மாறா காதலுடன் 6

Mk-756a0ef0

அர்ச்சனா வீட்டில் அனைவரும் ஹாலில் சிரித்து பேசிக்கொண்டு இருக்க அப்போது மோனலுடன் ஆத்ரேயா அங்கே வந்தாள். வீடு தேடி வந்தவளை எதுவும் சொல்லாமல் பெரியவர்கள் மௌனமாக வரவேற்க, 

 

சித்தாரா “வாங்க… உங்களுக்காக தான் அர்ச்சனா வெயிட்டிங்” என்று இருவரையும் அவளது அறைக்குள் அழைத்து செல்ல, பெரியவர்களை தவிர மற்ற அனைவரும் இங்கே தான் குழுமியிருந்தனர். 

 

நிரஞ்சனா “அடியேய்…. இதோ வந்திட்டாங்க உன்னோட மேம் இப்போ கேக் கட் பண்ணலாமா. பெரிய மாமா வேற எதோ வேலை விசயமாக வெளியே போக காத்திருக்கிறார்” என்ற சில நிமிடங்களிலே அனைவரும் ஹாலில் குடியிருக்க,  

 

சத்ரேஷ் கௌதம் காதில் “மாமா எடுத்ததும் ப்ரபோஸ் பண்ணிடவா இல்லை பேசி கொஞ்ச நேரம் கழித்து ப்ரபோஸ் பண்ணவா” என்று அதிமுக்கிய கேள்வி கேட்டான். கௌதம் காரமான பார்வையுடன் “யோவ்…. அசிங்கமா எதாவது கேட்டிட போறேன். உன் குடும்பமே இங்க தான் நிற்கிறது அந்த நினைப்பே இல்லாமல் ப்ரபோஸ் கேட்குதா.. அங்க பாரு உன் பெரியப்பா இப்பவே நெற்றிக்கண்ணை திறந்து முறைச்சிட்டு இருக்கார். இன்னும் பெருசா எதாவது பண்ணி வைக்காத” என்ற கௌதம் அறியவில்லை சத்ரேஷ் பண்ண போவது எல்லாமே அதிகப்படி தான் என்பதை. 

 

“சீ… தூ.. அங்கிட்டு போ டா… நானே அவளை என் வீட்டில் பார்த்த சந்தோஷத்தில் இருக்கேன். என் பெரியப்பா என்ன என்னை படைச்ச கடவுளே இப்ப என் கண்ணுக்கு தெரிய மாட்டார்” என்று ஆத்ரேயாவை பார்வையாலே தின்று கொண்டு இருந்தான். 

 

மாதவன் “என் சின்ன மச்சான் பார்வையே சரியில்லையே….. அடேய் சதீஷ் இங்க பாரு உன் தொம்பி என்ன பண்றானு” என்று சதீஷிடம் சத்ரேஷ் பார்வை செல்லும் திசையை காட்ட, 

 

சதீஷ் “வாவ்!!!! நம்ம வீட்டில் சீக்கிரமா கல்யாணம் நடக்க போகிறது. என்ன கண்டிப்பாக நம்ம தலையை தான் உருட்ட போறாங்க. தம்பி நம்ம பெரியப்பாவை பற்றி தெரிந்தும் அவர் முன்னே லவ்ஸ் பண்ற பாரு கிரேட் தான் டா நீ” என்று தனது தம்பிக்கு பாராட்டி பத்திரம் கொடுக்க, 

 

மாதவன் “இதை நம்ம சங்கத்து உறுப்பினர் கிட்ட சொல்லனுமே” என்று மற்றவர்களை தேட, அவர்களோ கேக்கை வளைத்து வளைத்து போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர். 

 

சத்ரேஷ் பார்வை இவர்கள் இருவரை மட்டும் அல்ல மற்ற இருவரையும் கூட ஈர்த்தது. வேற யாராக இருக்க முடியும். அவனது தாய் தந்தை தான். 

 

கோகிலா “என்ன கோபி இவன் நம்மை முன்னாடி வைச்சிட்டே இப்படி பார்கிறான். மாமா பார்த்தா என்ன சொல்லுவாங்க…. போய் அவனை வேற வேலை பார்க்க சொல்லுங்கள்” என்று வீட்டில் யாராவது பார்த்தால் என்ன ஆகும் என்ற பயத்தில் இருக்க,  

 

பேச்சியம்மாள் “நல்ல நேரத்திலே கேக் வெட்டலாம் வாங்க எல்லாரும்” என்றதும் அனைவரும் வர, அர்ச்சனா முகத்தில் அவ்வளவு சந்தோசமாக, மோனல் அவள் அருகே நிற்க ஆத்ரேயா சற்று மறைவாக தான் நிற்றாள். அனைவரின் கைத்தட்டல் மற்றும் வாழ்த்து பாடலுடன் கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்து அவளும் பெற்று கொண்டாள். 

 

 கடைசியாக ஓரமாக நின்ற ஆத்ரேயாவிடம் வர, அவள் தனக்கு கொடுக்க வந்த கேக்கை பிடித்து “இட்ஸ் ஓகே… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கேக்கை அவள் வாயிலே திணித்தாள். 

 

ஆத்ரேயா கேக்கை சாப்பிடாமல் இருப்பதை பார்த்த சத்ரேஷ் சம்மனே இல்லாமல் ஆஜராகி “நீங்க கேக் சாப்பிடலையா…. என்னங்க முதல் தடவை வீட்டுக்கு வந்துட்டு ஸ்வீட் சாப்பிடாமல் இருந்தா எங்களுக்கு கஷ்டமாக இருக்கும் ஆ.. காட்டுங்க” என்று அவள் யோசிக்கும் முன்னே அவன் கையில் இருந்த கேக்கை அவள் வாய் வைத்து இருந்தான். 

 

இவன் செயலை புரியாமல் பேந்து பேந்து முழித்து கொண்டே வாயில் இருக்கும் கேக்கை முழுங்கினாள். பல வருடங்கள் பின் ஒரு இனிப்பை அவள் இதழ் மொட்டுகள் உணர்ந்து சந்தோஷத்தில் மிதந்தது. சத்ரேஷ் சர்வ சாதாரணமாக கையில் மீதம் இருந்த கேக்கை அவன் வாயில் போட்டு கொண்டு செல்ல, அவனின் செயல் அவனது வீட்டினரை அதிர வைத்தது. 

 

தன் தீதி சத்ரேஷ் செயலில் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருப்பது மோனல்க்கு பெருத்த குழப்பம் தந்தது.  

 

கௌதம் தான் வாங்கிய பரிசை எவ்வாறு அச்சுக்கு கொடுப்பது என்று புரியாமல் நிற்க, மாதவன் தன் மனைவியை யாருக்கும் தெரியாமல் அங்கே தள்ளி வர, அதை பார்த்த கௌதம் ‘இந்த அண்ணா எதுக்கு சொந்த பொண்டாட்டியை இப்படி இழுத்துட்டு வராங்க’ என்று மறைந்து கொள்ள, 

 

சித்தாரா “எதுக்கு இப்படி இழுத்துட்டு வரீங்க” என்று கடுப்பாக கேட்க, மாதவன் “இல்ல உனக்கு பிடிக்குமே அதான் யாருக்கும் தெரியாமல் இந்த ஸ்வீட்டை எடுத்துனு வந்தேன்” என்று கையில் மறைத்து வைத்திருந்த ஜாங்கிரியை காட்ட, 

 

“ஓ…. இந்த கொடுத்தா நான் சமாதானம் ஆகிடுவேன் அதானே…… கண்டிப்பாக இல்ல. கேட்டது கேட்டது தான் எனக்கு உங்க கிட்ட இருந்து விவாகரத்து வேண்டும்” என்று மறக்காமல் அவன் கையில் இருந்த ஜாங்கிரியை பிடுங்கி கொண்டு தன் நிறைமாத வயிற்றுடன் நடக்க முடியாமல் சென்றாள். 

 

அதை கேட்டு அதிர்ந்த கௌதம் மாதவன் தோளை தட்ட “நீ எங்கடா இருந்த” என்று மாதவன் அவனிடம் அதிர்ச்சியாக கேட்க, 

 

“என்ன அன்ணா விவாகரத்து… எல்லாம் பேசிக்கீறிங்க…. எதாவது பெரிய சண்டையா சத்ரு கிட்ட சொல்லவா” என்று பதட்டமாக கேட்க, 

 

“அடேய் கூறு கெட்ட பையனே…. நேற்று அவ ஆசையாக வெளியே போகலாம்னு கேட்டால் எனக்குனு எதிரி வெளியே இல்லையே எனக்குள்ள தானே இருக்கான். போகலாம்னு சொல்லிட்டு அந்த பக்கத்து வீட்டு ஊர்மிளா கூட ஹாஸ்பிடல் போய்டேன் டா.. ஊர்மிலா பாவம்ல அதான் ஒரு உதவிக்கு போனேன். அதை தெரிந்ததில் தான் இந்த கோபம்…. நீ இதை பெருசா எடுத்துகிட்டு வெளியே யார் கிட்டவும் சொல்லி வைக்காத. சண்டைனு வந்தா சட்டை கிழிய தான் செய்யும் அதே மாதிரி வார்த்தை மீற தான் செய்யும் ” என்று மாதவன் தன் மகன் அழைக்கும் குரல் கேட்கவும் சென்றுவிட்டான். 

 

கௌதம் ‘இந்த அண்ணா மாசத்துக்கு ஒரு தப்பு பண்ணிட்டு எப்படி ஜாலியா இருக்குதோ…. நம்மால முடியலை” என்று அர்ச்சனா அறைக்குள் யாரும் அறியாமல் சென்று அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய வைரம் பதித்த கை கடிகாரத்தை வைத்தவன் ஒரு சின்ன பேப்பரில் வித் லவ் என்ற தன் பெயரை போடாமல் எழுதிவிட்டு, கீழே வந்தான். 

 

சத்ரேஷ் தனியாக இருக்கும் ஆத்ரேயாவை பார்த்து இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று பேச அவளிடம் நெருங்க சரியாக அவனுக்கு போன் வர அதுவும் அவனது வேலை விடயமாக இருக்க தவிர்க்க முடியாமல் ஆத்ரேயாவை பார்த்து மனதில் “பாயல் குட்டி கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுடா… இந்த நாசமா போனவனுக்கு இதுக்கு போன் பண்றான்னு கேட்டு இதோ வந்திடுறேன்’ என்று அவனது அறைக்கு சென்றான். 

 

கொஞ்ச நேரத்தில் கயலுக்கு போர் அடிக்க தொலைக்காட்சியை பார்க்க தொடங்கினாள். சேனல் மாற்றி கொண்டே வர, ஒர் நியூஸ் சேனலில் ‘முக்கிய செய்தி சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்று கொண்டிருந்த காரின் மீது கட்டுப்பாடு இழந்த அதிவேக லாரி மோதி, காரில் வந்த நால்வரும் உடல் நசுங்கி பலியானார்கள். அது சமீபத்தில் சென்னைக்கு மாற்றல் ஆகி வந்த ஏசிபி பார்த்திபன் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது’ என்ற செய்தி கேட்ட அடுத்த நிமிடம் கையில் இருந்த டம்ளரை தவற விட்ட ஆத்ரேயா ஹாலிலே மடிந்து அமர்ந்து நடுங்கினாள். 

 

மடிந்து அமர்ந்தவள் காலில் முகத்தை மறைத்து மூச்சு விட கஷ்டப்பட்டு கொண்டே “காப்பாத்துங்க….. யாராவது காப்பாத்துங்க….. என்னை விட்டு போகாதீங்க எனக்கு பயமா இருக்கு நான் சாக போறேன் எதுக்கு நான் இனி வாழனும்” என்று உடல் அதிர சுயநினைவு இல்லாமல் பிதற்ற, சுற்றி இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி. 

 

மோனல் நிலமையை உணர்ந்து “தீ…. நான் கூட தான் இருக்கேன் என்னை பாருங்க… ஒன்றும் இல்லை தீ… இட்ஸ் ஓகே நம்ம இதை எல்லாம் தாண்டி வந்திட்டோம்” என்று அவனை சுயநினைவுக்கு கொண்டு வர முயல, முன்ன விட அவளது பிதற்றல் அதிகம் தான் ஆனது. அவளை சுற்றி சித்தாரா, நிரஞ்சனா, அர்ச்சனா பதட்டமாக நிற்க, அப்பொழுது தான் மாடியில் இருந்து வந்த சத்ரேஷ் நடந்ததை நொடி பொழுதில் புரிந்து கொண்டு அவள் அருகே நெருங்கி ஆத்ரேயா கன்னத்தை தட்டி கொண்டு இருந்த மோனலை வேகமாக இழுத்து தள்ளினான். 

 

“பாயல்…. யூ ஆர் ஓகே….. நீ சேப்பா என் கிட்ட தான் இருக்க….. பாயல் தைரியமாக பொண்ணு தானே…. உனக்கு ஒன்றும் இல்லை டா….. நம்ம எங்க இருக்கோம்னு பாரு….. நீ ரொம்ப பத்திரமாக என் கையில் இருக்க” என்று அவளை தன் மார்பில் சாய்ந்து அவளின் முதுகை தடவி கொடுக்க, 

 

மெல்ல பிதற்றல் அடங்கி மயக்க நிலையில் “அவனை விட கூடாது பாவா…… விடவே கூடாது என் நிம்மதியை சந்தோஷத்தை அழிச்ச அவனை உயிரோட கொல்லனும் பாவா” என்று முணுமுணுக்க, அது அங்கே நிலவிய அசாத்திய அமைதியால் அனைவருக்கும் நன்றாகவே விழுந்தது.

 

“கண்டிப்பாக பாயல்….. என் பாயலோட முகத்தில் அந்த பழைய சந்தோஷத்தை கொண்டு வர ஒருத்தனை என்ன நூறு பேரை கூட கொல்லுவேன்” என்று அவளின் தலையை கோதி கொடுக்க, அவனிடம் தன் தந்தையின் உணர்வையும் பாதுகாப்பையும் உணர்ந்த ஆத்ரேயா ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றாள். 

 

தன் மேல் மோதிய மோனலை பேந்து பேந்து முழித்து பார்த்தான் மோகன்ராஜ். சத்ரேஷ் செயல் குடும்பத்தில் யாருக்குமே புரியவில்லை. சத்ரேஷ் அவளை பக்கத்தில் இருக்கும் அறைக்கு தூக்கி செல்ல, 

 

நிரஞ்சனா “மோனல் என்ன ஆச்சு ஏன் ஆத்ரேயா இப்படி நடந்துகிற….. அவளை இந்த சத்ரு ஏன் பாயல்னு கூப்பிடுறான்” என்று ஆவலாக கேட்க, 

 

மோனல் “தீ யோட அப்பா அவளை எப்படி தான் கூப்பிடுவாங்க…. தீதி இப்படி நடக்க காரணம் அவங்க வாழ்கையில் நடந்த முக்கியமான விசயம் தான்….. ஒரு பொண்ணு வாழ்க்கையில் முக்கியமா நினைக்கிற மூன்று விசயத்தை என் தீ ஒரே நேரத்தில் இழந்துட்டாங்க…… யாருக்குமே இப்படி நடக்க கூடாது….. இழந்ததை மறக்க முடியாமல் பைத்தியம் மாதிரி இருந்த என் தீயை முழுசா ஒரு வருசம் ஆச்சு பழையப்படி மாற்ற முடியலை ஆனால் நடமாட வைக்க தான் எங்களால் முடிந்தது ” என்று தாரை தாரையாக வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு சொல்ல, 

 

அர்ச்சனா “எப்படி என்ன நடந்துச்சு மேம் வாழ்க்கையில்” என அனைவரும் அதே கேள்வியை தாங்கி அவளை பார்க்க, 

 

“அவங்க என் தீ இல்… ” என்று சொல்வதற்குள் “மோனல்!!” என்று அழைத்து கொண்டு சத்ரேஷ் வர, அவனிடம் ஓடி “தாங்ஸ் ப்ரோ….. என் தீ தன் சுயநினைவே இல்லாமல் பல நாட்கள் இப்படி பதற்றும் போது மயக்க ஊசி இல்லாமல் தீ அமைதியாகி நான் பார்த்ததே இல்லை. இன்றைக்கு உங்களால் தான் இது சாத்தியம் ஆச்சு…..” என்று நன்றியோடு அவனை பார்க்க, 

 

அவள் தலையை தடவி பாசமாக “உனக்கு நானும் அண்ணா மாதிரி தான் மா…. எதுவாக இருந்தாலும் என் கிட்ட நீ தயங்காமல் கேட்கலாம்” என்று இவன் மனதில் ஒன்றை நினைத்து சொல்ல, மோனல் நினைவில் சில நினைவுகள் தோன்றி கண் கலங்க வைத்தது. 

 

குடும்பமே இவனை கேள்வியாக பார்க்க இவனோ “எல்லாரும் என்ன இங்கவே இருக்கீங்க….. அவங்க அவங்க வேலையை பார்க்க போகிறது தானே” என்று இவனும் மோனலுடன் பாயல் உறங்கும் அறைக்கு செல்ல, 

 

ராஜநாயகம் “பார்த்தியா… இவனை நம்மை எல்லாம் மதிக்கவில்லை… இங்க என்ன நடக்கிறதுனு சொல்லனும் கூட தோன்றலை….. சீக்கிரமா இவனுக்கும் கயலுக்கும் கல்யாணக்தை பண்ணனும்” என்று தன் துண்டை உதறி மேலே போட்டுக்கொண்டே சென்றார். கயல் அதிர்ந்து போகும் தன் தாத்தாவிடம் தனக்கு விருப்பம் இல்லாததை சொல்ல முடியாமல் தவித்தாள். 

 

ஆத்ரேயா வாழ்வில் நடந்தது என்ன???