மேகதூதம்14

மேகதூதம்14

                                        மேகதூதம் 14

 

ரிஷி நிஜமாவே உங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கா?” அஞ்சலி அர்த்தத்துடன் கேட்க,

“நீயும் இத தான சொல்ல வந்த?”

“ம்ம்..ஆனா நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க, உங்க அம்மாவை இப்படி சொல்றேன்னு” தயங்கித் தயங்கி பேசினாள்.

“ச்சே .. உன்ன நான் எதுக்கு தப்பா நினைக்கப் போறேன். நீ என்கிட்ட வந்து என்ன நடந்ததுன்னு சொல்லலனா இப்போ வரைக்கும் முட்டாள் மாதிரி எங்க அம்மா சொன்னத நம்பிக்கிட்டுத் தான் இருந்திருப்பேன்.

இந்த நாலு வருஷமா என்னை முட்டாள் மாதிரி ஆக்கிட்டாங்கன்னு எனக்கு அவங்க மேல கோவமா வருது. அப்படி என்ன தப்பு இதுல. வெய்ட் வெய்ட்..

எனக்கு இப்போ தான் புரியுது. அம்மா அவங்க ப்ரெண்டோட பொண்ண கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ரெண்டு மூணு தடவ என்கிட்டே கேட்டாங்க. அதுக்காகத் தான் என்னோட காதல அவங்க நிராகரிச்சாங்களா? ஒருவேளை அவங்க எண்ணமே இது தானோ. ஓ ஷிட்….

எப்படி ஏமாந்தேன்.!” தலையில் கை வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டான்.

“என்ன ரிஷி சொல்றீங்க? உங்க அம்மாவோட ப்ரென்ட் பொண்ண உங்கள கல்யாணம் பண்ணிக்க பேசிருக்காங்களா?” வருத்தம் கண்ணில் மின்னக் அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“நீ நினைக்கற மாதிரி இல்ல அஞ்சு. என்கிட்டே ஒரு டூ த்ரீ டைம்ஸ் கேட்டாங்க. நான் என்னால முடியாதுமா ன்னு சொல்லிட்டேன். எங்க என்னை போர்ஸ் பண்ணா நான் கண்டு பிடிச்சுடுவேனோன்னு சைலெண்ட்டா மூவ் பண்ணிருக்காங்க. பெத்த மகனோட விருப்பத்தைக் கூட பார்க்காம அப்படி என்ன அவங்க கவுரவம் பெருசா இருக்கு? இத நான் விட மாட்டேன். கன்பார்மா எங்க அம்மா தான் இந்த வேலைய செஞ்சாங்கன்னு தெரியட்டும். அப்புறம் நடக்கற கதையே வேற!” ஆத்திரமாக கத்திக் கொண்டிருக்க,

அந்த நேரம் அவனது செல் மீண்டும் ஒலித்தது.

அந்த எண்ணைப் பாத்துவிட்டு அவசரமாக எடுத்தான்.

“எஸ்…சொல்லுங்க.”

“சார் அவரோட நம்பர் கெடச்சிடுச்சு.. நோட் பண்ணிக்கோங்க” மறுபறம் சொல்ல,

டேபிளில் இருந்த நோட்பேடில் நம்பரைக் குறித்துக் கொண்டான்.

“தேங்க் யூ சோ மச்..” என இணைப்பைத் துண்டித்தான்.

உடனே எழுதிய எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.

அது முன்பு அஞ்சலி பற்றி விசாரிக்கச் சொன்ன டிடேக்டிவின் எண்.

அவனும் ரிஷி அவனுக்குத் தொடர்பு கொள்வான் எனத் தெரியாமல் உடனே போனை எடுத்தான்.

“ஹல்லோ..”

“நான் ரிஷிகேஷ் பேசறேன். எப்படி இருக்கீங்க சதீஷ்? என்னை ஞாபகம் இருக்கா…!”  குரல் சற்று காட்டத்தைக் காட்டத் தான் செய்தது.

“சார்..நீங்க.. நீங்க..எப்படி இருக்கீங்க?” முதலில் நடுங்கினாலும் பின்பு சாதாரணம் போலக் காட்டிக் கொண்டான்.

“நான் நல்ல்லா இருக்கேன். அப்புறம் ஒரு விஷயம் எனக்குத் தெரியனும். உண்மைய சொன்னா உங்களுக்கு நல்லது.” மிரட்டவே ஆரம்பித்தான்.

“சார் உங்க கிட்ட நான் பொய் சொல்வேனா? சொல்லுங்க..” ரிஷியைப் பற்றி நன்றாகவே அவனுக்குத் தெரியும். அவனிடம் வம்பு செய்த வாசுவை எப்படித் தாக்கினால் தகும் என்பதை அறிந்து தாக்கியவன். ஊர் விட்டு ஊர் வந்த தன் செல் நம்பரை சுலபமாகப் பிடித்தவன் எதையும் செய்வான்.

“அஞ்சலி பத்தி ரிப்போர்ட் கொடுத்தீங்களே.. அது உண்மையா பொய்யா..?” நேரடி தாக்குதல்.

“சாரி சார். என்னை எதுவும் செஞ்சுடாதீங்க. நான் கொடுத்த ரிப்போர்ட் நூறு சதவீதம் உண்மையான ரிப்போர்ட். ஆனா…” அவன் தாயை காடிக்கொடுக்கிறோமே என்ற எண்ணத்தால் தயங்க,

“ஆனா…!” குரலிலேயே அவனை பயம் கொள்ள வைத்தான்.

“ஆனா, சார்.. உங்க அம்மா தான். வேற ஒருத்தர ஏற்பாடு பண்ணி, அந்த பொண்ணு மாதிரி உங்க கிட்ட பேசவெச்சாங்க. என்னையும் இதத் பத்தி வெளிய சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல சார். என்னை விட்ருங்க.” நேரில் இருந்தால் காலிலேயே விழுந்திருப்பான். அவ்வளவு கெஞ்சல்.

அவன் உறுதிப்படுத்தியதும் ரிஷியின் கண்கள் கோவத்தில் சிவந்தன.

பதில் ஏதும் சொல்லாமல் செல்லை அணைத்தான்.

போனை விட்டெரிந்தவன் கண்களில் நீர் துளிர்க்க,

அருகில் இருந்த அவளை தேடி அணைத்தான்.

“அஞ்சு! ஐ அம் சாரி டி. உன்ன இத்தனை நாள் வேதனைல தள்ளினது நான் தான். என்னை மன்னிச்சிடு டி. என் அம்மா இப்படி ஒரு வேலைய  செய்வாங்கன்னு நான் கனவுல கூட நினைக்கல. அவங்க எண்ணம் அப்போவே தெரிஞ்சிருந்தா நானே நேர்ல வந்திருப்பேன். இத்தனை வருஷம் உன்ன கஷ்டப்பட விட்டிருக்க மாட்டேன்.” அவள் தோளில் சாய்ந்து கலங்க,

“ரிஷி! ப்ளீஸ்.. அதெல்லாம் விடுங்க முடிஞ்சு போச்சு. இனிமே ஆகா வேண்டியத பார்ப்போம். உங்க அம்மா கிட்ட பேசுங்க. அவங்கள சம்மதிக்க வைப்போம்.” அவன் முதுகை வருடியபடி கூற,

“வாட்.?” அவளை தள்ளி நிறுத்திப் பார்த்தான்.

“என்ன சொன்ன.. அவங்க கிட்ட சம்மதம் வாங்கனுமா? எதுக்கு?” புருவத்தை உயர்த்தி அவளைப் பார்க்க,

“என்ன எதுக்குன்னு கேட்கறீங்க? நம்ம கல்யாணத்துக்கு தான்.” அவன் எண்ணம் புரியாமல் அவள் கூற,

“ஹ்ம்ம்.. கனவுல கூட அவங்க சம்மதம் நான் வாங்க மாட்டேன். என்னை முட்டாளாக்கி வேடிக்கைப் பார்த்தவங்க கிட்ட நான் சம்மதம் வாங்கனுமா. ரிஷி ஒன்னும் அவ்வளோ நல்லவன் இல்ல.” இருபுறமும் கையை நீட்டி சோம்பல் முறித்தான்.

இது என்ன பேச்சு ரிஷி. அவங்க உங்க அம்மா.” அவனுக்கு எடுத்துரைத்தாள்.

“அந்த நெனப்பு அவங்களுக்கு இல்லையே. அவங்க ரத்தம் தான எனக்கும் ஓடுது. அப்போ நானும் இப்படி யோசிக்கறதுல என்ன தப்பு.” எங்கோ பார்த்தபடி உறுதியாகக் கூறினான்.

“நோ ரிஷி. திஸ் இஸ் நாட் ஃபேர்” கையைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

“நான் உன்னை ஒரு கேள்வி கேட்கட்டா அஞ்சு.?”

“வெரி வெல்” அமோதிப்பாக தலையசைத்தாள்.

“உங்க அப்பா இப்போ வந்தா நீங்க அவர ஏத்துப்பீங்களா? உங்க அம்மாவை கூட விடு, நீ ஏத்துப்பியா?” சரியாக நாடியைப் பிடித்தான்.

 

ஒரு நொடி அவள் ஆடித்தான் போனாள்.

அவளின் முகமாற்றத்தை உணர்ந்தவன்,

“சொல்லு பேபி. நீ ஏத்துப்பியா?” அவள் எதிரே வந்து நின்றான்.

“அவர் எங்கள சின்ன பசங்கன்னு கூட பாக்காம விட்டுட்டு போய்ட்டாரு. எங்க வாழ்க்கை நல்லா இருக்குமா இருக்காதான்னு கூட யோசிக்கல. இப்போ மட்டும் என்ன வந்துச்சு. கண்டிப்பா நான் ஏத்துக்க மாட்டேன்.” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஏன் , என்ன இருந்தாலும் அவர் உன் அப்பா தான?” அவள் சொன்னதை அவளுக்கே திருப்பினான்.

“அதுக்கு ஏத்த மாதிரி அவர் நடந்துக்கல. அப்பறம் என்ன அப்பா.. நொப்பா..” எரிச்சல் உண்டானது.

“அப்பறம் என்னோட அம்மாவும் என் வாழ்க்கை நல்லா இருக்குமான்னு யோசிக்கமா செஞ்ச இந்த விஷயத்தை நான் எப்படி ஏத்துக்கறது? அம்மா வா இருந்து செய்யவேண்டியத செய்யாம போனவங்க சம்மதத்தை நான் மட்டும் ஏன் எதிர்ப்பார்க்கனும்? சொல்லு அஞ்சு…” அமைதியாக அவளிடம் கேட்டான்.

 

“இது வேற அது வேற ரிஷி. புரிஞ்சுக்கோங்க. உங்கள அவங்க அம்போன்னு விட்டுட்டு போகல. உங்களுக்கு நல்லது செய்யணும்னு நெனச்சு தான…” அவன் உருத்து விழிக்க பேச்சை நிறுத்தினாள்.

“அதுக்கு என்னை ஏமாத்தணுமா. ஒன்னும் தெரியாத பையனா நான். சொந்தமா பிசினெஸ் ஆரம்பிச்சு நாலு வருஷத்துல நாலு எடத்துல வியாபாரம் பண்றேன். என்னையே சுலபமா முட்டாளாக்கினவங்களுக்கு, என் திமிர காட்ட வேணாமா? ” ஏதோ முடிவு செய்ததைப் போல சொல்ல,

“இப்போ என்ன பண்ணப் போறீங்க ரிஷி.?” அவளுக்குப் பதட்டம் தொற்றிக் கொண்டது. அவளது பட்டத்தைக் கண்டவன், “கூல் பேபி. நீ ஏன் டென்ஷன் ஆகர.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. நான் என்னோட விருப்பத்தை நிறைவேத்திபேன் யார் சம்மதமும் இல்லாம. தட்ஸ் ஆல்.” புன்னகைத்தான்.

அவளுக்கு அன்றிரவு தூக்கம் போனது.

‘இது சரியா தவறா? பெற்றோரிடம் சொல்லாமலலே திருமணம் செய்து கொள்வானா? அப்படிச் செய்தால் கடைசிவரை அவனது பெற்றோரின் கோபம் என் மேல் தானே திரும்பும். பேசாம அம்மாவை அவங்ககிட்ட பேச சொல்லலாமா? ஸ்ஸ்… அதுக்கு முன்னாடி அம்மாக்கிட்ட நாம இன்னும் ரிஷிய பத்தி சொல்லவே இல்ல. அம்மா வேற போன் எடுக்கலயே.. ட்ரை பண்ணிப் பார்ப்போம்.’ தன் செல்லைக் கையில் எடுத்தாள்.

காமாட்சியின் போன் இரண்டு முறை அடித்து ஓய்ந்தது.

‘ஏன் அம்மா போன் எடுக்கல. என்ன ஆச்சு.. ஒரு வேளை உடம்பு எதுவும் சரி இல்லையா’ பயந்தவள் உடனே பிரபுவின் எண்ணிற்கு அழைத்தாள்.

முதல் ரிங்கிலேயே எடுத்தான்.

“அஞ்சலி..எப்படி இருக்க?” அவளின் நலம் விசாரித்தான் தம்பி.

“நான் நல்லா தான் டா இருக்கேன். அம்மாக்கு என்ன ஆச்சு? ஏன் போன் பண்ணா எடுக்கல? உடம்புக்கு ஒன்னுமில்லையே?” வருசையாகக் கேட்க,

“அது.. அம்மா ..” சொல்லலாமா வேண்டாமா என தடுமாறினான்.

“என்ன டா? லோ பிபி யா?” அடிக்கடி காமுவிற்கு லோ பிபி யால் தலை சுற்றல் வரும் என்பதை யோசித்துக் கேட்க,

“ஆங்… இல்ல இல்ல..” மென்று முழுங்கினான்.

“என்ன தான் டா பிரச்சன சொல்லித் தொல. எதுவா இருந்தாலும் சொல்லு. நான் இங்க இருந்துட்டு அங்க என்ன நடக்குதுன்னு பயந்துட்டே இருக்கனுமா? பிரபு சொல்லு டா” உள்ளத்தில் பயம் அதிகரித்தது.

“ஹே! நீ ஏன் பயபட்ற..அம்மா ஹெல்த் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா…”

“அப்பறம் என்ன..?” சிறிது நிம்மதி வந்தது.

“அது.. திடிர்னு நேத்து.. நம்ம அப்பா வீட்டுக்கு வந்துட்டாரு.” ஒரு வழியாக சொல்லியே விட்டான். அவனுக்கும் மறைத்து வைக்க முடியவில்லை.

“வாட்..? என்ன டா சொல்ற.. அந்தாளு எதுக்கு இப்போ வந்தான். என்ன வேணுமாம் அவனுக்கு?” கத்தி கூச்சல் போட்டாள்.

இவள் போட்ட சத்தத்தில் என்னவாயிற்றோ என பயந்து அடுத்த ரூமிலிருந்த ரிஷி ஓடிவந்தான்.

“ஹே அஞ்சலி.. கத்தாத. அம்மா கிட்ட வந்து மன்னிப்புக் கேட்டாரு. மறுபடியும் என்னை ஏத்துக்கோன்னு கெஞ்சறாரு. அம்மா முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஆனா நீ ஏத்துக்கற வரைக்கும் நான் வந்து கெஞ்சிட்டே தான் இருப்பேன்னு சொல்லிட்டு போயிருக்காரு.

அவர் டெல்லில பெரிய ஆளாம் இப்போ. பணம் சம்பாதிக்க தான் போனேன். வேற எதுக்கும் இல்ல. உன்னை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணலன்னு சொல்லி அம்மாவை கன்வின்ஸ் பண்ண பாத்தாரு.

அம்மா, முடியவே முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. மறுபடியும் இன்னிக்கு வீட்டுக்கு வருவாருன்னு நெனைக்கறேன்.” நடந்தவற்றை சொல்லி முடித்தான்.

“ என்ன மனுஷன் டா அவன். பணம் சம்பாதிக்க குடும்பத்தை அம்போன்னு விட்டு போயடுவானாம், நாம செத்தோமா இல்ல வாழ்ந்தோமா ன்னு கூட கவலை படாம போயிட்டு இப்போ காலம் போன கடசில இவர நாம அப்பான்னு சொல்லி பாத்துக்கனுமா.?

சம்பாதிச்ச பணத்த வெச்சு வாழ வேண்டியது தான. ச்சை..

இருக்கறவங்கள நிம்மதியா இருக்க விடமாட்டான் போல.” சரமாரியாக வாய்க்கு வந்ததை சொல்லி பொரிந்து கொட்டினாள் அஞ்சலி.

“அஞ்சலி. நீயும் நானும் முடிவெடுக்க ஒண்ணுமில்ல. இதுல முழுக்க முழுக்க பாதிக்கப் பட்டது அம்மா தான். அவங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்.” பிரபு எடுத்துரைத்தான்.

“நோ வே டா. அம்மா கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க. அப்படி ஒரு வேளை அவங்க ஏத்துக்கிட்டாலும் நான் ஏத்துக்க மாட்டேன். எனக்கு அந்தாள புடிக்கவே இல்ல.

இந்த மாறி ஆம்பளைங்க இருக்கறதுனால தான் பொம்பளைங்க பல பேரோட ஏச்சு பேச்சுக்கு ஆளாகறாங்க.

இதே நம்ம அம்மா இப்படி போயிட்டு பத்து வருஷம் கழிச்சு வந்தா இவரு ஏத்துப்பாரா? இல்ல இந்த ஊர் உலகம் தான் சும்மா இருக்குமா? அவள நம்ம்புமா? ஆம்பள என்ன வேணா செய்யலான்னு திமிரு. நினைக்கவே வெறுப்பா இருக்கு..

சரி இந்தாளுக்காக அம்மா ஏன் போன் எடுக்காம இருக்காங்க?” விட்ட இடத்திற்கு மீண்டும் வர,

“அம்மா ரொம்ப வருத்தமா இருக்காங்க. நேத்து சமச்சதோட சரி. அப்பறம் அவங்க எந்த வேலையும் செய்யல. இன்னிக்கு கூட சுவிக்கி தான் பண்ணேன். பழசெல்லாம் நினச்சு ஃபீல் பண்றாங்கன்னு நினைக்கறேன்.

அவங்களே சரி ஆயிடுவாங்க. நீ எனக்கு போன் பண்ணு. அவங்களே அப்புறம் உனக்கு பண்ணுவாங்க. சரியா.

நீ இதெல்லாம் நினைச்சு கவலை படாத. அம்மா பாத்துப்பாங்க. நீ தூங்கு. உனக்கு டைம் ஆகுது.” வைத்துவிட்டான்.

அத்தனை நேரம் அஞ்சலியின் கோபத்தையும், அவளுக்கு அவள் தந்தை மீதுள்ள வெறுப்பையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ரிஷி.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!