யாகம் 11

யாகம் பதினொன்று

 

கம்பளிநூல்களினை அடர்த்தியாக நட்டு வைத்தது போன்று மெதுமெதுப்பான உடலை சுருட்டி பூம்பந்தாக மாற்றி, லூக்கா பிரசாத்தின் கால் வளைவுக்குள் நித்திரையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.

 

நேற்று நள்ளிரவுக்கு மேல் படப்பிடிப்பிலிருந்து வீட்டுக்குத்திரும்பிய பிரசாத்தோ, தன் அறையில் நுழைந்ததும் முதற்கண்டது அவன் மணவாட்டியையே!

 

வழக்கமாக, அவள் உயரத்திலிருக்கும் கரடி பொம்மையினை இருவருக்கும் நடுவில் தடுப்பாக வைத்து, அதனுள்ளே தன்னைப் புதைத்துக் கொண்டு துயில் கொள்பவள் அன்று தலைக்குப்பர, கபில நிற முடிக்கற்றைகள் முழுவதும் முகத்தை மூட, அலுவலகத்திற்க்கு உடுத்தும் உடையைக்கூட மாற்றாமல் படுத்திருந்தாள்.

 

“இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு, ஒரு வேளை குடிக்குற பழக்கம் எதுவும் இருக்குமோ?” 

அட்சுப்பிசகாமல் அவன் நினைக்கும் போதையுண்டவள் தோற்றத்தில் முகம் புகுத்திக் கொண்டிருந்தவள், கால்களில் தன் குதியுர்ந்த பாதணியைக் கூட அகற்றாமல் மஞ்சத்தில் வீழ்ந்துகிடந்தாள், அவன் என்ன நினைப்பதாம்?

 

“இத்தன நாளுல இப்படிப் படுத்துக் கிடந்ததேயில்ல. இவ குடிக்க கூடியவளில்லனு அந்த டிடக்டிவ் ரிபோட்ல இருந்திச்சு. உடம்புக்கு முடியலியோ என்னவோ!” இதயம் அவள் பக்க நியாயத்தை எடுத்து விளக்கவும்,

 

அமராவின் அருகில் சென்ற பிரசாத், அவள் முதுகு தொடும் நீளமுள்ள அடர்குழலினை முகத்திலிருந்து ஒதுக்கிவிட்டான். திரைவிலக ஜொலிக்கும் தாமரை மலர் போல, மதியென ஜொலித்த அவள் முகத்தைப் பார்த்தவன், அவளின் நுதழில் கைவைத்துப் பார்க்க தன்வெப்பநிலையைத் தவிர எதையும் கண்டுகொள்ள முடியவில்லை.

 

“காய்ச்சல் எதுவும் அடிக்கல, அசதில தூங்கியிருப்பா. அதுசரி எப்பவும் இவளே அவ கம்பனியைத் தூக்கி நிறுத்துறாப் போலதான ஓடிஓடி கம்பனிக்கு போய்க் கொண்டிருக்கா.” புலம்பியவன், அடுத்து கால்களில் அணிந்திருந்த பாதணியை நீக்கினான்.

 

“எப்போ பாரு இந்த ஹீள் கூடவே சுத்த வேண்டியது. வழக்கமா அந்த இந்தர் தான் கழற்றி விடுவான். ஹ்ம் இன்னைக்கு நம்ம சேவகம் செய்யனும்.” பேருழைப்பாக களத்தில் குத்திவனின் விழிகள் அவளது வலது உள்ளங்காலினை அசையமறுத்துப் பார்த்தது.

 

“உள்ளங்கால் குழியில் மச்சம்”, பாக்கினளவு வீற்றிருந்த மச்சத்தினை, மனதின் உந்துததால் விரல் கொண்டு மயிலிரகாக வருடிவனின் உடல் சிலிர்த்து, அதிர்வலையொன்று உச்சியில் இறங்கியது. 

 

“இத எங்கயோ பார்த்த நியாபகம். எங்கே?” யோசித்தவனுக்குள் பல்வேறு உணர்வுகளின் சங்கமமே. பிறவிக்கு முன் பிறவி இந்த மெய் இவள் தளிர் பாதங்களைத் தழுவியது போல ஓர் உணர்வு.

 

அடுத்து, ஏதோ முன் ஜென்மங்களில் அவன் யாட்கை காடு மேடுகளில் பயணித்து காணக்கிடைக்காத ஒரு தெவலோஜினியின் கால்களில் வீழ்ந்து மலர்களை வாரியிரைத்து பூஜித்தாக மாயை.

 

“நோ வேய்” தலையை பலமாக உலுக்கிவிட்டு, சிந்தனைக்குத் தடைபோட்டுவிட்டு, அமராவிற்கு போர்வையொன்றால் மூடிவிட்டவன், குளியலறைப் பக்கம் திரும்ப அவன் முதுகில் தூக்கதியிலேயே போர்வையை கசக்கியெறிந்தாள் அவனவள்.

 

“சரியான அரக்கி” குறுநகையுடன் குளியறைக்குள் புகுந்து கொண்டவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வரும் போதும் அவள் உறக்கத்தைத் தொடர, அவளருகில் கரடி பொம்மையை சுவராக வைத்து அவன் பக்க மஞ்சத்தில் படுத்துக் கொண்டான்.

 

உறக்கத்தின் நடுவின் குளம்பியின் வாசம் நாசியில் பரவவும், துயில் கலைந்த பிரசாத்தின் விழிகள் கடிகாரத்தைக் காண, அதுவோ அதிகாலை மூன்று முப்பது எனக்காட்டியது.

 

“தூங்கினது ஒன்றரைக்கு, இந்த காலையிலே யாருடா காஃபியைக் கொண்டு வந்தது” கட்டிலை விட்டு எழாமல் தலையை மட்டும் சரித்துப் பார்த்தவனின் பார்வைவட்டத்தில்,

அறையின் மூலையில் கிடத்தப்பட்ட நீள்விருக்கையில் கால்களை சம்மணமிட்டு அமரா அமர்ந்திருப்பதும், அவள் எதிரே குளம்பிக் குவளையும் தெரிந்தது.

 

‘என்ன பண்ணுரா?’ கேள்வியாக ஏறிட்டவனின் விழிகள், எந்த நொடி ரசனையாக மாறியதோ அவனே அறியவில்லை.

 

நிறுவனத்திற்குச் செல்லும் போது அணியும் ஷட்டின், முதலிரண்டு பொத்தான்களை திறந்துவிட்டு, சட்டையின் கையினை முட்டிக்கு மேல் கசக்கியிழுத்து விட்டிருந்தவள், காற்சட்டைக் கூட மாற்றவுமில்லை.

 

கால்களை மடித்தமர்ந்து அதன் மேல் குட்டித்தலையணையை வைத்து அதில் மடிகணினியை வைத்திருந்தவள், முடியினைக் கொத்தாக அள்ளி உச்சயில் கொண்டையாக முடிந்திருந்தாள். கொண்டையிலிருந்து விடுதலைபெற்ற வெட்டிவிடப்பட்ட சில முன்நெற்றி முடிகள் அவள் கன்னக்கதும்புகளில் கவிதையெழுத அவற்றை காதுகளுக்கு பின்னால் தனது வலது கைகொண்டு எடுத்து விட்டவள்,

 

இடது கையினால் பேனாவைப் பிடித்து ஏதோ எழுதுவதும் பின் அதனை அதரங்களில் வைத்துக் கடித்துக்கொண்டிருப்பதாகவும் இருந்தாள். பிரசாத்தாே; ஒப்பணையேதுமில்லாத, அவள் சிறிய உதடுகள், நீண்டுவளைந்த நாசி, ஆழமான கண்கள், அதன்மேலிருக்கும் கிரீடமான புருவங்களை ஆராய்ந்தான்.

 

மலையாக எழுந்து, பாதாலமாக விழுவது போன்ற கூர்புருவங்கள். அதில் வலது பக்க புருவத்தின் சிறு இடைவெளி விட்டு, மேலே இரண்டங்குலக் காயத்தின் தழும்பிருந்தது.

 

‘பிரசாத் நிச்சயமாக இவ நீ காதலிச்ச பொண்ணு கிடையாது. முகம் தெரியாதுதான். ஆன அவ புருவத்துக்கு மேல எந்த தழும்பும் கிடையாது. நீ நிழலை நிஜத்துல தேடுற. ஒன்னு பெயரே தெரியாத அவளை மறக்கபாரு, இல்லை உன்வாழ்கையில விளையாட்டா வந்த இந்த பெண்னை சரி பண்ணி ஏத்துக்கோ’ மனசாட்சி கூக்குரலிட, தன் விழிகளை மூடிக்கொண்டான்.

 

ஆனால் அவன் இதயம் இரு பெண்களையும் ஒப்பிட்டுவதை நிருத்தவில்லை. ‘இந்த அரக்கிகூட என்னால வாழ முடியுமா?’, ‘இல்லை ஏகத்துக்கும் திமிர்பிடிச்சவ’, ‘என்ன திமிர்? நீ எப்போவாச்சும் அவகிட்ட சரியா மூவ்வென் ஆகியிருக்கியா?’, ‘இல்லல?’, ‘இனியாச்சும் பேசிப்பாரு பிரசாத்’ இதயம் அதன்போக்கிலே தூபமிட்ட, அவன் காதில் அமராவின் அதட்டல் குரல் ஒலித்தது.

 

“வாட் தி ஹெல்!, பேட்டெப்ட்னு என்ட்ரி பண்ணவா? நீங்க எனக்கு அகவுன்டிங் படிப்பிக்க தேவையில்ல மிஸ்டர். டாப்லெவல் மெனேச்ஜரா இருந்தா மட்டும் போதாது. தனக்கு கீழ நடக்குற விசயத்தை சரியா கொயிஸ்சனிங் பண்ண தெரியனும்” முடித்தவள், மறுபக்கமிருந்தவன் என்ன சென்னானோ,

 

“இருபது சீ பணம்னு சொன்னா, உங்களுக்கு இல்லை எனக்கு சாதாரணம்னு சொல்லவரிங்க. என்னோட பிராபிட்ல அது சாதாரணம்தான். பட் கடனை வாங்கிட்டு அவன் நாட்டை விட்டு ஓடினா, இங்க பணத்தை விட நம்பிக்கை தான ஏமாற்றப்பட்டிருக்கு?” நிருத்தியவள்,

 

“எனக்கு எப்போவும் காரணம் சொன்னா பிடிக்காது. ஒன்னு ஓடிப்போனவன் என் கண்முன்ன கொண்டு வரிங்க, இல்லைனா அவனோட டாக்கிமென்ஸ் எதையும் சரியா என்குவாரி பண்ணாத மொத்தம் இருபது ஸ்டாப்பையும் வேளையை விட்டு தூக்கிடுவேன். இன்குலூடிங் யூர் செல்ப்” என முடித்தவள்,

 

“உப்…” இதழைக்குவித்து ஊதிவிட்டு குளம்பியை எடுத்து வாயில் சரித்தாள். ‘என்ன பொண்ணுடா இவ!, தன் கீழயிருக்கும் ஊழியர்களின் மூளையை உரிஞ்சும் முதலாளினு நினைச்சோம். பட் இவ உண்மையிலும் ஆளுமையான எஜமானிதான் போல. இல்லைனா தூங்காம இப்படி விசாரணை நடத்தியிருக்க மாட்டாள்’ அவளை உள்ளுக்குள் பாராட்டியவன் மீண்டும் கண் திறந்து பார்தான்.

 

கைகளைத் தலைக்குமேலுயர்தி சோம்பலாக நெட்டி முறித்தவள், காகிதங்களில் பேனாவால் வட்டமிட்டு அடையாளப் படுத்திவிட்டு, பேனாவின் மூடியை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தாள்.

 

‘இந்த மேனரிசம் எங்கேயோ…’ எனத் தொடங்கியவன், அவள் விம்பத்தை அரக்கி, அழுத்தக்காரி என்பதிலிருந்து மாற்றி ஆளுமையானவள் என்று மாற்றிக் கொண்டவன், 

 

அவள் இடது கையினால் எழுதிக்கொண்டிருப்பதை அவதானித்தான். ‘இவ, என்னைப் போலவே லெப்ட் ஹேண்ட்ல எழுதுரா? இம் பாசிபில். இத்தன நாள் எப்படி கண்டுக்காம விட்டேன்.’ 

 

திருமணத்தைப் பதிவு செய்வதற்கான பத்திரத்திலும் அவள் இடதுகையினால் ஒப்பமிட்டது இன்று அவன் ஞாபகத்திற்கு வர, மூச்சையிழுத்து விட்டு,

விட்ட தூக்கத்தை விரட்டிப் பிடித்தான்.

 

அப்போது தூங்கியவன் எழுந்த நேரம் என்னவோ, காலை ஒன்பதுமணியே. தன் கால்களுக்கிடையில் ஏதோ மயிர்கூச்சத்தை உண்டுபண்ண இமைதிறந்தவனின் முகத்தினை வந்து நக்கியது லூக்கா.

 

ஐந்தறிவு ஐீவன்களின் நடத்தை அவ்வளவே! அன்று கடித்தது இன்று ஒட்டி உறவாடுகிறது. மனிதனைக் காட்டிலும் மிருகங்கள் அதிக மன்னிக்கும் மறக்கும் ஏன் ஒட்டிக்கொள்ளும்பாங்கிலும் சிறந்தவையே.

 

லூக்காவினுடை ஸ்பரிசத்தில் நன்கு விழித்தவன், அதனுடைய தலையைத் தடவிக்கொடுத்து கொஞ்சிவிட்டே குளித்து உடற்பயிற்சி முடித்து வந்தான்.

 

ஆள்காட்டும் நிலைக்கண்ணாடிக்கு முன் அமர்ந்து, பிரசாத்தினுடைய வாசனைத்திரவிய மற்றும் சிலபல அழகுசாதனப் பொருட்களின் குடுவைகளை ஒன்றொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அமரா. கண்களுக்கு அஞ்சனம் கூடத்தீட்டாத இருபத்தைந்து வயதுப் பெண் அவள் மட்டும் தான் உலகிலிருப்பாள் போலும். எந்தவித ஒப்பனைகளையும் அவள் இதுவரை இட்டுக் கொண்டதும் கிடையாது.

 

“என்ன பிரான்ட் இது. இந்தர் இது யூஸ் பண்ணமாட்டானே.” முனங்கிக் கொண்டே, வாசனைத்திரவிய போத்தலை நோண்டியவள், கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுத் தலையை சீவ ஆரம்பித்தாள்.

 

அமரா, பொருட்களை உருட்டும் போதே உள்ளே நுழைந்த பிரசாத்தோ, அவளின் செய்கைகளை மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தான்.

 

“ப்ச், முடியாது”, இரண்டு தடவைகள் தன் கூந்தளைக் குதிரைவாலிட முயன்றவள், சலிப்பாக முயற்சியைக் கைவிடவும், பிரசாத் குறுநகையுடன் அவள் முன்னால் சென்று, சீப்பைக் கையில் வாங்கிக்கொண்டான்.

 

“என்ன?” கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்துக் கேட்கவும், “ச்சூ” என உதட்டில் விரலை வைத்து அவளை அடக்கிவிட்டு, கூந்தலை குதிரைவாலிட்டான்.

 

“தாங்ஸ்” என எழுந்தவள், தனது மடிகணினியை எடுத்து ஏதோ வேலையைத் தொடர்ந்தாள். பிரசாத்தோ இதழைப் பிதுக்கிவிட்டு, ‘இனிமேல்தான் பழகிப்பார்க்கனும்’ உள்ளத்தில் உறுதிமொழியெடுத்தான்.

 

மௌலியிடமிருந்து கிடைத்த கோப்பைப் படித்து மூன்று வாரங்கள் கடந்திருந்த போதும், இன்றுதான் அமராவிடம் பேசவேண்டும் என்ற உந்துதலே அவனுக்குள் எழுந்திருந்தது எனலாம். அதற்க்கு காரணமும் இல்லாமலில்லை; இருவரும் ஒரு அறையிலிருந்தும் பார்த்துக் கொள்ளும் நேரங்களே மிகக்குறைவு என்பதே உண்மை.

 

அவள் அலுவலகமே சரணாகெதி என்று இருந்துவிட, அவனோ படப்பிடிப்பு என தன்னைத் தொலைத்துவிடுவான். ‘அழகான அரக்கிக்கு அலங்காரம் தேவையில்ல போல’ வாய் முணுமுணுக்க, இன்றைய நாளுக்கான ஏற்பாட்டை மேற்க்காெள்ள, தன் தாயைத் தேடி கீழறைக்கு விரைந்தான் பிரசாத்.

 

அமராவோ, “எக்ஸ்பட் தீ அண்எக்ஸ்பட். இரவு ஹீல் அஹ் தோவா தான் ரிமூவ் பண்ணிவிட்டானா? ஏன்? ச்சே நேத்து அசதில அப்படியே தூங்கி இருக்கேன். பட் தேவா கொஞ்சம் கொஞ்சமா நீ என்னோட யாகத்துல விழுகிறாயடா” சன்னக்குரலில் தனிமையில் பேசினாள்.

 

இதே அறைக்கு நேர்ரெதிலிருந்த கவியின் அறையிலோ, இந்தர் உஸ்னத்தின் உச்சத்தில் மேகத்தை திசைமாறி சிதரவிட்டுக்கொண்டிருந்தான்.

 

ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிகளும், விரதமிருந்து இறைவனைத் தொழுவதனை வழக்கமாக கொண்டிருந்த கவி, நேற்றும் இவ்வாரே விரதமிருந்தவள், இந்தர் வீடுதிரும்பும் முன்னமே நித்திரையில் மூழ்கினாள்.

 

இன்று காலையும், நேற்றயை சோர்வில் தாமதமாக எழுந்தவளுக்கு காணக்கிடைத்தது அவனில்லாத வெற்று அறைதான். 

 

“இந்த வளந்தவர் எங்க போனாரு? ஒருவேளை ராத்திரி வீட்டுக்கு வரவேயில்லியா? யாரும் என்னைக் கேள்வி கேட்டாள் என்னத்த சொல்லி சமாளிக்க?” கண்களை கைகளினால் கசக்கிக் கொண்டே அறையை நோட்டமிட்டவள், குளிப்பதற்காக சென்றாள்.

 

“டேய்! லவ் யூ டூ டா! தினமும் எனக்கே இதக் கேட்டு அலுத்துப் போச்சு. அமராக்கு மட்டும் தான் நீ சின்னுட. எனக்கு நீ பெரிய கொடுமைக்காரன்டா. அதைவிடு சொன்னதை மட்டும் சரியா செய்யல, வசுமா சொல்றது போல பல்லத் தட்டி கையில கொடுத்துடுவேன். என்ன இருந்தாலும் வயசுல பெரியவன்னு எனக்கு ஒரு மரியாதை கொடுக்குறியா? எப்போ பாரு…” பொரிந்து தள்ளிக்கொண்டே மொட்டைமாடியில் நடந்து கொண்டிருந்தான் இந்தர்.

 

மறுபக்கம் என்ன பேசப்பட்டதோ, கடைசியாக நெற்றியை நீவியபடி புன்னகைத்த இந்தர் கவியின் அறையை நோக்கி புலம்பெயர்ந்தான்.

 

ஜலக்கிரீடையை முடித்த கவி, ஆயத்தமாகி கீழே செல்வதற்காக, கண்ணாடி முன் நின்றவள் அப்போது தான் ஒன்றைக் கருத்தில் கொண்டாள்.

 

ஊதாப்பூவின் நிறத்திலான பட்டுப்புடவையும், அதனருகில் அவளுக்கு பிரியமான இனிப்பு வகையான ‘லட்டு’ பெட்டியொன்றும் மேசையிலிருந்தது.

 

“ஐ! லட்டு, இன்னைக்கு என்ன விஷேசம்? காலையிலேயே ஸ்வீட் என் ரூம்ல வைச்சிருக்கு?” சிந்தித்தவள் நாட்காட்டியைப் பார்க்க, அதுவோ இன்று அவள் பிறந்தநாளென வெளிப்படுத்தியது.

 

“ப்ச்! இதுவே நமக்கு வழக்கமா போச்சு, அப்பா கொண்டுவந்து வைச்சிருப்பார்” வருடந்தோரும், அவளின் பிறந்தநாளன்று வேலுப்பாண்டி, அவளெழும் முன்பே இவ்வாறு ஆடை மற்றும் இனிப்பை ஆனந்த அதிர்ச்சியாக வைத்துச் செல்வதனால், இன்றும் தன் தந்தையே இவற்றை வைத்திருப்பார் என சரியாக தவறாக புரிந்துகொண்டாள் கவி.

 

“சேரி ரொம்ப அழகயிருக்கு” என்றவள், அப்புடவையுடனே சட்டையுமிருந்ததாள், உடனே கட்டிக் கொண்டாள். அதுமாத்திரமன்றி, “லட்டு” என்று ஆசையாக அதனில் ஒன்றையும் உட்கொண்டவள், 

 

கதவு திறக்கும் அரவம்கேட்க, அப்பக்கம் ஏறிட, அங்கு இறுகிய முகத்துடன் தன் டீஷட் காலரினை மடித்துக்கொண்டு இவளையே விழுங்குவது போல பாத்திருந்தான் அவளின் பதி.

 

“என்ன?” அதிபியாத்தனப்பட்டு அவள் கேட்க, அவனே அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கி, மேசைக்கு இருபுறமும் கைகளினால் சிறைசெய்து, அவளைக் கைதியாக்கினான்.

 

அவனுடைய நெடிய உயரத்தினால், அவனை முகமுயர்த்திக் கண்ட அவன் மேகம், இந்தரின் வெப்ப மூச்சுக்களினால் உருகிக்குழைந்தது. 

 

வாழ்வின் முதல் தடவையாக ஆண்மகனின் அருகாமையால் அவன் மீதே துவண்டு விழுந்துவிடுவேனோ என்ற அச்சத்தில் கைகள் நடுங்கவும், தன் சேலை முந்தியை விரல்களில் சுற்றிக் கொண்டே கவி, அவன் கண்களிலில் தன் கண்கள் கலக்கவிட்டால்.

 

“வாயில என்ன?” கிரக்கமாக வந்துவீழ்ந்தது, அவன் கம்பீரக் குரல். “ல..லட்டு, அப்பா வாங்கி கொடுத்தாங்க” உதடுகள் துடிக்க, கண்களை வண்டாக சிமிட்டி அவள் கூற, அவனோ, கையை உதரிவிட்டு, அவளிடமிருந்து இரண்டடி தள்ளி நின்றான்.

 

“ஓஹ், இது உங்கப்பன் வாங்கிக் கொடுத்தது ரைட். பட்டிக்காடு, உனக்கு அறிவிருக்கா இல்லையா? கணவன் மனைவி குடுத்தனம் நடத்துற அறைக்குள்ள, எந்த அப்பாவாச்சும் வருவாங்கலா? பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைக் கண்டவுடன் பல்ல இழிச்சிட்டுப் போறது போல லட்டக் கண்டதும் சாப்பிட வேண்டியது” முகத்தை வேறுபக்கம் திருப்பி அவளுக்கு முதுகு காட்டித் திட்டிக் கொண்டிருந்தான்.

 

உனக்காக நான் ஜனிக்க,

எதற்காக எனை சபிக்கிறாய் நீ?

ஆட்டுவித்தால் நானாட,

உன்கைப் பாவையோ நான்?

பதில் கூறாய் கண்ணா?

 

அவள் வீழ்த்தினாள்….