பெண்ணியம் பேசாதடி – 10
காதல் பசிக்கு ஈடு செய்ய எதையாவது
தந்து என் பசியாற்று,
பெண் என்றால் தாய்மையமே?
பசி பொறுப்பாளா அன்னை?
நல்ல நியாயம் தான் எழுத்தாளரே!
நான் பெண் என்றால் உங்கள் கூற்று, சரியே!
நானோ ராட்சசி என்ன செய்ய?
அழகாகப் புடவை உடுத்தி பாந்தமாகத் தனது தந்தைக்கும்,மற்றவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டு இருந்தாள் காஞ்சனை.அவளை பார்க்க பார்க்க மூர்த்திக்கு அத்தனைஆனந்தம், இதற்கு முன் தனது சிறு பெண்ணை இத்தனை அழகாகப் பார்த்தது போல் நினைவில்லை.திருமணம் பந்தம் தந்த அழகு,வாமணன் தந்த காதல்,வளவன் தந்த மகன் பாசம் அனைத்தும் அவளுக்கு ஓர் தனி அழகை கொடுத்தது.
என்னதான் சண்டையிட்டாலும் வளவன் மற்றும் கஞ்சனையின் பிடித்தம் சற்று அதிகம் தான்.அழகான அம்மா பிள்ளை. மதுவிடம் தோன்றாத தோழமையும்,பிணைப்பும் கஞ்சனையிடம் தோன்றியது வியப்பே.அதற்காக மதுவை பிடிக்கவில்லை என்று செல்ல முடியாது அம்மா என்றளவில் மதுவை நிரம்பப் பிடிக்கும்.
வாமணனுக்கும் மனைவி என்ற அளவில் மதுவை பிடிக்கும்.அழகான வழமையான குடும்ப அமைப்பில் தான் இவர்களது வாழ்க்கை,ஆனால் ….. இந்த ஆனால் தான் என்னவென்று தெரியவில்லை தகப்பனுக்கும்,மகனுக்கும். இப்போது நிறைவான வாழ்க்கை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.
“தாத்தா”
“சொல்லு வளவா”
“இன்னக்கி நம்ப ஊருல செம மழை அடுச்சு நகர்த்த போகுது”
“காலைல கூடப் பேப்பர் படுச்சேனே ஒன்னும் போடலையே தம்பி” அவனது உள்குத்துத் தெரியாமல் கரும சிரத்தையாகப் பதில் சொன்னார் மூர்த்தி.
“பேப்பர் எதுக்குத் தாத்தா உங்க பொண்ணு அமைதியா இருந்தாலே மழை கண்டிப்பா உண்டு”
“ஹாஹாஹா …… அவள வம்பு பண்ணாலான தூக்கம் வராதடா உனக்கு படவா”அவனது காதை பிடித்துச் செல்லமாகத் திருக அலறினான் வளவன் “ஐயோ! வலிக்குது தாத்தா”
வழமைக்கு மாறாகக் காஞ்சனை வாய் திறந்து பேசவில்லை,முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்.இவர்களின் பேச்சுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லையென்ற நிலையில் உணவு மட்டுமே உலகம் என்பது போல உண்டு கொண்டு இருந்தார் வாமணன்.
கஞ்சனையின் அமைதிக்கு அவர் தான் காரணம். அன்றைய பொழுதில் எல்லாம் போன் பேசுவது தனது நம்பர் தானென்று சொன்னதில் கோபம், அதிலிருந்து மனுஷன் முகம் கொடுத்து கூடப் பேசுவதில்லை.மீறி எதையாவது வம்பு செய்து பேசினால்,பக்கத்தில் இருக்கும் பொருள் படாரென உடையும். நெருங்க முடியவில்லை பெண்ணால் அத்தனை கோபமாக இருந்தார்.
இருக்காதா பின்னே தனது தேடல் இன்றா? நேற்றா? இருபது ஆண்டுகள் தாண்டி அல்லவா.அதன் ஏமாற்றம்,கோபம் இருக்கத் தானே செய்யும்.முன்பென்றால் ‘பேசலையா சரிதான் போடா ‘என்று சென்று இருப்பாள்.இன்றோ வாமணன் மனைவியாக, ஆசை காதலியாக அவ்வாறு இருக்க முடியவில்லை.
பசிக்கக் கிடந்தவளுக்குத் தட்டில் காதல் என்னும் உணவை மறுக்க மறுக்க ஊட்டிவிட்டு,பசி முழுமை பெரும் நேரம் அதனைத் தட்டி பறித்தால் அவளும் என்ன தான் செய்யவள்.
அவளது மௌனம் வளவனைக் கொள்ள அவளது கைப்பற்றி இழுத்தவன் “சித்தி நீ இப்புடி இருக்காதா பார்க்க சகிகளை,உனக்கு என்ன பிரச்சன சொல்லு” அதற்கும் அவள் அமைதியாக இருக்க.
“அப்பா என்னாச்சுப்பா”
“ஒன்னுமில்லையே… ஏன்?” அப்பொழுதும் தட்டில் மட்டுமே அவரது கவனம்.
அதற்கு மேல் கேட்பது நாகரிகம் அற்றது அப்பாவாக இருந்தாலும், எனவே அமைதியாகி விட்டான்.அதன் பின் அனைவரும் அமைதியாக உண்டனர்.உணவுக்குப் பின் சிறிதளவு இனிப்பு எடுப்பது வாமணன் வழக்கம்.அதற்காக அவர் கை நீட்ட,கஞ்சனையும் கொடுத்தாள்.
என்ன கொடுத்தாள் என்பதைப் பார்க்காமல் வாயில் போட்டுக் கொண்டார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக லட்டுவில் மிளகாய் பவுடர் தூவி லட்டு பிடித்தவள் இவளாகத் தான் இருப்பாள்.வாமணனுக்குக் காரம் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது,மனிதர் துடித்து விட்டார்.அத்தனைக்கும் அசைய வில்லையே காஞ்சனை முறைத்துக் கொண்டே இருந்தாள்.
மூர்த்தியும்,வளவனும் தான் துடித்துப் போனார்கள் “லூசா சித்தி இப்புடித்தான் சின்னப் புள்ளத்தனமா இருப்பியா நீ,பாருங்க தாத்தா” தந்தையை இப்படிச் செய்து விட்டாள் என்ற கோபத்தில் தாத்தனிடம் புகார் கொடுக்க,
“என்னம்மா இது எத்தணை தடவ சொல்லிருக்கேன், வயசுக்கு தகுந்த மாதிரி இருன்னு,மாப்பிள்ளை கிட்ட இப்புடித்தான் பண்ணுறதா”
“விடுங்க மாமா தெரியாம பண்ணிட்டா வாமணன் அவளைப் பேசுவது தாங்காது அவளைத் தாங்கி பேச”
“தெரிஞ்சுதான் பண்ணுனேன் என்ன இப்போ”
“உன்னையெல்லம் திருத்த முடியாது” என்றவர் வாமணனிடம் திரும்பி கை கூப்பி விடை பெற்றார்,இனி இங்கு இருந்தால் தனக்கு ரெத்த அழுத்தம் கூடிவிடும் என்பதால் எந்த வாக்குவாதமும் செய்யாது ஓடிவிட்டார்.
முடிந்த மட்டும் தண்ணீரை நிரப்பிக் காரத்தை விரட்டியவர் தனது அறைக்குச் செல்ல,அவர் பின்னே வால் பிடித்துச் சென்றவளை தடுத்து நிறுத்தினான் வளவன் “எங்க போற”
“இது என்னடா கேள்வி எங்க ரூமுக்கு”
“நீ எங்கையும் போக வேணாம் பேசாம இரு”
ஏய்! என்ன? நீ சொன்னா நான் கேட்கணுமா போ.. போ.. போய் வேலைய பாரு”
“அம்மா தான் பிள்ளைங்கள கண்ட்ரோல் பண்ணுவாங்க,இங்க எல்லாம் தலைகீழா உன்ன நான் கண்ட்ரோல் பண்ண வேண்டியதை இருக்கு” தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகச் சலித்துக் கொண்டான் வளவன்.
“நான் அம்மா இல்ல, சித்தி தானே அப்புறம் என்ன” வெடுக்கென எரிந்து விழுந்தாள்.
அவள் கோபத்தைச் சரியாக நாடி பிடித்த வளவனின் முகம் மென்மையுற”,லூசு நீ என் அழகு ராட்சசி, அப்புறம் எப்போதுமே என் ஆசை அம்மா” கன்னம் கொஞ்சி அவளைக் கட்டிக்கொள்ள நிகழ்ச்சியான தருணமாக மனதில் என்றும்.
அவளும் அனைத்து கொண்டாள் கண்ணில் நீருடன்.என்னதான் இருந்தாலும் அவளும் பெண் தானே,பருவத்தில் எதிர்காலக் கணவன் மற்றும் குழந்தை பற்றிய நிறையக் கற்பனை எண்ணங்ககள் உண்டு.அவை இன்று நினைவக, சொல்ல முடியாது சுகத்தில் அவள்.
“ சரி ரொம்பக் கொஞ்சாத நான் சித்தி அந்தப் பயம் இருக்கட்டும் என்றவள் அவனிடம் நெருங்கி வந்து கிசு கிசுப்பாக உங்க அப்பா இல்லாத நேரமா பார்த்து கொடும பண்ணுவேன்”.
ஐயோ! பயமா இருக்கு சித்தி அப்புடியெல்லாம் பண்ணீடாதீங்க இவனும் போலியாக அலற இருவருக்குமே சிரிப்பு.
ஓகே பை என்றவள் நான் என் எழுத்தாளரை பார்க்க போறேன் என்று விடைபெற,போகும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் வளவன்.மனம் அடித்துச் சொன்னது இனி வரும் நாட்கள் சொர்கம் தான் என்று.என்ன உறவு இது?இவள் இல்லையென்றாலும் தங்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று இருக்கும் ஆனால் அதில் ஒரு நிறைவோ, உயிர்போ இருக்காது.
மனம் அவளைக் கண்டு கொண்ட நாளுக்குச் சென்றது… அன்று……
வாமணன் பிறந்த நாள் முன் தினம் காஞ்சனை வீட்டில் சாப்பிட்டு ,அங்கயே தங்க காஞ்சனை தனது அறையை அவனுக்குக் கொடுத்து விட்டு தனது உயிர் தோழியான வாண்டிடம் பேச சென்று விட்டாள்.
படுக்கலாம் என்று சென்றவன் அவளது மேஜையில் இருந்த டைரி உறுத்த அதனை எடுத்தான்.ஏனென்றால் அந்த டைரி வித்தியாசமான மேல் அட்டையுடன் இருந்தது. அதன் முன் அட்டை மேல் குட்டி குட்டி எழுத்தாக எழுதி கவர் செய்து இருந்தாள்.அந்த எழுத்துக்கள் அத்தனையும் வாமணனின் கவிதைகள்.
முதல் பக்கத்தைத் திருப்ப அதில் முதல் வரி ‘ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எழுத்தாளரே! ‘படித்த உடன் ஷாக் அடித்தது வளவனுக்கு,தனது தந்தையாக இருக்குமோ?அப்போ காஞ்சனை? நாகரிகமற்ற செயலக இருந்தாலும் தப்பில்லை என்பது போல் தொடர்ந்தான் ‘இதோ எனது புது டைரி உங்கள் பிறந்த நாள் பரிசாக……..’
‘என்ன எழுதலாம் ஹ்ம்……… கனவில் ஒரு நாள் என் எழுத்தாளருடன்…’
எழுத்தாளரே நீங்க என்ன பண்ணுறீங்க புல் பார்மல் போடாம வெள்ளை பைஜாமா ஜிப்பா போட்டுட்டு கண்ணுல கண்ணாடி அதுவும் பெருசா,அப்புறம் அது என்ன ஸ்டைல் லேப்டாப் பேக் சின்னப் பையன் மாதிரி துள்ளிக்கிட்டுப் போறது காலம் போன கடைசில…….. ஒழுங்கா ஜோல்னா பைய மாட்டிகிட்டு மறக்காம உங்க பேப்பர்,பேனாவோட வாங்க…
வருவீங்க தானே எழுத்தாளரே? வரணும்……. நானும் உங்கள மாதிரியே உடுத்திக்கிறேன்,அப்புறம் இந்த ஆண்,பெண் பாலினம் வேணாம் என்ன….நம்ப ரசனைக்கு அது சரிவராது,கோட்பாடுகள் இல்லாத ரசனைகள் உங்களிடம் உண்டு எழுத்தாளரே! எழுதி கண் அடிப்பது போல் ஒரு ஸ்மைலி பொம்மை ஒட்டியிருந்தாள்.‘அடிப்பாவி சித்தி சரியான கேடி நீ’
‘உனக்கும் அம்மாக்கும் ரசனையே இல்ல’ என்று சொன்னது நியாபகம் வந்தது வளவனுக்கு.தவறு தான் மன்னிப்பு வேண்டினான்.மேலும் படி என்று உள்ளம் கிள்ள…….
நம்ப இப்போ எங்க போறம் தெரியுமா? அழகான பசுமையான காடு இதுல உயிர் கொல்லி மிருகங்களுக்கு இடமில்லை எழுத்தாளரே,பச்சை பசேல் புல்வெளி எங்கும் வண்ணத்து பூச்சியின் ரீங்காரம்,குயிலின் சங்கீதம்,பறவைகளின் சிரிப்பொலி, துள்ளி திரியும் காதலர்களாகப் புள்ளி மான்,நடுவில் அருவி அதில் சல சலக்கும் குளிர் நீர்.
இது நடுவே ஒரே ஒரு நாற்காலி மேஜை .உங்க முதுகில் தொத்தி கன்னம் தேய்த்து உங்க வசம் முகர்ந்து……… எழுத்தாளர் கவி படைக்க ,நான் மதி மயங்கி கவி படிக்க இரவு பகல் பாராமல் ரசனையை ரசிக்கும் ரசிகையாய்,இயற்கையோடு இயற்கையாய்.
அதற்கு மேல் படிக்கச் முடியாமல் டைரியை முடிவிட்டான்.மனதின் எண்ணங்கள் வேலை நிறுத்தம் செய்ய,மூளை விழித்துக் கொண்டது அதன் பின் கதவை தாழிட்டு அவளது அறையைத் தலை கீழ் புரட்டி விட்டான்.அத்தனையும் அவனைப் பார்த்துச் சிரித்தது கோபம் தான்,
இருந்தாலும் அவள் ஒரு பகுதியில் அதாவது மது – வாமணன் திருமணப் பத்திரிகையில் எழுதிய ஒரு வாசகம் அவனை யோசிக்க வைத்தது ‘எழுத்தாளர் என்றும் எழுத்தாளரே,அக்காள் கணவன் என்ற பேச்சுக்கே இடமில்லை,என் உறவு எழுத்தோடு மட்டுமே,எழுத்தாளரிடமில்லை’
அதனால் தான் இதைத் தந்தையிடம் சொல்லவில்லை ஆனால் அவர் கண்டு கொண்டாரே.அன்று நடந்ததை எண்ணியவன் தனக்கும் இது போல் ஓர் உன்னதமான உறவு வேண்டுமென்று எண்ணி கொண்டான்,மறந்தும் காதல் என்று சொல்லவில்லை.
தெளிவான பெண் எத்தனை பித்து எழுத்தாளர் வாமணன் மீது,இருந்தாலும் நிலை உணர்ந்து மனதை அடக்கி ரசனை,அன்பு,காதல் எது என்று அழகாகப் பிரித்தறிந்து செயல் பட்டிருக்கிறாள் காஞ்சனை.தேவதை பெண் தான் அவளே நெருங்கிய சொந்தமாக அமைத்தது வரம் தான்,அவள் சொல்வது போல் வேறு குடும்பத்தில் இருந்தெருந்தாள்?….. அந்த எண்ணமே வேண்டாமே.
மெய் முழிக்கப் போய்ப் புழங்குதடி,
ராட்சசியாம்? ஆம் வம்பு செய்யும் போது மட்டுமே,
அன்பு செய்வதில் நீ ரட்சகி,
பெண்ணியம் பேசாதடி பெண்ணே,
பாவம் உன் எழுத்தாளன்.