யாகம் 18

யாகம் பதினெட்டு

 

மலர்ந்த மலர்கள், உதிர்ந்து சருகாகுவதாக நாட்களும் நடப்பில் சென்றுகொண்டிருக்க, இரண்டு வாரங்கள் ஓடிச் சென்றிருந்தது.

 

தினங்கள் உதித்து, அஸ்தமித்திருந்தாலும், பிரசாத்தின் வீட்டில் வசிக்கும் மனிதர்களின் மனங்களில் எந்தவித மாற்றங்களும் நிகழ்ந்திடவில்லை.

 

பிரசாத், அமராவுக்கிடையிலான உறவானது புள்ளியிட்ட இடத்திலேயே அசையாமல் இருக்க, இந்தர் மற்றும் கவிக்கான மனவாழ்க்கையும் அதுபோலத்தான்.

 

கோடிட்ட கோலங்கள் வளைந்தும் வளையாமலும் பூரணப்படுத்த படாமல் கிடக்க, இப்போதெல்லாம் இந்தரை அவன் மேகம், மோகத்துடன் ஏறிட ஆரப்பித்திருந்தது.

 

இவை அனைத்திற்கும் சற்றும் ஒட்டாத வகையில் ஹஸ்வந், இசையின் மனவாழ்வானது கிணற்றில் போட்ட கல்லாக அசைய மறுத்துக் கிடந்தது.

 

ஆண் அவன், எத்தனையோ முயற்சிகளை எடுத்து, இசையின் மன அச்சத்தைக் கூட கண்டறிந்திருந்தான். ஆனால் பெண் அவளோ, ஹஸ்வந்திடம் ஒரு மிதமிஞ்சிய ஒதுக்கத்தையே பேணினாள்.

 

வீட்டின் உயிர்பான இளம் தலைமுறைகளின் மனசஞ்சலங்களால், அவ் இல்லத்தின் பெரியவர்களின் இதயங்களில் ஏதோ பாரமேறிப் போயிருந்தது. 

 

இத் திருமணங்களின் முன்னதாக, ஆனந்தம் குடித்தனமிருக்கும் வீடாகவல்லவா அவ்விடம் வாசம் வீசியது. படிப்பு, நடிப்பு, வைத்தியம் என மூவரும் ஓடிய போதும் ஓய்வு நேரங்களில், செல்லச் சண்டைகள், குறும்புப் பேச்சுகள் என கோலோச்சியவர்களின் இப்போதைய அமைதியானது, விசப்பூச்சிகளும் பேய்களும் அடையும் பாழ்வீடாகத் தோன்றியது.

 

இன்றைய நாளின் ஆரம்பமே, வான இருள் மூட்டத்துடனே துவங்கியது. வெளியிலும் மழைக்கான அறிகுறியிருக்க, வீட்டிலும் அதற்கேற்றபடி அறைக்குள் இசை ஹஸ்வந்திடம் முழங்கிக் கொண்டிருந்தாள்.

 

“ஹஸ்ஸூ, இ…இந்த கேஸ்ஸ நீ…நீ தான் எடுத்திருக்கியா?” ஏமாற்றம் அப்பட்டமாக முகத்தில் ரேகையிட, வார்த்தைகளைத் தொடுத்தாள் அவள்.

 

“எஸ், நான் தான் எடுக்கப் போறேன். நெக்ஸ்ட் மந்த் இங்க சென்னைக் கோர்ட்ல தான் அப்பில் ஆக போறேன்” சர்வசாதரணமாக, கண்ணாடி முன் நின்று சீப்பினால் தலைமுடியை சீவியவாறு ஹஸ்வந் கூற,

 

“வேணாம் ஹஸ்ஸூ, இது தப்பு” அவள் எடுத்துக்கூற விளிக்கும் போதே, இசையின் இதயம் சோக கீதம் வாசித்தது.

 

அவளின் தர்மபதியான ஹஸ்வந் எடுத்து நடத்தப்போவதாக குறிப்பிடும் வழக்கு அவ்வளவு நல்லதல்லவே, ‘காதல் தோல்வியினால், காதலியை வன்மையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி துண்டாக வெட்டிக் கொலை’ எனும் தலைப்பின் கீழ் கடந்த சில நாட்களாக பத்திரிகையிலும் சமூக ஊடகங்களிலும் கெதிகலங்கவைத்த செய்தியின்,

 

கதாநாயகனான அக்காதலனுக்கு சார்பாகவல்லவா இவன் வாதாட போகிறான். சற்று முன் கீச்சகத்தில் பார்த்த பதிவைக் கூட இசை நம்பவில்லை, ‘என் ஹஸ்ஸூ அப்படிக் கிடையாது’ நம்பிக்கை தலைதூக்க அவள் அவனிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறாள்.

 

ஆனால் அவனோ, ‘ஆம்’ என அடித்துக்கூற, இசைக்கோ எரிச்சல் மேலிட்டது. கடந்தவாரம் கூட இசைக்கு அவளின் அந்தரங்கம் என அச்சமூட்டும் புகைப்படங்கள், அஞ்சல் மூலம் அவளின் வைத்திய அறைக்கே வந்திருக்க, மேலும் மேலும் தனக்குள் தனையே தேடித் தொலைந்து கொண்டிருந்த பெண்,

 

தான் அதீத நம்பிக்கைக்குறிய கணவனே அநியாயத்துக்கு துணை போவதா? என்ற மனச்சலனத்தில், ஹஸ்வந்திடம் கத்த ஆரம்பித்தாள்,

 

“ச்சீ…ஹஸ்ஸூ! நான் உன்னை எவ்வளவு நம்பினேன். ஆனா நீ இப்படி ஒரு ரேப்பிஸ்ட்க்கு சபோர்ட் பண்ணுறியா? அப்படி என்ன பணத்தின் மேல ஆசை. நான் அந்த கேஸ்கான பீஸைத் தரேன். தயவு பண்ணி ஒரு பெண்ணுக்கும் அவ அப்பா, அம்மாக்கும் கிடைக்க வேண்டிய நியாயத்துல கையை வைக்காத” ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தாள் இசை.

 

ஹஸ்வந்திற்கோ, ‘சுள்’ என்றதொரு உணர்வு. ‘ஏன் இந்த கல்யாணம் பண்ணினோம்’ என்ற உவர்ப்பு நிலைக்கு தள்ளப்பட்டு விடக்கூடது என்ற முனைப்பு அவனுள் எழ, ‘ராங்கி ஏன்டீ, என்ன கொல்லாம கொல்லுற. எடுத்துச் சொன்னா மட்டும் ஏற்றுக்கொள்ளும் இனம் இல்லியே இவ’ அகத்தில் புலம்பியவன்,

 

“இதோ பாரு பிரபா! இது என்னோட தொழில், அதுல யாருக்கு, எப்படி, எங்கே நியாயமா இருக்கனும்னு எனக்குத் தெரியும். சோ…” இழுத்தவன் வாயை மூடு என அதரத்தில் தன் ஒற்றை விரலை வைக்க,

 

“மெத்தப் படிச்ச திமிரு. பெஸ்ட் கிரிமினல் லாயர்னு எல்லாரும் தலையில தூக்கி…” அவளின் அடுத்த வார்த்தைகள், காற்றாகி மூச்சாகி அவன் நுரையீரலை நிரப்பியது. அழுத்தமாக அவள் இதழை அடைத்தவன்,

 

சற்று நேரத்தில் விலகி, “நீ ஒரு வைத்தியரா யோசி. உன் புருசனைக் கொலை பண்ணின ஒருத்தனுக்கு நீ வைத்தியம் பார்க்க வேண்டி வந்தா, கண்டிப்பா நீ அவனைக் கொலை செய்ய மாட்டதானே. சில நேரங்களில தவறும் சரிகள் தான்” அவள் உச்சியில் கையை வைத்து கேசங்களை கலைத்து விட்டு கதவைத் தாண்டி நடந்தான் நெடியவன்.

 

இசைக்கு அவன் கூறிய உதாரணம் எங்கே மூளையில் பதிந்தது. ‘என் புருசனைக் கொலையா?’ அந்த வாக்கியத்தினை வாய்பாடக ஓட்டிப்பார்த்தவள், தலையைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தாள். கற்பனையில் கூட அவனின் நன்நலம் பேனவேண்டும் எனநினைப்பவளும் அவளே, சொற்களால் அவனைக் கீறித் துண்டாக்குவதும் அவளே.

 

மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால், விரிந்திருந்த கவியின் அறையில் இந்தர் அவன் மேகத்தின் சிந்தனையில் பவனிவந்து கொண்டிருந்தான். “காலையிலேயே நம்ம ஆளைக்காணோம். இன்னைக்கு காலேஜ் கூட லீவாச்சே. காலேஜை நினைக்கும் போதுதான் முக்கியமான விசயமே ஞாபகம் வருதே”

 

போர்வையை நீக்கி, தன்னைத் தயார்படுத்திக் கொண்டவன், அலுவலகத்துக்குச் செல்ல வெளியில் வர, “குட்டா, நீ செங்கல்பட்டு பிராண்ச்கு கொஞ்சம் போறியா? நான் இந்த பிராண்சை இன்னைக்கு பாத்துக்கிறேன்” அவளின் அறையிலிருந்து வெளிய வந்த அமரா, அவனிடம் கூறிவிட்டு அவளின் காரில் புறப்பட,

 

இந்தரோ சிவகாமியிடம் மேகவியைப்பற்றி விசாரித்தான். “ஏதோ புஸ்தகம் வாங்க போறதா சொல்லிச்சுப்பா” என அவர் விளக்கம் கூறவும், அவன் செங்கல்பட்டு நோக்கி காரைக் கிளப்பினான்.

 

காரானது தார் சாலையில் மிதமான வேகத்தில் பயணிக்க, வீட்டிலிருந்து பத்து நிமிடப் பயணத்தூரத்தில், புத்தகக்கடையொன்றை கண்டான்  இந்தர்.

 

 “போடீ லூசு, ஆயிரம் ஹேண்சம் வந்தாலும் எங்க தலைவன், வந்தியத்தேவனுக்கு ஈடாகுமா? என்னோட பழைய பொன்னியின் செல்வன் புக்குக்கு மேலதிகமா, இப்போ சித்திரம் எல்லாம் போட்ட புது புத்தகம் ஒன்னு வாங்கனும்.” என,

 

இரண்டு நாட்களுக்கு முன் மேகவி, தன் தோழியிடம் தொலைபேசியில் உரையாடியது நினைவில் வர, “பால் டப்பி, காலையில இருந்து கண்ணுல சிக்கவே இல்லியே. பச் இப்போவெல்லாம் அவளை வம்புக்கு இழுக்கலனா, அந்த நாள் விடிஞ்ச மாதிரியே இருக்காதே”,

 

“புக் வாங்க போனதா சென்னாங்க, ஏன் நம்மலே இரண்டு புக் வாங்கி கிப்ட் பண்ணக்கூடாது? அந்த புத்தகத்த வைச்சே இரண்டு நாளைக்கு சீன் கிரியேட் பண்ணி எண்டடைமென்ட் பண்ணலாம்” முடிவுகளை எடுத்தவனாக,

 

இந்தர் காரை, வீதியின் ஓரமாக நிறுத்திவிட்டு கடையை நோக்கி எட்டு வைக்க, அவன் கால்கள் அசைய மறுத்து, கண்கள் ஒரு கடையை எரித்து விடுவது போல பார்வையைச் செலுத்தியது.

 

அக்குளிர்பானக் கடையில், வட்டவடிவ மேசையின் எதிர் எதிர் திசையில் மேகவியும், முப்பத்தைந்து மதிக்கத்தக்க ஆடவனும் அமர்ந்திருந்தனர். அதிலும் அவ் ஆடவன் குளிர்பானமொன்றை கவியின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருக்க,

 

வேக எட்டுக்களை வைத்த இந்தர், புயலாக சீற்றமெடுத்து அக்கடையின் கண்ணாடிக் கதவினைத் திறந்து கொண்டு, கவியின் கையிலிருந்த குளிர்பானத்தை பிடுங்கி எடுத்தவன், ஒரே மூச்சாக அதை வாய்க்குள் சரித்தான்.

 

“யாரு சார் நீங்க?” கவி இந்தரின் செய்கையில் விழிபிதுங்கிக் கொண்டிருக்க, அவ் ஆடவனே வினவினான். “நான் யாருனு, உங்க காலேஜ் சாரி நீங்க வேலை பார்க்கும் காலேஜ் மெனேஜ்மென்ட் மீட்டிங்ல தெரியும்” வேட்டைப் புலியாக உறுமியவன் கண்ணத்தில் அதே குழி.

 

‘வா’ விழிகளால் கட்டளையிட்ட இந்தர், கடிகாரத்தைச் சரிபார்த்து, முன்னே நடந்து வண்டியில் ஏற, பின்னே கவியும் ஏறிக்கொண்டாள். மௌனமாக அதே நேரம் அதிவேகமாக காரை செலுத்தியவனின் தாடையின் அழுத்தத்தை ஏறிட்ட கவிக்கு உள்ளுக்குள் சில்லிட்டது.

 

‘கவி, இன்னைக்கு செத்த. ஆம எதுக்கு இப்போ கோபமா இருக்கிறதா காட்டிக்கிறார். ஒரு வேளை சொல்லாம கடைக்கு வந்ததா? ஆனா தினமும் காலேஜ் போகும் போதே சொல்லிக்க மாட்டேனே’ வாய் வார்த்தை உச்சரிக்காமல் மனமே பேசிக்கொண்டது அவளுள்.

 

பத்து நிமிடத்தில் கடக்கவேண்டிய தூரத்தை ஐந்து நிமிடங்களில் கடந்து, வீட்டின் நடைபாதையிலேயே காரைக் கொண்டு வந்து நிறுத்தினான் இந்தர். காரணமா கார் நிறுத்துமிடம் வரை செல்ல, அவனுக்கு கால அவகாசம் இல்லாமயே, 

 

“மேகம் வா” வென அவளின் கையைத் தரதரவென பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல, அவளோ நடக்க முடியாமல் அவன் பின்னே இழுபட்டுக் கொண்டே சென்றாள்.

 

வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த பூங்காவில், பூச்செடிகளுக்கு நீரை பாய்சிக்கொண்டிருந்த கவியுடைய தந்தை வேலுப்பாண்டிக்கு இந்தரின் செய்கையையும் மகளின் வாட்டமான முகமும் கடுங்கோபத்தை உண்டுபண்ணியது அவரினுள்.

 

மாடிப்படிகளிலும் நிதானமின்றி இழுத்துச்சென்ற இந்தர், கவியை அரைக்குள் கொண்டுவந்து மஞ்சத்தில் மீது தள்ளிவிட்டான்.

 

“ஹேய் மேகம்! உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ஏன் அங்க போன நீ?” வார்த்தைகள் சற்றுத் தெளிவில்லாமலே வந்து விழ,

 

“எங்க சார்ங்க அவரு, புத்தகம் வாங்கனும்னு நேத்தே சொல்லியிருந்தார். நா..நான் தான் அவரோட புராஜெ…” முடிக்காமல் நீள, 

 

“ஆக, புராஜெக்ட் ஹெட்னு உன்னையும் சீர்கெடுக்க ட்ரை பண்ணி இருக்கான். என்ன முழிக்குற, நேத்தே உங்க பிரின்சி இவன் மேல எக்கச்சக்க கம்ப்லெய்ன்ட் இருக்கு, திங்கள் அன்னைக்கு மீட்டிங்னு இன்ஃபார்ம் பண்ணி இருந்தாங்க” வார்த்தையின் தெளிவின்மை அதிகரிக்க,

 

“உனக்கு கொடுத்த ட்டிங்ஸ்ல ஏதோ மிக்ஸ் பண்ணி, அதாவது மயக்க மருந்து. அப்போ நான் ஏன் குடிச்சேன்னு பாக்குறியா? என்ன பண்ணட்டும், என் பொஞ்சாதி ஓவர் இனசென்ட். அவள நம்ப வைக்கத்தான் நா..நான் கு..குடிச்சேன். அ…அது தான் உன்..னை இங்க வே..வேகமா இழுத்துட்டு வ..வந்தேன்” குழறியவன்,

 

படுக்கையில் அவள் அருகில் அமர்ந்து, “வ..வலிக்குதா? சா…சா..ரி” என அவளின் கைகளை அனுசரனையாக நீவியவன், கவியின் மீதே சாய்ந்து விழுந்தான்.

 

புதிதாக மொட்டு வைத்த செடியொன்று, எப்போதடா மலரும் என நட்டுவைத்தவன் காவல் காப்பது போல கவியின் உடலிலும் முதல் முறை மின்சார உயர் அழுத்தமொன்று தாக்கியது. தனக்கு மேல் முழுப்பாரத்தையும் ஊண்றி, உடம்பை சரித்திருக்கும் கணவனின் அருகாமையில்,

 

உடலும் உள்ளமும் பித்தாகிப் போக, வெட்கத்தில் அந்திவானமாக அங்கங்கள் செம்மையுற, மெதுவாக அவனைத் தன்னிலிருந்து பிரித்தவள், அவனை நேராக படுக்கவைத்து பாதணிகளை கழற்றி விட்டு போர்வையையும் போத்தி விட்டு ஸ்திரியாக தனது கடமையைச் செய்ய,

 

‘எஸ் ஐம் லவ்விங் ஹிம்’ என கவியின் நெஞ்சம் விம்மி விம்மி தொண்டைவரை குதித்து ஆட்டம் போட்டது.

 

மழைத்துளிகள் சாரலாய் மண்ணை அணைக்க, பிரசாத் ஏற்றிவிடப்பட்ட கார் கண்ணாடி வழியே, வீதியில் பார்வையை நிலைக்கவிட்டான். படப்பிடிப்பும் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்க, அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியிலும் இறங்கியிருந்தான்.

 

அவனின் சினிமா இலட்சியத்தின் எல்லைகளையும் புகழின் உச்சத்தையும் தொட்டிருந்தவன், வாழ்க்கையில் சருகி விட்டதான ஒரு உணர்வு மனதில் குடைந்து கொண்டே இருந்தது. இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும் என நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பவனின் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள்.

 

“ட்ரைவர், வண்டிய நிறுத்துங்க” ஓடிக் கொண்டிருந்த காரை நிறுத்தியவன், “கார்த்திக், அமரா மேடம் வண்டி நிக்குது. என்னனு கொஞ்சம் பார்க்க முடியுமா?” என, வீதியின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த அவளின் வண்டியைக் கைகாட்ட, கார்த்திக்கும் கதவைத் திறந்து கொண்டு நடந்தான்.

 

அங்கே, வண்டியின் சக்கரத்தில் ஏதோ கூறான பொருள் குத்தப்பட்டதால், வண்டியை தெருவின் ஓரமாக நிறுத்தியிருந்தாள் அமரா. கார்த்திக்கும் நடக்க, அதே நேரத்தில் ஹஸ்வந்தும் தனது இருசக்கர வண்டியில் வந்து இறங்கினான்.

 

ஹஸ்வந்தைக் கண்ட அமரா, காரிலிருந்து வெளியில் வந்து, “சின்னு, இங்க என்ன பண்ணுற நீ” என வினவ, “கேஸ் விசயமா வந்தேன். கார் தேவைப்படாதுனு எடுத்து வரல. இன்னும் கொஞ்ச தூரம் தான் மழை அதிகமாக முன்னமா போயிடனும். டெடி உன் வண்டிக்கு என்னாச்சு?”

 

“பஞ்சர் போல” அதரத்தை சுருட்டிக் கொண்டு அவள் பதிலளிக்க, கார்த்திக்கும் அவள் அருகில் வந்து சேர்ந்தான்.

 

இவை அனைத்தையும் மூடப்பட்ட காரின் கண்ணாடி ஜன்னலினூடாக பிரசாத் பார்த்துக் கொண்டிருக்க,

 

“இந்தருக்கு கூப்டியாடா”, “குட்டா, ஃபோனை எடுக்க இல்லியே” அவன் கேள்விக்கு விடை வழங்க, “மெக்கானிக்க கூப்பிடுறேன் இரு” ஹஸ்வந் பேசிக் கொண்டிருக்கும் போதே, கார்த்திக்கின் தொலைபேசி சிணுங்கியது.

 

“சார்” என அவன் பேச, “அமராகிட்ட கொடு” என பிரசாத் பேசினான். “மேம் சார்” இத்தனை நேரமும் கவனிக்கபடாமல் நின்ற கார்த்திக்கின் குரலில், அழைப்பேசியை வாங்கி பேசினாள் அவள்.

 

“என்னாச்சு”, பிரசாத் கேட்க, “பஞ்சர்” என்றாள். “வீட்டுக்குத் தானே வா, நானும் வீட்டுக்குத் தான் போய்ட்டு இருக்கேன்” என முடிக்க, “சரி, பட் வன் கண்டீசன். நான் தான் ஓட்டனும்” என்றவள் கட்டளையாக முடித்துக் கொள்ள,

 

“நான் தேவா கூட போய்குவேன். நீ கேஸ் விசயத்தைப்பாரு சின்னு” என்றவள் பிரசாத்தின் காரை நோக்கி நடக்க, “பாய்ஸ், டிரைவர் நீங்க மேம் காரை சரி பண்ணி வீட்டுல விடுங்க, கார்த்திக்க வீட்டுக்கு டாக்ஸி எதுலயும் வர சொல்லுங்க” என்றவன், முகத்தை முழுவதுமாக மூடிய தொப்பி, முகமூடி அணிந்து காரின் முன் இருக்கையில் வந்து அமர்ந்து கொள்ளவும்,

 

அமராவும் ஓட்டுனர் இருக்கையில் அமரவும் சரியாக இருக்க வண்டியைக் கிளப்பினாள் அவள். அவளின் கார் சென்று மறையும் வரை வீதியில் நின்றிருந்த ஹஸ்வந்தும் பயணத்தைத் தொடங்கினான்.

 

சுமார் இருபது நிமிடங்களைக் கடந்தும் வண்டி வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்க, அமரா தேவ்விற்கு இடையே மௌனமே நிலைத்திருந்தது. காரின் பின்னணியில் ஓடும் பாடலைக் கூட “இது எல்லாம் ஒரு பாட்டா” என நிறுத்தியிருந்தாள் அமரா.

 

“ஏன், ஹஸ்வந் கூட பைக்ல போய் இருக்கலாமே” ஏதாவது பேச வேண்டும் என்பதாக மௌனத்தை கலைந்தான் பிரசாத்.

 

“எனக்கு பைக்னா பிடிக்காது” பிரசாத்தின் கடைசி நம்பிக்கையையும் சிதைத்தவள், “நான் யார் கூடவும் பைக்ல போகவே மாட்டேன்” என்றாள்.

 

“ம்ம்…அப்போ கார்” என அவன் கேட்க, ‘அவளுக்கு கார்னா பைத்தியம். புது வரவுல வசதியான மாடல் கார்கள் எல்லாம் அவ வீட்டுக்கு முன்ன வாங்கி நிறுத்தியிருப்பா’ என துப்பறிவாளன் மௌலி கொடுத்த அறிக்கையில் படித்தது நினைவில் வந்தது.

 

“பிடிக்கும். ஒன்லி செல்ப் ரைவிங். யாரும் எனக்கு ட்ரைவாரா இருந்தா பிடிக்காது” என்றவள், ‘நீ எப்போவும் ஓட்டுனர் கூடத் தானே பயணிப்ப’ என்ற நக்கல் பார்வை பார்க்க, 

 

பிரசாத்தோ அதின் அர்த்தம் புரிந்தவனாக, “ஆமாம் எனக்கு எப்போவும் ட்ரைவர் தேவைப்படும். இப்போ நீயும் அதே வேலை பார்க்குற” என வார்தையைக் கொட்டிவிட,

 

தூரலாக பெய்த மழை இப்போது ‘சோ’ வெனக் கொட்டுவதைக் கூட பொருட் படுத்தாமல் வண்டியை விட்டு இறங்கியவள், “கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு, நடிகரே. சோ வண்டியை ஓட்டிக் குறைச்சிக் கொள்ளுங்க” என்றவள், நடக்க ஆரம்பித்தாள்.

 

‘மூடிக்கிட்டு வாடி’ என கத்தி கன்னத்தில் ஓங்கி அடித்துவிட மாட்டோமா என இருந்தது பிரசாத்துக்கு ஆனால், ‘சரிதான் போடி இன்னும் இரண்டு தெரு மழையில நனைஞ்சே வீட்டுக்கு வா. அப்போ தான் உன் கொட்டம் கொஞ்சமாச்சும் அடங்கும்’ தனக்குள் பேசியவன்,

 

வண்டிக்குள் அமர்ந்தவாரே, ஓட்டுனர் இருக்கையில் தாவி, காரைக் கிளப்பியவன் வீதியோர சேற்றினை அவன் அறிந்தும் தடுக்காமல், அமரா மீது வாரியிரைத்து பறந்து சென்றான்.

 

சந்தர்பவசத்தால் வெள்ளை சட்டையை அணிந்திருந்த, அமராவின் முதுகு, மார்பு முழுவதும் சகதியில் குளிக்க, கொட்டும் மழை நீருடன் ஒரு துளி விழி நீரை சங்கமமாக்கிய அமரா,

 

“சேத்துல வாழ்ந்தாலும் செந்தாமரை, செந்தாமரை தான். நானும் யாகத்துக்கு முன் தட்டுல வைக்கப்பட்டிருக்குற தாமரை தான் தேவா. சகதில மலர்ந்து தங்கத்தட்டுல வாழ்ற என்னில நீ எச்சைத் துப்பினாலும் என்னோட புனிதம் மாறாது. அதே போல இந்த அவமானம் எல்லாம் என்னோட ஐந்து வருஷ வேள்வித் தீக்கு ஊற்றபடுற அபிஷேக தீர்த்தம் தான். கூடிய சீக்கிரம் நீ அழுவ, இதுக்காக அழுவ தேவா” முனங்கிய அமரா.

 

குளிரில் நடுங்க நடுங்க, நெஞ்சை நிமிர்த்தி வீரச் சிங்கமாக மழையில் வீட்டை நோக்கி நடந்தாள்.அவளின் முனங்களைப் போலவே தேவ் பிரசாத்தின் அழுகைக்கான நாளும் மிக அருகிலே!

 

செந்தாமரை மலரே!

மண்ணில் ஏன் அலர்ந்தாய்?

கண்ணாளன் கைசேரவோ?

இல்லை உன்நாதன் உயிர் மீட்கவா?

 

அவள் வீழ்த்தினாள்…