மண் சேரும் மழைத்துளி

 

மண் சேரும் மழைத்துளி 1

 

 

காலையும், மதியமும் இணையும் பொழுது.. வானம் வெளிச்சத்தோடு, வெயிலையும் பூமி மீது பொழிந்து கொண்டிருக்க.. அழகு யானையென்று அமைதியாக நடப்பது போல், அந்த தார் சாலையில் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது அந்த பேருந்து.. நகரத்தின் நச்சு பழக்கம் இன்னும் முழுமையாக எட்டிப் பார்க்காத இடம் போலும்.. காற்றில் கார்பன்வாயு வாடைக்கு பதில் விளைந்த நெல்மணிகளின் வாசம் நாசியை துளைத்தது..

 

காதில் மாட்டியிருந்த ஹெட்-செட்டில் ஏ.ஆர் ரகுமானின் பாட்டை முணுமுணுத்தபடியே அந்த அழகிய கிராமத்தின் அழகை கண்களில் பாடம் பிடித்திக்கொண்டிருந்தாள் அந்த கனடா நாட்டு பைங்கிளி..

 

இதமான வெயிலின் வெப்பம் முகத்தில் மோத, காற்றில் அசைந்தாடும் கரும்பு தோகையின் அழகிய ஆட்டம் கண்களுக்கு விருந்தாக அமைய அனைத்தையும் கொஞ்சம் வியந்து, நிறைய ரசித்து, அந்த சுகத்தை உள் வரை உணர்ந்து மயங்கி, கிராம தேவதையாக தன்னை உணர்ந்து வாயலில் அலைந்து கொண்டிருந்த அந்த பைங்கிளியின் ஏகாந்தத்தை கெடுத்தது அந்த பஸ் டிரைவர் போட்ட சடென் ப்ரேக்..

தன் அழகிய கற்பனை கலைந்ததில் கடுப்பான அந்த கனடா பைங்கிளி, “வூ இஸ் தி டாக் வாய்ஸ், எவன்டா அவன் என் கற்பனைய கெடுத்தது” என்று எழுந்து பார்க்க.. அங்கு பயணி ஒருவருடன் சத்தமாக கத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தான் பஸ் டிரைவர்.. இனிமே நா இந்த பஸ்சை ஓட்ட மாட்டேன் என்று டிரைவர் பஸ்சைவிட்டு இறங்கிவிட.. அந்த பஸ்சே பரபரப்பானது.. அந்த பஸ்சை விட்டால், அந்த இடத்தில் அடுத்த பஸ் வர இன்னும் ஒரு மணி நேரமாகும் என்பதால் அனைவரும் டிரைவரிடம் பஸ்சை எடுக்கச் சொல்லி கேட்க, அந்த டிரைவர் அவர்கள் பேச்சை கேட்பதாக இல்லை.. அந்த பஸ் டிரைவர் குடி போதையில் வண்டி ஓட்டியதை பார்த்து பயணி ஒருவர் அந்த டிரைவரிடம் சண்டைபோட, அந்த டிரைவர் அந்த பயணியை அசிங்கமாக திட்ட, கோவத்தில் அந்த பயணி டிரைவரை அடித்துவிட பிரச்சனை பெரிதாகியது..

 

இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் நம்ம கனடா பைங்கிளி..

 

நடுத்தர வயது பெண் ஒருவர் டிரைவரிடம் ஓடி வந்தவர்.. “தம்பி எம் பொண்ணுக்கு இடுப்புவலி கண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்கிட்டு இருக்கோம் தம்பி.. அவ பஸ்ல வலியில துடிச்சிட்டு இருக்க தம்பி.. தயவு செஞ்சு பஸ்சை எடுப்பா என்று கெஞ்ச.. அந்த டிரைவர் அவர் பேச்சை காது கொடுத்து கூட கேட்கவில்லை.. கூட்டத்தில் அனைவரும் குடிச்சுட்டு வண்டி எடுத்தது இல்லாம இப்ப நடுவழியில இப்டி வண்டிய திறுத்தி கலாட்டா பண்றீயே இது சரியில்ல.. ஒழுங்க வண்டிய எடு என்று அந்த டிரைவரிடம் எவ்வளவு பேசியும் பிரயோஜனம் இல்லை..” கூட்டத்தில் ஒரு குரல் “டேய் நீ இப்டி பண்றது மட்டும் பெரிய வூட்டு புள்ளைக்கு தெரிஞ்சுது உன் தோளை உரிச்சிடும் ஜாக்கிரதை.. மரியாதைய வண்டி எடு என்று மிரட்ட.. அந்த டிரைவரே “என்ன டா மிரட்றீய..!! அவன் என்னை என்ன செஞ்சிடுவான்னு நானும் பாக்குறேன் டா.. அவன் இந்த பஸ்க்கு சொந்தக்காரன்ன, நானென்ன அவனுக்கு அடிமைய.. அவன் என்ன பண்றன்னு நானும் பாக்குறேன் அவனுக்கு பயந்த காலமெல்லாம் மலயெறி போச்சு என்று போதையில் கண்டபடி உலறி வீம்பாக நிற்க..” நாம் கனடா பைங்கிளி நடப்பது அனைத்தையும் பார்த்தவள்.. அந்த கர்ப்பிணி பெண்ணின் அம்மா அருகில் வந்தவள்.. “உங்களுக்கு ஹாஸ்பிடல் போகும் வழி தெரியுமாம்மா என்று கேட்க?? தன் முன் ஜீன்ஸ் பேண்ட், பாதிவரை மடித்த மேல் சட்டை போட்டு மொத்த முடியையும் ஒரு ரப்பர் பேண்டில் கட்டியிருந்த நம்மவளை ஏறயிறங்க பார்த்தவர்.. தெரியும் என்று தலையாட்ட.. அப்ப வண்டில ஏறுங்க.. நா பஸ்ச ஓட்றேன் என்ற அழுத்தமாக சொல்ல..” அவள் கண்ணில் தெரிந்த தைரியத்தை பார்த்த அந்த அம்மா சரிம்மா என்று தலையாட்டிவர் பாஸ்சில் ஏற.. அங்கு ஒரே சலசலப்பு. அவள் அந்த டிரைவரிடம் சென்றவள்.. “பஸ் சாவிய எடு என்று கேட்க..

 

ஏய் யாருடி நீ..?? என்னை மீறி வண்டிய‌‌ எடுத்துடுவீயா நீ?? உனக்கு எவ்ளோ தைரியம் இருந்த என் கிட்டயே சாவி கேப்ப.. ஊருக்கு புதுசா இருக்க.. ஒழுங்க இங்கிருந்து போய்டு இல்ல என்று அவளை முறைக்க.. அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவள்.. “சாவிய எடு டா டேய்” என்று அழுத்தமாக கேட்க.. “ஏய் யாரா பாத்து டேய்னு சொன்ன என்று அவளை அடிக்க கை ஓங்க??” தன் முகத்திற்கு நேராக வந்த அவன் கையை இறுக்கிப் பிடித்தவள்.. அப்படியே அவன் கையை முறுக்கி கீழே மண்டியிடவைத்து அவன் கன்னத்தில் தன் கை ரேகை பதியும் படி பளார் என்று ஒன்று வைக்க.‌.. அங்கிருந்த அனைவரும் பே என்று முழித்தனர்.. அந்த டிரைவர் அவள் முறுக்கிய முறுக்கில் கையை தூக்கக்கூட முடியாமல் வலியில் கத்தியவன் அப்படியே ரோட்டில் படுத்து விட.. அவன் கையில் இருந்த சாவியை பிடுங்கிய நாம் பைங்கிளி சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆண்களை பார்த்து கேவலமாக ஒரு லுக்கை விட்டுட்டு.. “இதை” என்று கீழே கிடந்த டிரைவரை கை காட்டியவள்.. நடுரோட்டில கெடக்கு எடுத்து ஓரம் போடுங்க பஸ்சை எடுக்கணும்… அதையாவது ஒழுக்க செஞ்சுட்டு பஸ்ல ஏறுங்க ஆம்பளைங்களா என்று நக்கலாக சொன்னவள்..‌ அந்த கர்ப்பிணி பெண்ணிடம் தைரியமாக இருக்க சொல்லிவிட்டு.. டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்து பஸ்சை ஸ்டார்ட் செய்த அடுத்த பத்து நிமிஷத்தில் ஹாஸ்பிடலில் இருந்தாள்..

 

பிரசவ அறைக்கு வெளியே அமர்ந்திருந்தவள் காதில் அங்கு சிலர் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.. “இந்த டிரைவருக்கு எவ்ளோ திமிரு டா.. நாம்ம எல்லாம் அவ்ளோ சொல்றோம்.. எதையும் காதுல வாங்காம எவ்ளோ திமிரா இருந்தான் என்று ஒரு குரல் கேட்க.. விடு டா.. இன்னேரம் பெரிய‌ வீட்டு பையனுக்கு சேதி போயிக்கும்.. இன்னைக்கு அந்த டிரைவர் பயலுக்கு செம்ம சம்பவம் காத்திருக்கு என்று இன்னொரு குரல் வந்தது.. ஆமாடா நீ சொல்றது சரி தான்.. தம்பி பத்தி தெரிஞ்சும் இந்த பய இப்டி பண்ணிட்டான்.‌. அது மட்டுமா தம்பியையே அவன் இவனு பேசிட்டான் பாரு.. இனி என்னகுமோ” என்று சிலர் பேசிக்கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்தாள்..

 

அந்த கர்ப்பிணி பெண்ணி தாய் கையில் அப்போதுதான் பிறந்து டவலில் சுற்றியிருந்த குழந்தையுடன் வேகமாக அவள் அருகில் வந்தவர்.. உட்கார்ந்திருந்தவள்‌ இரு கையையும் பிடித்து தன் கண்ணில் ஒற்றிக்கொண்டு.. “நீ நல்ல இருக்கணும்மா.. உன்னால தான் எம் பொண்ணும், பேத்தியும் இப்ப நல்லா இருக்காங்க.. நீ நல்லா இருக்ணும்ம்மா.. நீதான் எம் பேத்திக்கு பேர் வைக்கணும் என்று உணர்சி பொங்க சொல்லி.. அந்த பிஞ்சு குழந்தையை அவள் கையில் கொடுக்க..” அழகு புதையல் போல் தன் கையில் இருந்த குழந்தையை இமைக்காமல் பார்த்தவள்.. வாழ்த்துகள் மா உங்களுக்கு பேத்தி பொறந்ததுக்கு.. குழந்தைக்கு பேர் வைக்கிற உரிமை அதை பத்து மாசம் தன் வாயித்துல சுமந்த அம்மாக்கு மட்டும் தான் இருக்கு என்றவள் தன் கையில் இருந்த பணத்தை அவரிடம் கொடுத்து பாப்பாக்கு எதாவது வாங்கி கொடுங்க என்றவள் அங்கிருந்து நகர.. உன் பேரு என்னம்மா என்ற அந்த தாயின் முகம் பார்த்து மென்மையாக சிரித்தவள்.. ‘தியா’ எம் பேரு தியா ம்மா என்றவள் திரும்பி நடக்க.. அங்கே அவளையே உற்று பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் அவன்.. அகரன்…

 

தன்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்தவனை அவள் தீயாக முறைக்க.. அவளை நெருங்கிய அகரனின் தம்பி நிலவன்.. “நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றிங்க.. இன்னைக்கு உங்களால தான் நாங்க ஒரு பெரிய பழியில இருந்து தப்பிச்சோம்.. சரியான நேரத்துல நீங்க மட்டும் அந்த பொண்ணை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வராம இருந்திருந்த என்னாகியிருக்கும் என்க..” அவள் அவன் என்ன சொல்கிறான் என்று ஒன்றும் புரியாமல் நிலவனையும், அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அகரனையும் மாறி மாறி பார்க்க..”

 

அங்கிருந்த பெரியவர் ஒருவர்.. “இதோ பெரிய வீட்டு தம்பி வந்திடுச்சு” என்று அகரனை கைகாட்டிச் சொல்ல.. அவளுக்கு புரிந்தது விட்டது.. அவன் யார் என்று.. அதுவரை அவள் கண்களில் இருந்த குழப்பம் மாறி ஒரு இறுக்கம் தோன்ற.. “நீங்க தான் அந்த பஸ் ஓனர்ர என்று அகரன் முகத்தை பார்த்து கேட்க.. அகரன் அவள் கண்களையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன்.. “ம்ம்ம் எஸ்.. அது எங்ளோட பஸ் தான்.. அண்ட் ரொம்ப நன்றி.. நீங்க செஞ்ச உதவிக்கு என்றவன். அந்த டிரைவரை இன்னைக்கு என்று தன் கையை முறுக்கி ஏதோ சொல்ல வர..” அவள் போதும் நிறுத்து என்பது போல் கை காட்டி, ‌‌அவனை ஒரு நிமிடம் தீர்க்கமாக பார்த்தவள்.. “நன்றிய எதிர்பார்த்து நா எதுவும் செய்றதில்ல மிஸ்டர்.. அதோட இத நா உங்களுக்காக செய்யல.. சோ உங்க நன்றி எனக்கு தேவையில்ல.. அண்ட் அந்த டிரைவரை நீங்க என்ன செஞ்ச எனக்கென்ன.. இன்பேக்ட் அப்டி ஒருத்தனை வேலைக்கு வச்சது உங்க தப்பு, உங்க அலட்சியம்.. உங்க அலட்சியத்தால் இன்னைக்கு ரெண்டு உயிர் ஆபத்துல மாட்டியிருக்கும், வேலைக்கு சேக்கும்போது ஆள் தராதரம் பாக்க மாட்டீங்கள என்ன??” என்று அனல் தெறிக்கும் குரலில் சொன்னவள் அங்கிருந்து ரெண்டாடி நடந்து.. பின் திரும்பி அகரனை பார்த்தவள்.. “உங்கிட்ட வேலை செய்றவங்களுக்கு உங்க மேல பயம் இருக்க கூடாது மிஸ்டர்.. மரியாதையும், விஸ்வாசமும் தான் இருக்கணும்.. உங்க அடி, உதை மேல இருக்க பயம் ஒருநாள் மறஞ்சு போய்டும்.. பட் மரியாதையும், விஸ்வாசமும் நீங்க ஒழுக்கமா இருக்க வரை இருக்கும்.. அந்த டிரைவருக்கு மட்டும் உங்க மேல மரியாதை, விஸ்வாசம் இருந்திருந்தால், அப்டி செஞ்சிருக்க மாட்டான்.. பிக்காஸ் அப்டி செஞ்ச அது அந்த பஸ் ஓனர் உங்களுக்கு அசிங்கம்னு யோசிச்சு இருப்பான்.. முடிஞ்ச இனிமே அப்டி பட்ட மனுஷங்களை வேலைக்கு வைங்க, ஏனோதானோனு கண்டதையும் வேலைக்கு எடுக்கதீங்க மிஸ்டர்” என்றவள் ஹேன்ட்பேகில் இருந்த ஃபோன் அடிக்க.‌ அதை எடுத்து காதில் வைத்தவள்.‌.. “சாரி, சாரி அங்கிள்.. நா வந்த பஸ்ல ஒரு பிரச்சினை அதான் லேட் ஆகிடுச்சு.. நீங்க அங்கயே இருங்க நா வந்துடுறேன் என்றவள்” அகரனை முறைத்தபடி அங்கிருந்து சென்றாள்..

 

தனக்கு நினைவு தெரிந்த இத்தனை நாளில் அகரன் முன் யாரும் இப்டி நேருக்கு நேர் நின்று நீ செஞ்சது தப்பு என்று அவனை குறை சொன்னதில்லை.. சொல்லும்படி இதுவரை அகரனும் நடந்ததில்லை.. அகரன் கோபக்காரன் தான்.. ஆனால் அந்த கோபத்தில் எப்போதும் ஒரு நியாயம் இருக்கும்.. அதனாலேயே அந்த ஊரில் அவன் தாத்தாவை அடுத்து அகரனுக்கு தனி மரியாதை உண்டு.. அப்படிபட்ட தன் அண்ணனை ஒரு பெண் லெஃப்ட் அண்ட ரைட் வாங்குவதையும், அதை அகரன் அமைதியாக கேட்பதையும் பார்த்து நிலவன் வாயடைத்து நிற்க.. அகரன் போகும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருதான்..

 

“அகரா.. டேய் அகரா என்ன டா அந்த பொண்ணு பாட்டுக்கு உன்னை கண்டபடி திட்டிட்டுப் போகுது.. நீ ஒன்னும் சொல்லாம அப்டியே நிக்கிற.. என்ன ஆச்சு உனக்கு” என்று நிலவன் அகரனை உலுக்க.. அகரன் சுயவுணர்வுக்கு வந்தவன்.. திரும்பி நிலவனை பார்த்து.. “அந்த பொண்ணு கண்ணை நா பாத்து” என்று ஏதோ சொல்ல வந்தவன் கண்களை இறுக்கமாக மூடித்திறந்து.. “ஒன்னு இல்ல டா.. நீ வா நம்ம அந்த பொண்ணையும், குழந்தையையும் பார்த்துட்டு விட்டுக்கு போவோம்.. நேரம் ஆகுது” என்றவன் மீண்டும் ஒருமுறை அவள் சென்ற திசையை திரும்பி பார்த்துவிட்டு நடக்க நிலவன் இங்க என்னடா நடக்குது என்ற ரேஞ்சில் திருதிருவென முழித்தவன் அகரன் பின்னாலே சென்றான்..

 

அந்த வீடே பரபரப்பாக இருந்தது.. இன்னும் பத்து நாளில் வரப்போகும் திருவிழா ஏற்பாடுகளுடன் திருவிழா முடிந்த அடுத்த ஒருவாரத்தில் நடக்கப்போகும் அந்த வீட்டின் முத்த பேத்தி தாமரையின் திருமண ஏற்பாடுகளும் அங்கு கலைகட்டியது.. ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்க அந்த வீட்டின் உயிர்நாடியான அகிலா பாட்டி மட்டும் நொடிக்கு ஒரு முறை வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.. அகிலா பாட்டியின் கண்கவர் கதாநாயகன் திரவியப்பெருமாள் தாத்தாவும் பேப்பர் படித்துக்கொண்டே இல்ல பேப்பர் படிப்பது போல் நடித்துக்கொண்டே தன் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தவர்.. “அடியேய் நீ வாசலையே பார்த்துட்டு இருந்த மட்டும் அவன் வந்துடுவான என்ன..?? வரணும்னு இருந்திருந்த இத்தனை வருஷத்துல ஒரு முறையாவது அவன் வந்திருக்க மாட்டானா..??? நீங்க தான் என் பேச்ச கேக்காம அவனை தேடிட்டு இருந்தீங்க.. இப்ப அவனை கல்யாணத்துக்கு கூப்புடலன்னு யார் அழத.. தேவையில்லாத வேலைய பாத்துட்டு.. அவன் எல்லாம் வரமாட்டான்.. நீ சும்மா வாசலை பாத்துட்டு இருக்காம உள்ள போய் வேலைய பாரு டி” என்ற தன் கணவனை முறைத்த அகிலா.. “ஏங்க.. உங்க வாய்ல நல்லா வார்த்தையே வராத.. எந்தன வருஷம் கழிச்சு புள்ள வரேன் தகவல் தந்திருக்கான்.. இப்ப போய் இப்டி கண்டபடி பேச்சிட்டு இருக்கீங்களே.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.. எம் புள்ளையை வீட்ட விட்டு வெரட்டுனது மட்டும் இல்லாம உயிரோட இருக்கவரை இந்த வீட்டு வாசப்படிய மிதிக்காதன்னு வேற சொல்லிட்டீங்க.. எம் புள்ள ரோசக்காரன் அதான் இங்க திரும்பி வரவே இல்ல என்று பாட்டி கண்ணை கசக்க.. “ஆமா உன்ற அருமை புள்ள பண்ண வேலைக்கு வீட்டவிட்டு வெரட்டாம, தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா.. அவனை உயிரோட விட்டேன்னு சந்தோஷப்பாடு டி.. அவனால நா பட்ட அசிங்கம், அவமானம் எல்லா இப்ப நெனச்சாலும் எனக்கு உள்ள எரியுது டி.. நா அவனை தலமுழுகி ரொம்ப வருஷம் ஆச்சு டி.. இப்ப கூட உனக்காக தான் அவனை கல்யாணத்துக்கு கூப்புட சம்மதிச்சேனே தவிர எனக்கு இன்னும் அவன் மேல இருக்க கோவம் தீரால.. தீராவும் தீராது” என்று தாத்தா கொதிக்க.. 

 

 

பாட்டி, “சரி விடுங்க ஏதோ நடந்தது நடந்து போச்சு.. கடவுள் செயலே இல்ல நம்ம நல்லா நேரமோ. இப்ப தான் அவன் வர்ரத தகவல் தந்திருக்கான்.. மறுபடியும் நீங்க எதுவும் பேசி ஒரண்ட இழுக்காம இருந்தா போதும்.. நீங்க ஒழுங்க உங்க வாய மூடிட்டு அந்த பேப்பர் மோஞ்சுட்டு இருங்க.. இதுக்கு மேல எம் புள்ளயபத்தி எதும் பேசுனீங்க காபில கருப்பட்டிக்கு பதில் மிளகா பொடிய கலந்துடுவேன் ஜாக்கிரதை” என்று அகிலா பாட்டியை முறைக்க… “நீ செஞ்சாலும் செய்வடி ஆத்தா” என்றவர் கப்பென வாயை மூடிக்கொண்டார்..”

 

என்ன தாத்தா பாட்டிகிட்ட எதுவும் வாய்கூடுத்து மாட்டிக்கிட்டிய என்று தாத்தாவை கிண்டலாடித்தபடியே நிலவன் வர, டேய் வாயமூடு டா.. பெரியவங்க கிட்ட இப்டி பேசாதன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் என்று தம்பி தலையில் தட்டினான் அகரன்..

 

விடுடா அகரா.. எம் பேரன் எங்களை கிண்டல் பண்ணாம வேற யாரை பண்ணுவ என்று பாட்டி நிலவனை சப்போட்ட பண்ண அகரனும், தாத்தாவும் தலையில் அடித்துக் கொண்டனர்..

 

“டேய் அகரா நீ போன வேலை என்ன ஆச்சு.‌ அந்த பொண்ணுக்கும் குழந்தைக்கும் ஒன்னு இல்லயே.. அந்த டிரைவரை என்ன பண்ண” என்று திரவியம் தாத்தா பரபரக்க..

 

ஒரு பிரச்சினையும் இல்ல தாத்தா.. அந்த பொண்ணும், குழந்தையும் நல்லா இருக்காங்க.. சரியான நேரத்துல ஹாஸ்பிடல் கொண்டு போனதால ஒரு பிரச்சினையும் இல்ல.. இன்னும் கொஞ்ச நேரம் லேட்டாகி இருந்தாலும் ரொம்ப சிக்கலாகி இருக்குனு டாக்டர் சொன்னாரு நல்லவேளை அந்த பொண்ணு சரியான நேரத்துல பாஸ்ச ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டு போய்ட என்ற நிலவன் நடந்த நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் தாத்தாவிடம் ஒப்பித்தவன்.. “இதுல ஆச்சரியம் என்னன்னா அந்த பொண்ணு அண்ணனை அந்த வாங்கு வாங்குது, ஆன அண்ணா ஒரு வார்த்தை கூட பதில் பேசாம அப்டியே அமைதிய இருந்துச்சு தாத்தா” என்க..

 

தாத்தா சிரித்துக்கொண்டே, “எம் பேரன் அமைதியா இருந்தால், அதுக்கு அர்த்தம் அவனுக்கு எதிர்ல இருந்தவங்க பேசுனது நியாயமா இருந்திருக்கும் டா” என்றவர் அகரனை திரும்பி பார்க்க.. அகரன் அர்த்தமாக சிரித்தவன் “ஆமா தாத்தா அந்த பொண்ணு கொஞ்சம் ஓவரா தான் பேசுச்சு.. ஆனா அது பேசுனது கரெக்ட் தாத்தா.. அது பேசினது கேக்கும் போது அப்டியே நீங்க பேசுற மாதிரியே இருந்துச்சு தாத்தா” என்ற அகரன் எண்ணத்தில் அந்த நொடி அவள் இரண்டு கருவிழிகளும் வந்து போக.. “ச்சே… என்ன ஆச்சு எனக்கு?? ஏன் அந்த பொண்ணோட கண்ணு என்னை இப்டி ஆப்பெக்ட் பண்ணுது??!!” என்று யோசிக்க… 

 

“ஆமா தாத்தா அந்த பொண்ணு பேச்சு தான் உங்களை மாதிரி இருக்குன்னா அந்த பொண்ணு ஒரு ஜாடையில பாக்க நம்ம பாட்டி மாதிரியே இருந்துச்சு தாத்தா.. நம்ம பாட்டி இருபது வயசுல எப்டி இருந்திருக்கும் அப்டியே இருந்துச்சு தாத்தா அந்த பொண்ணு” என்ற நிலவன் வாசலை பார்க்க அங்கு அவன் யாரைப் பற்றி இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தானோ அவளே அந்த வீட்டு வாசலில் வந்து நின்றாள்.. 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!