பெண்ணியம் பேசாதடி – 11

பெண்ணியம் பேசாதடி – 11

 

எச்சில் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு

காதல் யுத்தம் புரிவோமாடி?

சத்தியம் செய்கிறேன் தோல்வி எனதே.

 

தோல்வியில் வெற்றி காணும் ஜித்தன் நீர்,

இத்தனை தந்திரம் ஆகாது எழுத்தாளரே!

 

“என்ன கோவம் எழுத்தாளருக்கு? என்னையும் புரிஞ்சுக்கணும்” கட்டிலில் ஓய்வாகப் படுத்தவரை  நெருங்கி வந்து கேட்க.

 

“உங்கிட்ட நான் எதாவது பேசுனேனா போடி” முறுக்கி கொண்டார் எழுத்தாளர்.

 

“ப்ச்… என்ன எழுத்தாளரே பிடிவாதம் அதுவும் இந்த வயசுல” குறி பார்த்து அடித்தாள் காஞ்சனை. நேற்றைய தினத்தில் இருந்து பேசமாட்டேன் என்று அல்சாட்டியம் செய்து கொண்டு இருந்தால்,என்னதான் செய்வது அதான் பேரிளம் பெண் சீண்டி பார்த்தாள்.அவள் எண்ணியது போல எழுத்தாளரும் களம் இறங்கினார்.

 

ஏய்! என்னடி எப்போ பாரு வயசை சொல்லியே பேசுற.நான் என்ன கிழவனா?

 

“அதுல என்ன சந்தேகம் உங்களுக்குச் சொன்னாலும் சொல்லாட்டியும்…” என்றவளை பாய்ந்து சென்று பேச்சை தடை செய்தார்.இதோ ஓர் காதல் போர்,அந்த போரிலும் நிபந்தனை உண்டாம்,எச்சில் என்னும் ஆயுதம் மட்டுமே போர்க்களத்தில் ஏந்தி போர் புரிய வேண்டுமாம்.சரிதான் காதல் போரில் சற்று ஒழுகினமும் உண்டு போலும்.

 

மூச்சுவாங்க இதழ்களை பிரித்தவள் அவரை முறைத்தவாறே வெளியில் சென்று விட்டாள்.மேலும் பேசினால் இலக்கணம் எழுத ஆயுத்தம் ஆகி விடுவார் எழுத்தாளர். பின்பு யார் அவரைத் தடுப்பது அங்கு காஞ்சனை என்னும் பெண் புயல் புறமுதுகிட்டு ஓடியது.

 

வெளியில் வந்தவள் நடுக் கூடத்தில் உள்ள சோபாவில் அமர்ந்து கண் மூடி கிறங்கி சற்று முன் நடந்த யுத்தத்தை எண்ணினாள்,பொல்லாத எழுத்தாளர் வெட்கம் என்னும் தோழி சடைத்துக் கொள்ள இதழில் அழகான புன்னகை.

 

அவளது கனவை கலைக்க வேண்டி அடித்தது அழைப்பு மணி யாரென்று பார்க்க,அவளுக்கு முன்னால் பார்த்த மாப்பிள்ளை. வளவனின் தொப்பை என்ற விழிப்புக்கு சொந்தக்காரர் திரு.சுரேஷ் அவர்கள்.அவரை பார்த்து புன்னகைத்தவள் வாங்க என்று அழைத்து அமருமாறு இருக்கையைக் காட்டினாள்.

 

அவரும் சிறு தலை அசைப்புடன் வந்து அமர்ந்தார் .என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை.இருவரும் பொறுப்பான வயதில் இருப்பதால் திருமணத்திற்கு முன்பு வரும் அசட்டுப் பேச்சுக்கள் எதுவுமில்லை,அதனால் நிலை ஒரு அளவுக்குப் பிடிபட்டது.

 

“கேள்வி பட்டேன் உங்க கல்யாண விஷயம், அதான் பார்த்துட்டு போலன்னு வந்தேன் .எப்புடி இருக்கு உங்க கல்யாணம் வாழ்க்கை ? வாமணன் என்ன சொல்லுறார்? குறும்பு சிரிப்புடன் கேட்க.

 

“நல்ல இருக்கேன்” என்ற பதில் மட்டும் கஞ்சனையிடம்

 

“ஹ்ம்ம்… நாளை  மறு நாள் பெருமாள் கோவில்ல எனக்குக் கல்யாணம்.பொண்ணு எங்க உறவு தான் விதவை.முன்னே கேட்டாங்க பொண்ணு வயசு ரொம்பு கம்மி வேண்டாம் சொல்லிட்டேன்,இப்போ வேற வழி இல்லைல அதான்” அவரது பேச்சு சற்றுச் சங்கடப்படுத்த.

“உங்க கஷ்டத்துக்கு மன்னிக்கணும், நானே என் திருமணத்தை எதிர் பார்க்கல”

 

“தெரியும் மூர்த்தி சார் சொன்னார்” இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டே வந்தார் வாமணன்.

 

“வாடா’ என்று நண்பன் கையைக் குலுக்கி வரவேற்றவர் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் அதில் சிறுது எரிச்சலும் எட்டி பார்த்தது,அதனைச் சரியாகக் கண்டு கொண்டாள் பெண்.

 

பின்பு அந்தத் தொப்பை தனது திருமண அழைப்பை இருவருக்கும் விடுத்து போகும் வேளையில் “வரேன் காஞ்சனை பார்த்துக்கோ” என்று வேறு சொல்லி வாமணன் ரெத்த கொதிப்பை சற்று ஏற்றி விட்டு தான் சென்றார். மிஸ்டர்.தொப்பை.

 

காஞ்சனை யாரென்று அறியா வேளையில், தானே அவளுக்கு மாப்பிள்ளை பார்த்த அவலம் அவரை எரிச்சல் படுத்த,மீண்டும் அவரது கோபம் தொடர்ந்தது,அதன் விளைவு அவர் ஏறியவுடன் காரின் கதவை சாத்திய சத்தத்தில் தெரிந்தது.

 

“ஐயோ! கடவுளே மறுபடியும் மனுஷன் கோபம் ஆகிட்டார் போலையே”அலறினாள் பேரிளம் பெண்.

 

 

“ஏய்! எதுக்குடி என்ன போன் பண்ணி கூப்ட”

 

‘எதிர்புறம் மௌனம்’

 

“என்னடி பேசமாட்டேங்கற உனக்கும் எனக்கும் தான் எதுவுமில்லைனு ஆகி போச்சுல்ல அப்புறம் என்ன”

 

‘அதே மௌனம் இப்போது அவனை நேருக்கு நேர் பார்த்து முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு’

 

“என்ன? பாவமா பார்த்தா ஆச்சா,சொல்லுடி எதுக்குக் கூப்ட”

 

இங்கு நடக்கும் கூத்தை பார்த்து சுவரை தேடியது ரமேஷின் கண்கள்.நன்றாக முட்டி கொள்ள வேண்டும் ரெத்தம் வரும் அளவுக்கு அத்தனை வேகம் அவனுக்கு வளவனின் அக்கப்போரை பார்த்து.

“சரிடி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் தனது கன்னத்தைக் காட்டிய வளவன் இங்க மட்டும் ஒரு முத்தம் கொடு உங்க அம்மா கிட்ட கேட்டு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”.

 

அவன் சொன்னது தான் தாமதம் ரமேஷ் ஓடி வந்து அவனது முதுகில் அடித்தான்.

 

ஆ……….டேய் விடுடா ஏன்டா அடிக்குற

 

உன்னையெல்லாம் கொள்ளாம விடுறேனு சந்தோச படு, மனுசனாட  நீ அப்புடியே உன் காதலி கிட்ட பேசுற மாதிரி நாலு வயசு குழந்தை கிட்ட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்க.

 

அதுதான் உன்ன மதிக்க மாட்டேங்குதுல அப்புறம் ஏன்? உன் வயசுல உங்க அப்பா பின்னாடி கலர் கலர்ரா பொண்ணுக சுத்தனாக,சுத்த வச்சார்.ஆனா நீ நாலு வயசு பொண்ணு பின்னாடி சுத்தி மானத்தை வாங்குற.

 

என்ன குடும்ப அமைப்புடா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி,அதுலயும் உன் சித்தி ஒரு மாதிரி தான் ஆத்தாடி ஆத்தா ஒரு பொண்ணு போதும் உங்க தலை  முறைக்கே தனது குமுறலை படப் படவெனக் கொட்டினான் அந்த அடிமை அய்யோ பாவம் யார் பெற்ற பிள்ளையோ.

இன்று தான் ரமேஷுக்கு ஓய்வு சற்றுப் படுக்கலாம் என்று எண்ணியவன் போனை அனைத்து வைக்க,அணைக்கும் முன்னே அழைத்து விட்டான் வளவன்.அதுவும் மொட்டையாகத் தான் ஒரு பெண்ணைப் பார்க்க போவதாகவும் அதற்குத் துணையாகத் தன்னை வரும்படியும் சொன்னான்.

 

ரமேஷும் ரொம்ப முக்கியமான விடயம் போலும் என்றெண்ணி வந்தால். இங்கு  வாண்டிடம் பேரம் பேசி கொண்டு இருக்கிறான்.

 

நண்பர்கள் இருவரும் வழக்காடுவதைப் பார்த்த வாண்டு தனக்குக் காரியம் தான் முக்கியம் என்பது போல வளவன் கன்னத்தில் மூக்கு உரசி குத்தும் தாடியை உரசியவாறே முத்தமிட்டது.அவளது முத்தத்திற்கு வளவன் காட்டிய பாவனையில் ரமேஷுக்கு ஏக கடுப்பு.

 

வயசு போனுக்குக் கொடுக்க வேண்டியதை பச்சை புள்ளைக்குக் கொடுத்துட்டு பில்ட்டப்பு வேற.

 

முத்தம் கொடுத்துவிட்டி தனது உதடுகளைத் தேய்த்துக் கொண்ட வாண்டு “இதெல்லாம் பேட், நீ தெரிஞ்ச மாமா குட் அதான் குடுத்தேன்.அத்தனை தெளிவு வாண்டு யாரு? கஞ்சனையின் தோழி ஆயிற்றே.முத்தம் கொடுக்கும் பொதுக் கூட விலகி நின்று கொடுக்கும் அந்தப் பிஞ்சின் பயத்தைப் பார்த்த நண்பர்களுக்குச் சில ஆண் வர்கத்தின் மீது கொலைவெறியே வந்தது.

 

பிறக்கும் போதே தற்காப்பு களை கற்றுக் கொள்ள வேண்டும் போலப் பெண் குழந்தைகளுக்கு எத்தனை கேடுகெட்ட சமுதாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எண்ணினாலே உடலில் ஆயிரம் பூச்சுகள் உறுவது போல் தான் உள்ளது அத்தனை ஒவ்வாமை.

 

எத்தனை அழகான சொர்கம் காமத்தால் நாம் இழந்திருக்கோம் தெரியுமா.பெண் குழந்தைகள் சொர்கம். அதுவும் அக்கா மகள்,அண்ணன் மகள்,மகள்,தங்கை அக்கா என்று சொல்லி கொண்டே போகலாம்.

 

மாமா என்று அக்கா மகள் கட்டி கொள்ளும் பொதுக் கடவுளே ஆசிர்வதித்தது போல் உள்ளம் துள்ளும் தாய்க்குப் பின் தாய் மாமன் தானே எல்லாம்.அதே போல் அப்பா மகள் உறவு என்ன உன்னதம் தனது தாயே மகளாக.பக்கத்து வீட்டு உறவு கூட இன்று பாலை வனமாக.

 

இப்பேற்பட்ட தெய்விக உறவை சமீபகாலமாக இழந்து வருகிறோம்.எண்ணிய போதே இதயத்தில் குருதி வழிகிறது.பட்டம் பூச்சியாகத் தன்னை மறந்து சுற்றிக் கொண்டிருக்கும், பெண் பிள்ளைகளுக்கு நல்லவை அல்லவை சொல்லி குடுக்க வேண்டிய அவல நிலை இன்று.

 

பெருமூச்சு விட்ட நண்பர்கள் வாண்டை அள்ளி கொண்டு சென்றனர்.

 

வாண்டின் அம்மா ஆயிரம் பத்திரம் சொல்லி கஞ்சனையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.இன்றும்,நாளையும் கஞ்சனையின் வசம் வாண்டு.

 

ரமேஷ் வளவனையும்,வாண்டையும் இறக்கி விட்டு அண்ணாந்து அந்த வீட்டை ஒரு விதமாகப் பார்த்து வைத்தான்.அங்கே வளவன் அவனை உலுக்கி கொண்டு இருந்தான் “டேய் என்னடா”

 

“இல்ல இந்த வீடு இன்னும் இரண்டு நாள் செண்டு பார்த்தா எப்புடி இருக்கும் யோசுச்சேன்”

 

“ஏன்டா லூசு மாதிரி உலர”

 

“ஒருவருசத்துக்கு முன்னாடி நல்ல தாண்ட இருந்தேன் எப்போ உன்கூட வேலை பார்க்க வந்தேனோ அன்னைக்கே புடுச்சுது கிறுக்கு”

 

“ரொம்பத்தான் போடா”

 

நீ சொல்லாட்டியும் நான் போகாத போறேன் இன்னும் இரண்டு நாளைக்கு இந்தப் பக்கம் வர மாட்டேன். போன் எடுக்கமாட்டேன் ஒன்னு இருந்தாலே இந்த வீட்டுக்கு வர முடியாது,இப்போ இந்தக் குட்டி பிசாசு வேற வேண்டமுடா சாமி என்று இரு கரம் கூப்பியவனைப் பார்த்து உரக்க சிரித்தான் வளவன்.

 

நன்பனின் சிரிப்பில் தானும் சிரித்துக் கொண்டே விடை பெற்றான் ரமேஷ்.

 

**********************************************

வீட்டினுள் நுழைந்தவுடன் கஞ்சனையைப் பார்த்து வளவனிடமிருந்து திமிறி இறங்கியது வாண்டு “காஞ்சு” என்னும் கூச்சலுடன் ஒரே பாய்ச்சல் கஞ்சனையின் மேல்.அவளும் நெஞ்சோடு அனைத்து உச்சி முகர்ந்து இறுக்கி கொண்டாள்.

 

அதனை பார்க்கும் பொது அத்தனை அழகாக இருந்தது.பெண் பிள்ளைகள் களிபின் விதை அல்லவா.அதை பூர்ணமாக உணர்ந்தவனே சிறந்த ஆண் மகன்.

 

இருவரும் சோபாவில் அமர்ந்து தங்களை மறந்து கதை பேச.கஞ்சனையின் பக்கத்தில் இருக்கும் வாண்டை ஒரு கையில் தூக்கி கஞ்சனையின் அந்தப் புரம் அமர வைத்தவன் வாகாக அவள் மடியில் படுத்துக் கொள்ளக் கோவம் வந்தது வாண்டுக்கு.

 

“காஞ்சு மாமா கிழ போடு”

 

“அச்சோ பாவம் பேபி போன போகுது படுத்து கட்டும் ஒரு ஓரமா”

 

“நோ நோ உதடு பிதுக்கி அழுது ஆடம் செய்ய”

 

“ஏய் எங்க அம்மாடி” வளவன் சிறு பிள்ளையாய் வம்புக்கு நிற்க.

 

“நோ நோ ஏன் காஞ்சு”

 

“எங்க அம்மா”

 

“ஏன் காஞ்சு”

 

இவர்களது சண்டையைப் பார்த்துக் கொண்டே வந்தார் வாமணன் அவரைப் பார்த்ததும் புது வெட்கம் வர கஞ்சனையின் முந்தியில் ஒளிந்து கொண்டது வாண்டு.

 

கஞ்சனையும் அந்த வாண்டும் அடுக்கும் லூட்டியை வளவன் மூலம் அறிந்த வாமணனுக்கு அவர்களது பிணைப்பு கொடியும் மலரும் போல் இருந்தது.முல்லை கொடி போல் அவர்களது அன்பு மனம் வீசி அவரை நிகழ வைத்தது.

 

தனக்கும் இதே போல் ஓர் பெண் பிள்ளை ஆசைக்காக.அவரது எண்ணவோட்டத்தை  அறிந்தாலோ என்னமோ கஞ்சனையின் கண்கள் அவரை எச்சரிக்கை செய்தது.அதை கூடக் கவிதையாகப் பார்த்தார் நம் எழுத்தாளர்.

 

சுகந்தமான நித்திரையில் ஓர் கனவாம்.

நிலவை பிட்டு அதற்கு ஓர் பிறை வைத்து, 

சிறு துளை கொண்டு சுவாசிக்க, 

பூவின் இதழ் கொண்டு இதழ் செதுக்கி, 

காற்றில் கை வீசி,

கொஞ்சல் மொழி பேசி,

அன்னநடையிடும் அல்லி பூ போல், 

எனக்கு ஓர் பெண் பிள்ளை வேண்டுமடி.

எழுத்தாளர் மன்றாட பேரிளம் பெணின் பதில் வழமை போல் ஒரே வரியில்,

பேராசை எழுத்தாளரே!