மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி

 

மழைத்துளி 4

அகரன், வண்டியை சீரான வேகத்தில் ஓட்ட… தியா ஒரு பக்கமாக கால் போட்டு வண்டியில் உட்கார்ந்து இருந்தவள். அந்த பைக்கில் கிழே விழுந்து விடாமல் இருக்க, பிடிக்க எதாவது கைப்பிடி இருக்குமா? என்று தேடி கிடைக்காமல், அகரன் தோளைப் பிடிக்க விரும்பாமல் கஷ்டப்பட்டு பைக்கில் அமர்ந்திருந்தவள்.

 

“இந்த நிலவனுக்கு வாய் தான் வாஷிங்டன் வரை நீளுது… ஆனா, அறிவே இல்ல… இப்டி புடிச்சிக்க எதுவும் இல்லாத ஓட்ட பைக்கை போய் வச்சிருக்கான் பாரு… எரும! எரும! அவன் கூட? இல்ல அருள் கூட வந்திருந்தாலும் பரவாயில்ல, அவங்க தோளை புடிச்சி உட்கார்ந்து இருப்பேன். விதி இந்த ஆனா ஆவன்னா அகரன் கூட கோர்த்து விட்டுச்சு. இந்த ரோடு வேற மேடு, பள்ளமா இருக்கு.. எங்கயும் விழுந்து சில்லற வாங்கிடாம இருக்கணும். அதுவும் இந்த அகரன் முன்னாடி மட்டும் விழுந்து வாரிடக் கூடாது” என்று அவள் தனக்குள்ளேயே புலம்ப அகரன் சாலை ஓரம் வண்டியை நிறுத்தியவன்.

 

“கொஞ்ச வண்டிய விட்டு கீழ இறங்கு” என்று சொல்ல.. தியா அவனை புரியாமல் பார்த்தவள், “எதுக்கு இப்ப இறங்க சொல்றீங்க?… நா தான் வீட்லயே வர்லன்னு சொன்னே இல்ல. அப்ப பாட்டிக்காக வா வான்னு சொல்லிட்டு, இப்ப பாதி வழியில இறங்க சொல்றீங்களே” என்று அகரனை முறைக்க..

 

“ப்ச்! சும்மா பேசிட்டு இருக்காத தீரா! இறங்க சொன்ன இறங்கு…” என்றவனின் தீரா என்ற அழைப்பில் ஒரு நிமிடம் வியந்து, மீண்டும் அவனை முறைத்துக் கொண்டே இறங்கிய தியாவை வெறுமையாக ஒரு பார்வை பார்த்த அகரன், “உனக்கு பைக் ஓட்ட தெரியுமா?” என்று கேட்க.. தியா அவன் எதற்காக இப்போது இதை கேட்கின்றான் என்று புரியாமல், “தெரியும்” என்று தலையாட்ட, “அப்ப நீயே வந்து வண்டிய ஓட்டு… நா பின்னாடி உக்காந்துக்குறேன்” என்க..

 

“ஏன்..? எதுக்கு என்னை ஓட்ட சொல்றீங்க..?” என்ற தியாவை பார்த்து விரக்தியாக சிரித்தபடி, “பைக்ல உனக்கு பிடிச்சுக்க எதுவும் இல்ல, ஒருவேளை நீ நிலவன், இல்ல அருள் கூட வந்திருந்தால், அவங்க தோளை தயங்காமல் புடிச்சிட்டு உட்கார்ந்து இருப்பா இல்ல தீரா?…” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்க, தியாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட அகரனை நிமிர்ந்து பார்த்தாள், “என் கூட வந்தானால இப்ப உனக்கு தான் ரொம்ப கஷ்டம் தீரா!… அவசர, அவசியத்துக்கு கூட என்னை தொட உனக்கு விருப்பம் இல்ல. நீ பைக்ல இருந்து கீழ விழுந்த என்ன ஆகுறது?, அதுக்கு தான் சொல்றேன். நீ பைக்கை ஓட்டு” என்று எங்கே பார்த்துக்கொண்டு உணர்ச்சியற்ற குரலில் சொல்ல. தியாவிற்கு கஷ்டமாகி விட, நிமிர்ந்து அகரனை பார்த்தவள், “வண்டிய எடுங்க” என்க. அகரன் அவளை திரும்பி பார்க்க, அவள் அழுத்தமாக அகரனை பார்த்தவள், “வண்டி எடுங்கன்னு சொன்னேன்” என்று மீண்டும் அழுத்தமாக சொல்லி பைக்கில் இரண்டு பக்கம் கால் போட்டு உட்கார்ந்தவள், “அத்தை நேரத்தோட வீட்டுக்கு திரும்பி வரணும்னு சொன்னது மறந்து போச்ச?” என்றவள், “வண்டிய எடுங்க” என்றுவிட்டு அகரன் தோள்களை கெட்டியாக பிடித்துக்கொள்ள, அகரன் முகத்தில் மெல்லி புன்னகை பரவியது.

 

கடையில் தியா தனக்கென சில ரெடிமேட் துணிகளை எடுத்துக்கொண்டவள், ‘பாட்டி ஏதோ எடுக்க சொன்னாங்களே? அது பேர் மறந்து போச்சே?’ என்று மண்டையில் தட்டி தட்டி யோசிக்க. அவளுக்கு பாட்டி சொன்ன டிரஸ் பெயர் நினைவு வரவே இல்ல. கடையில் வேலை செய்யும் பெண், வேறு என்ன வேணும் என்று கேட்க, “என்னோட பாட்டி ஒரு டிரஸ் பேர் சொன்னாங்க சிஸ்டர், உங்க ஷாப் கேட் குள்ள வர வரை எனக்கு அந்த பேர் ஞாபகம் இருந்துச்சு. உள்ள வந்ததும் மறந்து போச்சு சிஸ்டர்” என்று அப்பாவியாக சொன்னவள், “ஒன் செகண்ட் சிஸ்டர் நா திங்க் பண்ணி சொல்லிடுறேன். அது இங்க வரை வந்திடுச்சு” என்று தன் தொண்டையை தொட்டு காட்டியவள், “ஒன் செக், ஒன் செக்” என்று குதித்து, பல்லால் தன் விராலை கடித்துக்கொண்டே யோசிக்க. அவளின் குழந்தைத்தனமான செய்கையை ரசித்துக் கொண்டிருந்த அகரன். அந்த கடைக்கார பெண்ணிடம், “தங்கச்சி ஒரு நாலஞ்சு கலர்ல பாவாடை, அதுக்கு மேட்ச்ச தாவணி, ப்ளௌஸ் காட்டும்மா” என்க.

 

தியா துள்ளி குதித்தவள், “எஸ்! எஸ்! சிஸ்டர். அது தான்! அதோ தான்! இவர் சொன்னாரே பாவாடை அப்றம் இன்னு ரெண்டு ஐட்டம்ஸ், அது தான் எனக்கு வேணும். பாட்டி அதை தான் சொன்னாங்க” என்று சிறுபிள்ளை போல் குதிக்க.. வளர்ந்த குழந்தையென சிரிக்கும் தியவை பார்த்து மென்மையாக சிரித்த கடைக்காரப் பெண், “ஒரு நிமிஷம் இருங்கக்கா. எடுத்திட்டு வரேன்” என்றவள் தியாவுக்கு பொருந்தும் அளவில் ஆடைகளை கொண்டு வந்து கொடுக்க.

 

“தியா அதில் இருந்து ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத நிறங்களில் துணிகளை எடுக்க. அந்த கடைக்காரப் பெண்ணோடு சேர்த்து அகரன் “என்ன இவ? இப்டி கண்ட்ரஸ்ட் கலர் ல டிரஸ் எடுத்திட்டு இருக்க” என்று விழித்தான். ஆனால், தியாவிடம் ஒன்று சொல்லவில்லை, “தீரா இன்னும் ரெண்டு, மூனு டிரஸ் சேர்த்து எடுத்துக்கோ, எங்க ஊர் திருவிழா வருது, அதுக்கு போட்டுக்க தேவைப்படும்” என்று சொல்ல, தியா அகரனை ஓரக்கண்ணால் முறைத்தவள், “எங்க ஊர் திருவிழாக்கு எனக்கு டிரஸ்சை, எங்க பாட்டி, அத்தைங்க, சித்தப்பா எடுத்து தருவாங்க!” என்று நாக்கலாக சொல்லிவிட்டு மீண்டும் துணிகளை பார்க்க, அந்த நேரம் அகரன் ஃபோன் அடிக்க, அவளை பார்த்து சிரித்துக் கொண்டே, அவன் அவளை விட்டு சற்று தள்ளி வந்து பேசிவிட்டு திரும்ப, தியா எடுத்த துணிகளுக்கு பில் போட்டுக் கொண்டிருந்தாள். அகரன் உடைகளுக்கான பணத்தை கொடுக்க, “ப்ளீஸ் வேணாம்… நானே பே பண்ணிக்குறேன்” என்றவள் தன் டெபிட் கார்டை எடுத்து நீட்ட அகரனுக்குள் அடிபட்ட உணர்வு… வாங்கிய துணிகளை எடுத்துக்கொண்டு இருவரும் வீட்டுக்கு திரும்பும் வரை இருவரும் மௌனத்தையே மொழியாக்கி பயணிக்க…

 

தியாவை வீட்டு வாசலில் இறக்கிவிட்டவன். அவள் துணிகள் இருந்த பைகளை அவளிடம் எடுத்துக் கொடுத்தான். தியா அதை வாங்கிக்கொண்டு உள்ளே நடக்க, “தீரா ஒரு நிமிஷம்” என்ற அகரனின் குரலில் திரும்பி அகரனை பார்த்தவள். புருவம் உயர்த்தி என்ன? என்று கேட்க…

 

“ஒரு வேளை இன்னைக்கு கடைக்கு உன் கூட நிலவன் இல்ல அருள் வந்திருந்து? அவன் உனக்காக பணம் குடுத்திருந்த? நீ வேணாம்னு சொல்லி இருப்பீய தீரா? என்று கேட்ட…

 

தியா வாய் திறக்காமல் வெறும், “ம்ம்ம்” என்று மட்டும் சொல்ல,

 

“என் தம்பி தந்தால் ஓகேன்னா? அப்ப ஏன் தீரா நா தரென்னு சொல்லும்போது மட்டும் வேணாம்னு சொன்ன?”

 

“சிம்பிள் அகரன்… உங்களுக்கு நா வெறும் கடமை.. பாட்டி சொன்னதால நீங்க என்னை கடைக்கு கூட்டி போனீங்க, சோ? உங்க கிட்ட பணம் வங்க எனக்கு எந்த உரிமையும் இல்ல.. எனக்கு செலவு பண்ண உங்களுக்கும் உரிமையோ, உறவோ இல்ல.. பட்! நிலவன், அருள் அப்டி இல்ல, அவங்க என்னை உறவாக ஏத்துக்கிட்டான்… அண்ட் நௌ த்தே ஆர் மை ஃப்ரெண்ட் டூ. சோ? அவங்க எனக்காக அதை செய்யலாம்” என்றவள் வீட்டுக்குள் சென்றுவிட அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அகரன் கண்ணில் சொல்லமுடியாத ஒருவித வலி…

 

“அவனுங்களுக்கு நீ வெறும் ரெண்டு நாளுக்கு முன்னாடி தெரிஞ்ச உறவு மட்டும் தான் டி… ஆனா, எனக்கும் உனக்குமான உறவு! உனக்கு பல்லு மொலைக்காத காலத்துல ஏற்பட்ட உறவு டி… என்னைக்கு உன்னை நா முதல் முதல்ல பாத்தேனோ அன்னையில் இருந்து இன்னனைக்கு வரை உன்னோட கண்ணு மட்டும் என் நெனைப்பை விட்டு போகவே இல்ல டி. என்னைப் போய் வெறும் கடமைனு சொல்லிட்டியே தீரா…! ஆனா, என்னால இதை உன்கிட்ட மட்டும் இல்ல, வேற யார் கிட்டயும் சொல்ல முடியாது. தாத்தாவை அவமானப் படுத்துனா அரவிந்தன் பொண்ணை என்னால ஒரு நாளும்… முடியாது… முடியாவே முடியாது” என்றவன் மொபைல் “டிரிங் டிரிங்” என்று தன் குரலை எழுப்பி, அது உன்னால முடியுமா அகரா? அப்ப எனக்குள்ள ஒளிச்சு வச்சிருக்க அவளை உன்னால அழிக்க முடியுமா?” என்று கேட்க, அகரன் ஃபோனை சைலெண்ட்டில் போட்டுவிட்டான்.

 

இங்கு வீட்டில் தியா வாங்கி வந்த உடைகளை பாட்டியிடம் காட்ட, அவருக்கும், அவள் ஏன் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத நிறத்தில் உடைகளை எடுத்திருக்கிறாள் என்று தோன்றினாலும், வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் அவளுக்கு பாவாடை, தாவணி பற்றி எதுவும் தெரியாது, அகரனுக்கும் அவ்வளவாக தெரியாது, நாளை கல்யாணத்திற்கு துணி எடுக்க சொல்லும்போது தியாவுக்க தானே உடைகளை எடுத்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விட… அந்த பக்கமாக வந்த திரவியம் தாத்தா, தியா எடுத்திருந்த உடைகளை பார்த்து விட்டு, “ம்க்கும்! அப்பனுக்கு பொண்டாட்டி சரியா தேர்ந்தெடுக்க தெரியல, இங்க அவன் பொண்ணுக்கு கட்டிக்கிற புடவையை ஒழுங்க எடுக்க தெரியல” என்று நக்கலாக சொல்ல…

 

தியா திரும்பி தாத்தாவை ஒரு பார்வை பார்த்தவள், “பாட்டி! உங்க அருமை புருஷன் கிட்ட சொல்லுங்க, எப்பவும் அவசரப்பட்டு பேசறது பேட் ஹாபிட்னு, எங்கம்மா சரியான பொண்டாட்டியா? இல்லையான்னு சொல்லவேண்டியது அவங்க புருஷன்… என்ற அப்பன் தான்… எங்கப்பனோட அப்பன் உங்க புருஷன் இல்லன்னு நா சொன்னேன்னு சொல்லுங்க” என்றவள் தான் வாங்கி வந்த உடைகளை கையில் எடுத்துக்கொண்டே, “இந்த துணி சரியா? இல்லையான்னு உங்க புருஷரை நாளைக்கு பார்க்கச் சொல்லுங்க” என்று உதட்டை சுருக்கி ஒழுங்கு காட்டிவிட்டு அங்கிருந்து சொல்ல, “திமிரு! திமிரு! அப்படியே அவங்கப்பன் திமிரு!” என்ற தாத்தாவை திரும்பி பார்த்தவள், “ம்ம்ம் ஆமா! ஆமா! எங்கப்பா அவங்கப்பா மாதிரி… நா எங்கப்பா மாதிரி! ஆக மொத்தம், எல்லாருமே ஒரு மாதிரி தான்” என்று சொல்ல, பாட்டி உட்பட அனைவரும் அடக்க முடியாமல் சிரித்து விட, திரவியம் தாத்தா கூட, எல்லோரும் அடங்கிப்போகும் தன்னிடம் தியா சரிக்கு சரி வாயடித்து பேசுவதை லேசாக ரசித்தாலும் முகத்தை மட்டும் மைக்ரோவேவ் ஓவனில் சுட்ட சப்பாத்தி மாவு உருண்டை போல் கல்லு மாதிரி வைத்துக்கொள்ள, அகரன் மட்டும் தாத்தா முகம் இறுக்கமாக இருப்பதை பார்த்து, தியா மீண்டும் தாத்தாவை மரியாதை இல்லாமல் பேசியதாக மறுபடியும் சரியை தப்பாகா புரிந்துகொள்ள… தியாவை, அவன் தீராவை விட்டு ரெண்டு இல்லை ஐஞ்சடி தள்ளி குதிதுத்து தாவி விலகி நின்றான்.

 

அகிலாபாட்டி வீட்டில் அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தார், “சீக்கிரம்! சீக்கிரம்! நல்லநேரம் வரப்போகுது சீக்கிரம் எல்லாரும் கெளம்புங்க” என்று அனைவரையும் கத்திக் கொண்டிருக்க, “அத்த? மாப்பிள்ளை வீட்டுக்கு ஃபோன் போட்டு அவங்க கெளம்பிட்டாங்களான்னு அகரனை கொஞ்சம் கேக்கச் சொல்லுங்க? சரண்யாவை சாமிக்கு விளக்கு போட்டுட்டு இருக்க… நாங்க இதோ வந்திடுரோம்” என்று சொல்ல,… பாட்டி அகரனை அழைத்து மாப்பிள்ளை வீட்டுக்கு ஃபோன் செய்யச் சொல்ல அகரன் ஃபோன் எடுத்து பேசிவிட்டு திரும்ப அங்கு மேலே இருந்து படிகளில் இறங்கி வந்த தியாவை பார்த்து வியந்து நிற்க… அவனோடு சேர்ந்து திரவியம் தாத்தா உட்பட அனைவரும் வியந்து நின்றனர்..

 

நேற்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருந்த துணிகளில் தியா செய்திருந்த திருத்தங்கள், அழகிய பூ வேலைப்பாடுகள் என்று நேற்று என்னாஆஆஆ இது?? என்று கேட்ட அனைவரும் இப்போது எவ்வளவு அழகாக இருக்கு இது!! என்று சொல்லும் அளவு அந்த உடைகளை தன் கைவண்ணத்தில் மற்றி, அதை போட்டுக்கொண்டு அக்மார்க் தமிழ் பெண்ணாக வந்த தன் பேத்தியை பார்த்து அகிலா பாட்டி கண்கள் கலங்கி இருக்க, தியா தாத்தாவை ஒரு புருவம் உயர்த்தி, ‘ஏப்புடி எங்க டிரஸ்சு’ என்று கிண்டலாக பார்த்தவள், “தேன்மொழி பொண்ணு!! ஒன் ஆஃப் தீ பெஸ்ட் டிரஸ் டிசைனர் இன் கணடா… எங்ககிட்டயேவா” என்று அவர் காதருகில் முணுமுணுக்க, திரவியம் தாத்தா கோவமாக முகத்தை திருப்பிக் கொண்டார்.

 

“இரு அத்தைகள் அவள் கன்னம் தொட்டு, “ரொம்ப அழகா இருக்க டா” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைக்க… மகா, “போதும் போதும் எம் பொண்ணுக்கு கண்ணு பட்டிடும், போங்க அண்ணி அங்குட்டு” என்று தியாவுக்கு திருஷ்டி சுத்தி நெட்டி முறித்தவர், “கடைக்கு போய்ட்டு திரும்பி வந்ததும் முதல் வேலை உனக்கு சுத்தி போடுறது தான்” என்க, “எம்மா உன் கண்ணுக்கு நானெல்லாம் தெரியலயா என்ன? நானும் கூட தான் புது டிரஸ் போட்டு அழகா இருக்கேன். யாராச்சும் ஒரு வார்த்தை சொன்னீங்களா” என்று அரும்பு முறுக்கிக்கொள்ள, “அடியேய் அவங்க என்ன சொல்றது? நா சொல்றேன் நீ பாக்க அப்படியே நல்லி எலும்புக்கு தாவணி சுத்தி விட்ட மாதிரியே இருக்க டி, பாத்து நாய் கண்டா விடாது” என்று சொல்லி சிரித்த நிலவன் தலையில் நங்கென கெட்டிய அரும்பு அவன் அவளை பதிலுக்கு அடிக்கும் முன் அங்கிருந்து வெளியே ஓடி விட்டாள்…

 

“பிசாசு, எஸ்கேப் ஆகிடுச்சு, அப்றம் சிக்கும் போது பாத்துக்குறேன்” என்ற நிலவன், “தியா இந்த டிரஸ்ல செம்மயா இருக்க டி, அப்படியே அள்ளுது போ!!” என்று அவளை பார்த்து கண்ணடிக்க… தியா முகம் முழுவதும் சிரிப்போடு, “தேங்க் யூ நிலா” என்க. பாட்டி நிலவனையும், தியாவையும் மாறி மாறி பார்த்தவர், “சரி சரி அம்மாடி தியா.

போம்மா போய் கார்ல ஏறு டைம் ஆச்சு என்றதும் தியா நகர, அதுவரை தியாவை பாவாடை, தாவணியில் பார்த்து மயங்கி நின்ற அகரன். நிலவன் தியாவை வர்ணித்தது, அதற்கு தியா முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து எல்லாம் சேர்ந்து கடுப்பை கொடுக்க… முகத்தை ஜிங்சர் தின்ன மங்க்கீ போல் வைத்துக்கொண்டான்.

 

அனைவரும் காரில் கிளம்ப, சித்தி, அத்தை, பாட்டியோடு தியா ஒரு காரில் ஏறிக்கொள்ள, அந்த காரை அகரன் ஓட்டினான். நொடிக்கு ஒரு முறை ரிவ்யூ மிரரில் தியாவை பார்த்துக் கொண்டு காரை ஓடியவன். அரைமணி நேர பயணத்தில் செல்ல வேண்டிய கடைக்கு ஒரே மணிநேரத்தில் வந்து சேர்ந்துவிட்டான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!