மழைத்துளி-30(1)

IMG-20210619-WA0109-00ca7e88

மழைத்துளி-30(1)

தனது நாசியைத் தீண்டிய வாசனையில் திவ்யபாரதி திரும்ப வெற்றி
கையில் தட்டுடன் நின்றிருந்தான். அவளருகில் வந்து அவன் அமர,
தட்டில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கண்களை பறிக்கும் சிவப்பில்
இருந்த க்ரில்ட் சிக்கனைப் பார்த்தவளுக்கு சுவை அரும்புகளில் அமிலம்
சுரக்க ஆரம்பித்தது.

கடந்தவாரம் அவள் வெற்றியிடம் க்ரில்ட் சிக்கன் கேட்க தையல்நாயகி
அதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று வர, இருவருக்கும் வழக்கம்போல
ஒரு போர் நடக்க, இருவரையும் சமாதானம் செய்வதிற்குள் போதும்
போதும் என்றாகியிருந்தது அனைவருக்கும்.

“வேணாம் ஆதி” திவ்யபாரதி கூம்பிய முகத்துடன்.

“ஏனாம்?” வெற்றி.

“இதை சாப்பிடக்கூடாதுன்னு கிழவி சொல்லியிருக்கு” அவள் சொல்ல,
“அடிக்கடி தான்டி சாப்பிடக்கூடாது… எப்பவாவது சாப்பிடறதுல
தப்பில்ல…” என்றான்.

“தெரிஞ்சா கிழவி திட்டும்டா” திவ்யபாரதி சிணுங்க,

“தெரிஞ்சாதானே” கண் சிமிட்டியவன், “அப்பத்தாக்கு தெரியாம மேல
எடுத்துட்டு வர்றதுக்குள்ள நான் பட்டபாடிருக்கே…” என்றான்
பெருமூச்சுடன்.

அவள் தயக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருக்க, “இப்ப
சாப்பிடப்போறியா இல்லியா?” வெற்றி அதட்ட, “ஊட்டப் போறியா
இல்லியா?” திவ்யபாரதி அதே தொனியில்.

நெருப்பில் வெந்து சிவந்திருந்த க்ரில்ட் சிக்கனை எடுத்தவன் அதை
மையோனிஸில் டிப் செய்து அவளிற்கு ஊட்ட கண்களை மூடி அதைச்
சுவைத்தவள், “இதெல்லாம் நான் சாப்பிட்டு பலநாள் ஆச்சுடா” என்றாள்
கண்களை மூடியபடியே.

“சோழவந்தான்ல சென்னை மாதிரி கிடைக்காதுதான்டி” வெற்றி.

“இல்ல நான் நான்வெஜ் சாப்பிடறதை குறைச்சுட்டேன்” அவள் சொல்ல
வெற்றிக்குப் புரிந்தது. அவன் தட்டை அளக்க, “எதுக்குன்னு கேளு”
என்றாள் அவனது தோளைப் பிடித்து குலுக்கியபடி.

“எதுக்கு?” வெற்றி.

“எனக்கு சாப்பிட்டா உன்கூட இதெல்லாம் சாப்பிட்ட ஞாபகம் வரும்…
அதாவது குட் மெமரீஸ்… வந்தா உங்கிட்ட பேசலாம்னு இருக்கும்…
அதாவது எங்கூட நல்லா பேசுன ஆதிகிட்ட பேசத்தோணும்… அப்புறம்
என்னை விட்டுட்டு போன ஆதியை நினைச்சா பயமாவும்,
அழுகையாவும் இருக்கும்” அவள் சொல்ல அவனோ தலைகுனிந்தான்.

“உனக்கு என் ஞாபகம் வந்திருக்கா ஆதி?” ஒருவித எதிர்ப்பார்ப்புடன்
அவள் வினவ, அவனோ சிக்கனை ஊட்ட வந்தான்.

தலையை பின் இழுத்து மறுத்தவள் “சொல்லுடா… இதுக்கு எனக்கு
பதில் தெரிஞ்சே ஆகணும்” என்றாள் வலுக்கட்டாயமாக.

“என்னடி சொல்றது?” வெற்றி தலைகுனிந்தபடி.

“பிரிஞ்சிருந்த நாலு வருசத்துல என் ஞாபகமே உனக்கு இல்லியாடா?”
திவ்யபாரதி கேட்க அதற்குமேல் முடியாதவன் அவளை ஒரு கரத்தால்
இறுக அணைத்துக் கொண்டான். அவனின் இறுக்கமான அணைப்பு
அவளிற்கு வலியைத் தந்தாலும் அவளிற்கு அது தேவைப்பட்டதோ
என்னமோ அவனுள் புதைந்தாள்.

“எப்படிடி உன்னை மறக்க முடியும் என்னால” என்றவனிற்கு குரல்
கரகரத்தது. “உன்னை பழிவாங்கறதா நினைச்சு என்னை நானே
ஏமாத்திட்டு இருந்தேன்… அதையும் நான் உன்னை விட்டுட்டு வந்தப்ப
தான் புரிஞ்சுது… நீ இல்லாம என்னாலையும் இருக்க முடியலடி… தப்பு
பண்ண ஃபீலிங்கோட சேர்ந்து உன்னோட வயசு என்னை ரொம்ப
பாதிச்சிருச்சு பாரதி… மகாகிட்ட விசாரிச்சப்ப நீ டிஸ்கன்ட்டின்யூ
பண்ணிட்டதா சொன்னா… ரொம்ப குற்றஉணர்ச்சி ஆகிடுச்சு…
ஆனாலும் அதுக்கும் உன்மேல தானே தப்புன்னு நானே நினைச்சு
மனசை மாத்த ட்ரை பண்ணேன்… ஆனா, முடியலடி”

“அதுக்கு அப்புறம் கோயம்புத்தூர்ல இருந்து சீக்கிரம் இங்க
வந்துட்டேன்… ஒவ்வொரு நைட்டும் நீ என்ன பண்றியோ, எப்படி
இருக்கியோன்னு தோணும்… தேடி வரலாம்னு நினைச்சிருக்கேன்…
ஆனா, நான் பேசுனது அதிகம்னு எனக்கே தெரியும்… அதுனால நீ
ஏத்துப்பியான்னு ஒரு சந்தேகம்… அந்த குற்றஉணர்வு போக ஊர்ல
பொண்ணுங்களை படிக்க வைக்க ஆரம்பிச்சேன்… இங்க யாருக்காவது
ஏதாவது நான் பண்ணா நீ கண்டிப்பா அங்க நல்லா இருப்பேன்னு
தோணுச்சு… ஆனா, நீீ இங்க வந்த அப்புறம் என்னை தெரியாத மாதிரி நடந்துக்கிட்டது தான் ரொம்ப கோவம் வந்திடுச்சு… அந்தக் கோவத்த தான் சில சமயம் காட்டிட்டேன்… ஸாரிடி” வெற்றி மனதில் இருந்ததைக் கொட்ட அவனின்
அணைப்பில் இருந்த திவ்யபாரதியின் வலது கண்ணில் மட்டும்
கண்ணீர் வழிந்தோடியது.

அமைதியாக சிக்கனை ஊட்டி முடித்தவன் கையை கழுவிவிட்டு வந்து
அவளது கன்னத்தையும், வாயையும் துடைத்துவிட்டான். “நான் என்ன
சின்னக் குழந்தையா?” திவ்யபாரதி முறைக்க, “ஏன்டி தள்ளி
வைக்கறேன்னு சொல்ற… அப்புறம் பார்த்துக்கிட்டா திட்டறே?”, “நச்சுக்
கேஸ்டி நீ” அவன் எரிச்சல்பட்டான்.

“நான் நச்சு கேஸா?” என்றவள் அவனின் வெற்றுத் தோளில் கடிக்க,
“அப்பத்தாஆஆஆஅ!” வெற்றி கத்த, அவசரமாய் அவனது வாயை
அடைத்தவள், “கத்தாதே எருமை… அது வந்து என்ன பண்ணேன்னு
கேக்கும்” திவ்யபாரதி திட்டினாள்.

தனது வாயை அடைத்திருந்த அவளது உள்ளங்கையில்
முத்தமிட்டவனை கண்களை சுருக்கிப் பார்த்தவள், “இது தவிர வேற
எதுவுமே தெரியாது உனக்கு” அவனை அவள் சீண்ட,

“வேண்டாம்டி என்னை சீண்டிவிடாதே… அப்புறம் சேதாரம்
உனக்குத்தான்… நானே ஒரு கன்ட்ரோல்ல இருக்கேன்” வெற்றி
கண்களை சுருக்கிச் சொன்னான்.

“உன்னை யாரு கன்ட்ரோல்ல இருக்கச் சொன்னது?” சட்டையை
கழற்றிக் கொண்டிருந்தவன் அவளின் குரலில் திரும்ப, தனது
அலைபேசியை தட்டிக்கொண்டே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
பெருமூச்சை இழுத்துவிட்டவன், அவளருகில் செல்ல திவ்யபாரதிக்கோ
அவன் வருவது உணர்ந்து இதயம் அடித்தது. அவளோ அவனை
நிமிர்ந்து பார்க்க ஒரு புன்னகையை உதிர்த்தவனைப் பார்த்தவளுக்கு
அவனின் அருகாமை இதமாய் இருந்தது.

அவளின் நெற்றியில் ஒரு முத்திரையைப் பதித்தவன், “There should be
love in lust & lust in love” என்றான்.

“புரியலடா” திவ்யபாரதி. “எனக்கு இப்ப உன்மேல லவ் நிறைய
இருக்குடி… டண் கணக்குல… அந்த ஃபீலிங்கும் லவ்வுக்கு குறையாம
இருக்கு… ஆனா, இப்ப அந்த ஃபீல் ரொம்ப கம்மியா இருக்கு…
அதுக்குன்னு உன்மேல இன்ட்ரஸ்ட் குறைஞ்சிருச்சுன்னு நினைக்காத…
அது எப்பவும் குறையாது” என்றவன், “குட் நைட்” என்று சென்று படுத்துக்
கொண்டான்.

“இவன் என்ன கமல் மாதிரி புரியாம பேசிட்டு போறான்” யோசித்தவள்
மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்துவிட்டு புரிந்துகொண்டவளுக்கு
முகம் சிவந்தது.

•••

இவ்வழக்கிற்குப் பிறகு சக்தி, வெற்றி, அமர்ஷாவிற்கு மதிப்புகள்
கூடியது அவர்களின் வட்டாரத்தில். வழக்கு முடிந்தபின் சக்தியைப் பேட்டி
எடுத்தபோது அவளோ தனக்கு பலமாய் இருந்த வெற்றி, அமர்ஷா,
வசீகரன் அனைவரைப் பற்றியும் பெருமையாகச் சொல்ல சமூக
வலைத்தளங்களில் அன்று மீம்ஸ் பறந்து வாழ்த்து மழைகள் குவிந்தது
அனைவருக்கும்.

அதன்பின் தேர்தலிலும் இன்பராஜ் தோல்வியைத் தழுவியிருந்தார்.
அவரின் மனைவி மகன் சென்ற சோகத்தில் அவரைக் காரி
உமிழ்ந்துவிட்டுச் சென்றிருக்க, மகன், மனைவி, பதவி அனைத்தும்
இல்லாத சோகத்தில் பைத்தியமானார் இன்பராஜ். ஆனந்தின்
தந்தைக்கு அதில் அவ்வளவு பாதிப்பில்லை. அவருக்கிருந்த நான்கு
செட்டப்புகளில் ஒருவளின் மகன் என்பதால் அவருக்கு பெரிதாக எதுவும்
தாக்கமில்லை.

திவ்யபாரதிக்கு வெற்றியை தலைநிமிரச் செய்துவிட்ட திருப்தி
ஆழமாய் இறங்கியிருந்தது. அவனை ஒவ்வொருவரும் தூக்கிக்
கொண்டாடியதைப் பார்த்தவளிற்கு பெருமையாகவும் கர்வமாகவும்
இருந்தது. அதை அவனிடம் கட்டிக்கொள்ளவில்லை என்றாலும்
உள்ளுக்குள் அனுபவித்துக் கொண்டிருந்தாள். சில சந்தோஷ
ஆர்ப்பரிப்புகள் யாரிடமும் சொல்லாமல் மனதில் வைத்து ஒற்றை
ஆளாய் அனுபவிக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள்
இல்லை!

நாட்கள் மெல்ல மெல்ல நகர வெற்றியின் மன உறுத்தல்கள் எல்லாம்
திவ்யபாரதியால் பறந்திருந்தது. அவனை அதைப் பற்றி பேசவே
விடமால் பார்த்துக்கொண்டவள் அவனை சிறிது சிறிதாக மாற்றிக்
கொண்டிருந்தாள் தனது அருகாமையில். மேலும், வர்ஷித் இருவரையும்
நெருங்க வைத்திருந்தான் என்பதே உண்மை.

இப்படியே நாட்கள் நகர வர்ஷித்திற்கு பத்தாம் மாதம் முடிந்து
பதினொராம் மாதம் தொடங்க இருந்தது. காதுகுத்தை விமர்சையாக
நடத்த முடிவுசெய்த தம்பதியர் சதீஷ்-கவிநயா வருவதற்கு ஏதுவாக
நாளைத் தேடிப்பிடித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை காதுகுத்தை வைத்தனர்.

“ஆதி! ஆனா, அத்தனை பொண்ணுங்களை சீரழிச்சு சித்தரவதை
செய்தவனுக, ஒரே புல்லட்டுல போனது பத்தலடா எனக்கு” திவ்யபாரதி
அங்கலாய்ப்புடன் ஒருநாள் கூற வெற்றி உண்மையை உடைத்தான்.

“அப்படி எல்லாம் ஈசியா அவங்களை கொன்னு போடலடி… நியூடா
வெயில்ல கட்டிவச்சு அடிச்சு, அதுக்குமேல எல்லாம் நானே உங்கிட்ட
சொல்ல முடியாதுடி… அதுக்கு அப்புறம் தான் அவனுகளை சிதம்பரம்
கொன்னது” வெற்றி.

“சாவட்டும்” கோபத்தோடு சொன்னவள், “நான் யாரையும்
இப்படியெல்லாம் நினைச்சதே இல்லை ஆதி சாகணும்னு… ஆனா, இந்த
மாதிரி இருக்கவனுக எல்லாம் மனுஷங்களே இல்லை… இவனுக
எல்லாம் சைகோஸ்… கொஞ்சநாள் போயிருந்தா தன்னோட வீட்டுல
இருக்க லேடிஸ் மேலகூட கை வைக்க யோசிச்சிருக்க மாட்டானுக”
முகத்தில் அருவருப்பைத் தேக்கிச் சொன்னவள், “இவனுக இருந்து
யாருக்கும் எந்த யூஸுமில்ல…” திவ்யபாரதி உஷ்ணத்தோடு.

“டென்ஷன் ஆகாதே பாரதி” அவளை சமாதானம் செய்தவன், “நம்ம
மகன் காதுகுத்தே வரப்போகுது… நீ எதுக்கு இப்ப இதையெல்லாம்
மனசுல நினைச்சிட்டு இருக்க?” அதட்டியவன், “சிரிச்சுட்டே இருடி
பொண்டாட்டி” வெற்றி.

“பொண்டாட்டின்னு ஞாபகம் இருக்கா?” திவ்யபாரதி நக்கலாக வினவ,
“ஏன் ஞாபகப்படுத்தணுமா?” இரட்டை அர்த்தத்தில் அவன் ஒரு மாதிரிக்
குரலில் வினவ,

“ஆமா அங்கிள், எனக்கு எல்லாமே மறந்திடுச்சு” என்றாள் மகனின்
துணிகளை மடித்து வைத்தபடியே.

உடலை முறுக்கி சோம்பல் முறித்தவன், “அப்படி என்ன மறந்திடுச்சுன்னு
சொன்னா ஞாபகப்படுத்திடலாம்” வெற்றி அவளருகில் வர,

“எது எது ஆறாவது படிக்கும்போது மலையாள படம் பார்க்கப் போன
உங்களுக்கு நான் ஞாபகப்படுத்தனுமா?” திவ்யபாரதி கேலியில் இறங்க,
“உனக்கு எப்படித் தெரியும்?” பல்லை ஈயென வைத்து வெற்றி
வினவினான்.

“பல்கிஸ் சொன்னா” திவ்யபாரதி சொல்ல, ‘அடப்பாவி மாப்ளே’
மனதிற்குள் அமர்ஷாவை நினைத்தவன், “ஆறாவதுல பார்த்ததுல்ல…
அதான் எனக்கும் மறந்திடுச்சு”என்றான் விஷமமாக.

“அப்படியா……?” என்றிழுத்தவள், “மறந்தவன் தான் என்னை அப்பப்ப
எனக்கே தெரியாம சைட் அடிச்சிட்டு இருக்கியா?”

“ஹிஹிஹி… அது சும்மா…” அவன் சமாளிக்க, “கட்டுன பொண்டாட்டியை
சைட் அடிக்கிற ஒரே ஆள் நீதான்” தலையில் அடித்தவளை அருகில்
இழுத்தவன், “சரியான டைமுக்கு வெயிட்டிங் அவ்வளவு தான்… பர்ஸ்ட்
இரண்டு டைம் மாதிரி ஆகிடக்கூடாதுடி” அவள் காதில் வெற்றி
கிசுகிசுக்க அவனை விழுங்கும் பார்வை பார்த்துக்கொண்டு
நின்றிருந்தாள்.

“அப்ப நம்ம கொடைக்கானல் தான் போகணும்” திவ்யபாரதி கேலியாகப்
பேச அவனின் புன்னகை சட்டென மறைந்தது. அவனது முகமாற்றத்தை
உணர்ந்தவள், “ஆதி, நான் அப்படி மீன் பண்ணலடா… நான் சொல்ல
வந்தது…” அவள் பேசி முடிப்பதற்குள்,

“தெரியும்டி” என்றவன், “நான் அந்த காட்டேஜை வித்துட்டேன்” வெற்றி
சொல்ல திவ்யபாரதியோ அதிர்ந்தாள். “ஏன் ஆதி?”

“இல்லடி என்னால இன்னொரு தடவை அந்தக் காட்டேஜுக்குள்ள
நுழைய முடியாது” அவன் சொல்ல, திவ்யபாரதி பேச்சை மாற்ற
முயன்றாள்.

“ஆதி! கார்த்தி, காவ்யாக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சுடா நான்
சொன்னேனா உங்கிட்ட” திவ்யபாரதி லாவகமாகப் பேச்சை மாற்றுவது
புரிந்து புன்னகைத்தவன், அவளது கன்னங்களை மென்மையாய்த்
தாங்கி அவள் இதழில் தன் இதழை அழுந்த ஒற்றியெடுத்து, “நான்
கேடினா… நீ என்னைவிட டபுள் கேடிடி… சரியான ஜோடி தான் நம்ம”
என்றவன், “பையன் எழற டைம் ஆகுது பாரு…” என்று நகர்ந்தான்.

இருவருக்கும் நீண்ட மாதங்களுக்குப் பிறகு இயல்பான
அன்னியோன்யம் வந்திருந்தது. மகனைக் கையில் எடுத்தவள்
அவனிற்கு தனியாக தயார் செய்த சாதத்தை வேடிக்கை காண்பித்தபடி
ஊட்ட, அவனோ நான்கு திசைகளிலும் திரும்பி போக்குக் காண்பித்துக்
கொண்டிருந்தான். மகனிற்கு ஊட்டி முடிப்பதற்குள் பெரும்பாடு
ஆகிவிட்டது திவ்யபாரதிக்கு.

ஊட்டி முடித்து அவனை தையல்நாயகியின் கையில் தர ஆதீதி
வர்ஷித்துடன் விளையாடத் தொடங்கினாள். திவ்யபாரதி விசாலாட்சி,
ஸ்ருதியுடன் இணைந்து காதுகுத்திற்குத் தேவையான அனைத்தையும்
பட்டியல் இட அடுத்து தன் பக்கம் அழைக்க வேண்டியவர்களை
வெற்றியுடன் இணைந்து அழைத்தாள். சதீஷ் தாய்மாமன் முறை
என்பதால் நேரில் சென்று முறைப்படி அழைத்து வந்திருந்தனர். கூடவே
வசீகரன், இந்திரா, காவ்யா, கார்த்தி என அனைவருக்கும் அழைப்பு.

அன்றைய தினம் விழாவைப் போல விடிந்தது அனைவருக்கும்.
திவ்யபாரதி ஐந்து மணிக்கே எழுந்து தயாராகி தூங்கிக் கொண்டிருந்த
மகனையும் தயார் செய்தவள், வர்ஷித்தை அப்பத்தாவின் கையில்
தந்துவிட்டு அறைக்கு வந்து கணவனை எழுப்பினாள். அவனோ தூக்கம்
கலையாமல் குளியலறைக்குள் நுழைந்து தூக்கத்தைத் தொடர, ‘என்ன
உள்ள தண்ணீ ஊத்தற சத்தத்தையே காணோம்’ என்று நினைத்தவள்,
“ஆதி!” என்று குரல் கொடுக்க தூக்கத்திலிருந்து மீண்டவன், “ஆச்சு
ஆச்சு… இரண்டு நிமிஷம்” என்றவன் அவசர அவசரமாக குளித்துவிட்டு
வெளியே வந்தான்.

திவ்யபாரதி தலையை சரியாக உலர்த்த ட்ரையரைப் போட்டு
கூந்தலைக் காய வைத்துக்கொண்டிருக்க, வெற்றியின் பார்வை
கணவனின் பார்வையாக மாறியது. பச்சை நிறத்தில் சிவப்பு நிற பார்டர்
வைத்த பட்டுச் சேலையில் ஒப்பனைகளுடன் நின்றிருந்தவளின்
கூந்தலில் இருந்து ஆங்காங்கே ஈரம் சொட்ட வெற்றிக்கு நீண்ட
நாட்களுக்குப் பின் ஹார்மோன்கள் வேலை செய்யத் துடங்கியது.

கண்ணாடி வழியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளிற்கு
அவனது பார்வையின் மாற்றம் புரிய, திரும்பியவள், ‘என்ன?’
என்பதுபோல புருவத்தை உயர்த்தினாள்.

அவளருகில் சென்றவன், அவளை கண்ணாடியின் முன் இழுத்துச்
சென்று அவளது தோளில் தனது நாடியை வைத்தபடி சிறிதுநேரம்
பார்த்தவன், “இன்னிக்கு ரொம்ப வித்தியாசமா தெரியறடி” வெற்றி.

“நல்லா இல்லியா?”

“அது இல்லடி லூசு… எப்படி சொல்றது… பையன் வந்த அப்புறம்
இன்னும் ஃபேஸ் ப்ரைட் ஆகியிருக்கு… ஒல்லியா இருந்து இப்ப
கொஞ்சம் சப்பி ஆகிட்ட…” அவளை கண்ணாடியே வழியே ஸ்கேன்
செய்தவன், “இந்த ஷேப்பும் நல்லாதான் இருக்கு… அன்ட் ஃபேஸ்ல
ஏதோ ஒரு பளிச்… என்னன்னு சொல்லத் தெரியல… ரொம்ப அழகான
மாதிரி இருக்க” வெற்றி.

அவனின் மூக்கைப் பிடித்து திவ்யபாரதி இழுக்க, “ஸ்!” என்று வலியை
வெளிப்படுத்தியவனிடம், “நல்லா கண்ணாலேயே என்னை ஸ்கேன்
பண்ணு” என்றாள்.

“பின்ன, வேற வேலை என்ன எனக்கு வீட்டுக்கு வந்தா சொல்லு” வெற்றி
பெருமையாய் சொல்லிவிட்டு அவளது கழுத்தில் முகம் புதைக்க
திவ்யபாரதியின் கண்களோ தன்னால் மூடியது. மனைவியின் அழகில்
மயங்கியவன் அவளிடம் அழகுகுறிப்பு எடுக்க முயற்சிக்க, “எய்யா,
வெற்றி” கீழிருந்து வந்த தையல்நாயகியின் குரலில் இருவரும்
பிரிந்தனர்.

“இந்த அப்பத்தா வேற… எப்படித்தான் எங்க சியான்லாம் (தாத்தா)
சமாளிச்சாரோ” என்றவன், “வந்துட்டோம் அப்பத்தா” என்று ஐந்து
நிமிடத்தில் தயாராகி மனைவியுடன் கீழே விரைந்தான்.

சதீஷும், கவிநயாவும் தங்களது அறையில் இருந்து வர, அனைவரும்
கோவிலுக்குக் கிளம்பினர். கிடாவெட்டி பொங்கல் வைத்து வர்ஷித்தை
சதீஷின் மடியில் அமர்த்தி மொட்டையடிக்க, அனைவரும் பயந்ததிற்கு
எதிர்மாறாக அவனோ சிரித்துக் கொண்டிருந்தான்.

மொட்டை அடித்து முடித்து தலையில் சந்தனத்தைப் பூசிவிட்டு காதைக்
குத்த, “ஆங்ங்ங்ங்!” என்று எதிரில் நின்றிருந்த திவ்யபாரதியைப்
பார்த்து கையை நீட்டி வலி தாங்கமுடியாமல் , ‘என்னைத் தூக்கிக்கொள்’
என்பதைப் போல அழ ஆரம்பித்தான் வர்ஷித். திவ்யபாரதிக்கோ மகன்
அழுவதில் கண்ணீர் சுரந்தாலும், நல்ல நிகழ்வில் கண்ணீர் விட
விரும்பாதவள் மகனை சமாதானம் செய்து அடுத்த காதைக்
குத்தும்போது தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

மகன் மறுபடியும் ‘வீல்’லென்று அழ, அவனை திவ்யபாரதி தூக்க
அவனோ அன்னையின் தோளில் இறுக சாய்ந்து அவளை அணைத்து
மேலும் அழ, திவ்யபாரதி தட்டிக்கொடுத்து சமாதானம் செய்ய
வர்ஷித்தின் அழுகை அரைமணி நேரத்தில் அடங்கியது. அன்னையின்
தோளில் அழுதழுது உறங்கியும் போனான். வெற்றியோ தன்னவளின்
தாய்மையில் கர்வம் கொண்டான். அனைத்து பெண்களுக்கும் உள்ளது
தான். ஆனால், தன்னவளிடம் அவனிற்கு எப்போதுமே இருக்கும்
ஈர்ப்பில் ஒவ்வொன்றும் அவனிற்கு மனதில் ஓவியமாய் பதிந்தது.
மித்ராவின் வீட்டிற்கும் அழைப்பு சென்றிருக்க குடும்பத்துடன் வந்து
சென்றனர்.

சதீஷும் தாத்தாவும் தங்கள் மருமகனிற்கும், கொள்ளுப்பேரனிற்கும்
செயின், மோதிரம் என்று செய்தனர்.

அனைவரும் வீட்டிற்கு வர விருந்து தடபுடலாக தயாராக ஆரம்பித்தது.
சொந்த பந்தங்கள் எல்லாம் விருந்தை முடித்துக்கொண்டு கிளம்ப,
திவ்யபாரதி பல்கிஸ், காவ்யாவுடன் தன்னறையில் அரட்டையில்
மூழ்கியிருந்தாள். திவ்யபாரதி வளவளக்க, “திவி, ரொம்ப நாள் அப்புறம்
நான்ஸ்டாப்ஆ பேசற நீ” காவ்யா புன்னகையுடன்.

அதற்கு திவ்யபாரதி புன்னகை செய்ய, “திவி, நான் உன்னை என்
அக்காவா தத்தெடுத்துக்கவா?” காவ்யா கேட்க புரியாமல் விழித்தாள்
திவ்யபாரதி.

“இன்னிக்கு உன் ஆள் செமயா ஜம்முன்னு இருந்தாரு வேஷ்டி சட்டைல”,
“ஸோ நீ எனக்கு அக்கா ஆகிட்டா நான் அவரை மாமான்னு
கூப்பிடலாம்ல… அதான்” காவ்யா கண்களைச் சிமிட்ட, “அடப்பாவி!
கண்ணை பியூஸ்புடுங்கிடுவேன் உன்னை” திவ்யபாரதி மிரட்டினாள்.

“அஹான்… வெற்றி மாமா” காவ்யா கத்தவும் வெற்றி உள்ளே
நுழையவும் சரியாக இருந்தது. உள்ளே நுழைந்தவனைப் பார்த்து
அனைவரும் திடுக்கிட்டனர். ‘அய்யய்யோ’ காவ்யா வடிவேலு பாணியில்
தலையில் கை வைக்க, பல்கிஸ் தனது ஏழு மாத வயிற்றைப் பிடித்துக்
கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

காவ்யாவின் பேச்சை திவ்யபாரதி வெற்றியிடம் சொல்ல, “ச்ச! இப்படி
ஒரு அழகான மச்சினிச்சி யாருக்கு கிடைப்பா… நீ அப்படியே கூப்பிடு
காவ்ஸ்” வெற்றி, ‘காவ்ஸ்’ என்று செல்லமாக அழைக்க அவள், ‘மாமா’
என்றழைக்க திவ்யபாரதிக்கு வயிறு எரிந்தது.

மனைவிக்கு ஜூஸை எடுத்துக்கொண்டு வந்த அமர்ஷா அவளிடம்
தந்துவிட்டுத் திரும்ப, “இந்த மாமாவும் நல்லா இருக்காரே” காவ்யா
விளையாட அவளின் முதுகில் ஒரு அடி போட்டாள் பல்கிஸ். திவ்யபாரதி
அளவிற்கு அவளிற்கு பொறுமையில்லை. அதுவும் கணவன்
விஷயத்தில் பூஜ்ஜியம்.

“ஸ்ஸ்ஆ!” வலியில் காவ்யா திரும்ப, “கொன்னுடுவேன் கொன்னு”
பல்கிஸ் மிரட்டினாள் காவ்யாவை.

கவிநயாவோ சதீஷுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். “இப்ப நீ
என்னதான் சொல்ல வர்ற?” சதீஷ். “எனக்கு பேபி வேணும்” கவிநயா.

“நீ பிஜி பண்ணிமுடி கவி… அப்புறம்தான்… இரண்டு வருஷம் தானே”
அவன் சொல்ல அவளோ அழுகும் நிலைக்குச் சென்றாள். “கவி,
இங்கபாரு… இந்த சாமியாரை கவனிச்சுட்டு காலைல கிளம்பி
போறதுக்கே படாதபாடுபடறே… இதுல குட்டிசாமியார் வேறையா?” சதீஷ்
கேட்ட தொனியில் கவிக்கு சிரிப்பு வந்தது.

“அப்ப பேபி டூ இயர்ஸ் அப்புறம் கன்பார்ம்ல?” கவி கேட்க, “கன்பார்ம்”
சதீஷ்.

அன்றைய மாலை அனைவரும் வெற்றியிடம் ட்ரீட் கேட்க
திவ்யபாரதியிடம் அவன் கெஞ்ச, அவளோ அவன் காவ்யாவுடன் சேர்ந்து
ஏற்றிய கடுப்பில் மிஞ்சினாள். இறுதியில் சண்டையிட்டுக் கொண்டு
பின்னால் வீட்டிற்கு சென்றான்.

பத்து மணிவரை பார்த்தவள் மகனின் பசியை ஆற்றிவிட்டு அவனின்
நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சிக் கொண்டிருந்தாள். மூக்கோடு மூக்கை
உரசிக் கொண்டிருந்தவள் அவனைத் தூங்க வைக்க, காலையில்
இருந்து அவனை எல்லோரும் கொஞ்சியே சோர்வை
உண்டாக்கியிருக்க விரைவாகவே அன்னையின் மடியில் உறங்கிப்
போனான் வர்ஷித் வருணன். அதன் பிறகு அவனை
தையல்நாயகியிடம் தந்துவிட்டு, பல்கிஸ் இருந்த அறைக்குச் சென்றவள்
அவளிற்கு வசதியாகப் படுக்க தலையணையை வைத்தாள். வசீகரனும்,
தாத்தாவும் ஓர் அறையில் உறங்கியிருந்தனர்.

தோழிகளுடனும் இந்திராவுடனும் சிறிதுநேரம் கதை பேசியவள்,
வெற்றியைத் தேடிச் செல்ல அவனோ அங்கு நண்பர்களுடன் பேசி
சிரித்துக்கொண்டிருந்தான். திவ்யபாரதியைப் பார்த்த வாசு, அமர்ஷா,
சதீஷ், கார்த்தி நால்வரும் அங்கிருந்து கிளம்ப, கிணற்று மேடையில்
அமர்ந்திருந்த வெற்றியோ அசையவில்லை.

அவனருகில் சென்றவள், “என்னடா? ட்ரீட்னு சொன்ன சரக்கு பாட்டில்
ஒண்ணையும் காணோம்” திவ்யபாரதி.

“மொதல்ல வாங்கலாமுன்னு நினைச்சோம்… அப்புறம் கான்சல்
பண்ணிட்டோம்”, “பையன் தூங்கிட்டானா?” வெற்றி.

“ம்ம், தூங்கிட்டான்”

அவனை நெருங்கியவள் கிணற்று மேடையில் ஏறியமர்ந்து அவனது
தோளில் சாய்ந்தாள். அவனது கைக்குள் அவள் கையை வளைத்துப்
பிடித்தவள் விழிகளை மூடினாள். அந்த இரவில் குயில் ஒன்று கூவ,
கவிதை எழுத தென்றலும் வீசியது. நிலவு மகள் வானில் பயணம்
செய்து கொண்டிருக்க திவ்யபாரதி கணவனின் தோளில் சுகமாய்
சாய்ந்திருந்தாள். வெற்றியும் கண்களை மூடி அவளின் தலைமேல்
தலை சாய்த்து இயற்கையுடன் ரகசியம் பேசிக் கொண்டிருந்தான்.

“ஆதி” திவ்யபாரதி அமர்ந்திருந்த நிலைமாறாமல் வெற்றியை அழைக்க,
“ம்ம்” என்றான் அவனும் அசையாமல். ஏனோ இந்நிலை அவனை
மிகவும் கவர்ந்திழுக்க அவனிற்கு கண்களைத் திறக்கும் எண்ணமே
இல்லை.

“அன்னிக்கு சொன்னியே நீ… இங்க பொண்ணுங்களுக்கு பண்ணா
நான் நல்லா இருப்பேன்னு… நீ இல்லாம நான் நல்லா இல்லடா”
என்றாள். அவளிடமிருந்து விலகியவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அவளோ மனம் திறந்து பேச ஆரம்பித்தாள். “நீ என்னைத் தேடி வராதது
நல்லதுதான் ஆதி… வந்திருந்தா கண்டிப்பா உங்கிட்ட பேசியிருக்க
மாட்டேன்… அவ்வளவு கோபத்துல இருந்தேன் உன் மேல… நீ என் மேல
சந்தேகப்பட்டதைவிட ப்ளான் பண்ணிக் கூட்டிட்டு போய் ஏமாத்திட்டியே
அப்படிங்கற கோபம் அதிகம்… அதுனால தான் பேபி பார்ம்
ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் உங்கிட்ட சொல்ல வேணாம்னு இருந்தேன்…
அந்த வயசுல என்ன பண்றதுனே தெரியல ஆதி” என்றாள் தலை
குனிந்தபடி.

“சதீஷ் அடிச்சானா?” வெற்றி வினவ, “ம்ம்” என்றாள் தொண்டையை
விழுங்கியபடி. “அவனோட கோபம் நியாயமானது ஆதி” அவள் சொல்ல,
“ம்ம், சதீஷ் பொறுமையெல்லாம் எனக்குக்கூட வராது பாரதி…” வெற்றி.

“நீ என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் அப்படின்னு தினமும்
நினைப்பேன்… மழை வரும்போதெல்லாம் சம்மந்தமே இல்லாம
நமக்குள்ள நடந்தது ஞாபகம் வந்து பயமா இருக்கும்… நடுங்கும்… ஆனா,
நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அது தன்னால போயிடுச்சு”

“நீ என்னை கேர்புள்ளா தான் ஹேண்டில் பண்ண… பட் அன்னிக்கு நான்
அனுபவிச்ச பெயின் எனக்கு மட்டும் தான்டா தெரியும்… அதையும் உன்
மேல பைத்தியகாரி மாதிரி இருந்தனால தான் பொறுத்துக்கிட்டேன்…
இல்லினா ரஷ்யன் கிக் தான்”

“உன்னை இங்க பார்த்த அப்புறம் பேசவே கூடாதுன்னு நினைச்சேன்…
ஆனா, ப்ளான் போட்டு நல்லா கவுத்திட்ட… உன்னை ஹர்ட் பண்றேன்னு
நினைச்சு என்னை நானே பண்ணிட்டேன்டா லூசு மாதிரி… நம்ம
வர்ஷித் உருவான அப்புறம் ஆட்டோமேட்டிக்கா உன் பையன் என்
மனசை மாத்திட்டான்… அப்பனும் மகனும் ஒரே மாதிரிதான் போல…
நல்லா கவுத்திடறது” அவள் முறைத்தபடிச் சொல்ல வெற்றிக்கு
புன்னகை அரும்பியது.

“சிரிக்காத எருமை” அவனை அடித்தாள். “சிரிச்சா உனக்கென்னடி?”
வெற்றி சீண்ட, கிணற்று மேடையிலிருந்து இறங்கியவள் கீழே கிடந்த
பாதி செங்கலை எடுக்க, “ஏய்! அடிச்சு மண்டையை பொளந்திடாத”
எச்சரிக்கை உணர்வுடன் பின்னால் நகர்ந்தான். முன்னால் இருந்த
பாரதியாய் இருந்தால் அடிக்கமாட்டாள். ஆனால், இப்போது இருப்பவள்
கண்டிப்பாக அடித்து மண்டையை உடைத்துவிடுவாள் என்று
அவனிற்குத் தெரியும்.

செங்கலைக் கீழே போட்டவள், “காவ்ஸா காவ்ஸ்?”, “அவ மாமான்னு
கூப்பிட்டா அப்படி பல்லை இளிக்கற?” திவ்யபாரதி அவனின் காதைப்
பிடித்துத் திருக, “சத்தியமா உனக்கொரு தங்கச்சி இல்லைன்னு
ஃபீலிங்கா இருக்குடி…” வாய் அடங்காமல் வெற்றி பேச, பேசிய
வாயிலேயே வைத்தாள் அவனின் மனையாள்.

“இப்படியே பேசுன அப்புறம் அவ்வளவுதான்” திவ்யபாரதி எச்சரிக்க,
“சரி! சரி! இறக்கி வச்ச குக்கர் மாதிரி இருக்காத” அவன் குழைவாய்
அவளைத் தன்னிருகில் இழுக்க, மேகங்கள் ஒன்றிணைந்து முத்து
சிதறலாய் வானில் இருந்து மண்ணில் விழுந்தது நீர்த்துளிகள்.

தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்துவிட்டு தங்களைப் பார்த்த
இருவரும் வெட்கமும் புன்னகையும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது.
“மழைக்கும் நமக்கும் அப்படியொரு பொருத்தம் போடா… நீ கேட்ட
சரியான டைம் இதானே ஆதி” திவ்யபாரதி விஷமமாய் வினவ,
கடகடவென இடி இடித்து தடதடவென மழை பொழியத் துவங்கியது.

வெற்றி அவளை வீட்டை நோக்கி இழுக்க அவளோ அசையாமல்
நின்றாள். “அங்க நடந்து போய் டைம் வேஸ்ட் பண்ணப்போறியா?”
என்றவளின் பார்வை அருகில் வெற்றி தங்கியிருந்த தோட்டத்து
வீட்டைப் பார்க்க, மனைவியின் செயலிலும் பார்வையிலும்
மோகப்பிடியில் சிக்கினான் ஆதித்ய வெற்றிவேந்தன்.

அவனின் சட்டையைப் பிடித்தவள் அவனை இழுத்துக்கொண்டு ஓட்டு
வீட்டிற்குள் ஓட, இருவரும் முழுதாக நனைந்தனர். இருவரும் முழுதாக
நனைந்திருக்க, திவ்யபாரதி உடுத்தியிருந்த ராயல் ப்ளூ நிற சிபான்
சேலை வேறு அவளின் உடலோடு ஒட்டி வெற்றியின் பார்வைக்கு
விருந்தானது.

அவளின் மேல் பார்வையை ஓடவிட்டவன், “நம்ம ரைட்டர்ஜி ரொம்ப
மோசம்டி” வெற்றி.

“என்ன?” திவ்யபாரதி புரியாமல் கேட்க, “நம்ம கதையை எழுதுன
ஜீவனை சொல்றேன்… நல்லா உன்னையும் என்னையும் வச்சு
செஞ்சிடுச்சு… இப்ப…” என்றவன் பெருமூச்சை விட்டபடி அவளின்
மேனியில் கண்களால் பாரபட்சம் பார்க்காமல் மேய திவ்யபாரதிக்கு
புதுப்பெண் போல உடலெல்லாம் நடுங்கி ரோமங்கள் சிலிர்த்தது.

“உனக்கு வரையத் தெரியுமா ஆதி” திவ்யபாரதி அங்கு அவன்
வரைந்திருந்த ஓவியத்தின் அருகில் சென்று கேட்க, அவளைப்
பின்னாலிருந்து அணைத்தவன், “அவ்வளவு எல்லாம் தெரியாதுடி… இது
ஒரு வாரமா வரஞ்சேன் கேப் விட்டுவிட்டு” என்றான்.

“எனக்கு இந்த ஆதியை ரொம்ப பிடிக்கும்” திவ்யபாரதி ஓவியத்தில்
இருந்தவனை விரலால் வருடியபடி.

“அப்ப இப்ப?” வெற்றி. “இப்ப இருக்கிறது என் புருஷன்… ஆனா, இதுல
இருக்கிறது என்னோட குட் மெமரீஸ்ல இருக்க நான் லவ் பண்ணிட்டு
இருந்த ஆதி…” என்றவள் ஓவியத்தில் இருந்தவனிற்கு முத்தத்தைத்
தர அவளது தோளில் முத்திரையைப் பதித்தான் அவன்.

“இதெல்லாம் என் ஃபோன்ல இருந்த பிக்ஸ்… இந்த ஃபோட்டோஸ்
எல்லாம் நல்லா இருக்கும்டா” அவள் குறைபட, “உன் ஃபோன்ல தான்
டெலிட் பண்ணனே தவிர என் ஃபோன்ல டெலிட் பண்ணலடி நான்”
என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“ஃபோட்டோ காமி” அவள் அடம்பிடிக்க, “இப்ப அது ரொம்ப முக்கியமாடி”
என்றவனின் குரலில் தாபங்கள் மிதமிஞ்சி வழிந்தது.

அவள் சிரிக்க அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன், அவளைத்
தன் உயரத்திற்கு தூக்கி அவள் இதழில் தங்கியவன், இத்தனை நாளின்
பிரிவை ஈடு கட்டும் விதமாக வட்டியும் முதலுமாக அனைத்தையும்
கொடுத்தான். திவ்யபாரதியின் வெட்கமே வெற்றியின் முத்தத்தில்
வெட்கித்தான் போனது.

நிமிடங்கள் கழிய அவளை விடுவிடுக்க நான்கு விழிகளும் சங்கமித்தது.
மழையோடு இருள் கசியும் இரவு நேரத்தில் மயக்கம் கொண்ட
மங்கையோ அவனின் காதருகில் சென்று, “Lust shouts. Love whispers.
Only the heart knows the differences” அவன் காதில் கிசுகிசுத்தவள், “வீ
ஹேவ் போத்” என்றாள்.

அவளின் ஹஸ்கி குரலோ அவனை போதையெற்றியது. அவளின்
கழுத்தில் வெற்றி ஊர்வலம் நடத்த, இருவரின் இடைவெளியும் சிறிது
சிறிதாக குறைந்தது.

‘காதல் இல்லா வாழ்க்கை இல்லை
காமம் இல்லா காதல் இல்லை’
இருவரின் தீராத காதல் தீயாக மோத விழிகள் ஆயிரம் கதை பேச,
விரல்கள் ஆயிரம் உணர்வுகளைத் தர, இமைகள் நாணத்தில் மூட
மூச்சுக்காற்று தீப்பிடித்து உடை போர்தொடுத்து மற்றனைத்தும்
விடைபெற்றது.

முதல்முறை போல வெற்றியின் கோபத்தோடும் திவ்யபாரதியின்
அறியாமையோடும் அல்லாமல், இரண்டாவது முறைபோல
திவ்யபாரதியின் கோபத்தோடும் வெற்றியின அறியாமையோடும்
அல்லாமல், இம்முறை காதலும், காமமும் துலாபாரத்தில் இருவராலும்
சரிசமமாய் கடைபிடிக்கப்பட உறக்கங்களை எரித்து மொழியில்லா
பாடத்தைக் கற்றனர்.

அடுத்தநாள் காலை அவசரமாக எழுந்த திவ்யபாரதிக்கு மகனின்
ஞாபகம் வர, “ஆதி, எந்திரி போலாம்” அவளழைக்க அவனோ போருக்கு
சென்று வந்தவன் போல எழாமல் வம்பு செய்தான்.

“டேய், அங்க பையன் அழுதிட்டு இருப்பான்டா” அவள் சொன்னவுடன்
எழுந்தவன் தயாராக இருவரும் வீட்டை நோக்கிச் சென்றனர்.

“நீ முதல்ல உள்ள போடா… நான் டூ மினிட்ஸ்ல வர்றேன்” அவள் சொல்ல
தலையில் அடித்துக் கொண்டவன், “கள்ளக்காதல் மாதிரி பேசாதேடி”
என்றான்.

“நான் வரமாட்டேன்… எல்லாரும் ஓட்டுவாங்க” அவள் அடம்பிடித்தாள்.

“இப்ப நீ வரல… அப்படியே தூக்கிட்டு உள்ள போயிடுவேன்” என்றான்.

“போடா சீனு(scene)” திவ்யபாரதி கேலி செய்ய இரு கரங்களால்
அவளை அள்ளியெடுத்துவிட்டான். “ஆதி! ஆதி! எல்லாரும்
பாக்கறாங்கடா” வீடே அவர்களைப் பார்க்க, அவனிற்கு மட்டும் கேட்கும்
குரலில் அவள் நெளிந்துகொண்டே சொல்ல, அவனோ யாரையும்
சட்டைசெய்யாமல் அவளை கையில் ஏந்திக்கொண்டு அறைக்குள்
புகுந்தான்.

“எலேய் அமுசா… என் பேரன் ரொம்ப கவுந்திட்டானோ” தையல்நாயகி
அமர்ஷாவிடம் அவர்கள் மேலே செல்வதைப் பார்த்தபடி வினவ,
அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த அமர்ஷாவின் தலையில்
தட்டிய பல்கிஸ், “அங்க என்ன அப்படிப் பாக்கிற?” திட்ட, “இல்ல இவன்
எங்கூடத் தான் பலநாளா இருந்தான்… ஆனா, கடந்த ஐஞ்சாறு வருசமா
ரொம்ப பாஸ்ட் அன்ட் ஃபூரியஸா இருக்கான் எல்லா விஷயத்துலையும்…
அதான் எப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றவனை அவள்
முறைக்க மனைவியை இறக்கும் வழி தெரிந்தவன் அதில் மூழ்கினான்.

“அய்யோ… எல்லாரும் பாத்துட்டாங்க… மானமே போச்சு” திவ்யபாரதி
வெற்றியை அடிக்க அவளின் அடிகளை ஏற்றவன் மகனை கீழே வந்து
தூக்கி வந்தான்.

“தங்கப்பையா… அம்மா இல்லாம சமத்தா இருந்தீங்களா…” திவ்யபாரதி
மகனிடம் பேசியபடி அவனைக் கொஞ்ச மகனோ அன்னையை
எடுத்தவுடனே தன் பூக்கரத்தால் ஒரு அடி போட்டு அடுத்து சிரித்தான்.

வெற்றி சிரிக்க, “பாரு நீ பண்ண வேலைல உன் மகன் என்னை
அடிக்கறான்” கணவனைத் திட்டிய திவ்யபாரதி மகனின் வயிற்றில்
முத்தம் தந்து குறுகுறுப்பு மூட்ட அவனோ கீழே முளைத்திருந்த இரு
பற்களுடன் மட்டும் அன்னை தந்தையைக் கண்டு சிரித்தான்.

வெற்றியின் கரத்தில் மகனைத் தந்தவள் அவனின் தோளில் சாய்ந்தபடி
வர்ஷித்தைக் கொஞ்சினாள். வெற்றியோ கையில் வைத்திருக்கும்
குழந்தையோடு தோளில் சாய்ந்திருந்த வளர்ந்த குழந்தையையும்
பார்த்தவனிற்கு தன் எதிர்காலமே வசந்தமாய் தெரிந்தது. மனைவியின்
நெற்றியில் அழுந்த முத்தமிட்டவனின் தோளில் மகனின் காலைக்
கொஞ்சியபடியே சாய்ந்தாள் திவ்யபாரதி.