறியே  அதுல முடிவே பண்ணிட்டேன் பக்குவம் பத்தாது உனக்கு”

 

“யாருக்குப் பக்குவம் இல்ல எனக்கா? ஒரு தொழில் பண்ணுறவரு,ஒரு எழுத்தாளர். இருபது வருசமா ஒரு பொண்ணு பக்கத்துல இருந்தே பேசி இருக்கு,அந்த பொண்ண கண்டு பிடிக்க முடியல பேச வந்துட்டாரு”

 

“திமுருடி உனக்கு இப்போ பேசுறவ எதுக்குடி கண்ணாமூச்சி ஆடணும்”

 

“அதெல்லாம் பேச்சில்ல உங்களால என்ன கண்டுக்க முடுச்சுதா”

 

“அடியேய்! வம்பு பண்ணாத தெரியாதவனுக போன வாங்கிப் பேசி குழப்பி விட்டுட்டு பேச்சா பேசுற பயந்தாங்குளி”

 

இடுப்பில் கை வைத்து திமிராகப் பார்த்தவள் “யாரு பயந்தாங்குளி? நீங்க தான் எழுத்தாளரே ஏமாளி காலைல தெரியாதவங்க போனுல இருந்து பண்ணுவேன் இ…. ரவு…..(அந்த ‘இ’ உடைந்து விடும் அளவிற்கு அழுத்தி சொல்ல) திருத் திருவென முழித்தவர் எதுவோ புரிய  வேகமாகத் தனது செல்லை எடுத்து பார்த்தார். அவர்கள் பேசியதை ரெகார்ட் செய்து வைத்திருக்கும் போல்டெர் போனவர், அதனைத் திறந்து பார்க்க ஒரே நம்பராக இருத்தது.

 

ட்ரு காலர் உதவியுடன் கஞ்சனையின் பெயர் அழகாக அதில் ஒளிர்ந்தது.முழு கோபத்துடன் அவளைப் பார்த்தவர்.

 

“அடிப்பாவி உன் போனுல இருந்து தான் நைட் பேசுவியா”

 

“யா… யா…. நைட் யாருகிட்ட போய்ப் போன் கடன் வாங்குறது எழுத்தாளரே! அதுவும் நான் பொண்ணு” நியாயம் தானே.

 

“எப்போல இருந்துடி”

 

அவரது கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேகமாகக் கதவிடம் சென்றவள் கதவை திறந்து வெளியில் சென்று தலையை மட்டும் விட்டு எட்டி பார்த்து “நான் காலேஜ் படிக்கும்  போதே” என்று கண் சிமிட்டி அவர் பிடிக்க வருவதற்குள் சிட்டாகப் பறந்துவிட்டாள்.

அவள் பதிலில் வெண்மையான வாமணன் ச்சா….. என்று கை உதறி சுவற்றில் குத்தி, இருக்குடி உனக்குக் கருவி கொண்டார்.(வயது போகும் வயதில் இது தேவையா எழுத்தாளரே ).

 

நீண்ட வருடங்கள் நான் தேடிய உயிர்ப்பை,

ஒற்றைச் சிரிப்பில் தந்தவள் நீயே!

குறும்பு செய்யும் கண்ணாக,

என்னைக் களிப்பில் ஆற்றியவள் நீயே!

நீயே என் வரம்!மனைவியாக

நீயே என் சாபம்! காதலியாக.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!