மோகனம் 18
குன்னூர் சாலையில் நாலு சக்கர வாகனம் சீறி பாய்ந்து கொண்டு ஓட, வெயிலும் இல்லாது குளிரும் இல்லாது இதமான காற்று இருவரின் தேகத்தையும் தீண்டி சென்றது.
பாதி தூரம் வரை சென்ற வண்டி காட்டேரியிடம் ஓரம் கட்ட, விஷ்வாவை கேள்வியாய் நோக்கினாள் அருவி.
அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட விஷ்வா,” இல்ல ஜேர்க் போட்டா,க்ளைமேட்டை என்ஜாய் பண்ண முடியாது. உனக்கு தான் தெரியுமே. அப்புறம் என்ன” சொல்லவுமே பார்வை தானாக பின்னால் அமர்ந்திருந்த மகளிடம் தான் சென்றது.
தந்தையை பின்பற்றுவதே பிள்ளையின் முதலும் கடைசியுமான வேலை.
விஷ்வாவிடம் இப்படி ஒரு பிணைப்பு ஏற்படும் என அருவி நினைக்கவில்லை.
தாய் இல்லாமல் கூட இருந்திடுவாள் போல, தந்தையில்லாமல் ஒரு நொடி கூட நெட்டி தள்ளமாட்டாள்.
அதற்காக இருபத்திநாலு மணிநேரமும் தந்தையுடன் தான் இருப்பேன் என அடம்பிடிக்கும் குழந்தையெல்லாம் இல்லை. தன்னோடு விஷ்வா இருக்கும்வரை அவனை தவிர்த்து வேறு எங்கும் செல்ல மாட்டாள்.
பூவினி… டட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ்.
அருவி கணித்த படியே பூவினியும் ஸ்வெட்டரை கழற்ற முடியாமல் சிரமப்பட, அருவி தலையில் அடித்து கொண்டாள்.
“அம்மு…” அருவி மகளை அதட்ட,
“மம்மி…நானும் நானும்” ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தாள்.
“அம்மு ஸ்வெட்டர் ரிமுவ் பண்ண கூடாது. குளிருது பாரு. அப்புறம் உனக்கு தான் ஜூரம் வரும்”
“அப்பா கழத்தி இதுக்காரு. நானும் கழத்துவேன்” மகள் தந்தையை கைக்காட்டி சொல்ல, விஷ்வாவின் இதழ்கள் மென்னகையில் விரிய, அவனை தீயாய் எரித்தாள் அருவி.
“என் புள்ள டி…” பெருமையாய் காலரை தூக்கிவிட்டான்.
“பொல்லாத புள்ள… ஊருல இல்லாத அப்பா மகளா இருக்கீங்க. என்னால முடியல” சலிப்பது போல் கூறினாலும், மகளின் சந்தோஷத்தில் தானும் சந்தோஷப்பட்டாள்.
“போடி… போடி…” என்றவன் மகளின் புறம் திரும்பி,” அப்பா ஸ்டீல் பாடி டா. ஆனா பேபி சாஃப்ட்ல சோ குளிரும்,பாரு அம்மாலாம் போட்டு தானே இருக்காங்க. நீங்களும் போட்பீங்களாம்.” தந்தை சொல்லவும் மகள் மறுபேச்சின்றி ஸ்வெட்டரை போட்டுக்கொண்டாள்.
“இதே தானே நானும் சொன்னேன்… அப்போ மட்டும் அவ கேக்கல” விஷ்வாவிடம் சண்டைக்கு நிற்க,
“நீ கடுமையா சொன்ன அருவி. நான் அதே சாஃப்டா பாலிஷ்டா சொல்றேன். தட்ஸ் இட்”என்றவன் காரை எடுத்தான்.
‘அம்முவை நான் பெற்றேனா?இவன் பெற்றானா?” உள்ளே பெண்ணுக்கு மூண்டது.
ஆனாலும் விஷ்வாவை பார்த்து ஆச்சரியம் கொண்டாள் பெண். எளிதில் குழந்தையிடம் நெருங்கி விட்டான். இவளும் தானாக தந்தையென அழைத்து அவனுக்கான அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறாள்.
தன்னையே இன்றுவரை அம்மா என்று அழைக்காது மம்மி என்றே அழைக்கும் குழந்தை, விஷ்வாவை பார்த்தால் மட்டும் ஆயிரம் முறையாவது அப்பா என அழைத்துவிடுகிறாள்.
ஆச்சரியம் தான்! இரத்த உறவு இல்லை தான். அதையும் விட மேல் இவர்களின் உறவு! கள்ளம் கபடம் இல்லா தந்தை- மகள் உறவு!
கார் மேட்டுப்பாளையம் தாண்டி கோயம்புத்தூரை நோக்கி சீறி பாய, கணவன் மகள் இருவரது நினைவில் மூழ்கி இருந்தவள், கோவையை நெருங்கவும் விழித்து கொண்டாள்.
துடியலூர் தாண்டி வண்டி செல்வதை கண்ட விழிகள் பெரிதாய் விரிந்தது.
“இப்போ எங்க போறோம் விஷ்வா…?” பதட்டமாய் கேட்டாள்.
அருவிக்கு ,அவளது கடந்த கால கசந்த நினைவுகள் முன் தோன்றி தோன்றி மறைந்தது.
“ஜஸ்ட் ஷாப்பிங் டா” என்றவனின் கவனம் சாலைப்புறத்தில் இருப்பதாக பார்ப்போருக்கு தோன்றினாலும் அவனின் கவனம் முழுவதும் மனைவி மீது தான்.
“வேணாமே…நாம திரும்ப போய்டலாம் ப்ளிஸ். குன்னூர் இல்லன்னா ஊட்டில கூட போய் ஷாப்பிங் பண்ணிக்கலாம்”
“சில் டா அருவி. இங்க ஏதாவது பூதம் கீதம் இருக்கா என்ன? அப்படியே இருந்தாலும் அதை தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருக்கலாம்” கிண்டலாய் பேசி மனைவியை சகஜமாக்க முயன்றான்.
“அது…” என பாவையவள் சொல்ல முடியாமல் தவிக்க,அதனை புரிந்து கொண்டவன் அவளின் இடப்புற கரத்தில் கை வைத்து அழுத்தம் கொடுத்து ‘நான் இருக்கிறேன்’ சொல்லாமல் சொன்னான்.
விஷ்வாவின் அழுத்தத்தில் பெண் அமைதியாகிட, அடுத்து வண்டி பூர்க்ஸ் சென்று தான் நின்றது.
பூர்க் ஃபீல்ஸை பார்த்தவளின் விழிகள் மின்னினாலும் அருவி தயங்கினாள்.
“இங்க எல்லாம் காஸ்லியா இருக்குமே… காந்திபுரம் இல்லன்னா டௌன்ஹால் போலாம். அங்க சீப்பா கிடைக்கும்”
“வா போகலாம்…” மனைவியையும் மகளையும் அழைத்து உள்ளே சென்றான்.
குழந்தை பூவினி மால்லை வித்தியாசமாய் பார்க்க, அவளுடன் சேர்ந்து அன்னையும் பார்த்தாள்.
“இங்க எதுக்கு வந்திருக்கோம்?”
“ட்ரெஸ் எடுக்க தான் பொண்டாட்டி…”
“அதான் யாருக்கு..? அருண் சாருக்கா இல்ல அத்தை மாமக்கா?”
“வாங்கும்போது தெரிஞ்சிப்ப…” சொல்லி ஒரு கடைக்குள் புகுந்தான் விஷ்வா. அவனுடன் மகளும் மனைவியும்.
மனைவியை பார்த்து பார்த்து ஒவ்வொரு உடையாக தேர்ந்தெடுக்கவும், குழம்பித்தான் போனாள் அருவி.
ஒரு உடையை எடுத்து கொண்டு அருவியிடன் வந்தவன்,” போ போய் இந்த ட்ரெஸை போட்டுட்டு வா” சொல்ல பேந்த பேந்த முழித்தாள்.
“நானா…?” கணவனை கேள்வியாய் நோக்கினாள்.
“நீ தான்.வேற யாருக்கு நான் வந்து ட்ரெஸ் வாங்குவேன்? சீக்கிரமா போய் ட்ரெஸ் மாத்திட்டு வா” அவசரப்படுத்த,” நான் இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் போட்டதில்ல” பெண் முறைப்புடனே சொல்ல,
“உனக்கு ஞாபகம் இருக்கா அருவி. நாம காலேஜ் படிச்ச டைம்ல இந்த மாதிரி ஜீன்ஸ் டாப்ஸ் போடணும்னு ஆசையா இருக்குன்னு சொல்லுவ. அப்போ தான் என்னால வாங்கி தர முடியல. இப்போ அந்த ஆசையை நிறைவேத்துறேனே ” சொல்லி அவள் கையில் உடையை திணிக்க, அவளுக்கோ திகைத்த நிலை.
“அதேல்லாம் ஞாபகத்துல வச்சிருக்கியா விஷ்வா?” பெண் கேள்வியாய் வினவ,
“எதையுமே மறக்க முடியாது அருவி. உன்கூட இருந்த ஒவ்வொரு நொடியும் என் மனசுல ஆழமா பதிஞ்ச ஒன்னு டா. சரி போய் மாத்திட்டு வா.இன்னும் ஏகப்பட்ட ஷாப்பிங் இருக்கு” கூறி அவளை ட்ரையல் ரூமிற்கு அனுப்பிவிட்டு மகளுடன் மனைவிக்காய் காத்திருந்தான்.
அருவிக்கு மனம் அடித்து கொண்டது. விஷ்வா ஒரு புரியாத புதிராகவே தெரிந்தான்.
வெறுக்கிறேன் என்று வாய் வார்த்தையால் சொன்னாலும் மனம் அவன் புறம் சாய்கிறது. முழுதாக சாய்வதற்குள் முற்றிலுமாய் விலகிட நினைத்தாள்.
அவன் சொன்னதுபோல் உடையை மாற்றி வெளியே தயக்கத்துடனே வர, அவளை பார்த்தவனின் கண்கள் மனைவியின் அழகில் சொக்கி தான் போனது.
பிரம்மன் படைத்த சிலையென அழகு ஓவியமாய் நவீன உடையில் மனைவியை காணவும் அவளிடம் நெருங்க மனம் துடியாய் துடித்தது.
காதல் மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டு ரசித்திட மட்டும் முடியவில்லை. மனைவியின் அழகை ஆராதிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அருவியின் மனநிலையை கருத்தில் கொண்டு அடக்கிவாசிக்கிறான்.
“லவ்லி” காதல் மின்ன மொழிந்தவன், அவளோடும் மகளோடும் சேர்ந்து செல்ஃபி எடுத்து தள்ளிவிட்டான்.
அவளுக்கு ஏற்ற மாதிரியான சில லெக்கிங்ஸ் அண்ட் டாப்ஸ் எடுத்தவன், அடுத்ததாக பார்லர் அழைத்து சென்றான்.
“இங்க எதுக்கு..?”
“ஹான், உனக்கு ஹேர் கட் பண்ண தான்”
“விளையாடுறியா, முடி வளக்குறது எல்லாம் எத்தனை கஷ்டம் தெரியுமா?” முறைப்புடனே சொல்ல,
“நீ ஆசை பட்டதை நிறைவேத்துறது என்னோட கடமை அருவி”
“மண்ணாங்கட்டி… நீ செஞ்ச கடமையே என்னைய எழுந்துக்க விடாம இருக்கிறப்ப, இது வேறையா?” கோபம் மூண்டது பெண்ணுக்கு.
“என்ன எப்படி வேணாலும் திட்டிக்கோ. யூ ஹவ் ஆல் தி ரைட்ஸ்” சொல்லி கண்ணடிக்க, ” உன்கிட்ட இருந்து எனக்கு டிவோர்ஸ் கிடைச்சாலே போதும்” அழுத்தமான குரலில் சொல்லி மகளை வாங்க முயல,” அது நான் செத்ததுக்கப்புறம் கிடைக்கும்” திடமான குரலில் சொல்லவும் விழுக்கென்று கண்ணீர் மூண்டது அருவிக்கு.
அவனின் முதுகில் ஒன்று போட்டவள், கோவத்தில் முன்னே நடந்தாள்.
பின், பூவினியை ப்லே ஏரியா அழைத்து சென்று அவளுடன் விளையாடி நேரத்தை கடத்தினர்.
மாலைவரை கோவையில் நேரத்தை கடத்திவிட்டு, இரவு போல் குன்னூர் எள்ளநள்ளியை நோக்கி வண்டி சென்றது.
****
அறைக்குள் நுழைந்த அவளுக்கும் அவளை வர சொன்ன அருணிற்கும் ஆச்சரியம் தான்.
“நீ இங்க என்ன பண்ற…?” அருண் சற்று கோபமாய் கேட்பதுபோல் அகல்விழிக்கு தோன்ற, அவனை முறைத்தாள்.
“நான் இங்க புதுசா வேலைக்கு ஜாயின் பண்ணிருக்கேன்” மிடுக்காக சொல்ல,
“ஹோ” என்றவன்” காலேஜ் போறதில்லையா?” கேள்வி கேட்டான்.
“இல்ல” என்றாள்.
“ஏன்? இப்போ இது உனக்கு செம் டைம்ல…? நீ இங்க வேலைக்கு வரது மிஸ். தேனருவிக்கு தெரியுமா? அவங்க எப்படி இதுக்கு சரி சொன்னாங்க?” அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்ப,காண்டானாள் விழி.
“நான் எதுக்கு என்னோட பெர்சனலை உங்ககிட்ட சொல்லணும். நீங்க யாரு அதை கேக்க? வேலைக்கு தான் வந்திருக்கேன். என்னோட பெர்சனலை சொல்ல இல்ல” என்றவள்,” இந்தாங்க சாம்பிள் சாக்லேட்” என்று அவன் டேபிளில் வைத்து விட்டு நகர பார்க்க,அவனோ சொடக்கிட்டான்.
“ஜஸ்ட் என் ப்ரெண்டோட தங்கச்சின்ற ஒரு ரிசன்காக தான் கேட்டது. இங்க நான் உனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளி .சோ கால் மீ எ சார்”ஆளுமையுடன் சொல்லி சாக்லேட்டை டேஸ்ட் பார்த்தவன் அவளுக்கும் ஒரு பீஸ் கொடுக்க வாங்க மறுத்துவிட்டாள்.
“வேண்டாம் சார்.பாஸ்க்குறிய சாக்லேட்டை ஒர்க்கர் சாப்பிடுறது சரி இல்லை” செருக்குடன் கூறி,” நீங்க ஓகே சொன்னா, ப்ராடக்ட்டை டெலிவரி பண்ண குடுத்திடலாம் சார்” வினவினாள்.
“ம்ம்ம்… ஓகே” என்றவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
இங்கே வெளியே வந்த அகல்விழி, இது ஓகே என்று சொல்ல அடுத்தடுத்த வேலைகள் எல்லாம் விரைவாக நடந்தது.
மதியம் போல் அகல்விழி வேலை நடக்கும் இடத்திற்கு பார்வை இட சென்றாள்.
அங்கிருந்த பெண்மணியோ, “வா மா. நீ தான் புதுசா வேலைக்கு சேர்ந்திருக்க பொண்ணா?” கேட்க,
“ஆமா க்கா…” அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தாள்.
சாக்லேட் செய்வதற்கு தேவையான முக்கிய பொருள் கொக்கோ பீன் தான். இது பாக்கு தோப்பு இடையில் வளரும். பெரும்பாலும் இது ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தான் அதிக வளரும். கொக்கோ என்ற பழத்தை காயவைத்து அதில் கிடைக்கும் விதையை கொண்டு தான் சாக்லேட்டை உருவாக்குகிறார்கள். இதில் மொத்தம் நான்கு வகை செய்முறை உண்டு. 1. ரோஸ்டிங் 2.கிளீனிங் 3.கிரைண்டிங் 4.மோல்டிங்
கொக்கோ பீனில் கிடைக்க பெற்ற விதையை முதலில் நன்கு வறுத்தெடுத்து, அதிலிருந்து கிடைக்கப்பெற்றவற்றை இன்னொரு மெஷினில் போட்டு உடைத்தெடுத்து அதில் வரும் தூள்களை தனியாவும் வறுத்ததை தனியாகவும் பிரித்தெடுத்து வைத்துவிடுவர்.
கிடைக்கப்பெற்ற பீனை பால் மில் மெஷினில் போட்டு 50 டிகிரி சூட்டில் கொக்கோ மாஸ்ஸாக மாற்றுகிறது. இது தான் சாக்லேட்டின் முக்கிய மூலப்பொருள் ஆகும். இதனுடன் சுகர், கொக்கோ பட்டர், மில்க் பவுடர் (மில்க் சாக்லேட்) சேர்த்தால் தான் நாம் சாப்பிடும் சாக்லேட் கிடைக்கிறது. இதை எல்லாம் சேர்த்து இருபத்திநான்கு மணி நேரம் அரைபடும், அரைபட்ட சாக்லேட் லிக்கரை மோல்டிங் மெஷினில் வைத்து மோல்டிங் செய்து, பின் கிடைத்த சாக்லேட் லிக்கரை தகுந்த வடிவில் வைத்து உறைய செய்து எடுத்தால் முழுமையான சாக்லேட் தயாராகிடும்.
ஒவ்வொன்றாய் பார்வையிட்டு வந்தவளுக்கு தான் சாப்பிடும் சாக்லேட்டிற்கு இத்தனை வேலை உள்ளதா என்று ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
மாலை ஆறு மணிபோல் வேலை முடித்து வெளியே வந்த விழி, அருணிற்காக காத்திருந்தாள்.
அருண் ஒரு அரைமணி நேரம் கழித்து வர, “சார்” மெதுவான குரலில் அழைக்க திரும்பினான்.
“என்னையா கூப்பிட்ட?” ஆட்காட்டி விரலில் தன்னை சுட்டி காட்டி வினவ,”ம்ம்ம்” கொட்டினாள்.
“அட பார்ரா! மேடம்க்கு மெதுவா கூட பேசத்தெரியுமா?” கேலி குரலில் வினவ,
“சார்! கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும் சார்” தயங்கி தயங்கி சொல்ல,
அவளின் முகத்தில் உள்ள தீவிரத்தையும் தயக்கத்தையும் உணர்ந்தவன், “சரி சொல்லு” என்றான் கைகளை மார்புக்கு நடுவே கட்டி.
“நான் இங்க வேலை பாக்குறதை அக்காகிட்ட சொல்ல வேணாம்”
“நான் ஏன் சொல்ல …” என்றவன் முடிக்கும் முன்பே புருவம் சுருக்கி அவளை கோபமாய் பார்த்தான்.
“தேனருவிக்கு தெரியாமலா வேலைக்கு வர?”
“ம்ம்ம்…”
“ஏன்?இது உன்னோட அக்காக்கு தெரிஞ்சா வருத்தப்படுவா. எதுக்கு இப்டி பண்ற?” அழுத்தமான குரலில் வினவ,ஒரு நொடி சொல்லாது தயங்கியவள், பின் அனைத்தையும் கூறிவிட்டாள்.
கேட்டவனின் புஜங்கள் இரண்டும் புடைத்து, கட்டுக்கடங்கா கோபத்தை மூர்த்தி மீது கொடுத்தது.
****
இங்கே வீட்டை அடைந்த விஷ்வா, அழகாய் தன் தோல் மீது சாய்ந்து தூங்கும் மனைவியை காதலாய் பார்த்திருந்தவனை, பூவினி திசை திருப்பினாள்.
“அப்பா! சுச்சா வது” மகள் கத்தவுமே, மெதுவாய் கண் திறந்தாள் அருவி.
கணவனின் தோல் மீது உறங்கிருக்கிறோம் என்று புரிபட, உடனே விலகிக்கொண்டாள்.
“சாரி..” என்றாள் சன்னக்குரலில்.
“இது உனக்கான இடம் அருவி” சொல்லியவன்,” ஜூனியர்க்கு பாத்ரூம் வருதாம் நான் உள்ள போறேன் நீ வா” என்று குழந்தையை தூக்கி கொண்டு முதலில் வீட்டிற்குள் சென்றான்.
காரை விட்டு இறங்கியவள்,இது யார் வீடு என கேள்வியாய் பார்க்க, “எத்தனை நேரம் அப்படியே நிக்க போற, உள்ள வாங்க பொண்டாட்டி” சிரிப்போடு கூற, குழப்பத்துடனே உள்ளே நுழைந்தாள்.
மனக்கலகத்துடனே உள்ளே நுழைந்த அருவி வீட்டை சுற்றி பார்வையிட்டாள்.
“எவ்வளவு நேரம் இப்டியே வீட்டை சுத்தி பாக்குறதா இருக்கீங்க பொண்டாட்டி”
“இது யார் வீடு? இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க?அப்றம் பொண்டாட்டினு சொல்ற வேலை வச்சுக்கிட்டா கடும் கோபம் வரும் பார்த்துக்க” கேள்வியோடு ஆரம்பித்து கோபத்தினோடு முடித்தாள்.
“பொண்டாட்டியை பொண்டாட்டின்னு சொல்லி கூப்பிடாம போண்டாடின்னா கூப்பிட முடியும்” என்றான் நமட்டு சிரிப்புடன்.
“இது என்ன பேச்சு? அப்புறம் இது யார் வீடு?” சிறு கோபத்தை வெளி காட்ட,
“நம்ம வீடு தான் பொண்டாட்டி. ஒரு சேன்ஜ்க்கு இங்க கொஞ்ச நாள் இருக்கலாம்னு வந்திருக்கோம் . உனக்கு புடிச்ச மாதிரி இஷ்டம் போல இங்க இருக்கலாம். பி யுவர்செல்ப் “புன்னகை விரிய காதலாய் சொல்ல,
” என்ன உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்க நினைக்கிறியா? அதுக்கான ஆல் நான் கிடையாது” கைநீட்டி எச்சரிக்கை விடுத்தாள் அருவி.
“நானுமே உன்னை உன் இஷ்ட படி தான் இருக்க சொல்றேன்.நீதான் அதை கேட்க மாட்டேங்கிற” எப்போதும் அவளுக்காக மட்டுமே வீசப்படும் மோகன புன்னகையை வீசியவன் , வார்த்தைகள் ஒரு வித அழுத்ததுடனே வந்தது.
‘இது என்ன மாதிரியான செயல்’ என்று குழம்பிப்போனாள் பாவையவள்.
“எப்போ உன்கிட்ட இருந்து விடுதலை கிடைக்கிதோ, அன்னைக்கு நான் கண்டிப்பா என் இஷ்டம் போல இருப்பேன்” மொழிந்தவள் அவனை கடந்து செல்ல பார்க்க, பொறுமை இழந்தவன் அவளின் வலக்கரத்தை பிடித்து இடையோடு சேர்த்து தன்னோடு நெருக்கமாக நிறுத்தியவன், அவள் சுதாரிக்கும் முன் இதழோடு இதழொற்றினான்.
அவனிடமிருந்து திமிறி விலகப்பார்க்க, அவனது பிடி மேலும் இறுகி அவளை வதைக்க தொடங்கியது.
அவனது மொத்த ஆசையையும் அந்த இதழிலே காட்டிட துடிக்க, பாவைக்கோ அந்த முத்தம் கசக்க தொடங்கியது.
அவனுக்கு ஏற்றது போல் டீவியில் பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே…..