மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி  3

காலைக் கதிரவன் வானைக் கிழித்து, அதன் வெப்பம் பூமியை தொடும் வரையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் திரவியா..

கனடாவில் இருந்து கிளம்பியவள். பெங்களூர் வந்து தன் தந்தையின் நண்பர் சரவணனை சந்தித்து தன் தந்தையின் குடும்பத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டவள்.. உடனே இரயில், பஸ் என்று மாறி மாறி ஓய்வில்லாமல் பயணம் செய்து ஒருவழியாக வீடு வந்து சேர்ந்து விட்டாள்.. விமானத்தில் வந்தால் ஏற்பட்ட ஜெட்லாக், சித்தியும், அத்தையும் இவளுக்கென பார்த்து பார்த்து செய்து வைத்த உணவை பாட்டி அவரே தன் கையால் ஊட்டி விட.. மூக்கு ஓட்டை மூழ்கும் வரை உண்டவள்.. மலையை புரட்டி மல்லாக்கப் போட்ட மாதிரி மலைப்பாம்பாய் மெத்தையில் சுருண்டு விட்டாள்.. காலைச் சூரியன் வந்து “கண்ணை திற” என்று தன் ஒளிக்கதிரை வைத்து அவள் கண்ணில் குத்தியும், “போய்யா போ” என்று இழுத்து போர்த்தி தூங்கியவள் இவளை எழுப்பி கலைத்த சூரியன் உச்சிக்கு போகப் கிளம்பிய பத்து மணிக்கு மெதுவாக கண்விழித்தாள்..

குளித்து முடித்து அடர் நில நிற ஜீன்ஸ்சும், அழகிய வெள்ளை நிற குர்தியும் போட்டுக்கொண்டு, தோள் வரை இருந்த தன் முடியை இறுக்கி உச்சியில் போனி டெய்ல் போட்டவள்.. மெதுவாக படிகளில் இறங்கி வர.. சமையல் அறையில் அப்பளத்தோடு சேர்த்து தன்னையும் வறுத்தெடுத்துக் கொண்டிருந்த அரும்பின் குரல் இவளுக்கு தெளிவாக கேட்டது..

“இதெல்லாம் ரொம்ப மோசம் அத்த.. நானெல்லாம் ஒரு நாளைக்கு தெரியாம எட்டு மணி வரை தூங்கிட்டதுக்கு எங்க அம்மா என்ன ஆடு ஆடுச்சு.. இப்ப அந்த வெள்ளக்காரி காலையில சூரியன் வந்து உச்சிக்கும் போய்டுச்சு இன்னும் இழுத்துப் போத்திட்டு தூங்கிட்டு இருக்கு. அத என்னன்னு கேட்டுச்சா பாரு.. சரண்யா போய் அந்தம்மாவை எழுப்புறேன்னு சொன்னதுக்கு கூட.. வேணா.. வேணா குழந்தை தூங்கட்டும்னு சொல்றாங்க அத்த.. இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரியல.. ஒரு கண்ல ஐஸ்கிரீம்., இன்னொரு கண்ணுல சில்லி சாஸ்ஸா” என்று கடுப்போடு அடுப்பை பார்த்துக்கொண்டிருக்க.. கார்த்திகாவும், லட்சுமியும் சிரித்தபடி தங்கள் வேலையை பார்க்க.. மகா தன் மகளின் காதை பிடிந்து திருகியவர்.. “ஏன்டி.. பாவம் அந்த புள்ள ஜெட், பஸ், ட்ரெயின்னு நிக்காம டிராவல் பண்ணி இவ்ளோ தூரம் வந்திருக்கு.. அதுக்கு ஜெட்லாக் இருக்காதாடி.. அதனால தான் சாருவை அவளை எழுப்ப வேணாம்னு சொன்னேன்.. அதுக்கு நீ ஏன்டி இப்டி அப்பளத்தை கருக்குற.. நீ என்னைக்கும் இல்லாத அதிசயமா, இங்க வரும்போதே நா சந்தேகப்பட்டேன்.. ஒரு நாள் சமையல்கட்டுக்கு வேலை செய்ய வந்துட்டு நேத்து வந்த பொண்ணு மேல ஒரு வண்டி புகாரை சொல்லிட்டு இருக்க.. போடி வெளிய போடி நீ ஒன்னும் இங்க கிழிக்க வேணாம்.. வழக்கம் போல நல்லா தின்னுட்டும், டிவி பாத்துட்டும், ஃபோனை நோண்டிடும் இரு போடி” என்று மகா மகளை விரட்ட.. “குட் மார்னிங்” என்று தனக்கே உரிய தேன் சொட்டும் மழலை குரலில் சொன்ன தியா சமையல் அறைக்குள்ள நுழைய, அரும்பு தன் தாடையை தோளில் இடித்து “ம்ஹும்” என்றவள் முகத்தை திருப்பிக்கொள்ள.. தியா அவளை பார்த்து மென்மையாக சிரித்தவள்..

“எல்லாருக்கும் சாரி.. விடாம டிராவல் பண்ணதுல செம்ம பாடி பெய்ன்… சுடு தண்ணில குளிச்சது.. உங்க டிரெடிஷ்னல் சமையல்னு எல்லாம் சேர்ந்து அடிச்சு போட்ட மாதிரி அப்டி ஒரு தூக்கம்.. விடிஞ்சது கூட தெரியாம தூங்கி இருக்கேன்.. சாரி” என்ற தியாவின் தலையை வருடி லட்சுமி “பரவாயில்ல டா.. எங்களுக்கு தெரியும்.. அதனால தான் நாங்க உன்னை எழுப்பல” என்று அன்பாக சொல்ல.. அரும்புக்கு காதில் புகையாக கிளம்பியது.. “ஆமா ஆமா உங்களுக்கு எல்லாம் தெரியும் தான்.. எல்லாம் காலக்கெடுமை டா கந்த.. பொறந்தாலும் இவளை மாதிரி வெள்ளைக்காரிய பொறக்கணும் அப்ப தான் சொந்த குடும்பத்தில் கூட மதிப்பாங்க போல” என்று புலம்ப..

தியா, அரும்பு அருகில் வந்து அவள்‌தோளில் கை போட்டு தன்னருகே இழுத்தவள்.. நா ஒன்னும் வெள்ளைக்காரி இல்ல மை கியூட் குட்டி சிஸ்டர்.. நா பொறந்தது இங்க தான்.. வளர்ந்தது மட்டும் தான் கனடாவுல.. நா சுத்தமான தமிழச்சி” என்று பெருமையாக சொல்ல.. அரும்பு தியா கையை தோளில் இருந்து எடுத்துவிட்டவள்.. நா ஒன்னு குட்டி பொண்ணு இல்ல என்றங முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள.. “ஒஒஒ அப்ப நா உன்னை என் சிஸ்டர்னு சொன்னதை நீ அக்செப்ட் பண்ணிக்குறா அப்டி தானே.. ஐ ஆம் வெறி ஹாப்பி அரும்பு” என்று தியா தங்கையின் கன்னம் கிள்ள..

“இங்க பாரு..!! இந்த வாலு போட்ட சண்டையில.. வந்த புள்ளைக்கு குடிக்க என்ன வேணும்னு கூட கேக்கல.. ஆமா தியா நீ காலையில என்னம்மா குடிப்ப..?? டீ யா??, காபிய??” என்று மகா கேட்க..

“எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே சித்தி.. பட் ப்ளீஸ் ஒயிட் சுகர் மட்டும் போட்டுடாதீங்க.. நாட்டுச் சர்க்கரை, தேன், இல்ல வெல்லம் போட்ட கூட ஒகே” என்றவளை அங்கிருந்த பெண்கள் அதிசயமாக பார்க்க..

“என்ன சித்த?? ஏன் எல்லாரும் அப்டி பாக்குறீங்க..” என்று தியா கேட்க.

லட்சுமி, “அது ஒன்னு இல்ல ம்மா.. நீ வெளிநாட்ல வளர்ந்த பொண்ணு.. சுகர் ஃப்ரீ, சுவீட்னர் அப்டி எதும் கேப்பண்ணு பாத்த.. நீ நாட்டுச் சர்க்கரை, வெல்லம்னு சொன்னீயா அது தான் எல்லாருக்கும் ஆச்சரியம்”

“இல்ல அத்த.. எனக்கு சுகர் ஃபீரீ, சுவீட்னர் எல்லாம் புடிக்காது.. அம்மா அதெல்லாம் அலோ பண்ணவே மாட்டாங்க.. வீட்ல எது செஞ்சலும் பிரவுன் சுகர், இல்ல ஹனி ல தான் செய்வாங்க.. ஒயிட் சுகர் உடம்புக்கு நல்லது இல்லனு சொல்லுவாங்க.. சோ எனக்கு இப்டியே பழகிப்போச்சு அத்த” என்று சொல்ல..

தூரம் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த திரவியம் தாத்தா, பிடிக்காத மருமகளிடம் இருக்கும். தனக்கு பிடித்த பழக்கத்தை நினைத்து உச்சி குளிர்ந்தார்..

தியா, அத்தை அன்பாக தந்த கருப்பட்டி காபியை ரசித்து குடித்துக் கொண்டிருக்க.. அவள் குடிக்கும் அழகை மறைவில் நின்று ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அகரன்.. பின் தன் தலையில் தானே அடித்துக்கொண்டவன்.. “டேய் என்ன வேல டா பாக்குறா நீ.. அவ உனக்கு எதிரி குடும்பத்து பொண்ணு.. தாத்தாவை அவமானப் படுத்திட்டு, வீட்டை விட்டு ஓடிப்போன அந்த ஆள் பொண்ணை போய் நீ இப்டி ச்சே.. இதெல்லாம் சரியில்ல அகரா” என்று அவன் புத்தி அவனை உச்சியில் அடிக்க.. ஆனால் அவன் கையோ அவன் சட்டை பையில் வைத்திருந்த அவன் மொபைல் ஃபோனை மெதுவாக தொட்டு பார்க்க. “நீயும் பல வருஷமா இந்த ஒரே டைலாக்கை தா சொல்லிட்டு இருக்க..!! அப்ப நீ உன் ஃபோன்ல வச்சிருக்கீயே ஒன்னு அதுக்கு என்னடா அர்த்தம்..?? எப்ப பாரு அவ எதிரி வீட்டு பொண்ணு, ஏலியன் வீட்டு பொண்ணுன்னு பேசிட்டு‌ போடா டேய்….. ஆன ஒன்னு டா?? இவ்வளவுக்கு அப்றமும்.. கருமம்.. நீயும் மாறால.. நானும் மாறால.. போடா போ” என்று அவன் மனம் அகரனை காரித்துப்பியது..

தியா ஜீன்ஸ், குர்தியில் ஊர்வலம் வர..

“தியாம்மா.. உன்கிட்ட போட்டுக்க சுடிதார், இல்ல பாவாடை தாவணி எதும் இல்லையாம்ம” என்று பாட்டி கேட்க..

“இல்ல பாட்டி அங்க எல்லாம் செம்ம குளிரு.. சோ ஜீன்ஸ், ஷர்ட், ஜெர்கின் தான் போடுவேன்.. இங்க வரேன்னு பெங்களூர் ல அவசர அவசரமா ரெண்டு மூனு குர்தி மட்டும் எடுத்தேன்.. மத்தபடி என்கிட்ட சுடிதார், பாவாடை எதுவும் இல்ல பாட்டி”

“சரிம்மா.. நா அகரன்கிட்ட சொல்றேன்.. நீ அவன் கூட போய் உனக்கு வேண்டி துணி எடுத்துக்கோ” என்று பாட்டி சொல்ல..

“இல்ல பாட்டி பரவாயில்ல.. வேணாம்.. நா பாத்துக்குறேன்.. அவரை எதுக்கு டிஸ்டாப் பண்ணிட்டு” என்று தயங்க..

“அதுக்கு இல்ல டா.. இது கல்யாண வீடு சொந்த, பந்தம்னு நெறய பேர் வருவாங்க.. அந்த நேரம் நீ இப்டி இருந்தா நல்லா இருக்காது டா.. அதுக்கு தான் சொல்றேன்” என்று பாட்டி பேசிக்கொண்டிருக்கும் போதே அகரன் அங்கு வர..

“டேய் அகரா இங்க வாயேன்” என்று பேரனை அருகில் அழைத்தவர்.‌ தியாவை கடைக்கு அழைத்துப் போகச் சொல்ல..

“எனக்கு முக்கியமான வேலை இருக்கு பாட்டி என்னால முடியாது.. அதான் நாளைக்கு கல்யாணத்துக்கு துணி எடுக்க எல்லாரும் போறோம் இல்ல.. அப்ப இவ என்று தொடங்கியவன் இவங்களுக்கும் எடுத்துக்கலாம்.. எதுக்கு தேவை இல்லாம ரெண்டு நட நடக்கணும்” என்று தியா முகத்தை கூட பார்க்காமல் பாட்டியிம் பதில் சொல்ல..

“டேய்.. அது எனக்கு தெரியாத.. பெரிய மனுஷன் நீ சொல்லி தான் நா தெரிஞ்சிகணுமாக்கும்.. நாளைக்கு நம்ம சொந்தக்காரங்க, மாப்பிள்ளை வீடு, அவங்க சொந்தக்காரங்கணு நெறய பேர் ஜவுளி எடுக்க நம்ம கூட வருவாங்க.. அவங்க முன்னாடி இவ இப்டி சட்டையும், பேண்ட்டும் போட்டுட்டு வந்த நல்லா இருக்காது டா.. அதுக்கு தான் சொல்றேன்.. கூட்டிட்டு போடா” என்று பாட்டி கெஞ்ச.. அகரன் முடியாவே முடியாது என்று முரண்டு பிடிக்க..

“நீ ஏன் பாட்டி அவனை கெஞ்சுட்டு இருக்க.. என் மாமன் பொண்ணை நா கடைக்கு கூட்டிப் போறேன்.. நீ கவலையை விடு” என்று தப்பான நேரத்தில் சரியாக வந்தான் நிலவன்..

“எம் பேரன்னா பேரன் தான்.. உங்கண்ணானும் இருக்கானே.. சரியான முசுடு..” என்று அகரனை முறைத்தவர்.. “தியா நீ நிலவன் கூட போய் உனக்கு வேண்டியது எல்லாத்தையும் வாங்கிக்க டா..” என்றவர் “டேய் நிலவா புள்ளையா பாத்து பாத்திரமா கூட்டி போய்ட்டு வா.. அவளுக்கு இந்த ஊரு புதுசு புரியுதா” என்றவர்.. “சரி நீ எந்த வண்டில போறா..” என்று கேட்க..

“இதென்ன கேள்வி பாட்டி என்னோட பைக்ல தான்.. எம் மாமன் பொண்ணை ஸ்டைல்ல பின்னாடி உக்கார வச்சிட்டு. சும்மா ரெக்க கட்டி பறக்குதடி நிலவன் பைக்குன்னு சர்ருன்னு போவேன் பாட்டி” என்று நிலவன் விளையாட்டாய் சொல்ல.. தியா அவன் குறும்பில் அழகாய் சிரிக்க. அகரன் கண்களில் அக்கினி மின்னியது..

“டேய் நிலவா.‌. அப்பா உன்னை மாப்ளா வீட்டுக்கு போகணும், நீயும் வாடான்னு சொன்னாரு இல்ல.‌.. அதை விட்டுட்டு இப்ப இந்த வேலை ரொம்ப முக்கியமா உனக்கு.. மரியாதையா அப்பாவை கூட்டிட்டு நீ கெளம்பு டா” என்று தம்பியை விரட்ட..

“டேய் அதெல்லாம் அப்பா அருள், இல்ல முகிலனை கூட்டிட்டு போய்க்குவாரு.. இல்லாட்டி நீயே போ.. நா தியா கூட போறேன்”

“தூக்கிப் போட்டு மிதிச்சேன்னு வையேன்.. அப்படியே தரைக்குள்ள போய்டுவா.. அப்பாவை விட உனக்கு இது தான் முக்கியமா” என்று அகரன் கத்த..

“டேய் அகரா என்னடா இது.. நீயும் கூட்டிட்டு போக மாட்றா… போறேன்னு சொல்றவனையும் தடுக்குறா.. ஏன் டா‌ இப்டி பண்றா” என்று பாட்டி கத்த..

“பாட்டி உனக்கு ஒன்னும் தெரியாது.. நீ சும்மா இரு.. இப்ப என்ன இந்த அம்மாவை கடைக்கு கூட்டி போகணும் அவ்ளோ தானா.. டேய் நிலவா நீ காரை எடுத்துட்டு அப்பா கூட போ.. அந்த பைக் சாவியை என்கிட்ட குடு நானே இந்தம்மா கூட்டி போய் தொலையுறேன்” என்று நிலவன் கையில் இருந்தா பைக் சாவியை அகரன் பிடிங்கிக் கொள்ள..

“பாட்டி அவ்ளோ சலிப்பா ஒன்னும் இவர் என் கூட வர வேணாம்.. அப்டி டிரஸ் எடுத்து போடணும்னு ஒரு அவசியமும் இல்ல.. நா இவர் கூட போகல.. நீங்க வழி மட்டும் சொல்லுங்க நானே தனியா போய்க்குறேன்” என்ற தியாவை முறைத்த அகரன்..

“எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை நாங்க அப்டி ஒன்னும் விட்டுடா மாட்டோம்..” என்றவன் பாட்டியிடம் திரும்பி “உங்க பேத்தி கிட்ட சொல்லுங்க பாட்டி.. புது ஊர்ல இவங்க பாட்டுக்கு தனியா போய் வழி தெரியாம அலஞ்ச.. நம்ம குடும்பத்துக்கு தான் கெட்ட பேரு.. அப்டி ஒரு பேரு வர நா விட மாட்டேன்.. அவங்களை வரச் சொல்லுங்க” என்ற அகரனை முறைத்த தியா..

“தேவை இல்ல பாட்டி எனக்கு என்னை பாத்துக்க ரொம்ப நல்லாவே தெரியும்.. நா ஒன்னும் அலஞ்சு திரியா மாட்டேன்.. அந்த கவலை உங்க பேரனுக்கு வேணாம்.. அவரை போய் அவரோட முக்கியமான வேலையை பாக்க‌ சொல்லுங்க” என்று இவளும் வீம்பாக நிற்க.. அந்த நேரம் லட்சுமியும், மகாவும் அங்கு வர..

“என்ன தியா இது.. பாட்டி தான் இவ்ளோ சொல்றாங்க இல்ல.. ப்ளீஸ் அகரன் கூட‌ப் போம்மா..” என்ற லட்சுமி “ஏன்டா அகரா பாட்டி சொல்லும்போதே நீ அவளை கூட்டிட்டு போய் இருந்தா இதெல்லாம் நடந்திருக்காது இல்ல.. தேவை இல்லாம சின்ன புள்ளைங்க மாதிரி சண்ட போட்டுட்டு.. போடா ரெண்டு பேரும் சீக்கிரம் போய்ட்டு ஒழுங்க வேலையை முடிச்சிட்டு வாங்க” என்றதும் அகரனும், தியாவும் மறுபேச்சின்றி கிளம்ப.. நிலவன் “வட போச்சே” என்று அப்பாவியாக பார்க்க.. அரும்பு கண்ணில் ரெட் பல்ப் போல் கோவம் கொழுத்து விட்டு எரிந்தது..

அகரன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, தியா அவனை முறைத்துக் கொண்டே நிற்க.. “என்னம்மா உன்னை ஒரு ஆள் தூக்கி உக்கார வைக்கணுமா.. வந்து உக்காரும்மா எனக்கு டைம் இல்ல” என்று மீண்டும் அவளை வம்பிழுக்க..

“ஹலோ என் பேரு ஒன்னு அம்மா இல்ல.. திரவியா.. ஒன்னு திரவியான்னு முழுபேர் சொல்லி கூப்டுங்க. இல்ல எல்லார் மாதிரி தியா ன்னு கூப்டுங்க.. அத விட்டு அம்மா, அது, இது சொல்லிடு” என்று தியா கோபமாக சொல்ல..

அகரன் ஒரு நிமிடம் கோவத்தில் இங்கும் அங்கும் அலைபாயும் அவள் காந்த கண்களை தன்னை மறந்து ரசித்தவன்.. “எல்லாரும் சொல்றா மாதிரி நானும் சொன்ன அவங்களுக்கும் எனக்கும் என்னடி வித்தியாசம்.. உன்னை நா எனக்கே எனக்குன்னு கூப்பிடணும் டி என்று மனதில் நினைத்தவன்.. “டைம் ஆச்சு உக்காரு “தீரா” என்க.. தியா ஒரு நிமிடம் அகரனை இமைக்காது பார்த்தவள் உடனே தன்னை மீட்டுக் கொண்டு அமைதியாக பைக்கில் அமர்ந்தாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!