யாகம் 24

யாகம் இருபத்து நான்கு

 

சிறுக சிறுக சேர்த்துவைத்த, தன் நீரினை விசும்பிலிருந்து பெருக பெருக கொட்டியது எழிலி. நீண்ட நடைபாதையைக் கொண்டு இருபக்கமும் நோயாளிகளின் தனிப்பட்ட அறைகளைக் கொண்ட, வைத்தியசாலையின்,

 

நான்காவது தளத்தின் கண்ணாடி சாளரமொன்றில் சாய்ந்து நின்றபடி, வெளியே இலக்கில்லாத பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தான் பிரசாத்.

 

இரண்டு மணிநேரமாக சிறு அசைவைக் கூட வெளிப்படுத்தாமல் ஜடம் போல நின்றவனின் கண்களிரண்டும் செங்காந்தலாக சிவந்து கருத்திருக்க, இமைகள் கூட தடித்து வீங்கியிருந்தது. கண்மணிகள் கூட நொடிக்கொருமுறை மாத்திரமே சற்று சிமிட்டியது.

 

அவனைச் சூழ, வைத்தியர்கள், தாதியர்கள், அவனின் அப்பா, மாமா தவிர்த்து ஏனைய குடும்ப உறுப்பினர்களின் நடமாட்டமும், கட்டளை, அழுகை, சமாதானம் என தனித்தனியான குரல்களின் அரவமும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் பிரசாத்தின் கருத்திலும் சிந்தையிலும் எதுவுமே ஏறவில்லை.

 

சாளரத்தின் தடித்த வெண் கண்ணாடியில் கோடாக ஒழுகிக் கொண்டிருந்த, மழை நீரை மெதுவாக நடுங்கும் விரலோடு அவன் தொட முயல அதுவோ வெளிப் புறமாகவல்லவா ஈரலிப்பை உருவாக்கியிருக்கிறது. சலித்தவனாக, தன் தலைக்குள் இத்தனை நாள் உறங்கிக் கொண்டிருந்த மூளையைச் சலவைசெய்து அமரா பேசியதை நினைக்கலானான்.

 

இசைபிரியா ஊணை விட்டு வெற்றுடலாக தரையில் கிடக்க, அன்று அலர்ந்த மழலைகள் இரண்டும் கை, கால்களை நிலத்திலடித்து, தன் தாயின் ஸ்பரிசத்திற்காக ஏங்கி மிளற்ற ஆரம்பித்தது. 

 

சீதாராமனுக்கு அடுத்து என்ன என்பதை சுதாரித்துக் கொள்வதற்கே, யுகங்கள் தேவைப்பட்டது. ஒற்றை வாரிசாக வளர்த்த ஆண் சிங்கம் அங்கு சதைத் துண்டாக அமிலத்தில் கரைந்து கொண்டிருக்க, பெண் அரியோ இங்கு இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருக்க, 

 

கால்கள் மரமாக அசையமறுத்து தன் மகனின் பாதியாகவிருப்பினும், மகளாக பாவித்த மருமகளின் சடலத்தை ஏறிட்டு, அவ் வயதானவர் அமர்ந்திருந்தார்.

 

புசுபுசுவென்று தன்னை நோக்கி எதுவாே, அணலைக் கக்குவதை உணர்ந்தவர். நிமிர்ந்து பார்க்க, வீட்டின் சமயல்கட்டைத் தான்டி தீபிளப்புகள் பற்றியெரிந்து, இவர் உட்காந்திருக்கும் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தன.

 

“கடவுளே! குழந்தைங்க” என சுயத்துக்கு மீண்டவராக, தன் பேரச்செல்வங்களை இரண்டு கையிலும், ஒவ்வொருத்தராக இறுக்கிக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறியவர்,

சிசுவை காரில் பத்திரப்படுத்திவிட்டு,

 

மருமகளின் பிரேதத்தையாவது, காரியங்கள் செய்து அகச்சாந்தி வழங்குவோம் என, வீட்டை நோக்கித் திரும்பினார். ஆனால் விதியெனும் கொடியவன் இசைபிரியாவின் சடலத்தை, நெருப்பெனும் அக்கினிதேவனின் பசிக்கு இறையாக்கியிருந்தான்.

 

ஓய்ந்துவிட்டது, சீதாராமனின் உடல், உள்ளம் எல்லாம் நொந்து நைந்து போய்கிடக்க, இனி ஒரு நிமிடதாமதம் கூட, தன் பேரப்பசங்களை வாழவிடாது என்று யூகித்தவர், காரைக் கிளப்பிக்கொண்டு, அவ் ஊரைத்தாண்டி வெகு தூரமுள்ள வைத்தியசாலைக்கு சென்றுவிட்டார்.

 

வைத்தியரோ, அதிசயித்துக் கொண்டார். குறைமாதங்களில் ஜனனித்திருந்தாலும் எப்படி இத்தனை ஆரோக்கியம் என்று. அதிசயங்கள் சில நடக்கும் போதுதான் மனிதன் அதிகமாக கடவுளை நம்புவான். ஆனால் இங்கே கடவுளை அதிகமாக இசைபிரியா துதித்ததால் என்னவாே, கடவுள் அதிசயத்திலும் அதிசயமாக குழந்தைகளுக்கு மண்ணில் வாழ ஆயுளைக் கொடுத்திருந்தார்.

 

மேலும், இரட்டைக் குழந்தைகள் அதிகமாக குறைப் பிரசவத்தில் தான் பிறக்கும் என்பதும் சற்று நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இருக்க, இரண்டு நாட்கள் கண்காணிப்பில்  வைத்து விட்டு, மூன்றாவது நாள் வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட, சீதாராமனும் அடுத்த விமானத்தைப் பிடித்து டெல்லிக்கு கிளம்பியிருந்தார்.

 

கமலக்கண்ணன் தம்பதி உட்பட, அனைத்து குடும்ப உறுப்பினருக்கும் உண்மையைத் தெரியப்படுத்த, நண்பனின் இறப்புக்காக, ரகுவரனும், கமலக்கண்ணனும் கொதித்தெழுந்து விட்டனர்.

 

ஆனால் சீதாராமனோ, “இப்போ போய் நின்னா, என் பேரபசங்களையும் எதுவும் பண்ணிடுவாங்க, வேண்டாம். அவங்க சவகாசமே வேண்டாம்” என அனைவரையும் கட்டுப்படுத்தி விட்டார்.

 

ஆண் குழந்தை பிறந்தால், அமர் என்றும். பெண் குழந்தையாயின் அமைரா என்றும் பெயர் வைக்க வேண்டும் என இசைபிரியா, சேகரகுமார் தம்பதிகள் அடிக்கடி பேசிக் கொண்டதுக்கு இணைவாக,

 

அமர் எனும் பெயரை அமரா என்று மாற்றிக் கொண்டு பெயர் சூட்டப் போக, இந்திரஜித் “நானு..நானு தான் வைப்பேன்” ஐந்து வயது பாலகனாக சண்டையிட்டு, கடைசியில் எது அமரா, எது அமைரா என்று அவனே அடையாளமிட்டு,

 

“காலுல மச்சம் இருக்குற பாப்பா அமரா, சுருண்ட முடி பாப்பா அமைரா” என்று பெயரையும் வைத்தான். சில நேரங்களில் குழந்தை‌ குணம் தலையெடுக்க, சின்னவள்களுக்கு கிள்ளுவது, அடிப்பது என இருக்க, சீதாராமனின் ஒரு வாக்குக்கு அடங்கி, தன் மாமன் மகளை தன் மகளாக தாங்கிக்கொண்டான்.

 

ஹஸ்வந்தோ இதற்கு நேர்மாறாக, பாட்டி வீட்டிலிக்கும் தனது அக்காவின் வெற்றிடத்தை இவ்விரண்டு சிட்டுக்களினால் நிரப்பிக் கொண்டான். 

 

நாளடைய, நான்கு பேருக்கும் வயது வித்தியாசமிருப்பினும், நட்பா? உறவா? எது வென்று தெரியாத உரிமை நிலை கொடியாக படர்ந்து அவர்களை ஒன்றாக கட்டிவைத்தது.

 

கருக்களில் ஒன்றாக இருப்பினும் தோற்றத்தில் வேறாக வளர்ந்த இருவரில் அமரா, சீதாராமனின் தாயின் சாயலில் அப்பட்டாமாக வளர, அதற்கு மாறாக அமைரா இசைபிரியாவின் அச்சுப் பிரதிபோல் வளர்ந்து வந்தாள். இரட்டையர் இருவருக்குமிருக்கும் ஒற்றுமை தந்தையினைப் போல தெத்துப்பற்கள்.

 

ஏழுவயது பூரணமான அமரா, அமைரா இருவரும் ஒரே வகுப்பில் கற்றுக் கொண்டிருக்கும் போதுதான், மூளை வளர்ச்சியின்மை நோய் முலையாக அமைராவைத் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

ஐந்து வயதை தாண்டி, அவள் உடல் வளர்ந்தாலும் மூளை நின்ற இடத்தில் காலூண்றி வளரமாட்டேன் என பிடிவாதம் பிடிக்க, அவளை வீட்டில் வைத்தே கவனித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

 

அடுத்து அவளின் பத்தாவது வயதில் அடுத்த அசம்பாவிதம் சூரையாடியது. அமைராவின் கால் விரல்கள் மெதுவாக மரத்துப் போக ஆரம்பித்தது. வயது ஏற ஏற அவளின் கால் பாதம், முட்டி என மரத்து அசைய மறுக்க, அவள் சக்கரநார்காலியிலேயே காலத்தை கடத்த நேரிட்டது. அதற்கு காரணம் வேறு எதுவுமில்லை,

 

இசைபிரியாவிற்க்கு கொடுக்கப்பட்ட விசமே. இப்படியாக நாட்கள் நகர, அடுத்த இடி அமைராவின் பதின்நான்காவது வயதில் அவள் பூப்பெய்தியது. அன்று அமைராவை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் வீட்டினர் அழுத அழுகை, கடலையும் நிரப்பியிருக்கும்.

 

கருப்பையிலிருந்து ஒன்றாக, அனைத்தையும் பகிர்ந்து வளர்ந்த, தன் அக்காவிற்கு, விஞ்சானத்தின் படி அமைரா அமராவுக்கு அக்காவே. மூளை வளர்ச்சி குறைவு எனும் போது கூட அமரா அழவில்லை.

 

அவள் எனக்கு அக்கா மட்டுமல்ல, என் குழந்தை என் மகள் என பார்த்துக் கொண்ட அமரா, தனக்கு முன்னே தன் சேயுமானவள் வயதுக்குவரவும், நொருங்கி விட்டாள். தனது கட்டிலில் படுத்துக் கொண்டு வெடித்து அழுபவளை தட்டிக் கொடுத்து தூக்கி விட்டது, அவளின் தாத்தாவே.

 

“நீ இசைபிரியா பொண்னு. உன் அம்மா தைரியத்துல பாதி கூடவா இருக்காது உனக்கு” என்று அவளை எழுப்பிவிட, அடுத்த வருடம் தன் பாட்டி இறப்பின் போது வரை எதற்கும் துளி கண்ணீர் விட்டதில்லை.

 

மகன், மருமகளின் இறப்பு, தன் பேத்தியின் நிலை என மருகிமருகி உயிரை விட்டிருந்தார் குந்தவி. அவர் இயற்கை எய்தி இரண்டு மாதங்களில் அமரா வயதுக்கு வர, வயிற்றின் வலியையும் தாண்டி மனவலி அதிகமாகவிருந்தது அவளுக்கு.

 

ஹஸ்வந், இந்தர் இருவருமே அவளின் கவலையின் வடிகால். இருபது வயதில் மீசை கூட சரியாக வளராமல் நின்ற இந்தர் ஒரு தாயாக மாறி அமராவின் மாதவிடாய் காலத்தில் அவளை அன்று தாங்கியது இன்று வரை தொடர்கின்றது.

 

ஹஸ்வந் வீட்டில் எப்போதுமே குறும்பன் தான், சின்னவன் சின்னவன் என எல்லோரும் அழைக்க, அமரா அவனை சின்னுவாக பெயர் மாற்றம் செய்திருந்தாள். இதில் இந்தருக்கும் சின்னுவுக்கும் இருக்கும் சண்டை நான் தான் வயதில் மூத்தவன் என அவன் இவனைக் கடிந்து.

 

நீ உயரம் குறைந்தவன் என சின்னு இந்தரைக் கடிந்து. கடைசியில் இந்தர் அமராவுக்கு குட்டாவாகிப் போனான். மேலும் அமராவை, அவளின் அக்கா அமைராவை அம்மு என்று அழைக்க,

 

அமரா சில நேரங்களில் சின்னுவையும் குட்டாவையும் ‘பா’ என்று அழைப்பதால், அது ஒருவகையாகி, ‘அம்முப்பா’ ‘ஹஸ்ஸூபா’ என திரிபடைய, ஆண்களிருவரும் ஆளுக்கொரு செல்லப் பெயரை வைத்து, சின்னவள்களைக் கொஞ்சிக் கொள்வார்கள்.

 

வீட்டின் பெரியவர்களுக்கு, இவர்களின் உறவைப் பார்த்து பேரின்பமே! ஆண், பெண் என்பதைத் தாண்டி, தாய், சேய் என்ற உறவே நாள்வருக்குள்ளும் வியாபித்துக் காணப்பட்டது.

 

இந்தருக்கு அமைரா சேயாகி போக அமரா தாயாகிப்போனாள். ஹஸ்வந்துக்கு மூவருமே சில நேரம் தாயாக, பல நேரம் குழந்தையாக மாறிப் போனார்கள். குடுப்பத் தொழில் முக்கியம், அதன் வளர்ச்சி முக்கியம் என இந்தர், அமரா வணிகம் கற்க, ஹஸ்வந் சட்டவியல் கற்றான்.

 

நாற்கள் வெகுவாக ஓட, அமராவின் இருபதாவது வயது அவளின் வாழ்வை தலைகீழாக கசக்கிப் போட்டது. அவளின் கல்லூரியில் நடக்கும் கலாச்சார விழாவிற்கு தன் தாயுமானவன்களான ஆடவர்களை அழைத்துச் சென்றிருக்க,

 

அங்கு இந்தரும், அமராவும் அமைராவின் பெயரை பச்சை குத்திக் கொள்ள, தனது கைக்குட்யைக் கடித்துக் கொண்டு கண்கலங்கிக் கொண்டிருந்தான் ஹஸ்வந்.

 

“வளந்தவனே! அடேய். டேட்டு நாங்க தானே போடுறோம். நாங்களே சிரிச்சிட்டிருக்கோம். நீ ஏன்டா அழுது வடியுற?” சத்தமாக இந்தர் சிரிக்க,

 

“இந்துமா, இட்ஸ் பெயினிங் ஃபார் மீ” என மீண்டும் கைக்குட்டையை கடித்தான் சின்னு.

 

“குட்டா விடு. சின்னுக்கு ஊசினா பயம்னு தெரியாது” என இந்தரை அடக்கி, அந்த நாள் முழுவதும் சிரிப்பில் கடத்த, 

 

அன்றைய இருட்டிய இரவு, இன்றுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை அவர்கள் வாழ்வில்.

நள்ளிரவு ஒரு மணியளவில், அவர்களின் வீடே பரபரப்பானது. 

 

அமராவின் தாத்தா சீதாராமன் நெஞ்சுவலியினால், சுவாசிக்க சிரமப்பட்டுக் கொண்டு, தள்ளாடினார். அவரின் ஆத்மா அறிந்து விட்டது போல இன்னும் சில நேரத்தில் அடங்கிவிடுவோம் என, 

 

உடனே, அமராவை தன் அருகிலே அழைக்க, அவளுடன் இந்திரஜித்தும் ஹஸ்வந்தும் இணைந்து கொண்டனர். சீதாராமனோ அவள் இதுவரையறியா பெற்றவர்களின் மரணமர்மத்தை மெதுவாக மூச்சை இழுத்துவிட்டவாரே சொன்னவர், ஒரு நாட்குறிப்பையும் சில ஒலிகோப்பையும் கொடுத்து,

 

“உ..ன், அம்மா டயரிமா. இந்த கேசட்ல அவ.. ப…பாடிய பாட்டுங்க சிலத உன் அப்..பா சேகரிச்சு வைச்சிருந்தான்மா…” ஒரு முறை மீண்டும் மூச்சு திணர, “அது..அதுல அவ கு..டும்ப..போட்டோ இருக்கு. இனி நீ..நீ தான் இந்த சொத்து..எல்லாத்தையும் பார்த்துக்கனும். இ..இந்த உண்மை உன..உனக்கு தெரியக் கூடாது நினைச்சேன்…

 

ஆனா, தன்னோட பி..பிறப்பின் ரக..ரகசியம் தெரியாம வாழுறது கொ..கொடுமைமா” கடைசியாக இழுத்த மூச்சுடன் அவர் உயிர் நீங்கியிருக்க, அவரின் வலது கை அமராவின் இடது கைக்குள் அடங்கியிருந்தது.

 

அந்த கரங்களைப் பார்த்தவாரே, ‘தாத்தா உங்க அளவுக்கு நான் நல்லவ கிடையாது. என் குடும்பத்தைக் கருவருக்க நினைச்சவன் குடும்பத்தின் அழிவு இதே கையாளதான்’ என தன் தாத்தாவின் கைகளில் கைவைத்து மனதுக்குள் சபதமிட்டாள்.

 

அவரின் ஏழாவது நாள் காரியமன்று, பிரசாத்தின் குடும்பத்தின் மொத்தத் தகவலும் அவளின் கைக்கு வந்தது. ஒவ்வொருவரின் புகைப்படமாக பார்த்தவளின் கண்கள் கடைசியாக பார்த்த பிரசாத்தின் முகத்தில் ஒரு வினாடி நிலைத்து நிற்க, “தேவா” என அவளின் வாய் முனங்கிக் கொண்டது.

 

அடுத்து இரண்டு நாட்களில், இந்தருடைய கொக்காட்டி இருசக்கர வண்டியை இலக்கில்லாமல் ஓட்டியவள், நேரே சென்று, ஒரு பாலத்தின் தடுப்புச்சுவற்றில் விட்டுவிட்டாள். மனதின் தீ கண்னை மறைக்க, தலைக்கவசத்தின் பட்டி சரியாக அணியப்படாமல் வண்டியை ஓட்டி,

 

மரணத்திற்கும், வாழ்விற்கும் நடுவில் நான்கு நாட்கள் கண்விழிக்காமல் படுத்துக்கிடந்து. அதன் பின் ஆறு மாதங்கள் நடக்க முடியாமல் தெத்தித் திரிந்து பழைய வாழ்கைக்கு மாறி, பின் வியாபாரத்தில் தோற்று, அடிக்க அடிக்க நிமிர்ந்து நிற்கும் ரகமாய் வளர்ந்து நிற்கிறாள் அமரா. அவளை வளர்த்து விட்டனர் இந்தர், ஹஸ்வந் எனும் ஆடவன்கள் இருவரும்.

 

ஒரு கொடி காற்றில் ஆடும் போது, அதற்கு அடைக்களம் வழங்கி, தன் வரிவடிவத்தையே அக்கொடிக்குள் மறைத்து நிற்கும் பற்றுக்கம்புகள் தான் இந்தர் மற்றும் ஹஸ்வந்.

 

பெண்ணும் ஆணும் ஒட்டியமர காதல் எனும் மந்திரச்சொல் மாத்திரம் விதையில்லையே, காதலைக் கடந்த, எத்தனையோ பெயர் சொல்லத் தெரியாத பல நூதன உணர்வுகள் ஆணையும் பெண்னையும் இணைத்து வைக்கும். இவர்கள் மூவரும் அவ்வுணர்வுகளுக்கு உட்பட்டவர்களே!

 

“உப்”, இதழைக் குவித்து ஊதிய அமரா, தன் யார் என்ற இரகசியத்தை பரம ரகசியமாக்கியிருந்தாள்.

 

மூச்சையும் முகத்தையும் சீர்படுத்தியவளாக, பிரசாத்தை அவள் ஏறிட, அவனோ தன் கால் முட்டியில் கைமுட்டியை அழுத்தி, கரத்தை சிரசுக்கு முட்டுக் கொடுத்து வில்லாக முதுகு கூணி அமர்ந்திருக்க,

 

அவனின் தோலினால் ஆன காலணி இரண்டுக்குமிடையே, பெரிய பெரிய நீர் திவளைகள், பளிங்குத் தரையில் மின்னின.

 

சத்தமின்றி ஓர் ஆண்மகன் உடைந்து நொருங்கிவிட்டான். அவனின் கண்ணீரில் ஒரு அலங்கார மீனை வளக்கலாம் போல, தரை நிறைய சிந்தி சிதரியிருந்தது. ஏறி இறங்கும் மார்பைத் தவிர வேறு எந்த உணர்ச்சியுமில்லை.

 

அவனையே வெறித்த அமரா, அவளின் மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்க வேண்டி, தீயாய் சுடர்விட்டாள்.

 

“என்ன கேட்ட தேவா? நான் யாரு நான் யாரு எத்தன வாட்டி கேட்டிருப்ப, நான் அமராட. அமரா சேகரகுமார். இசைபிரியா பொண்ணு. இன்னும் ஏதோ கேட்டியே? எதுக்கு உன் குடும்பத்தில நுழைஞ்சன்னு கேட்டியே?” ஒரு முறை நிறுத்தி,

 

“வேற எதுக்கு உன் குடும்பத்தை மொத்தமா கருவருக்கத்தான்” அவள் முடிக்க, தான் அமர்ந்திருந்த நாற்காலி நிலத்தில் தடார் என விழ எழுந்து நின்ற, பிரசாத்தின் கண்களில் எஞ்சியிருந்தது வலி மாத்திரமே.

 

“எங்கம்மாவும், அப்பாவும் சாகுற வயசாடா அது. சாகும் போது, அவங்களுக்கு உன் வயசோ, என் வயசோ கிடையாது. நம்மளவிட சின்ன வயசுலயே, உன் அப்பாவும் மாமாவும் கொண்ணுட்டாங்களேடா” பிரசாத்தின் சட்டைக் காலர் அமராவின் கையில் கசங்கிக் கொண்டிருக்க அவனை உலுக்கிக் கொண்டிருந்தாள்.

 

“அவங்களுக்குனு எத்தன ஆசை இருந்திருக்கும். தான் பெத்த பொண்ணுங்களுக்கு ஒரு சொட்டு தாய்பால் கொடுக்க கூட முடியாம, என் அம்மா சாகும் போது அவளுக்கு வலிச்சிருக்காதடா, இல்லை பொண்டாட்டி புள்ளைனு எதையும் பார்க்காம கடைசியா கண்ண மூடின…எங்க அப்பாவ ஏன்டா து.து..” அவளால், அவளின் நாவினால் உச்சரிக்க கூட முடியவில்லை. 

 

“அதை விடு, நாங்க என்னடா தப்பு பண்ணினோம். சொல்லு! சொல்லுடா தேவா, சொல்லு! எங்க அம்மாப்பாவ, தொட்டுக்கூட பார்த்தது கிடையாது. அதோ அந்த ஃபோட்டோ ஃபிரேம்ல மட்டும் தான் தொட்டு பாத்திருக்கோம்,

 

ஒரு வாய் சோறு ஊட்டினது கிடையாது, கதை சொல்லி தூங்க வைச்சது கிடையாது, ஸ்கூல்கு கூட்டிட்டு போனது கிடையாது, என்னோட எந்த டாக்கியுமெண்ஸ்லயும் பெத்தவங்க கையெழுத்து கிடையாது, எல்லாத்துக்கும் மேல,

 

யாஹ் சுட் பீ ஓபன் அப், ஒரு பொண்ணு வயசுக்கு வந்தா முதல் அம்மாவத் தான் தேடுவா. ஆனா எனக்கு அதுக்கும் வழி கிடைக்கல. இட் பெயின் ப்புல் தேவா. சோ மட்ச் ஃஒப் பெயின் ப்புல். ஈவன் என்னோட அந்த ஐந்து நாளும் நான் அனுபவிக்குற வலி, ஒவ்வொரு பிலீடிங்கும் எனக்கு நரகம் தான்” அமராவின் குரலில் ஏகத்துக்கும் கரகரப்பு தொத்திக் கொண்டாலும்,

 

அவள் கண்கள் பனிக்கவில்லை, அவளுக்கும் சேர்த்து அங்கு மூன்று ஜோடிக் கண்கள் பன்னீர் சிந்தின. அதிலும் பிரசாத், அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்தவனின் விம்மல் சத்தம் அனைவரின் காதுகளிலும் கேட்க,

 

“செட் அப், அழுதினா கொண்ணு போட்டுறுவேன்” அவனினை அழவிடாமல் செய்தவள், “என்னையும் விடு, வெளிய பார்த்தியே உன் அக்காவின் ஜெராக்ஸ் காப்பி போல உக்காந்துட்டு இருக்காளே, அவள யோசி தேவா. அவ குழந்தைடா. அவளுக்கு வயசு இப்போவும் ஐந்துதான். இன்னும் இருபது வருஷத்துக்கும் பிறகும் அதே வயசுதான்,

 

அவ குரலைக் கேட்டிருக்கியா? அதுவும் அன்மெசுவட் தான். பட்..பட் இன் பிசிக்கலி சீ இஸ் வுமன். அவளுக்கே அவளைப் புரிய வைக்கவே முடியல. இதோ நிக்காங்களே இவனுங்கல எத்தன வாட்டி, ஒரு பொண்ணுக்கு இப்படி ஓடி ஓடி சேவகம் செய்றானுங்கனு விரசமா பாத்திருப்பே,

 

கேட்டுக்கோ தேவா. இந்ந இரண்டு பேரும் இல்லைனா அமரா செத்துப்போன இடத்துல, ஒரு மரத்தோட்டமே நட்டிருக்கலாம். வீ போத் ஆர் நாட் பெம்ப்பரிங் கிட்ஸ். பட் இவனுக்க கெயாரிங் பேரண்ட்ஸ் தான் எப்போவும்” பேச்சை முடிக்கும் போது, இந்தரின் தோள் வளைவுக்குள் அவளின் முகமிருக்க, இடது கை ஹஸ்வந்தின் இடையை கட்டிக் கொண்டிருந்தது.

 

“ஒன்னில்ல, இரண்டில்ல ஐந்து வருஷம். முழுசா ஐந்து வருஷம். சிறுகசிறுக திட்டம் போட்டு ஒரு யாகத்தை நடத்தினேன். அந்த யாகத்துல கொழுந்து விட்டெரியுற நெருப்புக்கு, என் அப்பா அம்மா சாக காரணமாயிருந்த, ரௌடிங்களை பலியா கொடுத்தேன். நிம்மதி இல்லாத மரணம் அதிக கொடுமைனு சொல்லுவாங்கல” இப்போது அவளின் கண்ணில் ரௌத்திரம் பரவியது.

 

இசைபிரியா, சேகரகுமாரின் மரணத்தில் தொடர்பு பட்டிருந்த அடியாட்கள் தொடங்கி, அவர்கள் இருவரும் தீ விபத்தில் உயிரிறிழந்தார்கள் என்று போலியாக, பணத்தை வாங்கிக் கொண்டு சான்றிதழ் வழங்கிய போலீஸ் உட்பட இருபது பேரை உருத்தெரியாமல் அழித்திருந்தாள் அமரா.

 

வேலுப்பாண்டி, நடராஜன் இருவரும் ஊரில் மகள் மருமகன் தீயில் இறந்துவிட்டனர் என கதை பரப்பி விட்டிருந்தாலும், அவர்களின் ஜாதிக்குள் ‘மகளின் குடும்பத்தையே ஜாதிக்காக கொலை செய்தனர்’ எனும் உண்மையை இலைமறை காயாக வெளிப்படுத்தி பெருமையும் தேடிக் கொண்டனர்.

 

அந்த இருபது பேரையும், அவர்களின் குடும்பத்திலிருக்கும் பெண்கள், அல்லது பாசமான குழந்தைகள் கடத்தி, ‘உன் மகளை கொலை செய்யப்போகிறோம்’ என மிரட்டி, அடித்து இறுதியில் அமிலத்தில் குளிப்பாட்டி, இறக்கும் தருவாயிலும் நிம்மதியில்லாமல் செய்ய வேண்டி, ‘உன் பிள்ளையை விட மாட்டோம்’ என பூசிமினுக்கி வஞ்சகம் தீர்த்தனர்.

 

“ஆமா தேவா, நான் செய்தது எனக்குத் தப்பே கிடையாது, நான்னு சொன்னா அது நாங்க மூனு பேரும் தான். எங்ககிட்ட பணம் இருந்திச்சு, அளவுக்கு அதிகமா இருந்திச்சு அதை வைச்சே எல்லா கேஸ்ஸையும் ஒன்னுமில்லாம பண்ணினோம். உனக்கு இது கொலை, பட் எனக்கு இது வேள்வி. எஸ் என்னோட வேள்வில எல்லோரையும் ஒரு வகையில தீக்குள் விழ வைக்கல, வீழ்த்தினேன்” என்றவள்.

 

“ம்ஹ், எல்லோரையும் வீழ்தின நான், ஏன் உன்னையும் உன் குடுப்பத்தையும் விடனும். உன் அப்பாவையும் மாமாவையும் தட்டித் தூக்க எனக்கு எத்தன நிமிஷம் எடுக்கும். ஒரே ஒரு ஃபோன் கால், நீங்க மொத்தமும் காலி. பட் ஐ டிட்டின் திங் சோ. எந்த ஜாதிக்கு உன் அப்பா கொடி தூக்கினாரோ, எந்த ஜாதிய ஆளை கீழ்தரம்னு வெட்டிப் போட்டாங்களாே, 

 

அந்த ஜாதினு ஒரு சொல் அவரோட குடும்பத்துக்குள்ள வரவே கூடாதுனு கங்கணம் கட்டினேன். புரியல நாங்க மூனுபேருமே உங்க ஜாதி கிடையாது. இவன் எங்க பெயருக்கு பின்னால எந்த ஜாதியும் கிடையாது. வீ ஆர் ஜஸ்ட் ஹ்யூமன் தட்ஸ் இட். அது மட்டுமா,

 

ஊரு, ஜனங்க, மானம், மரியாதைனு  இருந்த எல்லார் முன்னாலயும் உங்கள தலையை குனிய வைக்கனும்னு, உன் கல்யாணத்தப்போ பிலேன் பண்ணி, உன் ஊரு முன்னால அவமானப்பட வைச்சேன். இன்னும் எத்தனையோ…” அவள் இழுக்கும் போது பிரசாத்தை அடிபட்ட பார்வை பார்த்தவளாக,

 

“உன் மூஞ்சில நல்லாவே தெரியுது. பெரியவங்க செய்த பாவத்துக்கு எதுக்கு எங்கள போட்டு வதைச்சிங்கனு பார்க்குரியா தேவா? சரி நீ யாரு பணத்துல படிச்ச” என்க, அவன் பேசாத ஊமையாக நிற்கவும்.

 

“ஏய்! கேட்டா பதில் வரனும்” அமைதியாக அழுகையில் கன்னம் கூட சிவந்திருந்த பிரசாத்தை மிரட்ட, அந்த நொடி அவளில் அவனது அக்கா, இசைபிரியாவின் அதிகாரமே!

 

“அப்..பா” சொல்லுவதற்கே உச்சபட்ச அருவருப்பை உணர்தவனாக, பிரசாத் உச்சரிக்க, “வாவ்” என்று சத்தமாக கிளுங்கியவள்.

 

“நீ சாப்பிட்ட சாப்பாடு உன் அப்பாவோடது. படிச்ச படிப்பு உன் அப்பாவோடது. இந்த நடிகாராக வாய்ப்பு தேடும் போது பயன்படுத்திய உடைல இருந்து அத்தனையும் உன் அப்பாவோடது. இன்னும் வருங்காலத்துக்குனு சொத்துக் கூட உன் அப்பாவோடதுல உனக்கு பங்கு இருக்கும் போது,

 

ஏன், ஏன் அவரோட பாவத்துல கொஞ்சமோ கொஞ்சம் பங்கு நீ எடுத்துக்க கூடாது. அப்பாட சொத்து வேணுமாம் அவர் செய்த வேலைக்கான தண்டனை உனக்கு வேணாமா? அதுதான் லைட்டா உன்னையும் சேர்த்து கல்யாணத்தப்பாே அவமானப் படுத்தினேன்.

 

நாட் ஒன்லி யூ. என்னையும் தான், ஏன்னா நானும் ஒரு…ஒரு அழகான தப்பை பண்ணியிருக்கேன்” இதழ் வளைத்து இன்னலாக முறுவல் அழித்தவள்,

 

“சொல்லு வாட் டிட் யூ ஃபீல் அபோட் மீ. உன் கண்ணுக்கு இப்போவும் கேவளமாகவா தெரியுறேன். டெல் மீ… டெல் மீ” என்று கத்தியவள்,

 

“இப்போ நான் உனக்கு லூசர் ஆகத்தான தெரியுறேன், எஸ் மை செல்ப் அண்ட் யூவர் விவ்ஸ் ஆ கரெக்ட். ஐ எம் அ லூசர்டா, எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்குற லூசர்” என்றவள், 

 

தன் பெருவிரலைத் தவிர்த்த நான்கு விரலையும் உள்ளங்கையில் அழுத்தி, பெருவிரலை நிலத்தை நோக்கி காட்டி, ‘தோல்வியாளன்” எனும் சைகையை செய்யும் போது அவளின் கூர்விழியிலிருந்து ஒரு திவளைக் கண்ணீர் பூமியில் விழ, 

 

அந்த சைகையைப் பார்த்த, பிரசாத்தின் இதயம் தாளம்தப்பித் துடிக்க, கால்கள் துவலுவது போல உணர்ந்தவன், சுவரில் சாய்ந்து தன்னைச் சமன்படுத்த, அவனின் நயனங்கள், அவளை நோக்கி இமைவெட்ட மறந்து நின்றது.

 

‘நான் சொல்லாமல் வாயைத் திறக்கக் கூடாது’ என்ற அமராவின் கட்டளைக்கு சிரம்தாழ்த்திய சின்னு, குட்டா இருவரும், “டெடி” “பார்பி கேர்ள்” என்க, ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, ஹஸ்வந்தைக் கட்டிக் கொள்ள,

இந்தர் தன் நெடிய கையால், ஹஸ்வந் மற்றும் அமரா இருவரையும் அணைத்துக் கொண்டான்.

 

“அ..ம..ரா” எழுத்தாக சிரமப்பட்டு வாய்திறந்து பிரசாத் அழைக்க, “சின்னு, குட்டா! தேவாவை போக சொல்லு, போக சொல்லு ப்பிளீஸ். எனக்கு அவனை பார்க்க வேணாம் போக சொல்லு” அவள் புலம்ப ஆரம்பிக்க,

 

“அம்முமா” என அமைராவின் கீச்சுக் குரல், வீரிட்டது. அறையிலிருந்து நால்வரும், மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் அவளை நோக்கி ஓட, 

அங்கே எல்லாம் முடிந்து விட்டது.

 

எட்டுக் கண்களும் நேர்கோட்டில் ஒரு விம்பத்தின் மேல் பட, அமைரா தான் அமர்ந்திருந்த சக்கர நாட்காலியிலிருந்து, கீழே வீழ்ந்து மயங்கிக் கிடக்க, நரடாஜனை மாடியின் கைப்பிடிச் சுவரிலிருந்து தள்ளி விட்டிருந்தான் வேலுப்பாண்டி.

 

அமரா, இந்தர், ஹஸ்வந் உட்பட மூன்று பேரும் விரைத்து நிமிர்ந்து நிற்க, பிரசாத் வேகமாக ஓடி, அமைராவினைத் தூக்கி அவளின் நாட்காலியில் அமரவைத்தவன், ஓங்கி ஒரே ஒரு அரையை வேலுப்பாண்டியின் கன்னத்தில் விட, அவரும் நிலத்தில் வீழ்ந்து மூர்சையானார்.

 

கீழே விழுந்த, நடராஜனின் பின்னந் தலை, நேராக சென்று அங்கு அலங்காரத்துக்கு வைக்கப்படிருந்த, இரும்பு சிலையின் மீது மோத இரத்த வெள்ளத்தில் மிதந்தார் அவர்.

 

பிரசாத் அடித்த கரத்துடன் அமராவின் பக்கம் திரும்ப, அவனை ஏறிட்டு பார்த்த அமரா, அடுத்த நிமிடமே ‘தொம்’ என சம்மணமிட்டு தரையில் அமர்ந்துவிட்டாள். 

 

“அமரா” “டெடி” “பார்பி கேர்ல்” ஆண்கள் யாரின் குரலும் அவளின் செவிகளை எட்ட வில்லை. அவளின் ஐம்புலனும் அடங்கி விட்டது. ஓய்ந்து விட்டாள், மொத்தமாக ஓய்ந்து விட்டாள். ஆண்கள் அவளின் தோளைத் தட்டி தட்டி அசைத்தும் எந்த பயனுமில்லை. 

 

நிலைக்குத்திய பார்வை, அமைராவின் மயக்கத்தில் சரிந்த முகத்தினை வெறிக்க, முச்சுக் கூட விடாமல் இருத்தவளின் கையைப் பிடித்து ஒரே இழுவையாக இழுத்த பிரசாத், அவளை நிற்க வைத்து, வலிக்கும் படி கன்னத்தில் அடிக்க, அவளும் மயங்கிவிட்டாள்.

 

அடுத்தடுத்து, நடந்த எல்லா செயற்பாட்டிலும் ஒரு வேகமே, காந்திமதியின் ‘வீ கெயார்’ வைத்தியசாலைக்கு அழைத்து, அறைகளையும் உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்க சொல்லிவிட்டு, நால்வரையும் மூன்று ஆண்களும் மற்றும் வாயில் காப்பவரும் சேர்ந்து, வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

 

பிரசாத்திற்கோ மனம் வெறுத்து விட்டது. அவனின் ஆறு வயதில் பார்த்த அதே அக்காவின் தோற்றத்தில் அமைராவை நோக்க நோக்க, அவனின் இதயத்தில் பாராங்கல்லைத் தூக்கிப் போட்டு அழுத்துவதாக உணர்ந்தான்.

 

இப்போது இசைபிரியா உயிருடன் இருந்திருந்தால் வயதாகியிருக்கும் ஆனால் அமைரா அதே இளமையில் வதங்கிக் கிடக்க, அக்கா எவ்வாறு துடித்திருப்பாள் என நினைக்கமாட்டமே, எங்காது சென்று செத்து விட மாட்டோமா என்ற எண்ணம் தலைதூக்கியது.

 

அதே நேரம், தன் தந்தையையும் மாமாவையும், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவே அவனுக்கு துளியும் விருப்பம் கிடையாது. ஆனால் அமரா, அவள் இன்னும் எதும் பலிவாங்களை இவர்களிடம் நிகழ்த்த விரும்பினால்? அவளுக்காகவே அவ்விரு ஷர்பத்தையும் வைத்தியத்துக்கு உட்படுத்த அனுமதித்தான்.

 

“என்ன செஞ்சிங்கடா நீங்க, என்ன நியாயம் செஞ்சீங்க, பேசுறது அப்பத்தம்னாலும் நான் ஒன்னு கேட்கேன்? உங்க வீட்டுல எங்கப்பாம்மா படத்துக்கு மாலையைப் போட்டு வைச்சிங்க. அது பத்தாதுனு ஒரு இசை போக அடுத்த இசைய கொண்டு வந்திங்க. எங்கம்மா செத்து எண்ணி ஒன்றரை வருஷத்துல இசைபிரபா பொறந்தா. இட்ஸ் ஓகே. ஆனா ஏன் இசைனே அவளையும் கூப்டிங்க. உங்களுக்கு ரீப்பிலேஸ்மென்ட்க்கு ஆள் கிடைச்சிச்சு.

 

உனக்கு அக்காவுக்கு பதிலா தங்கை. உன்ன பெத்தவங்களுக்கு ஒரு மகள். பட் எங்களுக்கு எங்க பெத்தவங்கள திருப்பி கொடுக்க முடிஞ்சதா? சத்தியமா சொல்லுறேன் அந்த வேலுப்பாண்டிக்கு மேகவி பிறக்களைனா இல்ல இசைபிரியாக்கு வயசு அதிகம்னா கண்டிப்பா அவன் உன் தங்கையையும் விட்டு வைச்சிருக்க மாட்டான்” பசுமரத்தாணி போல நச் என்று அமரா முன்பு கேட்ட கேள்வி நெஞ்சை கரிக்க, நின்றிருந்தவனின் தோளில்,

 

கையை வைத்து தன் பக்கமாக திருப்பினான் இந்தர். உடனே அவனை அணைத்துக் கொண்டான் பிரசாத். இந்தர் எதிர்பார்த்தது தான், எத்தனை பணம், வசதி, வாய்ப்பு என இருந்தாளும் இன்னலின் போது தட்டிக் கொடுக்கவும், கட்டியணைக்கவும் ஒரு நண்பன் வேண்டுமே.

 

“எனக்கு புரியுது பிரசாத் உங்க ஃபீளிங்ஸ், உங்க அக்காவுக்கு நீ நியாயம் செய்யலனு யோசிக்க வேணாம். அப்போ உனக்கு வயசு ஜஸ்ட் ஆறோ ஏழோ தான்” பிரசாத்தின் மனதைப் படித்தவனாக இந்தர் ஆறுதல் படுத்த, 

 

“எ..எப்படி இந்தர்? என் மனசே கேட்க மாட்டேன்குது. நான் எல்லாம் என்ன மனிதன். இசையக்கா, என்னைப் பார்க்கனும்னு தானே டெல்லில இருந்து ஊருக்கு வந்து, இப்படி செ..செத்து போனா. ஆனா ஒரு தம்பியா நான், எதுவுமே செஞ்சதில்ல. அவ நெருப்பில வெந்…. அப்போ எனக்கு ஏழு வயசு ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் கடந்திருக்கும். அம்மா என் பொண்ணு போய்டானு அழவும், நானே போய் அக்கா ஊருக்கு தான் போயிருக்க வந்துடுவானு சொல்லியிருக்கேன்.

 

பிலெடி இடியட்ல நான், அப்புறம் அவ படத்துக்கு மாலை போட்டு சாமி ரூம்ல வைக்கவும், நான் ஒரே அழுகை. பத்து நாள் காய்ச்சல் வந்து படுத்துக் கெடந்தேன். ஆனா அதுக்கு பிறகு அக்காவ எப்போவும் சாமி கும்பிடும் போது வேண்டிப்பேன். வேற எதுவும் அக்காவுக்காக நான் செஞ்சதே கிடையாது. வெட்கத்த விட்டு சொல்லுறேன் ஒரு வேளை எங்க அக்கா ஃபோட்டோவ தினத்திக்கும் பார்க்காம போயிருந்தா நிச்சயமா அவ முகமே மறந்து போயிருக்கும். 

 

அமரா கேட்டது சரி தானே, தேவா தேவானு அவ கூப்பிடும் போது எனக்கு ஏன் அக்கா நியாபகமே வரல. நான் எல்லாம் ஒரு நல்ல தம்பியே கிடையாதுல. கிட்டத்தட்ட அவ சாவுக்…” பிரசாத் முடிக்க முன்னமே,

 

“இல்லை பிரசாத். அமரா ஏதோ கோபத்துல பேசிட்டா பட், நீ எப்படி இதுக்கெல்லாம் பொறுப்பாவ, விதி கடவுள்னு சொல்ல முடியாது. ஆனா இது இயற்கையின் நியதி போலத்தான். அந்த வயசுல உன்னால எதையும் கண்டுபிடிச்சிருக்க முடியாது. அதுக்கு அப்புறம் உண்மை தெரியாம போனதுக்கு உள்ள படுத்துக் கிடக்குற, இரண்டு பேரும் தான் காரணம். டோன்ட் பீல் கிள்ட்டி பிரசாத்” இந்தர், பிரசாத்தின் புஜத்தில் வருடிக் கூறி,

 

“அமரா, உன்னைக் காயப்படுத்துற மாதிரி பேசியிருந்தா ஐம் சாரி, நாங்க செஞ்சது தப்புனு சொல்லி மன்னிப்பு கேட்க ஒருநாளும் நான் உன்முன்ன வரமாட்டேன். பட் அவ, ஏதோ….” இந்தர் முடிக்கும் முன்னே,

 

“நான் கொஞ்சமா பேசியிருக்கேன்? சொல்லப் போன அவ எழுந்திருச்சதும், நானே அவக்கிட்ட சாரி சாெல்லிக்கிறேன். எண்ட், அவ பேசினதுல எந்த தப்புமே கிடையாது. ஏன் நீங்க மூனு பேரும் செஞ்சது கூட தப்பு கிடையாது, ஆனா” என்ற பிரசாத், தூரத்தே நாற்காலியில் சிவகாமியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்த மேகவியை பார்க்க,

 

“புரியுது. சீ இஸ் மை கேர்ல். வன் எண்ட ஒன்லி மையின். மேகம் எப்போவும் இந்திரனுக்குத் தான் வாகனம்” என்ற இந்தர் இதழ் விரிக்க, பிரசாத் தணிந்த பார்வையை வீச, அவன் முன்னே பழரச குடுவையை நீட்டினான் ஹஸ்வந்.

 

“குடிங்க, பிரசாத். காலையில இருந்து இப்படியே நிக்கிங்க” என அவன் கூற, முதல் முறையாக சினேக பார்வையை வீசிய பிரசாத், “உங்க இரண்டு பேருக்கும் வில் பவர் ஜாத்தி போல? நீங்க குடிக்கல?” என்று வினவும் போதே,

 

“ஹஸ்ஸூ! அ..அந்த என..அக்கா..மாதிரி” அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு வந்த, இசைபிரபா பிதற்ற, “அவ அமைரா. உனக்கு மக முறை வரும். பச் அதை விடு, முதல்ல இதைக் குடி. பாரு ரொப்ப டையர்டா இருக்க நீ” என்ற ஹஸ்வந்,

 

அவனின் கைக்குட்டையை எடுத்து, அவளின் நெற்றியை துடைத்து விட்டு, பழரசத்தையும் பருக விட்டான். “ம்ஹ் போதும், எனக்கு இப்போ எதுக்கு இது? அங்க அப்பா, மாமா, அண்ணி யாரும் கண்ணு முழிக்கல. அந்த பொண்ணு அமைரா மட்டும் தான் எழுந்திருக்கு. ஐ கெஸ் பயத்துல மயங்கி இருப்பா. ஏங்க இந்தர், இப்போ அவளை பார்க்க முடியாதுங்க” இசைபிரபா விளக்கிக் கொண்டிருக்கும் போதே,

 

இந்தர் அமைராவின் அறைப்பக்கம் செல்ல அவனைத் தடுத்தாள் இசைபிரபா. “ஒரு மணி நேரமாகும். ஆமா யாரு அது, பிரியா அக்கா போலவே இருக்கா? ஹஸ்ஸூ வாட் கோயிங் ஆன்? அண்ணிக்கு ஏதோ, பிரையின்ல…” அவள் பொறிந்து முடிப்பதற்கு முன்னே,

 

“டாக்டார் இட்ஸ் எமெர்ஜன்சி, அந்த மேம்….” பதட்டமாக கூறிக் கொண்டு திறந்த அறையை மூடிக் கொண்டு, அமராவின் அறைக்குள் மீண்டும் ஓடினாள் தாதி. அனைவரின் நெஞ்சமும் பதைபதைக்க, இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தனர். 

 

உதயம் ஒன்று அஸ்தமனமானது,

இடையில் இரண்டு மீ்ண்டும் ஜனித்தது,

ஒன்றை ஒன்று பிரியா,

இரைக் கிளவிகள் பிரியும் நாளும் நெருக்கிக் கொண்டது….

 

அவன் வீழ்ந்துவிட்டான்….