யாகம் 10

யாகம் பத்து

 

ஆழியின் அலைகள்;

மணல்களை நனைக்க, கடற்காற்று வெப்பத்தை தகிக்க, ரம்யமான விடியலில் தனது அறையின் பால்கனியில் நின்றிருந்த பிரசாத்தின் உச்சிக் கேசங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தது. 

 

கைகளினால் தலைமுடியை அழுத்தக் கோதிக் கொண்டே, நாற்காலியில் அமர்ந்து, எதிரே மேசைமீதிருந்த கோப்பினுள் கண்களை மேயவிட்டான்.

 

அக் கோப்பில் முதற்கட்ட தகவலாக; இந்தர், அமராவின் பிறப்பு, படிப்பு, வளர்ப்பு பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றிருந்தன. ‘அமரா, தனது இருபத்து இரண்டாவது வயதில் தொழிலில் காலடி வைத்ததாகவும், முதல் மற்றும் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்ட தொழில்களில் பல கோடிகளை நட்டப்படுத்தியும் முயற்சியை பின்வாங்காமல் வெற்றிக்காக போறாடினாள்’ என்று சுருக்கமாக விளக்கியிருந்தது.

 

அடுத்தடுத்த பக்கங்களிலும் அவளின் வியாபார வளர்சியினை அலசிவிடப்பட்டிருக்கவும், பிரசாத்திற்கு வேண்டிய தகவலைத் தேடி அவன் கைகள் கடைசிப் பக்கத்தைப் புரட்டியது.

 

அப் பக்கத்தினை விழித்தவனின் கைகள் அந்தரத்தில் நிக்க, கண்களோ அசைய மறுத்தது. 

 

‘இந்தர்; மேகவியை சென்னையில் கல்வி நிறுவனமொன்றில் அவளறியாமல் சந்தித்ததாகவும், முதல் சந்திப்பிலே காதல் வயப்பட்டதால் அவளைப்பற்றி விசாரித்ததாகவும், பின் அவள் திருமணம் நிகழ்வு அறிந்து அதனை நிறுத்தவேண்டி அமராவை வைத்து நாடகமாடியதாவும் குறிப்பிடப்பட்டிருந்தது.’

 

இதனைப் படித்த பிரசாத்தோ, உணர்ச்சி பிரவாகத்தில் சிக்கித் தவித்தான். “ஆக, தன் மாமன் மகனுக்கு வேண்டி தன் மானத்தை சபையேற்றி, என்னை திருமணம் செய்திருக்கிறாள்.” சிந்தனைக் குதிரை கடிவாளமின்றி சஞ்சரித்தது.

 

இக்கோப்பின் தகவலின் படி, அமரா மற்றும் இந்தரின் மீது எந்தவித குற்றங்களும் இல்லை எனலாம், ஐந்து நாட்களுக்கு முன்னக சந்தித்த பெண்மீது காதல், அவளைத் தேடுகையில் நாளை அவளுக்கு வேறு  ஆடவனுடன் திருமணம் எனும் பட்சத்தில், அத்திருமணத்தை நிறுத்த அமராவையும் பிரசாத்தையும் கருவியாக உபயோகப்படுத்தியிருந்தனர்.

 

இதில் இந்தரின் காதலும், இந்தர் மீதான அமராவின் பாசமும் பிரசாத்திற்கு வியப்பையே கொடுத்தது. அதே நேரம் இந்த உண்மையை வெளியே வீட்டினருக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கும் பிரசாத்தை வரவைத்தது.

 

காரணம், நேற்று கல்லூரியிலிருந்து கவியை இந்தர் அழைத்துவந்து, இருவரும் வீட்டில் நுழைந்ததை பிரசாத் மாடியிலிருந்து அவதானித்து இருந்தான்.

 

“கடந்து போன சில கசப்பான சம்பவங்களை மறந்து போறது நல்லது. இந்தர் கவியைக் காதலிச்சிருக்கான் அதனால, அவன் கவியிடம் வம்பிழுப்பது நம்ம கண்ணுக்கு தப்பா தெரிஞ்சிருக்கு. அண்ட் அமரா இந்தருக்காக என்னைய கட்டிக்கிட்டு நாடகமாடுறா. இவங்க இரண்டு பேரும் கசின்ஸ். அதனால தான் கொஞ்சம் குலோஸ் அஹ் இருக்காங்க. அதுக்கும் காரணமிருக்கு ஏன்னா அவங்க டெல்லில வளர்ந்து இருக்காங்க. சோ கல்ச்சரல் டிபரன்ஸ்” காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தான் பிரசாத்.

 

“பார்க்கப் போன, இதுல அமரா ரொம்ப பாவம். யாருனே தெரியாத என்னக் கட்டிக்கிட்டு முழிக்குது.” அமரா எதை சாத்தியப்படுத்த நினைத்தாளோ, அது சாத்தியமாகிக் கொண்டிருந்தது, பிரசாத்தின் வாய் மூலமாக.

 

கடலை வெறித்துப் பார்த்து முனங்கிக் கொண்டிருந்த பிரசாத்தின் கவனத்தை திசைதிருப்பியது என்னவோ, அமராவுடைய விசும்பல் சத்தமே.

 

“இந்தப் பொண்ணு எதுக்கு அழுது” புருவம் மேடிட அறைக்குள் விரைந்தவன் கண்டது, கட்டிலின் மூலையில் வயிற்றைக் கைகளால் அழுத்தி, தலை குனிந்து அழும் அமராவைத்தான்.

 

வேக எட்டிட்டு நடந்தவன், அவள் தோள்களில் கையை வைக்க, அவளோ அவன் இடையோடு கையைச் சுற்றி அணைத்து, அவன் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டாள்.

 

சத்தமில்லாது அழுதவளின் கண்ணீர் அவன் ஷட்டைத் தாண்டி வயிற்றில் பிசுபிசுக்கும் வரையிலும் அவன் சிந்தை இவ் உலகிலேயேயில்லை.

 

“என்னாச்சுமா?” பாசமாக வந்து விழுந்த குரலில் தலையை நிமிர்திப் பார்த்தவள், தான் பிரசாத்தை கட்டியிருக்கிறேன் என்ற உண்மையுணர்ந்து அவனை விட்டு விலகும் போது,

 

“பார்பி கேர்ள்” இந்தரின் அழைப்பு கதவினைத் தாண்டி உள்ளோ புகுந்தது தான் தாமதம், தாய்பறவையைத் தேடும் குஞ்சு போல அவனிடம் சரணடைந்தாள்.

 

“இங்க பாருடா! ஒன்னுமில்ல, நான் உங்கூடத்தானே இருக்கேன்” இரண்டு கைகளுக்கும் அவள் முகத்தைப் அடைத்து ஆசுவாசப்படுத்தியவனாக, “வா” என குளியலறைக்குள் கொண்டு சென்று விட்டவன், அவளுக்குத் தேவையான இதர பொருட்களையும் குளியலறை வெளியிலிருக்கும் உடைமாற்றும் அறையில் வைத்து விட்டு வந்தான்.

 

‘என்னடா நடக்குது’ எனும் ரீதியில் நோக்கிய பிரசாத்தின் கண்களில் பட்டது என்னவோ, அவள் அமர்ந்திருந்த படுக்கை விரிப்பில் பூத்திருந்த செம்பூக்கள் தான்.

 

‘இவன் ஒரு நல்ல ஆண்மகன்’ இந்தரின் மீதான பிரசாத்தின் பார்வை அக்கணத்திலிருந்து மாற்றம் பெற்றது. 

 

இந்தரோ, பிரசாத்தின் அருகில் வந்து அவனை முறைத்துக் கொண்டே, படுக்கை விரிப்பைச் சுருட்டியள்ளி கழுவும் அறைப்பக்கம் நடையைவிட்டான்.

 

“என்னை விட மேகவியை இவன் நல்லாப் பாத்துக்குவான்” முணுமுணுத்துக் கொண்டே படப்பிடிப்பிற்க்கு சென்றான் பிரசாத்.

 

கவியோ, கல்லூரிக்கு விடுமுறை என்பதால், தானே நேரத்திற்க்கு எழுந்து உணவினைத் தயாரித்துவிட்டு இந்தரை அழைக்க மேலே சென்றவளிடம், “இரண்டு காஃபி கொண்டுவா” என இந்தர் கட்டளையிட, அவளும் குளம்பியுடன் மேலே சென்றாள்.

 

மாடிப் படிகளில் ஏதோ பாடலை உச்சரித்தவாரு ஏறியவளில் பார்வை வட்டத்திற்குள், மாடியில் நடு அறையில் போடப்பட்டிருந்த நீள்விருக்கையில், இந்தரின் மடியின் மீது குரங்கு போல கால்களை மடக்கித் தொத்தியிருந்த அமராதான் விழுந்தாள்.

 

‘ப்ச், இந்த வளந்தவனுக்கும், அவன் அத்த மகளுக்கும் வெவஸ்தையே இல்ல.’ அழுகைக்கு பதிலாக கவிக்கு நுண்ணிய பொறாமையே துளிர்த்தது.

 

“க்கும், காஃபி” என கவி நீட்டவும், அதனைப் வாங்கிக் கொண்ட இந்தர், தனது நாசிக்கு அருகில் குவளையைக் கொண்டு சென்றவன்,

 

“சுகர் போட்டியா?” உறுக்கினான் அவன். முகத்தை நிமர்த்தி, கடுகளவும் நடுக்கமில்லாமல், “ஆமா” என்றாள் கவி.

 

“பட்டிக்காடு, அறிவு இருக்கா உனக்கு, பிளாக் காஃபினு ஒன்னு இருக்குறது தெரியுமா? இல்லையா?” கடுப்பாக கேட்டவன், “இதுலாம் மனிசன் குடிப்பான?” எனக் கேட்டு, அவளின் முகத்தில் ஊற்றப் போனவன் என்ன நினைத்தானோ, 

 

தனக்கு அருகிலிருந்த டீபாயில் அலங்காரத்துக்கு வைக்கப்பட்ட, சிறிய கள்ளிச்செடியில் ஊற்றினான். செடியோ சூட்டில் இலைவதங்கி இறந்தது.

 

கவியே தைரியத்தை மெதுவாக இழக்க ஆரம்பித்தவள், மாடிப்படிகளை நோக்கி திரும்ப நினைக்க, “நீ குடிச்சியா?” தன்மையாக வினவினான் இந்தர்.

 

“இ…இல்லை” பற்கள் தந்தியடிக்க கூறியவளிடம், “இந்தா, உக்காந்து குடிச்சிட்டு போ! ,விடிஞ்சு மணியாகிப் போனது கூடப் புரியலியா?”, என்றவன் அவளிடம் இரண்டாவது குவளைக் குளம்பியைக் கொடுத்து குடிக்க வைத்ததே கீழே அனுப்பினான்.

 

நிகழ்ந்த அத்தனையையும் அமரா தூக்ககலக்கத்தில், இந்தரின் மார்பில் உறங்கிக் கொண்டு அவதானிக்க; வேலுப்பாண்டியோ, மேலே தினப்பத்திரிகை எடுக்கவந்தவர் உயிர்புடனே அவதானித்தார். ஆனால் இந்தர் கவிக்கு குளம்பியை அருந்தக்கொடுத்ததை காணாமலே அவர் கீழே சென்றது தான், வருங்காலத்தில் புயலொன்றைத் தீண்ட தாம் வழிவகைக்கப் போவதை அவரே அறியார்.

 

சமையலறையில் கத்தரிக்காயை வெட்டிக் கொண்டிருந்த கவி, “இவரு நல்லவரா? இல்ல கெட்டவரா? ஆனாப் பாரு கவி, இவருக்கு கொழுப்புத்தான் அதிகம்னு நீ நினைச்ச. இந்த சிடுமூஞ்சிக்கு சுகர் வேற இருக்கும் போல. எறும்பு மொய்காம இருந்தா நமக்கு நல்லது” சிரித்துக் கொண்டே பகல்வேளைக்கான சமயலைத்தொடர்ந்தாள்.

 

தனிநபர் வைத்திய அறைக்குள், அந்நபரின் வைத்திய அறிக்கையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இசைக்கு முன் தாதியொருவர் மூச்சிறைக்க வந்துநின்றவர், “டாக்டர், அந்த சூசைட் அட்டம் பேஷன்ட், டிரிப்ஸ் அஹ் ரிமூவ் பண்ணிட்டு ஒரே ஆர்பாட்டம் செய்யுது” என்றார்.

 

இசையும் கடகடவென தாதி குறிப்பிட்ட அறைக்குள் நுழைய அங்கு, அவ் நேயாளியோ சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். தனது வெள்ளை அங்கியின் பாக்கெட்டினுள் கையை வைத்துத் கொண்டு அங்கு நடைபெறுவதை சுவாரஸ்யமாக பார்தாள் இசை.

 

“சார், நீங்க உண்மையாவா சொல்றிங்க?” என நோயாளி கேட்கவே, “இல்லியா பின்ன, உனக்கு சாமர்த்தியம் பத்தல, அந்தப் பொண்ணு நோ சொன்னா நமக்கு என்ன? நயன் இல்லனா பயன் இல்லாம போயிடுமா?” தாடியை நீவி யோசிக்கும் படியாக பாங்கு செய்தவன் வேறு யாருமல்ல ‘ராங்கியின் ராட்ச்சன்’ ஹஸ்வந்தே.

 

“ஆனா எனக்கு நயன் தானே வேணும்” மீண்டும் மீண்டும் தன்னை விட்டுச் சென்ற காதலிக்காக பேசிக் கொண்டிருந்தான் இன்னும் பள்ளிப் படிப்பையே முடிக்காத சிறுவன்.

 

“அதுக்கென்ன, நான் லாயர் தெரியுமா? இந்த தமிழ் படத்துல வார மாதிரி கேஸ் ஏதும் போட்டு நயனத் தூக்கிட வேண்டியது என் கடமை. ஆனா அதுக்கு நீ உயிரோட இருக்கனுமேடா” நைந்து பேசியவனின் வலையில் வீழ்ந்தவனும்,

 

“டாக்டர், பிளீஸ் என்னக் காப்பாதுங்க. நான் நயனக் கல்யாணம் பண்ணனும்” இசையைப் பார்த்து சிறுவன் பேச, ஹஸ்வந்தும் அவளைப் பார்த்து கண்ணால் “வா” என அழைத்தான்.

 

“சார், கொஞ்சம் வெளியே போக முடியுமா?” தாதி அவனை வெளியிலனுப்ப, அவனும் இசையை உராய்வது போல் நெருங்கி வந்து வெளியேரினான்.

 

அச்சிறுவனுக்கான வைத்தியத்தை முடித்துவிட்டு, தன் அறைக்குள் சென்ற இசை, அவளரியாமலே ஹஸ்வந்தைத் தேடினாள். அவனும் காந்திமதியின் அறையிலிருந்து வெளியே வந்து இசை மீதே மோதி நின்றான். 

 

“சாரி”, முதல்தடவையாக மனமுவர்ந்து மன்னிப்புக் கேட்டாள் இசை. “அட, விடுங்க பிரபா. என் மேலயும் தப்புத்தான், நீங்க வந்தததை அவதானிக்காம இடிச்சிட்டேன்.” என்றான்.

 

“இடிச்சதுக்கு மட்டுமில்ல, முன்பு நான் நடந்துக்கிட்ட விதமும் தப்புதானே. தாட்ஸ் வை” முகத்தில் ஔி மங்கியது அவளுக்கு.

 

“பாஸ்ட் இஸ் பாஸ்ட்”, ஆரம்பித்தவன், “காஃபி வாங்கி கொடுப்பிங்களா?” தன் சுயதுக்கு மீண்டவனாக வாயாடத் தொடங்கினான்.

 

“வாங்க” தடையெதுவும் போடாமல், அவனை சிற்றூண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, குளம்பியை வாங்கிக் கொடுத்து அவன் எதிரே மேசையில் அமர்ந்தாள்.

 

“அப்போ பிரட்ண்ஸ்” கை நீட்டவும் அவளும் கையைக் கொடுத்தாள்.

 

“நான் ஹஸ்வந்ங்க.அப்பா கமலக்கண்ணன், ஹை கோர்ட் ஜட்ஜ். அம்மா தேவி, டென்டல் டாக்டர். அக்கா ஹிருசாலினி, அதுவும் டாக்டர் தான். மாமாவும் டாக்டர் சோ அமேரிக்கால இருக்காங்க. அண்ட்….” இழுத்தவனிடம்,

 

“இன்னும் யாராச்சும் மிச்சமிருக்கா?” புன்னகைத்த படி கேட்டாள்.

 

“அட, உங்களுக்கு சிரிக்க கூட வருமா? சும்மா சொல்லக் கூடாது உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு. புதுசா பிரட்ண்ஸ் ஆனோமா அதுதான் ஸ்மால் இன்ட்ரோ.” 

 

“இது ஸ்மால்னு நீங்க தான் சொல்லனும். ஆமா எல்லாரோட வொர்க்கப் பத்தி சென்னிங்க. நீங்க என்ன பண்ணுறிங்க?” 

 

“நானா, செல்லிக்கிற அளவு ஏதும் இல்லைங்க” என்றவனை, இசை போலியாக முறைக்கவும்,

“நான் கோட்ல லாயரா வொர்க் பண்ணுரங்க. பட் இப்போ இந்த நிமிசம், ஒரு பெண்ண சைட் அடிக்கிர வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.”

 

ஊடுருவும் பார்வையுடன் அவன் இசையைப் பார்த்துச்சொன்னது, அவளுக்குள் சிலிர்பை உண்டுபண்ணியது.

 

“கடவுளே!” அவள் தலையில் தட்டிக் கொள்ளவும், “கருப்பும், வெள்ளையும் சேர்ந்தா அழகு தான்ல.” அவள் கண்மணியை வர்ணிக்கவும், 

 

“மிஸ்டர்” கோபத்தை தாண்டிய கண்டிப்பாக வந்த சொல்லில்,

“நான், நம்ம கோர்ட்ட சொன்னேன்ங்க. நீங்க வெள்ளை, நான் கருப்புக் கோர்ட். நம்ம இப்போ பிரட்ண்ஸ்ஸா….”

 

“நல்லாப் புரியுது” தொடரந்து ஏதாவது சொல்லிவிடுவான், என்பதனால் தடு்த்தவள், “நீங்க எப்படி அந்த பெர்சன் ரூம்ல” என்றாள்.

 

“மதியைத் தேடி வந்தேங்க, ஒரே சத்தமா இருக்கவும், என்னனு போய்ப்பார்தேன். பையன் இண்ஜெக்சனால கையை கீற ட்ரை பண்ணினானா. நான் போய் பேசவேண்டியதா போச்சு.” விளக்கினான்.

 

“முளைச்சு மூனு இலை விடல, காதலும் கத்திரிக்காயும்” கோபமாக எழுந்தது அவள் குரல்.

 

“ச்சில், பிரபா! டீன் ஏஜ்ல இதுலாம் சகஜம்ங்க. என்ன இந்த பையன் ஸ்கூலிங் டைம்ல, இப்படி பண்ணுறான். கவுன்லிங் கொடுத்தா சரியாகிடும்”

 

“எஸ், நான் ரெகமென்ட் பண்ணியிருக்கேன்”, இளநகையுடன் கூறியவளிடம், சில்மிசமாக வம்பளத்து தன் வாயாடலைத் தொடரந்தான் ஹஸ்வந்.

 

புதிதாய்ப் பூத்த மலரொன்று மடல் திறந்து, மடைதாண்டும் வெள்ளமாய் தேன் சிந்துவது போல அவர்களின் சந்திப்புகளும் தொடர்ந்து நட்பெனும் சொல்லில் அன்பை சிந்தியது.

தாகம் தீர்க்கும் நீரிலிலும் நீதானே!

மோகம் சுமக்கும் மெய்யிலும்

நீதானே!

விதைக்கவும் செய்கிறாய்,

வதைக்கவும் துணிகிறாய்!

 

அவள் வீழ்தினால்….