மண் சேரும் மழைத்துளி

திருவிழா மற்றும் திருமணத்திற்கு அனைவருக்கும் தேவையான உடைகளை எடுத்துவிட்டு கல்யாணப் பெண்ணிற்கு தேவையான பட்டுப்புடவைகள், கூரைப்பட்டையும், தேர்வு செய்யும் பொறுப்பை மணமகள் தாமரை, தன் மாமன் மகள் தியாவிடம் தந்துவிட, தியா தாமரைக்கு பொருந்தும் விதமாக ஒவ்வொரு உடையும் பார்த்து பார்த்து அழகாக தேர்வு செய்தவள். சிலவற்றை மட்டும் தானே டிசைன் செய்து தருவதாக சொல்லி, அதற்கு தேவையான அனைத்தையும் எடுத்துவிட, அனைவரும் மணமகன் சூர்யாவிற்கு துணியெடுக்க அவன் வரவுக்காக காத்திருக்க, தாமரை மட்டும் வழி மீது விழிவைத்து பார்த்திருந்தாள்… தியா மெல்ல தாமரை அருகில் வந்தவள், “பாத்து லோட்டஸ் (lotus) டார்லிங். நீ வே (way) மேல ஐஸ் (eye) வச்சு காத்திருக்கேன்னு தெரியாம உன்னோட வருங்காலம், வேகமா வந்து உன் ஐஸ்சை மீதிச்சு நசுக்கிட போறாரு” என்று தாமரை காதை கடிக்க… காலையில் குளித்து மஞ்சள் பூசி, மதிய சூரியன் போல் மஞ்சலாய் ஜொலித்த தாமரையின் முகம், இப்போது தியாவின் கேலியில் அந்திசாயும் சூரியனாக சிவந்து விட்டது.

 

தியா தனக்கு தேவையான துணிகளை பார்த்துக் கொண்டிருக்க, “ஏய் தியா! அவரைப் பாக்கணும்னு சொன்னீயே? அது தான் சூர்யா… வந்துட்டாரு பாரு” என்ற தாமரையின் குரலில் தியா வேகமாக திரும்பி பார்த்தவள். சூர்யாவை பார்த்து, “டார்லிங் உன்னோட ஆளு சுப்பர்! செம்ம சாய்ஸ்” என்று புன்னகையில் மலர்ந்திருந்தவள் முகம், சூர்யாவிற்கு பின்னால் வந்த விஷ்வாவை பார்த்ததும் அப்படியே உறைந்து விட்டது.

 

விஷ்வாவும், தியாவை அங்கே எதிர்பார்க்காதவன், “ஏய் தியா! நீ இங்க என்ன பண்றா? என்று கேட்டபடியே அவள் அருகில் வந்தவன். அவளை லேசாக அணைக்க, அங்கிருந்தவர்கள் முகம் சுழித்தபடியே இருவரையும் பார்ப்பதை கண்ட தியா, அவனை தன்னைவிட்டு தள்ளி நிறுத்தியவள், “விஷ்வா இது கனடா இல்ல… பிளீஸ் பிஹேவ் யூவர் செஃப்” என்று அடிகுரலில் கண்டிப்பாக சொன்னவள். திரும்பி பாட்டியிடம், “பாட்டி ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன்” என்று விஷ்வாவை இழுத்துக்கொண்டு அனைவரையும் விட்டு கொஞ்சம் தள்ளி செல்ல, அகரன் அவர்கள் இருவரையும் ஒரு தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“ஸ்டாப் இட் தியா! இப்ப எதுக்கு நீ என்னை இப்படி இழுத்துட்டு வர்ர… அங்க பேசினா என்ன தப்பு?” என்ற விஷ்வாவை முறைத்த தியா, “ஆர் யூ நட்ஸ் விஷ்வா, அறிவோட தான் பேசுறியா நீ? நீ பாட்டுக்கு வந்து கட்டிபுடிக்கிற? அவங்க என்னைப் பத்தி என்ன நெனைப்பாங்க?” என்றவளை ஆச்சரியமாக பார்த்த விஷ்வா, “ரியலி தியா? நீ தான் பேசிறியா? நீ எப்ப இருந்து அடுத்தவங்க என்ன நெனைப்பாங்கனு யோசிக்க ஆரம்பிச்ச? அப்படியே அவங்க எதாவது நெனச்ச தான் என்ன? நான் யாருன்னு உனக்கு மறந்து போச்ச? ” என்றவன் குரலில் கோபம் மிகுந்திருக்க, தியா அவனை முறைப்பதை பார்த்தவன், மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து, “அதை விடு தியா! நேந்து தான் ஜெசி சொன்னா, நீ திடீர்னு கெளம்பி இந்தியா போய்டேன்னனு! நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க தியா? அங்க எல்லாரும் உன்னை தேடிட்டு இருக்காங்க… உன்னோட பிசினஸ், கிளியன்ட், பெரிய பெரிய விஐபியோட வெட்டிங் ஆர்டர்ஸ் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு இந்த கிராமத்துல வந்து யார் கல்யாணத்துக்கோ டிரஸ் செலக்ட் பண்ணிட்டு” எனும்போதே, “ஸ்டாப் இட் விஷ்வா!” என்று கத்திய தியா, “அவங்க யாரோ இல்ல விஷ்வா… தே ஆர் மை ஃபேமிலி, மைண்ட் இட்” என்ற தியாவை அலட்சியமாக பார்த்த விஷ்வா, “அப்ப நா யாரு தியா?” என்க

 

 

“ப்ச்! பிளீஸ் விஷ்வா… டோண்ட் கிரிரேட் ஏ சீன்… நீயும் எனக்கு முக்கியம் தான்.. பட் இங்க ஒன்னு பேச வேணாம். எதுவா இருந்தாலும் அப்றம் பேசலாம்” என்றவள் நகர அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்திய விஷ்வா, “ஹவ் டேர் யூ தியா? நா!! சீன் கிரியேட் பண்றான? நீ பாட்டுக்கு எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு இங்க வந்துட்ட, அதை கேட்ட சீன் கிரியேட் பண்றேன்னு சொல்ற நீ? என்னை விடு, உன்னோட அப்பா, அம்மா!” என்று விஷ்வா ஆரம்பிக்கும் போதே அவன் சட்டை கலரை பிடித்தவள் அவனை தீயாக முறைத்து, “அவங்க என்னோட அப்பா, அம்மா… அங்களை பத்தி என்னைவிட உனக்கு தெரியுமா என்ன? தேவையில்லாத பேச்சை பேசிட்டு இருக்காம, முதல்ல இங்க இருந்து போ” என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க, தூரத்தில் இருந்து விஷ்வா, தியா பேசுவதையும், விஷ்வா தியாவை தொட்டு தொட்டு பேசுவதை பார்த்து அகரனுக்கு உள்ளுக்குள் கடுப்பு நெருப்பு கொழுந்து விட்டு எரிய…

 

இங்கு சூர்யா, விஷ்வா மற்றும் தியாவை பார்த்தவன், “அவன் என்னோட ஃப்ரெண்ட் தாத்தா, ரெண்டு நாள் முந்தி தான் கனடாவுல இருந்து வந்தான்” என்று சொல்ல, “ஒஒஒ! அப்டியா மாப்ல… தியா என்னோட அண்ணா அரவிந்தனோட பொண்ணு, அவ கூட கனடா இருந்து தான் இங்க வந்திருக்கா. உங்க ப்ரண்டுக்கும் தியாவை முன்னையே தெரியும் போல” என்று செந்தில் சொல்ல, அனைவரும் தியா, விஷ்வாவை பார்க்க… தியா, விஷ்வாவிடம் தீவிரமாக எதையே பேசிக்கொண்டிருந்தவள், “நா சொன்னது புரியுது இல்ல… பிளீஸ் விஷ்வா, ஏடாகூடமாக எதுவும் ஒளரி வச்சிடாத” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு பாட்டியிடம் வந்தவள், “பாட்டி இது விஷ்வா… என்னோட ப்ரண்ட்.. ரெண்டு பேரும் சின்ன வயசில் இருந்து ஒன்னவே படிச்சோம்” என்று அவனை அறிமுகம் செய்து வைக்க விஷ்வா கடமைக்கு சிரித்தவன், “ஆமா… நானும் இவளும் சின்ன வயசில் இருந்து ஒன்னவே தான் இருக்கோம்… வீ ஆர் மோர் தென் அ ஃப்ரண்ஸ்” என்றவன் தியாவை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே, அவள் தோளில் கை போட, நிலவன் தியா அருகில் வந்தவன். மெதுவாக அவன் கையை தியா தோளில் இருந்து எடுத்துவிட்டு, “நீங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ஸ் எல்லாம் ஓகே தான் பாஸ்… ஆனா இந்த பொம்பளை புள்ளையை கட்டிபுடிக்கிறது, தோள்ல கை போடுற வேலை எல்லாம் இங்க வேணாம் பாஸ்… இது கனடா இல்ல, இந்தியா… நீங்க எங்க வூட்டு பொண்ணு தோள்ல கை போடுறது, இப்ப கொஞ்சம் முன்னாடி கட்டி புடிச்சதை எங்க உறவுக்காரங்க பாத்த அவ்ளோதான்… உங்க உடம்பு தோளை உறிச்சு உப்பு தடவி வெயில்ல காயப்போட்டுவாங்க” என்க…

 

“ஆமா பாஸ், நிலவன் சொல்றது உண்மை தான். சோ கீப் சோஷியல் டிஸ்டான்ஸ்” என்ற அருள், “தியா கண்ணு! நீ இப்டி வந்து மாமன் பாக்கத்துல நில்லுடா” என்றவன் அவள் கையை உரிமையோடு பிடித்து இழுத்து தன்னருகில் நிறுத்திக் கொள்ள… தியா மெதுவாக நிமிர்ந்து நிலவன், அருளை பார்த்து கண்கொட்டி சிரிக்க, விஷ்வாவை விட்டு தியா தள்ளி வந்தது ஆறுதலாக இருந்தாலும் நிலவன், அருள் நடுவில் உரிமையோடு நிற்கும் தியாவிடம் தன் மட்டும் தள்ளி நிற்பது அகரனுக்கு எரிச்சலை கிளப்ப… இங்கு தியாவை பார்த்து அவள் அருமை தங்கை அரும்பு கருகிக்கொண்டிருந்தாள்.

ஒருவழியாக துணி எடுக்கும் வேலை நல்லபடியாக முடிய அனைவரும் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட, விஷ்வா தியாவையும் அருள், நிலவனையும் மாறி மாறி பார்த்தபடியே சூர்யாவுடன் கிளம்பினான்.

 

பாட்டி, சித்தி, அத்தையுடன் தியா மட்டும் இன்னும் சில பொருட்களை வாங்க கடை கடையாக அலைந்து கொண்டிருக்க, அகரனும் அவர்களோடு வால் பிடித்துக் கொண்டு சென்றான்.

தியா வேடிக்கைப் பார்த்துக்கொண்டே ரோட்டில் நடக்க, அவளை இடிப்பது போல் வந்த லாரியை கவனிக்காமல் போக, சரியான நேரத்தில் அகரன் அவள் கையை பிடித்து இழுக்க, அகரன் மார்மீது வந்து மோதியவள். அப்படியே அவனை இறுக்கி அணைத்தபடி சாலையில் சரிந்து விழ, லட்சுமி, கார்த்திகா, மகா மூவரும், “அகரா? தியா?” என்று கத்திகொண்டே ஓடி வருவதற்குள்… அகரன் தன்னை மீட்டுக் கொண்டு எழுந்து நின்றவன்… தியா முகம், கை, காலை பிடித்து திருப்பி, திரும்பி பார்த்தவன், “உனக்கு எதாவது அடிபட்டிருக்கமா ? எங்கயும் வலிக்குதம்மா? என்றவன் மீண்டும் மீண்டும் அவள் முகம் மற்றும் கையை தொட்டு தொட்டு பார்த்து, “சொல்லுமா? எங்கயாது அடிபட்டிருக்க? ஹாஸ்பிடல் போலாமா? என்று தனக்காக பதறி துடிப்பவனை தியா இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருக்க… லட்சுமியும், மகாவும் தியாவை தங்கிப் பிடிக்க, அகிலாபாட்டி பதட்டமாக ஓடிவருவதை பார்த்து கார்த்திகா அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தார்.

 

பாட்டி தியா, அகரனை கண் கலங்க பார்த்தவர், “நெனச்சேன் அப்பவே நெனச்சேன் குடும்பம் மொத்தமும் ஒன்னா வெளியே போறேன். அக்கம் பக்கம் இருக்கவங்க கண்ணு படும், கெளம்பும் போது சாமிக்கு மஞ்சதுணில காசு முடிஞ்சு வைக்கணும்னு… கெளம்புற அவசரத்தில் எல்லா மறத்து போச்சு!” என்று பாட்டி தலையில் அடித்துக்கொள்ள… லட்சுமியும், கார்த்திகாவும் அவரை அமைதிப்படுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்க… தியா இன்னமும் அகரனைவிட்டு சற்று தன் கண்மணிகளை அசைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனும் தன்னை விழுங்கும் பார்வை பார்க்கும் கண்களுக்குள் விழுந்து மிதந்து கொண்டிருக்க “டேய் அகரா கையில ரத்தம் வருது டா” என்ற மகாவின் குரலில் இருவருமே மோனநிலையில் இருந்து நார்மல் நிலைக்கு வர, தியா பட்டென் அவன் கையை பிடித்து பார்த்தவள். தன் கர்சீப்பை எடுத்து அவன் காயத்தில் கட்டிவிட்டாள்.

 

“எனக்கு ஒன்னு இல்ல தீரா, விடு என்றவன், “பாட்டி எல்லாம் வாங்கியாச்சில்ல… கார்ல ஏறுங்க, கெளம்பலாம்” என்ற அகரன் கையைப் பிடித்து நிறுத்திய தியா, “கார் கீ குடுங்க நா டிரைவ் பண்றேன்” என்று சொல்ல, “இல்ல பரவாயில்ல, நீ உக்காரு நானே ஓட்றேன்” என்ற அகரனை முறைத்த தியா, “பாட்டி,ன… நீங்க அத்தை, சித்தி எல்லாம் பின்னாடி உக்காருங்க” என்றவள், “நீங்க” என்று அகரனை கைகாட்டியவள், “முன் சீட்ல உக்காந்து எனக்கு ரூட் சொல்லுங்க” என்றவள் அவன் கையில் இருந்த கார் கீயை பிடிங்கிக்கொள்ள, அகரன் ஒரு சின்ன சிரிப்போடு முன் சீட்டில் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

 

 

வரும்போது தியா அந்த ரோட்டின் ரெண்டு பக்கமும் தெரிந்த வயல்கள், கரும்பு தோட்டம், சலசலவென ஓடும் ஆறு என, அனைத்தையும் ரசித்தபடி வந்தவளுக்கு, இப்போது ஏனோ அகரனை தவிர வேறு எதுவும் கண்ணில் பாதித்தாலும் கருத்தில் நிலைக்கவில்லை… அகரன் வழி சொல்ல, மெதுவாக வண்டியை ஓட்டியவள், ஓரக்கண்ணால் அகரனையும் பார்க்க தவறவில்லை… தியா தன்னை பார்ப்பதை தெரிந்து அகரன் மனது ஜீல் ஜீல் என்று கூத்தடிக்க, கண்முன்னே அத்தை மகனும், மாமன் மகளும் ‌ ஜோடியாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னாடி இருந்த பெரியவர்கள் மனது வேறு கணக்கு போட்டது.

 

தியா காரில் இருந்து மெதுவாக அகரன் கையைப் பிடித்து கீழே இறக்கிவிட அந்த நேரம் அங்கு வந்த திரவியம் தாத்தா அகரன் கையில் கட்டுப் போட்டிருப்பதை பார்த்து பதறியவர், “டேய் அகரா !என்ன டா இது? என்ன ஆச்சு?” என்று கேட்க… அகரன் வாய் திறக்கும் முன் பாட்டி நடந்ததை அழுதுகொண்டே தாத்தாவிடம் கெட்டிவிட, தாத்தா தியாவை தீயாக முறைதவர், “அடியேய் அகிலா உன் அருமை பேத்திகிட்ட சொல்லி வை… இது கிராமம்… பொண்ண லட்சணமா பூமியை பாத்து நடக்கணும். அப்டி இல்லாம, ஃபேன்னு பராக்கு பாத்துட்டு நடந்த இப்டி தான் நடக்கும். இவ பண்ண தப்புக்கு! பாரு எம் பேரனுக்கு அடிபட்டிருக்கு… சரி அவனைவிடு! இவ பொம்பளை புள்ள… கீழ விழுந்து மூஞ்சு மொகரையில அடி பட்ட என்னடி இவளை கட்டிக்குவான்” என்று தாத்தா குதிக்க…

 

தியா, மற்ற நேரமாக இருந்திருந்தால் தாத்தாவிற்கு தகுந்த கவுன்டர் கொடுத்திருப்பாள். ஆனால் இப்போது அவள் எண்ணம் முழுவதும் அகரனே ஓடிக்கொண்டிருக்க, அமைதியாக அகரனை ஆழமான பார்வை பார்த்தவள். தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

 

இன்று வரை அகரன் தன்னை வெறுக்கிறான் என்று நினைத்து அவனைவிட்டு ஒதுங்கி இருந்த தியாவிற்கு இன்று தனக்காக அவன் பதறியது, அவன் துடித்த துடிப்பு, அப்போது கலங்கி இருந்த அவன் கண்களில் அன்போடு சேர்ந்து தெரிந்த வேறு ஏதோ ஒன்றும் தியாவின் மனதில் புகுந்து அவளை அலைக்கழிக்க தலையணையிடம் தன் மனதின் தவிப்பை இறக்கி வைக்க அது தன் பஞ்சு போன்ற கரத்தால் அவள் கன்னத்தை தடவிக்கொடுக்க அமைதியாக கண்மூடி இருந்தவள் சிந்தனையை கலைத்தது அவள் தொல்லை பேசி (தொலைபேசி) திரையில் விஷ்வாவின் நம்பரை பார்த்து “நாட் அகைன்” என்று புலம்பியபடியே ஃபோனை அட்டென் செய்து காதில் வைக்க, அந்த பக்கம் விஷ்வா, நிலவன் மற்றும் அருள் பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு தியாவை துளைத்து விட்டான்.

 

“யாரு தியா அந்த ரெண்டு பேரு? நா உன்னை தொட்டு பேறது தப்புன்னு சொல்லிட்டு அவன் உன் கையை புடிச்சு இழுத்து பக்கத்துக்கு நிக்க வச்சிக்கிறான். அவன் தொட்ட மட்டும் தப்பில்லயா?? அவனை உரிச்சு சால்ட் தடவ மாட்டாங்கள?? அப்றம் அங்க இன்னொருத்தன் உன்னோட என்னை பாத்து அப்டி முறச்சிட்டு இருக்கான்… வாட்ஸ் ஆல் திஸ் தியா?” என்று விஷ்வா கேட்க, தியா வந்த சிரிப்பை வாயக்குள் அடக்கிக்கொண்டவள்… 

 

“அவங்க என்னோட காஸின்… என்னோட மாமா பசங்க, அண்ட் நவ் தே ஆர் மை ப்ரெண்ட்ஸ் டூ விஷ்வா”…

 

“வாட் மாமா பசங்கல? இந்தியால முறை பையன் அது இதுன்னு சொல்லுவாங்களே அதுவா தியா?” அப்ப அந்த முறை பையன். உன்னை லவ் பண்றானா? அதான் என்னை அப்டி பாத்தானா?? என்று பதற…

 

“டேய் டேய்?? ஏன் டா?? அவங்க என்னோட மாமா பசங்க அவ்ளோதான். நீ பாட்டு உன்னோட கற்பனை குதிரையை கண்டபடி ஓட விடாத… ஏற்கனவே நான் இங்க ஒரு வயசான சிங்கத்துகிட்ட wwf போட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு புதுசா எதையும் கெளப்பி விடாத. இப்ப நீ ஃபோனை வை. நா சொன்னது ஞாபகம் இருக்கட்டும்… சப்போஸ் நீ சூர்யா வீட்டுகாரங்களோட கல்யாணத்துக்கு வந்த கூட இங்க யார்கிட்டேயும் எதுவும் வாய் விட்டுடாத” என்று எச்சரித்தவள் ஃபோனை வைக்கப்போக, “ஏய் ஏய் விஷ்வா ஒன் செகண்ட்… யாரோ உன்னை என்னோட பார்த்து மொறச்சாங்கன்னு சொன்னீயே? அது யாரு? என்னோட இருந்தாங்களே நிலவன், அருள் அவங்களா? என்று கேட்க…

 

“இல்ல தியா. அவங்க ரெண்டு பேர் இல்ல. அங்க ஒயிட் ஷர்ட் போட்டு நல்ல ஹைட்ட ஒருத்தன், சூர்யா பக்கத்துல இருந்தானே அவன் தான்” என்று சொல்ல… தியாவுக்கு அது அகரன் தான் என்று புரிந்துவிட, “அகரன் ஏன் விஷ்வாவை பாத்து கடுப்பாகணும்? அப்ப அகரனுக்கு  என் மேல எதுவும்? ” என்று யோசித்தவள், “இல்லயே அதுக்கு வாய்பில்லையே என்று புலம்பியபடியே ஃபோனை வைத்தாள்.