யாழ்-1

IMG_20220303_084637-15254c35

வருணமொழியாள்(ழ்)

“மெல்ல யாழ் மீட்டுதே” மற்றும் “அற்றைத் திங்கள் மழைத்துளி” இவங்களோட வாரிசுகளது மக்களே கதை. அதோட தொடர்ச்சி இல்லை. பட் வாரிசுகளோட கதை.🤓

யாழ்-1

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு ப்பா” தந்தையின் முகத்தைப் பார்க்க இயலாமல், குற்ற உணர்வு தலைதூக்க, கண்களைத் தாழ்த்தியபடி, யாழ்மொழி படபடக்கும் இதயத்தைக் கட்டுக்குள் வைத்தபடிச் சொன்ன அடுத்தநொடி, அந்த மிகப்பெரிய வரவேற்பறை முழுதும் அதிரும் வகையில், மகளின் கன்னத்தில், ‘பளார்’ என்று அறைந்திருந்தாள் யாழ்மொழியின் அன்னை ராஷ்மிகா அஷ்வின்குமார்.

அன்னை அறைந்ததில் தலை திரும்ப நின்றிருந்தவள், அப்போதும் யாரையும் பார்க்கவில்லை. எப்படிப் பார்ப்பாள்?

தன் வயதுடைய பெண்களை வளர்க்கும் வீடுகளில் அவர்களை கண்டித்து அடக்கி ஒடுக்கி வைத்திருக்க, தன்னுடைய எந்த முடிவிலும் தலையிடாமல் தன்னை தன் வழியில் விட்டு, செல்லமாய் வளர்த்த தன் குடும்பத்தை எப்படி அவளால் பார்க்கமுடியும்.

அன்று காலையில் இருந்து கலகலப்பை தத்தெடுத்திருந்த அஷ்வினின் மாளிகை, இப்போது, ‘காய்ந்த இலை விழுந்தால் கூட சத்தம் கேட்கும்’ என்னும் அளவுக்கு மாறியிருந்தது, அந்த வீட்டின் இளவரசி சொன்ன செய்தியைக் கேட்டு.

யாழ்மொழி. இருபத்தைந்து நிரம்பிய அஷ்வின்குமார் மற்றும் ராஷ்மிகாவின் மூத்த புதல்வி. செல்ல மகள் என்று சொல்வதே மிகச்சரி. பிரிந்திருந்த அன்னை தந்தையை சிறிய வயதிலேயே அறியா வண்ணம் தன் மழலையாலும், பிடிவாதத்தாலும் ஒன்று சேர்த்தவள். ஏன் தாய்மாமன், அத்தையின் (அஷ்வினின் தங்கை) காதலைக் கூட தன் உளறு வாயால் ஒன்றுசேர்த்தி, அனைவரின் சந்தோஷங்களையும் மென்மையாய் மீட்டியவள்.

தந்தையின் சாயலையும், அன்னையின் வாயையும் கொண்டவளுக்கு, வளர வளர சேட்டை அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. பள்ளியில் சக மாணவனின் மண்டையை உடைத்து வீட்டிற்கு ஃபோன் வரும்வரை அவளின் அலும்பு சென்றிருக்கிறது. அதற்கென்று தான்தோன்றித்தனமாக திரியும் அளவு எதிலும் அவள் இல்லை. பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, படிப்பில் தன் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் தந்தையைப்போல் அறிவில் வாகையைச் சூடிய பின்னே ஓய்வது, பரதநாட்டியத்தில் எட்டு வயதிலேயே தனியாக அரங்கேற்றம் செய்து, பதினாறு வயதிலேயே தொடர்ச்சியாக பதினைந்து மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தவள்.

அன்னையின் பிடிவாதமும், தந்தையின் எதையும் செய்து முடிக்கும் வீம்பும் ஒருங்கே பெற்ற அவர்கள் வீட்டின் இளவரசி அவள்.

அவளின் சேட்டையை ஒரு அளவிற்கு தாக்குப் பிடித்த ராஷ்மிகா, பள்ளியில் இருந்து மகள் சகமாணவனின் மண்டையை உடைத்து விட்டாள் என்ற புகார் வந்தவுடன், அஷ்வினிடம், அன்று இரவு மகளை குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தாள்.

“இங்க பாருங்க. உங்க மக வரவர பண்றது எல்லாம் ஓவரா இருக்கு. என்னதான் சண்டைனாலும் மண்டையவா உடைக்கிறது. அங்க ஸ்கூல்ல சொல்லி இருக்கணும். இல்ல நம்மகிட்ட சொல்லி இருக்கணும். அதைவிட்டுட்டு இவளா எதாவதை பண்றா. ஏதாவது அந்தப் பையனுக்கு ஆகியிருந்தா?” ராஷ்மிகா தங்கள் அறைக்கு மகளை வரவைத்து அஷ்வினிடம் அனைத்தையும் மூச்சுவிடாமல் கொட்டிக் கொண்டிருக்க, யாழ்மொழியோ சுவற்றில் சாய்ந்து அன்னையை ஒரு சன்னச் சிரிப்புடன் தந்தையைப் போலவே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தந்தையின் கண்கள் தானே! அதே பார்வை இருக்கும் அல்லவா!

“நான் பேசறதைப் பாத்தா காமெடியா இருக்காடி. சிரிச்சுட்டு இருக்க?” ராஷ்மிகா மகளிடம் எகிற, மனைவியின் பேச்சையும், மகளின் அசையாத தோற்றத்தையும் கண்டு வாய்விட்டுச் சிரித்தான் அஷ்வின்.

“உங்களுக்கு என்ன சிரிப்பு இப்ப?” ராஷ்மிகா கணவனிடம் சண்டையிட,

“நம்ம பொண்ணுகூட வளந்து இப்ப என்ன மாதிரி, நீ கத்தறதை பாத்து ஸ்மைல் பண்ண ஆரம்பிச்சுட்டா. ஆனா, நீ இன்னும் அப்படியே இருக்க” என்றவன் மனைவியின் தோளில் கைபோட, ‘மகளின் முன்னால் என்ன இது?’ என்ற கண்டன பார்வையை கணவனிடம் வீசினாள் ராஷ்மிகா.

வழக்கம்போல, ‘நீ என் மனைவி. யார் இருந்தால் எனக்கென்ன?’ என்ற பாவனையில் தன்னுடன் மேலும் மனைவியை சேர்த்திக் கொண்டவன் மகளைப் பார்த்து, “யாழ்! அம்மா சொன்னதுக்கு உன்கிட்ட எக்ஸ்ப்ளநேஷன் இருக்கா?” என்று வினவ ஸ்வீட் சிக்ஸ்டீனில் இருந்தவளோ, “யெஸ் ப்பா” என்றாள்.

“என்ன?” அஷ்வின் கேட்டான். ஏனெனில், மகளின் சேட்டை அளவு அஷ்வினிற்கு நன்கு தெரியும். மகள் கை கலப்பு வரை சென்றிருக்கிறாள் என்றால் அது நிச்சயம் சிறிய விஷயமாக இருக்காது என்றும் அவன் உணர்ந்தான்.

அறையின் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்த யாழ், “த்ரூவ்” என்று சகோதரனை அழைக்க, பதினொரு வயதுடைய அவளின் தம்பி அக்காவின் குரலில் ஓடோடி வந்தான்.

“உள்ள வா” என்று அழைத்த மகளைப் பார்க்க ராஷ்மிகாவிற்கு கணவனின் மறுசாயலாக இருந்தது. அதே ஆளுமை தானே கணவனின் முகத்திலும். சற்று முன் திட்டிக் கொண்டிருந்ததை மறந்தவள் கணவனைப் பெருமையாகப் பார்க்க, அஷ்வினோ, “போதும் இரண்டு பேரும் வர்றாங்க. அப்புறமா சைட் அடி” என்று குறும்புடன் சொல்ல, யாரும் அறியா வண்ணம் கணவனின் கைகளில் கிள்ளி வைத்தாள்.

தம்பியுடன் உள்ளே நுழைந்த யாழ், “ப்பா உங்களுக்கே தெரியும். இப்ப எல்லாம் சென்னைல எவ்வளவு ட்ரக்ஸ்னு. எத்தனை பேரு கெட்டு போறாங்கனு தெரியும். எங்க க்ளாஸ்லையும் இதெல்லாம் நடந்திட்டு இருக்கு. பர்ஸ்ட் எனக்கு கன்பார்மா தெரியல. இன்னிக்கு அந்த பாக்கெட்டை த்ரூவ் கிட்ட தந்து யூஸ் பண்ண சொல்லி ரெஸ்ட் ரூம்ல மிரட்டி இருக்காங்க. அவன் முடியாதுனு சொல்லி இருக்கான்.

த்ரூவோட பிரண்ட் என்கிட்ட ஓடிவந்து சொன்னப்பதான், நான் நேரா அங்க பாய்ஸ் ரெஸ்ட் ரூமுக்கே போயிட்டேன். நான் போன நேரம் த்ரூவ் தலையை இரண்டு பேர் புடிச்சு அவனுக்கு ட்ரக்ஸை வைக்க பாத்தாங்க. சும்மாவிட சொல்றீங்களா என்னை. அப்படி எல்லாம் சும்மா என் தம்பியை என்னால விட்டுட்டு வரமுடியாது. அதுனாலதான் அங்க இருந்த பக்கெட்டை எடுத்து ஒருத்தன்மேல அடிச்சேன். அது அப்போ இரும்புன்னும், அதுனால அவன் மண்டை உடையும்னு எனக்குத் தோணல. எனக்கு என் தம்பி மட்டும் தான் தெரிஞ்சான். என் மேல இதுல தப்பில்லை” என்று கையைக் கட்டிக்கொண்டு நின்ற மகளைக் கண்ட ராஷ்மிகாவின் உதடுகள் தாமாக அதிர்ச்சியில் பிரிந்தது.

‘தான் இந்த வயதில் இதேபோல குறும்பாகவும், வாயாடியாகவும் இருந்த போதிலும், இந்த தைரியம் எல்லாம் தனக்கு இல்லையே’ என்று நினைத்தவள் இமைகொட்டாமல் மகளை நோக்கினாள்.

எங்கிருந்து இத்தனை தைரியம் வந்தது என்று அவளுக்குத் தெரியாதா?

கணவனைத் திரும்பிப் பார்க்க, அஷ்வினோ மகளை மெச்சுதலுடன் பார்த்திருந்தான். இதேபோலத் தானே அன்று தன்னையும், அவனின்(அஷ்வினின்) தங்கையையும் வைத்து ஒருவன் விளையாடப் பார்த்தபோது அவனின் உயிரையே எடுத்திருந்தான்.

ராஷ்மிகாவிற்கு பதினொரு வருடங்கள் கடந்தும் அதை நினைத்த மாத்திரத்தில், உடல் ரோமங்கள் சிலிர்த்து எழுந்து நின்றது.

“ராஷ்மி, நம்ம யாழ் எது பண்ணாலும் ஒரு ரீசன் இருக்கும். ஸோ நீ எதுக்கும் திட்டாத. பர்ஸ்ட் பசங்ககிட்ட என்னனு கேளு” என்று சொல்ல அவளோ சிறியபெண் போல தலையை ஆட்ட, அஷ்வினும் அவனின் இருசெல்வங்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அதன்பிறகு ராஷ்மிகாவிற்கு மகள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருந்தது. மகள் எப்போதும் தவறு செய்யமாட்டாள் என்ற நம்பிக்கை அது. அந்நம்பிக்கையில் தான் அவளை வெளிநாட்டிற்கு மேற்படிப்பு அவர்கள் படிக்க அனுப்பிவைத்தது. திரும்பி வந்த மகள் வழக்கம்போல இருந்தாலும், ராஷ்மிகாவிற்கு மகளின் திருமணத்தை விரைவில் முடித்து வைக்கவேண்டும் என்ற எண்ணம்.

அதை மகளிடம் ஒரு நாள் பேச்சு வாக்கில் ராஷ்மிகா சொல்ல, “நோஓஓஓ” என்று இழுத்துக் கூறியவள், ஆபிஸ் அறைக்குள் இருந்த தந்தையின் கழுத்தை ஓடிச்சென்று கட்டிக்கொள்ள ராஷ்மிகா விடுவாளா?

மகளின் பின்னோடேயே ஆபிஸ் அறைக்குள் ராஷ்மிகா நுழைய, யாழ் தந்தையின் காதில் அன்னையை முறைத்தபடி ஏதோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள். மகள் சொல்வதை செவியில் கேட்டுக்கொண்டிருந்த போதிலும், அஷ்வினின் விழிகள் மனைவியை கேலியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

“என்ன சொல்றா. உங்க பொண்ணு” என்றாள் ராஷ்மிகா தலையை நொடித்துக்கொண்டு. இன்னும் அவளிற்கு கணவனின் மேலுள்ள உரிமையை யாரிடமும் விட்டுக்கொடுக்க முடியவில்லை. மகளின் மேலேயே சிறிய பொறாமை. அது எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

“யாழுக்கு இப்பதானே இருபத்திமூணு ஸ்டார்ட் ஆகியிருக்கு..” அஷ்வின் இழுக்க, ராஷ்மிகா பார்த்த பார்வையில் அவன் எதுவும் பேசவில்லை.

மனைவி சொல்வதும் சரியோ என்று ஒரு ஓரம் அஷ்வினிற்கு இருக்கத் தான் செய்தது. இருந்தாலும் மகளை பிசினஸிற்கு இழுக்க நினைத்தது மற்றொரு மனம்.

இருந்தும் மனைவிக்காக, “அம்மா சொல்றதும் ஒரு வகைல கரெக்ட் யாழ்மா. உனக்கு ஏன் இப்ப வேணாம்னு ரீசன் சொல்லு” அஷ்வின் மகளிடம் வினவ,

“அப்பா எனக்கு உங்ககூட பிசினஸ் வரணும்னு இருக்கு. ப்ளீஸ் ப்பா. ஒரு டூ இயர்ஸ்” யாழ் தந்தையின் கன்னத்தைப் பற்றிக் கொஞ்சலும் கெஞ்சலுமாகக் கேட்க, அஷ்வினோ மனைவியிடம் திரும்பி மகளுக்காக, ‘ப்ளீஸ்’ என்பது போலப் பார்த்தான்.

கணவனின் பார்வையில் மேலே எதுவும் பேச முடியாமல் திணறியவள், “சரி. ஆனா, இவளோட இருபந்தைஞ்சு வயசு வந்தோன நாம மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கணும். அப்ப இவ எதுவும் சொல்லக் கூடாது” ராஷ்மிகா கறாராக சொல்ல, அப்பனும் மகளும் ஒரு சேர மேலும் கீழும் இரண்டு முறை அசைக்க, “ம்மா” என்றபடி உள்ளே வந்தான் த்ரூவ்.

“வா த்ரூவ். என் பையனா இருந்தா நான் சொல்றதை தட்டாம கேட்பான்” மகனின் தோளில் சாய்ந்து கொண்டு ராஷ்மிகா சொல்ல,

“ஆமாமா.. நீங்க இப்ப கல்யாணத்துக்கு கேட்டாலும் ரெடியா இருப்பான்” வாயில் கைவைத்து சிரித்தபடி யாழ் சொல்ல, ‘அடிப்பாவிஇஇ!’ என்று உள்ளுக்குள் அக்காவைத் திட்டியவன் அன்னையைப் பார்த்து நல்ல பிள்ளையாக சிரித்தபடி, “நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன் ம்மா” என்றிட, மகனை முறைத்த ராஷ்மிகா, “என்ன நடந்தாலும் கடைசில மூணுபேரும் ஒண்ணு சேர்ந்திடுவீங்க” என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றுவிட, தந்தையாக மகனையும் மகளையும் எதிரில் அமர சொன்னான் அஷ்வின்.

இருவரையும் ஒரு சேர பார்த்தவன், “யாழ், த்ரூவ். உங்க இரண்டு பேருக்கும் இப்ப வரைக்கும் நல்ல அப்பாவா இருக்கேன்னு நம்பறேன். உங்களுக்கு சொல்லணும்னு அவசியம் இல்ல. எங்க மேரேஜ் எப்படி நடந்துச்சுனு உங்க இரண்டு பேருக்கும் தெரியும். அப்ப நான் அதைப் பத்தி அவ்வளவா கேர் பண்ணல. ஆனா, இப்ப ஒரு அப்பாவா எனக்கு கொஞ்சம் உங்க தாத்தா(ராஷ்மிகாவின் தந்தை) நிலை பத்தி புரியுது. அப்பவே புரிஞ்சுது. ஆனா, இப்ப இப்ப நீங்க வளர வளர அதோட டெப்த் புரியுது.

நான் உங்க இரண்டு பேருக்கும் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன். நானோ உங்க அம்மாவோ லவ்வுக்கு எதிரி இல்ல. ஆனா, நாங்க வேணாம்னு சொல்ற அளவுக்கு நீங்க சூஸ் பண்ற பாட்னர் இருக்கக் கூடாது. வசதியை நான் எதிர்பார்க்க மாட்டேன். ஆனா, குடும்பம் ரொம்ப முக்கியம். உங்க பாட்னர் கேரக்டரும் ரொம்ப முக்கியம்” என்றவன், “யாராவது லவ் பண்றீங்களா?” என்று இருவரிடமும் நண்பனாய் மாறி சகஜமாய்க் கேள்வியைக் கேட்க, இருவருமே தந்தையின் பேச்சில் முத்துப் பற்கள் தெரிய அழகாய் சிரித்தனர்.

“அப்பா இவனுக்கு காலேஜ்ல இருக்க க்ரேஸ் தெரியுமா. இவன் நாளைக்கு யூ.எஸ் போறது தெரிஞ்சு ஒரு பொண்ணு அழுகறா.. இன்னொருத்தி மிஸ் யூ சொல்றா.. அப்பபபாஆஆ தாங்கல இவனோட” என்று தம்பியை வம்பிழுக்க, அக்காவின் காலை டேபிளுக்கு அடியில் மிதித்தவன், “ப்பா.. பட் ஐயம் ஸ்ட்ராங். ஐம் ஜஸ்ட் பிரண்ட்லி” என்று கண்களைச் சிமிட்ட,

“ஐ நோ பிகாஸ் யூ ஆர் மை சன்”(எனக்குத் தெரியும். ஏன்னா நீ என்னுடைய மகன்) என்று உதட்டை பிரிக்காமல் கர்வமாக புன்னகைத்த அஷ்வின், “ஓகே நான் உங்க அம்மாவைப் பார்க்க போறேன். இல்ல கோவிச்சுக்குவா” என்று கண்களைச் சிமிட்டியபடி வெளியே செல்ல, இருவரின் காதலில் தந்தை செல்வதையே மெய் மறந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தனர் அஷ்வினின் இருமக்கள்.

யாழ் கேட்டது போலவே அவளை அவள் போக்கில் அவர்கள் விட்டிருக்க, தந்தையுடன் அவள் பிசினஸில் இணைந்துவிட, த்ரூவ் படிப்பிற்காக இளங்கலை முடித்தவுடன் யூஎஸ் சென்றான். அஷ்வினிற்கு சமமாய் தொழிலில் நின்றவளைக் கண்டு வியக்காதவர் எவரும் இல்லை. அவளின் அழகில் அவளை திரும்பிப் பார்க்காமல் சென்றவரும் இதுவரை இருந்ததில்லை.

அழகை வர்ணிக்கவே அவளை ஆண்டவன் படைத்தான்!

அஜந்தா குகைகளில் இருந்த சிற்பங்களே மயங்கும் பொன் சிலையாய் இருந்தளுக்கு, தொழில் வட்டங்களுக்குள் தனியாக ஒரு போட்டி தொடங்கியது. முதலில் அஷ்வினிற்கு மருமகனாக யார் என்ற போட்டி கடந்து, யாழ்மொழியின் கணவனாக யார் என்ற போட்டி தொடங்கியது.

ஒவ்வொரு பிசினஸ் மீட்டிலும் மகளிடம் வந்து சிலர் பேசுவதையும், மகள் அதற்கு பதில் அளிப்பதுபோல அவர்களை வெகு கவனமாக கடந்து வருவதையும் கண்ட அஷ்வினிற்கு மெல்லிய புன்னகை முகத்தில் அரும்பும்.

சிலர் நேரடியாகவே அஷ்வினிடம் கேட்டது உண்டு, ‘உன் மகளை என் மகனுக்குத் தருவாயா?’ என்று. அஷ்வினும், ‘நௌ ஷீ இஸ் ஆம்பீஷியஸ். ஸோ நாட் நௌ’ என்று கடந்து கொண்டிருந்தான்.

அதில் ஒரு தொழிலதிபருடைய மகன் யாழ்மொழியின் மீது பைத்தியமாகத் திரிந்து கொண்டிருந்தான். ஒழுத்திலும் சரி, தொழிலிலும் சரி அஷ்வினிற்கு நிகரான தகுதி உடையவன் அவன்.
டெல்லியில் நடைபெற்ற பிசினஸ் மீட்டில் யாழ்மொழியைக் கண்டவன் தந்தையிடம் அடுத்த நாளே இது பற்றி பேச, தன் உதவியாளன் மூலம் தகவலை அறிந்தவர், “அந்த பொண்ணுக்கு இருபத்தைஞ்சு வந்தா தான் மாப்பிள்ளை பாக்க ஸ்டார்ட் பண்ற ஐடியால இருக்காங்க. ஸோ, டோன்ட் ரஷ் ஷ்யாம். நேரம் காலம் வரும்போது நானே உன்னோட ஆசையை நிறைவேத்தி வைக்கறேன்” என்று மகனிற்கு வாக்களித்து இருந்தார்.

அதற்குள் யாழ்மொழியின் இருபத்தைந்தாவது பிறந்தநாளும் வெகு விமரிசையாக நடந்து முடிய, அடுத்த நாளே ஷ்யாமின் தந்தை அஷ்வினை அலுவலகத்திலேயே நேரில் சந்தித்துப் பேசினார்.

ஷ்யாமின் குடும்பத்தைப் பற்றி அஷ்வினிற்கு நன்கு தெரியும். மிகவும் பாரம்பரியமான குடும்பம். நான்கு தலைமுறைகளாக தொழிலை நடத்திக் கொண்டிருப்பவர்கள் வீழ்ந்து எவரும் கண்டதில்லை. மகளிற்கு நல்ல இடமாக வர, அஷ்வினிற்கு ஷ்யாமின் குணத்திலும் மனதிற்குள் திருப்தியே.

“என் டாட்டர் கிட்ட பேசிட்டு கண்டிப்பா உங்களுக்கு நல்ல பதிலா சொல்றேன்” என்று சிறு கீற்றாய் அஷ்வின் புன்னகைக்க, சிறிது நேரம் தொழிலை பற்றி பேசிய ஷ்யாமின் தந்தை கிளம்பினார்.

அன்று மாலை வீட்டிற்கு கிளம்பிய அஷ்வின், மகள் அன்று உடல் உபாதை காரணம் வராததால் மனைவியிடம் மகளைப் பற்றி விசாரித்துக் கொண்டே ஷ்யாமின் தந்தை வந்து சென்ற விடயத்தைக் கூற, “நீங்க என்ன சொன்னீங்க?” ராஷ்மிகா கேட்க,

“கண்டிப்பா நல்ல பதிலா சொல்றேன்னு சொல்லி இருக்கேன்” என்றான் தனது டையை லூஸ் செய்துகொண்டு புன்னகைத்தபடி. மகளிடம் இப்போது கேட்க வேண்டாம் என்று எண்ணிய அஷ்வின், “ராஷ்மி, நாளைக்கு கேட்டுக்கலாம். இப்ப சொல்ல வேணாம்” என்றிட தலையை ஆட்டிவிட்டு ராஷ்மிகா சென்றுவிட்டாள்.

அடுத்த நாள் காலை விடிய, ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்து வந்த யாழ்மொழியை, “யாழ் இன்னிக்கு மாமா அத்தை எல்லாரும் வர்றாங்க.. சீக்கிரம் குளிச்சிட்டு வா” என்று விரட்ட,

“ஐ!!” என்று குதூகலித்தவள், சீக்கரமே சென்று குளித்து முடித்து, க்ரிம்சன் சிவப்பில் சல்வாரை அணிந்து அதற்கு கருப்பும் பாட்டமும், கருப்பும் தங்க நிறமும் கலந்த துப்பட்டாவை கலந்து அணிந்து, பிரெஞ்சு பிரெய்ட் இட்டு அழகாக பிண்ணி முடித்து, ஒரு சிவப்பு நிற பாண்டை போட்டவள், மிதமான ஒப்பனைகளோடு, நெற்றியின் நடுவே சிவப்பு நிற கல் பொட்டை வைத்துத் கொண்டு பாந்தமாய் கீழே வர, ஹர்ஷா வரவும் சரியாக இருந்தது.

ஹர்ஷா. அதாவது ராஷ்மிகாவின் பெரியப்பா மகன். ராஷ்மிகாவின் தம்பி. யாழ்மொழியின் தாய்மாமன்.

“வாங்க மாம்ஸ்..” என்று மாமனை வரவேற்றவள், பின்னால் வந்த அத்தை, அவர்களுடைய இரட்டையர்கள், ‘வைபவ்’, ‘தியாஸ்ரீ’ இருவரையும் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.

“மாமன் மகளே. வர வர அழகு எக்ஸஸ் ஆகிட்டே போகுது” என்றவன் அன்னையிடம் திரும்பி, “பேசாம யாழுக்கு மூன்னாடி என்னை பெத்திருக்கலாம்ல மம்மி” என்று கேட்க, வைபவின் தலையில் கொட்டிய யாழ்மொழி, “வாடா” என்று அவனை அழைத்துக் கொண்டு தியாவுடன் உள்ளே சென்றாள்.

ஹர்ஷாவின் பெற்றோர், ராஷ்மிகாவின் அன்னை, அஷ்வினின் பெற்றோர் எல்லாம் இருபது நாட்களுக்கு வடக்கில் கோயில் டூர் சென்றிருந்தனர். அதனால் இவர்கள் மற்றும் சில வேலையாட்கள் தவிர வேறு எவரும் வீட்டில் இல்லை.

அன்று மதியம்வரை ஒன்றாக இருந்து, உணவருந்தி முடித்தவர்கள், சிறிதுநேரம் பேச ஒன்றாய் வரவேற்பறையில் உட்கார்ந்த சமயம், அஷ்வின் மகளிடம் திருமண விஷயத்தைப் பேசத் தொடங்கினான்.

“ஷ்யாம் ரொம்ப நல்ல பையன் யாழ்மா. உன்னை நல்லா பாத்துப்பாரு. அவங்க பேமிலி பத்தி நீயே விசாரிச்சா புரிஞ்சுப்ப” என்று அஷ்வின் சொல்ல, அதுவரை நன்றாக அனைவருடனும் பேசிக் கொண்டிருந்த யாழ்மொழி மௌனத்தைத் தத்தெடுத்தாள்.

கணவன் பேசியதிற்கு ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த மகளைக் கண்ட ராஷ்மிகா, “யாழ், அப்பா உன்கிட்ட தான் பேசறாங்க” என்று சொல்ல, தந்தையை நிமிர்ந்து பார்த்த யாழ்மொழிக்கு தந்தையின் கூர் பார்வையில், பெற்றோர் அளித்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திவிட்ட குற்ற உணர்விலும், தந்தையின் இன்னொரு முகத்தை நேராய் பார்த்ததில்லை என்றாலும், பலர் கூறி செவி வழியாக அறிந்திருந்ததில் பயத்தில் தண்டுவடமும் நடுங்க, அனைத்தையும் உள்ளுக்குள் மறைத்து வைத்தவள் ஒரு முடிவை எடுத்தவளாக உண்மையை உடைத்தெறிய, யாழ்மொழி கூறிய செய்தியில் அனைவரின் இதயமும் அணு உலைக்குள் போட்டதைப் போல வெடித்துச் சுக்குநூறாக சிதறியது.

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு ப்பா” என்று யாழ்மொழி சொல்லியபோதும் அஷ்வின் அமர்ந்த நிலையில் இருந்து எழவில்லை. மனைவி அடித்தபோதும் அவன் மகளையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, வேறெதுவும் பேசவில்லை.

எப்போதும் அன்னை தன்னைத் திட்டினாலே தடுக்கும் தந்தையைக் கண்டறிந்த யாழ்மொழிக்கு, அன்னை தன்னை அறைந்தும் தந்தை எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதிலேயே புரிந்து போனது, தந்தைக்கு தன் மேல் உண்டான கோபம் பற்றி.

ராஷ்மிகாவின் கைத்தடங்கள் யாழ்மொழியின் வெண் கன்னங்களில் பதிந்து போய் சிறிது தடித்து சிவந்திருக்க, “இதுக்குத் தான் அன்னிக்கே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொன்னேன். கேட்டீங்களா?” ராஷ்மிகா கோபத்தில் கணவனிடம் சீற,

தந்தையை அன்னை திட்டுவதில் கோபம் கொண்ட யாழ்மொழி, “எனக்கு அதுக்கு முன்னாடியே கல்யாணம் ஆகிடுச்சு” என்று யாழ்மொழியும் கத்த, ராஷ்மிகா மீண்டும் மகளை அறைந்திருந்தாள்.

மகளின் கரத்தைப் பற்றி அருகில் இழுத்தவள், “உனக்கு அந்த அளவுக்கு தைரியம் யாருடி குடுத்தா.. பாருடி உங்கப்பாவ.. எவ்வளவு ப்ரீடம் தந்திருப்பாரு.. அவரை ஒரு நிமிஷம் நினைச்சிருந்தா இப்படி பண்ணி இருப்பியா நீ” என்று கரகரத்த குரலோடு மகளிடம் கேட்க, அன்னையின் கலங்கிய குரலில் யாழ்மொழி மனமுடைந்து போனாள்.

அப்போதும் அவள் கண்களை நிமிர்த்தி யாரையும் பார்க்கவில்லை. ஹர்ஷாவும், தர்ஷினியும் அஷ்வினின் முகத்தையே பார்த்திருக்க அஷ்வின் மகளைத் தவிர யாரையும் பார்க்கவில்லை. அவனின் மனம் ஒன்று உள்ளுக்குள் பிரதிபலித்துக் கொண்டிருக்க, அவனின் முகம் அத்தனை இறுக்கமாய் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

அவன் என்ன மாதிரி உணர்கிறான் என்பதை யாராலும், இப்போது மட்டுமில்லை எப்போதும் கண்டுகொள்ள முடியாதே!

“சொல்லு யாழ்..” ராஷ்மிகா கத்த, “ராஷ்மி” என்ற அஷ்வின் தன் முழு உயரத்திற்கும் எழுந்து நிற்க, கண்களை நிமிர்த்தவில்லை என்றாலும், தந்தை எழுவதை உணர்ந்தவளுக்கு மூச்சை விடக்கூட சிரமமாக இருந்தது.

மகளின் முகபாவங்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அஷ்வின், “யாழ்மொழி” என்று மகளின் முழுப்பெயரை அழுத்தமாக அதேநேரம் அடிக்குரலில் கோபத்தோடு அழைக்க, தந்தையின் அழைப்பில் யாழ்மொழியின் உடல் தூக்கிவாரிப் போட, அதிர்வுடன் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள்.

தந்தை தன்னை முழுப்பெயரை சொல்லி அழைத்ததாய் அவளுக்கு நினைவில் சுத்தமாக இல்லை. அதுவும் தந்தையின் அழைப்பே அவளுக்கு ஒதுக்கத்தைப் பறைசாற்ற கண்கள் கரித்துக்கொண்டு வரப்பார்த்தது.

முயன்று தன்னைக் கட்டுப்படுத்தியவள் தந்தையைப் பார்க்க, “கம் வித் மீ” என்றுவிட்டு அஷ்வின் முன்னே செல்ல, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தந்தையின் பின்னே சென்றாள் அஷ்வினின் செல்ல மகள்.

முன்னே சென்ற அஷ்வின் தனது ஆடி க்யூ செவனில் ஏறிக்கொள்ள, படபடப்புடன் தந்தையுடன் யாழ்மொழி ஏறி அமர, அஷ்வினின் கார் உறுமலுடன் அவர்கள் வீட்டின் முப்பதடி வாயிலைத் தாண்டிக் கொண்டு பறந்தது.

இருவரும் சென்றபின் அனைவரும் ஓய்ந்து போய் அமர்ந்துவிட, ராஷ்மிகாவின் இதயம் பன்மடங்காகத் துடித்து கொண்டிருந்தது. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வந்த கணவனையும், மகளையும் ராஷ்மிகா தவிப்புடன் பார்க்க, “ராஷ்மி பேக் யுவர் டூ செட்ஸ் ஆப் ட்ரெஸஸ்..” என்றவன் மகளிடம் திரும்பி, “கிளம்புங்க மிஸஸ்.யாழ்மொழி வித்யுத் வருணன்” என்று மகளை பார்வையாலும், வார்த்தையாலுமே தள்ளி வைக்க, தந்தைக்கு தன் மேல் உண்டான வெறுப்பில் உள்ளுக்குள் மறுகி வேதனையில் சுருண்டவள் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றாள்.

***

“டாடிஈஈ” என்று ஓடிவந்த மகளை கையில் அள்ளி எடுத்துக்கொண்ட வித்யுத் வருணன், “வலிக்குதாடா மா” என்று மகளின் காதை லேசாகத் தொட்டுப் பார்த்தான்.

சில மணி நேரங்களுக்கு முன் காது குத்தியிருக்க, மகள் வீல்லென்று கத்தியது இன்னமும் அவன் மனதை அசைத்தது.

தலையை, ‘இல்லை’ என்பதுபோல அசைத்த மூன்று வயது குட்டி, “வலிக்கல டாடி.. அம்மா உங்களை கூப்பிட்டாங்க” என்று சொல்ல, “நான் கொஞ்ச நேரம் நின்னா பொறுக்காத இவளுக்கு” நினைத்தவன், “சரி வாங்க போலாம்” என்று தோட்டத்தில் இருந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.