யாழ்-12

IMG-20210214-WA0021-1633c4c0

யாழ்-12

“வா போலாம்” – என்று அஸ்வின் ராஷ்மிகாவின் கையைப் பிடிக்க  ராஷ்மிகாவோ முரண்டு பிடித்தாள் தன் கையை அவனிடம் இருந்து இழுக்க
முயற்சி செய்து. அவன் தாலி
கட்டியதையே அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

“அஸ்வின்…” என்றபடி தேவா வர… “அண்ணா நீங்களும் இவன் கூட கூட்டா” என்று கேட்ட ராஷ்மிகாவிற்கு
உள்ளுக்குள் வலித்தது.

“இல்லமா.. ” என்று தேவா ஏதோ சொல்ல வர அஸ்வின் அவனைப் பேச விடாமல்
இடையில் புகுந்தான்.

“எல்லாரும் வந்துட்டாங்களா?” என்று தேவாவைப் பார்த்துக் கேட்க.. “வந்துட்டாங்க அஸ்வின்” என்றான்
தேவாவோ.

“நான் சொல்ற மாதிரி வெளில வந்து பேசு..” – என்று அஸ்வின்  ராஷ்மிகாவிடம் சொல்ல..

“முடியாது” – என்றாள் ராஷ்மிகா.

“உன் ப்ரண்ட்ஸ் அங்க பாரு என் கார்ட்ஸ்
கூட்டிட்டு போறாங்க” – என்று மிரட்ட ராஷ்மிகாவிற்கோ மிகவும் வேதனையாக
இருந்தது.

“என்னை ஏன்டா இப்படி டார்ச்சர் பண்ற..” என்று ராஷ்மிகா கீறிச்சட்டாள்.

“இன்னமும் டார்ச்சர் பண்ணுவேன்” என்றவன் “நான் சொல்றதை கேட்டுட்டு
என் கூட வா” என்று சொல்ல.. அவள் மௌனமாய் நிற்க.. அதையே சம்மதமாய் ஏற்றுக் கொண்டான் அஸ்வின் குமார்.

வெளியே ப்ரெஸ் மீடியாஸ் என
அனைத்தும் அஸ்வினிற்காகக்
காத்திருந்தது. வெளியே ராஷ்மிகாவோடு வந்தவனிடம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
கேள்வியை வீசினர். “சார் நீங்க இரண்டு பேரும் சிக்ஸ் இயர்ஸா லவ் பண்றிங்களாமே?”.. “இப்ப வீட்டுல ஓகே சொல்லலைனு தான் இப்படி வந்து கல்யாணம் பண்ணிட்டிங்களா?”.. “அந்த
ஃபோட்டோ லீக் ஆனதுனால தான் இவ்வளவு சீக்கிரம் உங்க காதல் வெளில வந்துச்சா?”.. “இந்த ஃபோட்டோ லீக்
ஆனதுக்குக் காரணம்.. யாரா இருக்கும்னு நினைக்கறிங்க?” என்று கேள்விகள் எல்லாப் பக்கங்களில் இருந்து வர..

“வெயிட் வெயிட்..” என்று எல்லோரையும் ஆஃப் செய்த அஸ்வின்..

“எஸ் இது லவ் மேரேஜ்.. பட் நீங்க கேட்ட மாதிரி சிக்ஸ் இயர்ஸ் இல்லை.. லாஸ்ட் ஒன் இயரா தான் நாங்க ரிளேஷன்ஷிப்ல இருக்கோம்.. இப்ப கல்யாணம் பண்ணிக்கத் தோணுச்சு பண்ணிட்டோம்” என்று சிம்பிளாக பதில் சொல்ல..

“மேம்.. ஸார் பர்ஸ்ட் லவ்வ சொன்னார இல்ல நீங்களா?” என்று ஒரு ரிப்போர்ட்டர்
கேட்க..

“ஹே.. ஆன்சர் பண்ணு” என்று தைரியம் மூட்டுவது போல அஸ்வின் ராஷ்மிகாவைத் தோளோடு அணைக்க..

“வீ லவ்ட் ஈச் அதர்” – என்று சின்னக் குரலில் ராஷ்மிகா சொல்ல..

“ஓகே காய்ஸ்.. தேங்க்ஸ் ஃபார் கம்மிங்” என்று அஸ்வின் தோளோடு சேர்த்து அணைத்து கூட்டி வந்து காரில் ஏற்றி
மறுபக்கம் சென்று அமர்ந்தான்.

“என் ப்ரண்ட்ஸ் எங்க?” – என்று ராஷ்மிகா கேட்க.. பதில் பேசாமல் காரை எடுத்தான்
அஸ்வின் குமார்.

“என் ப்ரண்ட்ஸ் எங்க.. வாயத் தொறந்து சொல்லேன்” – என்று எரிச்சலாகப் பேச.. அஸ்வினோ அவளை ஒரு பார்வைப்
பார்த்தவன் “இந்த மாதிரிலாம் என்கிட்ட பேசக் கூடாது.. பொறுமையா மெதுவா.. சத்தம் போடாம கேளு சொல்றேன்” என்று நக்கல் பேச.. அவளுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

“என் ப்ரண்ட்ஸ்..” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு ராஷ்மிகா ஆரம்பிக்க..

“இன்னும் கம்மியா” என்றான் அஸ்வின் அவன் காதை அவள் குரல் சத்தமாக இருப்பது போலத் தேய்த்தபடி. ராஷ்மிகா வந்த ஆத்திரத்தையும்
அழுகையையும் உள்ளுக்குள்
அடக்கினாள்.

“என் ப்ரண்ட்ஸ் எங்க?” என்று ராஷ்மிகா தணிந்த குரலில் கேட்க.. அது அஸ்வினிற்குத் திருப்தியாக இருந்தது.

“அவங்க எல்லாம் பத்திரமா அவங்க வீட்டுக்கு அனுப்சு வச்சாச்சு” என்று அஸ்வின் சொல்ல..

“என்ன எங்கடா இப்ப கூட்டிட்டுப் போற?” என்று சற்று பயந்ததை உள்ளே வைத்துக்
கேட்டாலும் அஸ்வின் கண்டு கொண்டான் ராஷ்மிகாவை.

“ஏன் கூட்டிட்டு போய் ஏதாவது
பண்ணிடுவேன்னு பயமோ” என்று நக்கல் தெறிக்க அவன் பேச.. ராஷ்மிகா மலை ஏறினாள் மீண்டும். பொதுவாக
அஸ்வினும் இம்மாதிரி குணம்
கொண்டவன் கிடையாது.. ஆனால் இந்ந சண்டி ராணியை கண்டாலே அவனிற்கு இந்த மாதிரி தானாக வந்து விடுகிறது.

“நீ ஏதாவது பண்ற வரைக்கும் உன்ன சும்மா விடுவேனா.. உன்ன கொன்னுட்டு தான்டா நான் செத்தாக் கூட சாவேன்”
என்று ஆவேத்தில் பேசினாள்.

“அமாமா.. எது தாலி கட்டுனப்ப நின்னியே நல்லா முழிச்சிட்டு அப்படியா?” என்று நக்கல் தெறிக்கக் கேட்க..

“இதை கழட்டி வீசிட்டு போமாட்டன்னு  நினைக்கறியா?” என்று ராஷ்மிகா தாலியைத் தூக்கிக் காட்டிக் கேட்ட காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்
அஸ்வின். ராஷ்மிகாவிற்கு அப்படி சொல்லும் போதே உள்ளே ஏதோ அதிர்வதை உணர்ந்தாள். இருந்தாலும்
அவனிடம் அடங்கிப் போக
மனமில்லாமலே அப்படி வாயை விட்டாள்.

காரை நிறுத்தியவன் நிதானமாய் அவளைப் பார்த்து “நீ கண்ண மூடுனப்ப கட்டுன தாலின்னு ஓவரா பேசாதே..
அத்தனை பேர் முன்னாடி தனி ஆளா நின்னு தாலிய கட்டி கூட்டிட்டு வந்திருக்கேன். தேவாவும் ப்ரஸ் எல்லாருக்கும் தகவல் சொல்லி லேட்டா தான் வந்தான். என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு.. நான் நினைச்சிருந்தா என்ன வேணாலும்  பண்ணிருக்கலாம்.. ஆனா..” என்றவன் அதற்கு மேல் பேச
வந்ததை வாய் உள்ளேயே முழுங்கினான். அவ்வளவு எளிதில் மனதில் இருப்பதை
சொல்பவன் அல்ல அஸ்வின் குமார். ராஷ்மிகாவை ஒரு பார்வை பார்த்தவன் அவளின் மேல் உள்ள கோபத்தில் காரை
வெடுக்கென்று எடுத்தான்.

வீட்டிற்கு வந்து அஸ்வின் இறங்கி கார் சாவியை அங்கு இருந்த மற்ற ஒரு கார்
டிரைவரிடம் தர.. ராஷ்மிகாவோ பேசாமல் கார் சீட்டிலேயே அமர்ந்திருந்தாள். அவளது கையைப் பற்றி “இறங்கு”
என்றான் சற்றுத் தன்மையாக. சற்று முன் அவன் பேசிய விதமும் இப்போது பேசுவதும் இப்போது அவளிற்கு
முரண்டியது.. இவன் குணம் தான் என்ன என்று.

காரை விட்டு இறங்கியவள் அப்போது தான் சுற்றுப் புறத்தை கவனித்தாள். ஏதோ சினிமாவில் வர மாதிரி பங்களா மற்றும் முன் இருந்த அமைப்புகளைக் கண்டவளுக்கு.. அவன் இவ்வளவு செல்வம் படைத்தவனா என்று மனதில்
கேள்வி எழுந்தது. கூடவே நெருடலும். மற்ற பெண்ணாக இருந்திருந்தால் மனம் சாய ஆரம்பித்திருப்பாள்.. ஆனால்
அவளுக்கோ தற்போது தன் வீட்டு நியாபகம் வந்தது.

வீட்டின் வாயில் வரை அஸ்வின் பின் நடந்தவள் உள்ளே செல்லாமல் நின்று
“நான் என் வீட்டுக்கு போணும்” என்றாள் ராஷ்மிகா.

ராஷ்மிகா கையைப் பிடித்து
வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்தவன் “அதெல்லாம் எங்கையும் போக முடியாது..
திஸ் இஸ் மை ஆர்டர்” என்றான் புன்னகை மாறாமல்.

“குமாரா…” என்று செல்வமணி மகனும் அவனுடன் வந்த பெண்ணையும் அவள்
கழுத்தில் தொங்கிய தாலியையும் கண்டு மகனின் பெயரை சொல்லிக் கூவியே விட்டார். மகன் கல்யாணத்தைப் பற்றி எவ்வளவு கனவுகள் கண்டிருப்பார். அதுவும் கணவர் இப்படி உடல்நலம் சரி இல்லாத சமயத்தில் மகன் இவ்வாறு
செய்தது அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அன்னையின் குரல் கேட்டு தன்
அறையில் இருந்து வெளியே வந்த கீர்த்தியும் உறைந்து விட்டாள். தன் அண்ணனா இப்படி ஒரு காரியத்தை செய்து கொண்டு வந்தது? என்று
நினைத்தவளுக்கு இதெல்லாம் கனவாக இருக்குமோ என்று தோன்றியது. ராஷ்மிக்கு ஏதோ அவமனமாக இருந்தது. அதுவும் கீர்த்தி வந்தவுடன் அவளின் பார்வையை சந்திக்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கெண்டாள்.

“அம்மா.. அப்பா எங்க?” – அஸ்வின் கேட்க..

“குமரா என்ன பண்ணிட்டு வந்திருக்க” – என்று குற்றம் சாட்டும் கேள்வியை கரகரத்த குரலோடு செல்வமணி கேட்டார்.

“ம்மா.. ” என்று அவர் அருகில் சமாதானம் செய்ய அஸ்வின் செல்ல அவரோ கண்ணீரை சிந்தினார்.

“அப்பாக்கு ஏற்கனவே தெரியும் ம்மா” என்று சொல்ல அனைவருமே அதிர்ந்தனர். ஏனெனில் எந்தக் காரணமும் இல்லாமல் கணவர் எதற்கும் சம்மதித்திருக்க மாட்டார் என்று குடும்பமே அறிந்த விஷயம்.

செல்வமணியும் கீர்த்தியும் அஸ்வினை ஒருவித அதிர்வோடு பார்க்க அவனோ “அப்பா முழிச்சிருக்காரா?” என்று கேட்டான்..

“இனி முழிக்கற டைம் தான் குமரா” – என்றவர் அஸ்வின் பின்னேயே சிலை மாதிரி நிற்கும் ராஷ்மிகாவிடம் சென்றார்.

“உன் பேர் என்னமா?” – செல்வமணி.

“ராஷ்மிகா” – சொல்லும் போதே
ராஷ்மிகாவின் குரல் கரகரத்தது. அழுகையை அடக்க மிகவும் சிரமப்பட்டாள். தன் குடும்பத்தினரின் ஏக்கம் வந்தது.

“என் அப்பா கிட்ட போணும்” – என்று திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல அவள் தலை குனிந்து சொல்லியது.. அவளின் மனநிலையை ஒரு பெண்ணாய் செல்வமணியால்
உணர முடிந்தது.

“இவங்க அப்பா எழட்டும்.. அப்புறம் ஃபோன் போட்டு வரச் சொல்லலாம்” என்று சொல்ல தலையை ஆட்டினாள். உதடுகளோ எப்போது வேண்டுமானாலும் அழ தயாராக துடித்துக் கொண்டிருந்தது.

“உன் நிலை புரியுது மா.. கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் செய்துக்க.. அவருக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை.. இல்லைனா எழுப்பிடுவேன்” என்று செல்வமணி சமாதானம் செய்து அங்கிருந்த சோபாவில் ராஷ்மிகாவை அமர வைத்தார்.

கீர்த்தி இன்னும் அதிர்ச்சி மாறாமல் நிற்க “கீர்த்தி வந்து பேசு” என்று கண்கலேயே
செல்வமணி மகளை அழைத்தார்.

கீர்த்தி வந்து ராஷ்மிகா அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தாளே தவிர எதுவும் பேசவில்லை. அவளால் அந்த வயதில் என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. அஸ்வின் தான் “அம்மா.. இவ நம்ம காலேஜ் தான்” என்று தாயிடம் சொல்ல..

“அட அப்படியா?” என்ற செல்வமணி…

“நம்ம கீர்த்தியும் அந்த காலேஜ் தான்” – என்று அறியாமையில் அவர் சொல்ல..

“ஒ.. சரி ஆன்ட்டி” – என்றாள் ராஷ்மிகா. “ஏதாவது சாப்படிறியா மா?” – என்று அவளுடைய முகத்தை வைத்தே கேட்டார் அவர்.. காரணம் நேற்று இரவில் இருந்து சரியாக தூங்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை ராஷ்மிகா.. அவ்வளவு
குழப்பத்தில் இருந்தவளுக்கு முகமே சோர்வாக காணப்பட்டது.

“இல்ல ஆன்ட்டி வேணாம்..” என்று அவரிடம் தன்மையாக மறுத்து விட்டாள். “அவர் எழுந்திருப்பார்.. நான் பாத்துட்டு வரேன்…” என்று செல்வமணி எழுந்து செல்ல.. அஸ்வின்.. கீர்த்தி.. ராஷ்மிகா மூவரும் தனித்து விடப்பட்டனர்.

“அப்புறம் கீர்த்தி.. புது அண்ணிய பிடிச்சிருக்கா.. இங்கையே வச்சுக்கலாமா இல்ல திருப்பி அனுப்பிடலாமா” என்று
வேண்டுமென்றே வம்பிழுக்கும்
நோக்கத்தோடு அஸ்வின் பேச ஆரம்பிக்க ராஷ்மிகாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.

“நான் ஒன்னும் உன்…” என்று ஆரம்பித்த ராஷ்மிகா வாயை மூடினாள். அவளிற்கு அவள் மூலைக்குள் ஓடிக் கெண்டு
இருக்கும் விஷயங்களே அவளுக்குப் பெரிதாக இருந்தது. தலையில் ஒரு கை வைத்து தலை குனிந்து அமர்ந்தவளுக்கு அஸ்வின் கட்டிய தாலி வேறு கண் முன் கிடந்து வயிற்றில் புளியைக் கரைத்தது. ஏனோ முதல்முதலாக வாழ்க்கை என்ற
ஒன்று புதியதாகத் தெரிந்தது
ராஷ்மிகாவிற்கு.

கீர்த்திக்கு ராஷ்மிகாவின் நிலை சங்கடமாகத் தான் இருந்தது. ஆனால் அதற்கு அவள் என்ன செய்ய முடியும்.. அண்ணன் செய்ததிற்கு இவள் எப்படிக் காரணம் ஆவாள். அந்நேரம் பார்த்து கீர்த்திக்கு ஃபோன் வர.. எடுத்துத் திரையைப் பார்த்தால் கம்பெனி கால்.. “இவனுக வேற நேரம் காலம் தெரியாம” என்று ஃபோனைக் கட் செய்தவள்
அப்போது தான் ஹர்ஷாவின்
குறுஞ்செய்தி ஒரு மணி நேரம் முன் வந்ததை கவனித்தாள்.

“அப்பா எப்படி இருக்காரு?” – என்று கேட்டிருந்தான் அவன்.

“அப்பா இப்ப ஓகே.. ஸாரி ஃபார் தி லேட் ரிப்ளை” – என்று கீர்த்தி அனுப்பினாள்.

ஒரு பத்து நிமிடம் கழித்து “ச்சி ச்சி ஸாரி எல்லாம் வேண்டாம் கீர்த்தி.. இங்கையும் ஒரு ப்ராப்ளம் கீர்த்தி.. அப்பா எப்படி
இருக்காருன்னு கேக்க தான் மெசேஜ் பண்ணேன்.. டேக் கேர்.. பை.. நாளைக்கு முடிஞ்சா கால் பண்றேன்” என்று அனுப்பி இருந்தான் அவன்.

அறையில் இருந்து வெளியே வந்த செல்வமணி “குமரா அப்பா எந்திரிச்சுட்டாரு..” என்று மகனிடம் சொன்னவர்.. “உள்ள வாங்க இரண்டு பேரும்” என்றார் இருவரையும் பார்த்து.

“கீர்த்தி பூஜை ரூம்ல இருக்க தட்ட எடுத்திட்டு வா” என்று கீர்த்தியிடம் சொல்ல “ம்ம்” என்று தலையை ஆட்டிக் கொண்டு உள்ளே போனாள். உள்ளே நுழைந்த மகனையும் மருமகளையும் பார்த்தவர்.. மகனிடம் கண்களாலேயே ஏதோ கேட்க.. அவனும் “நான்
பாத்துக்கறேன்” என்பது போல கண்களை மூடித் திறந்தான்.

நகேஷ்வரனும் செல்வமணியும் எழுந்து நிற்க.. புரிந்த அஸ்வினும் ராஷ்மிகாவும் இருவரின் காலிலும் விழுந்தனர். “நல்லா இருங்க” என்று மனமார வாழ்த்தினர். செல்வமணிக்குத் தான் மகன் தாலி கட்டியதைக் கூட கண்களால் பார்க்க
முடியவில்லையே என்று இருந்தது.

எழுந்த இருவருக்கும் கீர்த்தி கையில் இருந்த தட்டில் இருந்து திருநீறு எடுத்து பூசி விட்ட நகேஷ்வரன் “குமரா.. நான்
சொன்னது நியாபகம்  இருக்கணும்” என்று சொல்ல.. “ம்ம் சரி ப்பா” என்றான் அவனோ.

அனைவரும் ஹாலிற்கு வந்து அமர.. ராஷ்மிகா மட்டும் வாடிய முகத்துடனே இருந்தாள். அவளின் முகத்தை வைத்தே
மனதைப் படித்த செல்வமணி கணவரிடம் காதில் ஏதோ சொன்னார். “குமரா.. அவங்க வீட்டுக்கு ஃபோன் போட்டு வர
சொல்லுப்பா..” என்றவர் “நம்ம தான் போய் பேசணும்.. என்னால உடம்பு வேற இப்ப முடியாது” என்று சங்கடப்பட்டார்.

“ரிஷி…” என்று அஸ்வின் குரல் கொடுக்க..ஓடி வந்த ரிஷியிடம் “நீ போ ரிஷி” என்றார் நகேஷ்வரன்.

“இது பிசினஸ் இல்ல குமரா.. ரிஷியை வச்சு பேசறக்கு.. இது குடும்பத்த பத்தி பேசறது.. நீதான் போய் அவங்கள அழைச்சிட்டு வரணும்” என்று நாகேஷ்வரன் பேச.. எதுவும் பேசாமல் தந்தைக்கு பணிந்து எழுந்தான். ஆனால் அவனிற்கு வேலை வைக்காமல் சக்திவேல்.. கல்யாணி.. சிவக்குமார்.. விஜயலட்சுமி.. ஹர்ஷா என அனைவரும் காரில் வந்து இறங்கினர்.

உள்ளே இருந்தே ஹர்ஷாவைப் பார்த்த கீர்த்திக்கு ‘திக்’ என்று இருந்தது. “ஹர்ஷா எப்படி இங்க?” என்று தனக்குத்தானே
கேட்டவளுக்கு ஏதோ புரிய.. அவளிற்கு ஏதோ உள்ளுக்குள் உருண்டது.

அவர்கள் அனைவரும் உள்ளே வர “அப்பா….” என்று ராஷ்மிகா சக்திவேலிடம் ஓட.. அவள் எதிர்பாரா வண்ணம் இத்தனை வருடங்களாகத் தாங்கிய 
மகளின் கன்னத்தில் அறைந்து
தள்ளினார் சக்திவேல்.

தந்தை அறைந்ததை நம்ப முடியாமல் ராஷ்மிகா நிற்க.. அடுத்த அடிக்குக் கையை ஓங்கியவரை சிவக்குமார் தான்
தடுத்தார். “என் நம்பிக்கைய
அழிச்சிட்டியே” என்று அவர் ஆவேசமாக கத்த ராஷ்மிகா நின்ற இடத்தில்  சிலையானாள்.

தந்தையின் வார்த்தைகள் நெஞ்சில் ஈட்டியாய் இறங்கியது அவளுக்கு.