யாகம் 1

யாகம் ஒன்று

 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தனிவிப்பான்

விநாயகனே விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதனுமாய்

தன்மையினால் கண்ணிற் பணிவிற் கனிந்து

விநாயகனே வினை தீர்ப்பவனே

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே

விநாயகனே வினை தீர்ப்பவனே!’

 

சீர்காழி கோவிந்தராஜன் அவரின் வெண்கலக்குரலில் பக்திப் பரவசமாக உருகி பாடிக்கொண்டிருந்தார். கோவிலுக்குறிய அமைதியில் இப்பாடல் மாத்திரமே மந்திரமாக எல்லா திசைகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. இதோ பாடலும் அமைதியும் எனைக் கவராது என்பது போல ஒருவன் கைககளைக் கூப்பி 

மனம், மூளை இரண்டையும் ஒரு நேர் கோட்டில் இழுந்து வைத்து இதழ்களுக்குள் ஏதோ முனங்கிக் கொண்டிருக்கிறான்.

 

“ஹேய் முருக்ஸ்! நான் போற  காரியம் பழமா இருக்கணும். காயா மட்டும் இருந்திச்சு, உன் அப்பா மிஸ்டர் சிவு கிட்ட சொல்லி அடி பிச்சிட வைச்சிடுவேன். இல்ல இல்ல உன் வைஃப்கும் உனக்கும் டைவர்ஸ் வாங்கி தந்துடுவேன் பார்த்துக்கோ.”

கணபதி சிலைக்கு முன்னின்று முருகனுக்கு வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தான்.

 

“அம்பி! என்னப்பா பெரிய லிஸ்ட போடுற போல, பிரசாதம் எடுத்துக்கோ.” என்று ஐயர் அவன் கவனத்தை திருப்பும் வரையிலும் அவனின் வேண்டுதல் நீண்டே சென்றது. ஐயர் குரலில் நிகழ்வுக்கு திரும்பினான் அவன். கண்களுக்கு முன் நீட்டப்பட்ட தட்டை ஒரு முறை பார்த்து விட்டு தன் முன் இருக்கும் கணபதி சிலையை முகம் சுருக்கி ஒரு பார்வை பார்த்தான்.

 

‘ஐயோ சொதப்பிட்டடா! இட்ஸ் ஓகே 

மிஸ்டர் கணா! ஒன் ஹயர்லி ரிகுவஸ்ட். என் மனுவ கொஞ்சம் உன் ப்ரோ கிட்ட பாஸ் பண்ணி விடு மேன்.’

மானசீகமாக தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு மீண்டும் ஒருமுறை மனதினுள் ஒரு வேண்டுதலை வைத்தான்.

 

“என்னடா அம்பி! கண்ண திறந்துட்டு கனா காணுறியாக்கும். இந்தா விபூதிய வைச்சிட்டு அந்த பக்கம் போய் கண்டுகோ.” ஐயர் அவர் விருப்பத்திற்கு பேசி விட்டு அவன் நெற்றியில் விபூதியை ஒரு கீற்றாக பூசிவிட்டு சென்றிருந்தார்.

 

தன் மீது ஐயரின் கைவிரல் பட்டவுடன் நினைவுக்கு திரும்பியவன், ஏதோ ஈர்ப்புவிசைக்கு கட்டுப்பட்டவனாய் தனது கைக்கடிகாரத்தை ஒரு முறை முகம் சுருக்கி பார்த்தான். ‘ச்சே! இவ்வளவு நேரமா மனுப் போட்டுட்டு இருந்தியா நீ, பொறுப்புனு ஒன்னு உனக்கு சுத்தமா இல்லாம போச்சுடா!’

தனக்கு தானே திட்டிக் கொண்டு, கோவிலின்  வாசல் படிகளினை தன் நீண்ட கால்களினால் இரண்டு இரண்டாக தாவி வேகமாக வாயில் அருகே வந்துசேர்ந்தான் அவன்.

 

‘அச்சோ, இந்த இரட்டை குழந்தையைக் கூட ஐடெண்டிஃபை பண்ணிடலாம் ஆனா கோவில்ல ஷூவைக் கண்டுபிடிக்க எவ்வளோ கஷ்டம்டா சாமி’ தனக்குத் தானே பேசுவதில் இவன் முனைவர் பட்டம் எதுவும் வாங்கியிருப்பவன் போல. ஏதோ பேசிக்கொண்டு, ஒரு வழியாக தனது நீண்ட நேர தேடலை முடித்து தலைநிமிரும் போது அவன் கண்களுக்கு கிடைத்தது என்னவோ அவன் தேவதையுடைய தரிசனம் தான்.

 

“ஈஈஈ, டெடி! சாரிடா ரொம்ப லேட் பண்ணிட்டனா?” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்காெண்டு தனது பென்ஸ் காரில் வலது காலினை மடக்கி வைத்து, காற்றில் கூந்தல் கவிபாட, கைகளில்லாத ஷர்ட், டெனிம் சகிதம் நவீன மங்கையாக அவன் தேவதை அவனை முறைத்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வை சென்ற இடம் என்னவோ அவன் நெற்றி மீது வீற்றிருந்த விபூதியிடம்தான்.

 

“சாரி, சாரி டெடி!” வாய் மன்னிப்பை யாசித்த போதும், வலது புறங்கை   தன்னிச்சையாக விபூதியை துடைத்துக் கொண்டிருந்தது. மென்நீல நிற சட்டை, அடர்நீல நிற டெனிம், பிரபல வியாபாரக்குறியுடன் கூடிய ஷூ என பின் இருபதுக்குறிய ஒரு வசீகரத் தோற்றமுடைய அவன், ஒரு குழந்தையாக மாறி அவனுடைய தேவதைப் பெண்ணின் ஒரு அழுத்தப் பார்வைக்குக் கட்டுப்படுவது அந்த நொடியில் ஒருவரிக்கவிதையாக அரங்கேறியது.

 

அவனுடைய சிறுபிள்ளைத்தனமான  

செய்கையைப் பார்த்து இம்முறை முறைப்புக்கு பதிலாக சிறு இதழசைப்பை அவனுக்கு பரிசாக வழங்கியிருந்தாள் அவள்.” ப்ச், சின்னு! என்ன இந்த தடவையாச்சும் சரியா மனுப்போட்டியா?” ஒரு குறும்பு புன்னகை அவள் கண்களில் அப்பட்டமாக வெளிப்பட அவன் முகத்தையே பார்த்திருந்தாள் பெண்ணவள். “ட்டூ யாரா இருந்தா என்ன, ஃப்ரம் எமன் தானே! டூ யு நோவ் சம்திங் இதுக்கு முன்னமே இருபது பேர எமனுக்கு அனுப்பியாச்சு. இது மட்டும் என்ன ஆகிடப் போகுது?” அவன் பேச பேச அவளுடைய கண்களில் இருந்த குறும்பு அத்தனையும் வடிந்து முகம் சுருங்கி கண்கள் வன்மமாகப் பளிச்சிட்டது.

 

அடுத்து எந்த வித வாய்மொழிகளும் இல்லாமல், தனது இடது கை கொண்டு அவளது பென்ஸ் காரின் கதவினைத் திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, அவனையும் உள்ளே வருமாறு கண்களால் கட்டளையிட்டாள் பாவை. பாவை பார்வை மொழியறிந்த சின்னுவும் அவள் மறுபக்க இருக்கையில் அமர்ந்து, முதலில் அவளுக்கான இருக்கைப் பட்டியை அணிவித்து அவனும் அணிந்து கொண்டான். அடுத்த நிமிடம் அந்த கறுப்பு பென்ஸ் வண்டி அவள் கைவர்ணத்தில் அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்னையின் எல்லையைக் கடந்து கொண்டிருந்தது.

 

கதிரவனின் கருணையில் தோன்றிய கானல் நீரினை அந்த ஊர்தி கிழித்துச் செல்ல, உள்ளிருந்த  சின்னுவுக்கும் அவனுடைய டெடிக்கும் இடையில் மௌனம், மௌனம் மட்டுமே! நிசப்த நேரங்கள் எப்போழும் பேரழகுதான் ஆனால் எல்லா நிசப்தங்களும் அத்தனை இனிமையை வழங்குவதில்லையே.

புயலுக்கு முன் வரும் அமைதி இரசனைக்கு உரியதில்லை. அது போல இவ்வண்டியின் உள் சூழ்ந்த அமைதியும் ஏதோ ஒன்றை யாரோ ஒருவனுக்கு உணர்த்த காத்துக் கொண்டிருப்பது அத்தனை உண்மை.

 

அந்த மௌன மாயையை மெல்லச் சிதைத்தது என்னவோ சின்னுவுடைய கையடக்க தொலைபேசிதான். ஏதோ ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாக சிறிதாக சிணுங்கியது. “ஏய் டெடி! மாமாட்ட இருந்து டெக்ஸ். உன் இந்தர் கால்ஸ் எதுவும் அட்டன் பண்ணல போல உன்ன பேச சொல்லி இருக்கார் மாம்ஸ்.” முகத்தில் ஒருவித கோப ரேகைகள் படர அவளுக்கு விடயத்தை விளக்கிக் கொண்டிருந்தான் சின்னு.

 

அவனுடைய கோபத்திற்க்கான காரணம் அறிந்த பெண்ணவள் முகத்தில் மீண்டும் புன்னகை ஒட்டிக் கொண்டது மாத்திரமல்லாமல், ‘சின்னுக்கு பொசசிவ் பார்ரா!’ என்று மனதிற்குள் எழும் குரலை தொண்டைக்குள் அடக்கி வைத்துக் கொண்டாள். “அலெக்ஸா கால் குட்டா.” 

‘சாரி காலர் இஸ் நாட் ரெஸ்பான்ஸ்பிலிங்.’

செயலி சரியாக செயற்பட்டு மீண்டும் அவள் கோப முகத்தை வெளிக் கொணர்ந்தது. “அலெக்ஸா கால் சந்துரு!” அடுத்து அழைக்கப்பட்டது என்னவோ இந்தரின் காரியதரிசிக்குத்தான். முதல் அழைப்பிலேயே பவ்யமாக அழைப்பை ஏற்றவர், பேசலானார்.

 

“மேம், சா… சார் மீட்டிங்ல இரு…” பேச்சை முடிப்பதற்கு முன்பே அவள் கேள்விக் கணைகளை வீசினாள். “இப்போவே மணி பத்தாச்சு. இந்த அன் டைம்லயும் உங்க சார்க்கு மீட்டிங் முடியல? எப்பாே முடியும்?” பதில் என்னவோ இன்னும் அரை மணி நேரத்தை அந்த வியாபார உடன்படிக்கை கூட்டம் தன்பக்கமாக இழுத்துக் கொள்ளும் என்பதாகவே இருந்தது. “வெல், ஷார்ப்பா பத்து முப்பதொன்னுக்கு இந்தர் என்கூட பேசியாகணும், இல்லனா அமெரிக்கா ரிட்டன் ஆபிஸா இருக்காது. நிரந்தரமா உங்க வீடுதான் மிஸ்டர்” அடுத்து எந்தவித பதில்களுக்கும் சமாளிப்புக்களுக்கும் இடந்தராமல் அழைப்பைத் துண்டித்து இருந்தாள் அவள்.

 

அவளுடைய கோப முகத்தையும், வேகமாக வண்டியை ஓட்டும் லயத்தையும் அசூசையாக பார்திருந்தான் அவள் சின்னு. தனக்குள் சிக்கி தவிக்கும் பெண்ணவளை எப்படி பேசி சரிக்கட்டுவது என்பது சில நேரங்களில் அவனுக்கு ஒரு புதிராகவே அமைந்து விடுகின்றது என்பதை விட அவளே அமைத்து விடுகிறாள். இன்னும் மூன்றே நாட்களில் அவளும் அவளவனும் அருகில் அமர்ந்து சரிபாதியாக திருமணபந்தத்தில் இணைய வேண்டியிருக்கும் பட்சத்தில் அவனோ  அமெரிக்கா எனும் தேசத்தில், இந்தர் எனும் ஒருவன் இப்போது சின்னு கண்முன் இருந்திருந்தால், அவன் நிலமை நிச்சயம் பரிதாபம் தான். 

 

யாரிடமும் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத பாவை இன்று இந்தரின் காரியதரிசியிடம் கோபமாக பேசியதற்கு காரணம் அவர்களுடைய திருமணம் தான். எத்தனையோ எதிர்பார்ப்பு, எத்தனை எத்தனையோ காத்திருப்புகளுக்கு பின்னான திருமணம் இது. ‘ஹா முடிந்துவிட்டது’ எனும் விதமாக மூச்சுவிட பல முயற்சிகளை இத்திருமணம் தன்பால் ஒளித்து வைத்துள்ளது.

 

இருவரும் சிந்தனை ரேகைகள் படரும் முகத்தை வைத்துக்கெண்டே மீதிப்பயணத்தை தொடர்ந்தனர். அடுத்து ஒரு மணித்தியாலமும் கடந்திருந்தது. இந்தரிடம் இருந்து எவ்வித அழைப்புகளோ இல்லை, ஒரு குறுஞ்செய்தியேனும் அவளுக்கோ அவனுக்காே வரவில்லை. அதைப்பற்றிய சிறு நெருடல் மனதினில் எழுந்தாலும், இன்றைய நாளுக்கான அவர்கள் திட்டமிட்ட பணி அவர்கள் இருவரையும் உள்ளீர்த்தது.

 

கார் சென்னை புறநகரைத் தாண்டி ஆள் அவரமில்லாத, காட்டினை ஒட்டிய ஒரு ஒதுக்குப்புறமான பாதையில் சென்று நிர்மானப்பணி முடிந்தும் முடியாமலுமிருந்த ஐந்தடுக்கு கட்டிடத்தின் முன்  நின்றது. காரின் முன் இருபக்க கதவுகளையும் திறந்துகொண்டு அவனும், அவளும் கட்டிடத்தின் மாடிக்குச் செல்லும் படிகளில் தடதடவென ஓடியேறி மூன்றாம் தளத்தினை அடைந்தனர். பின் கால்களினை அழுத்தமாக ஊன்றி

ஓர் இருட்டு அறை கதவின் நிலைப்படியில் இருபக்கமும் சாய்ந்து நின்றனர்.

 

இருவர் முகங்களிலும் இப்போது வேட்டையாடும் சிங்கங்களின் சாயல் வந்துபோனது. கண்கள் பளபளக்க அவர்கள் கண்ட காட்சியென்னவோ, அவ்வறையின் கடைசிச் சுவரில் ஐம்பது வயதுகளை மதிக்கத்தக்க ஒருவன் தலைகீழாக இரத்தமும் சதையுமாகத் தொங்கிக் கொண்டிருப்பதும், அவனை நான்கு ஐந்து அடியாட்கள் கைகளில் உருட்டுக் கட்டை, ஹாக்கி மட்டை சகிதம் சூழ்ந்து நின்றிருப்பதும் தான். நான்கு ஐந்து வேக எட்டுக்களை வைத்து இருவரும் கட்டப்படவன் அருகில் சென்றனர்.

 

கண்களில் ஏதோ இருள் உருவமாக இவ்விருவரும் அருகில் வந்த காட்சி புலப்பட்டு, கட்டப்பட்டவன் கண்களை இலேசாக திறந்து முனங்க ஆரம்பித்தான். “எ…என் பொ…பொண்ண விட்ட்ட்… டுங்க, ச்சின்ன பொ…பொண்ணு அவ. ஸ்கூல் க்கூட இன்… இன்னும் முடிக்கல.” 

 

“ஹா!ஹா! உன் பொண்ண விடுறத்துக்காகவா தூக்கினோம். ப்ச் முடியாது.” என்று சத்தமாக சிரித்தாள் அவள். “நீ… நீயும் ஒரு பொண்ணு  தான? எம் எம் பொண்ண எதும் பபண்ணிடாத!” என மேலும் முனங்கிக் கொண்டுருந்தான் அந்த வயதானவன். 

 

“பார்ரா நான் பொண்ணுனு யார் சொன்னதாம். நான் பெண்ணோ இல்ல பேயோ அது நான் மட்டும் எடுக்க வேண்டிய முடிவுடா!” பற்களைக் கடித்தவாரே வார்த்தைகளைத் கடித்து துப்பினாள் அவள். சின்னுவோ தன் முப்பத்து இரண்டு பற்களும் வெளித்தெரியும் படி இதழ்களை நன்கு விரித்து, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

 

“த்தம்பி நீ நீயாச்சும் ச்சொல்லுப்பா எம் எம் பொண்ண விட விட”.அவன் முடிக்கும் முன்னே சின்னு பேச ஆரம்பித்தான். “ப்ச் உன் பெண்ண விடுறதா? நான் எவ்வளவு கற்பனை பண்ணிவெச்சிருக்கேன். யோவ் நீ வேற!” மந்தகாசமாக புன்னகைத்த படி கைகளினை தலைக்கு மேலுயர்த்தி சோம்பல் முறித்தவாரு பதிலளித்தான் சின்னு. அதற்கு அவளோ, “சின்னு! டூ யு வாண்ட் ஹேர்?” என்று சிரித்தாள். “வை நாட் டெடி? ஷீ இஸ் லுக்கிங் சோ ப்பிரிட்டி.” என்று ஒற்றைக் கண் சிமிட்டிச் சிரித்தான்.

இதையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அடியாட்கள் அனைவரும் கலகலவென கைதட்டி சிரித்தனர்.

 

எந்த மகளைப் பெற்ற தந்தையும் கேட்கக் கூடாத வார்தைகள் இவை. நெஞ்சில் ஏதோ விசவாள் கொண்டு வெட்டியது போல் துடித்த அவ்வயதானவன்

திமிரிக் கொண்டு உச்ச ஸ்வரத்தில் கத்தலானார். “ச்சீ நீங்க எல்லாம் யார் கூடவும் பிறக்கவில்லையா? எம் பொண்ணு குழந்தைடா! அவள விடுங்கடா. அவளுக்கு பதில் என்ன என்னவேணும்னாலும் பண்ணிக்கோங்கடா.” 

 

“வ்வெல்! ஆடு தலைய நீட்டி வெட்ட சென்னா. வெட்டிட வேண்டியதுதான்.” என்றவாரு அருகில் நிலத்தில் கிடந்த ஹாக்கி மட்டையை எடுத்து அவளுடைய கைகள் வலிக்கும்வரை அவன் முதுகு, கை, முகம் என அனைத்துப் பகுதிகளிலும் அடித்தாள் அவள். அவ்வாறு அடிக்கும் போது அவனின் சதை கிழிந்து சில பல உதிரத்துளிகள் அவள் முகத்திலும் நிலத்திலும் தெறித்தது.

 

உதிரச் சூடு முகத்தில் பட்டவுடன் கைகள் அடிப்பதை நிறுத்தி விட்டு இரண்டெட்டு பின்னால் சென்று, சின்னுவுடைய தோள்களில் முகத்தை இறுக்க அழுத்திக்கொண்டாள் அவள். அதனால் அவள் முகத்திலிருந்த உதிர துளிகள் சின்னுவின் சட்டையில் ஒட்டிக் கொண்டது. இத்தனை அடிகளையும் வாங்கிய அவன் குத்துயிராய் கசங்கி கொண்டிருந்தான். சின்னுவுடைய கை வளைவுக்குள்  இருந்து முகத்தை மட்டும் வெளியில் இழுத்து காட்சிதந்தாள் பெண்ணவள்.

 

“முடிந்ததுனு நினைச்சியா? ம்ஹூம், முடியல!” என்று சொல்லும் போதே ஒரு அடியாள் மென்மஞ்சள் திரவம் அடங்கிய குடுவையொன்றை அவன் வாய்யருகினில் சரித்தான். “ம்ம் அவசரமா குடி, முடிஞ்சிடும்” என இரு பொருள்பட கூறினாள். அடுத்த நிமிடமே அத்திரவம் அவன் தொண்டை முதல் குடல் வரை தீக்கிறையாக்கியது. “ஹா! ஹா” என பெருங்குறளெடுத்து அவன் அலறியது அவ் ஐந்தடுக்கு கட்டிடத்தையே அசைத்தது.  

 

“எரியுதா? எரியட்டும், இப்படியே போய் சேரு ஆனா நிம்மதியா இல்ல. ஏன்னா நான் உன் பொண்ண விடபோறது இல்லை” சிறு குரலில் கண்கள் மின்ன பேசினாள் அவள்.

 

அதிர்ச்சியும் அருந்திய அமிலமும் அகமும் புறமும் தகிக்க, உடல் முழுவதும் இரத்தத்துளி சொட்ட, கண்கள் விட்டதில் கடைசியாக அவன் மகள் முகம் பார்த்ததோ என்னவோ! விட்டத்தை நோக்கி விளிபிதுங்கி, அவன் உயிர் கால் கட்டை விரலினுடாக பறந்து சென்று ஆவியாகி அடங்கியது. கைகளால் சின்னுவுடைய இடையைக் கட்டியவாரு அக் காட்சினையினை பார்திருந்தாள் மாது. அவள் முகத்தில் இன்னது என்று சொல்ல முடியாத உணர்ச்சி ஆனால் அவள் முகத்தில் இருப்பது போல எந்த வித உணர்வும் இல்லாத கண்ணாடிப் பாத்திரத்தின் சாயலில் சின்னுவும் அவளை அணைத்தவாரு நின்றிருந்தான்.

 

நிமிடமுள் இரண்டு தடவை கடிகாரத்தை வட்டமடித்து, இரண்டு நிமிடத்ததை கடத்திய பின்னர் அவ் இடத்திலிருந்த மோன நிலை மாறியது. அடுத்து என்ன என்பது போல அடியாட்களுக்கு கண்களால்  கட்டளையைப் பணித்து விட்டு அவள் சின்னு, அவளை அழைத்துக் கொண்டு கட்டிடத்தின் கீழ் கார் அருகே வந்திருந்தான். காரின் கதவை திறந்து அமரச் சென்ற சின்னுவை, தனது இடது கை கொண்டு இறுக்க அணைத்து விட்டு, “ஷர்ட் சோல்டர்ல இரத்தமா இருக்கு சின்னு, மாத்திக்கோ” என்றாள். சின்னுவும் அதன் பின்புதான் அவள் அணைத்திருந்ததால் அவன் சட்டையில் ஒட்டிக் கொண்ட உதிரத் துளிகளை கவனித்து விட்டு, காரின் பின் இருக்கையில் இருந்த, ‘அவசர தேவைக்கு உதவட்டும்’ எனும் வகையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த சட்டை ஒன்றை எடுத்து அணிந்துகொண்டான்.

 

அவன் சட்டை மாற்றும் வரையில், அவனது முதுகை வேடிக்கை பார்திருந்தாள் பெண்ணவள். அவன் மீண்டும் காரின் முன் பக்க கதவினைத் திறந்து அவளை உள்ளே வந்து வண்டியை எடுக்க சொல்லும் வரையிலும் அவன் முதுகையும், முகத்தையும், இங்கும் அங்கும் அசையும் அவன் கண் கருமணிகளையே விடாது பார்த்துக் கொண்டிருந்தாள். “டெடி! பார்த்தது போதும் வண்டியை கிளப்பு” என்று அவன் சொன்னதும் தான் தாமதமின்றி மீண்டும் கார் சீரிப் பாய்ந்தது, அவள் கைகளில்.

 

அரை மணி நேரம் வண்டி காட்டு வழியே சென்று, ஓர் இரும்பு கொள்கலன் களஞ்சிய சாலையின் நுழைவாயில் முன் கீர்ச்சிட்டு நின்றது. மீண்டும் வேக எட்டுகளுடன் ஒரு வெள்ளை நிறத் தகட்டு கொள்கலனை அடைந்து , அதன் இரு பக்கவாடுகளிலும் நின்ற இரண்டிரண்டு அடியாட்களை கையசைத்து வெளியே செல்லுமாரு சைகையிட்டான் சின்னு. அவர்கள் சென்றதும், கொள்கலனின் கதவினை கைமுட்டியால் தள்ளித் திறந்தான் அவன். அவன் திறந்த வேகத்தில் மென்னொளி அவ் இடமெங்கும் பரவியது. அவ் ஔியின் நடுவே கண்களை கறுப்புத் துணி கொண்டு மறைத்து, கை கால்கள் எல்லாம் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் பாடசாலை சீருடையில் பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிட்டொன்று அமர்ந்திருந்தாள்.

 

இத்தனை கணமும் சின்னுவுக்கு பின் நின்ற அவனது தேவதை, அவன் தோள்பட்டையில் அவள் தோளுரசி அவனைத் தள்ளிக் கொண்டு அச் சிறுமியிடம் சென்று மண்டியிட்டு அமர்ந்து, அதன் கன்னத்தில் தட்டினாள். அவள் செய்கையைப் பார்த்து சின்னுவுடைய இதயமெங்கும் பனிமழையாய் பொழிந்தது. அவளுடைய கையின் சில்லிட்ட குளிர் அச்சிறுமியின் முகத்தில் படர்ந்து, மெல்ல கண்விழித்த சிட்டு, “யார்? யாரு, என்னக் காப்பாத்துங்க பிளீஸ்!” என்று அழுதது. உடனே சின்னு விரைந்து வந்து அச்சிறுமியின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டான்.

“அண்ணா, அக்கா என்ன யாரோ கடத்திட்டாங்க பிளீஸ் பண்ணி என்ன வீட்டுல விடுறீங்களா” என சின்னுவுடைய கைகளைப் அழுத்த பற்றிக் கொண்டது அக் குழந்தை.

 

உடனே சின்னு, “அழக்கூடாது கண்ணா, நான் போலிஸ்க்கு கால் பண்ணிட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வந்து உன்ன கூட்டிப்போய் வீட்டுல விடுவாங்க. குட் கேர்ள்ஸ் அழமாட்டாங்கல? பீ போல்ட் கண்ணா” என தட்டிக் கொடுத்து, தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து அவன் உள்ளங்கையின் அளவிருந்த சாக்கலேட் ஒன்றை எடுத்துக் கொடுத்தான். அவன் சாக்லேட்டை கொடுத்ததைப் பார்த்து அவன் டெடி முகத்தைச் சுருக்கி வேறுபுறம் திரும்பிக் கொண்டாள். ஒரு நிமிடம் அவள் செய்கையில் இங்கு யார் குழந்தை என்பது புரியாதது போல் இடவலமாக தலையை அசைத்து பற்கள் தெரிய சிரித்தான் அவன்.

 

அதற்கிடையில் வெளியில் வண்டி வந்து நிற்பதும், ஷூக் கால்களில் நடப்பதுமான அரவம் கேட்டது. அடுத்து இரு பெண் காவல்துறை அதிகாரிகள் கொள்கலனுள் வந்து அச்சிறுமியை விசாரித்து அழைத்துச் சென்றனர்.

 

அதன்பின்னதாக உயர்காவல்துறை அதிகாரி ஒருவர் கொள்கலன் உள்ளே வந்து, வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் காட்டி, தன் தலையை ஒரு கையால் சுரண்டிக் கொண்டு நின்றார். “மேம்” “உங்களுடைய தங்கை மகளுக்கு எங்க மெடிக்கல் காலேஜ்ஜின் அட்மிசன் வீடு தேடி வரும் அண்ட் தலைக்கு பத்துலட்சம் அமௌன்ட் உங்க எல்லோரோட அக்கவுண்ட்கும் போட்டாச்சு” சின்னு நாடியை நீவியவாரு மேலும் பேசினான். 

 

“அந்த பொண்ணு கிட்னாப் அண்ட் அவ அப்பன் மர்டர் கேஸ்ஸஸ் அஹ் முடிச்சிடுங்க” நீண்ட விளக்கமொன்றை வழங்கியிருந்தான் அவன். அவளே அவன் பேசும் உதடுகளையும் அவன் புருவ ஏற்ற இறக்கங்களையும் விழிவிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அன்றைய நாளுக்கான அனைத்துத் திட்டங்களையும் செவ்வன செய்த திருப்தியில், கார் மீண்டும் சென்னையை நோக்கிப் புறப்பட்டது. இப்போதும் அதே வேகத்தில் அவள் கைகளில் கார் பாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் முன்பு போல அமைதியில்லை. அவர்கள் இருவருக்கும் பிடித்தமான அர்ஜித் சிங் பின்னணியில் கசிந்துருகி ஹிந்தியில் பாடிக் கொண்டிருந்தார். பிற்பகல் இரண்டு மணிபோல கார் சென்னயைில் பிரபலமான உணவு விடுதி முன் நின்றது.

 

எப்போதாவது சென்னை வரும் போது இந்த உணவகத்திற்க்கு வாடிக்கையாக வருவதினால் முன்கூட்டியே இவர்களுக்கான உணவுகளை முன்பதிவு செய்து வைத்திருந்தனர். அதன் படி அதிக வசதிபடைத்தவர்களுக்காக அறை அறையாக பிரிக்கப்பட்டிருந்த ஒரு உணவு அறையின், மேசையின் எதிர் எதிர் திசையில் முகம் பார்த்து இருவரும் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரத்திலேயே சிற்றூழியனொருவன் வாசனை நுரையீரலை நிரப்பும்வர்ணம், ஆட்டிறைச்சித் துண்டுகள் இடப்பட்ட பிரியாணியும் நெருப்பில் வெந்து சிவந்த மேணியுடைய முழுக் கோழியையும் கொண்டுவந்து வைத்துச் சென்றான். சின்னு அவளுக்காக ஒரு தட்டில் உணவினை வைத்து, அவளிடம் நீட்டினான். அவளே அருகில் இருந்த முட்கரண்டியை இடது கையில் எடுத்து உணவில் கோலம் போட்டவாரு இருந்தாளே தவறியும் ஒருவாய்கூட உண்ணவில்லை. “ப்ச்”, சலிப்புடன் தோளைக் குலுக்கிவிட்டு, அவள் அருகிலிருந்த நாற்காலியில் அவளை இடித்துக் கொண்டே அமர்ந்தான்.

 

“டெடி, சாரிமா! என்னோட பங்கு சாக்லேட் தானடா அந்த பாப்பாக்கு கொடுத்தன்”, முகம் சுருக்கி அவன் மன்னிப்பு கேட்ட விதத்தில் எழுந்த சிரிப்பை கீழ் இதழைக் கடித்து அடக்கிவிட்டு, “உன்னோடது எல்லாமே என்னோடது மிஸ்டர் சின்னு” எனச் சிரித்தாள். “அப்போ இந்தரோடது?” கேள்வியாய் வினவினான் அவன். ” இந்தரோடது இந்த பெண்ணோடது” என தன் இதயத்தை ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டி கிளுக்கிச் சிரித்தாள் அவள். “அதுதான் கால்ப் பண்ணி பேசினான் உன் இந்தர் அலைஸ் குட்டா” நீட்டி முடக்கினான் அவன். “ஐயோடா, யூ போத் ஆர் மை சோல் புரோபர்டிஸ்! இப்போ அமெரிக்கால நடுராத்திரி இரண்டு மணி, நாளைக்கு விடிஞ்சதும் முதல் போன்கால் எனக்குத்தான் பண்ணுவான். பாத்துகலாம் விடு!” அவன் கன்னம் தட்டி வெண்பற்கள் காட்டிச் சிரித்தாள் பெண்ணவள்.

 

“ப்பாஹ்! அவரைச் சொன்னா இங்க ஒன்னு முறைச்சி சிரிக்குது” என மீண்டும் தோளைக்குலுக்கி விட்டு, ஒரு துண்டு கோழிக்காலை கையில் எடுத்து, “தேங்ஸ் எமன்ஸ் ஃபார் யூர் சிக்கென்! நீ உயிர எடுத்து நான் சாப்பிட கொடுத்திய, ஜெயிச்சிட்ட எமா! என் குட்டி ஹாட் அஹ் ஜெயிச்சிட்ட நீ!” இரண்டு கைகளையும் விரித்து தலைக்கு மேல் தூக்கி நாடக பாணியில் சொல்லிக் கண்சிமிட்டினான் சின்னு. “ஆ… காட்டு டெடி” என்று ஏதேதோ பேசி அவளுக்கு ஊட்டிவிட்டு அவனும் அதே தட்டில் உண்டு முடித்து, இருவரும் வெளியே வந்தனர்.

 

இவர்கள் அறையின் கதவைத் திறந்து வெளியே வந்த நிமிடம், அவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு ஐம்பத்து ஐந்து வயது மதிக்கத்தக்கவரின் குரல் அவளை, அவள் பெயர் சொல்லி அழைத்து. “ஹலோ மிஸ் அமரா!, நைஸ் டூ மீட்டிங் யூ” என்றது. சம்பிரதாயத்துக்கும் முகத்தைத் திருப்பி பார்க்காமல் நின்றிருந்தனர் இருவரும். மீண்டும் அப்பெரியவர் அமராவின் அருகினில் வந்து, “மிஸ் அமரா, நான் அழைத்தது கேட்கவில்லையா? என ஹிந்தியில் வினவி இது எனது மகன் ரோகித்” என அறிமுகப்படுத்தினார் அவர். “ஹாய் மிஸ்டர், வெல் நீங்க யாருனு தெரிஞ்சிக்கலாமா?” என தமிழில் வினவினாள் அவள். “என்னமா இப்படி கேட்டுட்ட ரோகித் குரூப் கம்பனி எங்களோடது தான், போன வாரம்கூட உங்க பைனான்ஸ்ல, கம்பனிகாக கொஞ்சம் லோன் கேட்டு இருந்தோமா, பார்த்து செஞ்சி விடுமா! ஜஸ்ட் நூறு சீ தான்” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ரோகித், அமராவை பார்வையால் கபளிகரம் செய்து கொண்டிருந்தான். அமராவுடைய ஐந்தங்குல குதியுயர்ந்த பாதணி தொட்டு அவனை விட இரண்டங்குலம் உயர்ந்து நிக்கும் அவள் உயரம், உயரத்துக்கான எடை, தோலின் பளபளப்பு என பார்வையை மேயவிட்டு அவளின் சற்று கூம்பிய உதடுகளின் இரேகைகளில் பார்வையை நிலைக்க விட்டு, அவன் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டே, “அமரா யூ லுக்கிங் கார்ஜியஸ்!” என பாராட்டு பத்திரம் வாசித்தான்.

 

அவனை ஒரு வெட்டும் பார்வை பார்த்து, இதையனைத்தையும் தனது இரண்டு கைகளையும் ஜீன் பாக்கட்டினுள்  வைத்தபடி பார்த்து நின்ற சின்னுவிடம், இடது புருவத்தை உயர்தி காட்டி விட்டு, “ஐ டோன்ட் லைக் காம்பிளிமென்ட்” என்று கூறினாள் அமரா. ‘நீ யார் எனைப் பாரட்ட? உனக்கு அந்த உரிமை யார் கொடுத்தது?’ என முகத்தில் அடித்தது போலிருந்தது அவள் பதில். அந்த அவமானத்தால், ரோகித் அவ்விடம் இருந்து நகர்ந்து கழிவறை நோக்கி சென்றான். அவன் பின்னாலே சின்னுவும் சென்றான். இங்கு அமரா, ரோகித்தின் தந்தையிடம் அமைதியாக ஆனால் நிமிர்வாக பேச ஆரம்பித்தாள். “மிஸ்டர் இது ஜஸ்ட் எ ஹோட்டல், ஒன்னும் என்னோட கம்பனியோட மீட்டிங் ஹால் கிடையாது. அன்ட் மோர் ஓவர் நீங்க கேக்குறது லோன், சோ  மீட்டிங் ஹால்ல கூட உக்காந்து எங்கிட்ட பேச முடியாது. எதும் ப்ரான்ச் மேனஜர் டீல் பண்ணுங்க, இது உங்க வயசுக்கு கொடுக்குற மரியாதை மட்டும் தான் இல்லனா” வாக்கியத்தை முடிக்காமல் விடுவிடுவென நிமிர்ந்த நடையுடன் தனது கார் நிறுத்தி வைத்துள்ள இடத்தை நோக்கிச் சென்றாள் அவள். இது தான் அமரா தேவைக்கு அதிகமாக யாரிடமும் சின்ன வார்தையை கூட பேசமாட்டாள். அவள் விருப்பு என்ற ஒன்று இல்லாமல் யாருக்காகவும் துரும்பைக் கூட அசைக்கவும் மாட்டாள், அதே நேரம் பிறர் விரும்பினால் கூட அவளிடமிருந்து ஒதுங்கி போகவும் முடியாது, காந்ததின் முனை போல நெருங்கவும் முடியாது, அவளாக நெருங்கினால் விலகவும் முடியாது. நிமிர்வு, அதிகாரம், அழுத்தம் இவளிடம் பிறக்கும் முன்பே மூளைக்குள் புகுத்தப்பட்ட தந்தைவழிச் சொத்துகள். மொத்தத்தில் அமரா எனும் கேள்விக்குறி, அவளைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களை வளைவுகளாக வளைத்து முற்றுப்புள்ளியில் மூடி புதைத்துவிடும். 

 

ஒரு இருபத்து ஐந்து வயதுப் பெண் இவ்வாறு பேசி சென்றதில், கையறுபட்ட நிலையில் தனது மகனுக்காக காத்திருந்தார் ரோகித்தின் தந்தை. இன்னும் சற்று நேரத்தில் இரத்தம் சொட்ட மகனைக் கைத்தாங்களாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதை அறியாமல். அங்கு சின்னுவோ ரோகித்தின் பின்னால் மறைந்து சென்று கழிவறை உட்புற சுவரின் மீது, ரோகித்தை அசையவிடாமல் அழுத்திப்பற்றி, வலது கையினை முஸ்டியாக இறுக்கி ரோகிதுடைய மூக்கில் ஒரே குத்தாக குத்தி இரத்ததை வரவைத்தான். வலியுடன் ரோகித் “ஏய், யார்டா நீ? என்ன அடிக்க உரிமை யார் கொடுத்தா உனக்கு. நான் யார்னு தெரியுமா? இரு போலிஸ கூப்பிடுறேன்” என பிதற்றினான். “உன்ன அடிக்க யாரும் எனக்கு உரிமையைக் கொடுக்க தேவையில்ல, ஆனா அமராவோட நிழலை பார்க்ககூட உனக்கு உரிமை கிடையாது. மீறிப்பார்த்தா உயிர் இருக்காது” என மீண்டும் மூக்கில் ஒரு குத்ததை விட்டான். “நீ யாருனு எனக்கு தெரிய வேண்டிய அவசியம் ஏதுமில்ல பட் அமரா இஸ் மை கோட் ஏஞ்சல், அவள இன்னொரு தடவ பார்த்த உன் அப்பனுக்கு நீ மகனாயில்ல சாம்பலாக கூட மிஞ்ச மாட்ட” பேசிக் கொண்டே மீண்டும் வயிற்றில் ஒரு குத்தை விட்டான். எதிர்பாராத இத்தாக்குதல், அதிலும் நெடுநெடுவென வளர்ந்த சின்னுவினுடைய அடிக்கு பதில் தாக்குதல் கூட வழங்கமுடியாத நிலையில் ரோகித் வயிற்றைப் பிடித்துக் கொண்டு நிலத்தில் சரிந்தான். சின்னுவோ விடுவான் என்றில்லாமல் கடைசியாக அவன் வயிற்றில் ஓங்கி ஒரு மிதி மிதித்து, “என்ன கேட்ட, ஹான் என்ன கேட்ட! நான் யாருனா? ஹா ஹா நான் நல்லவனுக்கே கெட்டவன்டா! பாய், பாய் ஸ்வீட் ஹாட்” என பறக்கும் முத்தத்தை காறில் கலக்க விட்டு, கையில் ஒட்டியிருந்த இரத்ததை குளியலறைத் தாள் ஒன்றில் துடைத்து, ரோகித் மீதே வீசியெறிந்துவிட்டு அமராவைத் தேடிச்சென்றான் அவளுடைய சின்னு.

 

அமராவோ கண்களில் கறுப்பு நிறக் குளிர்கண்ணாடி அணிந்து காரின் கதவில் சாய்ந்துகொண்டு, அவ் உணவகத்திற்கு நேர் எதிரில் அமைந்துள்ள ஒரு தள்ளுவண்டிக் கடையில் சோளங்களை நெருப்பில் சுடுவதைப் பார்த்திருந்தாள். மிதமான நெருப்புப் பொறிகள் காற்றில் இங்கும் அங்கும் அசைந்து செல்வது என்னவோ அவள் கண்களுக்கு மட்டும் இதயதினுள் தகித்து பற்றியெரியும் எரிமலைக் குழம்பு போன்று தெரிந்தது. கைகள், கால்கள் எல்லாம் நடுங்கி மூச்சுமுட்டுவது போன்ற உணர்வு அவளை வதைத்தது. நிலத்தில் வீழ்ந்து விடக்கூடாது என காரின் கதவினை அழுத்தப்பற்றிக் கொண்டாள். அடுத்த நொடி அவள் தோள்களை பின்புறம் இருந்து இழுத்து அணைத்து அவன் முகம் பார்க்க வைத்து, “ச்சில் டெடி” என காதுகளில் கிசுகிசுத்தான் சின்னு. ஓர் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்ட அமரா இடது புருவத்தை உயர்த்தி ‘ரோகித் என்னவானான்’ என வினவினாள். சின்னுவே வலது கையின் கட்டைவிரல், சுட்டுவிரல் தவிர மூன்று விரல்களையும் உட்புறம் மடக்கி, அவனது கழுத்துக்கு நேராக கொண்டு சென்று இடமிருந்து வலம் கோடாக இழுத்து, ‘முடிந்தது’ என சைகையிட்டு கண்சிமிட்டினான். அவன் கண்களை ஊடுருவிப் பார்த்துவிட்டு அமரா காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, அருகில் அவனை அமர்த்தி காரை தார்ச்சாலையில் மிதக்கவிட்டாள். ஆயிரம் நிறங்கள் கொண்ட இயற்கை ஓவியத்தில் அவ் கருப்பு நிற பென்ஸ் காரானது வண்ணமாக, பின் கோடாக, கடைசியில் ஒரு புள்ளியாக நேர் கோட்டுச்சாலையில் மங்கி மறைந்தது.

 

எரியும் நெருப்பு நானடா,

எனக்குள் தகித்தாய் நீயடா!

நீயும் நானும் சேர்கையில்,

தீயும் குளிரும் ஏனடா?.

 

அவள் வீழ்த்துவாள்..