யாகம் 25 01

யாகம் இருபத்து ஐந்து 01

 

வான வீதியில் உலாப்போகும் மதி, தன் பதியைக் கண்டு நாணம் கொண்டு ஓடி‌வொளிய புதியாய் பூபாலமும் தொடங்கியது.

 

பிரசாத்தின் பால்கனியில் வாசம் வீசும் பன்னீர் ரோஜாக்கள், தன் காம்பில் சாய்ந்து சாய்ந்து நர்த்தனமாட, காற்றை வாரியிறைத்துக் கொண்டிருந்தான் சமுத்திர தேவன்.

 

இயற்கையின் எழிலைத் தான்டி, செயற்கையாய் அழகு சேர்க்கப்பட்ட மாடியறையின் நீள்விருக்கையில், பிரசாத், இந்தர் தம்பதிகள், ஹஸ்வந் தம்பதிகள் அமர்ந்திருக்க, 

 

இசை, கவி முகத்தில் கவலை ரேகைகள் படிந்துகிடந்தன. யார் முதலில் ஆரம்பிப்பது என்ற சிந்தையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருக்க, இசையே முதலில் வாயைத் திறந்தாள்.

 

“அண்ணிக்கு என்னாச்சு?, நேத்து ரொம்ப கிரிட்டிகளா இருந்தாங்க. அக்ரசிவா பிஹேவ் பண்ணிட்டு இருந்தாங்க…” அவள் முடிக்கும் முன்பே,

 

“க்கும்” குரலைச் செருமிய பிரசாத், “அவ உனக்கு அண்ணி மட்டும் கிடையாது இசை, அவ நம்ம அக்கா இசைபிரியாவோட மகளும் தான்” என்க,

 

“வாட்? என்ன அண்ணா உளறுற நீ!, அக்கா தான் நான் பிறக்குறதுக்கு முன்னமே, கர்பமா இருக்கும் போதே…” அவளின் பேச்சின் இடையே குறுக்கிட்ட பிரசாத்,

 

“இன்னும் எத்தன நாளைக்கு இசை, இப்படி நம்மள பெத்தவரு சொன்ன கதையை நம்பி ஏமாற போற?” மீண்டும் குழப்பமடைந்த இசை,

 

“அண்ணா! தெளிவா சொல்லுண்ணா. நேத்து ஹாஸ்பில்ல எல்லோரையும் அட்மிட் பண்ணினதுல இருந்து ஒரே குழப்பம். என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு” தலையைக் கையில் தாங்கிக் கொள்ள, ஹஸ்வந்தோ அவளின் கரத்தை எடுத்து தன் கரத்துக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.

 

“சொல்லுறேன்” அவனுக்கு நேர் எதிரே மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தை நோக்கியவன், கண்களில் நோவுடன், அடி முதல் நுனி வரை அத்தனையும் விளக்கிவிட்டான். அமரா கேட்ட கேள்வியைக் கூட அச்சுப்பிசகாமல் கொட்டிவிட்டான்.

 

இசையும் கவியும் திகைப்பூண்டை மிதித்த மாதிரி அதிர்ச்சியில் பனிக்கட்டி போல் உறைந்து இருக்கையில் சிலையென சமைந்திருக்க, அவர்களின் மணாளன்கள் கையை பிடித்து தேற்ற முயற்சிக்க,

 

இசையோ, ஹஸ்வந்தை தொடாதே என்பது போல பார்க்க, கவியோ ஏன் என்பதாக இந்தரை ஏறிட்டாள்.

 

“இசை, கவி உங்க தனிப்பட்ட வாழ்கையை நீங்க தான் முடிவெடுக்கனும். அதே போல அமரா பத்தி நான் என்ன முடிவெடுத்தாலும் நீங்க அதுல தலையிடக்கூடாது. ஆனா நம்மல பெத்தவங்க பத்தி ஏதும் செய்யனும்னா செய்துக்கலாம். அதிலும் அமரா என்ன முடிவுனு சொல்றாலோ அது தான் என் முடிவு” இத்தனை நேரமும் புகைப்படத்தை வெறித்தவன்,

 

“இந்தர், ஹஸ்வந் எதுவும் நீங்க சொல்லி நாங்க தெரிஞ்சிக்க வேண்டியிருக்கா, உங்களுக்கு விருப்பம்னா சொல்லலாம் இல்லனா….” இழுத்தவன், “விட்டுறலாம்” என்று சின்னு, குட்டா இருவரிடமும் கேட்க,

 

“எஸ், சொல்லலாம். நாங்க சொல்லலனாலும் அமரா சொல்ல வைச்சிருப்பா. ஏன்னா அவ எல்லாத்தையும் கடைசியா சொல்லிட்டு” இந்தர் முடிக்கும் முன்னே,

 

“அவளுக்கு எங்க வாழ்க்கை முக்கியம். அதனால அவ ஒரு முடிவுல தான் இருந்தா. ஒரு வேளை எங்களுக்கு, எங்க வைஃப் கூட வாழனும்னு இருந்தா அவளே சேர்த்து வைக்குறதா சொல்லியிருந்தா, இந்த கல்யாணம் நடக்குறதுக்கு முன்னமே” ஹஸ்வந் முடித்தான்.

 

“ப்ச். ஏன்டா இப்போ?” இந்தர் கேட்க, தன் தலையில் தட்டிக் கொண்ட ஹஸ்வந் ‘போச்சு, இன்னைக்கு கச்சேரி கன்பார்ம்’ என மனதுக்குள் நினைக்க, இசையோ அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

“இப்போ எதுக்கு அழுகுறிங்க இரண்டு பேரும். நாங்க ஏமாத்திட்டோம்னா” அடுத்து இந்தர் வாயை விட, “நாங்க ஒன்னும் கல்லு கிடையாதுங்க, மனிஷிங்க தான் நீங்க பண்ணினது சரி தப்பு எங்கிறத தாண்டி இங்க எங்களைப் பெத்தவங்க, பச்சை துரோகியா இருந்திருக்காங்க. அவங்கள நாங்களும் அப்பா அப்பானு செல்லம் கொஞ்சி இருக்கோம். ச்சீ கேவலமா இருக்குங்க” என, 

 

மேகவி கத்திக் கொண்டிருந்தாள். ‘கவியா இது’ என்பது போல் எல்லோரும் வாயடைத்து பார்க்க, இந்தரோ இளநகையொன்றை சிந்தினான்.

‘நீ ஆசைப்பட்டதை நிறைவேற்றிட்ட இந்தர்’ அவனின் மனம் குளிர்ந்து கொண்டது.

 

“நினைச்சி கூட பார்க்க முடியல அண்ணா. ஏன் ண்ணா ஏன் இப்படி? அந்த ஜாதில அப்படி என்னதான் இருக்கு. ஊரு உலகம்னு பார்த்து நம்ம அக்காவையே கொலை பண்ணி எரிச்சி சாம்பலாக்கியிருங்காங்க. ஒரு உயிரோட மதிப்பு என்னனு தினத்துக்கும் பார்குற எனக்கு இதை தாங்கிக்கவே முடியலனா. அமைரா…ஐயோ அவ வளர்ந்தும் அன்மெசுவர்டா இருக்கா அண்ணா…” கேவலுடன் பேசியவள், மூக்கை உரிஞ்சிவிட்டு,

 

“நான் அக்காவை பார்த்தது கூட கிடையாது தான் ஆனா தினமும் சாமி கும்பிடும் போது ஃபோட்டோல பார்த்துக்குவேன். எத்தன மஹாலட்சுமி கடாக்ஷமான முகம்ணா அதைப் போயி. அம்மா என் சின்ன வயசுல இருந்தே, உன் அக்கா மாதிரி தைரியமா வரனும்டீ. அந்த காலத்துலயே அவ ஊரையே அடக்கி ஆளுர தைரியக்காரினு சொல்லி சொல்லி வளத்தாங்கணா,

 

நான் இப்போ இத்தனை தைரியமா, எனக்கு பிடிச்ச காரியத்தை செய்றதுக்கு ஒரே காரணம் அக்கா தான், அவள போயி, ஏன்ணா ஏன்” முகத்தை மூடி அழுதவளின் தோளை ஹஸ்வந் தொட, எத்தனை கோபம் அவன் மேல் கொட்டிக் கிடந்தாலும் அவன் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டு அழுது தீர்த்துவிட்டாள் இசை.

 

மேகவியோ, கண்ணில் கோடாக நீர் வடிந்தாலும் யாரையும் தொடக்கூட நெருங்க விடவில்லை. இந்தரும் அவளை அணைக்க எடுத்த கையை தன் பக்கம் மீட்டுக் கொண்டான்.

 

“நாங்க சொல்லப் போறது உங்களுக்கு எத்தன சதவீதம் புரிந்து கொள்ள முடியும்னு என்னால உறுதியா சொல்ல முடியாது பட்” இந்தர் பேச,

 

“கண்ணகி எரித்திருக்க வேண்டும், எரிக்கப்பட்டிருக்க கூடாதுனு தீர்பை எழுதவே எத்தனை வருஷம் எடுத்திருச்சுனு தெரியும்ல. ஒரு லாயரா..உங்க அப்பா, ப்ச் அவங்களுக்கு மரியாதை கொடுக்க என்னால முடியாது. நடராஜருக்கும் வேலுவுக்கும் தண்டனை வாங்கி கொடுக்க எத்தனை நாள் எடுக்கும். மே பீ ஐந்து மாதம் இல்லனா ஐந்து வருஷமும் எடுக்கலாம்.

 

ஒரு லாயரா எனக்கும் சட்டத்தில இருக்குற ஓட்டைங்க தெரியும். அதனால தான் நேரடியா தண்டனை கொடுக்க முடிவெடுத்தோம்” ஹஸ்வந் முடித்தான்.

 

“தெளிவா சொல்லுறேன். அமராக்கு அந்த பைக் ஏக்சிடன்ட் ஆன பிறகு, ஆறு மாதம் கம்பிலிட் ரெஸ்ட் எடுத்தா, ஒரு நாள் திடீர்னு வந்து ஒரே சத்தம் போட்டா” என்றவன் அந்நிகழ்வினை மீட்ட, 

 

அன்று; தனது பிரத்தியேக உடையான ஷாட்ஸ் உடன் வந்து நின்றவள், “நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். என்னனா, என் அப்பா, அம்மா கொலைக்கு காரணமான எல்லோரையும் பலி வாங்க போறேன்” என்று சொல்லி முடிக்க,

 

ஹஸ்வந், இந்தர் அவர்களின் பெற்றவர்கள் அனைவரிடமிருந்தும் எதிர்பே கிளம்பியது. ஆனால் அமராவோ,

 

“இங்கே இரண்டு முடிவுதான். ஒன்னு அவங்கள மன்னிச்சி விட்டுட்டு நான் என் வழிய பார்க்கனும் இல்லைனா இரண்டாவது அவங்களை பழி வாங்கனும். இரண்டாவது நடக்கலைனா, அதோ அங்க லூக்காகூட விளையாடுறாளே என்னோட அக்கா அமைரா,

 

அவளோட முகத்தை பார்த்து பார்த்து நான் தினமும் கூணிக்குறுகி, குற்ற உணர்சில சாகனும். என்னதான் அவ எனக்கு மக மாதிரி என்றாலும், அவ முகத்துல எங்க அம்மாவோட முகத்தை தான் தினமும் பார்கிறேன். ஐயோ அம்மா அப்பாக்கு எந்த நியாயமும் செய்யலனு தாழ்வுமனப்பான்மைல நான் சாகவா? இல்லை அந்த வேலு, நடராஜன் குடும்பத்தை பலி தீர்க்கவா?” ஓங்கிய குரலில் கேட்டாள் அமரா.

 

அவளின் பக்கமிருக்கும் நியாயத்தில் எந்த தவருமில்லையே. கோடிகளில் புரலும் குடும்பத்தில் கொலைகளைச் செய்து உண்மையை மூடி மறைப்பது அத்தனை சுலபமல்லவா? யோசித்து விட்டு அனைவரும் அவளுக்கு துணையாக கைகோர்த்தனர்.

 

அந்த நான்கரை வருடங்களில் பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களின் அகம் முதல் புறம் வரை அத்தனை தகவலையும் விரல் நுனியில் சேகரிக்க, மற்றைய புறம், இசைபிரியா கொலையுடன் தொடர்பு பட்ட அனைவரையும் கொலை செய்வதே முடிவென அனைவரையும் வதைத்து சிதைத்தனர். 

 

எந்த முறையில் குமார், அமிலத்தில் கரைக்கப்பட்டாரோ அவ் அமிலத்தையே வாயில் தினித்து கொலை செய்து, மரணத்தின் போதும் நிம்மதியையும் பறித்துக் கொண்டனர்.

 

ஆனால், நடராஜனையும் வேலுவையும் ஒரேயடியாக உயிரை எடுக்க  கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக வதைக்க வேண்டும் என சதித்திட்டம் தீட்ட, அமராவோ,

 

‘அந்த வீட்டுக்குள்ள நான் போகனும்’ என ஒரே போடாக போட, மற்றையர்கள் குழம்பி போக,

 

“அத்த, இந்தருக்கு சின்னதா காயம் பட்டா என்ன செய்விங்க?” என கௌரியிடம் கேட்க, “ஐயோ” என்று அவர் முகத்தைக் கூம்பினார்.

 

“பசங்க கஷ்டப்பட்டா எந்த பெத்தவங்களுக்கும் பொறுக்காது. அதுலையும் எங்க அம்மாவை கொலை பண்ணின இரண்டு பேருக்கும், இப்போ அவங்க பசங்கனா உயிராம்ல. ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணுல சுண்ணாம்புனு சும்மாவா சொன்னாங்க” என்று அவளின் திட்டத்தை விளக்கினாள்.

 

அதாவது, அவர்களின் மகள்  எந்த ஜாதிய திருமணத்தை செய்தாள் என ஊர் தூற்ற, எந்த ஊருக்கும் சுயகௌரவத்துக்கும் பயந்தாரோ அதே ஊரின் முன் அவரை அவமானப் படுத்தி, மேலும் அவர்களின்  நிம்மதியை அவ்வீட்டிலிருந்தே சிறுக சிறுக பறித்தெடுக்க வேண்டும் என்பதும் மேலும் ஒரு நாள் அவர்களுக்கு ஒருமித்தே மரணத்தை பரிசாக வழங்க வேண்டும் எனவும் கூறினாள்.

 

அதன் பின் தினம்தினம் அவ்வீட்டில் நடக்கும் தகவலை ஒருவகையாக சேகரித்து, பிரசாத் மேகவியின் திருமணத்தைப் பற்றியும் அறிந்து கொண்டாள். எப்படி திருமணத்தை நிருத்துவது என யோசனை செய்ய, தான் பிரசாத்தின் காதலி தன்னை ஏமாற்றி விட்டான் என சபைநடுவே நிரூபிப்பதாக முடிவாக சென்னாள் அமரா.

 

உயர்தர தொழில் நுட்பத்தின் மூலமா, புகைப்படங்களை ஒன்றோடு ஒன்று  இணைத்தும் மேலும் போலியான வைத்திய அறிக்கையை பெறவும் முடிவு செய்தனர். வைத்திய அறிக்கையை வேறு எதுவும் வைத்திசாலையில் பெற்றுக் கொண்டால் நம்பிக்கையிண்மை ஏற்றபடக்கூடும் என்பதால்,

 

ஷஸ்வந்தின் அம்மா, வசுந்தரா தேவியின் உயிர்த்தோழி காந்திமதியிடமே உதவியை நாடினர், அவர் டெல்லியில் இருந்து குடிபெயர்ந்து சென்னை வைத்தியசாலையில் வேலை பார்பதும் இவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. இதில் இன்னுமொரு சூட்ச்சமம் யாதெனில், இசைபிரபா இவ் வைத்தியசாலையில் பணிபுரிவதால், அவளே அவ் அறிக்கைகள் நம்பகத்தன்மையானது என அடித்துக் கூறுவாள் என்பது உறுதியானது. 

 

மேலும் ஏதும் ஆதாரங்கள் தேவைப்படலாம் என தேடியபோது, அமராவின் தாத்தா அவர் மரணத்தின் போது கொடுத்த புகைப்படத்தை நினைத்தவள், அதனை எடுத்துப் பார்த்தாள்.

 

கண்களை அகலவிரித்து பார்த்ததில் பிரசாத்தின் சிறு வயது புகைப்படத்தில், அவன் ஆடைதொடாத இடத்திலிருந்த அந்தரங்க மச்சம் அடுத்த ஆதாரமாக சிக்கியது. மற்றைய,  அவனின் முதுகு மச்சமானது அவன் யூகித்தது போல, அவனின் படக்காட்சியில் கண்டுபிடிக்கப்பட்டதே. எதற்கும் இருக்கட்டும் என இரண்டு மச்சங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டாள்.

 

அடுத்து, நினைத்தது போலவே திருமணத்தை நிருத்தினார்கள், மேகவிக்கு வாழ்க்கை கொடுக்கிறேன் பேர்வழி என இந்தர் அவளின் கழுத்தில் தாலியைக் கட்டினான். பிரசாத்தின் வீட்டில் அன்றே பாம்பை விட்டு, அபசகுணம் என புரளியைக் கிளப்பி விட்டனர். கொலையும் பண்ணிவிட்டு பூஜை வேறா என்ற எண்ணத்தின் காரணமாக அங்கேயிருந்த அமராவின் பெற்றோரின் புகைப்படத்தை நாசூக்காக தட்டிவிட்டு உடைத்தனர். 

 

அது பத்தாது என்று, முதலிரவு அன்றே வாக்குவாதங்களை ஆரம்பித்தனர். நடராஜனின் பரம்பரைத் தாலி என்பதால் அதை அமரா கழற்றி வீசியெறிந்தாள். வேண்டுமென்றே ஒவ்வொரு இடத்திலும் மேகவியை தாக்கி பேசினாள். வீட்டில் யாருக்கும் மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்டாள். அனைவரையும் உள்ளுக்குள் புழுங்க வைத்து அதில் நஞ்சு நெஞ்சர்கள் கோபமேற்றி குளிரும் காய்ந்தார்கள். அடுத்து இசை, ஹஸ்வந்தின் திருமணம்,

 

இவர்களின் திட்டத்தில் அடங்காத ஒன்றாகவிருப்பினும், கிடைத்த வாய்ப்பை எட்டிப்பிடித்த கணக்காய், அதையும் இவர்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னேறினார்கள். 

 

“இன்னும் எதும் சொல்லனுமா?” பிரசாத் மென்மையாக வினவிக் கொண்டிருக்க, இசை மற்றும் கவி இருவரின் மனதும் கல் வீசப்பட்ட கண்ணாடியாய் துண்டு துண்டாய் உடைந்து கொண்டிருந்தது. யார் முகத்தை யாரும் ஏறிடாமல்,

 

மேசை, கதவு, பூச்சாடி என ஆளுக்கு ஒரு பொருளை வெறித்த பார்வையில் நோக்க,

“வெல், எஸ் வீ ஹேவ் டு…” தன் நெற்றியை நீவியவனாக, “பட் ஐ ஹேவ் என் டெவுட். பிரசாத் நீங்க தானே உங்க பெத்தவங்கள, எங்க வீட்டுக்கு நேற்று அந்த டைம்ல வரவைச்சிங்க?” கேட்டான் இந்தர்.

 

“ஆமா. என்னால தான், நான் சொல்லித்தான் வந்தாங்க” பிரசாத் நிகழ்வுகளை இமை வெட்டி மீட்ட, துப்பரிவாளனிடம் தகவலைப் பெற்றவனாக தாயிடம் அமரா குழுவினரைப் பற்றி விசாரிக்க, 

 

அவரோ, அவர்கள் வீட்டிலில்லை என பதிலளித்தார். சென்னை வீட்டிலா இருப்பார்கள் என வண்டியை விட்டவன், பத்து நிமிடங்கள் கழித்து சாலையைப் பார்த்து வண்டியை ஓட்டிக் கொண்டே, சிந்தித்தவனாக, தன் தந்தைக்கு அழைத்து,

 

“அப்பா! கிட்டத்தட்ட எல்லாம் கண்டுபிக்கப்பட்டாச்சு. எதையும் சொல்றதுக்கு எனக்கு நேரம் பத்தாது. உங்க வீட்டு மருமகங்க நிஜமுகத்தை காணணும்னா அவங்க வீட்டுக்கு வாங்க. வேணும்னா வேலு மாமாவைக் கூட கூட்டிட்டு வாங்க” என்று கூறியிருந்தான்.

 

“தட்ஸ் ஃபைன் பிரசாத். ஆக நீங்க சொல்லி வந்தவங்க, நம்ம பேசினத கேட்டு இருக்காங்க” ஹஸ்வந் பேசிவனாக நேற்று நடந்த மீதியை விளக்கினான்.

 

பிரசாத்தை போலவே வேலு, நடராஜனை திருமணத்தின் போது அறிந்திருந்த, வாயில் காப்பாளன் அவர்களையும் உள்ளே, மாடியறையில் தான் எல்லோரும் இருப்பார்கள் என அனுப்பி வைக்க, அவர்கள் அங்கு நுழையும் போதே, பிரசாத் அமராவின் சண்டை முடிந்து, அவள் தன் பெற்றவர்களின் மரணத்தில் வேலு எப்படி சூத்திரதாரியான் என்பதைக் கூறிக் கொண்டிருந்தாள்.

 

இத்தனை நாளும் வேலு எனும் சாத்தான் ஓதிய மந்திரங்களுக்கு கட்டுப்பட்டு ஒத்தூதிய நடராஜன் முதல் முதலாக முழு உண்மையையும் சாரளத்தின் அருகிலிருந்து கேட்டு விட, ஏற்கனவே இதய அழுத்தம் அதிகமிருந்தவர் மார்பை பிடித்துக் கொண்டு நிலைதடுமாறினார்.

 

சுத்தமான காற்று உள்ளே வரவேண்டும் என அமரா திறந்து வைத்திருந்த, ஐன்னலின் பின்னால் நடராஜனும் தன் குட்டு உடைபடுவதை அறிந்து, வெறி பொங்க, அமராவைக் கொன்று போட்டுவிட கைகளை மடக்கிக் கொண்டிருக்கும் போது, “லூக்கா, லூக்கா” என அவரின் காதில் நுழைந்தது அமைராவின் குரல்.

 

அமைரா பூனையுடன் விளையாடிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் கழிவறை சென்று வருகிறேன் என, பின்பக்க படிக்கட்டு வழியே சென்றிருந்தாள். அமைரா அதிக பிடிவாதமோ அழுத்தமோ இல்லாத மெல்லிய மழலைக் குணமுடையவள். அதிலும் தனக்கு பரீட்சயமானவர்களின் கூற்றை அப்படியே கேட்டு நடந்து கொள்பவள்.

 

அதனாலேயே அவ் ஊழியப் பெண், “அமைரா பாப்பா விளையாடுவிங்கலாம். ஆண்டி வந்துடுவேனாம்” என கூறிச் சென்றிருக்க, அவளும் சமத்தாக அமர்ந்திருந்தாள். வேலு, நடராஜன் முன்பக்க படிக்கட்டால் உள்ளே நுழைந்ததால் அப் பெண்ணால் இவர்களைக் கண்டுகொள்ள முடியவில்லை.

 

‘லூக்கா’ என முதிராத குழந்தைக்குரலில், வேலுப்பாண்டி, தன் தலையை மட்டும் திருப்பிப் பார்க்க; அங்கே அவர் கண்டது அமைராவின் விம்பத்தில் இசைபிரியாவைத்தான்.

 

சில நாட்களாகவே, அவரின் கனவிலும் மாயையிலும் இசைபிரியாவின் உருவம் தோன்றிக் கொண்டே இருக்க, இப்போது அமராவும் முன்கதைகளை விளக்கிக் கொண்டிருக்க, வேகமாக அமைரா பக்கமாக நடந்தார் வேலு.

 

“ஏய், சனியனே! எப்படி நீ சாகமா தப்பிச்ச? அன்னைக்கு அத்தன அடி அடிச்சும், உம் புருசனக் கொண்ணும் வாழுற ஆசை அடங்கலயாவே? எப்படிடீ அடங்கும் நீ தான் … ஆச்சே. நீ ஆடினது பத்தாதுனு இப்போ இன்னொருத்திய அனுப்பி வைச்சிருக்கியாவே? இருடீ உங்க இரண்டு பேரையும் ஒன்னா வெட்டி கூறுபோடுறேன். இல்ல வேணாம் முதல்ல உன்னை கொண்ணுட்டு அவளை கொல்லுறேன்” அமராவின் பேச்சில் பாதியைக் கேட்டு, 

 

அமரா, இதோ அமர்ந்திருக்கும் இசைபிரியாவின் மகள்தானே என அமைராவிடம் கத்திக் கொண்டிருந்தான் வேலு. இந்த நொடி சக்கரநாட்காலியில் அமர்ந்திருக்கும் பெண் வேலுபாண்டிக்கு இசைபிரியாவே.

 

“என்னடி எகத்தாலமா உக்காந்து இருக்கவே! வாடி இங்குட்டு” என்று அமைராவிடம் எகிறிக் கொண்டே அவளின் புஜத்தைப் பிடித்து இழுக்க, சரியான மூளை வளர்சியில்லாத ஐந்து வயது புத்தியைக் கொண்டவள், வேலுயையும் அவரின் பேச்சையும், செய்கையும் பார்த்து, இதழைப் பிதுக்கி அழுகைக்குத் தயாரானாள்.

 

புதிதாக ஒரு நபர் வந்து, தனக்கு முன் புரியாத பாசையில் சற்று உரக்க பேசினால் விழி பிதுங்கும் குழந்தை தானே அவள். “ம்ம்” என விம்ம ஆரம்பிக்கவும்,

 

“என்னடி அழுற மாதிரி நடிக்கிறியா? உன்னை” மீண்டும் இழுத்த இழுப்பில் அவள் நிலத்தில் விழ, அதே நேரம் “விடுடா எம்ம பொண்ணு இசையை” என வேலுவின் கையைப்பிடித்து தன் பக்கமாக நகர்த்திய நடராஜன், “எம் பொண்ண உன் கூட சேர்ந்து கொல்லப் பாத்தேனேவே, பாவிலே நான் பாவி” என்று கன்னத்தில் அடித்தார் நடராஜன்.

 

மார்பில் வலிக்கவும் நீவிவிட்டுக் கொண்டிருந்த நடராஜன், அஸ்தமன சூரியன் மீண்டும் ஜனித்தது போல, தன் மகள் மீது பாசம் கொண்டார். வேலுவின் பேச்சைக் கேட்டு மகளைக் கொன்றது தப்பு என நினைத்தார் அவர். ஆனால் காலம் கடந்த ஞானம் பெறுமதியற்றதே என்பதை அவர் அறியார்.

 

வேலு செல்லும் திசையை அவர் ஏறிட, அங்கு அவரும் அமைராவை இசைபிரியா என்றே நினைத்தார். மகள் உயிருடனிருந்தால் அவளுக்கு வயதாகியிருக்கும் என பொதுவான சிந்தனை கூட எழவில்லை.

 

தன் மகளை மீண்டும் வேலு கொலை செய்யப் போகிறான் என மனது எதைஎதையோ பதைபதைக்க, வேகமாக சென்று வேலுவிடம் சண்டையிட்டு, தன் மகள் என கற்பனை பண்ணிய பேத்தி அமைராவை காப்பாற்ற முனைந்தார் நடராஜன்.

 

ஆனால் கைக்கலப்பு அதிகரிக்க, அதிகரிக்க வேலு ஏதோ பித்துக்குளியாகியவர் போல வாய்குள்ளே பிதற்றிக் கொண்டே, மாடியின் கைப்பிடி சுவரின் அருகில் நடராஜனை தள்ளி விட்டவராக, “ஹாஹா” என்று சத்தமாக சிரிக்க, 

 

ஏதோ சிறுவர் படத்தின் சண்டைக்காட்சியை நோக்குவது போல் நிலத்தில் கிடந்த அமைரா இருவரையும் வேடிக்கை பார்த்தவள் சட்டென மாடியிலிருந்து தள்ளும் காட்சியை பார்க்க, அதிர்ச்சியில் ‘அம்முமா’ என கத்தியவள் மயங்கியிருந்தாள்.

 

“காலையில, அமைராட கெயார் டேக்கர் எண்ட் வாட்ச்மேன் கிட்ட விசாரிச்சோம். அதற்கு மேல், சீசீடீவி ப்புடேஜ் எல்லாம் பார்த்து டைம் எல்லாம் நோட் பண்ணியதால தான் முழு டீடெயில்ஸ்ஸும் எடுக்க முடிஞ்சது. அந்த வீடு நாங்க, எப்போவாச்சும் சென்னைக்கு பிஸ்னஸ் டீலிங்க்கு வரும் போது தங்கிக்க வாங்கினது. அதனால ஹை குவாலிட்டி சிசிடீவி கணெக்சன் கொடுத்து இருந்தோம். 

 

மே பி யாரும், கொம்படிடர்ஸ் பெயில்ல கை வைச்சிட கூடாதுனு. ஆதனால தான் அவங்க பேசின எல்லாத்தையும் தெளிவா கேட்க முடிஞ்சது. உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா…” அனைத்தையும் கூறி முடித்தவனாக, ஹஸ்வந் கேட்டான்.

 

“நம்பிக்கை! அப்படி ஒரு வார்த்தையை நம்பித்தான் இத்தனை நாள் இரண்டு துரோகிங்க கூட வாழ்ந்திருக்கோம். ஐ எம் ரஸ்டிங் யூ போத்” விரக்தி புன்னகையை சிந்தினான் பிரசாத்.

 

“அப்போ பாலன்சையும் சொல்லிடுறோம். அமரா; வேலு நடராஜன் பத்திய என்ன முடிவு எடுத்தாலும் சம்மதிப்பேன்னு சொன்னிங்க பிரசாத். ஆனா உங்களுக்கு அவளை சரியா தெரியாது. அவ முடிவுகளை எடுக்காம எதையுமே ஆரம்பிக்க மாட்டா” இந்தர் பூடாகரமாக பேச, இசைபிரபா, மேகவி, பிரசாத் மூவரும் அவனை நோக்கினர்.

 

“எஸ் ஷீ ஹேவ் குட் எபிலிடி டூ டிசிசன் மேக்கிங். வியாபாரத்துலயும் சரி, வாழ்கையிலேயும் சரி அவ ஒரு முடிவுக்கு சீக்கிரமா வரமாட்டா. ஆனா கடைசியா எந்த முடிவை எடுத்தாலும் அதுக்கு தேவையான எல்லா பிலானையும் முதலேயே முடிவு பண்ணிருவா. புரெப்பப்ளீ அவ எடுத்த எந்த முடிவுமே பிழையாக போனதே இல்லை. ஒன்றை தவிர..” ஹஸ்வந் பேச,

 

“வளந்தவனே!” அவனை அடக்கி விட்டு, “ஐ வில் எஸ்பிலேன் யூ” என்றான் இந்தர்.

 

அமராவை பொருத்த வரையில், வேலு, நடராஜனைக் ஒரு தடவையில் மரணமெய்த விடக் கூடாது. மரணத்தின் வலியை மீண்டும் மீண்டும் சுகிக்க வேண்டும் என விரும்பினாள்.

 

எப்படி, எப்படி என யோசிக்கும் போது சிக்கியது அவர்களின், புதிதாக ஆரம்பிக்கும் ‘ஃபார்மா கம்பனி’ இன் உற்பத்திகளே. இந்தர் கலிஃபோர்னியாவில் கூட்டு உடன் படிக்கையில் கையொப்பமிட்ட அன்று, ‘லிக்ஸ்ஸா ஃபார்மா’ நிறுவனத்தின் வாரிசு, ஷாக்ஸா அவனிடம் மதுவருந்திக் கொண்டு இழைய வரும் போது உலரி கொட்டிய வார்த்தைகள் தாம் அவை. 

 

“இது எல்லாம் ஒரு போதையா? எங்க ஃபார்மா கம்பனில மெடிசின் பில்ஸ்ல  டெஸ்ட்க்கு யூச் பண்ணுற சில பில்ஸ் எவ்வளவு போதை தெரியமா?” என்று அவ் வெள்ளையினத்தவள் சொன்னாள்.

 

மருந்துகள் சந்தைக்கு அனுப்பும் முன்பு அவற்றின் மாதிரிகள் ஒரு படிமுறைக்கு உட்படுத்தி, விலங்களிடம் பரிசோதிக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. இவ்வாறான பரிசோதனைகளின் சதாகமான முடிவுகளை வெளியிடவே வருடங்களை எடுத்துக் கொள்ளும். அந்த வெள்ளைக்கார பெண்ணும் ஏதோ ஒரு சில மாத்திரயை போதைக்காக, தன் நிருவனத்திலிருந்தே எடுத்து பயன்படுத்தியிருக்கிறாள் என நினைத்த இந்தர்,

 

டெல்லி திரும்பியதும், அமராவிடம் கூறியிருக்க, அதுவரை திருமணம் செய்து பிரசாத் வீட்டில் நுழைய நினைத்தவள், அடுத்த திட்டத்தை தீட்டினார்.

 

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, அவளின் நிறுவனத்தில் மருந்தாக்க ஆய்வாளர்களை அழைத்து புதிய வகையில் ஏதும் மாத்திரை வில்லையைத் தயாரிக்க சொன்னாள். அவளின் கட்டளைப் படி தயாரிக்கப்பட்ட வில்லைகளை,

 

நடராஜன், வேலுவிற்கு கொடுப்பதற்கு இசையையே பயன்படுத்திக் கொண்டாள். இரத்த அழுத்தம் மேலும் வயதான காலத்தில் வரும் சில நாற்பட்ட நோய்களுக்கு அவர்கள் இருவரும் பயன்படுத்தும் மாத்திரையில், இவர்கள் புதிதாக தயாரித்த மாத்திரையையும் கலந்து விட்டனர்.

 

காந்திமதியிடம் வியாபாரத்துக்கு வியாபாரமாய், அமராவின் மருந்தக நிறுவனத்தின் அனைத்து மருந்துகளையும் விற்று பலிக்கு பலியாய், இசை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் மருந்து வில்லைகளையும் மாற்றி விட்டனர்.

 

பருகியவுடன் நிவாரணம் என்றில்லாமல், மெல்லக் கொல்லும் விசமாகவே அவ் வில்லைகள் தயாரிக்கப்பட்டிருந்தன. தினம் தினம் எடுத்துக் கொள்ளும் போது, நாளடைவில் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு, அதிக மனஅழுத்தத்தை வழங்குவதே, முதலாவது கட்டம்.

 

இரண்டாவதாக, தீராத மனநோய் போன்ற ஒன்றை உருவாக்கி, கடந்தகாலம் நிகழ்காலம் என விசித்தர மாயைகளை உருவாக்கும். தனக்குள்ளே தான் யார் என்ற சுயத்தை தேடவைக்கும் மனநோயை உருவாக்கும்.

 

மூன்றாவதாக, உடலின் மூளையையும், அடுத்தடுத்த முக்கியமான பாகங்களையும் கரையான் அரிப்பது போன்று மெதுவாக அரித்து மீளா வலியை ஏற்படுத்தியும், செல்களிலும் உடற்கணுக்களிலும் ஊசியால் குத்துவது, அமிலம் ஏரிப்பது போன்று வேதனையை வழங்கி, வெளித்தோல்களில் அரிப்புக்களையும் தீப்புண் போன்ற பொசுங்களையும் ஏற்படுத்தி, சுயதற்கொலைக்கு வழிவகுக்கும்.

 

பிரசாத், அமைராவின் திருமணத்தின் பின்னிருந்தே அவர்களுக்கு மருந்து புகட்டப்படுவதால், இப்போது மூன்றாவது நிலையை அடைந்து கொண்டிருந்தனர் இருவரும். 

 

இவ் மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே, வேலுப்பாண்டி பார்க்கும் போதெல்லாம் மேகவியிடம் இந்தர் வம்பிழுப்பதும், சண்டைக்கு நிற்பதும். அதே போல் அமரா வீட்டிலுப்பவர்களிடம் அதிக அதிகராம் செய்வதும் இதனாலேயே. 

 

அடுத்து மேலும் ஏதும் செய்ய வேண்டும் என்பதற்கா, தினேஷ்ஷுடன் இசைபிரபாவுக்கு நிகழவிருக்கும் திருமணத்தை நிருத்த, இசையைக் கடத்தினர்.. இசை கடத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டிருந்த அன்று, இசைபிரியாவின் குரலில் ஔிப்பதிவு செய்யப்பட்ட,

 

சீதாராமன் கொடுத்த, ஒலிநாடாவிலிருந்த பாடலை, நேரம் முற்பதிவு செய்யப்பட்டு அமரா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, நடராஜனின் அறையில் ஒலிக்கவிட்டது. அடுத்து இவர்களின் திட்டத்தில் இல்லாத ஆனால் எதிர்பார்காத வண்ணமாக ஹஸ்வந்திற்கும் இசைக்கும் திருமணம் நிகழ்ந்தது.

 

அதன் பின்னும் இளையவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால் மேலும் அவர்கள் இருவரையும் அகத்தே நெருங்கினர். அவ் மாத்திரைகள் சில நேரம் இசையால், சில நேரம் மேகவியால் அன்புடேனே அவர்களில் கையில் எடுத்துக் கொடுக்கப்பட்டது.

 

எப்படி இசைபிரியாவிற்கு அமுதென நஞ்சூட்டினார்களோ, அதற்க்கு ஈடாக இங்கு தாக்கத்தின் எதிர் தாக்கங்கள் நிகழ்ந்தன. எப்போதாவது அமராவும் பாலைக் கலக்குகிறேன் என அவள் பங்கிற்கு, அவளும் நஞ்சூட்டினாள்.

 

நேற்று இருவரும் அமைராவை இசைபிரியா என சிந்தித்தும் மருந்தின் தாக்கமே! அதனாலேயே, ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு, இன்று வைத்தியசாலையில் படுத்துக் கிடப்பதும். இப்போது அவர்கள் மருந்தின் தாக்கத்தின் கடைசி கட்டத்தில் இருந்தனர். அதனாலேயே அமரா இன்னும் பத்து நாட்களில் அவள் பூண்ட வேள்வியில் அந்த, குள்ளநரிகள் தாமாக வீழ்வார்கள் என நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள்.

 

“எஸ் வீ இன்வெஸ்ட் மோர்தென் ஹண்ரட் சீ. இந்த மெடிக்கல் ட்ரக்ஸ்ஸா உருவாக்க, அதுக்கான பார்மியூலாவ கண்டுபிடிக்கனு நிறைய பணத்தை கொட்டினோம். இந்த ஐந்து வருஷத்தில எங்களை நீங்க கண்டு பிடிக்க கூடாதுனு நிறைய செலவு பண்ணியிருக்கோம்” ஹஸ்வந் கூற,

 

‘மெடிக்கல் ட்ரக்ஸ்’ அவன் உச்சரித்த அந்த சொல்லிலேயே, இசைபிரபாவின் உள்ளம் தங்கிக் கொண்டது. கண்ணில் பொலபொல வென நீர் வடிய, ஷஸ்வந்தை வெற்று பார்வையொன்றை பார்த்தாள்.

 

“போலியா நிறைய செர்டிஃபிக்கட்ஸ், தயாரிக்க வேண்டியதா போச்சு. ஜாதினு ஒன்னைக் காட்டினா தான் உங்க அப்பாங்க கல்யாணத்தை நடக்க விடுவாங்கனு, அதுக்கு போலி டாக்கியுமெண்ஸ்னு அரசியல் வாதிக்கிட்ட பணத்தை கொட்டினோம். அமராக்கு மெடிகல் டாக்கியுமென்ஸ்னு அதுக்கும் போலியா உருவாக்கினோம். அப்புறம் போலிஸ் கேசஸ்னு பணத்தை கொடுத்தோம், 

 

லாஸ்டா, டிடக்கடிவ் மௌலிய கூட விலைக்கு வாங்கி, எங்க கற்பனை கதையெல்லாம் பேப்பர் ஃபுல்லா நிரப்பினோம். ஆனா லாஸ்டா நீங்க போன டிடக்டிவ் கூட சரியான தகவலை வழங்கியிருக்க மாட்டங்க ரைட்? மைட் பீ என்னோட ஃபோன்கால ட்ரேஸ் பண்ணியிருப்பாங்க…” குறுநகையுடன் முடித்தான் இந்தர்.

 

“எஸ் யூ ஆர் கரெக்ட்” பிரசாத்தும் இதழ் விரித்துக் கொண்டான். எத்தனை பெரிய வியாபார சாமாராஜியத்தைக் கட்டியாள்பவனின் கணிப்புக்களும் அபாரமே என நினைத்துக் கொண்டான் பிரசாத்.

 

“நாங்க, பணம்னு பேசுறதால….” ஹஸ்வந் இழுக்க, “வீ டோன் திங் சோ, நீங்க உங்க செயற்பாட்டை செய்றதுக்கான  கருவியா உங்க பணத்தை யூஸ் பண்ணியிருக்கிங்க. எங்கள பணத்தால வாங்கினீங்கனு நான் நினைக்கல” பிரசாத் கூறீனான்.

 

“அமராக்கிட்ட பணம் இல்லனாலும், ஏன் சாதரண லோவர் கிளாஸ் பெண்ணா அவ இருந்திருந்தாலும், உண்மை தெரிஞ்சு அவ பலிவாங்க நினைச்சிருந்தா அதை சரியா செஞ்சிருப்பா, கருவி பணமா இல்லை வேற எதுவா வேணும்நாலும் இருக்கலாம் ஆனா கருத்தா அமரா தான்” அவளின் ஆளுமையை விளக்கிய இந்தரின் கண்ணில் பெறுமை பரவிக் கிடந்தது.

 

‘பாருடா என் அமராவை’ என்ற பெறுமை அது. என் என்பதில் அமரா நாயகியா இருந்தால் அவளின் நாயகனாக இந்தரே இருப்பான். உறவுகளுக்கு உருவமெதற்கு அவை உணர்வுகள் மாத்திமே!

 

“இஸ் இட் ஓவர், இன்னும் ஏதும் இருக்கா?” பிரசாத்தின் மனது உருத்த, தன்னிச்சயாக வாய் கேள்வியை எழுப்ப, சற்று தயங்கியவனாக இந்தர் மேகவியை ஏறிட்டான். பின்,

 

“நாங்க வேலுவை பத்தி தகவல் தெரிஞ்சிக்க, அவரோட கூட்டுக்களவானி நண்பர் ஒருவரைப் பிடிச்சோம், அவர் முக்கியமான ஒன்னைக் கூறினார்” என்றவனை அனைவரும் நவரசத்துடன் நோக்க,

 

“இசைபிரியா அத்தையை, கொலை பண்ணினத பத்தி வேலு, அவரோட நண்பரோடு பேசிட்டு இருக்கும் போது, அதை மேகம் அம்மா கேட்டுடு சண்டை போட்டு, இதை போலீஸ்ட சொல்லப் போறேன் என்று சொல்லியிருக்காங்க. அதனால வேலு…வேலு அவங்களை கொலை பண்ணியிருக்கார்” அவன் முடிக்கும் போது, அவனின் மேகம் வானை விட்டு பிரிந்து களைந்து சென்றது.