மோகனம் 19

eiL5KAD79398-dda353b1

மோகனம் 19

இதழோடு இதழ் சேர்ப்பித்தவன், அவளின் மிருதுவான அதரங்களில் தனது மொத்த காதலையும் காட்ட நினைத்து வன்மையாய் முத்தமிட்டான். அவள் உடல் அவனின் இந்த செயலில் விதிர்விதிர்த்து நடுங்கியது.

முதல் இதழ் முத்தம் இருவருக்கும். தந்தவனுக்கு காதலாய்! வாங்கியவளுக்கு கசப்பாய்!

விஷ்வாவின் கைகள் இடையிலிருந்து நழுவி, மேலே மெதுவாய் ஊற அருவியின் பெண்மை விழித்தது.

“விடு விஷ்வா…” முயன்று அவனை எப்படியோ தள்ளிவிட்ட அருவி கணவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

“என்ன பண்ற நீ?” ஆக்ரோஷமாய் கத்த,

“இன்னோரு தடவை விவாகரத்து அது இதுன்னு பேசின, இது தான் உனக்கு தண்டனை. நீ என் காதலை புரிஞ்சிக்க வேணாம். அதை கேக்குற தகுதி கூட எனக்கில்லை. என்னை விட்டு பிரியுறேன்னு மட்டும் சொல்லாத” கோவத்தில் ஆரம்பித்தவன் கிட்டத்தட்ட கெஞ்சலில் முடித்திருந்தான்.

“முட்டாள் மாதிரி பேசாத விஷ்வா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு, இப்படி ஒரு செகண்ட் ஹேண்டட் பொண்ணு உனக்கு எதுக்கு? என் வாழ்க்கை தான் எப்படியெப்படியோ போயிடுச்சி. நீயாவது நல்லா இரு” சொல்லி முடிக்கவில்லை மீண்டுமொரு முறை பெண்ணின் கீழ் அதரங்களை கவ்வினான்.

இந்த முறை வன்மை! வன்மை! வன்மை மட்டுமே.

ஆத்திரம் தாளாமல் ருத்ரனாக மாறியவன் தன் கோபத்தை அவள் இதழிலே காட்டினான். எத்தனை நேரம் தண்டனையாய் நீண்டதோ, அருவியின் கண்ணீர் சுவையில் மனைவியை தன்னிடமிருந்து வேகமாய் விலக்கிவிட்டான்.

“ஒன்னு புரிஞ்சிக்கோ அருவி, நான் உன்னோட விர்ஜினிட்டி பார்த்து காதல் செய்யல. உன்னோட குழந்தை மனசை பார்த்து தான் காதலிச்சேன். என் காதலுக்கு நீ கன்னியா இருக்கியா இல்லையான்றது முக்கியம் இல்ல. நீ சந்தோஷமா இருக்கியா, அது தான் என் காதலுக்கு முக்கியம்” எரிப்பது போல் பார்த்தவன் கோபமாக,

“இனி ஒரு தடவை இப்படி பேசுன, நான் உன்ன என்ன பண்ணுவேனே எனக்கு தெரியாது” மிரட்டியவன் தன் கோபத்தை கட்டுப்படுத்தவென தலையை கோதி அங்கும் இங்கும் நடையாய் நடந்தவனுக்கு கோபம் அடங்க மறுத்தது.

அருவி அவனின் இந்த பரிமாற்றத்தில் பயந்து தான் போனாள்.

“நான் கொஞ்ச நேரம் வெளிய போய்ட்டு வரேன். அம்மு பாத்ரூம்ல இருக்கா, பாத்துக்கோ” கூறி நகர பார்க்க,”விஷ்வா! நான் சொல்ல…” அவள் அடுத்து சொல்ல வரதுக்குள் இடையிட்டவன்,” ஏதும் பேசாத அருவி. இன்னும் ஒரு வார்த்தை பேசின உன்ன அடிச்சாலும் அடிச்சுடுவேன். என் கோபத்தை உன்னால தாங்கிக்க முடியாது” மொழிந்தவன் விருட்டென வீட்டை விட்டு வெளியேறினான்.

போகும் கணவனை ஆயாசத்துடன் பார்த்திருந்தாள்.

அடுத்து வந்த ஒருவாரமும் அமைதியாய் கழிந்தது.சத்தம் என்றால் அது பூவினியின் பேச்சு சத்தமாக தான் இருக்கும்.

தினமும் பூவினியை அன்னை வீட்டில் விட்டுவிட்டு, மனைவியுடன் பள்ளிக்கு சென்று வருபவன், மீண்டும் அழைத்து வந்து வீடு சேர்ப்பான். இந்த ஒருவாரத்தில் அவனிடம் எப்போதும் தென்படும் சிரிப்பு முற்றிலுமாக தொலைத்திருந்தது.

அருவி பேச நினைத்தாலும்,விஷ்வாவை பார்க்கவே நடுங்கினாள். அவனுக்கு அது புரிந்தாலும், சிறிதும் மனம் இறங்கினானில்லை.

தான் இறங்கி வந்தால், இது போன்ற பேச்சுக்களை தான் பேச செய்வாள். இதற்கு முற்றிலுமாய் தடை செய்ய நினைத்தான்.

இப்படியே பத்து நாள் சென்றுவிட, இவர்களுக்குள் இருக்கும் பனிப்போர் முடிந்தபாடில்லை.

அன்று காலையில் சிறிது நேரம் கழித்து எழும்பியதால்,அவசரமாய் கிளம்பினான்.

இது மாதத்தின் கடைசி என்பதால், வேலை பளு அதிகமாய் அவனை இழுத்தது. பள்ளி வேறு அடுத்த சில தினங்களில் திறக்க இருப்பதால் அதுக்கான வேலையில் மூழ்கிப் போனான் விஷ்வா.

“ச்சை, இன்னைக்குன்னு பார்த்தா நான் தூங்கி தொலையனும்” தன்னையே கடிந்தப்படி கிளம்பி கொண்டிருந்தான்.

காலையிலே மீட்டிங் வேறு வைத்திருப்பதால், அதற்கு தேவையான பைல்களை எல்லாம் தேடி தேடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

குன்னூரில் இருந்தவரை எல்லாவற்றையும் அருவியே பார்த்திருக்க, இங்கே தனித்தனியாக இருப்பதால் அவனது அறையே அலங்கோலமாக காணப்பட்டது.

அப்போது தான் அவனை அழைக்கவென உள்ளே வந்த அருவி, அறை இருக்கும் அழகை கண்டு சிரித்தாள்.

ஒரு நொடியில் அவள் புன்னகையில் வீழத்தான் செய்தான். மறுநிமிடமே தலையை சிலுப்பிக் கொண்டு தன்னை சுதாரித்து வேலையை கவனித்தான்.

“என்ன பண்ற விஷ்வா..?”கேட்க,

“என்னமோ பண்றேன் உனக்கென்ன?” வெடுக்கென கூறி அவ்விடம் விட்டு நகர பார்க்க, அவனின் கையை பற்றி நகரவிடாது தடுத்து நிறுத்தியவள்,கெஞ்சலான பார்வை பார்த்தாள்.

அவளின் கெஞ்சலான பார்வையில் நின்றுவிட்டான்.

“சண்டை வேணாமே பா” என்றாள் கெஞ்சல் குரலில்.

“மாத்தி பேசவேணாம். சண்டைக்கு காரணம் நீ.நான் இல்ல”

“சரி சாரி ஏதோ ஒருதடவை தெரியாம பேசிட்டேன். நீ பேசாதது என்னமோ ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு”என்றாள் கவலையுடன்.

“இது ஒன்னும் நீ முதல் தடவை பேசல அருவி.‌ இப்படி பேசுறது ரெண்டாவது தடவை.சொல்ற உனக்கு ஈசியா இருக்காலாம். கேக்குற எனக்கு…” சொல்லமுடியாது தொண்டையடைத்தது.

விஷ்வா அப்படி கூறவும் விரிந்த விழிகளால் அவனை ஏறிட்டவள்,”அப்போ… அப்போ நீ அன்னைக்கு…” பெண்ணவள் இழுக்க,

“சாரி மை டியர் பொண்டாட்டி. நீ பக்கத்துல வரவுமே எழுந்துட்டேன்” சொல்ல, அருவி நெஞ்சில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

“பொறுக்கி…”

“உனக்கு நான் எப்பவுமே பொறுக்கி தான் டி” சொல்லி கண்ணடிக்க, சரமாரியாக அவளிடமிருந்து அடியை பெற்றான்.

அதன் பின், இருவரும் சமாதானமாகிட அடுத்த நாள் மகளையும் மனைவியையும் மலர் கண்காட்சிக்கு அழைத்து வந்தான்.

குழந்தை பூவினி விதவிதமான பூக்களால் செய்த உருவங்களை கண்டு மகிழிச்சியானாள்.

“அப்பா! வாங்க உள்ள போகலாம்” பூவினி தந்தையை போலவே குத்தாட்டம் போட,

“போகலாம். அதுக்கு முன்னாடி ஒரு போட்டோ” என்று கூறி மகளுடனும் மனைவியுடனும் சேர்த்து ஒரு செல்பியியை எடுத்தவன், மாமனாருக்கு அனுப்பிவைத்தான் பார்த்து வெந்து சாகட்டுமென.

மகளை தூக்கிக்கொண்டு மனைவியுடன் உள்ளே நுழைந்தான்.

அருவிக்கு பூக்களை எல்லாம் பார்த்ததும் மனம் அதில் லயித்துபோனாலும், அப்போப்போ கணவனை முறைக்கவும் தவறவில்லை.

அவள் முறைக்கும் போதெல்லாம் விஷ்வா இளித்து வைக்க,மேலும் கடுப்பானாள்.

இதற்கெல்லாம் காரணம் காலையில் அவன் செய்த வம்பு தும்புகள் தான்.

மலர் கண்காட்சிக்காக அழகாய் ஊதா நிற புடவை அணிந்து வெளி வரவுமே, மனைவியை பிடித்து உள்ளே தள்ளி சென்றான் விஷ்வா.

“என்ன பண்ற நீ?” புரியாது வினவ,

“நாம என்ன விசேஷத்துக்கா போறோம். இப்படி புடவையை கட்டிட்டு வர” பேசியபடியே பீரோவில் தான் அவளுக்காய் எடுத்த உடைகளை வெளியில் எடுத்தான்.

“இந்த டிரஸ் எல்லாம் என்ன பூஜை பண்றதுக்காகவா வாங்கி தந்தேன்” கடிய,

“இது எதுவும் நான் போட்டதில்ல விஷ்வா. அன்கம்போர்ட்டபிள்ளா பீல் ஆகும் பா”எடுத்து சொல்ல,

“முடியவே முடியாது.இது தான் போட்டாகணும்” கணவன் பிடிவாதமாய் நிற்க, அருவிக்கு தான் இம்சையாகி போனது.

அவளது கெஞ்சல்கள் எதற்கும் விஷ்வா செவிசாய்க்கவில்லை. இறுதியில் அவள் தான் இறங்கிவந்தாள்.

அவன் எடுத்து வைத்திருந்த உடையை அணிந்து வந்தாள்.

ஸ்லிம் பிட் ப்ளூ ஜீன் அதற்கேற்ப மஸ்ட்டர்ட் அண்ட் ப்ளூ எம்ப்ராய்டட் எ லைன் டாப் அணிந்திருந்தாள்.

அவளை வெஸ்டெர்ன் உடையில் பார்த்திராதவன் பிரமித்தான்.

“என் அருவி அழகுல அருவியா கொட்டுறாளே” மோகனப் பேச்சுடன் நெருங்க, அவனை எட்டி நிறுத்தினாள் அன்பு மனைவி.

“கிளம்பலாம்…”

“என்னது அதுகுள்ளையா இரு ம்மா இன்னும் மேக்கப் இருக்கு” கூறி பின்னியிருந்த கூந்தலை அவிழ்த்து விட்டவன் சைட் ப்ரைட் போட்டு, அதற்கு ஏற்ப மனைவியை அழகு படுத்தி தான் வெளியவே அழைத்து வந்தான்.

அப்போது மகள் ஓடி வந்து “அப்பா!மம்மி! சேம் பின்ச்” என சொல்லவும் தான் மூவரின் ஆடைகளையும் கவனித்தாள்.

விஷ்வா, ப்ளாக் ஜீன் வைட் ட்ஷர்ட் வித் எல்லோ பெய்டு லாங் ஸ்லீவ் ஷர்ட் அணிந்திருந்தான். பார்க்கவே கால்லேஜ் பையன் போல் அனைவரையும் அசரடிக்கும் வசீகரத்துடன் இருந்தான். இந்த பக்கம் பூவினியோ அதே நிறத்திலான ஜம்சுய்ட் அணிந்திருந்தாள்.தலையில் வேறு கருப்பு தொப்பி.

இருவரையும் பார்த்தவள் சுற்றி போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

தன் கோலத்தை பார்த்தவளுக்கு கோபம் வந்தாலும் சிரிப்பாய் இருந்தது.

அப்படியே விஷ்வாவை முறைத்தபடியே அவனுடன் மலர் கண்காட்டிச்சிக்கும் வந்துவிட்டாள்.

“எப்படியோ நீ நினைச்சதை சாதிச்சிட்டில” அருவி பொருமித்தள்ள,

“எல்லாமே உனக்காக தான் டி பொண்டாட்டி.நீ ஆசை பட்டதை நிறைவேத்த தானே நான்” சொல்லி புன்னகைக்க, “உன்ன எதுக்கு தான் எங்க அத்தை பெத்தாங்களோ இருக்கு” சலித்துக்கொண்டாள்.

“ஏன்…?” முகம் சுருக்கி கேட்க,

“எப்பவோ நான் சொன்னதை இப்போ செய்தா எப்படி சொல்றாதம்.”

“எப்ப சொன்னா என்ன, என் அருவி ஆசைப்பட்டா அதை அவளுக்கு கொடுக்கணும் அவ்ளோ தான். உன்னை தவிர”சொல்லி ‘உன்னை தவிர’ என்பதில் சிறிது அழுத்தம் கொடுத்தவன், மகள் விளையாடும் அழகை ரசிக்க,அவளோ மகளை ரசிக்கும் அவனை வியந்து பார்த்தாள்.

பின், பூவினியுடன் சேர்ந்து மலர் கண்காட்டியை சுற்றி பார்த்தனர்.

பூக்களால் செய்யப்பட்ட ஆப்பிள், டோலு போலு, கோவில் கோபுரம்,இமோஜி என இன்னும் பல அங்கு பார்த்தனர்.

எல்லாம் சுற்றி பார்த்தவர்கள் அப்படியே புள் தரையில் அமர,”நான் ஒன்னு கேட்கலாமா?” விஷ்வவை பார்த்து வினவினாள்.

“ஒன்னு என்ன ஓராயிரம் கூட நீ கேட்கலாம்.”

“தப்பா எடுத்துக்க கூடாது” தயங்க,

“அது நீ கேக்குறதை பொறுத்து” சொன்னவன் மகள் விளையாடுவதை வீடியோவாக எடுக்க ஆரம்பித்தான்.

“உன்னால எப்படி அம்முவை ஈசியா ஏத்துக்க முடிஞ்சது? என்ன இருந்தாலும் அம்மு விக்ராந்தோட குழந்தையாச்சே” தயக்கத்துடனே தான் கேட்டாள்.

இதனை விஷ்வா எப்படி எடுத்து கொள்வானோ என்று ஒரு பயம்.

“என் ஜூனியர்…என் அருவியோட பொண்ணு. என்னமோ தெர்ல பூவினிய எனக்கு யாரோடையோ குழந்தையா பார்க்க ஏன் யோசிக்க கூட தோணல. அவ என்னோட பொண்ணா தான் எனக்கு தெரியுறா. சம்டைம்ஸ், பேபியோட ஆக்ட்டிவிட்டிஸ் என்னோட சைல்ட்ஹூட் மெமெரிஸை ஞாபகப்படுத்தும். மை ப்ரிசியஸ் பேபி” அருவியிடம் சொன்னவன், மகளை கண்டான்.

அவன் அப்படி கூறவும் திடுக்கிட்டு தான் போனாள். சில நேரங்களில் இவளுக்கும் கூட இது தோன்றியதுண்டு. பார்ப்போர்களுக்கு விஷ்வா பெற்ற குழந்தையாக தான் பூவினி தெரிவாள். ஏன் இதனை சிலர் சொல்லியதும் உண்டு. இப்போது இதனை நினைக்கும் போது மனம் பகீரென்றது.

அருவி அவளின் சிந்தனைக்குள் மூழ்கிவிட, மகளும் தந்தையும் சேர்ந்து புகைப்படமாக எடுத்து தள்ளினர்.

சிறிது நேரம் அங்கேயே இருந்தவர்கள், வெளிவந்தார்கள்.

வெளியில் சுட சுட சுட்டு கொண்டிருந்த மக்காசோளத்தை பார்த்து மகள்,” அப்பா! எனக்கு அது வேணும்” கை காட்டி கேட்கவும்,” நீ இங்கேயே இரு அருவி நான் போய் சோளமும் உனக்கு புடிச்ச கார பொரியும் வாங்கிவரேன்” சொல்லி மகளுடன் நகர்ந்தான்.

‘என்னமோ செய்ங்க’ என்று ஆள் அரவமற்ற இடமாய் போய் நின்றவளின் கண்களுக்கு தென்பட்டது என்னவோ அவள் வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது என்றிருந்த இருவர்.

மனம் படபடவென வேகமாய் அடித்துக்கொண்டது. கால்கள் நகர மறுத்து சண்டித்தனம் செய்தது.எங்கே என்னை பார்த்திடுவார்களோ என பயந்து ஒதுங்க நினைக்க, அதற்கு முன்னே அவள் முன் குரூர சிரிப்புடன் ஒருவள் வந்து நின்றாள்.

மனம்,’விஷ்வா… விஷ்வா…வந்திடு’ என்று அரற்றியது.கண்கள் குளம் கட்ட, அதை காட்ட விரும்பாது சிமிட்டியபடி சிலையென நின்றாள்.

“என்ன என்னை மறந்துட்ட போலயே?” குரோதத்துடன் கேட்டாள் அவள்.

அவளையே தான் பார்த்திருந்தாள் இமைக்க கூட இல்லை. இதழ்கள் உச்சரித்தன அவளின் பெயரை “ஜின்சி” என.

“பரவால்ல இன்னும் மறக்கல. மறக்க கூடிய உறவா நம்மளோடது. உற்ற தோழி… இப்போ உன் முன்னாள் கணவனோட வருங்கால மனைவி” சொல்லி சத்தமே வராமல் சிரிக்க, அருவியின் மனதிற்குள்ளோ பூகம்பம்.

“என் நிம்மதியை கெடுத்தில. உன்னோட நிம்மதியை கெடுக்காம விடமாட்டேன். ஒரு விஷயம் சொல்லட்டுமா?” சொல்லி அவளை நெருங்கியவள், மின்னும் பொன்தாலியை கண்டு ” உன்ன விக்ராந்த்தோட எப்படி வாழ்க்கையை தொடங்க விடாம பண்ணேனோ, இனியும் உன்ன வாழ விடமாட்டேன். எப்படி உன்னோட புது புருஷனோட வாழுறன்னு பாக்குறேன். உனக்கே தெரியாத உனக்கான சீக்ரெட் ஒன்னு எனக்கிட்ட இருக்கு” சொல்லி குரூரமான பார்வையோடு அருவியை தீயென பார்க்க, உள்ளுக்குள் உடைந்து சுக்குநூறாகி போனாள் அருவி.

அதற்குள் ஜின்சிக்கு போன் வர,”பார்த்தியா, மை பியூச்சர்… விக்ராந்த் கூப்பிடுறான்” டிஸ்ப்லேவை அருவியின் முன் ஆடியவள் “பாய் பேபி” கன்னம் தட்டி சென்றாள்.

ஜின்சி கூறி சென்றதில் நெஞ்சம் விம்ம,உள்ளிருக்கும் ஒவ்வொரு அணுக்களும் வலியில் துடியாய் துடித்தது. கடந்த காலத்தை தொலைக்க நினைத்தாலும், கண் முன் வந்து ஆட்டம் காட்டுகிறது. தளர்ந்து போன அருவி அப்படியே தரையில் மண்டியிட்டுவிட்டாள். பேயறைந்த நிலை.கண்ணீர் அருவியாய் கொட்டியது.

விஷ்வா மனைவியை காணாது தேடியவன், அவள் இருக்கும் நிலையை பார்த்து சோளமும் கார பொரியும் கீழே விழுந்து சிதறியது.

“அருவி…” கத்தலோடு அவளிடம் ஓடினான்.