மயங்கினேன்.! கிறங்கினேன்.! 4

அத்தியாயம் 04

அவனின் அந்த பயணம்

அவனுக்கு உற்சாகத்தை தொடுக்க ,

சொல்ல முடியா உணர்வு

அவனை ஆட்கொள்ள

அது யாது என்று ‌அறியாமலே

அதை ஆழ்ந்து அனுபவித்தான்..!!?

அன்றைய விடியலே அவனுக்கு உற்சாகமாய் தான் அமைந்து  இருந்தது. வார இறுதியில் எப்போதும் ஊருக்கு சென்று வருபவனுக்கு இன்று ஏனோ புதிதாக இந்த ஊருக்கு வருவது போல் ஒரு உணர்வு…

அதிகாலை நாலறரை மணிப்போல் சென்னை வந்தடைய , ரயிலில் இறந்து இறங்கியவன் , ஆழ்ந்த முச்சொன்றை இழுத்து விட , புத்துணர்வாக உணர்ந்தான்.

நேரமாவதை உணர்ந்து ,வேகமாக அவன் சம்பாயத்தில் வாங்கிய காரை நோக்கி நடையிட்டான்.

பின் , அவனது நான்கு வாகன வண்டியில் சீறி பாய்ந்தவன் ஒரு மணி நேரத்திலே வீட்டிற்கு சென்று குளித்து கிளம்பி வேலைக்கு செல்ல ஆயத்தமானான்.

அவன் வீடு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்திருந்தது. இரண்டு  படுக்கையறை ஒரு சமையலறை , அதனை ஒட்டி சிறிதாக இருந்த சாமியறை என்று இருவர் தங்குவதற்கான எல்லா வசதிகளும் கொண்ட ஒரு அடுக்குமாடி வீட்டில் தான் குடியிருந்தான்.

வார நாட்களில் வேலையில் மூழ்கிப் போய் இருப்பவன் ,வார இறுதியில் ஊருக்கு சென்று வருவான். அன்னையின் சாப்பாட்டை வாரத்தில் ஒருநாளாவது சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் இந்த பயணமே.. அதில் கொஞ்சமே கொஞ்சமாக தந்தையை சீண்டி விட்டு வருவான். தந்தையை சீண்டி விளையாடுவதில் ஒரு அலாதி பிரியம் உண்டு வெற்றிக்கு..

இதுவும் வாராவாரம் நடப்பது தான் என்றாலும் ,ஒரு சலிப்பு அவனுக்கு இருக்கத் தான் செய்யும் எப்போதாவது. ஆனால் இன்று முற்றிலும் வேறுவிதமாக உணர்ந்தான் வெற்றிமாறன்.

அவனுக்கு என்ன மாதிரியான உணர்வென்று சொல்ல தெரியவில்லை. ஆனால் அதை உணர்ந்தவனுக்கு மனம் லேசானது.

வாகன நெரிசல் சிறிதாக இருந்தும் , ஒருவித மயக்கத்துடனே அவன் வேலை செய்யும் எஃவமிற்கு சென்றவன் , அன்று பேசுவதற்காக எடுத்த குறியீட்டை பார்வையிடலானான்.

அவனை பார்த்த அவனது நண்பனான கௌதம் , அவனருகில் வந்து ” குட் மார்னிங் மச்சி ” என்றிட

” வெரி குட் மார்னிங் மச்சி…” என்றவன் குறியீட்டையை பார்த்தான்.

” என்ன மச்சி , இன்னைக்கு உன் மூஞ்சுல ஏதோ ஒரு தேஜஸ் தெரியுதே. என்ன மேட்டர் டா ” என‌ கிண்டலாய் கேட்க

” அப்படியா தெரியுது , பரவால்ல தெரிஞ்சிட்டு போகட்டும் ” என்க

” ஹே , உண்மையை சொல்லு . ஏதோ ஒன்னு , ஆனா உன் முகத்துல ஒரு பொழிவு இருக்கிறது என்னவோ உண்மை தான் மச்சி “

” தெரியல டா , பட் சம்திங் ஐ ஃபீல்ஸ் குட் ” என்றான் உணர்ந்தும் உணராமலும்..

” சரி எனக்கு டைம் ஆச்சி , நான் ஸ்டுடியோக்குள்ள போறேன் ” என்று அங்கிருந்து நகர்ந்தான்.

சரியாக பத்து நிமிடத்திற்கு முன்பே அங்கே சென்று அமர்ந்தவன் , காதினில் ஹெட் போன் அணிந்து புத்துணர்வுடனே தனது வேலையை தொடங்க ஆய்த்தமானான்.

சரியாக ஆறு மணியானதும் தொடங்கினான்.

“அதிகாலைல அஞ்சு மணில இருந்து ஏழு மணி வரைக்கும் நிறைய பேருக்கு மிட்நைட் தான் . அதுல சில பேருக்கு தான் விடிஞ்சிருக்கும். இதோ அவுங்களாக இந்த ஆர். ஜே வெற்றிமாறன் காலைலயே புத்துணர்வுடன் உங்களை சந்திக்க வந்துட்டேன் வித் டிகிரி காஃபியோட ..  இது 93.5 சிட்டி எஃவம் கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க ” என்று பேசியவன் தொடக்க பாட்டாக பக்தி பாடலான விநாயக பாடலை போட்டு விட்டான்.

பாட்டு முடிந்தவுடன் ,” முதல்ல எல்லாருக்கும் ஒரு குட் மார்னிங். இந்த காலை நேரத்துல உங்களோட  நேரத்தை என்னோடு கழிக்க போற உங்களுக்காக ஒரு பாடல் இன் டிகிரி காஃபி வித் ஆர்.ஜே வெற்றி..” என்றவன் அடுத்த பாடலை போட்டு விட்டான்..

புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

” அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவின் வரிகளில் புத்தம் புது காலை பாடல் கேட்டோம்.”

” இந்த காலை நேரத்துல எழுந்து எதையோ நோக்கி ஓடிட்டே இருக்கோம்.‌ எதுக்கு ஓடுறோம் என்ன பண்ண போறோம்னு ஒன்னுமே தெரியாது. ஆனா எதையோ நோக்கி நம்ம பயணம் இருக்குது. இதோ இந்த டிகிரி காஃபி ஷோல்ல இன்னைக்கு நாம எதை பத்தி பேசப்போறோம்னா , நம்ம மனசு இந்த நேரத்துல சரியா என்ன சொல்லுதுன்னு தான் தெரிஞ்சிக்க போறோம். நாம முதல் காலரோட பேசுறதுக்கு முன்னாடி இதோ நமக்காக காலைல எழுந்து வேலை செய்யிற அம்மாக்களுக்காக ஒரு பாடல் ஸ்டே ட்யூன்ட் வித் ஆர். ஜே வெற்றி இன் 93.5 சிட்டி எஃவம் கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க ” என்றவன் காலை நேரத்துக்கு இதமான பாடலை போட்டான்…

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது

” நீங்க கேட்ட பாடல் , உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். இதோ உங்க தற்போதையை மனதை பற்றி தெரிந்துக்கொள்ள நம்மளோட முதல் காலர் நம்மோட இணைந்திருக்காங்க  “

” ஹலோ , சொல்லுங்க உங்க பேரு என்ன..??”

” குட்மார்னிங் மாறா…”

” வெரி குட் மார்னிங்.. அது என்னங்க புதுசா மாறா .?”

” உங்களோட பேரு தான் சார்.. அப்புறம் மாறா , நான் உங்க பெரிய விசிறி ” என்றாள் அந்த பெண் சந்தோஷமாக.

” எனக்கு ஒரு விசிறியா ,ரொம்ப நன்றி மா .சரி இன்னும் நீங்க உங்க  பெயரை சொல்லவே இல்லையே ” என்க

” இசை…” என்றாள் சிறு வெட்கத்துடனே..

” இசை… அழகான பேரு. உங்க பெயரை வச்சி தானே நாங்க எங்க வாழ்க்கை ஓட்டுறோம் ” என்று சிரிக்க

” சரி ,இதோ இன்னைக்கு நாம எதை பத்தி பேசப் போறோம்னு உங்களுக்கு தெரியும் தானே..”

” ம்ம்..”

“சரி அப்போ சொல்லுங்க இசை..உங்க மனசு இப்போ என்ன சொல்லுதுன்னு ஷேர் பண்ணுங்க ” 

” இப்போ என் மனசு என்ன சொல்லுதுன்னா , என் மனசுக்கு பிடிச்சவுங்களோட அவுங்க கை கோர்த்து ,அவுங்க பேசறதை கேட்டுட்டே காஃபி குடிக்கனும் மாறா.. அது தான் இப்போ என் மனசு சொல்லுது ” என்று முடிக்க

” ரொம்ப அருமையான இரசனைங்க இசை  உங்களுக்கு. என்னோட இணைந்து பேசியதுக்கு நன்றி. இதோ உங்களுக்கான பாடலை கேட்டு இந்த நேரத்தை ரசிங்க. இது டிகிரி காஃபி வித் நான் ஆர். ஜே வெற்றி இன் சிட்டி எஃவம் 93.5 கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க ” என்றவன் பாடலை போட்டு விட்டு பக்கத்தில் வைத்திருந்த காப்பியை அருந்தலானான்.

இசை வீசி
நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல்
உலகம் பார்க்கும்
இலை ஒன்றை
நீ நீக்க இமைக்காமல்
நான் பார்க்க இழுத்தாயே
உயிரை கொஞ்சம்

” இதோ இப்போ சின்மையின் அழகான குரலில் பாடல் கேட்டு முடித்தோம்.. என்னோட மனசு என்ன சொல்லுதுன்னா , இயற்கையோட அமர்ந்து குடும்பத்தோட கதை பேசிய படியே காஃபி குடிக்கனும். இவ்வளோ தாங்க என்னோட எண்ணம் .சரி இப்போ அடுத்த காலர் நம்மளோட இணைந்திருக்காங்க . “என்றவன் அடுத்த முக்கால் மணி நேரத்திற்கு தன் திறமையை காட்டி அனைவரின் மனதிலும் புத்துணர்வையூட்டினான்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து ஷோ முடித்து வெளியே வர , அவனது நண்பன் கௌதமோ ,” இன்னைக்கு உன் ஷோ சூப்பர் டா மச்சி கலக்கிட்ட போ ” என ஆர தழுவியவன் அவனை விடுத்து ,

” வா ஸ்ட்ராங்கா ஒரு காபி குடிச்சிட்டு வரலாம் ” என்று வெற்றியை இழுத்துச் சென்றான் கௌதம்..

அன்றைய அடுத்த ஷோவிலும் இசை என்ற பெண் கடைசி வாக்கியளாராக  அவனிடம் பேசினாள்.

” இன்றைய லவ் குரு ஷோவில் உங்களோட பேசுனதுல ரொம்பவே சந்தோஷப்படுறேன் இசை. “

” அதோ இதோன்னு நான் கிளம்ப வேண்டிய நேரமும் வந்துடுச்சி பாருங்க.. இன்னைக்கு போய்ட்டு டான்னு நாளைக்கு உங்கள மீட் பண்ண வந்திடுறேன். இப்போ இசைக்காவும் உங்களுக்காகவும் ஒரு பாடல்.. கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க இது சிட்டி எஃவம் 93.5 வித் உங்கள் ஆர். ஜே வெற்றி ” என்றவன் பாடலை ஒலிக்க விட்டான்..

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்….

தனது ஷோவை முடித்து விட்டு வீடு வந்து சேரும் போதே மணி பதினொன்றை நெருங்கி இருந்தது.

வெற்றி வீட்டிற்கு வந்ததை அறிந்து கொண்ட செக்யூரிட்டி காலிங் பெல்லை அடிக்க

கதவை திறந்தவன் ,” சொல்லுங்க அண்ணா..என்ன இந்த நேரத்தில.?” என்க

” சார் சாய்ங்காலமா உங்களுக்கு ஒரு லெட்டர் வந்துச்சி ” என்று அவனிடம் நீட்ட

“எனக்கா வந்துச்சி ” என்றபடியே லெட்டரை வாங்கிக் கொண்டவன் ‌” ரொம்ப நன்றி அண்ணா ” என்று கதவை அடைத்தான்.

வீட்டிற்குள் வந்தவன் ,ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து அதனை பிரித்து பார்த்தான்..

அதில் ஒரு பேப்பர் இருக்க , அதனை பிரித்தவனுக்கு சிரிப்பாக இருந்தது.

‘பேப்பர் வாங்க கூட காசு இல்ல போல‌ , அதான் இப்படி நோட் பேட்ல இருந்து கிழிச்சு எழுதியிருக்காங்க ‘ என்று நினைத்தவன் அமைதியாக அதனை படித்தான்..

” ஹாய் மாறா , தி சிஸ் 🎵மாறன் .

நைட் நீங்க லேட்டா தானே வந்து இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். வெறும் பால் காய்ச்சி மட்டும் குடிக்காம , தோசை ஊற்றி சாப்பிடுங்க. அப்போ தான் பசி போகும். ” என்று எழுதியிருந்ததை படித்தவுடன் கிட்சனை பார்க்க அங்கே பால் காய்ந்து கொண்டிருந்தது.

அவனுக்கு சிரிப்பாக இருந்தது. ஆனாலும் அதை படித்த பிறகு தான் அவனின் பசியே புரிய பாலை அணைத்து வைத்தவன் , கல்லில் தோசை வாற்றி இட்லி பொடி வைத்து சாப்பிட்டான்.

யாரோ தன்னை வைத்து விளையாடுகிறார்கள் என்று தான் முதலில் நினைத்து அதனை தூக்கி போட்டான்.

ஆனால் அந்த வாரம் முழுவதும் அவனுக்கு நாள் தவறாமல் லெட்டர் வந்து விட , அடுத்த வாரத்திலிருந்து அவனே அதை எதிர்ப்பார்க்க தொடங்கி இருந்தான் அவனையும் அறியாமல்.

முதலில் இது ஒரு ஆண் எழுதியது என்று நினைத்தவனுக்கு அடுத்து வந்த லெட்டரில் தான் அது ஒரு பெண் என்றே புரிந்தது .

ஷோ முடித்து வீட்டிற்கு வந்தவுடன் , அதனை எடுத்து ஒரு முறை படித்து பார்த்தான். ஆம் , அவனால் அந்த லெட்டரை தூக்கி போட முடியாமல் போக ,குப்பையில் போட்ட அன்றே அதனை எடுத்து கப்போடில் பத்திரமாக வைத்து விட்டான்.

” உங்களுக்கு வந்த லெட்டரை பார்த்து , நான் ஒரு பையன் ஏதோ ப்ராங்க் பண்றேன்னு தானே நினைச்சீங்க. பட் அது உண்மை இல்லை , நான் என்னோட பெயரை சேர்த்து உங்களோட பெயரையும் சேர்த்து எழுதியிருக்கேன்..”

இதனை படிக்கும் போது இப்போதும் அவனுக்குள் ‌ஒரு சிலிர்ப்பு ‌ஏற்ப்பட்டது..

அடுத்த நாள்..,

நான் உங்களோட முகமறியா விசிறி ,நாளைய காதலி அதன் பின் மாறனின் மனைவி ” என்றும்

“யாருடா இந்த பொண்ணு..?? ” என்று புலம்பிய அடுத்த நாள் இரவே அவனுக்கு பதிலை அளிக்கும் லெட்டர் வந்திருந்தது.

ஷோ முடித்து சோர்வாக வருபவனுக்கு , அந்த லெட்டர் ஒரு விதமான புத்துணர்வை ஊட்டியது.

நீங்கள் தினமும் பேசும் பலரில் ஒருவள் . உங்களது நலனை விரும்பியே உங்க கிட்ட பேசுறேன்..

அதன் பின் தினமும் ஷோவில் யாராக இருக்கும் என்று யோசிப்பவனுக்கு இரண்டு நாளிலே அது யாரென்று கண்டு பிடித்திருந்தான்…

அவள் தான் இசை…

அவனின் இசையாக

மாறப்போறவள்..

இசை பித்தனாக

அழைய வைக்க போறவள்..

எங்கும்… எதிலும்…

இசையை தேடி

அவளின் கடிதத்திற்கு

மயங்கி விழப்போகிறான்…..

அவளுக்கு அவன் கண்டு பிடித்தது உணர்ந்தாலோ என்னவோ , அடுத்த நாளே ,

என்னை கண்டு பிடிச்சுட்டீங்க போலயே…ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான்.. நாமாக போகும் நாள் தூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன் ” என்று எழுதியிருந்தது.

” என்னது நாமாக போறோமா.. அப்போ.. அப்போ.. இசை என்னைய காதலிக்கிறாளா. இவ இங்க எங்கேயோ எனக்கு பக்கத்துல தான் இருக்கா. அவளுக்கு நான் என்ற செய்யிற என்ற ஒவ்வொரு விடயமும் தெரிஞ்சிருக்கு. நம்மளை சுத்தி தான் இருக்கா சீக்கிரமா கண்டு பிடிக்கனும் ” என்று நினைத்த போதில் தான் அவனின் அன்னை அழைப்பு விடுத்திருந்தார்.

இசையின் ஞாபகத்திலே அழைப்பை ஏற்றான்.

” ம்மா , சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க..???”

” நான் நல்லா இருக்கேன் டா. அப்புறம் உனக்கு நாங்க பொண்ணு பார்த்துட்டோம். உங்க அண்ணியோட சித்தப்பா பொண்ணு அம்மு தான்.. அவுங்க குடும்பத்துல பொண்ணும் மாப்பிள்ளையும் நிச்சயத்தப்ப தான் பார்க்கனுமாம் டா. ” என்றவர்

“நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடலாம்ல ” என எதிர்ப்பார்ப்போடு கேட்க

” சரிங்க ம்மா..” என்றிருந்தான் எதையோ தாய் தன்னிடம் கூறுகிறார் என்று. அவனின் எண்ணம் முழுவதுமாக இருந்தது இசை மட்டுமே. அதனாலே தாய் என்ன கூறினார் என்று அவனுக்கு தெரியவில்லை.

” ரொம்ப சந்தோஷம் பா ” என அன்னை கத்தவே இசையின் வரிகளில் மயங்கி இருந்தவன் சுதாரித்தான்.

‘ எதுக்கு இவுங்க இப்போ சந்தோஷமா இருக்காங்க.. அது எதுக்கு நமக்கு ‘ என நினைத்தவன் ,

” சரிங்க மா.. நான் அப்புறமா பேசுறேன் ” என்று வைத்து விட்டான்.

இப்படியே நாட்கள் கழிய ஒரு மாதம் கழிந்திருந்தது.

வெற்றிக்கு தான் இசை யாரென்று தெரியாமலும் கண்டு பிடிக்க முடியாமலும் தவித்து போனான்.

அதனை உணர்ந்தவளோ ,அடுத்து வந்த லெட்டரில் அவளது வீட்டு அட்ரெஸ் அனுப்பி இருந்தாள் .

அவளை தேடி கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற சோகத்தில் தாடியுடன் உலாத்தி‌ கொண்டு இருந்தவனுக்கு வந்ததே ஜாக்பாட்..

அந்த லெட்டரை வாங்கி கொண்டு உள்ளே வந்தவனுக்கு தனிமை கொலை செய்தது போல் ஒரு உணர்வு.

அதை பிரித்து படித்தவனுக்கு மகிழ்ச்சி தோன்றினாலும் இறுதியில் கவலையாக மாறிப்போனது…

என்னவனின் கவலை நிறைந்த தோற்றத்தை மாற்றும் பொருட்டு , உனக்காக எனது வீட்டின் முகவரி தருகிறேன்.. இந்த முகவரியை கொண்டு என்னை கண்டு பிடிக்க முயல கூடாது. இது என் மேல் சத்தியம். ஒரு நாள் நானே உன்னை தேடி வருவேன்.. அதுவரைக்கும் எனக்காக காத்திருக்கவும் மாறா.. இனி என்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தால் இந்த முகவரிக்கு கடிதம் போடவும் ” என்று எழுதியிருந்தாள்.

“இசைய்ய்ய்..”என்று பல்லை கடித்தவனுக்கு , இதழோரத்தில் மென்னகை தோன்றி மறைந்தது.

முடியை கோதி சிரிப்பை கட்டுபடுத்தியவன் , காதலில் சிறிது சிறிதாக மயங்கி கிறங்கி அவள் புறம் சரிந்தான்.

என்னை பார்க்காமலே எளிதில் என் மனதில் உள்ளதை தெரிந்து கொள்கிறாள். ஆனால் அது எப்படி என்று தான் தெரியவில்லை.

உடனே அறைக்கு சென்றவன் ,ஒரு பேப்பரை எடுத்து ,’என்ன எழுதலாம்’ என்று யோசிக்க துவங்கினான்.

அந்த நேரம் பார்த்து ஊரில் இருந்து மணிமாறன் அழைப்பு விடுத்திருந்தான்.

‘ இவன் எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடுறான்னு தெரியலையே ‘ என்று நினைத்தவன் அழைப்பை சிறிது பதற்றத்துடனே ஏற்றான்..

” சொல்லு டா மணி..என்ன இந்த நேரத்துல..??”

” டேய் , உங்க அண்ணிக்கு பையன் பிறந்துருக்கான் டா ” என சந்தோஷமாக சொல்ல

” நம்மள டார்ச்சர் பண்ண ஒரு குட்டி வந்துட்டான்னு சொல்ற. ம்ம்  எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. நாளைக்கு சனிக்கிழமை தானே, நான் கிளம்பி ஊருக்கு வரேன்  ” என்று அழைப்பை துண்டித்தான்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவனின் இசையின் வீட்டு முகவரி கிடைத்திருக்க , அதனுடன் கூடிய புது வரவான தன் தமையனின் புதல்வன் என அவனுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக அமைந்திருந்தது.

அடுத்தநாளே , அவன் நேராக எஃவமிலிருந்தே எக்மோர் சென்று விட , அவளது லெட்டரை வாங்க முடியலையே என கவலையோடு சென்றிருந்தான்.

அந்த கவலையை அடுத்தநாள் குழந்தையின் அழுகுரலில் மறைந்து போக , அவன் மண்டையில் இடியை இறக்குவது போல் அடுத்தடுத்து வந்த செய்திகள் அவனை நிலைக்குலைய செய்தது..

” அப்படி என்ன உன்ன நிலைக்குலைய நடந்தது தடியன் சார்..??” என ஃப்ளாஷ் பேக்கை தடை செய்தாள் இனியா..

” அடுத்து அது தானே சொல்ல வரேன். அதுக்குள்ள உனக்கெதுக்கு இந்த அவசர கொடுக்கு வேலை ” என அவளை கடிய

“ஹான் , ஒரு க்யூரியாசிட்டி தான் தடியன் சார்..” என்று சிரித்த படி..

” பொல்லாத க்யூரியாசிட்டி.. ” என திட்டியவன் வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

” பாருங்க , நான் சொன்னது தான் அந்த இசை உங்களை சுத்தல்ல விட்டுருக்கா ” என்று கோபமாய் சொல்ல

அவளை முறைத்தவன் ,” என்னோட இசைக்கு மரியாதை கொடுக்கிறதா இருந்தா  , உன்னைய சேர வேண்டிய இடத்துல இறக்கி விடுவேன் , இல்லன்னா இப்பவே உன்னை வண்டியை விட்டு இறக்கி விட்டுருவேன் பார்த்துக்கோ. என்னோட இசையை பத்தி தப்பா பேசுற யாருக்கும் இங்க இடம் இல்லை ” என கை நீட்டி எச்சரித்தான்..

அதை கேட்டவளுக்கோ முகம் சுருங்கி போனது…

மயங்கினான்.. கிறங்கினான்..

அவளின் வார்த்தைகளில்..

அவளின் வரிகளில்..

அவளின் உச்சரிப்புகளில்…

அவளின் காகிதத்தில்…

அவளின் ஒவ்வொன்றிலும்

மயங்கி கிறங்கி போய்

அவளின் இசைமாறனாய்

மாற தொடங்கி இருந்தான்…!!!