மாறா காதலுடன் 2

Mk-d5c4bf5e

மதுரை விமான நிலையம், ஒருவனை வரவேற்க ஊரே கூடி இருந்தது. “பெரியவனே….. எப்ப தான் வருவான். வந்த விமானம் திரும்பியே போயிடும் போல இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்” ராஜநாயகம் பொறுமையின்றி கேட்க, 

“தாத்தா அங்க பாருங்க அண்ணா வந்துட்டான்” என்று அவன் வந்த வழியை அர்ச்சனா காட்ட, அடுத்த பத்து நிமிடம் விமான நிலையமே பாச மழையில் நினைந்து போனது. 

“டேய் ராஜா மாதிரி இருக்க” என்று தாத்தாவும் “நல்ல வேலை தனியா வந்த எவளாவது வெள்ளைகாரியை கூட்டிட்டு வந்திடுவியோனு பயந்துட்டேன் ” என்று ஆச்சியும், “சரியாவே சாப்பிடலையா கண்ணு இளச்சி போய்ட்ட” என்று அன்னையும் பெரியம்மாவும், “படவா கண் காணாத இடத்தில் ஒழுங்கா இருந்தியா” என்று தந்தையும் பெரியப்பாவும், “மருமகனே உனக்கு பிடிச்சதை சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகி இருக்கும் வீட்டுக்கு வந்ததும் ஆட்டு கால் பாயால இருந்து ஆரம்பிச்சிடலாம்” என்று பாசமிகு அத்தையும், “என்ன மாப்பிள்ளை போன இடத்தில் இருந்து ஒரு பொண்ணோட வருவேனு பார்த்தேன் ஏமாத்திட்ட” என்று அக்கா புருஷனும், “முன்ன விட கலரா ஆகிட்ட டா” என்று அண்ணனும் “எனக்கு என்ன வாங்கி வந்த” என்று தங்கையும் பேச தெரியாமல் “சித்தா!! மாமா” என்று மழலையர் என்ற அனைவருக்கும் சிரித்த படி விடையளித்து கொண்டு இருந்தான் சத்ரேஷ். 

இதனை ஒரு ஒரமாக இருந்து பார்த்த ஆத்ரேயா “ஒருத்தரை ரிசீவ் பண்ண இவ்வளவு பேர் வந்து இருக்காங்க. வீட்டுக்கு தானே வர போறாங்க எதுக்கு இங்க படம் ஓட்டிட்டு இருக்காங்களோ” என்று அவளை அழைத்து செல்ல ஒருவர் வருவதாக சொல்லி இருக்க அந்த நபரை தேட சென்றாள். 

ஒரு பெயர் பலகையில் தன் பெயரை கண்டுகொண்டு “ஹலோ ஐ அம் ஆத்ரேயா” என்றதும் அந்த நடுத்தர வயது மனிதன் “வணக்கம் மா மதுரை உங்களை அன்போடு வரவேற்கிறது” என்ற பின் அவரோ அவளின் பெட்டியை அவள் மறுக்க இழுத்து கொண்டு “கல்லூரி சார்பில் இப்ப குவட்டஸ் எதுவும் காலி இல்லை மா. அதனால் கல்லூரி க்கு கொஞ்சம் தூரத்தில் ஒரு வீடு இருக்கு. அதை பார்த்து உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க” என்று காரில் அவளது பெட்டியை வைத்தார். 

“ஓ… ஃபைன் எவ்வளவு தூரம். தினமும் போய் வர முடியும் தானே” என்று தன் சந்தேகத்தை கேட்டு கொண்டு காரில் ஏற, 

“அரைமணி நேரம் கூட ஆகாது மா…. நம்ம முன்ன இப்ப ஒரு பெரிய குடும்பம் போச்சே அவங்க தான் மா இந்த ஊருக்கு பெரிய தலைகட்டு. இப்ப கல்லூரி இருக்கிற இடம் கூட இவர்களது தான். உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் அவங்க கிட்ட கேட்டா செய்து கொடுப்பாங்க. அவங்க வீட்டில் இருந்து பக்கத்து தெரு தான் இப்ப பார்த்து இருக்கிற வீடு. எந்த பயமும் இல்லாமல் இருக்கலாம் வேற ஏதாவது வேண்டுமா ” என்பவரிடம், 

“எனக்கு ஸ்கூட்டி வேண்டும். என் வண்டி வர இன்னும் பத்து நாள் ஆகும் அது வரை வீட்டுக்கு தேவையானது வாங்க கண்டிப்பாக வெளியே போகிற மாதிரி இருக்கும். பத்து நாட்களுக்கு ஸ்கூட்டி ஏற்பாடு பண்ண முடியுமா” என

“சரி மா நான் நாளை வண்டியோட வரேன்” என்று அவர் பெட்டியை வீட்டில் வைத்து விட்டு அவளின் கைபேசி எண்ணை வாங்கி, கிளம்பினார். 

ஒரு மாதம் வேகமாக சென்றது. ஆத்ரேயா இந்த சிறு நகரத்தில் தன்னை பொறுத்தி வாழ கற்று கொண்டாள். 

காலை கல்லூரிக்கு கிளம்பி கண்ணாடி முன் நின்றவள் தன் பிம்பத்தை சரியாக கவனிக்க கூட தோன்றாமல் திரும்ப அவள் கண்ணில் பட்டது அந்த அறையின் சுவரில் இருந்த அவளது புகைப்படம். 

முகம் கொள்ளா சிரிப்புடன் அளவில்லா சந்தோஷத்துடன் உலகத்தின் மொத்த நிம்மதியும் குத்தகைக்கு எடுத்து பேரழகியாக இருந்தால் ஆத்ரேயா. ஆனால் இப்போது போகும் ஆத்ரேயா மொத்தமாக மாறி இருக்கிறாள். 

எஸ். வி. அரசு கலை கல்லூரி, வளாகத்தில் நுழைந்தது முதல் மாணவிகள் கூறும் காலை வணக்கத்தை கூட இறுக்கமான முகத்துடன் சிறு தலை அசைப்பதன் மூலம் கடந்தாள். வந்த ஒரே மாதத்தில் மாணவிகளின் பிரியமான ஆசிரியர் ஆகி விட்டாள். இத்தனைக்கும் அவள் யாரிடமும் சிரித்து கூட பேசியது இல்லை. 

வணிகவியல் இரண்டாம் ஆண்டு, “ஓய் அச்சு… என்ன டி அந்த டேவிட் உன்னை மட்டுமே ஃபேக்ஸ் பண்றான். போறப்ப வரப்ப எல்லாம் உன்னை தான் அவன் கண்ணு தேடுது என்ன எதாவது மேட்டரா” என்ற தன் உயிர் தோழி சந்தியாவை கொல்லும் வெறியோடு அர்ச்சனா “அவனும் அவன் முஞ்சும்… செம்ம காண்டு ஆகுது எப்பவும் பஸ் ஸ்டாபில் நிற்கிறது இல்ல பக்கத்தில் இருக்கிற பேக்கரி கிட்ட நின்னு போற வர பொண்ணை கிண்டல் பண்றதே பொழப்பா வைச்சிருப்பான் போல சரியான வழிஞ்சா கேஸ்… அவனை விடு இப்ப எந்த மேம் ஹவர்” என

“இப்ப ஏ. என் மேம் டி” என்றதும் அர்ச்சனா “என்னோட செல்லக்குட்டி வர ஹவரா!! அப்ப வாங்க எல்லாரும் அஸம்பில் ஆகிடுவோம்” என ஆத்ரேயா வருவதற்கு முன்பே வகுப்பறை அமைதியாக இருந்தது. 

காந்திமதி “அதான் வீட்டில் இத்தனை கார் இருக்கே இப்ப எதுக்கு புது கார். என் பையன் கூட தான் படிப்பு முடிச்சு சொந்தமா தொழில் பண்ன போறேன் சொன்னப்போ யாருமே அவனுக்கு புதிசா ஒரு வண்டி கூட வாங்கி தரலை பழைய கார் தானே இப்ப வரை யூஸ் பண்றான். ஆனா சின்னவனுக்கு மட்டும் வந்த கொஞ்ச நாளே புது கார் வருது. இது கொஞ்ச கூட நல்லாவே இல்லை” என்று தங்கள் அறையில் கத்த, அதை எப்பொழுதும் போல் காதில் போடாமல் தன் வேலையை கவனித்தார் பொன்னரசு. இவரின் பேச்சை எல்லாம் கேட்டால் இத்தனை வருடம் சந்தோசமாக குடும்பம் நடத்தி இருக்க முடியுமா. 

பக்கத்து அறையில் இருந்த சதீஷ் தன் மனைவி நிரஞ்சனா விடம் “இந்த அம்மா எப்ப டி மாறும்… உயிரில்லாத காருக்கு அரைமணி நேரமாக பேசிட்டே இருக்காங்க முடியலை…. காலை எழுந்ததும் நல்ல சுப்ரபாதம்” என்று சலித்து கொள்ள, 

“டார்லிங் ஒரே மினிட்” என்று வேகமாக பக்கத்து அறையில் இருக்கும் தன் மாமியாரிடம் சென்று “அத்தை இந்த அநியாயத்தை பார்த்தீங்களா…. புதுசா காரு வாங்க போறாங்களாம் அதுவும் கொழுந்தனாருக்கு மட்டுமே. என் புருசனுக்கு மட்டும் புதுசா வாங்கலை போல” என்று எதுவும் தெரியாதவள் போல் கேட்க, 

உடனே காந்திமதி “அட என்ன கண்ணு இப்படி சொல்ற.. சின்னவன் சுபாவம் தான் தெரியும் தானே அதான் பிள்ளைக்கு புதுசா வாங்கறாங்க. உன் புருசனுக்கு வேண்டும்னா சொல்லு மாமா கிட்ட சொல்லி இரண்டா வாங்கிடலாம்.. இந்த சின்ன விசயத்துக்காக சின்னவன் கிட்ட சண்டை எல்லாம் போடாதே கண்ணு” என்று இவ்வளவு நேரம் தாம் தான் புலம்பியதை மறந்து கூறினார். 

இது தான் காந்திமதி. எவ்வளவு கோபம் பொறாமை வந்தாலும் யாரையும் மற்றவரிடம் விட்டு கொடுக்க மனம் வராது. தன் பிள்ளை மட்டுமல்ல எல்லாரையுமே சமமாக தான் பார்ப்பார். இவர் சமாளித்ததை கண்டு வந்த புன்னகையை மறைத்து கொண்டார் பொன்னரசு. 

நிரஞ்சனா கோபமான முகத்துடன் வெளியேறி தங்கள் அறைக்குள் வந்ததும் ‘எப்படி’ என்று புருவத்தை தூக்கி தன் கணவனிடம் கேட்டாள். 

“இந்த உலகத்திலே என் அம்மாவை என்னை விட எங்க எல்லாரை விட நீ தான் சனா பேபி நல்லா புரிஞ்சி வைத்திருக்க” என்று சிரிப்புடன் அவளை அனைத்து கொண்டான். 

குடும்பத்தின் பெரியவர்கள் அனைவரும் கூடி இருக்க, சத்ரேஷ் மட்டும் வெளியே சென்றிருந்தான்.  

கோகிலா “என்ன மாமா எதாவது சொல்லனுமா” என்று கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து கொண்டே கேட்க, 

ராஜநாயகம் தனது தொண்டையை செறுமி பின் “ஆமாம்மா நேற்று நானும் உங்க அத்தையும் ஜாதகம் பார்க்க போனோம்” என அனைவரும் அவரை எதுக்கு என்ற கேள்வியுடன் பார்க்க, 

அதை புரிந்து கொண்டு “சின்னவன் புதுசா தொழில் ஆரம்பிக்க போறான்ல அதான் அவனுக்கு நேரம் எப்படி இருக்குனு பார்க்க நினைச்சோம்” என்று பேச்சை நிறுத்த, 

மேகநாதன் “என்ன ஐயா சொன்னாங்க” என்ற கேள்விக்கு, “அவனுக்கு தொட்டது எல்லாம் தங்கம் ஆகிற ராசி….. மண்ணை கொண்டு ஆரம்பிச்சா கூட ராஜா அவன் தான். எல்லாமே அருமையாக இருக்கு ஆனா” என்று இழுக்க, 

காவேரி “அப்பு எதுக்கு இப்ப இழுக்கிறீங்க சட்டுபுட்டுனு சொல்லுங்க” என “அது அவனோட கல்யாணம் பெரிய சிக்கலில் தான் முடியும்னு நம்ம விருப்பம் இல்லாம தான் நடக்குமாம்” என்றதும்

காந்திமதி “அவன் அப்பா மட்டும் நமக்கு சொல்லியா கல்யாணம் பண்ணார். அவரோட இரத்தம் தானே” என்று முணுமுணுப்பாக சொல்ல, பொன்னரசு “ஏய்… சும்மா இரு” என “இல்லாததையா சொல்லிட்டோம்” என்று சலித்து திரும்பி கொண்டார். 

கோபிநாத் தன் மகனுக்காக “ஐயா அவன் கொஞ்சம் பிடிவாதக்காரன் தான் ஆனால் நம்மை மீறி எதுவும் செய்ய மாட்டேன்” என்க, 

“ஒருமுறை நம்பி ஏமாந்ததே போதும் தம்பி இந்த முறை நான் முடிவு பண்ணிட்டேன். நம்ம கயல் படிப்பு முடிய இன்னும் நாலு மாதம் இருக்கு…. இந்த மாசம் நிச்சயம் பண்ணிட்டு அவ படிப்பு முடிந்ததும் கல்யாணம் பண்ணலாம்” என்று தன் முடிவை சொல்ல, 

முழு மனதாக யாரும் சரியென வில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்வி, கேட்க தான் வழி இல்லை. 

ராஜநாயகம் கோகிலாவை பார்த்து “சத்ரேஷ் கிட்ட எப்ப சொல்லனுமோ அப்ப நானோ சொல்றேன் அதுவரை அவன் கிட்ட சொல்ல வேண்டாம்” என்று தனது அறைக்குள் சென்றுவிட்டார். 

கோகிலா தன் கணவரிடம் “எப்ப கோபி இவர் முழு மனசோட என் கிட்ட பேசுவார். என் மகனுக்கே கல்யாண வயசு வந்துடுச்சு. இன்னும் நம்ம கல்யாணத்தை பற்றியே பேசி என்னை வில்லி மாதிரியே பார்க்கிறார்” சிறு வருத்தத்துடன் சொல்ல “விடுடா குட்டிமா அவருக்கு உன்னை பிடிக்காமல் இல்ல. நம்ம இவருக்கு தெரியாம பண்ண கல்யாணம் அப்பறம் நீ படிக்க போறனு சொன்னதும் நான் படிக்க வைத்தது அதுக்கு அப்புறம் நம்ம பரம்பரையிலே முதல் பெண்ணா வேலைக்கு போக போறேன்னு நம்ம இரண்டு பேரும் வாதாடினது எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் என் குட்டிமா மேல வருத்தம் வந்து இருக்கலாம். என்ன தான் இருந்தாலும் அந்த காலத்து மனிசன் தானே. 

பெண்களை ஆண்களுக்கு கீழவே பார்த்து வளர்ந்ததால் என் குட்டிமா அவருக்கு வித்தியாசமா தெரியலாம். உனக்கு கஷ்டமா இல்லையா டா நம்ம சத்ரேஷ்க்கு கயல் கல்யாணம் பண்ணி தர” என “ஐய்யோ கோபி மெல்ல யாராவது கேட்டா என்னை தப்பா நினைக்க போறாங்க” என்று கண்களை சுழல விட, யாரும் ஹாலில் இல்லை. 

“எல்லாரும் அவங்க அவங்க அறைக்கு போய்யாச்சு…. இப்படி உட்காரு கால் வீங்கி போச்சு பாரு….. டேப்லெட் கரெக்டா மார்னிங் போட்டியா” என்று அவரை சோபாவில் அமர வைத்து கீழே அமர்ந்து அவரின் பாதத்தை பிடித்து விட, “விடுங்க கோபி யாராவது பார்க்க போறாங்க… நேற்று கொஞ்சம் வெளியே வேலை அதுக்கு அலைந்ததில் வீங்கி போய் இருக்கும்” என்று காலை எடுக்க பார்க்க, அவரோ மெதுவாக அவரின் காலில் அடியை போட்டு “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்றதும், 

“எனக்கு கயலை பிடிக்காதுனு இல்லைங்க…. கயலை ரொம்ப பிடிக்கும் தான். பட் எனக்கு சத்ரேஷ் க்கு அடங்கி போற பொண்ணு வேண்டாம்…. அவன் தப்பு பண்ணா தைரியமா அவன் முகத்தை பார்த்து தப்புனு சொல்லனும். அவன் காலுக்கு அடியில் இல்லாமல் அவனுக்கு பக்கத்தில் இருக்கனும். ஆனால் நம்ம கயல் கொஞ்சம் பயந்த சுபாவம். அதான் மனசு ஒப்பலை” தன் சிறு முக மாற்றத்தைக் கவனித்து கேட்கும் கனவனின் மேல் காதல் பெருகியது. 

சதீஷ் வேலைக்கு செல்ல மாடியில் இருந்து இறங்க பார்க்க நிரஞ்சனா அவனை தடுத்தாள். “என்ன டார்லிங்…. எதாவது சொல்னுமா நேரமாச்சு மா” என “அட இருப்பா” என்று கண்களால் மாடியில் இருந்தே கீழே பார் என்று சைகை செய்ய, அங்கே தன் சித்தப்பா சித்தியை பார்த்தவனின் இதழில் மென்புன்னகை தவழ்ந்தது. 

நிரஞ்சனா “இந்த வீட்டில் இருக்கிற பெரியவர்களில் இவங்க ரொம்ப வித்தியாசமானவங்க. நீயே என் காலை தொட மாட்ட ஆனால் சின்ன மாமா இப்ப கூட அத்தை மேல காதலோடு இருக்கார்” என

சிரித்து கொண்டே “சித்தப்பா லவ் ஸ்டோரி தான் அந்த காலத்தில் நம்ம ஊர் முழுக்க பேமஸ். சித்தி மேல அவ்வளவு லவ். அது இப்ப வரை குறையலை அதிகமாகி தான் இருக்கு. இதே மாதிரி இருபது வருடம் கழித்தும் நானும் உன் மேல அதே காதலுடன் இருப்பேன்” என அதற்குள் ஹாலில் இருந்து அவர்கள் கிளம்பி இருக்க, சதீஷும் கிளம்பி விட்டான். 

மதுரையில் பிரதான சாலையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி பார்க்கிங், தனது ஸ்கூட்டியை பின்னேடுக்க, வேகமாக ஒரு கார் அந்த ஸ்கூட்டியை இடிக்க, டமால் என்ற சத்தத்துடன் ஸ்கூட்டி யில் இருந்த பென் விழ, 

“இடியட்!!! ” என்று திட்டி கொண்டே சத்ரேஷ் காரில் இருந்து இறங்க, கீழ விழுந்த பெண்ணோ கோபத்துடன் சத்ரேஷை முறைத்தாள். வேற யார் அது நம்ம ஆத்ரேயா தான். கல்லூரியில் இருக்க வேண்டியவள் நடு ரோட்டில் புதையல் எடுக்க காரணம் என்னவோ?