மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி 2 

நிலவன் ஹாஸ்பிடலில் பார்த்த பெண்ணை பற்றி பேசிக்கொண்டிருக்க.. அந்த நேரம் மொத்த குடும்பமும் ஹாலில் கூடியது.. 

 

அகரன், நிலவனின் அம்மா லட்சுமி கல்யாணத்திற்கு தேவையான பொருட்கள் பற்றி ஒரு லிஸ்ட் போட்டு எடுத்து வந்தவர். அதை தன் தாய் அகிலாவிடம் கொடுத்து சரி பார்க்க சொன்னவர் நிலவனிடம், “என்னடா நிலவா?? யார்ர அந்த பொண்ணு,?? அவ அவ்ளோ பேசியும் உங்கண்ணன் பதில் பேசாம வந்திருக்கான்னு சொல்ற..!! அதிசயமா இல்ல இருக்கு..!! எனக்கே அந்த பொண்ணை பாக்கணும் போல இருக்கே” என்று அகரனை வம்புக்கு இழுக்க.. 

 

“அம்மா உனக்கு அந்த பொண்ணை பாக்கணும்னும்னா.. தோ நிக்குறாங்களே உங்கம்மா, இவங்களுக்கு சட்டையும், ஜீன்ஸ்சும்‌ போட்டு விட்டு பாரு அப்டியே அந்த பொண்ணு மாதிரியே தான் இருப்பாங்க” என்று நிலவன் கிண்டலாக சொல்ல.. 

 

“டேய் என்ன டா சொல்ற.. அந்த பொண்ணு பாக்க என்னை மாதிரிய இருந்துச்சு?? நெஜம சொல்லு டா??” என்று அகிலா பாட்டி மறுபடியும் கேட்க..

 

“ஆமா பாட்டி நெஜமா தான் சொல்றேன்.. எனக்கே ஒருநிமிஷம் செம்ம ஷாக் தான் உன்னோட சின்ன வயசு ஃபோட்டோ உயிரோட கண்ணு முன்ன நின்ன மாதிரி இருந்துச்சு, வேணும்னா நீயே அண்ணாவை கேளு.. அவனும் கூட அந்த பொண்ணை அடிச்சு பாத்துட்டு இருந்தான்.‌ நீ வேணும்னா கேளேன்” என்று நிலவன் பாலை அகரன் பக்கம் திருப்பிவிட.. 

 

அகரன் லேசாய் அதிர்ந்தவன்.. “நா எங்கடா அந்த பொண்ணு முகத்தை பாத்தேன்.. அவ கண்ணை தாண்டி என்னால வேற எதையும் தான் பாக்கமுடியாலயே.. அந்த கண்ணு ரெண்டும் அப்டியே என்னா” என்று ஏதோ புலம்பியவன் “அதெல்லாம் நா கவனிக்கல பாட்டி, நா அந்த குழந்தைக்கு, பொண்ணுக்கும் என்னச்சோன்ற டென்ஷன்ல இருந்தேன்.. நா அந்த பொண்ணு முகத்தை கூட சரியா பாக்கல” என்று அண்டாப்புழுகு புழுக..

 

“அதானே பாத்தேன் இவனாது பொணுங்களை நிமுந்து பாக்குறதாது.. அதுக்கெல்லாம் இவன் சரிபட்டு வரமாட்டான் என்று அகரன் தந்தை ஶ்ரீதரன் மகனை ஓட்ட.. லட்சுமி திரும்பி அகிலா பாட்டிக்கும், தன் தங்கை கார்திகாவுக்கும் கண்களால் ஏதோ செய்கை செய்ய கார்த்திகா ஒரு எதிர்பார்போடு.. “ஏன்டா நிலவா நீ சொல்றீயே அந்த பொண்ணு தனியா வா வந்திருந்த, இல்ல அவ கூட யாரும் இருந்தாங்களா??” என்று கேட்க… திரவியம்தாத்தா மனைவி, மற்றும் மகள்களை முறைக்க..

 

“சரியா தெரியல சித்தி.. ஆனா எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு தனியா தான் இருந்த.. எங்க கூட பேசிட்டு இருக்கும்போது அவளுக்கு ஒரு ஃபோன் வந்துது.. நா வந்த பஸ்ல பிராப்ளமாகிடுச்சு, இதோ வந்துடுறேன்னு பேசிட்டே பேச்சு சித்தி, ஆமா நீ ஏன் இதெல்லாம் கேக்குற??” 

 

“ம்ம்ம்.. எல்லாம் காரணமா தான்டா உன் சித்தி கேக்குற, அவ மட்டும் இல்ல இங்க எல்லார் மனசுலயும் அந்த பொண்ணு அவங்க நெனைக்குற ஆளா இருக்குமோன்னு ஒரு எதிர்பார்ப்பு?? ஆசை?? அதான் எல்லாம் இருக்க வேலையெல்லாம் விட்டுட்டு, நம்ம வேலுவை எதிர்பாத்துட்டு இன்னைக்கு வீட்லயோ அடகாத்துட்டு இருக்குங்க…” என்று எரிந்துவிழ

 

“அகரனுக்கு அப்போது தான் புரிந்தது இன்று அப்பா, சித்தப்பா, மாமா என்று அனைவரும் வீட்டிலேயே இருப்பதும். அதற்காக காரணன் என்ன என்பதும் புரிந்த போது தான் அவனுக்கு உறைத்து.. “அடச்சே இத எப்டி மறந்தேன்.. ஒருவேளை அந்த பொண்ணு.. அவளோட அந்த கண்ணு” என்று தனக்குள்ளேயே தவித்தவன்.. 

 

“பாட்டி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா கெளம்புறேன்” என்று எழவும்.. 

 

நிலவன் “பாட்டி… அம்மா.. சித்தி அந்த பொண்ணு தான்.. அதோ பொண்ணு தான்!!! அங்க பாருங்க… அது தான் நா சொன்ன பொண்ணு!!! என்று பரபரத்தவன் வாசலை காட்ட.. அங்கு அந்த வீட்டு டிரைவர் வேலு முன்னே வர அவர் பின்னால் வந்து வாசலில் நின்றாள் நாம் கனடா நாட்டு குளிரை விட்டு கரிசல்காட்டின் வெயிலில், சொந்தம் தேடி வந்த நம்ம பைங்கிளி தியா..

 

ஒரு நிமிடம் அந்த வீடே புத்தர் கோயில் போல் அமைதியாக இருக்க.. திரவியம் தாத்தாவினால் தன் கண்ணை இப்டி அப்டி அசைக்கவோ, இமைக்காவோ கூட முடியவில்லை.. ஒரு சாயலில் தன் மனைவியையும், ஒரு சாயலில் இறந்துபோன தன் தாயையும் உறித்துவைத்தார் போல் தன் வீட்டு வாசலில் வந்து நிற்கும்‌ தன் பேத்தியை பார்த்து அவர் வாயடைத்து நிற்க, அகிலா பாட்டிக்கு கண்களில் கங்கையோ கரைபுரண்டு கொண்டிருந்தது.. வந்த தன் மகனின் மகளை உள்ளே அழைக்கக்கூட தோன்றாமல்.. வாசலிலேயே பேத்தியை கட்டிக்கொண்டு கதறிவிட்டார் அந்த பெரிய மனிதி..

 

ஒன்றாய் பிறந்து வளர்ந்து, ஒரு கட்டத்தில் வீட்டைத் துறந்து சென்ற தன் உடன்பிறப்பின் உதிரத்தை பலவருடம் கடந்து பார்த்த அந்த தம்பி, தங்கை உள்ளங்களும் ஆனந்தக்கூத்தாட வாரி அணைத்துக் கொண்டனர் அந்த வாசமல்லியை..

 

பாசமழை ஆரம்பிச்சு நம்ம நனையும் முன்ன.. திரவியம் தாத்தா குடும்பம் பத்தி ஒரு லுக் விட்டுட்டு வந்துடுவோம்.. 

 

திரவியம் பெருமாளின் குடும்பம் தான் அந்த ஊரிலேயே பெரிய குடும்பம்.. ஊரில் நடக்கும் எல்லா நல்லது, கெட்ட என்று அனைத்திலும் முன்னிற்கும் குடும்பம்.. திரவியம் தாத்தாவிற்கு நான்கு பிள்ளைகள்.. முதல் மகன் அரவிந்தன், அடுத்து செந்தில், லட்சுமி, கார்த்திகா.. திரவியம் தாத்தா அரவிந்தனுக்கு அவரை கேட்காமலே திருமண ஏற்பாடுகள் செய்திருக்க.. அரவிந்தனே, அவர்கள் வீட்டில் கணக்கு வழக்கு பார்க்கும் முருகனின் மகளும் தன் கல்லூரித் தோழியான தேன்மொழி விரும்பினார்..

 

அரவிந்தன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் திரவியம் தாத்தா கேட்பதாக இல்லை.. அவர் திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகளை செய்ய, அரவிந்தன் வேறு வழியில்லாமல் தேன்மொழியை கல்யாணம் செய்து கொண்டு வந்து விட்டார்.. இது தெரிந்த திரவியம் தாத்தா.. வழக்கம் போல.. “நீ எனக்கு புள்ளையும் இல்ல, நா உனக்கு அப்பனும் இல்லைன்னு சினிமா டைலாக் எல்லாம் ‌ பேசிட்டு” தண்ணி கஷ்டம் இருக்க இந்த காலத்தில் அகிலா பாட்டி இடுப்புவலிக்க கிணத்துல இருந்து ஏறச்சு வச்ச ஒரு குடம் தன்னியை எடுத்து தலையில கொட்டிக்கிட்டு, “போடா வெளிய.. உயிரோட இருக்கவரை வீட்டு வாசலை மீதிக்காத, கொல்லப்பக்கம் தாண்டி குதிக்காதனு” சொல்லி அரவிந்தனை மிச்சம் இருந்த அந்த குடத்து தண்ணிய தெளிச்சு தொரத்தி விட்டுடாரு.. அரவிந்தனும் கொஞ்ச வருஷம் அப்பா கோவம் மாறும்னு வெய்ட் பண்ணி பாத்து வெக்ஸாகி கனடா நாடு வா வான்னு கூப்புட.. “யாரை நம்பி நா பொறந்தேன் போங்கடா போங்கன்னு” தேன்மொழியையும், குழந்தையா இருந்த தியாவையும் கூட்டிட்டு கனடாக்கு பறந்துட்டாரு.. அதுக்கு பிறகு அவர் சொந்த ஊருக்கு வரவே இல்ல.. தாத்தாவும் தான் வளர்த்த புள்ளைய விட, தறிகெட்டு வளர்ந்த ஈகோ தன் முக்கியம்னு அப்படியே இருந்துட்டாரு.. திரவியம் தாத்தாவோட கடைசி பொண்ணு கார்த்திகா, பிரபுவோட மகள் தாமரைக்கு கல்யாணம் நிச்சயம் ஆக.. அகிலா பாட்டி அடுத்த தலைமுறையில் நடக்குற முதல் விஷேசம் எம் மூத்த புள்ள இல்லாம நடக்குதுன்னு கண்ணை கசக்கி காதுல புகைவிட.. தாத்தா அரவிந்தனை கல்யாணத்துக்கு கூப்புட ஒத்துக்கிட்டாரு.. செந்திலும், பிரபும், சென்னையில் இருந்த அரவிந்தன் ப்ரண்ட் சரவணனை புடிக்க, சரவணன் எப்படியோ, யார் கை காலையே புடிச்சு, கனடா அட்ரஸ் வாங்கி இதோ தியா இப்ப தன் அப்பாவோட சொந்த ஊர்ல.‌ அவரோட சொந்தங்கள் கூட..

 

தன் கையால ஆலம் சுற்றி பேத்தியை வீட்டுக்குள்ளே அழைத்து ஆசை தீர தன் அன்பு பேத்தியை கண்களில் நிறைத்த பாட்டி அவள் கன்னம் வழித்து நெட்டு முறித்தவர்.. “உன்னோட பேரு என்ன தாயி,?? உனக்கு தமிழ் பேசா வருமா” என்று கேட்க.. 

 

நிலவன், “பாட்டி அவங்களுக்கு தமிழ் பேச மட்டும் இல்ல.. தமிழ்ல செம்மய திட்டவே வரும்” என்றவன் அகரனை பார்த்து “ஆமா தானா டா அண்ணா” என்று கண்ணடிக்க.. “டேய் வாயா மூடிட்டு இரு டா.. இல்ல வாயா ஒடச்சிடுவேன்” என்று கண்ணலேயே தம்பியை எரிக்க.. தியாவின் பார்வையே புன்னகையோடு நிலவனை நட்பாக வருடிச் செல்ல.. அகரன் கண்ணில் எரிந்த தீயின் புகை, காது வழியே வெளியே வந்தது..

 

“எனக்கு தமிழ் நல்லா பேசிவரும் பாட்டி, பேச மட்டும் இல்ல.. நல்லா எழுத படிக்கவும் தெரியும் என்று பெருமையாக சொன்னவள்.. “அப்பா, அம்மா என்னை “தியா” ன்னு கூப்புடுவாங்க பாட்டி.. ப்ரண்ஸ் “தீரா” னு சொல்வாங்க என்றவள் திரும்பி தாத்தாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு “என்னோட முழுபேரு “திரவியா” என்று சொல்ல.. திரவியம் தாத்தா பெருமையாக தன் மீசையை முறுக்கிக் கொண்டவர்.. அதை யாரும் கவனிக்கும் முன் முகத்தை மாற்றிக்கொண்டு. “குடும்பத்தை பத்தி கவலைப்படாம ஓடிப்போய்ட்டு, அப்பன் பேரை பொண்ணுக்கு வச்சு அவனை நல்லவனா காட்டிக்கிறான உங்கப்பா” என்று நக்கலாக கேட்க..

 

“குடும்பத்தை விட்டு வெரட்டுனா அவரோட அப்பா பேரை எங்கப்பா எனக்கு வைக்கல தாத்தா.. தன் புள்ளைக்கு புடிச்ச பொண்ணை கௌரவம் பாக்காம தன் மகனுக்கு கட்டி வச்ச அவரோட தாத்தா திரவியப்பாண்டியன் பேரை தான் எங்கப்பா எனக்கு வச்சிருக்காரு” என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல.. குடும்பம் மொத்தமும் வாய் வரை வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருக்க.. இதுவரை தன் தாத்தாவின் முன்பு யாரும் தலை நிமிர்ந்து நின்று பேசிக் கூட பார்க்காத அகரனுக்கு “தியா” அவர் முன் திமிராக பேசியது கோபத்தை கிளற.. “ஏய்..?? என்ன வாய் ரொம்ப நீளுது.. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம,?? யாரா எதிர்த்து பேசுற” என்று அகரன் கத்த..

 

தியா தன் இரு கைகளை கட்டி, அகரனை நிமிர்ந்து பார்த்தவள்.. “முதல்ல மரியாதையை நீங்க காத்துக்கோங்க.. அதென்ன மிஸ்டர் “ஏய்”.. ஒரு பொண்ணை இப்டி கூப்புடனும்னு தான் உங்களுக்கு காத்துக்கொடுத்தங்களா?? எம் பேரு “திரவியா” கால் மீ பை மை நேம்.. ஆண்ட் நா உங்க” என்றவள் நிறுத்தி, “நம்ம தாத்தாவை எதிர்த்து பேசல.. அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்.. அவ்ளோதான்.. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு மிஸ்டர்.. சும்மா எல்லாத்துக்கும் சட்டை கையை மடிச்சுகிட்டு வராதீங்க” என்று அகரன் காலை வாரா.. நிலவன் தியா பேசியதை கேட்டு வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க.‌ அகரன் தியாவை அனல் தெறிக்க முறைக்க.. அப்போது தான் அங்கு வந்த செந்தில், மகாலட்சுமியின் மகள் அரும்பு தன் அகரன் மாமாவை தியா எதிர்த்து பேசுவதை பார்த்தவள் தன் பங்கிற்கு தியாவை முறைத்தபடி ஹாலுக்கு வர அவளை தொடர்ந்து அவள் தங்கை சரண்யா, தம்பி முகிலன்.. பிரபு, கார்த்திகாவின் மகன் அருள், மகள் தாமரை என்று மொத்த இளவட்டமும் லைனாக வந்து ஹாலில் ஆஜர் ஆகியவர்கள்.. தியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது..

 

நடப்பது எதையும் கவனிக்காமல்

வனவாசம் முடித்து வருவது போல் வருடம் பலகடந்து வந்திருக்கும் தன் பேத்தியையே பார்த்துக் கொண்டிருந்த அகிலா பாட்டிக்கு அவளிடம் பேச ஆயிரம் கதைகள் இருந்தும் அதையெல்லாம் ஒரு ஒரம் வைத்து. பேத்தியின் கன்னம் பற்றி அகிலா பாட்டி முதலில் கேட்ட கேள்வி.. “உங்கப்பன் வர்லயா தாயி??” என்ற ஒற்றை கேள்வி தான்.. அந்த “வர்லயா” என்ற ஒரு வார்த்தையில், தன் இத்தனை வருட பிள்ளையை பிரிந்த ஏக்கத்தை எப்படிதான் அடைத்து வைத்தரோ..?? இதுதான் தாய்மையோ..??

 

பாட்டியின் வார்த்தை பேத்தியை தொட்டதோ இல்லயோ திரவியம் தாத்தாவை தீயாக சுட்டது.. “தன் வரட்டு கௌரவத்திற்காக இத்தனை வருடம் இவளை பிள்ளையிடம் இருந்து பிரித்துவைத்து விட்டோமே” என்ற உண்மை அவரை சுட்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தன் தொண்டையை செருமிக்கொண்டு கெத்தை மெயின்டென் செய்துகொள்ள..

 

இங்கு அனைவரின் கவனமும் தியாமேலேயே இருந்தது.. “இல்ல பாட்டி அப்பாவும், அம்மாவும் ஒரு வேலை விஷயமா வெளிநாடு போயிருக்காங்க.. இத்தனை வருஷம் கழுச்சு நீங்க எங்களை கண்டாக்ட் பண்ணுவீங்கன்னு சத்தியமா நா…” என்று லேசாக கலங்கியவள் நாங்க எதிர்பார்க்கவே இல்ல பாட்டி.. அவங்களால உடனே கெளம்பி வரமுடியாத சிட்டிவேஷன்.. சிக்ஸ் மண்த் காண்ட்ராக்ட்ல ஆஸ்திரேலியா போயிருக்காங்க.. ஒன் ஆர் டூ வீக்ஸ் ல இங்க வந்துடுவாங்க.. நீங்க கல்யாணத்துக்கு கூப்டதும் ரெண்டு பேருக்கும் அவ்ளோ சந்தோஷம்.. உடனே என்னை கெளம்ப சொல்லிட்டாங்க.. நீ முதல்ல போ நாங்க சீக்கிரம் வந்துறோம்னு சொல்லி என்னை அனுப்பி வச்சாங்க பாட்டி என்று தியா தன் தேன் குரலில் கூவி முடிக்க.. பாட்டிக்கு உள்ளுக்குள் மகன் வராதது வருத்தமாக இருந்தாலும், மிஞ்சி போன இன்னும் ரெண்டு வாரம் தானே என்று மனதை தேற்றிக்கொண்டவர்.. தியாவை தாத்தா அருகில் அழைத்துச் சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்ல.. “சாரி பாட்டி.. எனக்கு கால்லவிழுறது சுத்தமா புடிக்காது.. அப்பா சொல்லுவாரு நம்ம ஒருத்தர் மேல வச்சிருக்க மரியாதையை கால்ல விழுந்து தான் நிருபிக்கணும்னு இல்ல.. மரியாதை மனசுலயும், நம்ம செயலையும் இருக்கணும்னு சொல்லுவாரு” என்றவள் சிரித்த முகத்துடன், இருகையையும் சேர்த்து “வணக்கம் தாத்தா” என்று ஒரு நிமிர்வோடு சொல்ல.. அங்கிருந்த அனைவரும் அத்தனை ஆச்சர்யம்.. 

 

தியா அருகில் வந்த திரவியம் தாத்தாவின் இரண்டாவது மகன் செந்தில், தியா தலையை அன்பாக வருடியவர்.‌ “அகரன் சொன்னது உண்மை தானம்மா.. நீ அப்படியே உன் தாத்தா மாதிரிதான்.. நீ இப்ப சொன்னீயே இதை தான் எப்பவும் இவரும் சொல்வரும்மா.. நீ பாக்க தான் எங்கம்மா மாதிரி, ஆனா குணம் அப்படியே எங்கப்பா மாதிரியே இருக்கு என்றவர்‌‌.. “நா யாருன்னு உனக்கு தெரியுதாம்மா” என்று ஆதங்கமாக கேட்க..

 

தியா மெதுவாக இல்லை என்று தலையாட்டிவள்.. “அப்பாக்கு ஒரு தம்பி, ரெண்டு தங்கச்சி இருக்காங்கனு மட்டும் தான் தெரியும் என்று அப்பாவியாக சொல்ல.. சற்றுமுன் தாத்தா முன் நிமிர்வோடு நின்றவள் இவள்தானா என்று யோசிக்கும் அளவு அப்படியே சின்ன குழந்தையென அழகாய் விழியை உருட்டி உருட்டி பேசும் அந்த குழந்தை முகம் அனைவர் மனதிலும் பட்டென ஓட்டிக் கொண்டது..

 

செந்திலின் மனைவி மகாலட்சுமி தியா அருகில் வந்து அவள் கன்னம் தொட்டு தன் உதட்டில் வைத்து முத்தம் வைத்தவர்.‌ “இவர் உங்கப்பா அரவிந்தன் மாமாவோட தம்பிம்மா, உனக்கு சித்தப்பா.. நா அவர் பொண்டாட்டி மகா, உனக்கு சித்தி, அது லட்சுமி அண்ணி, அவங்க வீட்டுக்காரர் ஸ்ரீதரன் அண்ணா, கார்த்திகா அண்ணி, பிரபு அண்ணா.. உனக்கு அத்தை, மாமா முறை. இன்னு உனக்கு அத்தை புள்ளைங்க, தம்பி, தங்கச்சி, சொந்த பந்தம்னு நெறய பேர் இருக்காங்க டா ” என்று அன்பாக சொல்ல.. தியாவுக்கு அவள் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்ல.. பிறந்ததில் இருந்து தனியாகவே வளர்ந்த அவளுக்கு இத்தனை சொந்தங்கள் கிடைக்குமென்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.. இன்று அவள் மனதின் மகிழ்ச்சியை சொல்ல அகராதியிலும் வார்த்தை இல்லை..

 

நாடு விட்டு நாடு வந்த அவர்கள்‌ கூட்டின் புதிய இளம் பறவையை அனைவரும் தன் ரெக்கைக்குள் அனைத்துகொள்ள.. தாத்தா பரீட்சையில் ஃபிட் அடிப்பது போல் பேத்தியை எட்டி எட்டி பார்க்க.. அகரன் அவளை பாரு டா என்று கத்திய மனதை “மூடிட்டு கம்முன்னு இரு” என்று எச்சரித்தவன், கஷ்டப்பட்டு அவளிடம் செல்லும் பார்வையை பிடித்து இழுந்து கட்டிவைத்து விட்டால் போதுமென்று அங்கிருந்து ஓடிவிட்டான்..

 

மகா வீட்டின் பிள்ளைகளுக்கு தியாவை அறிமுகம் செய்து வைக்க சரண்யாவும், முகிலனும் அக்கா என்று அவளை அரைத்துக்கொள்ள.. தாமரையும், அருளும் அவளை இன்முகத்தோடு வரவேற்றனர்.. 

 

நிலவன், “நா உனக்கு முறைபையன்.. அதுக்காக மொறச்சிட்டே இருப்பேன்னு நெனைக்காத.. அதெல்லாம் இப்ப போனானே என்ற அண்ணன்.. காலையில ஹாஸ்பிடல்ல கூடப் பாத்தியே அவன் வேலை. ஐ ஆம் ஏ ஹாப்பி பாய்.. இன்னையில் இருந்து நீயும், நானும் ப்ரண்ஸ் என்று கை நீட்ட.. “நீ முறை பையன்னா அப்ப நாங்களெல்லாம் யாராம், நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்க என்று அருளும் வந்து தியா முன் கை நீட்ட.. மலரென அழகாய் சிரித்தவள் அத்தை மகன்கள் இருவரையும் அன்பு நண்பர்களாக தன்னோடு இணைத்துக்கொண்டாள்.. அரும்புவை பார்த்து இவள் சிரிக்க.‌ அவளோ தாடையை திருப்பி தோளில் இடித்து ஒழுங்கு காட்டியவள் அங்கிருந்து ஓடிவிட.. 

 

“அவ அப்டி தாம்மா.. நீ அகரன் கிட்ட சண்ட போடுற மாதிரி பேசுனா இல்ல.. அதான் அவளுக்கு உன்மேல கோவம்.. அவளுக்கு அகரன்னா உயிரு.. சின்ன வயசுல இருந்தே அப்டி தான்.. அவளுக்கு எல்லாத்துக்கும் அவன் வேணும்” என்று மகா சொல்ல.. ஒரு சின்ன சிரிப்போடு “இட்ஸ் கோ……” என்று அவள் இழுக்க.. “சித்தி ம்மா” என்று மகா சொல்ல.. “இட்ஸ் ஓகே சித்தி” என்று கண்களை சிமிட்டினாள்..

 தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்த தியாவின் மனது முழுவதும் அமைதியும், நிம்மதியும் நிறைந்திருந்தது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!