யாகம் 9

யாகம் ஒன்பது

 

காலதேவன் கைகளில் நாட்கள் நகராமலிருப்பதில்லை, எனும் விதமாக நாட்கள் அதன் போக்கில் மலர்ந்து மறைந்திருக்க, பிரசாத்தின் வாழ்வில் திருமணமெனும் போர்வையில் இடம்பெற்ற சதிராட்டம் நிகழ்ந்து ஒரு முழு மாதத்தைக் கடத்தியிருந்தது. 

 

மரங்களின் காதல் மலர்களின் இதழிலா? அல்லது உதிர்ந்த இலையிலா?, சித்தாந்தம் பேசும் சில காதலர்கள், இருவர் அமரும் மேசைகளின் எதிர் எதிரிலிருந்து, குளிர்களியை உருகவிட்டுக் கொண்டே புரியாத மொழியில் பரிபாஷித்துக் கொண்டிருப்பதனை, விசித்திரத்தைக் காண்பது போல பார்த்திருந்தாள் இசை.

 

“இதுங்களுக்கு வேற வேலையே இல்ல போல, இவ எங்க போய்த் தொலைஞ்சாலோ?” தன் செவிகளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் நண்பியை வைதாள்.

 

“எக்ஸ் கியூஸ் மீ” ஒரு ஆடவன் குரல், அருகில் ஒலிக்கவும் தலையை மட்டும் உயர்த்தி அவன் முகம் பார்தவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 

 

“ஏய் மிஸ்டர்! எங்க போனாலும் ஃபாலோ பண்ணி வர வேண்டியதா?” ஏகத்துக்கும் பொறிந்தாள் இசை.

 

“ச்சில் பிரபா, ஏங்க இவ்வளவு கோபம்? கூல் பிலேஸ்ல இருந்துட்டு சூடானா எப்படி?” கையிலிருந்த சாக்கலேட் குளிர்களியை அவள் முன் வைத்துவிட்டு தொடர்ந்தான், “முதல்ல ஐஸ் சாப்டு சில்லாகுங்க டாக்டர், அப்புறம் வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்கு இன்னொரு வைத்தியர் தேவைப்படும்.” கண்சிமிட்டியவன் வேறு யாருமல்ல, சாட்சாத் ஹஸ்வந் தான்.

 

“அதை நீங்க சொல்லத் தேவையில்ல, எனக்கு எதுவும் நடந்தா என் அண்ணன் பார்த்துப்பான்.” அவனுக்கு பதிலடி வழங்க பேசியவள் அறியாத ஒன்று யாதெனில், இன்னும் சில நாட்களில் அவன் கரத்தைப் பிடித்து தன்னைக் கைவிட வேண்டாமென தான் மன்றாடப் போவதாகும்.

 

“அட, விடுங்க. பை த பை, நான் இந்த ச்சியார்ல உட்காரலாமா?” கைகளை காற்சட்டை பைகளுக்குள் விட்டுக் கொண்டு வினவுபவனை நிமிர்ந்து பார்ப்பதே இசைக்கு எரிச்சலாக இருந்தது.

 

“நோவ்!” அவன் முகத்தைக்கூட பாராமல், கைகளிலிருந்த அழைப்பேசியில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தவளின் பதிலில், ஹஸ்வந்திற்க்கு என்னவோ இதழ்கடையில் குறுநகையையே கொண்டுவந்தது.

 

“சார், எனி இஸ்ஸூஸ்” எனக் கேட்டவாரே, அக் கடையின் ஊழியரொருவர் மேசையருகில் வந்தான். 

 

“எஸ், நான் உக்காந்து இருக்குற மேசையில இவர் இடம் கேட்கிறார்” முந்திக் கொண்டு இசை பதில் வழங்கவும், “மேம், சார் இந்த மேசையை ஏற்கனவே முன்பதிவு செய்துட்டார்” என்றான் அவன்.

 

ஹஸ்வந்திற்கோ, எப்பாடு பட்டாவது சிரிப்பை அடக்கவேண்டிய நிர்பந்தத்தினால், முகத்தை வேறு பக்கம் திருப்பி கையினால் முகத்தை மூடிக்கொண்டு உடல் குலுங்க புன்னகைத்தான்.

 

இசைக்கோ, முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்றே புரியாத நிலை. முன்பு வைத்தியசாலையிலும் ஹஸ்வந்திடம் தகராருகளில் ஈடுபட்டதால் என்னவோ, அவள் மனது திசைதப்பி ஓடியது. 

 

‘இவனுடனான சந்திப்பு எல்லாம் நிந்திப்பாகவே முடிகிறதே! ஓவரா சொதப்புற இசை’ இதயத்தில் இரைந்துவிட்டு “சாரி, ஃபார் தி ட்ரப்பில்ஸ்” ஆண்கள் இருவரிடமும் பொதுவாக கூறியவள், ஆசனத்திலிருந்து எழுந்தாள்.

 

“யூ மே கோ”, ஊழியரை அனுப்பிவைத்த ஹஸ்வந்தோ, நாற்காலியினை இழுத்து அமர்ந்து “சிட் பிரபா”என்றான்.

 

அவன் கட்டளைக்கு பணிந்தாள் அது இசையல்லவே. “இல்ல சார், ஹாஸ்பிடல்க்கு நேரமாச்சு. நான் கிளம்பனும். எனி ஹவ் ஐம் சாரி, சாரி ஃபார் எவ்ரி திங்.” என்றவள் புறப்பட எத்தனிக்க,

 

“சாரி எல்லாம் ஏத்துக்க முடியாதுங்க, வேணும்னா ஒரு கப் காஃபி வாங்கி கொடுங்க, லெட்ஸ் ட்ரை” என்றான்.

 

“மிஸ்டர்” என ஏதோ கூற வந்தவள், “முடியாதுங்க, எனக்கு தெரியாதவங்ககூட நான் காஃபியை பகிர்ந்துக்க விரும்பல” விடுவிடுவென இடத்தை விட்டு நகர்ந்தாள் இசை.

 

“அப்போ பிரட்ண்ஸ்” ஹஸ்வந்தின் கேள்வி இசையின் காதுகளில் விழுந்து காற்றில் கரைந்தது.

 

“சரிதான்” முன் நெற்றி முடிகளைக் கோதி, அவளின் கோபத்தை ரசித்துக் கொண்டே, “ராங்கிடி நீ” என உதட்டால் உச்சரித்தவன், தன் கன்னத்தை தடவிப்பார்த்துக் கொண்டான்.

 

அன்று காந்திமதியின் அறையிலும் இவ்வாறு கன்னத்தில் கைவத்து நின்ற நாளை நினைக்கலானான் இந்த வாயாடுபவன்.

 

தனது சட்டையை இழுத்து, கைகளை முகத்தில் இறக்கியவளின் முகத்தைக் குனிந்து நோக்கியவனுக்கு அதிர்ச்சியை மீறிய குறும்பே விழிகளில் விளையாடியது.

 

“இசைபிரபா, என்ன காரியம் பண்ணிட்ட?” காந்திமதி சத்தமிடவுமே, இசையும் நினைவுக்கு வந்தவளாக ஹஸ்வந்தினை அடையாளம் கண்டுகொண்டாள்.

 

“யூ மிஸ்டர், மேடமைக் கொலை பண்ண முயற்சிக்கிறாயா?” ஆவேசமாக கேட்கவும், “இசை! வாட் இஸ் திஸ், இவன் என் பையன் மாதிரி. இவன் என்னைக் கொலை பண்றதா? அப்படி அவன் ஏதும் ட்ரை பண்ணினாலும், சந்தோசமா என் கழுத்தக் கொடுப்பேன். ஒரு டாக்டரா இருந்துட்டு இத்தனை கோபம் ஆகாதுமா. எப்போவும் பொறுமையா நிகழ்வுகளை அவதானிக்கனும்.” என்றார் காந்திமதி.

 

‘எதே மகன் மாதிரியா? என்னக்கென்ன மாயம் மத்திரமா தெரியும். இந்த நெட்டாங்கு உங்க மகன் சப்ஜக்ட்னு. ஆனாலும் இவனைப் பார்த்தா நமக்கு ஏன் கடுப்பா வருது. இசை கன்ரோல் யூர் செல்ஃப்.’ மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தவளினை மீண்டும் வம்பிற்கு இழுத்தான் நெடியவன்.

 

“அட மதிமா விடுமா!, வயசான டாக்டரப் பார்க்க வந்தா, ஒரு வயசுக்கு வந்த டாக்டர் கையால அடி வாங்கினதும் செம்ம ப்பீல்த்தான். கையா இது, அடிச்சும் வலிக்க மாட்டுதே! நீங்க ரொம்ப சாப்ட்ங்க”, இசையின் அங்கங்களைப் பற்றி அங்கலாய்த்தான்.

 

“சாரி மேம்” அறையை விட்டு வேகமாக வெளியேறிய இசை மறந்தும் கூட ஹஸ்வந்திடம் மன்னிப்பை யாசிக்கவில்லை. ‘நான் ஏதும் தவறு செய்யவில்லை’ அவள் அகம், அவளுக்கான நியாயத்தை வழங்கியது.

 

“கடவுளே! இசைய ஏன்டா வம்புக்கு இழுக்குற. ரொம்ப 

நல்ல பொண்ணுடா. அதப் போய், இப்படி… கண்ணா!” காந்திமதி இசைக்கு சார்பாக பேச, “அடிச்சது அவ, ஆனா திட்டு எனக்கு. பாத்துக்கலாம், கிடைக்கப்படாதது எடுக்கப்படாது. பட் ஷீ இஸ் சம்திங்….”, ‘சரியான ராங்கி’ பாதியை வெளியிலும் மீதியை உள்ளிலும் கூறிக் கொண்ட ஹஸ்வந் தனது கப்பல் கட்டும் பணியைத் தொடர்ந்தான்.

 

தனக்கு முன், இசைக்காக அவன் வைத்த குளிர்களி கரைந்துருகி திரவ நிலையில் மாறியிருக்க, அதனை ஒரு மூச்சாக எடுத்துக் குடித்தவன், மீண்டும் கன்னத்தில் கையை வைத்து “கரைந்தாலும் சாக்லெட் தித்திதிக்கத்தான் செய்யுது. இவ திட்டினாலும் மனசு அவள கொஞ்சனும்னு துடிக்குது. நீ ராங்கினா நான் தான்டீ உன் ராட்சசன்” நாக்கின் நுனியை கடித்துக் கொண்டு சிரித்தான்.

 

‘அம்பிகை கலைக் கல்லூரி’, வெண்கல எழுத்துக்களால் பெயர் பொறிக்கப்பட்ட நுழைவாயிலைக் கடந்து கல்லூரி மாணவர்கள் பலர் கல்விக் கனவோடு உள்ளே சென்று கொண்டிருந்தனர்.

 

“அடியேய் கவி! எத்தன நேரமாடீ இந்த கேட் பக்கத்துல வாட்ச்மேன் வேல பார்த்து நிக்குறது. சீக்கிரம் வந்து தொலைக்க மாட்ட. வரவர உன் போக்கே சரி கிடையாது. ஏதும் தகிடுத்தனம் பண்ணுரியா?”

தாமதமாக கல்லூரிக்கு வந்த கவியை வாசலிலேயே விசாரனை நடத்தினர் அவள் தோழிகளிருவரும்.

 

“இ..இல்லியே, கார் லேட் ஆகிடுச்சு” வாய் பதிலளித்த பே்ாதும், கை தனது சுடிதாரின் கழுத்தைத் தொட்டு மீண்டது.

கவியின் நண்பிகளுக்கும் சரி, இசையின் நட்பு வட்டத்துக்கும் சரி நடிகர் பிரசாத் இவர்களின் உறவினர் என்ற விடயமே வெளியில் தெரியாது. ஆகையால் இருவருக்கும் நட்பு வட்டமும் மிகக் குறைவு. 

 

‘இவங்க வீட்டுக்கு கூட கூப்பிட மாட்டாங்க, சொந்த பந்தத்தைப் பற்றி பேசவே மாட்டாங்க. நாங்க மட்டும் ஒட்டி உறவாடனுமா?’ இப்படிடான மனப்பாண்மையினால் அதிக நட்பு இல்லாவிடினும், உடனிருக்கும் சில நட்புக்கள் இவர்களின் சுற்றத்தை பற்றி அலசுவதை விட சுயத்தை விரும்பி உறவைத் தொடர்கின்றனர்.

 

இங்கு கவியோ தனக்கு திருமணம் நிகழ்ந்ததை யாரிடமும் வெளிக்காட்டவுமில்லை, வெளிக்காட்ட விரும்பவுமில்லை. அதனாலேயோ என்னவோ தாலியைக் கூட மறைத்து வைத்துக் கொண்டு வளையவருகிறாள்.

 

“சரிடீ, விடு அதற்கு ஏன் மூஞ்சிய அழுறாப் போல வைச்சிருக்க. வா வகுப்புக்கு போகலாம்.” ஒருத்தி அழைக்க, “இல்லனா அந்த வாத்தி, தாமதமாக வந்தவர்கள் வெளியே போகவும்னு செந்தமிழ்ல வையும்” என்றாள் அடுத்தவள்.

 

“சரி வாங்க” வென கவி, இருவருடனும் நடக்க, “ஓய்! மஞ்சள் மைனா! இங்க வா” மரத்தின் அடியில் நின்றிருந்த நான்கு வாலிபர்கள் கவியை அழைத்தனர்.

 

“கவி, உன்னத்தான்டீ கூப்புடுதுங்க, பொறுக்கி பசங்க என்ன வம்பு பண்ணப் போறாங்களோ!” கவியுடன் ஆண்களின் பக்கம் நடந்த ஒரு தோழி புலம்ப, மற்றவளோ “அப்பன் சொத்துல ஊதாரித்தனம் பண்ணுர இவனுங்க எதுக்கு படிக்க வாராங்களோ.” என்றாள்.

 

“ஏய், என்ன மூனு பேரா வாரிங்க. மைனா நீ மட்டும் வாமா. ஓடுங்கடீ நீங்க.” இளசுகள் இருவரையும் விரட்ட, “பயமா இருக்குடீ” கண்ணில் நீர் துளிர்த்துவிடுவது போல உணர்ந்தாள் கவி.

 

“அவனுங்களுக்கு வாய் மட்டும் தான், நீ தைரியமா பேசு. நாங்க இங்கதானே இருக்கோம். எதுநாலும் ஒரு குரல் கொடு, உடனே பிரிண்சிக்கு க்கால் பண்ணீடுறோம்” என்று அனுப்பும் போதும் “பயந்திடாதடீ” தேற்றியே அனுப்பிவிட்டனர் நண்பிகள்.

 

கவியோ, பயத்தில் உடல் வெடவெடக்க, வெளிரிய முகத்துடன் அவ் ஆண்கள் முன் சென்று நின்றாள். “மஞ்சள் மைனா! நீ வரியா என் குயினா?” என்றான் ஒருத்தன்.

 

“இவனும் எத்தன நாளுதான் கொக்கி போடுறது”, “ஒத்துக்கமா” இருவர் கூற, சற்று நல்லவன் போல இருந்தவனோ “அவங்க நம்ம சீனியர்டா” என்றான்.

 

“வயசுல என்னடா இருக்கு, சைச பாருடா” பகடியாக சொன்ன முதலாமவனின் வாயில் நெடிய கரமொன்று குத்தை விட்டது. 

 

நடுங்கியபடி சிரம் தாழ்த்தியிருந்த கவி, நீண்ட கரங்களையும் அதில் மின்னிய பிளாட்டினம் காப்பையும் நிமிர்ந்து பார்த்தவாரே அவ் வளர்ந்தவனின் முகத்தில் விழியை படர்தியவளின் கண்கள் கண்டது என்னவோ தன்னவனின் குழிவிழும் கன்னங்களைத்தான்.

 

‘இவனா?’ என நினைத்துக் கொண்டே பூமியில் தலை புதைத்தாள் கவி. 

 

“யார்டா நீ என்னயவே அடிக்குற?” அடிபட்டவன் பாய, “என் அப்பா யாருனு தெரியுமா?” என்றான் அடுத்தவன்.

 

“யாரு உன் கொப்பா?” எள்ளலாக கேட்டான் அவளவனாகிய இந்தர்.

 

“முன்னால் எம்.எல்.ஏ சிவதாண்டவம்” புகழாக கூறியவனின், கழுத்திலிருந்த அடையாள அட்டையை கழற்றியெடுத்த இந்தரோ, அதிலிருந்த ‘பீ. ஏ’ எனும் பிரிவை நோக்கிவிட்டு,

“உன் கொப்பன வந்து வாங்கிட்டு.., இல்ல கால்ல விழுந்து கெஞ்சிட்டு இத வாங்க சொல்லு” என்றான்.

 

“பாய்ஸ், இந்த லக்கேச் எல்லாத்தையும் பிரிண்சிபால் ரூம்க்கு பார்சல் பண்ணுங்க”, இந்தர் தனது மெய்க்காப்பாளரிடம் கூறவும் கவி சத்தமாக சிரித்து விட்டாள்.

 

‘ஐயோ’ மனதில் சொல்லிக் கொண்டவளை, இந்தர் பக்கவாடாக திரும்பிப்பார்க்கவும், அவளும் ஏதோ உந்துதலில் அவனைப் பார்த்தாள்.

 

“இவன் உன் ஜூனியர் பையன். இதுங்கலாம் உன்னக் கலாய்குது. நீ நடுங்கிட்டு நிக்குற. அவன் மூஞ்சில ஒன்னு விட வேண்டாம். இப்போவும் குறைஞ்சு போகல, லெட்ஸ் ஸ்லாப் ஹிம்” அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் பேசினான்.

 

“நானா?” வட்டமாக விழிவிரித்தவளிடம், “எஸ்” கட்டளையிட்டான் அவன்.

 

இத்தனை வருடங்களாக, மண்ணுக்கும் வலிக்குமாவென பாதம் கொண்டு நடப்பவள், இன்று அவன் கட்டளைக்கு பணிந்து, அவளை வம்பிழுத்தவன் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்திருந்தாள்.

 

“வெல், கிலாஸ்க்கு போ” கூறியவன், வேக நடையிட்டு கல்லூரியின் நிர்வாக கட்டிடம் பக்கமாக சென்றான்.

 

“கவி! நீயாடி இது, அந்த பொறுக்கி பையன அடிச்சிட்டபோ” தோழி அருகில் வந்து கூச்சலிடும் வரை, ‘நான் எப்படி அடிச்சேன்’ நடக்கத்தகாத அதிசயத்தில் திகைத்து நின்றவள் நடப்புக்குத் திரும்பினாள்.

 

“அதவிடு, யாருடி அந்த ஹேன்சம். சான்சே இல்ல செம்ம கியூட். இன்றோ கொடுடீ. இல்லனா இன்ஸ்டா ஐ.டீ கொடுடீ” என்றாள் மற்றையவள்.

 

“அது என் பாஸ்டீ, இ..இல்ல எங்க அப்பாட பாஸ். ஐ.டீ தெரியாது. கேட்டு பாக்குறேன்…இல்ல அப்பாட கேட்குறேன்.” சமாளித்தாள் கவி.

 

“எதுக்குடீ இங்க வந்தாரூ. அவர் தம்பி, தும்பி யாரும் இருக்காங்கலா இங்க?” தோண்டிக் கொண்டிருந்த தோழியிடம்,

 

“ச்சீ, அவருக்கு தம்பி, தங்கச்சின்லே பிடிக்காது. ஏதும் பிஸ்னஸ் டை அப் பண்ண வந்திருப்பார்” வெள்ளந்தியாக உண்மையான யூகத்ததை சென்னாள்.

 

“ஆமாடீ, எங்க மாமா, அதுதான் அந்த ஆபிஸ் ஸ்டாப் இருக்காரே, போன வாரம் ஏதோ கம்பனி இந்த காலேஜ் செயார்ஸ்ல இன்வஸ்ட் பண்ணப் போறதா பேசிக்கிட்டாரு” சரியான தகவலை வழங்கிய நண்பியுடன் சேர்ந்து வகுப்பறை நோக்கி நடந்த கவியும் மனதினில்,

 

‘பொண்டாட்டி படிக்குற காலேஜ்னு தெரிஞ்சுதான் பங்குகள வாங்கியிருப்பார் போல, ஒரு வேளை குழந்தைனு பிறந்தா புதுசா ஸ்கூலக் கூட கட்டுவாரோ’ தன் எண்ணம் செல்லும் திசையை அவள் அறியாள் போன்று நடந்தாள்.

 

“மிஸ்ஸஸ் தேவ் பிரசாத், பைல்லக் கொடுக்க முடியுமா? இல்லனா விபரீதம் ஆகிடும்” நாற்காளியில் குதித்துக் கொண்டிருந்தார் துப்பறிவாளர் மௌலிதரன்.

 

“உங்க புரோஃபிட் மார்ஜின் எவ்வளவு?” அமரா நேரிடையாக விடயத்திற்கு வந்தாள்.

 

“வாட்”, மௌலி அதிசயிக்கவும், தன் சுழல்நாட்காளியில் வாகாக சாய்ந்து அமர்ந்த அமராவோ,

“இங்க எல்லாத்துக்கும் விலையிருக்கு. அந்த விலை எங்கள மாதிரி வணிகர்களால தான் தீர்மானிக்கப்படுது. ரோட்ல வேர்கடலை விக்குறவனுக்கு கூட இலாப எல்லையிருக்கு. நீங்களும் சேவையாக இந்த டிடக்கடிவ் வொர்க்க செய்யலியே?” வினவியவள்,

 

“பிரசாத் கொடுத்தத விட மூனு மடங்கு பீஸ் நான் கொடுக்கிறேன்.” அவள் முடிக்குமுன்னே, “எனக்கு பணம் ஒன்னும் முக்கியமில்ல. என் கிளையன்ட்க்கு சரியான இன்ஃபோவ கொடுக்கனும்” மௌலி கூறினார்.

 

“ரைட், நானும் கரக்ட் இன்ஃபோ தான் கொடுக்க சொல்லுறேன். ரொம்ப நாளா ஃபிலாட் ஒன்னு வாங்க லோன் தேடுறிங்க போல. என் கம்பனில இருந்து இன்டறஸ்ட் அஹ் அரை மடங்கா குறைச்சி லோன் சேங்சன் பண்றேன். வசதி எப்படி” முடித்தாள்.

 

குறைவான பணம் என்றால் கூட மறுத்துறைக்கலாம், ஆனால் அவள் குறைக்கும் வட்டியின் அளவே கோடிகளைத் தாண்டும் என கணக்குகளை யோசித்த மௌலி குரலைச் செருமி தன் சம்மதத்தை அறிவித்தார்.

 

“ஐ நோவ். எவ்ரி திங் இஸ் ஃபேர் நாட் ஒன்லி லவ் அண்ட் வார். இட்ஸ் ஆல்சோ பிஸ்னஸ்.” ‘காதல், யுத்தத்தில் மட்டுமல்ல வியாபாரத்திலும் அனைத்து விதிவிலக்கும் விதியே’ என்றவள், “நீங்க தேவாக்கு கொடுக்க வேண்டிய ஃபைல், உங்களுக்கு மெயில்ல வந்து சேரும்.” முடித்துக் கொண்டாள்.

 

மௌலி வெளியேரிய பின்னர், கதிரையிலிருந்து எழுந்து தன் அலுவலக அறையின் கண்ணாடி சாளரம் அருகில் நின்றவள், மௌலி தயாரித்த மூலப்பிரதி கோவையை திறந்தாள்.

 

‘இந்தரும் அமராவும் காதலர்கள், ஐந்து வயதில் குழந்தையுள்ளது, குழந்தையின் பெயர் அமைரா’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தை வாசித்ததும், “கியா பாத்ஹே!” கலகலவென கெக்கலித்தாள் அவள்.

 

“சார், மேகவியை புக்ஸ், பேக் எடுத்துட்டு ஆபிஸ்க்கு வர சொன்னார்கள்.” அலுவலகப் பணியாளர் சொல்லிவிட்டு செல்லவும், கவியோ தன் புத்தக பையுடம் வகுப்பறையை விட்டுவெளியே வந்தாள்.

 

முகத்தில் அதிக வியர்வையை உணர்ந்தவள், கழிவறைக்குச் சென்று முகத்தில் நீரை அடித்து கழுவி விட்டு, அலுவலகம் நோக்கி நடந்தவளின் முகத்தில் பயரேகையே இல்லையென்பதை அவளே அறியாள். 

 

இதுவே வேறு தினமாக இருந்தாள் அவளை அதிபர் அழைத்தார் என்பதை கேட்ட அடுத்த நொடியே மயங்கி சரிந்திருப்பாள் ஆனால் இன்று? 

இந்திரனின் மேகவாகனம் அவன் கைகளினால் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதே உண்மை.

 

தரையைப் பார்த்து அடிகளை எண்ணிக் கொடிந்தவளின் தளிர் கரங்களை ரோமக்கைகள் அழுத்திப்பிடித்துக் கொண்டது.

 

கைகளைப் பார்த்த மாத்திரத்திலே அவள் மதித்துவிட்டாள், அவளை பிடித்தது அவள் எஜமானன் என்று. 

 

“வா” கைகளை விடாமல் அவனது காரினுள் இழுத்து அவன் அருகில் அவளை அமர்த்திக் கொண்டவன், தன் பணியாள் யாரையும் உடன்வரவேண்டாமென, மகிளூந்தை தனியாக கிளப்பினான்.

 

நான்கு சக்கர வண்டி நன்கு வேகமெடுத்து பயணித்து, தூசிகளை வாரியிறைத்து மரம் சூழ்ந்த சாலையில் நின்றது.

 

“அரை சைஸ்சு பால்டப்பி!, கண்டவன் எல்லாம் உன்னைப்பத்தி பேசுறான். நீ என்னடான்னா பூமி மாதா மாதிரி அமைதியா நிக்கர. சீனியர்னு கெத்து வேணாம். அதவிடு உன்னவிட சின்ன பையன் உன்னொடம்ப விமர்சிக்கிறான் பார்த்துட்டு நிர்ப்பியா?” குரலை உயர்தாமல் வந்தது வார்த்தை. 

 

“இனி என்ன பண்ணுர யாராச்சும் உன்ன வம்பிழுத்தா, பல்லத் தட்டி கைல கொடுக்க. பயமாம் பயம், நீ பயம்னு உன்ன சுத்திப் போட்டிருக்குற வேலியை விட்டு வெளிய வந்து பாரு. வானவில்ல ஏழு என்ன நூறு வர்ணமே கண்ணுக்குத் தெரியும்.” ஆலோசித்தவனிடம்,

 

“அப்போ, உங்களையும் அடிக்கணுமா?” பூடகமாக கேட்டவள், ஒருமாத இந்தர் மீதான சலனத்தைக் கைவிட்டிருந்தாள்.

 

‘கேட்டாலே ஒரு கேள்வி!’, இந்தரின் உள்ளே அவன் உள்ளம் பாடியது.

 

“ஏய்!” அதட்டுவது போல கூறியவன், “துப்பட்டாவ சரியா போட மாட்டியா? அது என்ன முகமுழுசும் மஞ்சள அப்பிக்கிட்டு, பொட்டை என்ன புருவத்துல வைச்சிருக்க” என்றவன், அவள் துப்பட்டாவை சரிசெய்து தோளில் போட்டுவிட்டு, முகத்தினைக் கழுவியதால் வலது புருவத்தில்  ஒட்டிக் கொண்ட பொட்டை எடுத்து சரியாக புருவமத்தியில் வைத்துவிட்டான்.

 

“இனி மஞ்சள மட்டும் பூசாத தேவதேவி!” கையை கூப்பி கும்பிடுவது போல பாவணை செய்தவன், வண்டியைக் கிளப்பினான்.

 

‘இந்த வளந்துகெட்டவன் நம்மகிட்டயா பேசினான். பேச மட்டுமா செஞ்சான், பொட்டு எல்லாம் வைச்சி விடுறான். இதுல இவளுங்க வேற ஹேன்ட்சமாம் ஹேன்ட்சம்’ மனது பொங்கினாலும் இமைகள் அவனை வட்டமிட்டது.

 

ஆறடிக்கும் அதிகமான உயரம், அவன் அமர்ந்திருக்கும் விதத்திலே அறியமுடிந்தது. வலது கன்னத்தில் மட்டும் விழும் குழி, தடினமான அதரம், கூர்நாசி, தேன்நிறத்தோல் என அவனழகை அவள் அகழ்ந்து கொண்டிருக்க அவர்கள் பயணம் தொடர்ந்தது.

 

நேசப் பெருவெளியில்;

மேகம் நான், 

வின்மீன்கள் நீ.

அகண்ட அண்டத்தில்

காதல் வேட்கையாக வானவில் வரைவோமா?

என் கண்ணா?

 

அவள் வீழ்த்தினாள்…..