யாழ்-13

IMG_20220303_084637-ab2fe817

யாழ்-13

தனிமையும் அழகுதான்,
துணையாக உடன்
நீ இருக்கும் பொழுது!

ஆங்கில எழுத்தான, ‘எஸ்’ வடிவத்தை சிறிது இழுத்து வைத்தது போன்று வளைந்து வளைந்து இருபக்கங்களிலும் மரங்கள் நிறைந்து சென்ற முடிவில்லா சாலை!

எங்கும் இருள் படர்ந்து சூழ்ந்திருக்க, முழுநிலவின் தாக்கத்தால் பொன்நிற மப்பான ஒளி அங்கு விரவி, சாலையின் இருபக்கமும் மிதமான தென்றலில் அசைந்தாடும் மரங்களும், செடிகளும் அசைந்து கொண்டிருக்க, சாலையின் நடுவே காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருந்தது, அறுபது லட்சம் மதிப்புள்ள சிவப்பு நிற டெஸ்லா மாடல் த்ரீ.

யாழ்மொழி தலையைத் திருப்பி தன்னவனைப் பார்த்தாள். அவள் வித்யுத்துடன் கிளம்பும்முன், அன்று ஹாஸ்பிடலில் இருந்து வரும்பொழுது நடந்த அனைத்தையும் சம்யுக்தா யாழிடம் கூறியிருந்தாள். அனைத்தையும் ஒரு நொடி யோசித்துப் பார்த்த கோதைப் பெண்ணின் மனம் காதலில் கசிந்திருகத் துவங்கியது.

அவனுடனான் உலகில் தொலைந்திட வேண்டும் என்று அவனவளின் மனம் ஏங்கத் துவங்க, அவளின் விழியின் வழியாக வழிந்த அலாதி அன்பு, அவளருகில் அமர்ந்து இருந்தவனின் அதீத காதல் ஆசையைத் தூண்ட, அனைத்தையும் அடக்கிக்கொண்டு சிறிது நேரத்தில் வரவிருக்கும் இடத்திற்காக, தன் மொத்த காதலையும், ஆசையையும் காட்ட அந்த மிகச்சரியான இடத்திற்காக காத்திருந்தான் அவளவன்.

அவளிடம் மட்டுமே காதலும், கனவுகளும், ஆசைகளும் இரட்டிப்பாகத் துடிப்பதை உணர்ந்து கொண்டிருப்பவனுக்கு, கணக்கில்லா எண்ணில் அடங்கா ஆசைகள். இரவில் பெருகும் கடல் அலையாய் அனைத்து உணர்வுகளும் பெருகிக் கொண்டிருக்க, தன்னுடனனேயே போராடிக் கொண்டிருந்தான் காளையவன்.

அவனைத் திரும்பிப் பார்த்தவளோ மீண்டும் தன் பார்வையை வெளியே திருப்பிக் கொள்ள, அதை உணர்ந்து கொண்டவனின் அதரங்களில் மென் புன்னகை.

மெல்லத் திரும்பி நிலவைப் பார்த்திருந்தவளின் மெல்லிய மலர் மனதில் தன்னவனின் வதனமே நிரம்பி இருந்தது. மாநிறம், வசீகரமான முகம், அடத்தியான சிகையும், தன் தந்தையைப் போன்று ஆளைத் துளைக்கும் கூர் விழிகளும், அதரங்களில் தவழும் மென் புன்னகையும், அவ்வப்போது அந்த அழகிய வதனத்தை இன்னும் பேரழகாக்கும் திமிர்த்தனமும்,

தங்களுடைய விவசாய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்ததில் முறுக்கேறி இருந்த அவனின் புஜங்களும், மடித்துவிட்ட சட்டைக்கு வெளியே தெரிந்த கரங்களில் வரி வரியாக ஓடிய நரம்புகளும், ஒரு கரத்தில் இருந்த காப்பும்,

தன்னிடம் காட்டியிருந்த துடுக்குத்தனமும், வர்ஷித் சொல்லி செவி வழியாக அவள் கேள்விப்பட்டிருந்த தன்னவனின் அடாவடித்தனமும், அடிமனதில் அனைவரின் மேலும் அவன் காட்டும் அன்பும், பாவையை வேறோடு அவனிடம் சாய்த்திருக்க, இப்போது அவன் கொடுத்த உடையை அணிந்து, எங்கு அழைத்துச் செல்கிறான் என்று தெரியாமல், அனைத்தையும் நினைத்து வதனம் மின்ன அமர்ந்திருந்தவளுக்கு, உற்சாகத்தின் பிறப்பிடமாய் அவன்! அவளவன்! வித்யுத் வருணன்!

அரைமணி நேரத்தில் தாங்கள் வர வேண்டிய இடம் சேர்ந்து காரை கீறிச்சிடலுடன் நிறுத்தியவன், தன்னவளைத் திரும்பிப் பார்க்க, அவனின் பார்வையை பார்க்காமலேயே உணர்ந்து கொண்டவள், காரிலிருந்து இறங்கினாள்.

ரத்த சிவப்பு நிறத்தில் கையில்லாத மெல்லிட ஸ்ட்ராப் மட்டும் கொண்ட மேக்ஸி, ‘வி’ வடிவ நெக் வைத்து, அவளின் மேல் அங்கங்களை இறுக்கிப் பிடித்து இடை வரை கவ்வியிருக்க, இடையிலிருந்து அவளின் பஞ்சுப் பாதங்கள் வரை உடை படர்ந்து தவழ, கழுத்தில் இருந்த மெல்லிய பளபளக்கும் ப்ளாட்டின செயினும், அதில் இருந்த சிவப்பு நிற வைரக்கல் வைத்த பெண்டென்ட்டும், அதரங்களில் உடையோடு ஒத்தது போன்று பூசியிருந்த ரத்த நிற லிப்ஸ்டிக்கும், க்ளாஸிக் ஸ்டைலில் கோடாக செந்தாமரை மலர்க்கண்களில் இழுத்திருந்த ஐ லைனரும், பெண்ணவளை சாமுத்திரிகா லட்சணத்தின் பத்மினி வகையில் எடுத்துக்காட்ட, தன் பார்வையை வைத்தே புரிந்து கொண்டு இறங்கிய தன் காதலியைக் கண்டவனின் சித்தம் கலங்கிப் போனது, தன்னவள் வைரக் குவியலாய் இருந்தது போன்ற பிரம்மிப்பில்.

காரிலிருந்து சிகையைக் கோதியபடியே இறங்கியவன், தன்னவளின் பக்கம் வர, அவனின் ஷூ அணிந்திருந்த பாதம் தொடங்கி மெல்ல மெல்ல விழியை நிமிர்த்தியவள், அவனின் வதனத்திற்கு வர, அவனின் இதழில் தங்கியிருந்த புன்னகையையும், அதற்கு மேல் விழியைச் செலுத்தியவளின் விழிகளில், அவனின் ஆளைக் கொல்லும் காதல் கசியும் பார்வை மின்னலாய் விழ, இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்றாக கலந்தது.

இரு விழிகளின் பார்வை போதுமே, மனதை உணர்த்த!

இதுவரை காதலை உணராத இருவர் காதலில் விழுந்திருக்க, இருவரின் அன்பு கொண்ட நேசமும் செதுக்கி எடுத்த சிலையை முதல் முறையாக பார்த்தது போன்று மெய்சிலிர்த்து நின்றது.

தான் வாங்கி வந்த உடையில், கச்சிதமாய், எப்போதும் இருக்கும் வாலுத்தனம் ஓடோடி ஒளிந்து, மெய்யும் வதனமும் நாணத்திலும், சிறு தவிப்பிலும், எதிர்ப்பார்ப்பிலும் பெண்ணவளின் உடையோடு போட்டி போட்டு சிவந்து, வைரச் சிலையாய் நின்றிருந்த தன்னவளின் பூரிக்கும் பேரழகை அவன் அணுஅணுவாய் ரசிக்க, தன்னவனின் விழி வீச்சில், அவனின் விழிகள் பிரதிபலித்த உணர்வுகளில் அவள் தன் பட்டு விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

யாருக்கும் அடங்காத சுட்டிக்காரியை தன் விழிகளாலேயே அவன் நாணத்தில் சிவக்க வைத்ததில் அவனுக்கு அப்படி ஒரு கர்வம் தலைதூக்கியது.

தனது வலது கரத்திற்குள் அவளின் இடது கரத்தைக் கோர்த்துக் கொண்டவன், “வா” என்று அழைத்துச் செல்ல, தன்னவனின் கம்பீரக் குரலிலேயே தொலைந்துபோனாள் பெண்ணவள்.

பாதங்களுக்கு கீழே பச்சை பசேலென்ற புல் வெளிகள் கொட்டிக் கிடக்க, வான்மகளோ, ஒய்யாரமாய் நிலவு மகளை அதட்டிக் கொண்டும், விண்மீன்களை ஒரு இடத்தில் நிற்க விடாமல் விரட்டிக்கொண்டும் அந்த நியூ யார்க் நகரிலுள்ள, ஒண்டாரியோ ஏரியின் ஓரம் இருந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.

தன்னவளின் கரம் பிடித்து அழைத்துச் சென்றவன், சிறிது தூரம் சென்றபின், அவளின் பின் வந்து நின்று, அவளின் விழிகள் இரண்டையும் மூடிக்கொள்ள, அவளுக்கோ தன்னவன் தனக்காக எதையோ செய்து வைத்து, தன்னை அசத்தப் போவதை நினைத்து நினைத்து மனம் மகிழ்ச்சியில் ஒரு இடத்தில் நிற்காமல் தவித்தது.

தன்னவளின் விழிகளை மென்மையாக வழி நடத்திச் செல்ல, “சீக்கிரம் வருண். என்னால வெய்ட் பண்ண முடியல” என்றாள் ஆர்வமிகுதியால்.

அவளின் வார்த்தைகளில் மெல்லிய புன்னகையை உதிர்த்தவன், சிறிது தூரத்தில் அவளின் விழிகளைத் திறக்க, முதலில் விழிகளை திறந்தவளுக்கோ கண்கள் கூசியது.

கண்களை மூடி மூடித் திறந்தவள், விழிகளை திறந்த பின் அசந்து போய் நிற்க வைப்பான் என்று அவள் எண்ணியிருக்க, உறைந்து போய் நின்றிருந்தாள் நங்கை, அந்த நிலவு மகளின் பொன் தங்கையாய்.

இருவர் மட்டும் நடக்கும் பாதையில், இரு பக்கங்களில் இருந்த மரத்தில் செய்யப்பட்ட தடுப்புகளில் சிறிய சிறிய மஞ்சள் நிற எல்ஈடி லைட்டுகள் சுற்றப்பட்டிருக்க, அதுவே நீண்ட தூரம் பயணமாகத் தெரிந்தது அவள் விழிகளுக்கு. தொலைவில் இன்னும் ஏதேதோ இருப்பது போலத் தோன்ற, திரும்பித் தன்னவனின் கைகளைப் பிடித்தவள் அவனுடன் மெதுவாக நடக்கத் துவங்க, வழி முழுதிலும், அவளின் பன்மடங்கான காதல், இன்னும் ஆழமாய் எகிரிக் கொப்பளிக்கத் தொடங்கியது.

ஒவ்வொரு ஐந்தடிக்கும் அவளின் சிறியவயது புகைப்படம் தொடங்கி இன்று வரை அவள் இருக்கும் புகைப்படங்கள். சிறு வயது புகைப்படத்தில் அவள் ஆடையில்லாத புகைப்படங்களைப் பார்த்தவள், தன்னவன் இப்போது அருகில் நிற்பதை உணர்ந்து முகம் சிவந்து போனாள்.

பாத்டப்பில் அஷ்வினின் மடியில் அமர்ந்துகொண்டு முன் பல் விழுந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த புகைப்படங்கள், அன்னையிடம் சண்டையிட்டுக் கொண்டு அழுது வடிந்திருந்த புகைப்படங்கள், த்ரூவுடன் இருந்த புகைப்படங்கள், பள்ளிப் பருவத்தில் ஆண்டு விழாக்களில் எடுத்த புகைப்படங்கள் தொடங்கி, இப்போது நியூ யார்க்கில் வர்ஷித் சம்யுக்தாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் ஒவ்வொரு இடங்களிலும் லைட்ஸுடன் அவன் இணைத்திருக்க, அனைத்தையும் ரசித்தபடி வந்தவள், அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

தலை சாய்த்து தன்னவளைப் பார்த்தவன், “யாழ்” என்றழைத்தான்.

“ம்ம்” என்றவளின் தலை நிமிரவில்லை.

அவளின் நாடியைப் பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தியவன், “இந்த ஃபோட்டோஸ் மட்டும் பாத்தா போதுமா. அங்க பாருடி” என்றவன் தன் விழிகளைக் காட்டிய பக்கம், திரும்பியவள், அங்கு இருந்த அலங்காரங்களைக் கண்டு, பிரம்மித்துப் போனவளின் விழிகள் தெறித்து விடும் அளவுக்கு விரிந்து கொள்ள, பலமில்லியன் சொந்தக்காரனுக்கு செல்ல மகளான யாழ்மொழியின் இதயத்தை ஒரே நொடியில் ஆட்கொண்டிருந்தான் அந்த பிடிவாதக்காரன்.

அவ்வளவு எளிதாக, அவ்வளவு அழகாக, அவ்வளவு ஆசையாக அவன் தன்னைக் கொள்ளை கொண்டதில், பெண்ணவளின் விழிகளில் கணமான நீர் மணிகள் திரண்டது.

முழு நிலவிற்கு கீழ் இருந்த ஏழு ஏக்கர் ஏரியின் ஓரம், இரண்டு ஏக்கர் பச்சை புல்வெளிகளுக்கு மத்தியில், ஆறடி பரப்பில் ஆறு அங்குலத்திற்கு, வெள்ளைத் துணி விரிக்கப்பட்டு, அதன் முனைகளில் நிற்க வைத்த தடித்த குச்சிகளை ஒன்றாக இழுத்து முக்கோனமாக கட்டியிருக்க, நான்கு குச்சிகளைச் சுற்றியும் மஞ்சள் நிற குட்டி குட்டி லைட்டிங்க்ஸ்.

அதில் இரண்டு குச்சிகளுக்கு மத்தியில், இருவரும் அஷ்வினின் வீட்டில் சிறு வயதில் சண்டையிட்ட போது த்ரூவினால் எடுக்கப்பட்ட புகைப்படம், ஒட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழ் சிறிது சிறிதாக ஹார்ட்டின் துண்டுகள் அழகாய் ஏறிப் பூங்காற்றில் அசைந்து கொண்டிருந்தது.

அதற்குக் கீழே இருந்த வெள்ளைத் விரிப்பின் மேலே, சிவப்பு நிற பலூன்கள் காற்றில் பறக்காமல் சாதரணமாக இருப்பது போல் விரிப்புடன் ஒட்டப்பட்டு, மெல்லிய ரோஜா இதழ்கள் ஆங்காங்கே தூவப்பட்டு, விரிப்பின் மத்தியில் மரத்திலாலான ஒரு அடி மேஜை வைக்கப்பட்டு, அதற்கு அருகில் ஓலையில் பின்னிய பாஸ்கட் வைக்கப்பட்டு இருந்தது.

தன்னவளின் விழிகள் கலங்கியதை உணர்ந்தவன், அவளை சிரிக்க வைக்கும் பொருட்டு, “பசிக்குதா?” என்று வினவ, அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவனை இறுக்கமாக அணைத்துவிட்டாள்.

ஏற்கனவே கூச்சம் உடையவன் அவன். இதில் தன்னவளின் திடீர் அணைப்பில், அதுவும் அவள் உடலோடு தன் உடல் உரச இருவரும் நின்றிருந்த விதம் அவனை நெளிய வைத்தது. அவனின் நெளிவை உணர்ந்தவள் அவனின் நெஞ்சில் நாடியை வைத்து நிமிர்ந்து பார்த்து, “என்னால வெய்ட் பண்ண முடியாது வருண். சீக்கிரம் சொல்லு” ஈனஸ்வரத்தில் பெண்ணவள் விழிகளால் கொஞ்சிய விதம், அவனின் காதலை இன்னும் வீறுகொண்டு எழச் செய்ய, அவளை அழைத்துச் சென்று, அங்கு அமைத்திருந்த இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

தன்னவளுக்கு எதிரில் அமர்ந்தவன், பாஸ்கட்டில் இருந்த ஒரு கையடக்கப் பெட்டியை எடுத்து விழிகளில் காதலுடனும், மனதில் ஆசையுடனும் நீட்ட, அதை ஆவலுடன் வாங்கியவள், ‘ட்க்’ என்ற ஓசையுடன் அதைத் திறந்தாள்.

உள்ளே ஒரு சிறிய காகிதம் சுருட்டி வைக்கப்பட்டிருக்க, அதை எடுத்தவள் விரித்துப் பார்க்க, “லவ் யூ டூ டி யாழ்!” தங்கமும் ப்ரௌனும் கலந்த பழைய அமைப்பு போல இருந்த காகிதத்தில், சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்க, அதைப் படித்தவளின் மனம் அவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் வெட்கத்தில் சுருண்டு கொண்டது.

தைரியமானவள் தான்! துடுக்கானவள் தான்!

அவனின் முகத்தைப் பார்த்து நேராக காதலைச் சொன்னவள் தான்.

ஆனால், அதையே அவன் கூறுகையில் பெண்களுக்கே இருக்கும் நாணமும், வெட்கமும் அவளின் தைரியத்தை நிலைகுலையச் செய்தது.

அதே போன்று அடுத்த பெட்டியை அவன் நீட்ட, தலை நிமிராமலேயே அவனின் கரத்தை மட்டும் பார்த்தவள், அப்படியே அதையும் வாங்கிப் பிரித்தாள். “வில் யூ மேரி மீ?” அந்த வாக்கியத்தில் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தங்கள் திருமணத்தை நினைத்து ஒரு நொடி கனவு கண்டவளுக்கு, உடல் தூக்கிவாரிப் போட்டது.

பெண்களுக்கே உண்டான திருமணம் என்ற புது பந்தத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு, பதட்டம், பூரிப்பு இரண்டும் சம அளவில் கலந்து கொள்ள, தன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் அவளின் பதிலுக்காக காத்திருக்க, “டபுள் ஓகே” என்றாள் இருபுறமும் தலையை ஆட்டியபடி.

அடுத்து பாஸ்கட்டுக்கு அருகே இருந்த ப்ரீசர் பெட்டியில் இருந்து பெரிய கேக்கை எடுத்து இருவருக்கும் நடுவே வைத்தவன், “ஹாப்பி பர்த்டே யாழ்” என்றிட, அவளின் அலைபேசியும் பண்ணிரெண்டு மணிக்கு சரியாக அடித்தது.

அலைபேசி அடிப்பதைக் கூட உணராது அவனின் காதல் அவளை சிலையாக்கி அமர வைத்திருக்க, விழிகளில் நீர் திரண்டது. காதலைச் சொன்ன போது பாரா முகம் காட்டியவனிடத்தில் அவள் இப்படி ஒரு காதலை எதிர்பார்க்கவில்லை.

அதுவும் யாரிடம் இத்தனை புகைப்படங்களை வாங்கினான்?

அதுவும் அனைத்தும் வீட்டில் இருக்கும் புகைப்படம்.

அவனின் காதல் அவளின் மென் இதயத்தைக் கிழித்துக் கொண்டு ஆழ்ந்து அசூர வேகத்தில் உள்ளுக்குள் இறங்க, அவனையே பார்த்திருந்தவள் அசைய மறந்தாள். இமைக்க மறந்தாள். பேச மறந்தாள். ஏன் சுவாசிக்கக் கூட மறந்து போய் சமைந்து அமர்ந்திருந்தாள்.

மேசையின் மேல் இருந்த அவளின் கரத்தைப் பிடித்தவன், “யாழ்! ஃபோன் அடிக்குதுடி” என்க, அதில் தன்னுணர்வு பெற்றவள் ஃபோனை ஏற்க, அஷ்வின் தான் அந்தப் பக்கம்.

“ஹாப்பி பர்த்டே குட்டித் தங்கம்” அஷ்வின் வாழ்த்தியது தான் தாமதம், “தாங்க்ஸ் ப்பா” என்றவளின் வார்த்தைகள் மட்டும் உதிரவில்லை. கண்ணீரும் உதிர்ந்தது.

ஒரு கரத்தை காதலன் பிடித்திருக்க, மற்றொரு கரத்தில் இருந்த அலைபேசியில் தந்தை. இருவரும் தன்னோடு ஒன்றாய் இருப்பது போல் மனக்கண்ணில் பார்த்தவளுக்கு, உணர்ச்சிவசப்பட்டதில் கண்ணீர் நிற்காது வழிய, அந்தப்பக்கம் அனைவரையும் கைக்குள் வைத்து கோடிக்கணக்கில் தொழில் நடத்தும் ஜாம்பவான் தான் உள்ளுக்குள் பயந்து போனான்.

இருந்தும் நிதானத்தை கையில் எடுத்தவன் மகளிடம், “என்னாச்சு டா?” வினவ, “ஒண்ணுமில்லப்பா” சிறிது விசும்பலுடன் கூறியவளின் கரத்தை வித்யுத் அழுத்திக் கொடுக்க, தன்னவனை ஏறிட்டுப் பார்த்தவளின் கண்ணீர், அவனின் விழிகளில் இருந்த அக்கறையில் சிறிது மட்டுப்பட்டது.

“ஷல் ஐ கம் தேர் பேபி” அஷ்வின் கேட்டதிற்கு, “ம்ம்” என்றவளிடம், அடுத்து ராஷ்மிகா பேசினாள்.

“ஹாப்பி பர்த்டே யாழ். இந்த இயரும் உன்னோட விஷஸ் நல்லா வேண்டிக்க” என்றிட, சிறிது நேரம் அன்னையுடன் பேசியவள், ஃபோனை வைக்க பதினைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது.

“ஸாரி வருண்” என்றவளின் வாயில் கேக்கை அடைத்தவன், “ஒன்ஸ் அகைன் ஹாப்பி பர்த்டே” என்றான்.

“ஹும் இவ்வளவு லவ்வை வச்சிட்டு தான் என்னை அவாய்ட் பண்ணியா டா?” அவள் கோபமாய் வினவ,

“ஆமா, நீ அந்த ஸ்ரீ ராம் கூட பேசுனது எனக்கு பிடிக்கல. அதுதான் வேணும்னே அலையவிட்டேன்” அவன் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சொல்ல, வாயில் கைத்து வைத்து, ‘அடப்பாவி’ என்பது போல பார்த்து வைத்தவள்,

“டேய், அவன் என் பிரண்டு டா” என்றாள்.

“யாரு இல்லைனு சொன்னா. ஐ நோ நான் பொசசிவ் ஆகறேன்னு. பட் எனக்கு அவன் உன்கிட்ட பேசுனது பிடிக்கல. என்னைவிட அப்ப க்ளோஸா பேசுனான். ஸோ எப்படி பிடிக்கும் சொல்லு” அவன் உரிமையான குணத்துடன் பேசிய விதத்தில், அவளுக்கு சிரிப்பு வந்தது.

இருவருக்கும் இடையில் இருந்த மேசையை எடுத்து வேறு பக்கம் வைத்தவள், அவனின் அருகில் சென்று அமர அவனுக்கோ இதயத்தில் பேரிடிகள் பல கேட்டு மத்தளம் அடித்தது போல் இருந்தது. அவளின் அருகாமை அவனுக்கு நாபியில் இருந்து போதையை ஏற்ற, அதுவும் அவள் அணிந்திருந்த உடை கழுத்திற்கு கீழ் ஒரு இன்ச் இறக்கம் எக்ஸ்ட்ராவாக இருக்க, பெண்ணவளுக்கு அங்கிருந்த தூக்கலான எக்ஸஸ் அழகு, அவனை கிறங்கி சித்தம் தடுமாறச் செய்தது.

அவனின் முகத்தையே பார்த்திருந்தவள், “இது என்ன ரியாக்ஷன் டா. எக்ஸாம் ஹால்ல உக்காந்து இருக்கவன் மாதிரி” என்றவள் அவனின் தோளில், அடித்து வைத்து பேசப் பேச இயல்புக்கு வந்தவன், எதையோ நினைத்து சிரிக்க,

“என்னடா திடீர்னு சிரிக்கறே?” கேட்டவளிடம்,

“எல்லா ஃபோட்டோஸ்லையும் அந்த ஃபோட்டா தான் சூசூப்ப்ப்பபர்ர்ர்” பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து, சைகையில் அவன் அருமை என்று சைகை காட்டிய விதத்திலேயே அவளுக்கு தெரிந்து போனது, அவன் எந்தப் புகைப்படத்தை கூறுகிறான் என்று.

அவள் உடையில்லாமல் தலையில் தொப்பி அணிந்து, தந்தையின் கூலர்ஸை கண்களில் சுமக்காமல் முகத்தில் சுமந்து கொண்டு, ஐந்து வயதில் நின்றிருந்த புகைப்படம் அது.

தன்னவனின் குறும்பு வழியும் பேச்சில், வதனம் நாணத்தில் துடிதுடிக்க வெட்கம் கொண்டவள், “இரு இரு உன்னோட ஃபோட்டோ எனக்கு இப்படி கிடைக்காமையே போகும்” என்றாள் சிணுங்கலும் கோபமுமாக.

“சான்ஸே இல்ல. என்னோட ஃபோட்டோஸ் அப்படி எதுவும் இல்ல. கண்ணு பட்டுடும்னு என்னோட அம்மா என்னை அப்படி எடுத்ததே இல்ல. வேணா இப்ப நீ என்னை அப்படி பாக்க..” என்றவன் சொல்லி முடிக்கவில்லை, தன் இரு காதுகளையும் அடைத்துக் கொண்டவள்,

“போதும் போதும். கண்டதையும் பாத்து பயந்துட்டா, அப்புறம் கோயிலுக்கு கூட்டிட்டு போய் வேப்பிலை அடிக்கணும்” என்றவள், “உங்க அம்மா அப்படி ஃபோட்டோவே எடுத்தது இல்லியா? இதுக்கு பேர் தான் பொத்தி பொத்தி வளக்கறதோ? நல்லாதான் பொத்தி வளத்திருக்காங்க” என்றவள் விழுந்து விழுந்து சிரிக்க, நியாயமாய் பழைய வித்யுத்தாய் இருந்திருந்தால் அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.

ஆனால், இப்போது இருப்பது அவளின் வருண் ஆயிற்றே!

“ஆமா, பொத்தி பொத்தி வளத்தாங்க என்னை. ஆனா, எனக்கு எதுவும் பயம் இல்லைடி. எதையும் பாத்தா வேப்பிலையும் அடிக்கத் தேவை இருக்காது” என்றவனின் பார்வையில் உடலைக் குறுக்கியவள், அவனை அடிக்கத் துவங்க, எழுந்து ஓடித் தொடங்கியவன் பின்னால் ஓடியவள்,

“நில்லுடா நில்லு. பாக்க ஒண்ணும் தெரியாத புள்ளை மாதிரி இருந்துட்டு பேச்சை பாரு” அவனைத் துரத்திக் கொண்டு அவள் ஓடிவர,

“ஆஹா! நீ இப்படி ஓடி வரதை பாக்கிறதுக்காகவே நான் இன்னும் எவ்வளவு தூரம் வேணாலும் ஓடலாம் போலையே. ப்ரண்ட் போர்ஷன் ம்ம்ம்ம்ம்!” கண்ணடித்துக் குறும்புக் கண்ணனாக மாறி அவன் சொல்ல, முதலில் அதன் அர்த்தம் புரியாதவள், அர்த்தம் புரிந்தவுடன், ஓடுவதை நிறுத்திவிட்டு திரும்பி நின்று இரு கைகளாலும் வெட்கத்துடன் மேலே மூடிக்கொள்ள, மெதுவாக வந்து அவளைப் பின்னிருந்து அணைத்தவன், அவளின் கரங்களை பிடித்து கீழ் இறக்கினான்.

“ஹே பாப்ஸ்” என்ற நொடி, “இப்ப வந்தியா பக்கத்துல” என்று திரும்பியவள் அவனின் புஜத்தைக் கடிக்க, ஓட முயன்றவனை பிடிக்க முயன்றவள் அவனோடு சேர்ந்து தரையில் விழுந்தாள்.

அவன் கீழே! அவள் அவன் மேலே!

அவனின் மேல் புள்தரையில், வெட்ட வெளியில், நிலவு மகள் பார்வைக்கு அடியில் விழுந்து கிடந்தவள், “அதென்னடா பாப்ஸ்?” வினவினாள்.

“பாப்புதான் பாப்ஸ்” அவன் விளக்க, அதில் அவன் கன்னங்களில் அழுத்தமாய் முத்தமிட்டவள், அவனை மேலும் இறுக்கி அணைத்துக்கொள்ள, இரவின் தனிமையில், மங்கையின் அணைப்பில், ஆடவணுக்கு ஏதேதோ தோன்றியது.

அவனின் கன்னங்களில் தொடங்கி, நெற்றி, விழிகள், புருவங்கள், நாசி, செவி, கழுத்து அனைத்திலும் தன்னவனின் காதலை அனுபவித்தபடியே முத்தமிட, தன்னவளின் காதலை அவளின் இதழ் வழியாக அனுபவித்துக் கொண்டிருந்தவன், அவள் தன் இதழ்களுக்கு வரவும் திகைத்துப் போனான்.

வெலவெலத்துப் போனான் காளையவன்!

முதல் முத்தம்! நடுக்கமாக இருப்பது போல இருந்தது அவனுக்கு.

அவளின் இதழ்கள் அவனின் இதழில் புதையும் முன் இருவரின் அதரங்கள் இடையில் கை வைத்துத் தடுத்தவன், “உச்சா வர்ற மாதிரி இருக்குடி” அவன் சொன்னவுடன், மோகத்தில் இருந்தவளுக்கோ அவன் தடுத்தது கடுப்பாக்கினாலும், அடுத்து அவன் சொன்னதில் சிரிப்பு வந்தது.

“ச்சி. உனக்கு ஒண், டூ எல்லாமே வரும் விட்டா..” என்றவள் அவனின் கன்னத்தைப் பிடித்து கிள்ளி, “அன்னிக்கு நம்ம பாத்த சீரிஸ்ல எப்படி கிஸ் அடிச்சாங்க. நீ இப்படி இருந்தா சுத்தம்” என்று அவனின் நெஞ்சில் சிறிது அடி போட்டவள், “ஒரே ஒரு கிஸ் சரியா. அப்புறம் உன்னை விட்டுடறேன். அப்புறம் போய் கம்ளைன்ட் பண்ணி உன் அப்பா, அம்மா யாரை வேணாலும் கூட்டிட்டு வா” என்றவள் அவனின் கரத்தை எடுத்து தன் இடையில் வைத்தாள்.

விழிகளை மூடியபடி, அவனின் இதழோடு இதழ் பொருந்தியவள், தன் தாகத்தைத் தீர்க்கத் துவங்க, தன்னவளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வுகளில், சீற்றமாக எழுந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளில் அவளின் இடையை அழுத்திப் பிடித்தவன், அவளின் கீழுதட்டில் பற்களை பதித்து, அவளை கீழே கிடத்தி நொடிப்பொழுதில் ஆடவன் மேலே வர, இருவரின் நெஞ்சங்களும் உரசிக்கொண்டது.

அவளின் அதரங்களை நீவிக் கொடுத்தவன், அவள் தாகம் தீர்த்த இடத்தில் யாகம் செய்ய, அவனின் பரந்து விரிந்திருந்த முதுகைச் சுற்றி கைகளைப் பெண்ணவள் போட்டுக்கொள்ள, ஆணவனுக்கோ அது ஏக வசதியாக இருந்தது.

நிலவின் ஒலியில் ஓவியமென தெரிந்த தன்னவளின் அழகை, அவளிடம் இருந்து சிறிது விலகி அவன் ரசிக்க, அவனின் விழிகள் அப்பட்டமாய் அவளின் கழுத்திற்கு கீழ் சென்று ரசிப்பதை உணர்ந்தவள், தன் கை கொண்டு அவனின் விழிகளை கூச்சம் தாளாது மூட, அவனின் அதரங்களில் விஷமப் புன்னகை அரும்பியது.

அவளின் கரத்தை அவன் விளக்கவில்லை.

ஆனால், மீண்டும் குனிந்தவன் தன்னவளின் கழுத்திற்குக் கீழ் முகம் புதைக்க, அதில் வெடவெடத்துப் போனவள், அவனிடம் இருந்து விலகப் பார்க்க முடிந்தால் தானே! தான் செய்த காரியத்தில் தானே மாட்டிக் கொண்டதை உணர்ந்தவள், “வருண்! வருண்! இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் டா” நடுங்கும் குரலில் சொல்ல, அவளை விட்டு கலகலவென வாய்விட்டுச் சிரித்தபடி விலகி வானைப் பார்த்தபடி படுத்தவன்,

“வாய் மட்டும் தான்டி நீ” என்றான் தலைக்குக் கை கொடுத்து, அவளைப் பார்த்து ஒருக்களித்து படுத்துக்கொண்டு.

“அதெல்லாம் ஒருநாள் நான் யாருன்னு காட்டுறேன்” என்றவள் அவனைப் போலவே திரும்பிப் படுக்க,

“சரி. இப்ப காமிக்க வேணாம்” என்றவன் அவளின் கழுத்திற்கு கீழ் இறங்கியிருந்த உடையை ஏற்றிவிட்டு எழுந்துகொள்ள, அவனின் உரிமையான செயலில் விதிர்விதிர்த்துப் போனவள், ‘சரியானவன்’ திட்டிக்கொண்டே எழுந்தாள்.

எழுந்தவள் உடனே, “பசிக்குது டா. டின்னர் என்ன?” கேட்க, “இந்தா.. இந்த லேக் ஃபுல்லா மீன் இருக்காம். புடிச்சு நைட் புல்லா சாப்பிடு” அவன் கேலியில் இறங்க அவனின் முகத்தில் பட்டு பட்டென்று அவள் அடித்து வைக்க, அவளைப் பிடித்து இழுத்து தன் முன் நிறுத்தியவன், “பாப்ஸுக்கு பசிக்கும்னு தெரியாமயா வந்திருப்பேன்” என்றவன், அவளுக்கு பிடித்த உணவுகளை எடுத்து அடுக்க,

“ஹைஹைஐஐ!!” என்று குதூகலித்தவள் அவனின் கன்னத்தில், ‘இச்’ என்று ஒன்றை வைத்துவிட்டு உண்ணத் துவங்க, தன்னவள் உண்ணும் அழகை சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தான் அவளின் வருண்.

சிறிது நேரத்தில் ஏரியின் ஓரமாகச் சென்று நின்றவன், வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்க, அவனின் பின் வந்து நின்றவள், “வருண்” என்று அணைத்துக் கொண்டு நின்றாள்.

“சத்தியமா இந்த மாதிரி பர்த்டே எக்ஸ்பெக்ட் பண்ணல. மறக்க முடியாத பர்த்டே, உன்னோட ப்ரபோசலோட சேத்தி. ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்றேன்” என்று அவனின் முதுகில் முத்தத்தைப் பதித்து, “லவ் யூ வருண்” என்றாள்.

சிறிது நேரம் அமைதி காத்தவன், “எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்டி. அதுக்கு பர்ஸ்ட் ரீசன் என்னனா நீ என்னோட அம்மா மாதிரியே இருக்க, ஒரு சில டைம். அதுவும் நீ என்கூட வாயடிக்கும் போது. எனக்கு என் அம்மா என் அப்பாகிட்ட பேசறதுதான் ஞாபகம் வரும். அன்ட் என்கிட்ட சண்டை போட்டு முறைச்சிட்டு நின்னாலும், என் அம்மா கண்ணுல ஒரு அக்கறையை பாத்திருக்கேன். அதே மாதிரி நீ உனக்கு பிடிச்சவங்க கிட்ட இருக்கிறதையும் பாத்திருக்கேன்”

“வர்ஷித் சொல்லியிருக்கான், நீ பூஜாகிட்ட பேசும்போது எனக்கு பொறாமையாகுதுடானு. அப்ப எல்லாம் சிரிச்சிட்டு வேணும்னே அவகிட்ட பேசுவேன். ஆனா, உன்கிட்ட வர்ஷித் இல்ல வேற யாராவது பசங்க பேசும்போது தான் தெரிஞ்சுது அதோட ஃபீலிங் எப்படி இருக்கும்னு”

“உன்னை என்னால யாருக்கும் விட்டுத்தர முடியாதுனு தோணுது. ஸ்ரீ ராம் மேல இருந்த கோபத்துல தான் வேணும்னே லவ்வை உடனே சொல்லாம உன்னை கொஞ்சம் அலைய விட்டேன். ஒரு சில விஷயத்துல நான் ரொம்ப அழுத்தக்காரன், ஈகோ பிடிச்சவனு எனக்கே தெரியும். பட் என்னால மாத்திக்க முடியாது யாழ். இப்பகூட உன் அப்பாக்கு முன்னாடி உனக்கு நான்தான் பர்ஸ்ட் பர்த்டே விஷ் பண்ணனும்னு இங்க கூட்டிட்டு வந்தேன். ஏன் இப்படி இருக்கேன்னு புரியல. உன்னை கிஸ் பண்ணும்போது புரிஞ்சுது உன்கூட இனி இருக்கப் போற வாழ்க்கை எவ்வளவு அழகா இருக்கும்னு. இட்ஸ் நாட் ஜஸ்ட் செக்ஸ். லஸ்ட் வித் லவ் இஸ் பொயட்ரினு(கவிதை) புரிஞ்சுது உன்ன கிஸ் பண்ண அந்த நிமிஷம்” என்றவன் அவளைத் தன் முன் இழுத்து அவளின் செழிப்பான இதழ்களை வருடினான்.

தன்னவனின் வருடலில் விழிகளை மூடி, வார்த்தைகளில் மேலும் மேலும் அவனின் உயிருக்குள் ஊடுருவி அவனின் ஆன்மாவிற்குள் கலந்துவிட்டதைப் போன்று உணர்ந்தவள், அவனின் முத்தத்திற்காக ஏங்கி, இதழ்கள் பிரித்து, தலை தூக்கி நிற்க அவளின் கீழுதட்டை வருடிக் கொண்டிருந்தவன், மென்மையாய் புன்னகைத்து அவள் முகம் நோக்கிக் குனிந்தான்.

வெகு அழுத்தமாக, அவனின் காதலை காத்து, தன்னவளின் காதலுக்கு மரியாதை செலுத்தியது அவன் அவளின் நெற்றியில் இட்ட இரண்டாவது முத்திரை!

‘Lust rushes, But love waits’

***

அடுத்த நாள் காலை ஐந்தரை மணிக்கு வெளிவரத் தொடங்கிய கதிரவனின் கதிர்கள், பெண்ணவளின் நித்திரையை கலைக்க, தன்னவனின் நெஞ்சில் முகம் புதைத்து படுத்திருந்தவள் விழிகளை மெல்ல விழிக்க, ஏறியில் ஆங்காங்கே இருந்த பறவைகளின் காலை கீதங்கள் அவளின் செவிகளில் ஒலித்தது.

மெல்லத் தலை நிமிர்த்தி, தன்னவனை பார்த்தவள், அவன் ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு அவனிடம் இருந்து மெதுவாக, அவனின் உறக்கம் கலையாமல் விலகப் பார்க்க, அவனின் கரமோ அவளின் இடையை வெகு தீவிரமாக பற்றியிருந்தது.

‘சரி இப்போதைக்கு எந்திரிக்க முடியாது’ நினைத்தவள் மீண்டும் அவனின் மார்பிலேயே படுத்துக் கொள்ள, நேற்று இரவு அவன் நெற்றியில் இட்ட முத்திரைக்கு பின் நடந்த அனைத்தையும் மீண்டும் மனம் அசைபோட்டது.

பேசியபடியே, அவன் அழைத்துச் சென்றது ஏறிக்கு ஓரமாய் நீண்டு வளந்திருந்த உயரமான மரங்களுக்கு கீழே அவன் அமைத்திருந்த டென்ட் செட். இருவரும் சென்று உள்ளே படுத்துக்கொள்ள, அவனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் காரிகையவள் சாய்ந்துகொள்ள, தன்னவளைச் சுற்றி கரத்தைப் போட்டான் வித்யுத்.

நிறைய நிறைய பேசினர் இருவரும். சிறு வயதில் தொடங்கி இப்போது வரை அனைத்தும் பேசியவர்கள், பெற்றோரைப் பற்றியும் பேசத் துவங்க, அன்னை தந்தையின் திருமணம், அவர்களின் ஊடல், பிரிந்து இருந்தது, பிறகு இணைந்தது அனைத்தும் யாழ் கூற, வித்யுத்தோ அன்னை தந்தையின் திருமணம், அதற்குப் பிறகு தந்தை அன்னைக்காக செய்தது அனைத்தையும் கூறியவன், வெற்றி திவ்யபாரதியின் கடந்த காலத்தை மட்டும் சொல்லவில்லை.

என்னதான் இருவரும் இப்போது காதலில் திளைத்து மனமொத்த தம்பதியாய் இருந்தாலும், சில கருப்புப் பக்கங்களை அவன் கூற விரும்பவில்லை.

“செமடா உங்க அப்பா. வருண் நாம எப்ப கல்யாணம்?” என்று அவள் இழுக்க,

“வர்ஷித் கல்யாணம் முடியனும். நான் உன்னை நல்லா பாத்துக்கற அளவுக்கு ஒரு பொசிஷன்ல இருக்கனும். இந்த இரண்டும் எவ்வளவு சீக்கிரம் நடக்குதோ அவ்வளவு சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கும்” என்றவனின் குரலில் இருந்த உறுதியில், தன்னவனை மேலும் கட்டிக் கொண்டவள், சில கதைகள் பேசியபடி உறங்கியும் போனாள்.

அதற்குப் பிறகு நீண்ட நேரம் அவன் அவளைப் பார்த்திருந்தது அவனுக்கு எங்கு தெரியும்!

தன்னவனின் கரத்தைத் திருப்பி அதில் மணியைப் பார்த்தவள், “வருண் லேட்டாச்சுடா. எந்திரி” அவனை எழுப்ப, எழுந்து தயாரான இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

யாழ்மொழியை அவள் இடத்தில் இறக்கிவிட்டவன், “பைடி. சம்யுகிட்ட சொல்லிடு” என்றுவிட்டுக் கிளம்ப, தனது அறைக்கு வந்து காலைக்கடன்களை முடித்தவள், நேரே சம்யுக்தாவின் அறைக்குச் சென்றாள், தோழியைப் பார்ப்பதற்கு.

உள்ளே சென்றவளுக்கு, எடுத்தவுடனேயே காதில் விழுந்தது பாத்ரூமில் இருந்து வந்த சம்யுக்தாவின் முனகல் தான். டீனேஜைத் தாண்டி இருபதுகளில் அடி எடுத்து வைத்தவளுக்குத் தெரியாதா அது என்ன மாதிரி சத்தம் என்று.

செவிகள் கூச, ஒரு நொடி காதை அடைத்துப் பிடித்தவள், முகத்தை சுளித்துக் கொண்டு வெளியே காத்திருக்க, பதினைந்து நிமிடங்கள் கழித்து அனைத்தையும் முடித்துக் கொண்டு வெளியே வந்த சம்யுக்தாவின் நெஞ்சுக் கூடு, யாழ்மொழி அங்கிருந்த படுக்கையில் கால்மேல் காலிட்டு அமர்ந்து அவளின் ஆன்மாவை ஊடுருவம் ஊசி முனைப் போன்று பார்த்த பார்வையில் அச்சத்தில் சில்லிட்டுப் போனது.