மை ஸ்வீட் ஹேட்டர் 5

அத்தியாயம் 5:

             “நீயாஆஆஆ?” என்று அதிர்ச்சியில் கூவியவாறு தனதருகிலிருந்த நாற்காலியில் தொய்ந்து போய் அமர்ந்தான் விஜய் தேவ்கன்.

அவனது தொய்வைப்பார்த்து முண்டியடித்துக்கொண்டு வந்த கோவத்தை இரு கரங்களையும் ஒன்றோடுன்று கோர்த்து கட்டுப்படுத்தியவாறு அவனைப் பார்த்து முறைத்தாள் ஜீவிதா.

விஜயிற்க்கோ ஐயோ என்றிருந்தது. இந்த பெண்னை சந்திக்கும் போதெல்லாம் தன் வாழ்வில் நிகழ்ந்த அனர்த்தங்களை நினைத்துப் பார்த்தவனுக்கு அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்று நிஜமாகவே பயம் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

“நீ இங்கே என்ன டி பண்ற?”

“ம்ம்… ஸ்டாலின் சார் தர்ற கொரானா நிதி ரெண்டாயிரம் இங்க கொடுக்கிறாங்கன்னு சொன்னாங்க. அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்.”

“அதெல்லாம் குடும்ப தலைவிக்கு தானே தவிர நரியோட நாத்தனார் பொண்ணு இனத்துக்கு எல்லாம் இல்லையே…”

“ஓஹ். உன்னை மாதிரி அழிந்துப்போன டைனசரஸ் தங்கச்சி பையன் இனத்துக்கே தரும்போது நரி குடும்பத்துக்கும் கொடுப்பாங்க மேன்.  என்னை எல்லாம் அடையாளம் தெரியுதுங்களா இந்த தி கிரேட் ஹீரோ சார்க்கு…” என்று ஜீவிதா பயங்கர நக்கலாக கேட்க,

          அவளை மேலிருந்து கீழ் ஒருமாதிரி அசூசையாக பார்த்தவன் “ஓரு வாரத்துல நீ எதுவும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு உன் மூஞ்சியை மாத்திட்டியா என்ன அடையாளம் தெரியாம போக? ”

“ஹான். அப்படில்லாம் இல்லை என்னை தெரியாத மாதிரி சீன் போடுவீயோன்னு நினைச்சேன்.”

“ஏதே உன்னை தெரியாத மாதிரி இருக்குறதா? யாராச்சும் தன் வாழ்க்கையோட பீடையை தெரியாத மாதிரி நடிக்க முடியுமா சொல்லு? பார்த்தவுடனே தெறிச்சு ஒடனும். ஆனால் உன்னை ஒவ்வொரு தடவையும் பார்க்குறப்ப இந்த மாதிரி தப்பிச்சே போக முடியாத சிட்சுவேசன்ல தான் பார்க்குறேன். என்னை பிடிச்ச பீடை டி நீ! வாழ்க்கையில மொத்தமே உன்னை மூணே மூனு தடவை தான் பார்த்திருக்கேன். ஆனால் நீ வந்துட்டு போன பின்னாடி என் வாழ்க்கையில நடந்த கொடுரம் எல்லாம் வேற லெவல்… எட்டு வருசத்துக்கு முன்னாடி மட்டும் நீ உன் மொக்கை மூஞ்சியை தூக்கிட்டு இந்த சென்னைக்கு வராம இருந்து இருந்தா என் வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும்…” என்ற விஜய்,

 ஜீவிதா அவனது வாழ்வில் எதோ ஒரு புள்ளியில் கிராஸ் செய்ததினால் உண்டான பட்டர்பிளை விளைவினால் நடந்த விரும்பதகாத விசயங்களை நினைத்து வெதும்பி, இப்பொழுது இவளை சந்தித்து இருப்பதால் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற பயத்திலும் மிதமிஞ்சிய வெறுப்பிலும் பேசினான்.

“ஹே அதை ஞாபகம் படுத்தாதே… நீ எல்லாம் ஒரு மனுசனா? மிருகம். ஒரு பன்னிரண்டு வயசு பொண்ணுக்கிட்ட நடந்துக்குற மாதிரியா நீ எங்கிட்டஅன்னைக்கு நடந்துக்கிட்ட?” என்று ஜீவிதா எகிற,

“நிறுத்து டி… ஒரு பன்னிரண்டு வயசு பொண்ணு மாதிரியா டி நீ நடந்துக்கிட்ட? என்னை சொல்ல வந்துட்டா… ஐயோ முருகா… இந்த முலாப்பழம் மூஞ்சிக்கூட எல்லாம் என்னை கோர்த்து விடுறீயே உனக்கு அறிவே இல்லையா?”

“டேய் விடியா மூஞ்சி… செத்த டா நீ…” என்று தனது கையிலிருந்த ரோஜா பூகொத்தை அவனை நோக்கி எறியப்போக,

“ஹாய் டார்லீஸ்…” என்று தீடிரென்று கேட்ட மனதை மயக்கும் இயந்திர குரலில் ஜீவிதா நிகழ்த்தவிருந்த நிகழ்வு தடைப்பட்டு அவளது உயர்ந்த கரம் ரோஜாபூங்கொத்துடன் அந்தரத்தில் நின்றது.

“ஹாய்…” என்று இருவரும் குழப்பமான முகத்துடன் சுற்றிமுற்றி பார்வையை சுழற்றியவாறு கூற,

“வெல்கம் விஜய் தேவ்கன் அண்ட் ஜீவிதா…”என்று வரவேற்ற குரல் அவர்களை வந்து லிவ்விங் எரியாவில் உள்ள LED திரையின் முன்  அமரச்சொன்னது. இருவரும் அந்த குரலுக்கு கட்டுப்பட்டு அங்கிருந்த நீண்ட சோபாவில் விஜய் ஒரு முனையிலும் ஜீவிதா ஒரு முனையிலும் அமர்ந்தனர்.

“என் பெயர் கியூபிட்….”

“யூ மின் மன்மத ராசா???”

“ஹா ஹா ஹா… ஆமாம் ஜீவிதா”

“ஓஹ்.. பிக்பாஸ் மாதிரி நீங்க தான் எங்களுக்கு இன்ஸ்டரக்ஷன்ஸ் (instructions) கொடுப்பீங்களா மன்மத ராசா?.”

“ஆமாம் ஜீவிதா. ஆனால் நான் என் அண்ணன் பிக்பி மாதிரி இன்ட்ரோவட்(introvert) கிடையாது. எக்ஸ்ட்ரோவட் (extrovert) .”

“என்னது பிக்பியோட தம்பியா நீங்க மன்மதராசா?” என்று வாயைப் பிளந்தவாறு ஜீவிதா கேட்க, இது எதடா பைத்தியம் என்பது போன்று அவளை எரிச்சலாக பார்த்தான் விஜய்.

“ஹாஹாஹா… ஆமாம் ஜீவிதா…”

“நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க. உங்க குரல் ப்பாஆஆஆ….” என்று ஜீவிதா மானவாரியாக வழிய, விஜய் வெறுத்தே விட்டான்.

“க்ர்ர்… படுத்துறானுங்களே… கம்ப்யூட்டர் வாய்ஸ்ஸைக்கூட விட்டுவைக்காம கடலைப் போடுற காஜி ப்ரோ மேக்ஸ்க்கிட்ட(kaaji promax) போய் என்னை கோர்த்து விட்டு இருக்கீங்களே டா பாவிகளா…” என்று வாய்விட்டே புலம்பினான் விஜய்.

விஜய் தேவ்கன் என்று ஒரு உருவம் இருக்கிறது என்று கண்டுகொள்ளதவாளா அவனது குரலை கண்டுக்கொள்ளப் போகிறாள். நோ சான்ஸ்…

“நீங்க சிங்கிளா, கமிட்டடா? ”

“நீங்க எந்த ஊரு மன்மத ராசா?”

“உங்க ஹைட் எவ்வளவு?”

“உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறாங்க?

 உங்களுக்கு நான் வைச்ச மன்மதராசா அப்படின்ற பெயர் பிடிச்சிருக்கா?

என்னை இனிமேல் ஜீவின்னு கூப்பிடுறீங்களா?

எனக்கு கஷ்டமான  டாஸ்க் எதுவும் கொடுக்க மாட்டிங்க தானே?

ப்ளீஸ் நான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டா மட்டும் நாய் குலைக்குற சவுண்ட் போடாதீங்க. என்னை ஜீவின்னு கூப்பிடுங்க போதும்… ஆனால் இவனுக்கு பத்து பதினைந்து நாய் ரோட்டுல சண்டை போடும்ல அந்த ஆடியோ போடுங்க… போடுவீங்க தானே? ” என்று விடாது கேள்விகளை கேட்டு தள்ளிக்கொண்டிருந்தாள் ஜீவிதா. இத்தனைக்கும் கியூபிட் எதற்கும் பதிலே சொல்லவில்லை என்பதைவிட இவள் சொல்ல நேரமே கொடுக்கவில்லை.

இன்னும் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு இடைவேளையே இல்லாமல் என்ன என்னமோ கேள்விகள் கேட்டுக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருந்தாள் தனியாக.

அப்பொழுது தான் உணர்ந்தாள் தான் மட்டுமே தனியாக பேசிக்கொண்டிருப்பதை, திரும்பி விஜய்யை பார்க்க அவனோ சோபாவில் இருக்கும் குட்டி தலையணையில் தலையை வைத்து கால்களை இவள் புறம் நீட்டி தனது கைகுட்டையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்கியே விட்டிருந்தான் பாவி.

“அடப்பாவி… நிஜமாவே தூங்கிட்டானா?” என்றவாறு அவனது முகத்தருகில் குனிந்து பார்க்க உண்மையாகவே தூங்கி விட்டிருந்தான் விஜய். அவனின் மீது அலகேசன் வந்ததிலிருந்து பொட்டு தூக்கம் கூட வராமல் தத்தளித்துக்கொண்டிருந்தான். ஜீவிதாவின் இடைவிடா குரல் அவனுக்கு தாலாட்டு போன்று இருந்திருக்கும் போல் தூக்கிவிட்டிருந்தான்.

“மன்மத ராசா… சீ… இவன் தூங்கிட்டான் பாருங்க. நான் சொன்ன மாதிரி இவனை எழுப்பிவிடுங்க…” என்று கூற இவள் பேசிய பேச்சிற்கு அவளது மன்மதராசாவே தூங்கிருப்பார் போன்று. எந்த சத்தமும் வரவில்லை.

உடனே ஒரு கேமராவிற்கு அருகில் சென்றவள் “மன்மத ராசா என்ன பண்றீங்க? நீங்களும் தூங்கிட்டிங்களா? உங்க அண்ணன் மாதிரி நீங்க இல்லை. அவர் செம ஸ்ட்ரிக் ஆபிஸர். நீங்க ஒரு சிரிப்பு போலீஸ்… ப்ளீஸ் ப்ளீஸ் சவுண்ட் போடுங்க அவன் தூக்கத்துல அலறி எந்திரிக்கிறதை பார்க்கனும். அந்த ரியாக்ஷன் செம மீம் மெட்டரியலா இருக்கும் ப்ளீஸ் ப்ளீஸ்…” என்று கேவலமாக ஜீவிதா கெஞ்ச ஆரம்பிக்க, விட்டால் மீண்டும் ரொம்ப பேசுவாளோ என்று பயந்தோ என்னமோ,  இடைவிடாத முத்தங்கள் கொடுக்கும் போது எழும் பல இச் சத்தங்கள் ஒன்றாக கேட்க ஆரம்பித்தது.

“மன்னு யூ நாட்டிபாய்…” என்று சத்தமாக சிரித்தவாறே ஜீவிதா விஜயின் அருகில் செல்ல, அவனோ திடீரென்று விடாமல் ஒலித்த இச் சத்தத்திலும் ஜீவிதாவின் பயங்கரமான சிரிப்பொலியிலும் அரண்டு எழுந்து சுற்றும்முற்றும் பார்க்க, அவளுக்கு விஜயின் அரண்ட முகத்தைப் பார்த்து சிரிப்பு அதிகமாக விஜய் அவளை திகிலாக பார்த்தான்.

விஜய் விழித்த சில நொடிகளிலே இச் ஒலி நிற்பாட்டிருக்க, இவளது சிரிப்பு மட்டும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

“ஏம்மா பரதேவதை… சிரிக்கிறத நிப்பாட்டுமா… ஏன் இப்படி பேய் மாதிரி சிரிச்சிக்கிட்டு இருக்க? லூசு… சிரிக்குறதை நிப்பாட்டு டி. நிஜமாவே பயந்து வருது…” என்று கூற, 

ஜீவிதாவிற்கு ஏனோ சிரிப்பை நிற்பாட்டவே முடியவில்லை. அவன் அரண்டு எழுந்த தோற்றம் தான் அவளது மண்டைக்குள் மீண்டும் மீண்டும் ரிவைண்ட் ஆகி அவளுக்கு சிரிப்பை வரவழைத்துக்கொண்டிருந்தது.

“உன்னை…” என்று பற்களை கடித்துக்கொண்டு கூறியவன், அவளை நெருங்கி ஜீவிதாவின் இடையை வலக்கரம் கொண்டு இறுக்கியவாறு இடதுகையால் அவளது வாயை மூட , அவளது உடல் செய்தி அனுப்பி மூளை புரியவைத்த விசயம் அவளது சிரிப்பு அப்படியே சுவிட்ச் போட்டதுப்போன்று நின்று விட்டது.

அதன்பிறகு தான் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் என்று விஜயிற்கு புரிய ஆரம்பிக்க தன்னை தானே நொந்துக்கொண்டான்.

ஏற்கனவே அலகேஷனில் நொந்து நூடுல்ஸாகி தான் இங்கு வந்திருக்கிறோம். வந்த முதல் நாளே அவளை பிடித்து என்று நினைக்கும் போது தான், தான் பிடித்து இருப்பது ஜீவிதாவின் இடை என்று ஞாபகம் வர சட்டென்று கையை உருவிக்கொண்டான். ஆனால் இன்னும் வாயிலிருந்து கையை எடுக்கவில்லை.

விஜய் இடையிலிருந்து கையை எடுத்தவுடனே தன் வாயிலிருக்கும் கையை தட்டிவிட்டவள் தனது பெரிய கண்களை இன்னும் பெரிதாக்கி அவனை முறைத்தாள்.

அதில் விஜயிற்கு, ‘இன்னொரு சூப்பர் மாடல் குற்றசாட்டா என் இடுப்பை பிடிச்சான்னு, சேரா அப்பா தாங்குவாறு. என்னால முடியாது மா… ’ என்று யோசனைகள் ஒட வாய் தானாக அவளிடம் மன்னிப்பு கேட்க ஆயத்தமாக அவள் பேசிய வார்த்தைகள் அதற்கு அவசியமில்லாமல் ஆக்கிவிட்டது.

“அட அறிவுக்கெட்டவனே. உனக்குலாம் மூளைன்ற ஒரு வஸ்து இருக்கா இல்லையா? எந்த கையால டா வாயை மூடுற? லெப்ட் கைய போய் என் வாய்ல வைக்குற… ச்சீ… ச்சீ.. பரதேசி நாயே…”என்று அவனை திட்டியவாறே குளியலறை நோக்கி சென்றாள் ஜீவிதா.

அவனுக்கு அப்பாடா என்றிருக்க அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மீண்டும் அங்கேயே அமர்ந்து விட, சில நிமிடங்களில்  ஜீவிதா வந்து சேர்ந்தாள்.

அவள் வந்தவுடனே ஒரு நீண்ட பர்சர் அலாரம் அடிக்க சமயலறை பக்கத்திலிருந்த அறை திறந்துக்கொண்டது. அங்கு சென்றுப் பார்க்க அவர்கள் இருவருக்குமான இரவுணவு அவர்களூடைய துணிமணிகள் அடங்கிய பைகள் மற்றும் அவர்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய அடிப்படை பொருள்கள் என்று வந்திருக்க இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் எடுத்துக்கொண்டு சென்றனர்.

இரவுணவை அவர்களாக ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் திரிந்தனர். இரவு பத்துமணிப் போல விளக்கு அணைக்கப்பட தூங்க சென்றனர்.

இதெல்லாம் கேமராவில் பார்த்துகொண்டிருந்த பூஜா, கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவர்களின் குழுவிற்கு என்னடா இது என்பது போன்று இருந்தது.

அவர்கள் முன்பே தெரிந்தவர்கள் என்பது பூஜாவிற்கே புதிய செய்தி தான். அதனால் அந்த நிமிடங்கள் சுவாரசியமாக இருந்தது. அதற்கு பிறகு ஒருவருக்கொருவர் கண்டுக்கொள்ளமால் இருந்தது இவர்களுக்கு பிடிக்கவில்லை. இப்படி போனால் டிஆர்பி எப்படி வரும் என்பது அவர்களது கவலை.

“ஏன்ன பூஜா? இவங்க இப்படி இருக்காங்க? இந்த பொண்ணுக்கு தான் எதுவும் தெரியாது. இண்டஸ்டரிக்கு புதுசு. அதுக்கூட கொஞ்சம் கண்டெண்ட் கொடுத்ததுப் போல. இவன் என்ன மண்ணு மாதிரி இருக்கான்? இத்தனை வருசம் இருந்து என்ன கத்துக்கிட்டான்?” என்று கார்த்திக் பொரிந்து தள்ள , பூஜா அவனை பரிதாபமாக பார்த்தாள்.

“இப்படியே விட்டா ஷோ வேஸ்ட். இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருக்குற மாதிரி ஸ்கிர்ப்ட் எழுதுங்க. நாளையில இருந்தே டாஸ்க் எல்லாம் ஆரம்பிச்சிருங்க.”

“சரிங்க சார். இரண்டு நாளைக்கு அப்புறம் வைக்கவிருந்த லக்சரி டாஸ்க் எல்லாம் நாளைகே ஆரம்பிச்சிரலாம். நான் ஆர்ட் டிப்பார்ட்மெண்ட்கிட்ட சொல்லுறேன் போய்…” என்று கூறியவாறு பூஜா கிளம்ப எத்தனிக்க,

“பூஜா ஒரு நிமிஷம்… அவங்க ஏற்கனவே மீட் பண்ணி இருக்காங்க அப்படி தானே பேசிக்கிட்டாங்க?”

“ஆமாம் சார். எனக்கு கூட இந்த விசயம் தெரியாது. பிராடு எங்கிட்ட சொன்னதே இல்லை…”

“ம்ம்ம்… அது எப்ப?எப்படின்னு? தெரிஞ்சுக்க மக்கள் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க.”

“யெஸ் சார். நாளைக்கே ஒரு டாஸ்க் கொடுத்து அதை சொல்ல வைச்சிரலாம்…”

“நோ… நோ… ஒன் வீக்கிட்ட ஆகட்டும் முழுசா தெரிய… ஆனால் அதோட ஹைப் பெரிசாகுற மாதிரி டாஸ்க் வரனும். அண்ட் ப்ரோமோ இருக்கனும். அப்புறம் ஃபேஸ்புக் மீம் பேஜ் எல்லாத்துக்கும் பே பண்ணி மீம் போட சொல்லுங்க.” என்று கூறியவாறு அவன் வெளியேற, பூஜாவும் நாளைக்கு தேவையானவற்றை செய்ய சொல்ல கிளம்பினாள்.

 எடிட்டிங்க் டீம் தங்களது வேலையை ஆரம்பித்திருந்தது.

நாளை இரவு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதாக ஏற்பாடு. அதனால் தங்களது வேலையை ஆரம்பித்திருந்தனர்.