யாழ்-16

IMG-20210214-WA0021-989a4e8c

யாழ்-16

அஸ்வினின் அறைக்குள் நுழைந்த ராஷ்மிகா அவன் ஹை டெக் பெட்டில் உட்கார்ந்து லேப்டாப்பில் வேலையில் மூழ்கி இருப்பதைப் பார்த்தவளுக்கு மனம் எரிமலையாய் எரிந்தது. அவளை இந்த நிலைக்குத் தள்ளி விட்டு அவன் மட்டும் எப்படி ஹாயாக இருக்கலாம் என்று எண்ணியவள் நேராக சென்று அங்கிருந்த மேஜை மேல் பால் செம்பை டமாரென வைத்தாள்.

சத்தம் கேட்டு திரும்பியவன் அவளையும் அந்த செம்பையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் லேப்டாப்பிற்குள்
மூழ்கினான். அவன் செய்கையில் “எப்படி சம்மந்தமே இல்லாத மாதிரி உக்காந்திருக்கான் பாரு” என்றுஎரிந்தவள் அங்கிருந்த டம்ளரை கீழே தள்ளி விட்டாள்.

“ஏய்.. என்ன உருட்டிட்டு இருக்க.. பேசாம படு” – என்றவன் மீணடும்
லேப்டாப்பிற்குள் மூழ்கினான்.

“என்ன நிம்மதியா தூங்க விடாம பண்ணிட்டு.. இப்ப தூங்க சொல்றியா?” என்று கோபத்தில் பேசியவளைக் கண்டவன்..

“இன்னும் எவ்வளவு நாள் இதையவே பேசப் போற?” என்று சாதாரணமாகக்
கேட்டான் அஸ்வினோ.

“இதே உன் தங்கச்சிக்கு இந்த மாதிரி நடந்திருந்தா சும்மா இருந்திருப்பியா நீ?” என்று ராஷ்மிகா அவனிடம் சண்டையிட..

“என் தங்கச்சி ஒன்னும் உன்ன மாதிரி இல்ல.. அவளுக்கு எங்க எப்படி பிகேவ் பண்ணனும்னு தெரியும்” என்றவன்
ராஷ்மிகாவைக் கூர்ந்து பார்த்து “உன்ன மாதிரி கீர்த்தி தேவை இல்லாம எதுவும் பண்ண மாட்டா” என்றான் அஸ்வின்.

“அப்புறம் இன்னொன்னு உன்கூட என் தங்கச்சிய எல்லாம் கம்பேர் பண்ணாத” என்றான் ஏளனமாக.

“உன்னால தான் என் அப்பா என்கிட்ட பேசறதே இல்ல.. அதுக்கு முழுக் காரணம்
நீதான்டா.. என் அப்பா இன்னிக்கு யாரோ ரோட்ல போறவ கல்யாணத்துல உட்கார்ந்திருந்த மாதிரி இருந்துச்சு..” என்றவள் “உனக்கு எல்லாம் மனுசங்களோட உணர்வ புரிஞ்சுக்க முடியுமா?” என்று கேட்டவளின் குரல் கரகரத்தது.

“இதுல வேற.. பர்ஸ்ட் நைட் அது இதுன்னு உன்கூட இருக்க அனுப்பிட்டாங்க என்னை..” என்றவள் “பிடிக்காதவன் கூட
பெட் ஷேர் பண்ற கொடுமை யாருக்குமே வரக் கூடாது” என்று முணுமுணுத்தாள் ராஷ்மிகா.

“ஏய் இரு… இப்ப இங்க என்ன ரேப் சீன்னா நடக்கப் போது.. என்ன நிறையா ‘படம்’ ‘புக்’ படிப்பியா.. எனக்கு வேற  வேலை இல்ல பாரு” என்றவன் “சீன் போடாம போய் படுடி” என்றான் எகத்தாளமாக. அதற்குள் ஃபோன் வர.. காதில் வைத்துக் கொண்டு வெளியே சென்றவன் ஒரு மணி நேரம் கழித்தே வந்தான்.

“நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்” – ராஷ்மிகா.

“என் அப்பா கிட்ட உங்க வீட்டுல இருந்து எதுவும் அனுப்பக் கூடாது சொன்னியா?” என்று வினவினாள். அன்னை
“மாப்பிள்ளை அப்பா குடுத்த எதுவும் வேணாம்னு பிடிவாதமா சொல்லிட்டாரு ராஷ்மி” என்று தன் அன்னை சொன்னதை.. இங்கு வந்து கேட்க ஆரம்பித்தாள்.

“ஆமா..” – அஸ்வின் லேப்டாப்பில் கண்ணை வைத்தபடி.

“ஏன்?” – ராஷ்மிகா.

“ஓ.. உன் வீட்டுல இருந்து வர சாமான்ல தான் இங்க குடும்பம் நடத்த முடியுமா.. அதே மாதிரி நகை எல்லாம் இங்க இல்லை பாரு.. ஏதோ உங்க அம்மா
எங்கம்மா கிட்ட கேட்டனால தான் அந்த வைர செட்கே சரின்னு சொன்னேன்” என்று அஸ்வின் விட்டேத்தியாக பதில் பேச.. அவ்வளவு தான் ராஷ்மிகா
அவனுடைய லேப்டாப் பவர் பட்டனை அப்படியே அனைத்து லேப்டாப்பை மூடிவிட்டாள்.

முக்கியமான ப்ராஜெக்ட் வொர்க்கில் இருந்த அஸ்வினிற்கோ ஆத்திரம்
தலைக்கேற “ஏய்…” என்று கத்தியபடி கையை ஓங்கியே விட்டான். கையை ஓங்கியவன் “ச்சி பொண்ணாடி நீ” என்று
அவளின் மேல் காட்ட இருந்த கோபத்தை பக்கத்து மேசை மேல் காட்ட.. அவன் கையை அதில் அடித்த வேகத்தில் “டம்” என்ற சத்தத்தோடு அதன் மேல் இருந்த அனைத்தும் கீழி விழுந்து.. மேசையும் சிறிது விரிசல் விட்டது.

“இங்க பாரு.. இந்த மாதிரி பஜாரி மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருந்த நான்
மனுஷனா இருக்க மாட்டேன்.. நானும் சரி சின்ன பொண்ணு.. கொஞ்சம் அட்ஜஸ்ட்  பண்லாம்னு பாத்தா ரொம்ப தான் ஓவரா போற..” என்று அவர் கை முட்டியின் மேல் இருந்த இடத்தில் கை வைத்து பிடித்து இழுத்து பேசியவன் “இன்னிக்கு ரிசப்ஷன்ல என்ன தேவா கிட்ட மூஞ்சிய  காமிக்கற.. நான் என்ன எதையும் கவனிக்க மாட்டேன்னு நினைக்கறியா?..
வால சுருட்டிட்டு இரு.. இல்லைனா நான் ட்ரீட் பண்ற விதமே வேற மாதிரி இருக்கும்” என்றவன் அவளிடம் இருந்த
பிரிந்து வந்து தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அவன் அறை
உள்ளேயே இருந்த அவனின் ஆபிஸ் அறைக் கதவைத் திறந்து உள்ளே புகுந்து
கொண்டான்.

அவன் சென்ற திசையையே வெறித்தவள் “இன்னும் நீ பாக்க வேண்டியது நிறைய
இருக்கு அஸ்வின்” என்று எள்ளலாக நினைத்தாள் ராஷ்மிகா. மனதில்  திட்டத்தைத் தீட்டியவள் படுக்கையில் சென்று ஒரு தலையணையை எடுத்து
தனக்கு ஏற்றவாறு வைத்து அதில் சாய்ந்தாள். ஒரு மணி போல தனது ஆபிஸ் அறையில் இருந்து வந்தவன் அவள் அமைதியாகத் தூங்குவதைக்
கண்டான்.. “இப்ப மட்டும் தான் வாய் மூடும் போல.. மத்த நேரம் எல்லாம் யார எங்க வம்பிழுக்கலாம்னு இருக்கா” என்று மனதினுள் புகைந்தவன் அவள் குறுகிப்
படுத்திருப்பதைக் கண்டு “வெறும் வாய்.. ஒரு பெட்ஷீட் எடுத்து போத்திக்கக் கூடத் தெரியாது” என்று போர்வையை மேலே விரித்து விட்டான். பிறகு லைட்டை
அணைத்தவன் பெட்டின் இன்னொரு பக்கம் படுத்து கண்களை மூட ராஷ்மிகா
கேட்ட வார்த்தைகள் காதிற்குள் ஒலித்தது. அவள் அப்பாவின் பிரிவில் அவள் வாடுவது தினமும் தாய் செல்வமணி
சொல்லி அவன் அறியும் ஒன்று தான். அதைக் கோபமாக அவள் அவனின் மேல் காட்டுவது அவனிற்குப் புரிந்தாலும்.. சில
சமயம் அவள் சிள்ளியாக நடந்து கொள்வது அவனிற்கு பிடிக்கவில்லை. தன் நிலையை எண்ணி அழுவதா
சிரிப்பதா என்று நொந்து கொண்டவன் சில நிமிடத்தில் தூக்கத்தைத் தழுவினான்.

“அத்தை நான் இன்னைக்கு காலேஜ் போறேன்” – என்று சமையல் அறையில் இருந்த மாமியாரிடம் அடுத்த நாளே
நெழிந்து கெண்டிருந்தாள் ராஷ்மிகா.

“சரி ராஷ்மிகா போயிட்டு வா..” என்ற செல்வமணி நியாபகம் வந்தவராக “எதுக்கும் குமரன்ட ஒரு வார்த்தை கேட்டுக்க மா” என்றார் அவர்.

வெளியே வந்த ராஷ்மிகா ஹர்ஷா.. கல்யாணி.. விஜயலட்சுமி நிற்பதைக்
கண்டு “என்னம்மா.. சாப்பிட்டு கிளம்பலாம்ல” என்று வினவ..

“இல்ல ராஷ்மி.. அப்பாக்கு காலைல சாப்பாடு லேட் ஆகிடும் நாங்க கிளம்பறோம்” என்று சொன்ன கல்யாணி..
நாகேஷ்வரன் செல்வமணியிடம்  சொல்லிவிட்டு அஸ்வினைத் தேட.. “குமரன் எங்க மா?” என்று வினவினார்  செல்வமணி ராஷ்மிகாவிடம்.

“குளிக்கறாங்கன்னு நினைக்கறேன் அத்தை..” என்றாள் ராஷ்மிகாவோ.

“ம்மா.. நீங்க கிளம்புங்க.. அப்பாக்கு லேட் ஆகும்” என்று நியாபகப் படுத்த.. செல்வமணியும் ஆமோதித்தார்.

“சரி கிளம்பறோம்” என்று மூவரும் சொல்லிக் கொண்டு கிளம்ப.. ராஷ்மிகா
அஸ்வினின் அறைக்கு விரைந்தாள்.

உள்ளே நுழைந்தவள் அவன் தலை வாரிக் கொண்டிருப்பதைக் கண்டு அவன் பின் சென்று கண்ணாடியில் தான் பிம்பம்
தெரியுமாறு நின்றாள். கண்ணாடி வழியேவே “என்ன?” என்பதைப் போல
அஸ்வின் பார்க்க..

“நான் இன்னிக்கு இருந்து காலேஜ் போறேன்” – என்றாள் அறிவிப்பாக.

“ம்ம்” என்றவன் “ஆனா சில கண்டிஷன்” என்றபடி திரும்பினான்.

ராஷ்மிகா பேசாது அவனையே பார்த்தபடி நிற்க அஸ்வினே ஆரம்பித்தான்.. “கார்லயே போயிட்டு கார்லையே வந்திடணும்.. காலேஜ் முடிச்சா நேரா வீட்டுக்கு வந்திடணும்.. எங்கையும் போய் சுத்திட்டு இருக்கக் கூடாது.. அப்புறம்
அங்க இங்கனு ப்ரண்ட்ஸ் கூட சுத்தக் கூடாது” என்று சொல்ல..

“இதென்ன ஜெயில்லா” என்று
அஸ்வினிடம் சிடுசிடுத்தவள் “இல்ல ஜெயில்ல கூட கொஞ்சம் நிம்மதியா  இருக்கும்” – அவனுக்கு கேக்கும்
அளவிற்கே சொன்னாள்.

“இல்லைனா நீ போக வேண்டாம்.. நாளைக்கே டிசி” என்றான் அஸ்வின்.

“சரி ஓகே” என்று பல்லைக் கடித்தவள் கீழே சென்று விட்டாள். பின் அவளைக்
கீர்த்தியோடு அனுப்ப.. வேண்டா வெறுப்பாக கல்லூரிக்குச் சென்றாள்
ராஷ்மிகா.

காரில் வந்து இறங்கிய ராஷ்மிகாவை காலேஜே வேடிக்கை பார்த்தது. அதுவும் கீர்த்தி தான் அஸ்வின் குமார் தங்கை என்றும் அனைவருக்கும் தெரிந்தது.
தன்னுடைய க்ளாஸிற்கு வந்தவள் நேரே சென்று மான்சியின் அருகில் உட்கார
வகுப்பே அவளைத் தான் பார்த்தது.

“என்ன.. என்னை யாரும் பார்த்ததே இல்லையா?” என்று முறைத்தபடிக் கேட்க..
எல்லோரும் திரும்பி விட்டனர்.

“ஏன்டி டென்ஷன் ஆகற? விடு” – என்று மான்சி சமாதானம் செய்ய.. சிவாவையும்
சரணையும் திரும்பிப் பார்த்தாள். ராஷ்மிகா வந்ததை விட முக்கியமாக இருவரும் ஹான்ட் கிரிக்கெட் விளையாட
கடுப்பாகியவள் எழுந்து சென்று இருவரின் தலையிலும் புக்கை வைத்து அடித்தாள்.

“எருமைகளா.. நான் வந்திருக்கேன்.. நீங்க வந்து பேசக்கூட மாட்டாங்களா?” –
என்று அடித்தவள் புக்கை மேசையின் மீது வைத்து இருவரையும் முறைக்க..

“உனக்கென்னமா கல்யாணம்
பண்ணிட்டு ஜாலியா இருக்க” – என்று வேண்டுமென்றே சிவா ராஷ்மிகவை எரிச்சல் பட வைக்க..

“எருமை பிரச்சினை ஆரம்பிச்சதே உன்னால தாண்டா.. அன்னிக்கு
பிரச்சினை ஆரம்பிச்சதே உன்னால தாண்டா” என்று அன்றை நினைவில் சிவாவை அடிக்க..

“இல்லையே.. நீங்க தான் முன்னாடியே கார் பிரச்சினைல பிள்ளையார் சுழி  போட்டிங்களாமே” – என்று கலாய்க்க.. ராஷ்மிகாவோ சொல்லிட்டியா என்பது போல சரணை முறைத்தாள்.

சரணோ “சரி நேத்து ஏன் ரிசப்ஷன்ல மூஞ்சிய அப்படி வச்சிருந்த” என்று
வினவினான்.

“காரணமா தான்” – என்று ராஷ்மிகா சொல்ல.. சரணிற்கோ அவளின் பதில்
உறுத்தியது.

ஏதோ சரண் சொல்ல வர.. சிவா
இடையில் புகுந்தான்.. “ராஷ்மி
கல்யாணம் ஆனதுக்கு ட்ரீட் வை கான்டின்ல..” – என்று கேட்டு மூவரின் முறைப்பையும் வாங்கிக் கொண்டான் சிவா.

“சரண் என்னோட பேக் டா” – என்று அன்று அவன் காரில் விட்ட தனது காலேஜ் பேக்கை கேட்டு வாங்கிக் கொண்டவள்..
முதல் ஹவர் ப்ரொபஸர் வர மான்சியும் ராஷ்மிகாவும் அவரவர் இடத்தில் வந்து
அமர்ந்தனர்.

அற்றைய வகுப்பு முடிய.. ராஷ்மிகாவை ப்ரபோஸ் செய்தவன் அவள் கார்
பார்க்கிங் வரும் சமயம் “இதுக்குத் தான் இந்த காலேஜே வந்திருப்பா போல”
என்று அவன் சொல்ல.. அவ்வளவு தான் உள்ளே இருவாரமாக எரிந்து
கொண்டிருந்தது அவனிடம் திரும்பியது. யாரும் எதிர்பாராத வண்ணம் பளாரென அறைந்தவள்.. விறுவிறுவென்று கோபத்தில் நடந்து காருக்குள் ஏறினாள்
ராஷ்மிகா.

“ராஷ்மிகா வேணாம்.. சொன்னா கேளு.. அவர்கிட்ட சொல்லிட்டு வா.. போலாம்”
என்று இரு தினங்கள் கழித்து வகுப்பு முடிந்து அவள் எழும் சமயத்தில் சொன்னான் சரண்.

“சரண் நீ என்கூட வரலைன்னா சொல்லு.. நானே போயிக்கறேன்” என்று ராஷ்மிகா பிடிவாதமாகச் சொல்ல.. அவளைத் தனியே அனுப்ப மனமில்லாத சரண்..

“நான் வரேன்.. ஆனா உன்னோட ஹஸ்பன்ட் கிட்ட சொல்லு.. அப்புறம் எல்லாரும் போலாம்” – என்று சரண்
சொல்ல..

“சரி இரு பேசிட்டு வரேன்” என்று அந்தப் பக்கம் சென்றவள்.. வெறுமனே சிறிது
நேரம் நின்று விட்டு வந்து “சரின்னு சொல்லியாச்சு.. இப்ப ஓகே வா” என்று ராஷ்மிகா கேட்க.. தோழியின் மேல்
இருந்த நம்பிக்கையில் அவள்
சொன்னதை நம்பினான் சரண்.

ட்ரைவரிடம் ப்ராஜெக்ட் விஷயம் என்று சொல்லிவிட்டு எதிரில் வந்த கீர்த்தியை
கண்டு கொள்ளாது செல்ல.. கீர்த்தியும் இவளைப் பார்த்தும் பார்க்காதது போல காரிர்கு வந்து ட்ரைவரிடம் என்ன என்று
கேட்டு தெரிந்து கொண்டாள் கீர்த்தி. கீர்த்தி அதை நம்பவில்லை.. எப்படியும்
வெளியில் ப்ரண்ட்ஸோடு போகிறாள் என்று நினைத்தவள் அண்ணனிடம்
சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்க.. அந்நேரம் என்று பார்த்து ஃபோன் செய்த ஹர்ஷவர்தனால் அதை
மறந்தாள். அவள் போகும் இடம்
தெரிந்திருந்தால் அண்ணனிடம் சொல்லி அவள் போகும் முன் தடுத்திருப்பாளோ
என்னமோ?

காரில் உட்கார்ந்த ராஷ்மிகா ஃபுல் சவுண்டில் பாட்டை வைக்க.. கார் ஈசிஆர்-இல் உள்ள பப்பிற்கு சென்றது.
தறிகெட்டுத் தவறாகத் திரிய சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டு அரைகுறையுமாக ஆண் பெண் பாகுபாடு
இல்லாமல் அனைவரும் குடித்து கூத்தடிக்கும் இடம். ராஷ்மிகாவிற்கும் அந்த மாதிரி
இடங்கள் பிடிக்காது. எப்படியும்
செய்தியில் வந்த தன்னுடைய முகமும்.. ரிசப்ஷனில் வந்த முகமும் கண்டிப்பாக நிறைய பேருக்குத் தெரியும்.
ரிசப்ஷனிற்கு வந்த சிலர்
அங்கிருந்தாலும் ஆச்சரியம் இல்லை தான். ஃபோட்டோ எடுத்து தனது பேஸ்புக் ட்விட்டர் என அனைத்திலும் பதிவு செய்ய முடிவு செய்திருந்தாள். அவளிற்கு எப்படியாவது அஸ்வினின் பெயரை
கெடுக்க வேண்டும் என்று இருந்தது.

வந்து இறங்கியவள் உள்ளே செல்ல ஆட்டமும் பாட்டமுமாக இருந்த கூட்டத்தின் பக்கம் சென்றாள் ராஷ்மிகா. “ஏய் எங்க போற?” என்று அவளின் கையைப் பிடித்த சரண் “அங்க எல்லாம் ட்ரின்க் பண்ணிட்டு ஆடிட்டு இருப்பாங்க” – என்று
தோழியின் கையைப் பிடித்தவன் மாக்டெயில்ஸ் (பழசாறு) இருந்த பக்கம்
தோழியை அழைத்துச் சென்றான்.

அவர்கள் நான்கு பேரும் போய் உட்கார.. எல்லோரும் கூட்டமாக அரையும் குறையுமாக ஆடிக்கொண்டிருந்ததைப்
பார்த்த ராஷ்மிகா முகத்தைச்  சுளித்தாள். “இது உனக்கு பிடிக்காதே.. அப்புறம் ஏன்
படுத்தி எடுத்து கூட்டிட்டு வர?” என்று சரண் கேள்வியை வீச..

“காரணமாகத் தான்” என்று சொன்ன தோழியை மேலும் கீழும் பார்த்தவன் எதுவும் பேசவில்லை. அதற்குள் அவர்கள் சொன்ன பழச்சாறு வர.. ராஷ்மிகா தான் ஆர்டர் செய்த “மொஜிட்டோவை” எடுத்துக் குடித்தாள். ஒரு விடறு குடித்தவள் அது ஓவராகப் புளிக்க.. முகத்தைச் சுளித்து
விட்டு ஒரே கல்ப்பில் அனைத்தையும் குடித்து முடித்தாள்.

அவள் குடித்தது மொஜிட்டோ தான்.. ஆனால் அவளால் உட்காரவே முடியவில்லை.. அவள் ஒன்று நினைக்க அது ஒன்று நடந்தது. “சரண் நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்” என்று எழுந்தவள் சிறிது தள்ளாட “பாத்து போ ராஷ்மி..
வேணும்னா மான்சியைக் கூட்டிட்டுப் போ” என்றான் சரண்.

“இல்ல நான் போயிக்கறேன்” என்றவள் அனைவரிடமும் சமாளித்து முகத்தைக்
கழுவலாம் ரெஸ்ட்ரூமிற்குள் புக.. பின்னால் இருந்த யாரோ அவளைப் பிடிக்க.. “ஹே.. ஹூ ஆர் யூ” என்று கத்தியவள் அவனிடம் விடுபட போராட
அவளால் முடியவில்லை. தனது நகத்தை வைத்து அவனின் கையில் கீற.. கை
எரிந்ததில் ராஷ்மிகாவை விட.. திரும்பிய ராஷ்மிகாவால் சரியாகப் பார்க்க
முடியவில்லை. கண்கள் மங்கலாகத் தெரிந்தது. மீண்டும் அவன்  ராஷ்மிகாவைத் தாக்க வர “வீல்” என்று அலறியவளுக்கு அவன் அலறிய சத்தமே
கேட்டது.

ஒரு நிமிடம் சமாதானம் ஆனவளுக்கு மயக்கம் ஏற அரை மயக்கத்தில் மயங்கி
யாரோ மேல் சாய்ந்ததை உணர்ந்தாள். அவளைப் பிடித்திருந்த விதமே அஸ்வின்
என்று பறைசாற்ற “அஸ்வின்” என்று முனகிய அவளின் நினைவு முற்றிலுமாய்
மயங்கியது.

அவளைத் தூக்கிய அஸ்வின் ரிஷியை அழைத்து “ரிஷி ஐ வான்ட் ஆல் சிசிடிவி ஃபூட்டேஜ் டு பி டெலிடட்.. ராஷ்மிகா
ப்ரண்ட்ஸ் கிட்ட இன்பார்ம் பண்ணி கிளம்ப சொல்லிடு” என்ற அஸ்வின் ராஷ்மியைத் தூக்கி வந்து தனது காரில்
பின்னால் கிடத்தியவன்.. தனது ஆடிக் காரை எடுத்தான்.

மாலை இருவரும் வந்து விட்டார்களா என்று ஃபோன் செய்த போது “இல்ல குமரா.. ராஷ்மிக்கு ஏதோ ப்ராஜெக்ட்
வொர்க்காம்.. வர லேட் ஆகுமாம்” என்று செல்வமணி கூற.. ராஷ்மியின் ஃபோனை ட்ராக் செய்ய அவள்
எங்கிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான். அவளை அங்கேயே சென்று
இழுத்து வந்து அறையும் எண்ணத்தில் இருந்தவன்.. அங்கு சென்ற போது கண்டது ராஷ்மிகா ரெஸ்ட்ரூமை நோக்கி தள்ளாடியபடி சென்றதும்.. அவள் பின்  ஒருவன் நுழைந்ததும். அதன் பின் நடந்தது அஸ்வினாலே…

காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் ராஷ்மியைத் திரும்பிப் பார்க்க.. அவளோ
மயக்கத்தில் கிடந்தாள்.. “மெண்டல்” “மெண்டல்” “சரியான மெண்டலை பெத்து வச்சிருக்காங்க” என்று பல்லைக் கடித்தவன் வீட்டை அடைந்தான்.

நல்ல வேளையாக அன்னையும் தங்கையும் கோயிலிற்குச் சென்றிருந்தனர். வேலையாள்களும் பின்னால் இருக்க அவனிற்கு வசதியாகப்
போயிற்று. ராஷ்மிகாவை அள்ளி எடுத்த அஸ்வின் அவளைக் கொண்டு போய்
தங்கள் அறையில் கிடத்தி படுக்க வைத்தான். அடுத்து தன் நண்பனான டாக்டர் ரஞ்சித்திற்கு அழைத்த அஸ்வின்.. அவனிடம் விஷயத்தைச் சொல்லி
வீட்டிற்கு வர வைத்தான்.

“ஒண்ணு இல்லடா.. ட்ரின்க்ஸ் தான் கலந்திருக்காங்க.. பர்ஸ்ட் டைம்ல அதான் மயங்கிட்டாங்க.. நீ சொன்ன உடனே நான் போதை மாத்திரையா இருக்குமோன்னு
நினைச்சேன்.. நோ ப்ராப்ளம்” என்று ரஞ்சித் சொல்ல..

“நானும் அப்படி தாண்டா பயந்துட்டேன்” என்று அஸ்வின் சொல்ல.. அவனை
விசித்திரமாகப் பார்த்த ரஞ்சித்..

“அட அஸ்வினுக்கு பயம் வருமா.. இனி இந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட
வேண்டியது தான் ஏதாவது உன் கிட்ட ஆகணும்னா” -என்று ரஞ்சித் நண்பனைக் கிண்டல் செய்ய.. அப்போது தான்.. தான் இத்தனை நேரம் அவளிற்காகத் தவித்த தவிப்பு அவனிற்கு புரிந்தது.

“சரி பை டா” – என்று கிளம்பிய ரஞ்சித்தை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்தவன்..
படுத்திருக்கும் ராஷ்மிகாவைப் பார்க்க தன்னை அறியாமல் அவனிடம் புன்னகை அரும்பியது. ஆனால் ஏன் அங்கே சென்றாள் என்று தான் அவனிற்குப் புரியவில்லை. அன்று இரவு.. இருவரும்
வெளியே சாப்பிட்டு விட்டோம் என்று சொல்லிவிட்டு வந்து அஸ்வின் அவளின் அருகில் படுத்துக் கொண்டான்.

காலையில் எழுந்த ராஷ்மிகாவிற்கு தலை “விண்” என்றுத் தெரிக்க.. சுற்றியும்
முற்றியும் பார்த்தவளுக்கு கண்கள் தெளிவாக இல்லை.. மீண்டும் கண்களை மூடித் திறந்து கண்களைத்
தேய்த்தவளுக்கு கொஞ்சம் தெளிந்தது. நேற்று நடந்ததை நினைவு கொண்டு  பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பயம் எடுத்தது. “அஸ்வின் மட்டும் வரவில்லை என்றால்?” என்று யோசித்தவளுக்கு ஏசி
அறையிலும் வியர்த்தது.

அறைக் கதவு திறக்க.. அவளுக்கு காஃபியை எடுத்து வந்து மேஜை மேல் வைத்தவன் “குடி” என்று இறுகிய குரலில்
சொல்லிவிட்டு பால்கனியில் போய் நின்றான்.

காஃபியைக் குடித்து முடிக்க “அங்க எதுக்குப் போன?” என்று கேட்டபடி உள்ளே
வந்தான் அஸ்வின்.

“சும்மா போலாம்னு” – என்றாள் ராஷ்மிகா தலையைக் குனிந்தபடி..

“நோ.. எனக்கு கரெக்டான பதிலை சொல்லு.. நீ இதுவரைக்கும் அந்த மாதிரி
இடத்துக்கு போனது இல்லன்னு தெரியும்” என்று கேட்டவன் அவளை கூர்ந்து கவனித்தான்.

அவள் ஏதோ சமாளிக்க வாயைத் திறக்க “உண்மையை சொல்லு” என்று அவள்  சொல்ல வந்ததிலேயே அவள் சமாளிக்க வருகிறாள் என்பதைக் கண்டு  கொண்டான்.

ஒரு நிமிடம் தயங்கியவள்
எல்லாவற்றையும் மறைக்காமல் கூறி விட்டாள். “என்னப் பழி வாங்கறதை
மட்டும் யோசிச்சையே.. நம்ம குடும்பத்த பத்தி யோசிச்சையா நீ” என்று கேட்க பெட்டின் மீது அமர்ந்திருந்த படியே ராஷ்மிகா தலை கவிழ்ந்தாள்.

“நீ சொன்னதை பண்ணியிருந்தா கண்டிப்பா என்னோட வைஃப்-னு தான்
வந்திருக்கும்.. ஆனா அஸ்வின் சரியான இடத்துல பொண்ணக் கல்யாணம் பண்ணலன்னு சொல்லி இருப்பாங்க” என்று சொல்ல ராஷ்மிகா வாயே
திறக்கவில்லை.

“இங்க பாரு.. விதியோ சதியோ.. நானும் நீயுன்னு ஆயாச்சு.. இதுக்கு மேல நீ என்ன பண்ணாலும் பாதிக்கப்படறது நம்ம இரண்டு பேமிலி தான்..” என்றவன்
“பாத்து இரு.. நான் ரீசன் இல்லாம எதையும் சொல்ல மாட்டேன்” என்றான்.

“ஸாரி….” என்று அதிசயமாக வந்தது ராஷ்மிகாவிடம் இருந்நு.. அதுவும் அஸ்வினிடம். அஸ்வின் சொன்ன பிறகு தான் குடும்பத்தையே யோசித்தாள் ராஷ்மிகா. 

“எதுக்கு?” என்று அஸ்வின் வினவ..

“எல்லாத்துக்கும்.. நான் தான் தேவை இல்லாம முதல்ல இருந்தே பேசிட்ட-ன்னு
தோணுது” என்று அவள் சீரியஸாகச் சொல்ல..

“இல்லைனா மட்டும் நீ வாய் திறக்க மாட்ட..” என்றவனின் குரலில் நிமிர்ந்தவள்.. அவன் அவளைக் கிண்டல் செய்வது புரிந்து.. அஸ்வினை
முறைத்தாள்.

“ம்கூம்” – என்று முகத்தைத் திருப்பியவள்.. படுக்கையில் இருந்து இறங்கி..

“நேத்து அத்தை இங்க வந்தாங்களா..?” என்று அவர்களுக்குத் தெரிந்து விட்டதோ என்று பதட்டமாக வினவினாள்.

“இல்லையே” – என்றான் அஸ்வின் “தி ஹிந்து”வை புரட்டியபடி.

“அப்புறம் எப்படி நான் ட்ரெஸ்
மாத்துனேன்” என்று ராஷ்மிகா கேட்க.. அவளை நிமிரிந்து பார்த்தவன்..

“நான் தான்” – என்றான் கூலாக..

“வாட்..” – என்று அதிரிந்தவள்.. “நீங்க எப்படி…” என்று ஏதோ கேட்க வர.. அஸ்வினோ புருவத்தைத் தூக்கி கேலிப்
பார்வையை வீச.. மனதிற்குள்
சிணுங்கியவள் தனது உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து
விட்டாள். அவனைப் பிடிக்கவே பிடிக்காது தான். ஆனால் இன்று முதல் முதலாக
அக்கறையாக அறிவுரை கூறி
அமைதியாக பேசுபவனை மிகவும் பிடித்திருந்தது.

ஏதோ யோசனையுடனே வெளியே வந்தவள் “அஸ்வின்” என்று மெல்லிய குரலில் அழைக்க.. “ஓ இவளுக்கு இவ்வளவு அமைதியா பேச முடியுமா?” என்று நினைத்தபடி அவளைப் பார்க்க..

“ப்ரண்ட்ஸ்?” என்று கையை நீட்டினாள்..

ஒரு நிமிடம் அவளையே பார்த்தவன் “ம்ம் ப்ரண்ட்ஸ்” என்று கையைக் கொடுத்தான்
அஸ்வின்.

இந்த நட்பு காதலாய் கூடிய விரைவில் மாறப் போவதை அவர்கள் அறியவில்லை.