மண் சேரும் மழைத்துளி

மழைத்துளி 12

 

மூன்று மாதங்களுக்கு பின்…

 

பெங்களூரிலேயே பெரிய ஃபேஷன் டிசைனிங் கம்பெனி அது. காலை பத்து மணிக்கு பரபரப்பாக அனைவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருக்க, தியா நிதானமாக காபி குடித்துக்கொண்டே அடுத்து நடக்கவிருக்கும் ஃபேஷன் ஷோவுக்கான உடைகளை பைனல் செய்து, அதை அவள் பாஸ் சக்திக்கு மெயில் செய்துவிட்டு, “அப்பாடா” என்று கையை உயர்த்தி நெட்டி முறித்தவள். தன் பேபின் கதவு திறக்கும் ஓசை கேட்டு யாரென்று பார்க்க, அங்கு தியாவின் அசிஸ்டன்ட் பிரியா மூஞ்ஜை ஒரு முழத்துக்கு தூக்கி வைத்தபடி நின்றிருந்தாள்.

 

“ஏய் பிரியா, என்ன ஆச்சு எதுக்கு இப்டி சார்ஜ் போன ஃபோன் மாதிரி நிக்குற? என்ன ஆச்சு உனக்கு?”

 

“போங்க மேடம். நா உங்க மேல கோவமா இருக்கேன். பேசாதீங்க போங்க” என்று முறுக்கிக்கொள்ள அவள் குழந்தை தனத்தை பார்த்து சிரித்த தியா, “ஹலோ மேடம் என்ன ஆச்சின்னு சொல்லிட்டு கோவப்படுங்க மேடம். இப்டி தீடீர்னு வந்து நா கோவமா இருக்கேன்னு சொன்னா? நா என்ன பண்றது. ப்ளீஸ் உங்க கோவத்துக்கு என்ன காரணம்னு எனக்கு சொல்றீங்களா?” என்று குறும்பாக கேட்க…

 

“நீங்க அடிக்கடி சொல்வீங்க இல்ல, எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும், நீ பாக்க அப்டியே என் தங்கச்சி மாதிரி இருக்கான்னு. அப்றம் ஏன் இதை என்கிட்ட சொல்லல… அப்ப நா உங்க சிஸ்டர்னு நீங்க சொன்னது அத்தனையும் நடிப்ப லதா??” என்று சிவாஜி ஸ்டைலில் கேட்ட…

 

சத்தமாக சிரித்த தியா, “ஏய் பிரியா நீ இப்டி சிவாஜி சார் டயலொக் எல்லாம் பேசுற அளவுக்கு இப்ப என்ன ஆச்சு?? நா என்ன மறச்சேன் உன்கிட்ட??”

 

“போங்க மேடம்… நீங்க மட்டும் என்னை உண்மையாவே உங்க தங்கச்சிய நெனச்சிருந்த, உங்களுக்கு கல்யாணம் ஆன மேட்டர்ர ஏன் என்கிட்ட சொல்லல? போங்க நா ரொம்ப கோவமா இருக்கேன்” என்று மீண்டும் முகத்தை திருப்பி கொள்ள…

 

சட்டென சேரில் இருந்து எழுந்தவள், “ஏய்! என்ன உளர்ர நீ. உனக்கு யார் சொன்ன எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு??” என்று கேட்க.

 

“வேற யார் சொல்லணும்… அதான் உங்க ஹஸ்பண்ட் கீழ ரிசப்ஷன் ல வெய்ட் பண்றாரே அவர் தான் சொன்னாரு, தியா மேடம்க்கு நீங்க யாருன்னு கேட்டதுக்கு அவ ஹஸ்பண்ட் னு” என்று சொல்ல… 

 

“ராஸ்கல் இந்த விஷ்வா நாய்க்கு இந்த அளவு தைரியம் வந்திடுச்சா.? எவ்ளோ தைரியம் இருந்த என்னை அவன் பொண்டாட்டினு சொல்லி இருப்பான். அன்னைக்கு தாத்தா கிட்ட அந்த நாய் அப்டி பேசும் போதே, அவன் வாயா ஒடச்சிருந்த இப்ப அந்த நாய்க்கு இவ்ளோ தைரியம் வந்திருக்காது. அத அன்னிக்கே செமத்திய கவனிக்காதது என் தப்பு தான். பொறுக்கி ராஸ்கல்” என்று தியா முனுமுனுக்க… 

 

“மேடம் கீழ உங்க ஹஸ்பென்ட்” என்று பிரியா ஆரம்பிக்க, “ஷட்-ஆப் பிரியா… கண்ட நாய் எதாது சொன்ன அப்டியே நம்பிடுவீயா? என்று கத்தியவள் பிரியாவின் பயந்த முகத்தை பார்த்தும் அமைதியாக, “யார் என்ன சொன்னாலும் அப்டியே நம்பிடுவீயா நீ?” என்று தலையில் அடித்துக்கொண்டாவள் கொலைவெறி கீழே செல்ல. அங்கு இருந்தவனை கண்டது அவள் கொலைவெறி பறந்து போக ஒரு நிமிடம் மனது ஃப்ரிட்ஜ் வைத்தது போல் குளு குளுவென்றாக, அடுத்த நிமிடம் அவன் தான் தங்கைக்கு சொந்தமானவன் என்ற எண்ணம் புத்தியில் உரைக்க, தலையை சிலுப்பி ஒரு நிலைக்கு வந்தவள். அவன் அருகில் செல்ல…

 

“எப்டி இருக்கீங்க மிஸ். திரவியா என்று நக்கலாக கேட்டவன். “ஆமா நீங்க இப்ப மிஸ்சா இல்ல மிஸஸ் ஆஆஆ?” என்றவனை இயலாமையோடு பார்த்தவள்,

 

“நா இங்க இருக்கேன்னு உங்களுக்கு எப்டி தெரியும் அகரன்?” என்று உணர்ச்சி துடைத்த குரலில் கேட்க

 

“உலகம் உருண்டை மிஸ்.திரவியா. நீங்க உங்கள பத்தின எல்லா விஷயத்தையும் அழிச்ச மாதிரி. அப்டியே உங்க பழைய ஃபேஸ்புக் ஐடியையும் டெலிட் பண்ணி இருந்திருக்கணும். அது ஆக்டிவ் ல இல்லனாலும். அப்டியே தானா இருக்கு. அதுல உங்க ஃப்ரண்ஸ் லிஸ்ட் ல இருந்த பெரிய டிசைனிங் ஹவுஸ் டீடெயில்ஸ் எடுத்தேன்… இங்க இருக்கேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் உதடுகள் தானாய் “சக்தி” என்று முனுமுனுக்க.. 

 

“எக்ஸாக்ட்லி… உன்னோட பாட்னர், நோ பாட்னர் இல்ல உன்னோட ஃப்ரண்ட் சக்தி தான் நீ இங்க இருக்கன்னு சொன்னாரு, அதான் வந்தேன்.” என்றவன் குரலில் என்ன இருந்ததோ… “எதுக்கு வந்தீங்க? என்று தியா கோபமாக கேட்க…

 

“ஹலோ மேடம். நா ஒன்னும் உங்க இந்த அழகு முகத்தை பாக்குறதுக்கு ஏங்கி, தவிச்சு இங்க வர்ல, அது மாதிரி எதும் உங்களுக்கு ஃபீல் ஆச்சுன்னா, ப்ளீஸ் அத சனிடைசர் போட்டு தொடச்சிடுங்க, பிகாஸ் எனக்காக என் மாமா பொண்ணு வெயிட்டிங்.” என்று அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன். “தாத்தா தான் உன்னை கூட்டி வர சொன்னாரு, உடனே உன்னை கூட்டி வர சொன்னாரு, நீ முதல்ல கெளம்பு டைம் ஆகுது சீக்கிரம்” என்று அவளை அவசரப்படுத்த…  

 

தியா வெகுவாக குழம்பியவள், “என்ன ஆச்சு? நா எதுக்கு அங்க வரணும். தாத்தா தானா என்னை போக சொன்னாரு… இப்ப ஏன் கூப்பிடுறாரு?”

 

“ம்ம்க்கும்” என்று அலட்சியமாக சிரித்த அகரன், “நா அப்பவே அவர்கிட்ட சொன்னேன். உங்க பேத்தி நா கூப்பிட்ட வரமாட்ட. அவங்களுக்கு சுத்தமா என்னை கண்ட புடிக்காது. வேற யாரயாது அனுப்புகன்னு… ஆனா, அவரு தான் நான் கூப்டேன்னு சொல்லி பாரு, அடுத்த நிமிஷம் எம் பேத்தி ஏன்? எதுக்குன்னு மறு கேள்வி கேக்காம உன்னோட கெளம்பி வருவான்னு. ஆனா, பாரு நீங்க அவர் பேச்ச கேக்க மாட்டேங்கிற… சரி நா அவருக்கே ஃபோன் போட்டு சொல்லிடுறேன். உங்க பேத்தி உங்க பேச்ச கேக்கா மாட்டேங்கிற. என்னோட வர முடியாதுனு சொல்லிட்டான்னு” என்று அவன் ஃபோனை எடுக்க, தியா பட்டென அவன் ஃபோனை பிடிங்கியவள். “ஹலோ நா எப்ப அப்டி சொன்னேன். என்ன ரீசன்னு தானா கேட்டேன். அதுக்கு ஏன் நீங்க தாத்தா கிட்ட என்னை பத்தி கொளுத்தி போடுறீங்க.” என்று முறைக்க…

 

“நீதானா சொன்ன வரமாட்டேன்னு. அதுக்கு அப்ப என்ன அர்த்தம்.?”

 

“அது… அது எனக்கு இங்க நெறய வேல இருக்கு, டக்குன்னு எப்டி விட்டு உங்க கூட வரமுடியும். அதுக்காக அப்டி சொன்னேன்” என்று மழுப்ப…

 

“ஓஓஓ… அப்ப உங்களுக்கு என்னோட வர்ரதுல ப்ராப்ளம் இல்ல. வேலைக்கு லீவ் போடுறது தான் ப்ராப்ளம் அப்டி தானா?” என்று அகரன் கேட்க, தியாவும் எதற்கும் இருக்காட்டும் என்று “ஆமாம்” என்று தலையாட்டி வைக்க…

 

“அப்ப சரி. நோ ப்ராப்ளம். உன்னோட ஃப்ரண்ட் சக்தி கிட்ட ஓஓஓ சாரி. உன்னோட பாட்னர் மிஸ்டர். சக்தி கிட்ட நா ஆல்ரெடி இன்பர்ம் பண்ணிட்டேன். அவரும் ஓகே சொல்லிட்டாரு… சோ! நீ இப்ப நீ கெளம்பு உன்னோட வீட்டுக்கு போய் தேவையான திங்ஸ் எடுத்திட்டு ஊருக்கு போலாம்” என்றவன் அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் கார் பார்க்கிங் நோக்கி செல்ல, 

 

“எதுக்காக நா அங்கிருந்து வெளிய வந்தேன்னு தெரியாம, தாத்தா என்னை மறுபடியும் அங்க கூப்பிடுறாரு. இப்ப நான் என்ன செய்றது. நா அங்க எதாவது கேட்ட என்ன சொல்வேன். ஏன் இன்னு கல்யாணம் நடக்கலனுன் தாத்தா கேப்பாரே, நா என்ன பதில் சொல்றது” என்று நினைக்கும் போதே தியாவுக்கு உள்ளுக்குள் திகில் பரவ ஆரம்பித்தது.

 

அகரன் காரை ஓட்ட தியா அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். தியா தங்கியிருந்த ஃபிளாட்க்கு சென்ற இருவரும் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு உடனே கிளம்பிவிட, தியா ஒரு தவிப்போடு அகரனுடன் சென்றாள். அவள் வீட்டில் இருந்து நேராக ஒரு ஹோட்டலுக்கு சென்று அகரன் காரை நிறுத்த, 

 

“எதுக்கு இங்க காரை நிறுத்தி இருக்கீங்க? என்று கேட்வளை நக்கலாக பார்த்தவன், “டோண்ட் வொரி திரவியா மேடம்… நா நல்லா பையன் தான், நீங்க நம்பி வரலாம்.” என்றவன் அவன் அறைக்கு சென்று தன் உடைகளை எடுத்துக்கொண்டு ரூம்மை காலி செய்துவிட்டு வர, “நீங்க எப்ப பெங்களூர் வந்தீங்க? என்ற தியாவை பார்க்காமல் தன் ஃபோனில் கண்ணை வைத்திருந்த அகரன். இன்னைக்கு காலையில வந்தேன். இங்க ரூம் எடுத்து ப்ரஷ் ஆகிட்டு உன்னை பாக்க வந்தேன். விவரம் போதும்னா வந்து கார்ல உக்காரு” என்று நகர்ந்தவனை நிறுத்தியவள், “சாவிய குடுங்க நா டிரைவ் பண்றேன்” என்றவளை இப்போது நிமிர்ந்து பார்த்தவன்.. “ஏன்” என்று புருவம் உயர்த்தி கேட்க…

 

“நைட் ஃபுல் ல டிரைவ் பண்ணிட்டு, கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம இப்ப மறுபடியும் டிரைவ் பண்ண வேணாம். கார் கீய குடுங்க, நா டிரைவ் பண்றேன். நீங்க கொஞ்ச நேரம் சீட்ல படுத்து தூங்குங்க” என்றவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த அகரன் கார் கீயை அவளிடம் கொடுத்துவிட்டு அமைதியாக சீட்டில் சாய்ந்து கண்மூடிக்கொண்டான்.

 

அகரன் கார் சிட்டில் சாய்ந்து படுத்தவன் அப்டியே தூங்கிவிட, தியா அடிக்கடி அவனை திரும்பி பார்த்தபடியே காரை ஒட்டிக்கொண்டிருந்தாள். மணி ரெண்டை நெருங்க தியா, ஒரு ஹோட்டல் வாசலில் காரை நிறுத்தியவள். அகரனை திரும்பி பார்க்க அவன் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தான். அவனை தொட்டு எழுப்ப தயங்கியவள், எப்டி அவனை எழுப்புவது என்று தயங்கி, மெதுவாக “அகரன்” என்றழைக்க… ‘ம்ம்ம்’ அவன் அசையவில்லை. இரண்டு மூன்று தடவை அவன் பெயரை கூப்பிட்டு பார்த்தவள். அவன் எழுந்ததால், வேறு வழி இல்லாமல் அவள் தோளை பிடித்து உலுக்கி “அகரன்” என்று சத்தமாக அழைக்க. கண்களை கசக்கிக்கொண்டு எழுந்த அகரன். “அதுக்குள்ள ஊர் வந்துடுச்ச?” என்றபடியே வெளியில் பார்த்தவன். “இப்ப எழுக்கு இங்க வண்டிய நிறுத்தி இருக்க? என்று முறைத்தவனை நக்கலாக பார்த்த தியா. “ம்ம்ம் ஹோட்டலுக்கு எதுக்கு வருவாங்க. திங்க தான் எறங்குங்க” என்று தியா கார் கதைவை திறக்க…

 

“எனக்கு பசிக்கல…” என்று திமிராக சொன்னவன் முகமே சொன்னது அவன் வயிறு வாய்விட்டு “டேய் உனக்கு வேணாம்டா, பட் எனக்கு வேணும்டா. எதாவது சாப்ட கூடுடா” என்று அலறுவது தியாவுக்கு நன்றாக கேட்டது. 

 

இரவு முழுவதும் டிரைவ் செய்து வந்தவன். காலையிலேயே தியாவை பார்க்க வந்துவிட காலையிலும் எதுவும் உண்ணவில்லை. அது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிய. தியா அவனையே ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவள். “நா காலையில ஒன்னு சாப்டல… பசிக்கிது” என்றது தான் அகரன் அடுத்த நிமிடன் சாம்பாரில் சாதத்தை குழைத்து வெளுத்து கட்டிக்கொண்டிருந்தான்.

 

“பசிக்கல” என்றவன் வாய் முழுவதும் பல பல ஐட்டங்கள் போட்டி போட்டுக்கொண்டு உள்ளே போக, “இவ்ளோ பசிய வச்சிட்டு, வா சாப்பிடலாம்னு கூப்பிட்டா, வாய் கூசாமல் பசிக்கல ன்னு பொய சொல்றான்‌‌. எதுக்கு இந்த வெட்டி வீராப்பு” என்று மனதில் அகரனை திட்டியவளுக்கு காலையில் பிரியா சொன்னது நினைவு வர… “ஆமா… எதுக்கு ஆபீஸ் ரிசப்ஷன்ல, பிரியா நீங்க யார்னு கேட்டதுக்கு, என்னோட ஹஸ்பண்ட் னு சொன்னீங்க?” என்றவளை குனிந்தபடியே, இமையை மட்டும் உயர்த்தி ஆழமாய் பார்த்தவன். “நா ஒன்னு அப்டி சொல்லலியே… நா உன்னோட மாமானு தான் சொன்னேன். அத அந்த பொண்ணு எப்டி புரிஞ்சுகிச்சோ எனக்கு எப்டி தெரியும்” என்றவன் சாப்பிட்டு முடித்து எழுந்து கொள்ள… 

 

“ஒருவேள இவர் மாமான்னு சொன்னது பிரியா காதுல வேற மாதிரி கேட்டிருக்கும் போல, அத அந்த லூசு வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டு நம்ம கிட்ட ஒளறி இருக்கு, இது தெரியம இத இவர் கிட்ட வேற கேட்டு தொலச்சிட்டேன்” என்று தலையில் அடித்துக்கொண்டவள், “ஆமா இவரு ஏன் என்னோட மாமான்னு சொன்னாரு, இதுவரைக்கும் இவரு அப்டி சொன்னது இல்லயே?” என்று குழம்ப… “ஹலோ மேடம் உங்க திங்கிங் முடிஞ்சுதுன்னா நம்ம கெளம்பலாமா?? நைட்குள்ள ஊருக்கு போகணும்” என்றவன் அவர் வருகிறாளா இல்லைய என்று கூட பார்க்காமல் காருக்கு சென்றுவிட, தியாவும் அவன் பின்னே சென்றாள்‌.

 

கார் சீரான வேகத்தில் செல்ல, அகரன் எதாவது பேசுவான் என்று எதிர்பார்த்து வெறுத்த தியா, “நா தான் உங்க கூட வந்துட்டேனே…?! இப்பவச்சும் தாத்தா என்னை எதுக்கு கூட்டி வர சொன்னருன்னு சொல்லலாம் இல்ல” என்றவள் குழம்பி முகத்தை பார்த்த அகரன்.

 

“ஊர்ல நம்ம இடம் ஒன்னு இருக்கு, அதுல நா ரைஸ் மில் தொடங்க போறேன். அதுக்காக அந்த இடத்தை எம் பேர்ல ரிஜிஸ்டர் பண்ணனும். வாரிசுன்ற முறையில, அதுல நீயும் சைன் பண்ணனும். அதுக்கு தான் அதுக்காக மட்டும் தான் நா உன்னை கூப்புட வந்தேன். இத சாக்கா வச்சு உன்னை பாக்க தாத்தா ப்ளான் போட்டாரு. சோ ஒரு ஸ்டோன் டூ மேங்கோஸ்” என்றவன் வார்த்தையில் இருந்த அன்னியதனம் தியாவை ஏதோ செய்ய, தன் கவனத்தை ரோட்டில் திருப்பினாள்.

 

“என்ன திரவியா மேடம். தாத்தா எதுக்கு எனக்கு இடத்தை தரர்ணு கேக்க தோனலயா?”

 

“நா எதுக்கு கேக்கணும். அது அவர் இஷ்டம். இதுல நா கேக்க என்ன இருக்கு?!”

 

“இருக்குங்க திரவியா மேடம். நீங்களும் அந்த சொத்துக்கு ஒரு வாரிசு ஆச்சே. சோ நீங்க ஏன் அகரனுக்கு மட்டும் அந்த இடத்தை குடுக்குறீங்கன்னு கேக்க உங்களுக்கு உரிமை இருக்கு” என்றவனின், ‘ங்க, வாங்க, போங்க’ என்ற மரியாதை வார்த்தைகள் அனைத்தும், எனக்கு நீ யாரும் இல்லை என்று அகரன் சொல்லாமல் சொல்வது போல் இருக்க, தியா எதுவும் பதில் பேசவில்லை.

 

“சரி நீங்க கேக்க மாட்டிங்க, நீங்க எல்லாம் பெரிய ஆளு, உங்க கிட்ட இல்லாத பணமா…!” என்று நக்கலாக சிரித்தவன். “தாத்தா அந்த இடத்தை எனக்கு கல்யாண பரிச கொடுக்குறாரு, நாளைக்கு சாயங்காலம் எனக்கும் என் மாமா மகளுக்கும் நிச்சயம், அடுத்த மூனு நாள்ல கல்யாணம்” என்றது தான் தியா போட்ட சடன் பிரேக்கின் சத்தம் அகரன் காதை கிழித்தது.

 

“ஹலோ மேடம் கொஞ்சம் பாத்து. நா கல்யாண மாப்ள. நீங்க பாட்டுக்கு எங்கயாது கொண்டு வண்டி விட்ர போறீங்க. உங்ககிட்ட காரை தந்தது தப்ப போச்சே. பாத்துங்க நா உயிரோட வீடுபோய் சேரணும். பாவம் என்ற‌ மாமா மக எனக்காக காத்துட்டு இருக்கா” என்றவன் தியா முகத்தை பார்க்க அதில் வெறுமை சூழ்ந்திருந்தது.

 

அவள் முகம் அகரனை என்னவோ செய்ய, ” ஏய் என்ன ஆச்சு உனக்கு? நா சும்மா” என்று ஆரம்பிக்கும் போதே அவனை தடுத்தவள். “டோண்ட் வோரி அகரன். அவ உங்களுக்கு மாமா பொண்ணுனா, எனக்கு அவ தங்கச்சி. உங்களை பாத்திரமா கொண்டு போய் சேர்த்துடுவேன்” என்றவளை கண்கள் சுறுக்கி பார்த்த அகரன், “காரை எடு” என்று அழுத்தமாக சொல்ல. தியா தான் மனதின் வேகத்தை முழுதும் கார் ஸ்டியரிங்கில் காட்ட, பஞ்சாய் பறந்த கார். இரவு நெருங்கும் முன்னமே வீட்டு வந்து சேர்ந்தது.

 

கார் சத்தம் கேட்டு முதல் ஆளாக வெளியே ஓடி வந்த திரவியம் தாத்தா. பேத்தியை பார்த்து பார்த்தபடி நிற்க, அகிலா பாட்டி ஓடி வந்து பேத்தியை கட்டிக்கொண்டு கதறியவர். தாத்தா போட்ட சத்தத்தில் வாய் மூடிக்கொள்ள. 

“ரத்திரி நேரத்துல வெளிய நின்னு என்ன இதெல்லாம். முதல்ல அவளை உள்ள கூப்புட்டு வா. குளிச்சு, சாப்புட்டு தூங்கட்டும். எல்லாத்தையும் நாளைக்கு காலையில பேசிக்கலாம்” என்று தாத்தா உத்தரவு போட, தியாவை பார்க்க ஆசையாக வந்த குடும்பத்தினர் அனைவரும் அமைதியாக செல்ல‌. தியாவும் உள்ளே சென்றாள்.

 

அடுத்த நாள் காலை பொழுது சூரிய வெப்பத்தில் அனலாய் விடிந்தது.