மது பிரியன் 21(நிறைவு)

மது பிரியன் 21(நிறைவு)

உறங்கிய பாவனையில் இருந்த மதுவைத் தொந்திரவு செய்யாமல் அருகே சென்று படுத்தான் விஜய். எத்தனை அலைச்சல் இருந்தபோதிலும், மனக் குழப்பமும், அழுத்தமும் இருந்தபோதிலும், மது தன்னருகே இருப்பதைக் கண்டவனுக்கு அனைத்தும் சரியானது போன்ற நிம்மதியான உணர்வு.

முந்தைய தினத்தைக் காட்டிலும், அதீத குழப்பம் இன்றைய தினம் முழுமையுமே அவனுக்குள் வியாபித்து, அவனைக் குடைந்தது என்றாலும் தற்போது எந்த உணர்வும் இன்றி, நிச்சலனமாக இருந்தான்.

புரியாத விசயங்களை புரிய வைத்த தினமல்லவா இன்று.

மது விலகியிருந்தது, வேதனையைத் தந்தது.  ஆனால் மது என்ன ஆனாளோ என்று தெரியாத நிமிடங்கள், அவனுக்குள் உண்டாக்கிய அவளின் தாக்கத்தை, அவளின் விலகலைத் தெள்ளத் தெளிவாக உணரச் செய்திருந்தது.

இந்த நிச்சலனமான நிமிடத்தில், தன்னவளை அருகே பார்த்திருப்பதே வரமாகத் தோன்றியது.  தனக்கினி இது உடைமையுள்ளதா? என தவித்துப் போயிருந்த தருணங்கள், இனி தன் வாழ்வில் வரவே கூடாது என சங்கல்பம் செய்தது விஜய்யின் மனம்.

விஜய்யின் மனதை அறியாதவளோ, இதுவரை விலகியிருந்தவன், தனது இந்த பொறுப்பற்ற செயலுக்குப்பின் என்ன செய்வானோ என பேதையுள்ளம் பதைபதைப்போடு உறங்க இயலாமல் துயருற்றிருந்தது.

எத்தனை நேரம் அசைவற்று ஒரே நிலையில் விழித்தபடியே படுத்திருக்க இயலும்.  முடியவில்லை.  திரும்பினாலோ, அவசரத்தைத் தணிக்க எண்ணி எழுந்து சென்றாலோ, கணவனது எதிர்பாரா பேச்சிற்கோ, அவன் எடுக்கும் நடைவடிக்கைக்கோ, ஆட்பட நேரிடும் என ஒருபுறமாகவே படுத்திருந்தாள் மது.

இதுநாள்வரை மதுவை நெருங்காத விஜய்யின் உள்ளம், அவளின் இருப்பை உணர வேண்டி, ஊர்ஜிதம் செய்யவேண்டிய நிலையில் மதுவை நெருங்கிப் படுத்தான்.

 ஏனெனில் அன்று காலை முதலே, நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அவனை அவ்வாறு எண்ணச் செய்திருந்தது.

கணவனது இந்த நெருக்கத்தை எதிர்பார்த்திராதவள், உடலெங்கும் ஜிவ்வெனப் பரவிய உணர்வில், தோலெங்கும் புல்லரித்த நிலையில் படுத்திருந்தாள்.

மதுவைத் தொட்டவுடனே, அவள் தோலின் ஸ்பரிசத்தில், அவள் விழித்திருப்பதை உணர்ந்து கொண்டவன், அதற்குமேல் தாமதிக்காமல், இன்னும் அவளை நெருங்கி அணைத்தான்.

உறக்கத்தில் மனம் செயல்படாதல்லவா.  மனம் செயல்பட்டால்தானே, உணர்வுகளின் கிளர்ச்சி அங்கு.  அதனைக் கொண்டே விஜய், மது உறங்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டிருந்தான்.

“மது” விஜய்

அமைதியை மட்டுமே பதிலாக்கினாள் மது.

உறங்குபவளை பெரும்பாலும் தொந்திரவு செய்யாமல் ஒதுங்கிச் செல்பவனை, இன்று அடுத்த நிலைக்குச் செல்வதை உணர்ந்து, ‘என்னாச்சி.  திடீர்னு.  அவ்ளோ முறுக்கிட்டுத் திரிஞ்சாறு.  இன்னைக்கு எதுவுமே நடக்கலைங்கற மாதிரி நடந்துக்கறாரு’ கணவனின் செயலில் ஒன்றும் புரியாமல், ஆனால் மறுக்காமல் எதிர்ப்பைக் காட்டாமல் அமைதியாக இருந்தாள்.

“மது உன்னைத்தான்” விஜய்

“ம்” மது.  குற்றமுள்ள நெஞ்சக் குறுகுறுப்போடு பதிலுரைக்க முனைந்தாள்.

“என்னையவிட, உங்க அத்தைதான் முக்கியம்னு, அங்க போயி இருந்திட்டியா?” என்ற விஜய்யின் கேள்வியில், மதுவின் உள்ளம் உடைந்து சுக்கு நூறானது.

இருவருக்கிடையே பிரச்சனை இருந்தது.  பிரச்சனை ஒரு முடிவுக்கு வருமுன், எங்கு சென்றோம் என்பதைக் கூறாமலேயே தலைமறைவானால், அவனும்தான் என்ன நினைப்பான்.

விஜய்யின் உள்ளத்தில் இருந்ததைக் கேட்டதும், மடை திறந்த வெள்ளமென மதுவின் கண்ணில் நீர் வரத் துவங்கியிருந்தது.

“உன்னை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேனா?” விஜய் மீண்டும் மதுவிடம் கேட்க

“ம்ஹ்ம்” தலையை மறுத்தசைத்து கூறியவளின் குரலே சொன்னது அவள் அழுகிறாள் என்று.

“எதுக்கு இப்போ அழற?  உனக்கு இங்க செட்டாகலைன்னு இனி உங்க அத்தையோட போற எண்ணத்துலதான் அங்க போனியா?” விஜய்யிக்கு தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

அப்படித்தானே அவனிடம் பேசிவிட்டுக் காளையார்கோவில் போகக் கிளம்பியிருந்தாள்.  அதனால் விஜய் அப்படிக் கேட்டான்.

பெருங்குரலெடுத்து அழத் துவங்கியவள், அழுகையோடு, தான் ஒன்று நினைத்தது, நடந்தது, விஜய்யின் நம்பிக்கையின்மை, அதனால் உண்டான பிணக்கு, அதிலிருந்து மீள வேண்டி பிரேமாவின் வீட்டிற்குச் சென்றது, கணவனின் பேச்சைக் கேட்டுக் காரைக்குடி கிளம்பியது, பேருந்தில் ஏறியதும் எதிர்பாரா நிகழ்வாக நடந்தது, மருத்துவமனையில் இருந்த அத்தையை சந்திக்கச் சென்றது, அங்கு சென்றது முதல் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறிவிட்டு தேம்பினாள்.

அழுதவளைத் தேற்றும் விதமாக, மார்போடு இறுக அணைத்துக் கொண்டவன், “சரி அழாத” எனத் தேற்றினான்.

நீண்ட நேரத் தேற்றலுக்குப்பின், தன்னவளை சிரிக்க வைக்கும் முயற்சியில் ஜெயித்து, அதன்பின் முந்தைய நாள் அஞ்சனாவை நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் சந்தித்ததைக் கூறினான்.

விரைத்து, தன்னிடமிருந்து மீள எண்ணி ஒதுங்கியவளை, விடாமல் தனது அணைப்பில் வைத்தபடியே அனைத்தையும் கூறி முடித்தான்.

கண்களைத் திறக்காமலேயே அனைத்தையும் கேட்டுக் கொண்டவள், வாயைத் திறக்காமல் இருந்தாள்.  அஞ்சனாவின் சூளுரை, அதன்பின் மதுவைக் காணாதது, அதனால் தான் அவளிடம் இன்று சத்தம் போட்டது.  அஞ்சனாவை நம்பாமல் அவளின் அண்ணனிடம் அவளின் இருப்பிடத்தைப் பற்றிக் கூறியது அனைத்தையும் மதுவிடம் கூறினான்.

பொறுமையோடு, ‘இப்ப எதுக்கு எல்லாத்தையும் சொல்லிட்டுருக்காரு’ என நினைத்தாளே, அன்றி கேட்கவில்லை மது.

“இப்ப எல்லா டவுட்டும் கிளியராயிருச்சுல்ல.  இனி இந்தத் தலைக்குள்ள எதையும் போட்டு உருட்டமாட்டல்ல” என மனைவியின் தலையை ஆட்டிக் கேட்டான் விஜய்.

மதுவும் விடாமல், “இதை நீங்க நம்ம கல்யாணம் முடிஞ்சதுமே சொல்லியிருக்கலாம்.  இவ்ளோ பிரச்சனை நமக்குள்ள வந்திருக்காது” என்றாள்.

திருமணம் சார்ந்து அஞ்சனா மதுவிடம் பேசியது, அதற்கான பதிலையும் ஒளிவு மறைவின்றி மனைவியிடம் பகிர்ந்து கொண்டவன், “அதனாலதான் நான் நீ சொன்னப்போ பெருசா எடுத்துக்கலை.  ஆனா, அது தெரியாம நீ பட்ட கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன்” வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டவன்,

“எம்மேல உள்ள கோபத்தில என்னைக் கண்டுக்காம இருந்திராத மது.  நீ இல்லாம நான் என்ன செஞ்சேன்னு சொன்னா, உனக்கே எம்மேல பரிதாபம் வந்திரும்” என்றவன் அதையும் மறைக்காமல் கூறினான்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டவள், அவளாகவே கணவனது மார்பில் சலுகையாகச் சென்று ஒட்டிக் கொள்ள, விஜய்யும் தன்னவளை முன்பைக் காட்டிலும் இறுக தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

சற்று நேரம் அணைப்பில், ஒருவருக்கொருவர் இளைப்பாறினார்கள்.

விழிகள் மூடியிருந்தாலும், கருவிழிகளின் அசைவினைப் பார்த்துப் புன்னகைத்தவன், அவளின் படபடத்த இமைகளை, உதட்டால் முத்தமிட்டான்.

“ஏய் என்னைப் பாருடீ” விஜய்

“ம்ஹூம்” நாணத்தால் மறுத்தாள் மது.

“இப்பப் பாக்கப் போறீயா.  இல்லையா?” மெதுவான குரலில் தன்னிடம் கேட்டவனிடம், அதிகம் பிகு செய்யாமல் மெதுவாகத் திறந்து பார்த்துவிட்டு, இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

மதுவிற்கு, உள்ளுக்குள் இன்று தான் செய்த செயலின் உணர்வுத்தாக்கம் அவளிடம் இன்னும் முழுமையாக விலகாமல் இருந்ததால், அவ்வாறு தாழ்த்திக் கொண்டிருந்தாள்.

மதுவின் இடுப்பை தன்னை நோக்கி இழுத்து, இறுகத் தன்னோடு அணைத்தவன், “ஒரு விசயம் கேக்க மறந்துட்டேனே.  ஏன் எங்கிட்டச் சொல்லாம காளையார்கோவில்ல இருந்து கிளம்பி வந்த?” கேட்டான்.

“ம்.. சர்ப்ரைஸ் தர்றேன்னு” கூறிச் சிரித்தவள், “ஆனா சப்புன்னு எல்லாம் வேஸ்டாப் போயிருச்சு” இமைகளைத் தாழ்த்தியபடியே உரைத்தாள்.

மீண்டும் அவளின் இமையில் இதழ் ஒற்றியவன், “சரி. இப்போ நீயா என்னை கிஸ் பண்ணு?” என்றான்.

இமை திறந்து கணவனின் இரு கண்களையும் மாறி மாறிப் பார்த்தவள், முடியாது என்பதுபோல கீழே குனிந்து கொண்டாள்.

“பண்ண மாட்டியா?” விஜய்.  உருக்கும் குரலில் கேட்டான்.

“கண்ணை மூடிக்கோங்க” என்றாள் வெட்கத்தோடு.

பட்டும் படாமல் இதழொற்றியவளை, காற்றுப்புக முடியாமல் இறுக அணைத்துக் கொண்டவனது கைவிரல்கள் உடலெங்கும் வேகமாகப் படர, மோகித்தவனின் செயலில் மயக்க நிலையில் இருந்தாள் மது.  நெற்றியில் துவங்கி, அங்கமெங்கும் முத்தத்தால் அபிசேகம் செய்தான்.

துவண்டிருந்த மார்பகங்கள், அவனது முத்த அபிசேகத்திற்குப் பதிலுரைக்க, தன்னை முட்டி, எட்டி நிற்கச் செய்த முலைகளுக்கு, முதல் மரியாதை செய்தான்.

முன்பைக் காட்டிலும், அதீத வேகமும், பொறுமையற்ற தேடலும், அவளை அவன் தேடிய வேகத்தைக் கூறிட, கருத்தொருமித்து ஒத்துழைத்தாள்.

மதுவின் மனதோடு, உடலும் அவனது தேடலுக்கு செவி சாய்த்திட, இவள் இளகிக் குழைய, அவன் வீரியத்தோடு விரைய, ஆற்றுவெள்ளம்போல தனக்குள் விரைந்தவனுக்கு தனக்குள் புக இடம் தந்தவள், அவனின் இயக்கத்திற்கு ஏற்ப அவளும் இயங்கினாள்.

மீட்டியவனின் மீட்டலுக்கு ஏற்ப, ரிதமாகச் சுருதி மாறாமல் செயல்பட்டாள். இயங்கிய இருவரின் உடலும் ஒருங்கே உச்சம் பெற்றிட, உண்டான மயக்கத்தில் ஒருவரின் அருகாமையில் மற்றொருவர் களைப்பிலிருந்து மீள முயன்றனர்.

இடைவெளி நிரம்பிய உணர்வு இருவருக்குள்ளும் மாறி, அத்வைத உணர்வைத் தந்திருந்தது.  தாம்பத்தியம், கூடலின் வழியே ஊடலுக்கு தகுந்த நியாயம் செய்திடுமா?  ஆனால் ஊடலுக்கான எந்தக் காரணத்தையும், மனவேறுபாட்டையும், வருத்தத்தையும் நினைவில் விட்டு வைக்காமல் கபளீகரம் செய்கிறதேன்!

குறைகள் மறைந்திருந்தது.  குற்றம் இல்லாமல் போயிருந்தது.  நடந்தவற்றை நடந்ததா என யூகிக்கவே இயலாமல் செய்திருந்தது.

விரையமான வித்து, கற்ப நிலத்தில் விதையாகி, விருட்சமாக முடிவு செய்துவிட்டது.

***

          தம்பதியர் சகிதமாக அனைத்து விசயங்களையும் கலந்து, ஆலோசித்து, நிறை குறைகளை அலசி, முடிவுக்கு வந்திருக்க, மெனக்கெடலோடு வந்த பாரிஜாதத்திற்கு வேலை சுலபமாகியிருந்தது.

          மேலும் இரண்டு நாள் தங்கியிருந்த பாரி, அனைத்தும் சரியாகிவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்டு, ஊருக்குக் கிளம்பியிருந்தார்.

          அடுத்து வந்த பத்தாம் நாளில், மாவட்ட அளவில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் வந்த செய்தியைக் கண்ட, மது விக்கித்துப் போயிருந்தாள்.

          அன்று மாலைவரை கணவனது வருகைக்காகக் காத்திருந்து விசயத்தைக் கூற, விஜய்யுக்கும் குற்றவுணர்வு மேலோங்கியது.

          மது கணவன் வருந்துவதைக் கண்டு, “நமக்கு அவங்க தொந்திரவு தர நினைச்சதாலதான் நீங்க அவுங்க வீட்டுல சொன்னீங்க.  அவங்க குடும்பத்து ஆளுங்க இப்படி மிருகமா மாறுவாங்கன்னு நீங்க என்ன கனவா கண்டீங்க.  அவங்க செய்த தப்புக்கு நிச்சயமா நீங்க காரணமில்லை” என கணவனைத் தேற்றினாள்.

          அஞ்சனா தீவிர வயிற்றுவலியின் காரணமாக, தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்திருந்தது.  ஆனால், அது தற்கொலையல்ல, திட்டமிடப்பட்ட கொலை என்பது விஜய், மது இருவருக்கும் தெரிந்து வருந்தினார்கள்.

          ஒருவரையொருவர் தேற்றி, அந்த நிகழ்விலிருந்து மீள முயன்றார்கள்.

***

          இரண்டு மாதங்களுக்குபின் ஒரு நாளில், எழ முடியாமல் படுத்திருந்தவளை, “வா மது.  எழுந்து பிரஸ் பண்ணிட்டு வந்து எதாவது சாப்பிடு” விஜய் அழைக்க

          “பிரஸ் பண்ணா, வாமிட்டா வருது.  எனக்கு எதுவுமே வேணாம்” என எழ மறுத்தாள் மது.

          “பிரஸ் பண்ணலைனாலும் பரவாயில்லை.  அப்படியே இந்த பாதாம் பாலை மட்டும் குடிச்சிருவியாம்” என தம்ளரை விஜய் நீட்ட, தம்பதியரின் சம்பாசனையைக் கேட்டும், கேளாமலும், பஞ்சவர்ணம் மதுவிற்கு பத்திய உணவு சமைக்கும் முயற்சியில் இருந்தார்.

          எதையும் உண்ணப் பிடிக்காமல், உண்ட அனைத்தையும் வாந்தியெடுக்கும் அத்தையின் மேல் இரக்கப்பட்ட வசீகரன், அவ்வப்போது வந்து, “அத்தை உங்களுக்கு எதுவும் வேணுனா யோசிக்காம எங்கிட்டக் கேளுங்க.  நான் எங்கனாலும் போயி வாங்கித் தரேன்” என்றிட, பேச்சோடு மதுவிற்கு தோன்றியதைக் கூறியிருந்தாள்.

          அதனை நினைவில் வைத்து வாங்கி வந்த வசீ, “அத்தை உங்களுக்கு இலந்த மிட்டாய் வேணுனு கேட்டீங்களே.  இப்ப அதையாவது சாப்பிடுங்க அத்தை” என கையில் இருந்ததை நீட்ட,

          வசீகரனிடமிருந்து அதனைப் பெற்றுக் கொண்டவள், கணவனைக் காண நாணி, குனிந்து கொள்ள, மதுவின் செயலைக் கண்டு சிரித்தபடியே, “எதையோ சாப்பிட்டாச் சரி.  ஆனா வயிற காயப் போடக்கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்கள்ல.  அதனால இதெல்லாம் பத்தாது.  வேற எதாவது பஞ்சக்காட்ட வாங்கி சாப்பிட்டுக்க மது. இப்போ இந்தப் பாலை மட்டும் குடிச்சிரு” மன்றாடினான் விஜய்.

          விஜய், தன் மகவைத் தாங்கும் மதுவைத் தாங்கினான். விஜய்யின் உறவுகளும், பிரேமாவும் மதுவின் உடல்நலனில் மிகுந்த அக்கறையோடு நடந்துகொள்ள, பத்தாம் மாதம், குட்டி விஜய்யை ஈன்றெடுத்தாள் மது.

பிரேமா, “எங்க வீட்ல வச்சி உனக்குப் பிரசவம் பாக்கறேன்னு சொன்னா, உன் வீட்டுக்காரர் விடமாட்டிங்கறார் மது.  நீயாவது சொல்லேன்” என்றாலும், மதுவிற்கும் விஜய்யைப் பிரிய மனமின்றி, சிரித்து சமாளித்தாள்.

          எதற்காகவும் தனது கிராமத்தைவிட்டு வெளியில் எங்கும் வராத இசக்கியம்மாள், பேரனுக்காக காரைக்குடியில் வந்து தங்கியிருந்து, மருமகளையும் பேரனையும் கவனித்துக் கொண்டார்.

          மதுவின் பிரியன், மகனைப் பெற்றுத் தந்த தனது மணவாட்டியை அன்பால் சீராட்டினான்.  தனது ஆளுமையால் அவளைப் பித்தாக்கினான்.

          பிரேமா மதுவிற்கு வளைகாப்பு நிகழ்விற்கு சௌந்திரத்திற்கு அழைக்க, “நானே முடியாம இருக்கேன்.  என்னால அவ்ளோதூரம் வர முடியாது” என வைத்திருந்தார்.

பிரேமா அடிக்கடி காரைக்குடிக்கு வந்து, தன்னால் இயன்றவரை மதுவிற்கு தாயில்லாத குறை தெரியாமல் நன்கு கவனித்துக் கொண்டார்.

          இள வயதில் இழந்துபோன அனைத்தையும், மதுவின் பிரியனான விஜய்யின் வாயிலாக கிடைக்கப்பெற்று, பூரண வாழ்வு வாழ்ந்தாள் மதுராகிணி.

          மகனுக்கு, பூரணேஸ்வரன் எனப் பெயரிட்டிருந்தனர்.

வசீகரன், தன் தாயோடு ஊருக்குச் சென்று அங்கேயே படிப்பைத் தொடர வேண்டுமென எண்ணியிருந்தவன், பூரணேஸ்வரனின் வரவால் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தான்.

பெரும்பாலும், பாரியின் குடும்பம் காரைக்குடியில் தங்கத் துவங்கியிருந்தது. அனைவரும் ஒரே குடும்பமாக காரைக்குடியில் வசிக்கத் துவங்கியிருந்தனர்.

இசக்கியம்மாளுக்கு பேரனின் வருகையோடு, பிள்ளைகள் இருவரும் ஒரே இடத்தில் இருப்பது அத்தனை சந்தோசத்தைத் தந்திருந்தது.

இத்தனைக்கும் காரணமான மதுவை, அனைவரும் தாங்கினார்கள்.

மது பிரியனின் மகிழ்வானது, அனைவரையும் ஆகர்சித்து, இதமான உணர்வைத் தந்திருந்தது.

***முற்றும்***