மென்சாரலில் நின்வண்ணமோ..!?(15.1)

சாரல்-15

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு….

அந்தி மாலை நேரத் தென்றலை துளி துளியாய் சுகித்தபடி வாசலில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் இலகுவாய் அமர்ந்து அருகில் மெர்ஸி வைத்துவிட்டு சென்றிருந்த குக்கீஸையும் கையில் காபி கோப்பையுமென ரசித்துக் கொண்டிருந்தார் பிரஸ்டன்.

மழைச்சாரலால் மனம்நிறைக்கும் மண்வாசத்தைவிட நடுக்கிவிட்டுச் செல்லும் குளிரின் பனிவாசமென்றால் அவருக்கு அலாதி பிரியம். அதனுடன் இதமாய் காபியையும் பருகியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவரின் இமையோரங்கள் சிந்தனையில் சுருங்கி பின் யாரென அனுமானித்தப் பிறகு இதழோரங்கள் சிரிப்பில் சுருங்கின.

சைக்கிளை வாசலில் நிறுத்தி அதை அந்த இறும்பு சட்டத்துடன் சேர்த்து பூட்டிவிட்டு காலிலிருந்த ஷூவை அவசர அவசரமாய் கழட்டிவிட்டு கைகளிரண்டையும் ஸ்வெட்ஷர்ட்டின் பைகளுக்குள் இதமாய் நுழைத்தபடி படியேறி வந்துக் கொண்டிருந்தவளையே புன்னகை முகமாய் பார்த்திருந்தார் பிரஸ்டன்.

“ஹாய் ப்பா!!” என்று உற்சாக குரலுடன் வந்தவளிடம்,

“ஹாய் டா!! உங்கப்பா எப்படியிருக்கான்? ஃபோனடிச்சா எடுக்கறதேயில்ல…” என்று குறையாய் ஆரம்பித்தவரை கையமர்த்தி தடுத்து நிறுத்தியவளோ,

“ஹலோ… ஹலோ… ப்பா நான் இங்க உங்க வழக்கு தீர்க்க வரலை… நீங்களே அதை டிஸ்கஸ் செய்துக்கோங்க…” என்றவள் பார்வையை சுழலவிட்டவாரே,

“எங்க மை உயிர்நட்பு!?” என்க இப்பொழுது பிரஸ்டனின் முறையானது. கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு நன்றாக சாய்ந்து அமர்ந்தவரோ அவளைப் போலவே,

“நான் ஏன் சொல்லனும்? உன் ஃப்ரெண்ட நீயே தேடிக்கோ… ” என்று முகத்தை திருப்பிக்கொள்ள கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு அவரருகில் வந்து காதருகில் குனிந்தவள்,

“அப்போ போன வாரம் நீங்களும் அப்பாவும் சேர்ந்து மீட்டிங்னு பொய் சொல்லிட்டு விடிய விடிய கேமாடினத அம்மாட்ட சொல்லவா?… இல்ல.. அதுக்கு முந்தின வாரம் பிரியாணியும் ரொட்டி சால்னாவுமா வெளுத்து கட்டினீங்களே… அதை சொல்லலாமா? ப்ச்! எதுவுமே அவ்ளோ வெயிட்டா இல்லையே…” என்று தாடையில் ஒற்றை விரலால் தட்டி தீவிரமாய் சிந்தித்தவள், “ஆங்! போன மாசம்…” என்று தொடங்கும் முன்பே,

“டேவ் க்ளாஸ்ல இருக்கான் மெர்ஸி வேலையா இருக்கா லூனா ஃப்ரெண்ட்ஸோட வெளில போயிருக்கா… நான் இங்க இருக்கேன்…” என்று அவசர அவசரமாய் சொல்லி முடித்தவர்,

“வைபாம்மா சமத்து பொண்ணுல…” என்றிழுக்க,

“அப்போ இதெல்லாம் உண்மையாவே நடந்ததாப்பா?” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவளைக் கண்டு அவருக்கு பகீரென்றானது.

“அப்போ நீ குத்து மதிப்பாதான் கேட்டியா!?” என்க

“இருக்கட்டும் ஃப்யூச்சர்ல யூஸ் ஆகும்…” என்றவளாய் தட்டிலிருந்த குக்கீயை எடுத்து வாயிலிட்டவாரே

“இது பெனால்ட்டி…” என்றவிட்டு கடைசியொன்றையும் எடுத்துக்கொண்டவள் “பை பை ப்பா!” என்று வீட்டினுள் ஓடிவிட்டாள்.

ஏதோ தன் வயதையொத்தவளைப் போல இவ்வளவு நேரம் வம்பிழுத்துவிட்டு ஓடும் வைபவியை காணக் காண அப்படியொரு புத்துணர்ச்சி!! குறைந்தது பதினான்கு வருடங்களாய் அவளைத் தெரியும் அவருக்கு. டேவிடின் பள்ளி முதல் நாளில் இருந்து இருவருக்கும் பழக்கம். இத்தனை வருடங்கள் ஓடியும் டேவிடும் வைபவியும் நெருங்கிய நண்பர்களாய் இருக்க, ஒரு கட்டத்தில் அவர்களது குடும்பங்களுக்கு இடையேயும் நட்பு அடர்ந்த பாலமாய் அமைந்தது. அதில் இரண்டு தந்தைகளும்தான் இளையவர்களுக்கு சமமாய் நெருக்கமாகிவிட்டனர். ஏனோ அதிரூபனும் பிரஸ்டனும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துவிட்டனர்.

வெளியே பிரஸ்டனின் தட்டிலிருந்த குக்கீஸையனைத்தும் அபகரித்தவள் ஒவ்வொன்றாய் வாயிலிட்டபடி டேவிடின் க்ளாஸ் இருக்கும் மாடியறை பக்கமாய் படியேறினாள்.

இவள் படி ஏற ஏற முதல் தளத்தின் ஹாலில் ஒரு கருப்பு நிற போர்டும் அதற்கு எதிரில் சில குட்டீஸ்களும் அவர்களுக்கு நடுவில் குட்டி முக்காலி ஒன்றை போட்டு அமர்ந்தபடி எதைப்பற்றியோ தீவிரமாய் சொல்லிக்கொண்டிருந்த டேவிடுமென ஒவ்வொன்றாய் பார்த்தபடி வந்தாள்.

இவள் வருவதை கண்டுவிட்டவனோ குட்டீஸ்களிடம் திரும்பி எதையோ மெல்லிய குரலில் சொல்ல அவர்களும் பையை தூக்கிக் கொண்டு அவனுக்கும் கடந்து செல்லும்போது இவளுக்குமென டாட்டா காட்டியபடி குடுகுடுவென ஓடிவிட ஒருவன் மட்டும் டேவிடின் டீஷர்ட்டை பிடித்து இழுத்தான் கீழே குனியுமாறு அவன் கேள்வியுடன் குனிய சிறுவனோ,

“மறக்காம வரனும்” என்று சுண்டு விரலை நீட்டினான் பிங்கி ப்ராமிஸிற்காக

“நிச்சயமா!” என்று அவனது சுண்டு விரலை தனதால் பிடித்து உறுதி செய்தவனின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு இளையவன் ஓடிவிட்டான்.

அவன் செய்ததையே பார்த்திருந்த வைபவியும் அதே போல் டேவிடிடம் சுண்டு விரலை நீட்டியபடி நின்றாள்.

“என்ன?” என்றவனிடம்

“எனக்கும் ப்ராமிஸ் பண்ணு” என்க அவனோ,

“ப்ராமிஸ் என்ன பஞ்சு மிட்டாயா? ஆளுக்கொன்னுனு குடுக்க”

“மறந்துட்டல” என்றவளுக்கு

“இல்லையே” என்று உடனடியாய் பதில் வந்தது.

“அப்பாட்ட கேட்டியா? என்ன சொன்னாங்க?” என்க அவனோ புத்தகங்களை அடுக்கி வைத்தபடி

“வேண்டாம்னா சொல்லுவாங்க?” என்று மறுகேள்வி எழுப்பினான்.

“வாவ்!! ச்சே இது தெரிஞ்சிருந்தா அந்த குக்கீஸை சீஸ் பண்ணிருக்க மாட்டேனே…” என்று தீவிரமாய் வாய்விட்டே யோசித்தவாறு கீழே விரிக்கப்பட்டிருந்த பாயை மடித்து வைத்தவளையே வெறித்துப் பார்த்தவனோ,

“எந்த குக்கீஸ்!?” என்றான் சந்தேகமாய்

“அதான்… கீழ அப்பா வச்சிருந்தாங்களே..” என்றவள் முடிப்பதற்குள் டேவ் கடைசிப் படிகளை அடைந்திருந்தான்… “ம்மா!! எனக்கு குக்கீஸ்??” என்ற அலறலுடன்.

அலறியவாரே குக்கீஸ்க்காக வீட்டிற்குள் மாராத்தான் ஓடும் அவனையே பார்த்திருந்தவள் ஒரு கணம் அங்கிருந்த போர்டையும் புக்ஸையும் பார்த்துவிட்டு,

“அய்யோஹ்!!… இவன்லாம் ட்யூஷன் எடுத்து… நல்ல வேளை நான் ட்யூஷன் போலப்பா!!” என்று தோளை குலுக்கிவிட்டு அவன் சென்ற அதே காரியத்திற்காக அவளும் ஓடினாள்.

“ம்மா நானும்!!” என்றவாறே.

இருவருமாய் சேர்ந்து மெர்ஸி அவர்களுக்கென வைத்திருந்த தங்களது பங்கை கபளீகரம் செய்துவிட்டே கிளம்பினர். வைபா வீட்டிலும் சரி இங்கும் சரி எது செய்தாலும் அங்கு டேவ்க்கும் இங்கு வைபாக்குமென ஒரு பங்கு வைக்கப்படும்.

டேவ் அவனது சைக்கிளை எடுத்துக் கொண்டு வர பிரஸ்டனிடம், “பை பை ப்பா!!” என்றுவிட்டு இருவரும் வேகமெடுத்தனர். இப்பொழுது கிளம்பும் இவர்கள் வீடு திரும்ப குறைந்தது பத்து பத்தரை ஆகக்கூடும் என்பதை அறிந்ததால் அவரும்.

“பார்த்து போயிட்டு வாங்கடா!!” என்றார்.

ஏனெனில் இருவரும் வரிசையாய் சில பல வகுப்புகளில் சேர்ந்திருந்தனர். அதில் தற்காப்பு கலையும் சேர்த்தி.

இரவு மணி பத்து பத்தே கால் இருக்கக்கூடும். அந்த இருள் நிறைந்த வானடியில் ஆங்காங்கே சாலையில் மிளிர்ந்துக்கொண்டிருந்த விளக்குகளின் துணையோடு யாருமற்ற சாலையில் சைக்கிளை மெல்ல மிதித்தபடி வந்துக்கொண்டிருந்தனர் டேவ்வும் வைபாவும்.

வைபாதான் திடீரென ஆரம்பித்தாள், “ஆமா… விதுக்கு எதுக்கு பிராமிஸ் பண்ண?”

திடுதிடுப்பென அவள் கேட்டதில் சற்று சிந்தித்தவன் பின், “அதுவா… அடுத்த வாரம் அவன் ஸ்கூல்ல டேலண்ட்ஸ் டே வருதுல அதான் அவன சியர் பண்ண கட்டாயம் வரனும்னு சொல்லிருக்கான்…” என்க சில கணங்கள் மௌனமாய் வந்தவள் பிறகு திடீரென, “நானும் வரேன்” என்றாள்.

“ஏன் திடீர்னு?” என்றவனின் குரல் சந்தேகமாய் கேட்க அவளோ,

“நீதான சொன்ன விதுவ சியர் பண்ணனும்னு… நானும் வரேன்!!” என்று திட்டவட்டமாய் முடித்தவளிடம் “வேண்டாம்னா கேக்கவா போற” என்றாலும் சரியென தலையசைத்துவிட்டு சாலையில் கவனமானான் டேவ்.

பேசியபடியே வந்தவர்களின் பேச்சு கடைசியில் டேவ் வீடு வரவும்தான் நின்றது. இவர்களது பேச்சு சத்தத்தில் கதவைத் திறந்து வெளியில் வந்த பிரஸ்டனிடம்,

“உங்க புள்ளைய ஸேஃபா வீடு சேர்த்துட்டேன் அப்பா!!” என்க அவரோ வாசலில் நின்றபடியே

“நன்றி மகளே!! அப்படியே என் ஃப்ரெண்ட் அதியோட பொண்ணையும் ஸேஃபா வீடு சேர்த்திரு பாப்போம்…” என்றார் அக்கறையும் குறும்புமாய்.

“அடுத்து அதுதான் செய்யப்போறேன்பா…”

“குட்!! உள்ள வா வைபாமா… சாப்டுட்டு கிளம்பலாம்”

“இன்னொரு நாள்ப்பா. இப்போ வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. டேவ் சொன்னானா? நீங்க எப்போ வர்ரீங்க நாளக்கழிச்சு??”

“சொன்னான்டா. நாளக்கழிச்சு லீவ்தானே!? விடியறதே அங்கதான்!!” என்று குறும்பாய் மொழிந்தவரிடம் புன்னகைத்து விடைப்பெறும் விதமாய் சைக்கிளை திருப்பியவள் ஒரு கணம் பொறுத்தவளாய் அப்படியே தலையை மட்டும் திருப்பி டேவ்விடம்,

“கால் பண்ணா எடு பக்கீ!! தூங்கிட்டேன் பாக்கலைனு காரணம் சொன்ன கொன்றுவேன்!!” என்க அவனோ

“நீ எப்பவும்போல சனிக்கிழமை தூங்கி கட்டடிக்காம சீக்கிரம் கிளம்பியிரு! நாளைக்கு இண்ட்டர் க்ளாஸ் டிபேட் காம்படிஷனிருக்கது… ஞாபகமிருக்குல??”

“ம்ம் ம்ம் இருக்கு…” என்று அசடுவழிய அவனை முறைத்துவிட்டு கிளம்பினாள் அவள். காரணம் யாதெனில் அவள் உருவாக்கி வைத்திருந்த வரலாறு அப்படி!! சனிக்கிழமை… அதுவும் அரை நாள்தான் வகுப்புகள் இருந்தும் அம்மையார் டேவ் வந்து அவளறை கதவை தட்டும் வரை தூங்கிவிட்டு பின் அடித்துப்பிடித்து கிளம்பியதெல்லாம் அவளது வீர தீர சாகசங்களில் அடங்கும்!! அதை மனதில் வைத்து அவன் சொல்வதை அறிந்திருந்ததால்தான் அந்த முறைப்பு.

அவள் வீடு வந்தப்பொழுது சுகராகன் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்த வாக்கில் உறங்கியிருந்தான். டீவியை சத்தமில்லாமல் வைத்து அதிரூபன் பார்த்துக்கொண்டிருக்க இடது பக்க அறையில் மேகராகா அடுத்த நாள் வகுப்புக்கு தயாராகிக்கொண்டிருப்பது ஒளிர்ந்த விளக்கு உணர்த்தியது.

ஆம்! சுகராகன் அவளது குட்டி தம்பி. எட்டாம் வகுப்பு மாணவன். சுபாவத்தில் அப்படியே மேகராகாவின் மறுபிரதி.

மேகராகா இப்பொழுது அதே கல்லூரியின் காமர்ஸ் டிபார்ட்மெண்ட்டின் ஹெச்.ஓ.டி.

அதிரூபன் சொந்தமாய் தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறான். இப்பொழுது அவன் வைபவி, சுகராகன் என்ற இரு பிள்ளைகளின் அப்பா! மேகராகாவின் கணவன்… காதலன்… எல்லாம்!!

மகளை கண்டுவிட்டு சத்தமெழாதவாறு எழுந்துவந்த அதி அவளது தோள் பையை வாங்கிக்கொண்டவனாய், “இன்னைக்கு எப்படி போச்சுடா க்ளாஸெல்லாம்?”

“எப்பவும்போல சூப்பர்கூல் அதிப்பா!!” என்க அதில் மனம் நிறைந்த புன்னகையுடன்

“ஃப்ரெஷாகிட்டு வர்ரீயா பவிமா? சாப்பிடலாம்” என்றதும் அவள் உடைமாற்றிவர அவளறைக்குச் செல்ல இங்கு அதி சுகராகனின் தோள்களை மென்மையாய் தட்டியபடி, “சுகா! எழுந்திருடா சாப்பிடலாம்” என்று எழுப்பினான். அசதியில் கண்ணயர்ந்திருந்த சுகராகன் அதி தொடவும் பட்டென விழித்துக்கொண்டான்.

“மணியென்னப்பா? அக்கா வந்துட்டாளா?” என்றவாரே.

“ம்ம் மணி பத்தரை”

“ஓ…” என்று கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்தவன் “நான் அம்மாவ கூட்டு வரேன்” என்றுவிட்டு மேகாவை சாப்பிட வருமாறு அழைத்தவன் தந்தையுடன் சேர்ந்து எல்லாவற்றையும் அடுக்களையிலிருந்து சாப்பாட்டு மேசைக்கு மாற்றவும் மற்ற இருவரும் வருவதற்கும் சரியாய் இருந்தது.

அன்றைய தினத்தை அவரவர் பார்வையில் பகிர்ந்தவாரே உண்டு முடித்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்க சென்றனர் நால்வரும்.

நாளை சீக்கிரம் எழ வேண்டுமென்று நினைப்பு ஒரு புறமிருந்தாலும் கண்முன் வரிசைக்கட்டி நின்ற வேலைகளை ஒதுக்க இயலாது விறுவிறுவென முடித்தவள் ஒருகட்டத்தில் அவளை அறியாமலேயே உறங்கிப்போனாள்.

திடீரென காதருகில் ஒலித்த ரிங்டோன் ஆழ் உறக்கத்தில் இருந்த வைபவியை எரிச்சலடைய செய்தது. கண்களை திறவாமல் அப்படியே கையை அலையவிட்டு ஃபோனை எடுத்தவள் அதன் தொடு திரையில் இங்குமங்குமாய் இழுத்துவிட்டு வைக்க அது டிஸ்கனெக்ட் ஆவதற்கு பதிலாய் அட்டென்ட்டாகி ஸ்பீக்கர் மோடிற்கு போயிருந்தது.

“என்ன நல்ல தூக்கமா!?” என்ற குரலில் முதலில் “ம்ம்..” என்றவள் பின் உண்மை உரைக்க அடித்துப்பிடித்து எழுந்தமர்ந்து மணி பார்க்க அது ஆறு என்று காட்டவுமே அவளுக்கு மூச்சு சீரானாது.

“உன்ன!!”

“என்ன அப்பறம் திட்டிக்கலாம் இப்போ போய் கிளம்பு! நான் ஷார்ப்பா எட்டு மணிக்கு அங்க இருப்பேன்” என்று வைத்துவிட ஒரு நொடி அவளறையை நோட்டமிட்டவளுக்கு நேற்று எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு உறங்கியது நினைவில் வர.. ஜெட் வேகத்தில் அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு கிளம்பி அவனுக்கு முன்னதாக வாசலில் சைக்கிளுடன் காத்திருந்தாள்.

“அதிசயமா இருக்கு!” என்று வந்தவனிடம்

“இன்னைக்கு டிபேட்ல…” என்க அவனோ

“அதானே பார்த்தேன்!” என்றதோடு சரி அதற்கு மேல் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான். அவள் எதை சொல்கிறாள் என்றுணர்ந்தும்.

காலையில் வழமைப்போல வகுப்புகள் ஒரு புறம் நடக்க மறுபுறம் செமினார் ஹாலும் தயாரானது. வகுப்புகள் கெடாதவாறு போட்டியை கடைசி வகுப்பு நேரத்தில் வைத்திருந்தனர். முடித்துவிட்டு கிளம்ப சுலபமாய் இருக்குமென்றோ இல்லை இதை காரணமாய்காட்டி மாணவர்கள் யாரும் அங்குமிங்கும் அலையக்கூடாது என்றோ இப்படியொரு ஏற்பாடு.

செமினார் ஹாலின் கடைசி வரிசையில் ஏஸிக்காற்று பாதிக்காததைப்போல அமர்ந்து மேடையையே கவனித்துக்கொண்டிருந்தனர் டேவ்வும் வைபாவும்.

மெல்ல அவள் புறம் சரிந்தவன், “உன் பார்ட்னர்… திவி எங்க?” என்றான் யார் கவனத்தையும் ஈர்க்காதவாறு.

“தெரியல…” என்று அவளும் அவனைப்போலவே சொல்ல அவனோ

“என்ன!?” என்று அதிர்ச்சியில் சத்தமாய் கேட்டுவிட முதல் வரிசையில் இருந்து இவன் புறம் திரும்பிய லெக்சரரின் கண்டனப் பார்வைக்கு இவனும் இங்கிருந்தபடியே “சாரி சார்” என்று மெல்லமாய் முணுமுணுத்தான். நியாயப்படி அவன் அங்கு இருக்கவேக்கூடாது. போட்டியில் பங்கு பெறுவோர் மட்டுமே அங்கிருக்க இவன் மற்றவர்களுக்கு டிமிக்கி குடுத்துவிட்டு அமர்ந்திருந்தான்.

“இப்போ ஏன் ஹைப்பராகற?”

“எது ஹைப்பர் ஆகறேன்னா? இப்போ நீ என்ன பண்ணுவ பார்ட்னர் இல்லாம?” என்றவன் முந்தைய அனுபவத்தால் அவளுக்கு மட்டும் கேட்குமாறு பேசினான்.

“பாப்போம் இரு..” என்றவள் முதலில் திவிக்கு மெஸேஜ் அனுப்ப அவளிடம் இருந்து பதில் எதுவும் வராமல் போகவே அவர்களது க்ளாஸ் வாட்ஸாப் க்ரூப்பில் சுருக்கமாய் விஷயத்தை சொல்ல அப்பொழுதே அவள் இன்று வராதது தெரிந்தது.

“என்னாச்சு?” என்றவனிடம் அவள் ஃபோனை நீட்ட அதை வாங்கிப் பார்த்தவனோ, “இப்போ என்ன பண்ண வைபா?” என்று வினவிக் கொண்டிருந்தப் பொழுது

“ஆட்சேபனையில்லைன்னா… நான் உன் பார்ட்னரா இருக்கவா?” என்று வந்த குரலில் இருவரும் ஒருசேர அதிர்ந்தனர்.

அது த்ருவ்வின் குரல்! காலையில் ‘இன்னைக்கு டிபேட்ல’ என்று வைபா குறிப்பிட்ட த்ருவ்வின் குரல்!! த்ருவ், அந்த கல்லூரியில் வெகு பிரபலமான ஒருவன். அவர்களது வகுப்புதான் அவனும் முதலில் பாட்டுக்காக மைக் பிடித்தவன் சிறந்த பேச்சாளனும்கூட என்பதை பிறகே அனைவரும் அறிந்தனர். அவனது வித்தியாசமான பேச்சும் சரளமான தமிழும் இனிமையான குரலுமென அனைவரையும் தன் வசம் இழுத்துவைத்திருந்தான். அதற்கு வைபவியும் விதிவிலக்கல்ல! அவளுக்கு த்ருவ் மேல் மெல்லிய ஈர்ப்பிருந்தது. அதை நன்கறிந்திருந்த டேவ் வைபாவை பார்க்க அவளோ விழிகளிரண்டும் மலர்ந்தவளாய்,

“உன் பார்ட்னரும் வரலையா?” என்று கேட்டாள்.

“ம்ம் ஆமா! நாம சேர்ந்து பார்ட்டிஸிபேட் பண்ணலாமா?” என்றவனுக்கு சம்மதமாய் தலையசைத்தவள்

“நிச்சயமா!” என்றவாரே கையிலிருந்த தாளை பைக்குள் போட்டுவிட்டு ” அப்போ இது நிஜ டிபேட்டா இருக்கப்போவுது! அதாவது… ஸ்க்ரிப்ட் இல்லாம” என்க த்ருவ்வும்

“ஆவலா காத்திட்டிருக்கேன்” என்று புன்னகைத்துவிட்டு சாய்ந்தமர்ந்துக்கொள்ள இங்கு இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த டேவோ ‘நான் ஒருத்தன் நடுவுல இருக்கேன்டா!!!!’ என்பதைப்போல் பார்த்து வைத்தான். அவனுள்ளோ இனி இதை எத்தனை வாட்டி இவள் சொல்லிக்காட்டப் போகிறாளோ என்று பதறியது.

சற்று நேரத்திலெல்லாம் இவர்களது முறை வர இருவருக்கும் டேவ் ஆல் த பெஸ்ட் சொல்ல அதை த்ருவ் கண்டுக்கொள்ளாததைப்போல நகர்ந்ததை வைபா கவனித்துவிட்டாள்.

த்ருவ் அப்படி செய்ததில் ஒரு கணம் தடுமாறினாலும் பிறகு அதை புறந்தள்ளிய டேவ் இப்பொழுது வைபாதான் முக்கியம் என்பதைப்போல அவளுக்கு இரு கட்டைவிரல்களையும் உயர்த்தி காட்டினான்.

ஏனோ சிரித்த முகமாய் தனக்கு ஆல் த பெஸ்ட் உரைத்த நண்பனை த்ருவ் அவமதித்தது அவளுக்கு ஒருமாதிரியானது. அதுவரை அவன் மேலிருந்த ஈர்ப்பு ஒரே நொடியில் ஆட்டம் கண்டதுபோலனாதில் கவனத்தை தொலைக்காமல் தன் வாதத்தால் அவனை நெருக்கியவள். நடுவர்கள் பஸர் அழுத்திய மறுகணம் திரும்பியும் பாராமல் அவளிருக்கைக்கு வந்து அமர்ந்துவிட்டாள்.

“ஹே!! செம!! செம பக்கி!! எல்லாமே சரியான பாய்ண்ட்ல இருந்தது, வளவளனு இழுக்காம…” என்று அவளைவிட உற்சாகத்தில் குதித்தவனைப் பார்த்தவளுக்கு அவனது உற்சாகம் தொற்றிக்கொள்ள

“நாங்கல்லாம் யாரு!?” என்று சட்டை காலரை இழுத்துவிட்டாள்.

“இந்த கண்றாவியெல்லாம் பாக்கவேண்டிவரும்னுதான் நான் அடிக்கடி பொய் சொல்றதில்ல” என்க அருகிலிருந்தவனின் தொடையில் நறுக்கென கிள்ளியவள் “உன்ன!! வெளில வா எரும!!” என்று இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்க முடிவுகள் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படுமென்று லெக்சரர் ஒருவர் அறிவிக்கவும் எல்லோரும் கலைந்தனர்.

வாசலருகில் வந்த வைபாவை யாரோ அழைப்பது போலிருக்க இவள் யாரென்று திரும்பி பார்க்க அங்கு நின்றிருந்த த்ருவ் அவளருகில் வந்தான்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்… அங்க” என்று காலியாய் கிடந்த பக்கத்து வகுப்பறையை சுட்டிக்காட்ட

இவனிடம் “ம்ம்” என்றவள் டேவிடம் “டேவ் இரு வரேன்” என்றுவிட்டு அந்த அறையினுள் நுழைந்தாள்.

“செமையா பேசின இன்னைக்கு” என்றவனிடம்

“ஐ நோ” என்றவள் ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாள்.

மறுபடியும் எப்படித் தொடங்க என்று தடுமாறியவன் பிறகு “எங்கேயோ வாசிச்ச ஞாபகம் ‘ஆண்களை வெல்லும் பெண்கள் தனியழகுனு’..”

“மண்ணாங்கட்டி!”

“வாட்!!?”

“மண்ணாங்கட்டின்னேன்!! பின்ன என்ன த்ருவ்!? டிபேட்ல கருத்துக்கள்தான் மோதுச்சே தவிர ஆணும் பெண்ணுமில்ல! வாதத்தைப் பார்க்கறத விட்டுட்டு அங்க பாலின பாகுபாடை பாக்கறது… பை த வே… யார் இந்த மாதிரிலாம் எழுதறது!?” என்க அவன் எப்படி சொல்லுவான் எழுதியதே அவன் எனும்பொழுது.

அதிர்ச்சி குறையாமல் புன்னகைத்தவன்,
“கூல்…” என்க அதற்கும் அவள்

“ஐ நோ” என்றாள்.

த்ருவின் மனதினுள்ளோ, ‘ இவள் தன்னம்பிக்கை லெவல்!!!!’ என்றலறியது. அது அவனை இன்னுமின்னும் ஆர்வமாக்கிட அவளிடம் பேச்சை வளர்க்க எண்ணினான்.

“பரவால்ல.. நீ என்ன மாதிரியே யோசிக்கற.. நான்கூட அந்த டேவிட்கூடவே சுத்தரதால நீயும் அவன போலத்தானு நினைச்சிட்டேன்..” என்று விரிய புன்னகைத்தவனின் கண்களில் மெச்சுதலைக் கண்டவளின் முகம் சட்டென மாறியது.

சற்றும் யோசிக்காதவளாய், “வாட்!? உன்ன மாதிரி யோசிக்கறேனா..? நீ என்ன இண்ட்டெல்லிஜென்ஸ்க்கு ஏதாவது ஸ்டாண்டர்டா!? அதென்ன அது உன்ன மாதிரி யோசிக்கறது.. அப்போ அடுத்தவங்களோட திங்கிங்க கூட உன்னால ஏத்துக்க முடியல.. அந்த க்ரெடிட்டகூட இப்படி சொல்லி நீ எடுத்துக்கற இல்லையா… சாரி டூ சே திஸ் த்ருவ்!! மத்தவங்க வேணா நீ இப்படி சொன்ன உடனே உச்சி குளுந்துபோலாம்.. ஆனா சுயசிந்தனையுள்ள யாரும் இதுக்கு நீ எதிர்ப்பார்க்கற மாதிரி ரியாக்ட் செய்யமாட்டாங்க!! உன்மேல சிலருக்கு சின்ன க்ரேஸ் தான் இருக்கே தவிர பித்தொன்னும் பிடிக்கல!..” இனிய கனவொன்று கலைந்தது ஒருபுறமென்றால் இன்னொரு புறம் அவளால் இவனின் பேச்சை சகித்துக்கொள்ளவே இயலவில்லை.. த்ருவ்க்கோ வைபா இப்படி பேசுவாளென்று கனவில்கூட நினைத்தானில்லை!

அவனிடம் யாரும் இப்படி பேசியதுமில்லை! அவனுக்கு அங்கு தனி மரியாதை இருந்தது. த்ருவ் என்றால் தனி க்ரேஸ் இருந்தது. அடிக்கடி மைக் பிடித்தவனுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்ததென்னவோ உண்மைதான். அவனிடம் நட்பு பாராட்ட சிலர் தயாராய் நிற்க இவளென்னவென்றால் அவனை தோரணமாய் கட்டி தொங்கவிடாதக்குறையாக அவனது ஒவ்வொரு வார்த்தைக்குமள்ளவா எதிர்வார்த்தை பேசுகிறாள்!? அதுவும் இத்தனை நேரம் முகம் மலர்ந்து நின்றிருந்தவளின் இந்த திடீர் மாற்றத்தின் காரணம் புரியாமல் போனதில் த்ருவிற்கு வருத்தத்தைவிட அதிர்ச்சிதான் அதிகம்.

கண்ணாடி தடுப்புக்கு உள்ளே இருப்பதால் வெளியே எதுவும் கேட்க வாய்ப்பில்லைதான்… இருந்தாலும்

“ஹே! என்ன!? நீதான பேச வந்த!? நீதான பின்னாடியே சுத்தின?” என்று அதிர்வை விலக்கிக்கொண்டு தான்தான் அவளை அழைத்தோம் என்பதையே மறந்து எகிறத் தயாராக அவளிடமோ,

‘எதே!?’ பாவனைதான்.

“என்ன!? நான் உன் பின்னாடி சுத்தினேனா!!? நேரந்தான்!! அதென்ன அது எல்லாரும் உன் பின்னாடியே சுத்தரதா வேற நினைப்பா உனக்கு? ” நினைவு வந்தவளாக,

“என்ன சொன்ன நீ? டேவ்கூடவே இருக்கதால அவனப்போலவா?.. அவனப் பத்தி உனக்கு என்ன தெரியும்? உன்னோட பேச்செல்லாம் வெறும் மைக்கோட நின்னுடும்! ஆனா அவன் அதையே வாழறவன்! பிறந்ததுல இருந்து அவன அவன் வீட்டுல அப்படியே வளர்த்துட்டாங்க அதான் அவனுக்கு வித்தியாசம் தெரியல.. நீ கைத்தட்டுக்காக பேசறததுதான் அவன் லைஃப் ஸ்டைலே! பத்து புக்க வாசிச்சிட்டு புரியாத நாலு வார்த்தைய அங்கயும் இங்கயுமா மாத்திப்போட்டா நீ பெரிய அப்பாட்டக்கரா!? சமூகவாதியா? உன்ன மாதிரி ஆட்கள்தான் இந்த சமூகத்துக்கே வியாதி!!” என்று வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கடித்து துப்பிவிட்டு திரும்பியவள் ஒருகணம் பொருத்து அவனிடம் திரும்பினாள்,

“இன்னொரு தடவ என்ன மாதிரியே யோசிக்கற.. நாமல்லாம் யுனிக்னு உளறிக்கொட்டறதுக்கு முன்னாடி யோசிச்சுக்கோ! இந்த உலகத்துல ஜனிக்கற எல்லாருமே யுனிக்தான்! உன் பேச்சுக்கு கைத்தட்டினதால நாங்க ஒன்னும் முட்டாளில்ல!” என்றுவிட்டு கதவை வேகமாய் சாத்தும் முன் அவனைப் பார்த்து “ஹிப்போக்ரைட்!” என்ற ஒரே வார்த்தையில் அவனது பிம்பத்தை குழித்தோண்டி புதைத்துவிட்டு கண்ணாடி கதவென்றும் பாராமல் அடித்துச் சாத்திவிட்டு சென்றுவிட்டாள்.

த்ருவ் உறைந்துப்போனான்.

விறுவிறுவென வெளியே அவள் வருவதை பார்த்துவிட்டு பேசிக்கொண்டிருந்தவர்களிடம் அவசர அவசரமாய் விடைப்பெற்றுக்கொண்டு வந்த டேவ்க்கு அவள் முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என்று புரிந்துவிட “என்னாச்சு வைபா?” என்றவனிடம்

“கிளம்பலாம்” என்றதோடு சரி அதற்கு பின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு வந்தடையும் வரையிலுமே வைபா ஒரு வார்த்தை பேசவில்லை.

வீட்டிற்கு வந்தவள் வீட்டினுள் செல்லாமல் நேராக மாடிப்படி ஏறிவிட அவள் பின்னாலையே ஏறியவன் வைபாவை அழைக்க எத்தனித்த அதிரூபனிடம் வாயில் சுட்டு வரல் வைத்து வேண்டாம் என்பதுபோல் தலையசைக்க அதியும் அவர்களுக்குள் சண்டைப்போலவென்று அமைதியானான்.

##############

சிரிப்பை அடக்க முயன்று தோற்றென அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருந்த டேவ் வைபா தான் சிரிப்பதற்கு தன்னிடம் கோபம்கூட காட்டவில்லை என்பதை உணர்ந்து,

“உண்மைலயே.. அப்படியே சொல்லிட்டு வந்துட்டீயா?” என்றான் எத்தனையாவது முறையாகவோ.

“ப்ச்! ஆமா” என்றவளின் முகம் சிரிப்பதற்கு மாறாய் கலங்கத் தொடங்க அதில் பதறியவனோ,

“ஏ!! வைபா? என்னாச்சு?” என்கையிலேயே அருகில் அமர்ந்திருந்தவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் வைபா.
இன்னதென்று தெரியாவிட்டாலும் அவள் கலங்குவதை அவனால் காண இயலவில்லை. ஆதரவாய் அவள் முதுகில் தட்டிக்கொடுத்தவன் அவள் அசையாமல் அப்படியே இருக்கவும் சந்தேகத் த்வனியில்,

“என்னாச்சு வைபா?” என்றான் குரலில் மென்மையை நிரப்பி.

அவளும் “தெரியல…” என்றாள் அசையாது.

“இப்படி பேசிட்டோமேனு நினைக்கறீயா?” என்று தயக்கமாய் அவன் முடிக்கக்கூடயில்லை சட்டென எழுந்தவள் அவனையே வெறித்தவாறு.

“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?” என்க

‘கொறங்கு மாதிரி’ என்று அவனின் பார்வை சொன்னது.

“அப்போ இன்னும் நல்லா கேட்றுக்கலாம்னு நினைக்கறீயா? இல்லை… இவனப்போய் எப்படி பிடிச்சதுனு நினைக்கறீயா…?” மறுபடியும் தலையைத் தூக்கியவள்

“உனக்கெப்படி தெரியும்!!?” என்றாள் அதிர்ச்சி குறையாமல்.

அவள் நெற்றியில் சுட்டு விரல் வைத்து தள்ளியவனோ, “இத்தனை வருஷம் உன்கூட இருந்துட்டு இதுக்கூட தெரியல்லன்னா அப்பறம் நான் என்ன பெஸ்ட் ஃப்ரெண்ட்??” என்றவன் அத்தோடு நிறுத்தியிருந்திருக்கலாம் அதைவிட்டு,

“ஆனா அவன்லாம் ஒரு ஆளுனு அவனப் போய் முதல் க்ரஷ்னு சொன்னப் பாத்தீயா?” என்றுவிட ஏற்கனவே அதை நினைத்து வருந்திக்கொண்டிருந்தவளுக்கு இவ்வார்த்தைகள் இன்னும் அழுத்தம் சேர்க்க மொத்தமாய் அது டேவிடம் திரும்பியது. அவளுக்கு த்ருவ் பேசியதைவிட டேவ் இப்பொழுது ஆறுதலாய் பேசாமல் இப்படி பேசியது கோபத்தை கிளறியது.

“போடா டபரா தலையா!!” என்று கத்திவிட அவனும் என்றும்போலென்று எண்ணி

“நீ போடி சப்பமூக்கி!!” என்றுவிட அவன் முதுகில் பட்டென்று ஒரு அடி வைத்தவள் விடுவிடுவென எதிரில் படியேறி வந்துக்கொண்டிருந்த மனோவைக்கூட கண்டுக்கொள்ளாமல் கீழிறங்கி சென்றுவிட்டாள்.

“செல்லம்மா!! செல்லம்மா!!” என்று இருதரம் அழைத்தும் அவள் திரும்பாததைக் கண்டு மனோ பதற

“எரும!! எரும!! அய்யோ… ச்சை!! அது கையா இல்ல கடப்பாறையா!!” வலியில் புலம்பித் தள்ளியவன் மனோவை கண்டுவிட்டு “இவனொருத்தன்!! அடிவாங்கினவன விட்டு அடிச்சிட்டுபோறவள பாத்துக்கிட்டு!!” என முணுமுணுத்தவாரே

“மனோ..மனோ!! இங்க வா” என்று திட்டில் அவன் அருகில் இருந்த இடத்தை காட்டி அழைக்க “செல்லம்மாக்கு என்னாச்சு?” என்று தயங்கியவனிடம்

“நீ இங்க வா…எனக்கு என்னாச்சினு பாரு!!” என்றான் விடாபிடியாய். டேவ் அருகில் வந்து அமர்ந்த மனோ, “என்னடா மறுபடியும் சண்டை போட்டாச்சா??” என்க

“ப்ச் இது அது இல்ல மனோ…” என்றவன் அன்று நடந்தது அனைத்தையும் ஒன்னுவிடாமல் சொல்ல மனோவோ,

“ப்ச்… ஃபர்ஸ்ட் க்ரஷ்.. இப்படியாகிருக்க வேணாம்”

“இதுதான் கரெக்ட் மனோ”

“என்ன!? நீயேன்டா இப்போ அவ அப்பா மாதிரி பேசற?”

“ப்ச் இல்ல மனோ… அவனுக்கும் வைபாக்கும்லாம் செட்டே ஆகாது! உனக்கு தெரியும்ல… இவளப்பத்தி!? அவன் இவளுக்கு எதெல்லாம் எரிச்சலாக்குமோ அதெல்லாம் செய்யற டைப்! மனசுல என்னவோ பெண்கள் குலத்த காக்கப் பிறந்தவன்ற ரேஞ்சுக்கு நினைச்சிக்கிட்டு நடந்துப்பான். அவன் பெண் என்பவள்னு மைக் பிடிச்சா நான் ஹெட் ஃபோனுக்குள்ள ஐக்கியமாயிடுவேன்னா பாரேன்!!”

“ஏன் அப்படி சொல்ற?”

“பின்ன என்ன மனோ… பெண்கள் அப்படி இப்படி… தெய்வம் அது இதுனு அநாவசியமா டிக்னிஃபை பண்ணி பேச வேண்டியது… ஒரு நல்ல பொண்ணு எப்படியிருப்பா தெரியுமானு பக்கம் பக்கமா ஒரு புக்கே போட்டு வச்சிருப்பானு நினைக்கறேன்… இவனுங்களே ஒரு கோட்டப் போட்டுட்டு அதுதான் புரட்சி புதுமைனு பேச வேண்டியது எந்த பொண்ணாவது அதை தாண்டிட்டா இவளெல்லாம் பெண் இனத்துக்கே கேடுங்க வேண்டியது. இவன மாதிரி ஆட்கள்லாம் திமிரா இருக்கப் பெண் தனியழகுனு சொல்லுவாங்க ஆனா அதே ஒரு பொண்ணு அவங்க நினைச்சதவிட அதிகமா தன்மானமும் தன்னம்பிக்கையுமா இருந்துட்டா ஏத்துக்க முடியாது. இது எப்படி தெரியுமா இருக்கு… நீ இண்டிபெண்டன்ட்டா இருக்கனும் ஆனா அந்த independency கூட நான் சொல்ற அளவுதான் இருக்கனும்ற ரகம். இவங்க ரெண்டு பேருக்குள்ள செட்டாகும்னா நினைக்கற? இன்னும் ரெண்டு நாள் போயிருந்தா அவன் தலைய பேத்திருப்பா உங்க செல்லம்மா!! இது இப்படி முடிஞ்சதே பெஸ்ட் மனோ… இன்னும் போயிருந்தா வைபாதான் வருத்தப்பட்டிருப்பா…” என்றவன் சற்று நேரத்திற்கு முன் அவளிடம் வம்பிழுத்ததிற்கு நேரெதிர் பாவத்துடன் இருந்தான்.

“இதை அவகிட்ட தெளிவா சொல்றதுக்கென்ன??”

“விடு மனோ… இப்போ கோவத்துல இருக்கா என் மேல… அப்பறம் நார்மலாகிடுவா…இப்போ போனா அவனுக்கும் சேத்து என்ன செஞ்சிடுவா”

“கோவத்துலயா? செல்லம்மா தலைய குனிஞ்சிட்டு போன மாதிரி இருந்தது..” என்றவன் கீழே சென்றுவிட அவன் சொன்னதன் அர்த்தம் தாமதமாகவே உரைக்க டேவ்வும் கீழே ஓடினான். ஹாலில் அமர்ந்திருந்த அதி டேவ் ஓடி வருவதை பார்த்துவிட்டு

“டேய் டேய்! பார்த்து வா!! ஏன் அவசரம்?” என்க மூச்சு வாங்கியவாரே

“வைபா… எங்க??” என்றான்.

“நீ முதல்ல உக்காரு! எப்படி மூச்சு வாங்குது பாரு” என்று தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழ முயன்றவனை தடுத்தவனோ,

“அதெல்லாம் வேணாம் அதிப்பா… வைபா எங்க?”

“ரூம்ல இருக்கா… என்னாச்சு?” என்றான் குரலை தாழ்த்தி

டேவ்வும் அவனைப்போலவே இரு ஆட்காட்டி விரல்களையும் குறுக்காக வைத்து “சண்டை” என்று வாயசைக்க அதி தலையில் அடித்துக்கொண்டான்.

“அவள ஒரண்டை இழுக்கதே வேலையா வச்சிருக்க!! பேசு போ!” என்றவன் என்ன நினைத்தானோ திடீரென டேவ்வின் கைப்பற்றி நிறுத்திவிட்டு “இரு!” என்று அடுக்களையினுள் நுழைந்தவன் பால் காய்ச்சி வைபவியின் கோப்பையில் நிரப்பி மற்றவனிடம் கொடுத்தான்.

“லவ் யூ அதிப்பா!!” என்று உதட்டை குவித்து முத்தமிடுவதுபோல செய்ய அதிரூபனும் ஒற்றை விரலை காட்டி

“ஓடிரு!!” என்று எச்சரித்து சிரித்தான்.

கையில் ட்ரேயுடன் வந்தவனுக்கு, வைபவியின் அறைவாயிலில் மூடப்பட்டிருந்த கதவுக்கு முன் நின்று தட்ட எத்தனிப்பதும் பின் இரண்டடி திரும்பி செல்வதும் பிறகு மறுபடியும் கதவின் அருகில் வருவதுமாய் இருந்த மனோ கண்ணில்பட அவனையே சுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டு வந்தவன் அவனருகில் வந்தவுடன் அவன் காதருகே சென்று

“இங்க என்ன பண்ற?” என்றான் ரகசியக் குரலில்.

டேவ் அப்படி ரகசியமாய் பேசியதில் காதுமடல்கள் கூசிட இரண்டடி நகர்ந்த மனோ “என்னடா பண்ற??” என

“நீ என்ன பண்ற மனோ?”

“பார்த்தா தெரியல…”

“தெரியாமத்தான் கேக்கறேன்…”

“உன்ன!! அவள கடுப்பேத்திவிட்டது மட்டுமில்லாம சமாதானப்படுத்த வந்தவனையும் கடுப்பேத்தப்பாக்கறீயா நீ!!”

“அடேங்கப்பா!! அப்படியே கடுப்பேத்திட்டாலும்!!” என்றவன் ட்ரேயை இடது கைக்கு மாற்றிவிட்டு கதவு குமிழியில் வலது கை வைக்க அது திறந்துக்கொண்டது.

“தொறந்தா இருந்துச்சு!?” என்று அதிர்ந்த மனோவை கிண்டலாய் பார்த்தவன்

“உன் செல்லம்மா என்னைக்கு கதவ தாழ் போட்றுக்கா?? … அதுவும் சண்டை போட்டா யாராவது வந்து சாமாதனப்படுத்தனும்னே திறந்து வச்சிருக்கும் ஃப்ராட்!” கடைசி வரியை மட்டும் முணுமுணுத்தவன் உள்ளே நுழையப் போன மனோவை தடுத்து

“எங்க போற?”

“ப்ச் பாத்தா தெரியலையா…”

“செல்லம்மா மூஞ்ச தூக்கிட்டா எதுக்கு வந்தோம்ன்றதையே மறந்துறதா??” என்று குறையாய் சொன்ன டேவ்வும் அறிவான் மனோவை பொறுத்தமட்டில் இப்பொழுதும் வைபவி அவன் தோள்மேல் தூக்கிக்கொண்ட அதே நாலு வயது குழந்தைதான் அவனும் அதே இருபது வயது இளைஞன் தான் என.

டேவ் சொன்னதுக்கு பிறகே நினைவு வரப் பெற்றவன், “ஓ… அதெல்லாம் ரெடி டேவ், எப்போ சொல்றியோ ஆரம்பிச்சிடலாம்” என்றான்

“சூப்பர் மனோ!! நீ அதிப்பாட்ட பேசிட்டிரு நான் அவள கூட்டிட்டு வரேன்” என்று உற்சாகமாய் சொல்லும் டேவ், மனோ முதன் முதலாய் பார்த்தப்பொழுது எப்படி இருந்தானோ இப்பொழுதும் அப்படியேதான் இருக்கிறான்.

ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளைப்போலத்தான் அவர்களும் ஒரு வகையில்… அவன் மனோவை வைபவியைப்போலவே மனோ என்றுதான் அழைக்கிறான். அவளது அதிப்பா அவனுக்கும் அதிப்பாதான். சுகராகன் அவனுக்கும் சுகாதான். மேகராகா அவனுக்கும் ராகிதான். ஆனால் அவர்களது நட்பு..!!

டேவ்வின் முடியை கலைத்துவிட்டு மனோ சென்றுவிட “மனோ!!” என்று அடிக்குரலில் அலறிவிட்டு அறையினுள் நுழைந்தான் டேவ்.

பீம் பேகை வாகாய் நடு அறையில் இழுத்துப்போட்டு பால்கனியைப் பார்த்து அமர்ந்திருந்தாள் வைபவி. அவள் அருகில் சென்றவன் கையிலிருந்த ட்ரேயை கீழே வைத்துவிட்டு இடக்கையால் அவளிடம் ஒரு கோப்பையை நீட்டியவாறு தனதை வலக்கையில் பிடித்துக்கொண்டு அவளுக்கு அருகிலிருந்த ரோலிங் சேரை அவள் புறம் திருப்பிப்போட்டு அமர்ந்தான்.

பால்வாசம் நாசியை தீண்ட தன் முன் நீட்டப்பட்டிருந்த கோப்பையை பார்த்தவள் திரும்பி அவனை பார்த்து “அதையும் நீயே குடி!!” என்றாள் எரிச்சல் அடங்காமல்

“பாலெல்லாம் மனுசன் குடிப்பானா!!??”

“அப்பறம் ஏன் அதை கொண்டு வந்த??”

“உன்ன நான் மனுச லிஸ்ட்லையே சேர்க்கலையே”

அமைதியான குரலில் “என் கால் பக்கத்துல உக்காந்துட்டு இப்படி பேசி வெக்காத!!” என்றதுதான் தாமதம் சட்டென இரண்டடி பின்னால் நகர்த்திக்கொண்டான் இருக்கையை.

அவன் செய்கையை கண்டு சிரித்தவளோ, “நீயேன் பக்கீ இப்படி இருக்க!!” என்றாள் ஆதங்கமாய்

“எப்படியிருக்கேன்?? ஹாண்ட்சமாவா?” என்றவனையே கேவலமாய் ஒரு பார்வை பார்த்து வைக்க

“சரி சரி… சொல்லு எப்படியிருக்கேன்?” என்று மாற்றினான்.

“அவன்லாம் ஒரு ஆளுன்னு நான்தான் க்ரஷ்ஷு க்ராஷுனு லூசுத்தனமா இருந்தேன்னா… நீயேண்டா அவனுக்கு போய் ஆல் த பெஸ்ட் சொல்லி பல்ப் வாங்கற!!?? அவன் உன்ட்ட கேட்டானா? இல்லை கேட்டானானு கேக்கறேன்? உன்னபத்தி ஒருத்தன் இப்படி பேசறான்டானு வந்து சொன்னா கொஞ்சமாவது கோவப்படறீயா எரும நீ?? என்னவோ பெரிய இவனாட்டம் சமாதானப்படுத்த ட்ரேய தூக்கிட்டு வர…” என்று பொறிந்து தள்ளியவளின் முன் மறுபடியும் அந்த கோப்பையை நீட்டினான்.

அவள் புரியாமல் விழிக்க, “இந்தா! இதை குடிச்சிட்டு கண்டின்யூ பண்ணு” என்றது தான் தாமதம்.

“என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது?? ச்சை!! இன்னும் நல்லா கேட்டிருக்கனும் அவன!! ராஸ்கல்!! பரதேசி!! பண்டாறம்!! அவன…” என்று திட்ட வார்த்தை கிடைக்காமல் திணறியவளைக் கண்டு சிரிப்பு வர