மகிஷவர்த்தினி டீஸர்

மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் ரோஜா தோட்டத்தில் பல ரோஜாக்களுக்கு நடுவே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அவன் அருகில் கையில் ஒரு ரோஜா மலரோடு மெல்ல வந்து அவன் தோளைத் தொட்டுத் திருப்பி,”ஆதி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.”

“ஹேய் மஹி என்ன இது பெர்மிஷன்லாம் கேட்டுகிட்டு. எதனாலும் சொல்லு.”

“இல்லை ஆதி, எப்போ எப்படினு எனக்கு சொல்ல தெரியலை ஆனால் நான் உன்னை லவ் பண்றேன் ஆதி. காதல் வந்தா கவிதை தானா வரும்னு சொல்லுவாங்க. அப்போலாம் அதை ஒரு ஜோக்கா நினைச்சு சிரிச்சுருக்கேன். பட் எனக்கு உன்னைப் பார்த்ததும் ஒரு கவிதை மனசுல வருது. அது கவிதையானு கூட தெரியலை. பட் ஐ ஹேவ் டூ சே இட். பிகாஸ் ஐ லவ் யூ அ லாட்.

எப்பொழுதும் என் அருகில்
நீ வேண்டும்
என் உற்ற துணையாக.
ஆயுள் முழுவதும் உன்னோடு
பயணிக்க
என் கை கோர்த்து வருவாயா”

என்று மஹி கூற, ஆதிக்கு ஆனந்த அதிர்ச்சி. உடனே மஹியை கட்டிப்படித்து,”ஹேய் மஹி நானே உன்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியாம யோசிட்டு இருந்தேன். நீயே இப்படி வந்து சொல்லுவனு நான் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் கவிதைலாம். சூப்பரா இருந்துச்சு மஹி டார்லிங்.”

“அப்போ டூ யூ லவ் மீ?” என்று சிறு தயக்கத்தோடு மஹி கேட்க,

“ஏய் ஐ லவ் யூ டூ மஹி டார்லிங்.” என்று கூறி அவளை மீண்டும் கட்டிப் பிடித்தான்.

“ஐ ஆம் ஸோ ஹாப்பி ஆதி. ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ்.”

“ஹா ஹா நானும் எக்ஸ்பெக்ட் பண்ணலை நீ இப்படி அழகா லவ்வை சொல்லுவனு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மஹி டார்லிங். இதை கண்டிப்பா நாம செலிபிரேட் பண்ணியே ஆகனும். நான் உனக்குப் போய் அழகா ஒரு கிஃப்ட் வாங்கிட்டு வரேன். அதுவரைக்கும் இங்கேயே இரு. சரியா.”

“ஆதி கிஃப்ட்லாம் வேண்டாம். நீ என் கூடவே இரு அது போதும்.”

“நோ டார்லிங் நீ இங்க இரு நான் போய்ட்டு வரேன். ப்ளீஸ் டா டார்லிங்.” என்று கூறி அங்கிருந்து ஆதி கிளம்ப மஹி அவன் போவதைப் பார்த்து நக்கலாகச் சிரித்து,”சரியான ஃபூல். நான் சொல்றதை உண்மைனு நம்பிட்டு போறான்.”

————————

காதலின் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மஹால் முன் நின்றிருந்தனர் அந்த ஜோடி.

“ஹேய் விஷூ ஏதோ மீட்டிங்னு சொல்லி கூப்பிட்டு வந்து இப்போ தாஜ்மஹாலை காமிச்சிட்டு இருக்க?”

“மஹி உன்கிட்ட ஒன்னு சொல்லனும். அதுக்கு இந்த தாஜ்மஹால் தான் கரெக்ட்டுனு தோணுச்சு.”

“அப்படியா, சரி சொல்லு விஷூ.”

“மஹி ஐ டோண்ட் நோ வென் திஸ் ஹாப்பன்ட். பட் ஐ ஆம் டீப்லி இன் லவ் வித் யூ. நீ என்னை உடனே அக்சப்ட் பண்ணனும்னு இல்லை. ஆனால் என்னை அக்சப்ட் பண்ணிகிட்ட ஐ வில் பி வெரி ஹாப்பி.”

“விஷூ வாட் ஆர் யூ சேயிங்?”

“ஐ ஆம் சேயிங் த ட்ரூத் மஹி. நீ எங்க வீட்டுக்கு வந்தப்போ உன்னைப் பிடிக்கலை தான். ஆனால் போகப் போக எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு. ஸோ டேக் யுவர் ஓன் டைம் மஹி. பட் நீ ஓகே சொன்னாலும் சொல்லலைனாலும் என் லைஃப்ல நீ மட்டும் தான். நீ ஓகே சொன்னா உன்கூட ஹாப்பியா கடைசி வரைக்கும் இருப்பேன். இல்லைனா என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னை மட்டுமே நினைச்சுட்டே வாழ்ந்துருவேன்.”

“ஹேய் விஷூ ஐ ஆம் ஸோ எலைட்டட். எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. பட் உன்னோட ப்ரோபோஸலுக்கு நோ சொல்ல எனக்கு எந்த ரீசன்னும் இல்லை. ஸோ ஐ வில் அக்சப்ட் யுவர் ப்ரோபோஸல் விஷூ.” என்று மஹி கூற, விஷூ அவளைத் தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டு,”பரவாலையே கிளி ஒத்துக்காதுனு நினைச்சேன் ஆனா ஒத்துகிடுச்சு. ஹிம் டேய் விஷூ இன்னைக்கு உனக்கு நேரம் நல்லா இருக்கு.” என்று தனக்குள்ளே பேசி சிரித்துக் கொண்டான்.