யாகம் 12

யாகம் பன்னிரெண்டு

 

வரிசையாக கோர்க்கப்பட்ட சதங்கைகள் கிங்கிணியோசையோடு, அவள் பாதத்தில் தவழ்ந்திருக்க; கிளியென சொண்டு நீட்டி, மயிலென தோகைவிரித்து, நரியென பதுங்கி, புள்ளிமானென துள்ளி, சிங்கமாக கர்ஜித்து, கடைசியில் காளிதேவியாக அவதரித்து நரபலியிடுவதாக பரதமாடிக் கொண்டிருந்தாள் மேகவி.

 

இயல், இசை, நாட்டியம் மூன்றிலும் நற்தேர்ச்சி பெற்ற அவளோ, துன்பம் அதிகளவில் அவளை ஆட்டுவிக்கும் போது பாடலைக்காட்டிலும் நடனத்தில் லயித்துவிடுவாள். 

 

இன்றும் அப்படியே, பிறந்தநாள் தினத்தன்று காலையில் அவன் நெருப்பென வார்தையைக் கொட்டிவிட்டிருக்க, அவளோ கண்ணீரைக் காட்டிலும் தடம்புரளும் இதயத்தை அடக்க ஐம்புலன் அடக்கி ஆடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். 

 

காலையிலிருந்து இடம்பெற்ற நிகழ்வுகளின் தாக்கத்தில் ஜதி பிடித்தவளின் மனதில், சம்பவங்கள் வரிசையாக வந்துபோனது.

 

கவிக்கு முகம் காட்டாமல் திட்டிக் கொண்டிருந்தவனின் கள்ளப்பார்வை வேலுப்பாண்டியையே கவனித்தது. கையில் கோவில் பிரசாத்துடன் அறைக்கதவின் அருகில் நின்றிருந்தார் அவர்.

 

தனது செல்ல மகளின் ஜனனதினத்துக்காக கோவிலில் விசேட பூஜையை முடித்து வந்தவரின் செவிகளில் இந்தர் தன் மகளை அதட்டுவதே கேட்டது. அறைக்குள் நுழைய வைத்த காலைப் பின்வாங்கி, முகம் கருக்க, மீசை துடிக்க, கையாலாகாதவராக, தன் அறைப்பக்கமாக திரும்பி நடந்தார் வேலு.

 

‘எம் மக, தாயி! சத்தம்போட்டு பேசக் கூடவராத புள்ளப்பூச்சியாத்தா நீனு. இந்த அப்பன் ஆசைப்பட்டானு இந்த மொரடனக் கட்டிக்கிட்டு நீ ஏன் ஆத்தா வெசனப்படனும். இந்தக் கட்டையில உசுரு தங்குற வரைக்கும் நான் உன்னைய பாத்துகிடுதேன். முதல்ல அமரா, இந்த மொரடன் இரண்டுபேரையும் ஒரு வழி பண்ணுதேன்.’ இருமாப்புடன் தனக்குள் பேசிக் கொண்டே சென்றார் அவர்.

 

இந்தரோ விட்டயிடத்திலுருந்து தொடர்ந்தான். “பால் டப்பி!, மஞ்சள் தேவி!, கொஞ்சமாச்சும் நாகரிகம் தெரியுமா? பெஸ்ட் யூ ச்சுட் ஆஸ்க்..”, ஆங்கிலத்தில் ஆரம்பித்தவன், “ச்சே!, உனக்குத்தான் இங்லீஸ் புரியாதுல? பட்டிக்காடு. முதல் ஒரு பொருளை எடுக்கனும்னா, அனுமதி வாங்க வேணாமா?”

 

தன் முகத்தை அவள் பால்திருப்பி, தலையைத் தொங்கப் போட்டிருந்தவளின் நாடியினை, தன் ஆள்காட்டி விரலினால் தாங்கி, அவள் முகத்தை தன் முகம் ஏறிட செய்தவன்,

 

“யாரும் பேசினா, அவங்க முகத்தினை பார்த்து பேச கத்துக்கோ. எண்ட் இந்த ஸ்வீட் பாக்ஸ் நான் வாங்கிட்டு வந்தது. என் ஸ்டாப்க்கு சையில்ட் கிடைச்சதுக்கு கொடுப்பதற்காக. புரியுதா?” கடுகளவும் கோப ரேகைகளேயில்லாமல் கண்டிக்க இவனால் மட்டுமே முடியும் என்பதைப் போல தாடிக்குள் கன்னக்குழி பளிச்சிடக் கூறினான்.

 

“நௌவ், நீ இதை எச்சுப் பண்ணிட்ட. அதனாலே”, “இங்க வா” கையைப் பிடித்து இழுத்துச் சென்று மஞ்சத்தின் மீது உட்காரச் செய்தவன். “இதை முழுசும் நீயே சாப்பிடுர” மொத்தமாக பெட்டிமுழுவதும் நிரம்பியிருந்த, அவள் உண்டது போக மீதமிருந்த பதினொரு லட்டுக்களை கண்காட்டினான்.

 

கண்களின் இமை புருவத்தை தொடுவது போல மருட்சியாக அவனை கடைக்கணித்த  கவியோ அதிர்ச்சியில் “நா..நானா?” என்றாள்.

 

மீசைக்கடியில் கடினப்பட்டு புன்னகையை ஒழித்த இந்தரும், கண்களை அறைமுழுதும் சுழலவிட்டு, “இங்க உன்னையும் என்னையும் தவிர, வேறு யாருமில்லையே மேகம்?” சொல்லெனா உணர்வுகளுடன் அவன் விசாரிக்க,

 

கவியோ, அவன் மிரட்டலாக வினவுகிறான் எனநினைத்து, “இ..இல்லியே” தொண்டைக்குழி ஏறியிறங்க எடுத்துக் கொடுக்கவும், “த்தென் சாப்பிடு” கட்டளையிட்டான்.

 

“எனக்கு போதும்” வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் கூற, “ஐ செயிட் ஈட் இட். மொத்தமாக சாப்பிட்டாத்தான் ரூமை விட்டு போக முடியும். நீ நேத்து பச்சைத்தண்ணியும் பல்லுல படாம சுத்தினனு எனக்குத் தெரியும். அதனாலே நேத்தைக்கும் சேர்த்து இப்போ சாப்பிடுர. நான் இங்க தான் உன்னைய பார்த்துட்டு இருக்க போறேன்.” முடித்தவன்,

 

ஒரு லட்டை எடுத்து அவள் வாயில் திணித்துவிட்டே, தனது மடிகணினியுடன் நீள்விருக்கையிலிருந்து தன் பணியைத் தொடங்கினான்.

 

‘முருகா! இவரைப் புரிஞ்சுகொள்ளவே முடியாதா? அவரா சிரிக்கிறார், பின்ன முறைக்குறார். கடைசி வரையும் விளக்கம் தேடியே என்னோட வாழ்க்கை முடிஞ்சு போயிடும் போல. இத்தனை லட்டை எப்படி சாப்பிடுவேன்’ இனிப்பை அவள் வேடிக்கையிட,

 

“என்ன அங்க?” அவன் ஒலி காதில் பாய, முடியாமல் உண்டு முடிக்க முயற்சி செய்தவள், இரண்டுமணி நேரத்தை அத்தித்திப்புடன் செலவு செய்தாள்.

 

“அட எனக்கு கொடுக்காம முழுசையும் முடிச்சிட்ட?” சலிப்பாக அவள் காதினில் கிசுகிசுத்தவன், அறையை விட்டு வெளியேர அவளும் அவனை முறைக்க முயன்று தோற்றுப்பின் சென்றாள்.

 

“ஹாப்பி பார்த் டே! கவிக்குட்டி”, பலூண்களை வெடிக்கவிட்டு இசை ஆரவாரமிட, வீட்டிலிருந்த ஏனைய உறுப்பினர்களும் தங்கள் பங்குக்கு வாழ்த்தை தெரிவித்தனர். இதழில் ஒட்டப்பட்ட புன்னகையும் நன்றியைத் தெரிவித்தவள், இந்தரை ஏக்கமாக ஏறிட,

 

அவனோ, அமராவினை இடையோடு வலது கரத்தைவிட்டு அவனருகில் நிருத்திக் கொண்டு, அவளின் முகமாற்றத்திற்கான காரணத்தயைறிந்து சமரசத்தில் ஈடுபட்டிருந்தான்.

 

“வா…வா கவிக்குட்டி கேக் கட் பண்ணலாம், உனக்குப் பிடிச்ச லட்டு ஃபிலேவர்ல, அதே தீம்ல கஸ்டமையிஸ் பண்ணி கேக் ஆர்டர் செஞ்சிருக்கேன்.” இசை, கவியை வட்டவடிவ அலங்கார மேசை முன்கொணர்ந்து கேக்கை வெட்டவைக்க, கவியோ யாருக்கு ஊட்டுவது எனத் தடுமாறினாள்.

 

“முதல்ல தம்பிக்கு கொடு கவி” என சிவகாமி கூற, பிரசாத்தும் “கம் ஒன் இந்தர்” என முதல்முதலாய் இந்தருடன் இணக்கமாக உறவாடினான். 

 

பிரசாத்தைப் பொருத்தவரையிலும் மேகவி மீதான இந்தரின் காதல் அளப்பரியதல்லவா? இந்தரோ பிரசாத்தை மனதிற்குள் வதக்கிக்கொண்டே கவியருகில் சென்றான்.

 

‘வளந்து கெட்டவன், குணியுறானா பாரு’ அங்கலாய்த்துக் கொண்டே, பெருவிரலினை நிலத்தில் ஊன்றி, சற்று எம்பி கேக்கை ஊட்ட, அவனோ அவனுண்ட மீதியை அவள் கையிலிருந்து வாங்கி, அவளுக்கே ஊட்டிவிட,

 

சற்றுமுன் மல்லுக்குநின்று பன்னிரெண்டு லட்டை, துக்கம் தொண்டையடைக்க சுவைத்தவளுக்கு இக் கேக்கின் வாசனையை நுகர குமட்டிக் கொண்டு வந்தது.

 

வாயை இரு கைகொண்டும் அழுத்திப் பிடித்தவள், அடக்கமாட்டாமல் இந்தரின் ஷட்டின் மீதே வாந்தியெடுத்தாள், மேலும் அடக்கமாட்டாமல் தனது அறைக்குள் ஓடினாள்.

 

இந்தரோ, தன்சரிபாதியின் செயலால் தன் தலையினைக் கைகளால் தாங்க, வீட்டிலிருந்த அனைவரும் அவனை ஒரு எதிபார்ப்பு பார்வை பார்த்தனர். 

 

பிரசாத்தோ, அக்கப்பட்ட புன்னகையுடன் ‘என்ன’ எனும்விதமாக கேட்க, இந்தருக்கு உள்ளுக்குள் சிலுசிலுத்தது.

 

‘குடும்பமே ஒரு மார்கமா பார்க்குதே. பால் டப்பி! இவங்க முன்னவா வாந்தியெடுக்கனும். அடேய் பிரசாத்து, முதல்ல உன்ன…’ அகத்தில் பொசுங்கியவன்,

 

“ஜஸ்ட் பூட் பாயிசன்ங்க. நேற்று விரதமிருந்தாளா, திடீர்னு இப்போ சாப்பிடவும்….” இழுத்தவன், இவனையே கேள்வியாக நோக்கிய அமராவினிடம் கண்ணை மூடித்திறந்து ‘வந்துடுறேன்’ சைகையிட்டு கவியறைக்குச் சென்றான்.

 

குளியறைக்குள் அவள் வாந்தியெடுக்கும் அரவம் கேட்க, அங்கு விரைந்தவனோ, கூச்சலிட்டான். “இந்த, ஷட்டின் விலை தெரியுமா உனக்கு? இப்படித்தான் வாந்தியெடுத்து நாசம் பண்ணுவியா? பட்டிக்காடு”

 

அவனுடைய சப்தம், மகளின் நிலையை விசாரிக்க இந்தரின் பின்னாலே வந்த வேலுப்பாண்டியின் செவிகளில் நாராசமாய் ஒலிக்க, அவரும் மகளைக் காணாமலே சென்றுவிட்டார்.

 

முகத்தில் நீரையடித்துக் கழுவிய கவி வெளியே வர,

“போய் லெமன் ஜூஸ் போட்டுக் குடி சரியாகிடும்” என்றவனிடம்,

“ஷட்டைக் கொடுங்க, துவைச்சி போடுறேன்” வீராப்பாக பதிலுரைத்தாள்.

 

“ப்ச், போ. போய் சொன்னத செய்மா”, அவளை அனுப்பிவைத்துவிட்டு, மீண்டும் ஒரு குளியலைப் போட்டு, “அமரா என்ன பண்ணுறாலோ” அவளைச் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்த வேண்டி அமராவிடம் சென்றான்.

 

“இதைக் குடி கவி” அவளின் முன் சிவகாமி நீட்டிய எலுமிச்சை கரைசலை பருகியவளின், வயிற்றில் குளிர்மை ஜில்லிட்ட போதும், நெஞ்சத்தில் சூடாக லாவா குழம்புகள் கொப்பளித்தது.

 

சிவகாமி ஏதோ பேசவருவதையுணர்ந்து, தலையசைப்புடன் தன் அறைக்குள் புகுந்து மஞ்சத்தில் உடலைக் கிடத்தியவள், எழுந்து ஆயாசத்துடன் தன் சதங்கையைக் காலில் மாட்டிக் கொண்டு, இருவெட்டில் பாடலை ஒலிக்கவிட்டு ஆடத்துவங்கினாள்.

 

கனவினில் எந்தன் உயிரில் உறவாகி

விடிகையில் இன்று அழுது பிரிவாகி

தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ!

 

எனும் வரிகளுக்கு ஆடும் போது அவள் மனக்கண்ணிலும் அவனே, புறக்கண்ணிலும் அவனே! இந்தரஜித் வானத்தின் மீது மேகவானத்தில் சஞ்சரித்து ரதியைக் கண்டு மயங்கி, வசீகர புன்னகையுடன் அவளை நோக்கி வருவது போன்ற தோற்றத்தில், இந்தரினை கண்களால் பருகிக் கொண்டு, கையை ‘அருகில் வா’ எனும் விதமாக அசைத்தவள்,

 

மாயையாக கற்பனை செய்த, நிஜ இந்தரின் மார்பின் மீதே நாசியுரச, பூமாலையாக துவண்டாள். அவனும் தன் மீது கொடியென படர்ந்த பாவையினை கைகளில் தாங்கிக் கொண்டு, “அழகா ஆடுற” அவளின் கழுத்தின் பூனை முடிகள் சிலிர்தடங்க, அவள் செவியில் வேதமோதினான். 

 

விக்கித்துப்போய் நிஜத்தை அறிந்த கவியோ அவனின் அணைப்பிலிருந்து திமிரி, சுவற்றோடு சென்று ஒட்டிக் கொண்டாள். அவனோ ரசனை மாறாத பார்வையினால் அவளை அணுஅணுவாக பருகியவன், அவளின் உச்சியிலிருந்து பாதம் வரை பார்வை ஊர்வலம் நிகழ்த்தினான். 

 

‘காலையிலிருந்து இவர் பார்வை சரியில்லை கவி’ அவள் மனது எடுத்துக் கொடுக்க, ‘ராட்சசி, ஏன்டீ எனக்கு எதிரியா பிறந்து தொலைச்ச? அரை சையிஸ் பால் டப்பி! கொண்ணுப்புட்டடீ’ அவனின் ஒரு மனமாே புலம்ப, 

 

‘இந்தர் கன்ராேல், நீ அமராவின் குட்டாடா’ மறு மனமாே காரிஉமிழ்ந்தது. பரதத்தின் போது கவியின் புடவை மாராப்பு நைந்திருக்க, இந்தரே அவளை நெருங்கி விரல்கள் உடலை ஸ்பரிசிக்காமல் ஆடையை சரி செய்தவனின் கண்கள்,

 

‘மயக்கப் பார்கிறாயா? எனக்கு நீயெல்லாம் அர்பபதரே’ எனும் செய்தியை வெளிப்படுத்துவதாக கவியுணர்ந்தாள். ஆனால் அவன் கண்களிலிருந்தது அவன் மட்டுமே உணரக்கூடிய மென்னுணர்வு.

 

“யார் உன்னோட குரு? ரொம்ப நுணுக்கமா, அர்பணிப்போட ஆடுற” இயல்பாக விசாரிக்க, அவனவளுக்கோ அடக்கி வைத்த கோபமெல்லாம் தீயென வார்தையாக எழுந்தது.

 

“நான் எங்க படிச்சிருந்தா உங்களுக்கு என்ன? நான் பட்டிக்காடு தானே?” என்றாள்.

 

“சரி அதை விடு, இந்த சேரி உனக்கு ரொம்ப மெட்ச்சாஹ் இருக்குது” பேச்சை மாற்றினான் இந்தர்.

 

“எங்கப்பா எடுத்துக் கொடுத்தது” வெட்டிப் பேசவும்,

 

“உனக்கு அறிவு ரொம்ப கம்மிமா, ஸ்வீட் பாக்ஸ் நான்தான் வைச்சேன்னா, இந்த புடவையும் நான்தானே வாங்கி வந்திருக்கனும். காலையிலிருந்து கத்தினாலும் புரியாதா?” அவன் விபரிக்க, தெளிவடைந்த அவளோ,

 

“இந்த புடவையும் உங்க ஸ்டாப்க்கு தானே வாங்கினேன்னு சொல்ல வரிங்க. அப்போ நான் இத இப்போவே கலட்டிக் கொடுக்கவா?” வெறிகொண்டவளாக,

 

இந்தர் தன் அருகில் நின்றிருப்பதை சிந்தையிலும் தொடாமல், சேலையினை கலைவதற்காக, அதன் தோள்கொசுவத்தில் கை வைக்கப் போனாள். 

 

“மேகம்! என்னடா இது? இந்தப்புடவை உனக்காக தான் எடுத்தேன். கையை எடுமா” மழலையாக மாறிய மணவாட்டியிடம் எடுத்துக்கூறினான்.

 

‘நம்பமாட்டேன்’ முறண்டு பிடித்தவளின் விழிவீச்சில், அவனை ரசனைப் பார்வை தொத்திக் கொள்ள,

 

“தேவியின் தரிசனம் கிடைத்தால், எந்தப் பக்தன் தான் வேணாம்னு சொல்லுவான். தேவதேவி உங்க பக்தன் பரவச நிலைக்கு தயாராகிட்டான்” கைகளை கூப்பி குறும்புடன் கண்சிமிட்டினான் இந்தர்.

 

அவனின் பேச்சின் சாராம்சத்தைக் கண்டுகொண்ட கவிக்கோ, இப்போது வெட்கம் பிடுங்கித்திண்ண, வெண்மேகமானது செம்மை பூசிக்கொண்டதாக முகம் விகாசிக்க அவனைத் தாண்டி ஓடிச்சென்றவளின் செவியில்,

 

“நான் என்பது நீயல்லவாே தேவதேவி” எனும் பாடல்வரி அவள் கணவனின் குரலில் தேனாய் பாந்தது.

 

பாடலின் மீதியை விசிலடித்தபடி இசைத்தவன், அடங்காத தன் கேசத்தினை இழுத்துக் கோதி, நாதமாக நகைத்தவன், “தாலிகட்டும் போது கோழிக்குஞ்சு போல நடுக்கிக் கிடந்த மேகமா இது, இப்போவெல்லாம் சண்டைக் கோழியா சிலுப்பிக்கிட்டு திரியுறா. ஸீ இஸ் ஸ்வீட்டஸ் எனிமி பார் மீ. மயக்குறடீ பால் டப்பி” எதிரொலித்தான்.

 

இசை அவளறையில், இன்று மதிய நேரத்திற்கு மேலே பணிநேரம் என்பதால் வைத்தியசாலை செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். 

 

கண்ணாடி முன் நின்று காதணியினை அணிந்தவளின், விழிகளுக்குள் வந்து சிரித்தான் ஹஸ்வந். நண்பர்களாக சிறகு விரிக்கத் தொடங்கி சில வாரங்களே கடந்திருக்க, இருவரும் அடிக்கடி தட்செயலாகவே அல்லது திட்டமிட்டடோ சந்தித்துக் கொண்டிருந்தனர். 

 

நேற்றும், கவிக்காக பரிசு வாங்க சென்ற நகைக் கடையில், ஹஸ்வந் தனது தமக்கைக்காக மோதிரமொன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, அவனுடனே இசையும் கவிக்கான மோதிரமொன்றையும், காதணியொன்றையும் தெரிவுசெய்தாள்.

 

“பிரபா, நீங்க ஜிமிக்கியே போட மாட்டிங்களா? கேள்விக்குறி மாதிரி வளைந்திருக்குற உங்க காதுக்கு அது ரொம்ப கியூட்டா இருக்கும்” 

 

நேற்று அவன் கூறியது போலவே, அவள் கைகள் குடை ஜிமிக்கியொன்றை எடுத்தணிந்து கொண்டபோது, அவன் விம்பம் கண்ணாடியில் ஜாலமிட்டது.

 

“இசை நீ பண்ணுரது; சரியே கிடையாது. அண்ணா, அப்பா எல்லோரும் உனக்கு வீட்டோட மாப்பிள்ளை வேணும். அதுவும் அப்பா விருப்பப்படி நம்ம ஜாதியிலேயே படிச்ச பையனாப் பார்த்து, அந்த சாப்ட்வெயார் சைக்கோ தினேஸ்ஸ மாப்பிளைனு பேசி வைச்சிருக்கும் போது, ஏன் ஹஸ்வந் நியாபகம் உனக்குள்ள வரனும்” அவளுருவத்தைப் பார்த்து கேள்வியெழுப்ப,

 

“நீ அந்த தினேஸ் கூட, எப்போவாச்சும் பேசியிருக்கியா என்ன? அவனை ஒரு துரும்பாக் கூட மதிக்க மாட்டியே. தென் அண்ணா நீ கேட்டா இல்லைனு சொல்லவே மாட்டாரே” மனது எடுத்துக் கொடுக்க,

 

“டூ யூ லவ் ஹிம்?”, “தெரியலையே!”, “அப்போ முதல் ஹஸ்வந் என்ன நினைக்காண்னு பேசிப் பாரேன்”, 

 

“அவன் நம்பர் கூட என்கிட்ட இல்லையே”, “இன்னைக்கு கண்டிப்பா அவன் ஹாஸ்பிடல் வருவான். அப்போ அவன் மனசுல என்ன இருக்குனு கண்டுபிடிக்குற” 

 

இதயம் அதன் விசைப்படி இசையை இழுக்க, அவளோ இறுதியாக ஹஸ்வந்திடம் பேசிவிடவேண்டும் என்ற முடிவுடன் கிளம்பினாள்.

 

‘லிபரா பார்’ எனும் உயர்ரக குடிமக்களில் உலகத்தில், மதுபான குவளைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மேசையில், நீண்ட கால்களைக் கொண்ட கதிரையில் சாய்ந்து கொண்டிருந்தான் ஹஸ்வந்.

 

தாடியடர்ந்து, முடிகளை சிறிது சிறிதாக நூற்றுக்கும் மேற்பட்ட பின்னலிட்ட தலையுடன் ஒருவன், ஹஸ்வந்தின் அருகில் வந்து உட்கார்ந்தான்.

 

“ஹல்லோ லாயர் சார்” கைகளை நீட்ட, ஹஸ்வந்தோ கையைக் கொடுக்காமலே தன் தொலைபேசியில் குறுஞ்செய்தியை தட்டச்சுசெய்து கொண்டிருந்தான்.

 

“அட, லாயர் சார்க்கு ஓட்கா சொல்வா?” என்றவனிடம், “எனக்கு குடிக்குற பழக்கமில்ல” என்றான்.

 

“பாரேன்…” மற்றவன் நீட்டிமுடக்க, “எனக்கு சுற்றி வளைத்து பேசப் பிடிக்காது. நீ எம்.எல்.ஏ பையனா இருக்கலாம் பட் உன் அப்பா குடும்மியே என் கையிலதானு நியாபகப் படுத்த வேண்டிய அவசியமில்ல. பிகாஸ் நான் லாயர் மட்டும் கிடையாது. என் போக்ரௌன்ட் உனக்கு நல்லாவே தெரியும்னு நினைக்குறேன்”

 

ஹஸ்வந் பேசும்போது அவன் கண்ணிலிருந்த தீவிரம், புதிதாக வந்தவனின் உடலின் உதிரத்தை உரையச் செய்தது. “சார்க்கு என்ன பண்ணனும்” தன்மையாக அவன் வினவ,

 

“உங்க கேஸ்ஸ ஒன்னுமில்லாம பண்ணவேண்டியது என் பொறுப்பு. அதுக்கு பீஸ்க்கு மேலதிகமா, ஒரு பொண்ணைத் தூக்கனும் அதுவும், இன்னைக்கு ஈவினிங்” மிரட்டலாக பேசினான் ஹஸ்வந்.

 

“கொலையா சார்” புதியவன் விழிபிதுக்க, “மடையா, அவ மேல, யாரோட சுண்டு விரலும் படக்கூடாது. உங்க ரௌடிக் கேங்கை வைத்து கடத்துங்க. எனக்கும் ஆளுங்க இருக்கு. பட்..” பாதியில் முடிக்க, புதியவனோ “அவ அடையாளம்” என்றான்.

 

ஹஸ்வந்தோ, இத்தனை நேரம் தான் நோண்டிக் கொண்டிருந்த தொலைபேசியில் ஒரு புகைப்படத்தை எடுத்து “இவதான்” என முகமுழுவதும் வக்கிரத்தில் சிவக்க காட்டியவனின் தொடுதிரையில், வெள்ளை அங்கியணிந்து கழுத்தில் இதயத்துடிப்புமானி தொங்க, மிடுக்கில் மென்மைகலந்து முறுவலளித்தாள் இசைபிரபா.

 

நீயும் நானும் நாமக,

சொல்லத்துடிக்கும் காதலை,

மெல்லப் புதைக்கும் விந்தையும் ஏனடா?

 

அவள் வீழ்த்தினாள்….