யாகம் 7

யாகம் ஏழு

 

வைத்தியசாலைக்கே உரிய பிரத்தியனயேக வாசனையுடன், பரபரப்பாக காணப்பட்ட அவ் வைத்தியசாலையின் இரண்டாவது தளத்தில் ‘டாக்டர் இசைபிரபா’ வென பெயர் பொறிக்கப்பட்ட அறையினுள் இசை நுழைந்தவுடன் புருவத்தை சுருக்கி அவ் ஆடவணின் செய்கையை விழி விரித்துப் பார்த்தாள். 

 

“எக்ஸ்கியூஸ் மீ” என அவள் அழைக்கவும், “எஸ் கெட் இன்” உரிமையாக அனுமதித்தான் அவன். இசையோ ‘வேறு யாருடைய அறைக்குள்ளும் புகுந்து விட்டோமா?’ என அறையை ஒரு தடவை சரிபார்த்துவிட்டு, ‘பேசன்ட் ச்சியார்ல தான இருக்கான், ஒரு வேளை சைக்காட்டிஸ்ட போக வேண்டிய யாருமோ?’ குழம்பினாள் அவள்.

 

வெளி நோயாளர்களைப் பார்வையிடும் நேரம் முடிந்திருந்த பட்சத்தில், இவளுடைய அறையில் குண்டுடன் விளையாடிக் கொண்டுடிக்கும் இவன், அவளுடைய அறைக்கே அவள் வர அனுமதி வழங்கினால் என்ன நினைப்பதாம்.

 

“யாருங்க நீங்க?” என்றான் அவன். இடுப்பில் கையைக் குற்றி “பார்த்தா எப்படி தெரியுது?” கோபத்தை அடக்கிய படி வினவினாள். “சான்சே இல்லங்க, செம்ம அழகா இருக்கிங்க. அதுலயும் உங்க முடி, யப்பா எப்படிங்க மெயின்டன் பண்றிங்க? என்ன கருமை! என்ன சுருள்!” வர்ணிக்க ஆரம்பித்தான்.

 

“மிஸ்டர்…?” அவளின் பேச்சின் நடுவில் புகுந்து, “மிஸ்டர் ஹஸ்வந் கே.கே” என்றான்.

 

“ஐயா! என்னங்க வேணும் உங்களுக்கு?” பற்களைக் கடித்துக் கொண்டாள்.

 

“பிரபாவ பார்க்கனும்” என்றான் மொட்டையாக. ஒரு நொடி யோசித்து விட்டு, அவன் பிரபா எனக் கூறியது தன்னைத்தான் என உறுதி செய்து கொண்டு, தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

 

“சொல்லுங்க, ஐ எம் இசைபிரபா. என்ன வேணும்.” என்றவளிடம். “ஒரு கோடி டொனேசன் வேணுங்க கொடுக்க முடியுமா?” என்றான். “வாட்?” உருத்து விழித்தாள் அவள்.

 

“பின்ன என்னங்க டாக்டர்ட எதுக்கு வருவாங்க? பீவர்ங்க, அதுவும் ஹை டெம்ரேச்சர், எப்படினா இரண்டு நாளாக் குளிக்கலங்க. அதனால மொத்தமா குளிப்போம்னு தண்ணில இறங்கினேனா…”

 

“உப், போதும் நான் பாக்கிறேன்” என எழுந்தாள் அவள். சில சமயங்களில் வெளிநோயாளர் பார்வை நேரம் முடிந்தும், இப்படியான சிலர் வைத்தியரை அணுகுவதுண்டு. ஆனால் இவன் பேச்சு சற்று வித்தியாசமாகவிருப்பினும் கடமையைச் செய்ய விளைந்தாள்.

 

அவனைப் பரிசோதித்து விட்டு, காய்சலுக்கு ஊசிபோட வேண்டிய கட்டாயத்தில், இதுவரை வெளியில் ஏதோ பணி நிமித்தம் சென்றிருந்த தாதியை அழைக்க எத்தணிக்கும் போது, “ஏங்க நீங்களே இன்ஜக்சன் போட்டு விடுங்க, ப்ளீஸ்” என்றான் முகத்தை சுருக்கி.

 

“சார், இன்ஜக்சன் எல்லாம் நர்ஸ் தான் போடுவாங்க” என ஆரம்பித்தவளிடம், “எனக்கு எங்க அம்மா தான்ங்க போடுவாங்க. யூ நோ சம்திங் எனக்கு வலினா ரொம்ப பயம்ங்க. அதனால டாக்டரா இருக்குற எங்க அம்மா தான் போட்டு விடுவாங்க.” குழந்தை போல பேசினான்.

 

“அதுக்கு நீங்க உங்க அம்மா கிட்டதான் போய் கன்சல்ட் பண்ணியிருக்கனும்” இசைக்கு என்னவோ கட்டுப்படுத்த முடியாத விதத்தில் இவனிடம் வாயாட வேண்டும் எனத்தோன்றியது.

 

“அட அழகா இருக்கிங்க, டாக்டருக்கு படிச்சிருக்கிங்கனு பார்த்தா, அறிவு கொஞ்சம் கம்மி போல” என்றவனை அவள் கண் இடுங்க பார்த்த போதிலும், “அம்மா ஊர்லங்க, அவங்க என்கூட இல்லாம போனதும் இப்போ நல்லதுனு தோனுது. இல்லனா உங்கள மாதிரி நேச்சர் பியூட்டி டாக்டர் தரிசனம் கிடைச்சி இருக்குமா” என்றான்.

 

‘விட்டால் பேசிக் கொண்டே இருப்பான் போலும்’ என்று, இசையே அவனுக்கான ஊசியில் மருந்தை செலுத்தி, அவன் டீஷர்ட் உயர்த்தப்பட்ட புஜத்தில் குத்தினாள். வலியால் கத்திவிடுவான் என அவள் எண்ணியிருக்க அவனோ, அவள் இடையோடு கைகளை விட்டு வயிற்றைக் கட்டிக்கொண்டான்.

 

இசைக்கு ‘என்ன செய்கிறான் இவன்?’ என விளங்கிக் கொள்வதற்கு முதலே ஊசி அவன் உடலில் ஏறி முடிந்திருக்கவும் பதறி விலகினாள். 

 

“தேங்க் யூ பிரபா. அம்மா மாதிரியே வலிக்காம ஊசி போட்டிங்க” அவள் கண்ணத்தில் வேறு தட்டிவிட்டு, அறையை விட்டு வெளியேரினான்.

 

“சம்திங் கிரேசி” கையை நெற்றியில் தாங்கி, தன் இருக்கையில் அமர்ந்தாள். “சாரி பிரபா, இத மறந்துட்டேன்” மேசை மீதிருந்த  மருந்துச்சிட்டையை எடுத்துவிட்டு, “திஸ் இஸ் பார் யூ” என சாக்கலேட் ஒன்றை அவள் மேசை மீது வைத்து வெளியேரிய ஹஸ்வந்தின் முதுகைப் பார்த்து பல்லைக் கடித்தாள் இசை.

 

பிரசாத் வீட்டிலோ, அமரா பிரசாத்தின் அறையை வேடிக்கை பார்க்கலானாள். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அறையானது, நீள்விருக்கைகள் போடப்பட்ட வரவேற்பு பகுதி, மஞ்சம்மிடப்பட்ட படுக்ககையறை, உடைமாற்றும் அறையுடன் கூடிய குளியலறை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பிரசாத் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, இவளோ பால்கனிக்கு செல்லும் கண்ணாடி சாலரத்தை திறந்து, அங்கு சென்றாள்.

 

பக்கவாட்டு சுவர் முழுவதும், நிலைக்குத்து பயிர்வளர்ப்பு முறையில் முகையாக மலரும் வெள்ளை ரோஜாக்கள் அலர்ந்து உப்புக் காத்தில் பன்னீர் சிந்தியது. மேலும் பல வர்ண மலர்களும் பூத்துக்களுங்க ஒரு அறையின் பரப்பளவிற்கு அப்பால்கனி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு மூளையில் போடப்படிட்டிருந்த வட்ட மேசை மீது ஏறி அமர்ந்த அமரா, தனக்கு நேர்எதிரே இருந்த கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘அபி காலிங்’ எனத் தனது அழைப்பேசி சிணுங்க, அதனை ஏற்றுப் பேசினாள். “அடியேய்! என்ன காரியம்டீ பண்ணி வைச்சிருக்க? வீடு சிப்டிங் வேர்க்ல இருந்ததால உன் கிட்ட பேச கூட முடியல. இந்த கல்யாணம் உனக்கு தேவைதான?” படபடவென பொரிந்தாள் அமராவின் நண்பி 

லண்டனிலிருந்து. 

 

“ஹேய்! ச்சில் பேய்ப்ஸ், எல்லாமே தெறிஞ்சது தானே? த்தென் வ்வொய்?” சாதாரணமாக கேட்டாள் அமரா. “இப்போவும் சொல்றேன், பிரசாத்துக்கு நீ பொறுத்தமானவ இல்லடீ!” எடுத்துக் கூறியவளிடம், “அச்சோ, உன் க்கிரஸ் தேவாக்கு சப்போர்டா, உன் ஆத்துக்காரர்ட போட்டுக் கொடுத்துடுவேன் பாத்துக்கோ!” கிளுங்கினாள் அமரா.

 

“அடிப்போடி, கல்யாணம் பண்ணி குழந்தையும் பெறந்தாச்சு. க்கிரஸ்ஸாம் க்கிரஸு!” மறுபுறம் சத்தமாக சிரித்தாள் அபி. அவள் அரட்டை தொடரவே, அறைக்குள் பிரசாத் குளித்துவிட்டு நுழையும் போது அவன் தொலைபேசியும் அலறியது.

 

“மச்சி, கன்கிராட்ஸடா! எப்படியோ வயசான காலத்துல, மிங்கில் ஆகிட்ட.” நண்பனுக்குறிய நக்கல் பேச்சு ருத்ரேஷ்ஷிடமிருந்து வந்தது. “டேய், படிக்கிற வயசுல மிஸ்ஸக் கரக்ட் பண்ணி கல்யாணம் பண்ணின நீ, வயசப் பத்திப் பேசுறியா?” அதே நக்கல் தேவிடம்.

 

“அவமானப்பட்டான் ருத்ரேஷு! ரகசியத்தை எல்லாம் வெளிய சொல்லக் கூடாது. அப்புறம் எம் பொண்டாட்டி பிரம்பால அடி பிச்சிடும்” என்றான், உண்மையிலும் படிக்கும் காலத்தில் தன்னைவிட இரண்டு வயது மூத்த கல்லூரி விரிவுரையாளரைக் காதல் மனம் முடித்த ருத்ரேஷ்.

 

“ருத்து அத விடுடா, இங்க எதுவும் சரி கிடையாதுடா. நியூஸ் பார்த்த உனக்கே விளங்கியிருக்கும்” என்ற பிரசாத் திருமணத்தின் போது நிகழ்ந்த குழப்பங்களை விளக்கினான். 

 

“மச்சி, நீ சொல்றது எல்லாமே சரிதான். நீ எடுக்கப் போற முடிவும் கரெக்ட். ப்பட் வன் திங், நூத்துல ஒரு பங்கு அந்த பொண்ணு அமரா உன்னை லவ் பண்ண சான்ஸ் இருக்கு. அதே நேரம் எத்தன நாளைக்கு தான் முகத்தைக் கூட சரியாக பார்க்காத ஒரு பொண்ணை நினைச்சி வாழப் போறடா? பேசாம அந்த அமரா பொண்னை திருத்தி நல்லபடியா மாத்தி, வாழுடா. இப்போவே முப்பத்தி இரண்டு வயசாச்சு.” 

 

“நீ வேற ஏன்டா? பாத்துக்கலாம் விடு. இதுல மேகாட லைப் கூட சிக்கல்ல இருக்கு.” பெரும் மூச்சை இழுத்துவிட்டு “எப்போ இந்தியா வர? கனடாவிலயே இருக்க ஐடியாவா?” என பொதுப்படையான பேச்சை தொடர்ந்த பிரசாத்தின் ஆழ்மனதில் நினைவுகளாக ஒருத்தி ஊஞ்சலாடினாள். 

 

இடை தாண்டி தொடை தொடும் கரிய பின்னலிடப்பட்ட கூந்தல், காதுகளில் குடை ஜிமிக்கி, வெண் நிற அனார்கலி வகை சுடிதார், அதன் நிறத்தில் கடுகளவில் பொட்டு. இவையனைத்துமே அவள் அடையாளங்கள். முகம் கூட பார்த்தது கிடையாது ஆனால் ஏன் இத்தனை பிடித்தமென பிரசாத்திற்கே தெரியாது. 

 

திருமணத்தை வேண்டாமென மறைமுகமாக மறுக்க காரணமும் இவளே. அவன் இதயத்தை களவாடி சென்றவளும் அவளே.

 

இந்தரே கவியின் படுக்கையில் வாகாக கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டு அறையை நோட்டமிட்டான். பிரசாத்தின் அறையினளவு பெரிய அறையாகவிருப்பினும் ஏதோ நூதனசாலையும், புத்தகசாலையையும் சேர்த்தது போலிருந்தது அவள் அறை.

 

தமிழ் மீது அதிக பிடித்தம் என்பதனால், அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்திருந்தாள் கவி. இடை உயரமிருக்கும் புத்தக இலாக்கையின் மேல், கண்ணாடிக் குடுவைகளில் மயிலிறகு, குன்றிமணிகளை நிறப்பி அலங்கரித்து அதன் நடுவில் பாரதியின் ஓவியத்தினை வரைந்து சட்டதில் பூட்டி வைத்திருத்தாள். 

 

அவ் ஓவியத்தின் கீழ் குண்டுக்குண்டு எழுத்துக்களில் ‘செந்தமிழும் நின் கவியும் கைசேர வேண்டும்’ என எழுதப்பட்டிருந்தது. “யப்பா அவ கன்னம்தான் குண்டுனு பார்த்தா எழுத்துமா?” என முனங்கிக் கொண்டு மேலும் பார்த்தான். உடை மாற்ற மரத்தடுப்பு கதவுகளில் கூட மலரோவியமிருந்தது. சுவர்களில் தீந்தை கொண்டு தீட்டப்பட ஓவியங்கள் கூட ரம்மியமாகவிருந்தது. 

 

“சரியான ராட்சசி, பால் டப்பி நீ என்ன பீஸ்டீ. மீயூசியத்துல வைக்க வேண்டிய அருத பழசுதான். ப்ச் பழசு மட்டுமா ஒரு கிக்கா வேற இருக்காளே!” சங்கல்பத்தில் சல்லாபித்துவிட்டு, கவியைத் தேடிச் செல்ல கட்டிலை விட்டு எழுந்தவன் கண்களுக்கு விருந்தாக, அவன் மேகம் வானத்தை பார்த்து பால்கனியில் நின்றிருந்தது.

 

அடிமேல் அடி வைத்து சத்தமில்லாமல் அவள் பின்னால் சென்று நின்றவனை அப் பால்கனி கூட ஈர்த்தது எனலாம். இருவர் மாத்திரம் நின்று பேசக்கூடிய குறுகலான அவ் இடத்தின் ஒர் மூலையில், அமைதி நிலைப்புத்தர் சிலையாக கண்மூடியிருக்க அவரை சூழ்ந்து தாமரை இலைகள் நீரில் மிதந்தன. மற்றைய மூலையில் சிறிய ஊஞ்சலும் அதன் பின், பெரிய ஆரையுடை ‘ட்ரீம் கெச்சர்’ உம் மெதுவாக காற்றில் ஆடின.

 

அவ் இடத்தை பார்வையில் அளந்தவனின் கண்களுக்கு விருந்தாக கிடைத்த  கடைசிக்காட்சி என்னவோ கவிதான். குளித்து முடித்து நேராக பால்கனிக்கு வந்ததால் என்வோ முடிகளிலிருந்து நீர்த்திவளைகள் நிலத்தில் வீழ்ந்து உயிர் துஞ்சிக் கொண்டிருக்க வெளியே வேடிக்கை பார்த்திருந்தாள் பெண்ணவள்.

 

தன் மார்பளவு உயரமிருக்கும் அவளின் முதுகில் கோலமிடும் முடிக்கற்றைகளை  பார்த்து, “கூந்தல் நெளிவில் எழில்கோலச் சரிவில்” பாடலை கவியின் காதுகளில் கிசுகிசுத்தான். தனிமையில் ஏதோ நினைவில் சஞ்சரித்த மேகவி, காதுகளில் இதழுரச இவன் பாடியத்தினால் இதயம் துடிப்பை நிறுத்த, நொடியில் சிலையென நின்றாள்.

 

அடுத்த கணமே உடல் அதிர கை, கால்கள் வெடவெடுக்க மயங்கி இந்தர் மீதே சரிந்தாள். மயங்கியவளை தண்ணீர் தெளித்து எழுப்பவே இந்தருக்கு போதும் என்றாகிவிட்டது. 

 

“என்..என்னாச்சு?” என மஞ்சத்தில் அசைந்து எழுந்தவள், காற்றோட்டமாக இருக்கட்டும் என அவன் சற்று தளர்த்திவிட்ட தன் உடையை குனிந்து உருத்து விழிக்கவும், இந்தருடைய பொறுமை காற்றில் பறந்தது.

 

“ஏய்! நான் உன்னயெல்லாம் தொடுவேன்னு நினைப்பு வேறயா? ஆளும் மூஞ்சியும். எம் மேலயே மயங்கி விழுந்து, நீதானே என்னய மயக்க ட்ரை

பண்ணின! ச்சீ பேச வேணாம்னு பாக்குறேன். நீ எப்போவும் எனக்கு சேவகி மட்டும் தான். மண்டையில நல்லா ஏத்திக்கே. பட்டிக்காட்டு பஞ்சுமிட்டாய்” கண்ணம் குழிய சிரித்து திட்டிவிட்டுச் செல்லும் அவளவனை வெறித்துப் பார்த்த மேகம் கண்ணீர் மாரியைக் கசிந்தது.  

 

சூரியன் தன் பணியைச் செவ்வென செய்து மங்கி மறைந்த வேளையில், அமரா இத்தனை நாட்களில் அணிந்திராத அவளுடைய பிரத்தியேக உடையான, தொடையைத் தொடவே மாட்டேன் எனும் விதமான மினிஷோட்ஸ், கைகளில்லாத டீஷர்டுடன் வீட்டின் முன்னறையின் நீள்விருக்கையில் “கம் பேக் டூ கம்பார்ட் சோன்” என தனது ஆடையினைப் பற்றி திருப்தியுடன் முணுமுணுத்துக் கொண்டு பிரசாத்தின் அருகில் அமர்ந்தாள்.

 

பக்கவாடாக தலையை மட்டும் திருப்பி பிரசாத்தோ அவளை ஒருபார்வை பார்த்து வைத்தவன், “இது வேறா? இவளின் ஸ்டைல சிலீப் ஆகிட்டன்னு எல்லோரும் நினைக்க போறது உறுதி!” மனதில் புலம்பி விட்டு அவளிடம் ஏதாவது உண்மை கிடைக்குமா என பேச ஆரம்பித்தான்.

 

“காப்பி வேணுமா?” சாதாரணமாக கேட்வனிடம், “நோ தாங்ஸ்” வெட்டிப் பேசினாள். அடுத்து ஏதோ கேட்க வரும் போது, அவன் கண்கள் அவளது இடது கையில் போடப்பட்டிருந்த ‘டேட்டோ’ எனும் பச்சைகுத்தப்பட்ட பெயரிலேயே நிலைக்குற்றி நின்றது. 

 

“என்ன?” எனப் புருவம் உயர்த்தி அவன் பார்வைக்கான அர்த்ததை வினவவும், “நைஸ் டேட்டோ” என்றவனிடம் “டோன் லைக் காம்லிமென்ஸ்” என்றாள் அமரா.

 

‘இவள் என்ன டிசைன்னே புரிய மாட்டுதே, முறைச்சா சிரிக்குது. சிரிச்சா ஏகத்துக்கும் முறைக்குது. விட்டுப் பிடிக்கனும்.’ மனதில் சத்தியம் செய்து விட்டு, “அது யாரு அமைரா?” என அப் பச்சை குத்தப்பட்டிருக்கும் பெயரைப் பற்றி கேட்டான்.

 

முடிவிலி குறியீட்டின் வலதுபக்க வளைவில், ஆங்கில கூட்டெழுத்தில் எழுதப்பட்ட ‘அமைரா’ எனும் பெயரை மனதுக்குள் உச்சரித்து விட்டு அமராவோ “அது எழுத்துப்பிழை தேவா, ஐ ஒன்னு எக்ஸ்ரா எழுதப்பட்டிருச்சு” கண்சிமிட்டிக் கூறியவளை, விளங்காத பார்வை பார்த்தான் பிரசாத்.

 

அப்பொழுது “சப்ரைஸ்” என கூச்சலிட்டவாரு அறைக்குள் புகுந்த இந்தரினது கையில், அவனது உயரத்தில் பஞ்சுப்பொதிகையாக இளஞ்சிகப்பு வர்ணத்திலான கரடி பெம்மையை இழுத்து வைக்கப்படிருந்தது.

 

அமராவோ, இருக்கையை விட்டு ஓடிச் சென்று அக் கரடி பொம்மையை வாங்கி கட்டிக்கொண்டவள், அடுத்த நொடி இந்தரினை அணைத்து அவன் கண்ணத்தில் முத்தமொன்றை வைத்து “லவ் யூ குட்டா” எனக்கூறி துள்ளிக் குதித்தாள். 

 

இந்தரும் “லவ் யூ டூ பார்பி கேர்ள்” என கட்டியணைத்தவன் கைகளிலும் அதே வடிவில் ‘அமைரா’ என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததை பிரசாத் கண்கள் இடுங்க பார்த்து ‘அமரா எண்ட் இந்தர் ஈக்குவல் அமைராவா?’ மனதினில் கேட்டுக் கொண்டான்.

 

அதே நேரம் இசையும் வைத்திசாலையிலிருந்து வந்தவள் இவர்களின் அணைப்பையும் அமராவுடைய குட்டை ஆடையையும் ஏதோ அதிசயத்தைக் கண்டவள் போல பார்த்து நிக்க, அதே உணர்ச்சில் வீட்டின் மூத்தவர்கள் மூவரும் மூச்சை இழுத்துப் பிடித்து நின்றனர். ஆனால் அங்கும் மேகவி கண்களில் நீர் பொழிய ஒரு மூலையில் நின்றிருந்தாள் என்பதே அதீத தாக்கமாகவிருந்தது.

 

நெடுவான் நிலவுகளில் 

என் கனா சேர்த்து வைத்ததேன், 

உதிரும் வின்மீன்களாய் விடியலில் அத்தனையும் கலைந்ததேனோ?

 

அவள் வீழ்த்தினாள்…..