மோகனங்கள் பேசுதடி!8(1)

விஷ்வோடு நேரத்தை கழித்த குழந்தைக்கு அத்தனை மகிழ்ச்சி. குழந்தையால் அதனை என்னவென்று சொல்ல தெரியவில்லை. ஆனால் அவனோடு இருந்த நேரத்தை ரொம்ப ரொம்ப குஷியாக இருந்திருக்க,வீட்டிலுமே புன்னகை முகமாக வளம் வந்தாள்.

விழியின் காதினில் இரத்தம் வரும் அளவிற்கு அவள் அவனோடு சென்ற இடங்களை எல்லாம் சொல்லி கொண்டிருந்தாள்.

இதனை கேட்டு கேட்டு அகல்விழி மனனமே செய்து விட்டாள்.

“போதும் டி ராசாத்தி.. சித்தியால முடியல” நொந்து போன குரலில் சொல்லவும், இடுப்பில் கைவைத்து பெரியவள் போல் முறைத்து வைக்க,

“என்ன டி முறைப்பு உனக்கு?”குழந்தையிடம் வம்பு வார்க்க,

“போ.. போ சித்தி நீ எதையும் கேக்க மாதேங்கிற.நான் மம்மி கித்தயே போய் சொல்றேன்”என வீராப்புடன் சொல்லி கிளம்பிய அக்கா மகளை பிடித்து வைத்து,”சொல்லு நானே கேக்குறேன்” என்றதும் குழந்தை முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி சிரித்து வைத்தது.

தன் அக்காள் மகளின் புன்னகையில், இவளுமே புன்னகைத்தாள்.

இங்கே அருண் வேலையெல்லாம் முடித்து விட்டு வீடு வந்தவன், சோர்வுடன் சோஃபாவில் அப்படியே விழுந்தான்.

வீட்டிற்கு வந்ததும் புன்னகை முகமாக வரவேற்கும் அன்னையை காணாது தேடியவனுக்கு, சோர்வையும் தாண்டிய ஏதோ ஒன்று அவனை ஆக்கிரமித்தது.

சில உறவுகள் இருக்கும்போது தெரியாது, இல்லாத போது தான் அதனின் அருமை பெருமை எல்லாம் புரியும்.

அதே தான் மஞ்சுளாவின் விஷயத்திலும் நடந்தது. மகன்…மகன்… என்று அவன் பின்னால் பாசத்தோடு வந்த போது கண்டுகொள்ளாது கடந்து வந்தவன், இப்போது அன்னையின் பாசத்திற்கு ஏங்கினான்.

ஒரு முடிவெடுத்தவனாக அன்னையை தேடி சென்றவன், அவரது அறை வாசலில் வந்து தயங்கி நின்றான்.

“இங்க என்ன பண்ற?” பின்னால் வந்த அன்னையின் குரலில் திடுக்கிட்டு திரும்பிய அருண் தடுமாறினான்.

“அது…வந்து…” திக்க,

“என்ன?”

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ம்மா” என்று சொல்ல புருவமுடிச்சுகளுடன் மகனை ஏறிட்டார்.

“ப்ளீஸ் ம்மா”

“சரி வா “மகனை கீழே அழைத்து சென்றவர்,” இப்போ சொல்லு என்ன சொல்லணும்?”பார்வையில் கேள்வியை தேக்கி வைத்து பார்த்தார்.

“நான் நீங்க சொன்னது போல் கல்யாணம் பண்ணிக்கிறேன் ம்மா. ஆனா ஒரு கண்டிஷன்” புதிர் வைத்து மகன் பேசவும், அவனே பேசட்டும் என்ன அமைதி காத்தார்.

“எனக்கு கல்யாணத்துல எந்த ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா நான் ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கிற பொண்ணை தான் கட்டிப்பேன் ம்மா”சொல்லவும் மஞ்சுளா ஏளன புன்னகையை உதிர்த்தார்.

“ஹான், அப்புறம்?”

“ம்மா”தவிப்புடன் அழைக்க,

“அதான் சொல்லியாச்சில கிளம்பு. நீ சொன்னது போலவே ஒரு பொண்ணை பார்க்குறேன்”கூறி நகர பார்க்க, விசில் அடித்தபடி சந்தோஷமாக வந்த விஷ்வாவை இருவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அன்னை பக்கத்தில் வந்து,” ம்மா ஒரு காபி” சொல்லி அவர் கன்னத்தில் முத்தம் வைக்க,திகைத்தவருக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது.

அடுத்த நிமிடம் ஓடிப்போய் இரு மகன்களுக்கும் காபி எடுத்துட்டு வந்து கொடுத்தார்.

“என்ன விஷ்வா ஹாப்பி மூட்ல இருக்க போலையே?” தம்பியின் தோளில் கைபோட்டவன் சாவகாசமாய் பேச,

“முடிஞ்சு போச்சுன்னு இல்லைனு நினைச்ச வாழ்க்கை, இப்போ எனக்கே எனக்காக காத்திருக்கு டா. அதான் ஐயா ரொம்ப குஷியா இருக்கேன்” சொல்லி புன்னகை மாறாது விசிலடித்தபடியே அவனது அறைக்கு போனான்.

பார்த்திருந்த அருணிற்கு அவனின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைத்து அங்கிருந்து அகன்றான்.

மஞ்சுளா அடுத்த நாளே அருண் சொன்னபடி பொண்ணை பார்க்கும்படி தரகரை வரவழைத்து சொல்லிவிட்டார்.

தரகர் தான் சிறிது தயங்கி தயங்கி,” ஏன் மா தம்பிக்கு நல்ல வரனாவே பார்க்கலாமே. எதுக்கு ஒரு குழந்தையோட இருக்கிற பொண்ணை போய் பார்த்துகிட்டு?” தயத்துடனே கேட்க,

“சொன்னது மட்டும் செய்ங்க தரகரே…”சொல்லவும், பவ்யமாக தலையாட்டி சென்றார்.

இரண்டு நாளில் அருவி ஊருக்கு திரும்பிவிட,மகளின் முகத்தில் தெரியும் சந்தோசத்தில் அவளுமே மகிழ்ந்து போனாள்.

இங்கு வந்த பொழுதினிலிருந்து முகத்தை உர்ரென்று அப்போப்போ சுற்றி வரும் குழந்தை, இப்போது முகம் மலர்ந்து வீட்டை வளம் வருவதை பார்க்க, ஒரு அன்னையாய் மகிழ்ந்து போனாள்.

இதற்கு காரணம் மட்டும் அவள் அறிந்தால், கார சாரமாய் வெடித்து விடுவாள். அதனாலே விழி குழந்தையிடம் ‘உன் அம்மாகிட்ட எதுவும் சொல்லக்கூடாது’ என்று சொல்லி வைத்திருக்க, பிள்ளையும் சித்தியுடன் கூட்டு சேர்ந்து விஷ்வாவை பற்றி மறைத்தது.

அடுத்த நாள் எப்போதும் போல் குழந்தை அவனுக்காக எப்போதும் காத்திருக்கும் இடத்தில் காத்திருக்க, விஷ்வாவிற்கு சற்று வேலை இருந்ததால்,குழந்தையை பார்க்க தாமதமானது.

நேரத்தை பார்த்தவன் ஜீவாவை அழைத்தான்.

“என்ன அண்ணா?”

“இந்த வேலையை கொஞ்சம் முடிச்சு வச்சிரு டா. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் போய்ட்டு வந்தறேன்” சொல்லி பதிலை கூட எதிர்பாராது ஓடும் விஷ்வாவை குழப்பத்துடன் பார்த்திருந்தான் ஜீவா.

சரியாக ஒரு மணியானால் என்ன வேலை இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு போய்விடுகிறான். இந்த ஒருவாரமாக விஷ்வாவை பார்த்து கொண்டு தானே இருக்கிறான். அவனது மாற்றம் தெரிந்தாலும்,எப்படி திடிரென்று யோசனைக்குலானான்.

குழந்தை பூவினி அவனை காணாது முகத்தை தொங்க போட்டு அமர்ந்திருந்த படியே விஷ்வா எங்கேயாது கண்ணில் படுகிறானா என்று தேடியது.

அவன் வருவதை கண்டுகொண்ட குட்டி முகத்தில் அத்தனை சந்தோஷம். தொளசண்ட் வாட்ஸ் பல்பு எறிந்தது.

“சீனிஅர்(சீனியர்)…”ஆரவாரத்துடன் அழைக்க,

“சொல்லுங்க ஜூனியர்”முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

“என்ன தூக்கு” குழந்தை பூவினி அவனின் முன் கையை விரித்து தூக்கு என செய்கை காட்டியது.

“இதோ என் ஜூனியரை தூக்க வேண்டியது தானே என்னோட முதல் வேலை” என விஷ்வா குழந்தையை தூக்கிக் கொள்ள,

குழந்தையை தூக்கியது தான் தாமதம், குழந்தை அவன் முகமெங்கும் முத்தமழை பொழிய, மகளின் அன்பில் நெஞ்சம் நெகிழ்ந்து தான் போனான் அவன்.

மகளை அவளது வகுப்பில் காணாது பயந்து போய் தேடிவந்த அருவியின் விழிகளில் அவனின் கைப்பிடியில் தன் மகளை கண்டதும் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் பெரிதாய் விரிந்து, கோபத்தில் கண்கள் இரண்டும் சிவப்பேறி பெரிய பெரிய மூச்சுகளாய் விட்டாள்.

இவனால்… இவனால் தானே என் வாழ்வு தடைபுரண்டு ஓடியது.

யாரை வாழ்நாளில் பார்க்க கூடாது என்று நினைத்தாளோ, அவனை மீண்டும் தன் வாழ்வில் சந்திக்ககூடும் என்று நினையவில்லை.

இவனை பற்றி நினைக்க நினைக்க வாழ்வே கசந்தது.

தனது வாழ்வின் இத்தனை கஷ்டங்களுக்கும் இவன் ஒருவன் தானே காரணம். இவன் தனது வாழ்வினுள் நுழையாமலே இருந்திருக்கலாம்.

தன் நிம்மதியை மொத்தமாக கெடுத்துவிட்டு எப்படி இவனால் இப்படி எந்த ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் சிரிக்க முடிகிறது.

தான் இவனால் எத்தனை எத்தனை வலிகளை கடந்து வந்திருக்கேன். ஆனால் இவனோ மகிழ்வாக வாழ்கிறானே. பார்க்க பார்க்க ஆத்திரம் தலைக்கேறியது அருவிக்கு.

யாரோ தன்னை நோக்குவதை உணர்ந்து கொண்ட விஷ்வா, கண்களை சுழல விட அவன் விழியில் தென்பட்டாள் அவனின் அருவி.

எத்தனை வருடத்திற்கு பிறகான சந்திப்பு. அவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை மன்னவனுக்கு. நான்கு வருடத்திற்கு முன்பு பார்த்த அருவி இவள் இல்லை. அப்போது எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்கி தன் பின்னே ஒளிந்து கொள்ளும் பெண் இவள் இல்லை என்று அவள் விடும் பெரிய பெரிய மூச்சுகளிலே தெரிந்தது.

குழந்தை பூவினி மகிழ்ச்சியுடன் கையசைத்து அசைத்து பேசுவதை கண்ட அருவிக்கு ஆத்திரம் மேலோங்கியது.

வேகமாக சென்று தனது குழந்தையை அவனிடமிருந்து பறிக்க முயல, அவனோ விடாக்கண்டனாக குழந்தையை தரமறுத்தான்.

“என் குழந்தையை கொடு முதல”

“முடியாது” மறுத்து பேசி, அவளின் பீபிப்பை ஏற்றலானான்.

“கொடுக்கப்போறியா இல்லையா நீ” அதீத கோபத்தின் எல்லையில் இருந்து கேட்க, அவனோ அவளை மோகன புன்னகையோடு ஏறிட்டான்.

“இந்த சிரிப்பு தான் என்னைய இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு.இப்படி சிரிச்சு சிரிச்சே என் வாழ்க்கையை அழிச்சிடல நீ” கோபத்தின் விளைவாக இரண்டு கண்களும் ரோஜா பூவை போல் சிவப்பேரி இருந்தது.

“அருவி…” மென்மையாய் அவள் பெயரை உச்சரிக்க,

“கூப்பிடாத அந்த பேரை சொல்லி கூப்பிடாத…”என அவன் குரல் கேட்காதளவிற்கு காதை பொத்தி கொள்ள,சுற்றி முற்றி பார்வையை சுழல விட்டவன் யாரும் தங்களை கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் பண்ணியவன், அவளை நெருங்கினான்.

அவள் காதருகில் குனிந்து,”ப்ரசாத்ன்னு சொல்லுங்க பொண்டாட்டி. உடனே நம்ம பாப்பாவ கொடுத்திடுறேன்” காதில் கிசுகிசுக்க, திடீரென காதருகில் கேட்ட அவனின் குரலில் விதிர்விதிர்த்து போனாள்.

“யூ…யூ…அவ என் பொண்ணு “கை முஷ்டியை மடக்கியவள் அவனை ஏதும் செய்ய முடியா கோபத்தில் பல்லை நறுநறுத்தவள் , குழந்தையை பிடுங்கி கொண்டு போனாள்.

போகும் அவளை ரசித்தவன்,”பை பொண்டாட்டி.நாளைக்கு மீட் பண்ணலாம்”சொல்லி புன்னகைக்க, திரும்பி பார்த்து முறைத்து விட்டு வகுப்பறைக்கு நடையிட்டாள்.

அருவியை அணுஅணுவாக ரசித்தவன், அவளுடனான வாழ்க்கைக்காக அதிரடியில் இறங்கி இருந்தான்.

இங்கே விஷ்வப்ரசாத் காதல் அதிரடியில் இறங்கியிருக்க, அங்கே அருவியின் வீட்டில் சந்தானமூர்த்தி அவளுக்கான அடுத்த திருமணத்திற்கான மாப்பிள்ளை புகைப்பதோடு காத்திருந்தார்.

திரும்பவும் அருவியின் வாழ்க்கையில் இருவரும் அதிரடியில் இறங்கி இருக்க, சுழல் பந்து போல் சுழல போகிறாள் அருவி .

Again the repeat mode starts here…இனி????

( இந்த கதையில ஹீரோ ஹீரோயின் பார்த்துக்கவே 8 எப்பி கொண்டு வர வேண்டியதா போயிடுச்சி. முதல் எப்பிலேயே அவங்களை சந்திக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை. ஒரு வாழ்க்கையை விட்டு அப்போ தான் வெளி வந்திருக்கா, உடனே ஹீரோவ காட்டி எனக்கு கொண்டு போக விருப்பம் இல்லை. ரெண்டு பேருமே கொஞ்சம் பீல் பண்ணனும்னு நினைச்சேன். எல்லாமே சட்டுன்னு நடந்துச்சின்னா அது நல்லா இருக்காதுன்னு ஒரு பீல் எனக்கு . அதான் கதையை இப்படி கொண்டு போனேன். இது வாசகர்களா உங்களுக்கு பிடிக்காம கூட போகலாம். அதான் சொல்லிட்டு போலாம்னு தோணுச்சு. சீக்கிரமா நெஸ்ட் பார்டோட வரேன். பை மக்களே)