யாழ்-17

யாழ்-17
யாழ்-17
“கீர்த்தனா, எங்காவது வெளியில போலாமா?” விடுமுறையன்று ராஷ்மிகா கேட்க,
“போலாமே அண்ணி. ஆனா, அண்ணன்கிட்ட கேட்டுக்கலாம்” கீர்த்தி சொல்ல,
“அய்யோ!” சிணுங்கிய ராஷ்மிகா, “கீர்த்தனா பாசமலரையே மிஞ்சிடுவ போல நீ” என்றாள். அஷ்வினிற்கும் ராஷ்மிகாவிற்கும் சுமுகமானதில் இருந்து இந்த நாத்தனார்கள் பனிப்போரும் முடிந்தது.
ஷோபாவிலிருந்து எழுந்த ராஷ்மிகா, “உன் அண்ணன்கிட்ட சொன்னா, என்ன வேணும்னு சொல்லு. நானே வீட்டுக்கு கலெக்ஷன் கொண்டுவரச் சொல்றேன்னு சொல்லுவாரு” அஷ்வினைப் போலவே சொல்லிக்காட்டி திரும்ப, மாமியார் இவளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தார்.
அச்சுஅசலாக மகனைப் போலவே நின்று பேசிக்காட்டும் மருமகளை பார்வையாலேயே மெச்சியவரிடமும் அசராமல், “அம்மா, என்னம்மா இது? இப்படியா நின்னுட்டு இருப்பிங்க. தர்ஷுக்கு பசிக்குது பாருங்க. ஏதாவது சீக்கிரம் செய்யுங்க” மாமியாரிடமே, அஷ்வினைப் போல் கையை ஆட்டியாட்டி பேசிக் காண்பிக்க, செல்வமணிக்கு மருமகள் பேசிய பாவனையில் சிரிப்புப் பொங்கியது.
“எப்படி கீர்த்தனா? இதானே எப்போமே உன் அண்ணன் டயலாக்” அலட்டியபடி திரும்ப, அஷ்வின் வாயிலில் சாய்ந்து நின்றபடி தன் மனைவியின் செய்கையை கவனித்துக்கொண்டிருந்தான்.
“வேற என்ன மேடம் பேசுவேன்? அதையும் பண்ணிக்காட்டுங்க பாக்கலாம்” கூறிய படியே தங்கையின் அருகில் அமர்ந்துகொள்ள,
“அவ்வளவுதான். வேற எதுவுமில்லை” நாக்கை கடித்தபடியே மாமியாருடன் சமையல்கட்டிற்குள் புகுந்து கொண்டாள் ராஷ்மிகா.
“அண்ணா! அண்ணி எங்காவது போலம்னு சொன்னாங்க. நீயும் வா ண்ணா. எல்லாரும் போயிட்டு வரலாம். ரொம்பநாள் ஆச்சு” அன்புத் தங்கை, ஆசை மனைவியின் விருப்பத்தைக் கேட்க,
“சரி, போய் கிளம்புங்க. போயிட்டு வரலாம்” அஷ்வின் சொல்ல, அதை அம்மா, அண்ணியிடம் சொன்னாள் கீர்த்தி.
பெண்கள் மூவரும் வெளியேவர, “அப்ப, அண்ணா நைட் வெளில சாப்பிட்டு வந்திடலாம்” என்றாள் கீர்த்தி.
“உங்க ப்ளான்தான். இன்னிக்கு நான் ஃப்ரீதான்” என்றவன் தனக்காக அன்னை கொண்டு வந்த டீயைக்குடிக்க ஆரம்பித்தான்.
கிளம்பலாமென்று பெண்கள் அவரவர் அறைக்குள் செல்ல அஷ்வினோ டிவியை ஆன்செய்து செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தான்.
மனைவி சொல்லிக் கிளம்பி வந்த நாகேஷ்வரன், “குமரா! நீயும் போய் கிளம்புனா கரெக்டா இருக்கும்பா” சொல்ல, தலையை ஆட்டிவிட்டு எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றான் அஸ்வின்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன் அப்போதுதான் ராஷ்மிகா தலையை வாரிக்கொண்டிருந்ததை கவனித்தான்.
“இந்த பொண்ணுங்க ரெடியாக ஏன்தான் இவ்வளவு நேரம் ஆகுதோ?” அவன் பாட்டுக்கு தனது கப்போர்ட்டில் இருந்த துணியை எடுத்தபடிச் சொல்ல,
“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ. எங்களுக்கு அந்த அளவுக்கு பாத்துபாத்து ரெடியாகணும். உங்கள மாதிரி ஒரு சட்டை, பான்ட் மட்டும் போட்டுட்டு அப்படியே தலையைக்கூட சீவாம வரமுடியமா?” அவனிடம் திருப்பிக் கேட்க,
“ஹே! அப்ப நீ பொண்ணா. சொல்லவே இல்ல. நான், கீழ அம்மா, தங்கச்சிய சொன்னேன். உன்னை எல்லாம் நான் பொண்ணுன்னு சொல்லுவேனா?” அஷ்வின் வம்பிழுக்க,
“எது நான் பொண்ணு இல்லியா? நான் பொண்ணு இல்லியா?” கேட்டுக்கொண்டே சண்டையிட வந்தவளிடம் “இந்த லிப்ஸ்டிக் ஷேட் நல்லாயில்ல. ரெட் ஷேட் போடு” அவளின் அதரத்தை உற்று நோக்கியபடி அஷ்வின் சொல்ல,
“அப்படியே பேச்ச மாத்தறது” என்று முறைத்தவளை,
“இல்லயில்ல உண்மையாதான். ரெட் வில் லுக் குட் டூ யூ” என்றவன், “சரி
நீ கேட்டதுக்கு பதில் சொல்றேன். நீ எவ்வளவு சண்டை போட்டாலும் உன்ன பொண்ணுன்னு என்னால் அக்ஸப்ட் பண்ணிக்க முடியாது” என்றான் சிரிப்பை அடக்கியபடி.
அவனின் தோளில் அடித்தவள், “போடா ஹிட்லர்” என்றாள். அவள் போய் ரெடியாக அஷ்வின் குளியலறைக்குள் புகுந்தான்.
“நீங்க போயிட்டு வாங்கப்பா. நானும் அம்மாவும் இங்க உக்காந்திருக்கோம்” அந்த மாலில் காஃபி ஷாப் முன்னிருந்த பெரிய இருக்கையில் அமர்ந்த, நாகேஷ்வரனும் செல்வமணியும் சொல்ல அஸ்வின், ராஷ்மிகா, கீர்த்தி ஒன்றாக சென்றனர்.
“என்ன வாங்கறீங்க இரண்டு பேரும்?” அஷ்வின் கேட்க இருபெண்களும் இருவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு அவனிடம் உதட்டைப் பிதுக்கினர்.
“வெறும் கையோட போறதுக்கா வந்தீங்க?” அஷ்வின் வினவ,
“இல்லண்ணா வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கமுடியல. அதான்..” கீர்த்தி பேசிக்கொண்டே போக,
“அதான் இங்க வந்து பேசலாம்ன்னு வந்திங்களா?” தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகக் கேட்டான்.
கீர்த்தியோ இரு புருவத்தைத் தூக்கி அப்பாவியாகச் சிரிக்க “கீர்த்தனா, நீ வா. நம்ம போலாம். சிலபேரு எல்லாம் வந்தா வரட்டும் ,இல்லைன்னா இங்கையே எங்காவது ஓரமா உக்காரட்டும்” அவனைப் பார்த்து வேண்டும் என்றே ராஷ்மிகா சொல்ல,
“ஏ, போடி” என்றவன், “தர்ஷு நீ என்கூட வர்றியா, இல்ல இதுகூட போறியா?” ராஷ்மிகாவை கைகாட்டி, “இது” என்று அஷ்வின் சொல்ல,
“இதுவா?” வாய்பிளந்த ராஷ்மிகா, “கீர்த்தனா, நீ என்கூட வரமாட்டேல்ல” கீழுதட்டை சிணுங்கியபடி வைத்துக்கேட்க கீர்த்திக்கோ, ‘அட யாருடா இதுங்க’ இருவரின் நடுவில் சிக்கமுழித்த நிலையில்,
“அய்யயோ! நான் வரலப்பா. நீங்க என்னமோ பண்ணுங்க. நான் ஏதாவது தனியாபோய் பாத்துட்டு வரேன்” என கழன்றுகொண்டு செல்ல,
“தர்ஷு பாத்து” அண்ணனாக கீர்த்தனாவை அஷ்வின் எச்சரிக்க, திரும்பிய அவளோ, “அண்ணா, நீ அண்ணிகிட்டப் பாத்து இரு” என்று எச்சரித்துவிட்டு நடந்தாள்.
“ம்ஹூம்!” என்ற சத்தத்தில் அஷ்வின் திரும்ப, ராஷ்மிகாவோ, “போலாமா?” என்றாள்.
“எங்க? உங்களுக்குதான் பர்சேஸே இல்லன்னு சொல்றீங்களே, இரண்டு பேரும்” என்றவனிடம், “மால் வந்தா, வாங்கத்தான் வரணுமா? ஜாலியா சுத்தக்கூட வரலாம்” ராஷ்மிகா சொல்ல,
“சரி போலாம். என்னதான் ஜாலின்னு பாக்கலாம்” அவளுடன் நடந்தவன், “நீ ஏன் திடீர்னு மனசு மாறின?” மொட்டையாகக் கேட்டான்,
“என்ன மனசு மாறுன? புரியல” அவள் புரியாமல் வினவ,
“திடீர்னு ப்ரண்ட்ஸா இருக்கலாம்னு சொன்னியே அதைக் கேட்டேன்”
“அது எப்ப பேசுனது. இப்பதான் கேக்க தோணுச்சா? அது.. என் மேலதான் தப்புன்னு தோணுச்சு யோசிச்சு பார்த்தப்ப. அதுவுமில்லாம நான், என்னை மட்டும்தான் சுயநலமா நினைச்சுட்டேன். நீ, நினைச்சிருந்தா என்னை என்ன வேணாலும் பண்ணிருக்கலாம். அதாவது போத் பிஃவோர் அண்ட் ஆஃப்டர் மேரேஜ். பட், நீ அந்த மாதிரி வில்லத்தனமா எதுவும் பண்ணல” என்றவள்,
“ஸோ, நீ என் கண்ணுக்கு கொஞ்சம், அதாவது கொஞ்சம் மட்டும் நல்லவனா தெரிஞ்ச” தன ஆள்காட்டி விரலின் நடுவில் கையை வைத்து அளவு காட்டியவள், “அதான் உன்கூட ப்ரண்ட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.
அதுதான் ராஷ்மிகா. தன் மேல் தப்பு இருக்கிறது என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்க தயங்க மாட்டாள். நீளமாக பேசி முடித்தவளைப் பார்த்து, “அது சரி. நான் கொஞ்சம் இல்ல. ரொம்ப கெட்டவன் ராஷ்மி” தாடையை நிமிர்த்தி வில்லன் போல அஷ்வின் பேச,
“ஹாஹா! சிரிப்புதான் வருது அஷ்வின்” கேலி செய்தவளை பொய்யாய் முறைத்தான்.
“சரி, இங்க ஹாரார் ஹவுஸ் இருக்கு போலாமா?” அஷ்வின் கேட்க,
“அது பயமா இருக்கும்னு மான்சி சொன்னா”
“அதெல்லாம் அவ்வளவா இருக்காது. நீ என்கூட வா” தயங்கியவளை அழைத்துக்கொண்டு விஷமப்புன்னகையுடன் இழுத்துச் சென்றான் அஷ்வின்.
மேல் ஃப்ளோருக்கு வந்த கீர்த்தி, கிப்ட் ஷாப்பில் சும்மா சுற்றிக் கொண்டிருக்க ஒரு ஃப்ரேம் வைத்த ஓவியத்தைப் பார்த்தவள் தன்னை மறந்து நின்று ரசித்தாள். அது கிருஷ்ணரும் ராதையும் ஓடையருகில் இருந்த மரத்தடியில் அமர்ந்து காதல் புரியும் ஓவியம்.
அதிலிருந்த கண்ணனின் சாயலை திடீரென ஹர்ஷாவிடம் உணர்ந்தவள் தன்னை மறந்து புன்னகைத்தாள். அன்று ரிஷப்சன் இரவிற்கு பிறகு அவனை அவளால் பார்க்கவே முடியவில்லை. அவனிற்கும் வேலைப்பளு இருக்க இவளிற்கும் எக்ஸாம் என அனைத்தும் இருந்து நேற்றுதான் முடிந்தது.
ஹர்ஷாவை நினைத்தபடி ஒரு பெருமூச்சுடன் திரும்பியவளுக்கு இன்ப அதிர்ச்சிதான். அவளிருந்த ஷாப்பின் எதிரில் உள்ள ஃபுட் கோர்ட்டில் ஹர்ஷாவேதான் அமர்ந்திருந்தான். துள்ளியெழுந்த மனதோடு அவனை நோக்கி நடக்க கொஞ்ச தூரம் சென்றவள், அப்போதுதான் அவன் எதிரில் அமர்ந்திருந்த நான்கு பெண்களைக் கவனித்தாள்.
இவன் பேசுவதும் அப்பெண்கள் சிரிப்பதையும் கண்டவள், அந்த ஓவியத்தை ஒரு முறை எட்டிப்பார்த்துவிட்டு “நீ கண்ணன்தான்டா” பல்லைக்கடித்தபடி, அவன் அருகிலிருந்த டேபிளில் சென்றமர்ந்தாள்.
பக்கத்து டேபிளில் யாரோ அதுவும் பெண் அமர்வதைக் கண்ட ஹர்ஷா அங்கே திரும்ப கீர்த்தனாஆதர்ஷினியைப் பார்த்தவனுக்கு மனதெல்லாம் பனிச்சாரல். அந்தப் பெண்களை சாக்கு சொல்லி அனுப்பி வைத்தவன் கீர்த்தியின் எதிரில் வந்தமர்ந்தான்.
“ஓய், ஆரஞ்சு மிட்டாய்” அவன் அழைக்க முறைத்தவள்,
“யாரு அவளுக?” வினவினாள். அவள் வயிறோ எரிந்து கொண்டிருந்தது.
“அது ப்ரண்ட்ஸ்டி” அவன் சமாளிக்க,
“டேய்! டேய்! நடிக்காத. உன்னைப்பத்தி அப்பப்ப உன் அக்கா பேசுவாங்க. நானும் ஒருத்திகூட கடலை போடுவன்னு நினைச்சா. இங்க லைன் கட்டி உக்காந்துட்டு இருக்காளுக” என்று புகைந்தாள் கீர்த்தி.
அவளின் பொசசிவ்னெஸில் மனதிற்குள் சிரித்தவன், “ஹிஹிஹி! ஆமா, அக்கா என்ன சொன்னா?”
“அன்னிக்கு பேச்சு வாக்குல. என் தம்பியை சுத்தி எப்போமே பொண்ணுங்க டார்ச்சர் இருக்குனு” என்றவள் உதட்டை சுளித்துவிட்டுப் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.
“நான் யார் பின்னாடியும் போக மாட்டேன் கீர்த்தி” என்றவனை நக்கலாக கீர்த்தி பார்க்க,
“சரிசரி விடு. இந்தக் கண்ணை வச்சே டார்ச்சர் பண்ணுவா இவ” என்று முணுமுணுத்தான்.
கீர்த்தியின் பின்னே இவனல்லவா சுற்றிக்கொண்டிருக்கிறான். அவள் கேட்ட ஸ்வீட் கார்னையும், ஸ்பைஸ் கார்னையும் வாங்கி வந்தவன் அவளின் அருகில் உட்கார கீர்த்தியோ, ‘ஈஈஈஈ’ என்று பல்லைக் காட்டினாள்.
“நீ என்ன இங்க?” ஹர்ஷா வினவ,
“நான் இங்க, அண்ணா, அண்ணி, அம்மா, அப்பாகூட வந்தேன். அவங்க எல்லாம் கீழ இருக்காங்க”
“மிஸ்டர் ஹிட்லரும் வந்திருக்காரா? அதிசயம்தான். தங்கச்சியை எப்படி தனியா அனுப்பிச்சாரு சார்ர்ரு. கையாலாயே வச்சுத் தாங்குவாரே” அஷ்வினை ஹர்ஷா கேலி பேச,
“தங்கைப் பாசம்தான். என் மேலேதான். அவன் உயிரே நான்தான் தெரியுமா? அது சொன்னா உனக்குப் புரியுமா?” தனுஷ் ஷ்ரேயா நடித்த திருவிளையாடல் படப்பாடலை கீர்த்தி பாடிக்காண்பிக்க,
“தெரியாம கேட்டுட்டேன்டி. சாப்பிடு” இரு கைகளையும் அவன் மேலே எடுத்து கும்பிட்டு ஒருநிமிடம் கூட ஆகியிருக்காது,
“அய்யய்யோ சித்தப்பா டி. இங்கதான் வராரு” சக்திவேலைக் கண்டவன், முகத்தை அவருக்குத் தெரியாவண்ணம் மறைத்து எழுந்து, “வா போலாம்” கீர்த்தியின் கையைப் பிடித்திழுத்து, அந்த இடத்தைவிட்டு அகன்று லிப்டிற்கு அருகில் கூட்டிப்போனான்.
கார்னை சாப்பிட்டுக்கொண்டே அவனுடன் வந்தவளை முறைத்தவன், “ஏன்டி உனக்கு பயமா இல்லையா?” என்றிட,
“பயமா எனக்கா? ஹலோ. நான் தி கிரேட் அஷ்வினோட தங்கச்சிடா. எனக்கெல்லாம் அது வராது” கெத்தாகச் சொன்னவளை விழி நிறைய பார்த்தான்.
அவளைப் பார்த்தவனின் கண்கள் அவளது உதட்டில் கடைசியாக வந்து நிற்க, அவனை முறைத்த கீர்த்தி, “மவனே பக்கத்துல வந்த. எட்டி உதைக்கற உதைல லிப்டுக்குள்ள போய் விழுந்திடுவ” என்று முட்டைக் கண்களை உருட்டி மிரட்ட,
அவளின் அருகில் குனிந்தவன் ஸ்பூனை எடுத்து, கீர்த்திக்கு ஒரு வாய் கார்னை அள்ளி ஊட்டிவிட்டவன், “பைடி பேபி. நீ போய் பேமிலியோட என்ஜாய் பண்ணு” என்று அவளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றவனை பார்த்துக்கொண்டே நின்றாள் அவள்.
***
கீழ் ஃப்ளோரில் ஹாரர்ஹவுஸில் இருந்து அலறிக்கொண்டு ஓடி வந்தாள் ராஷ்மிகா. பின்னாலேயே சிரித்தபடி வந்த அஷ்வினை முறைத்தவள், “பொய் சொல்லி ஒண்ணுமில்லைனு கூட்டிட்டு போயிட்டு ஃப்ராடு. உன்ன..” பல்லைக் கடித்தவளின் உடம்பு இன்னும் நடுங்கியது பயத்தில்.
“ஹே, கூல் ராஷ்மி. சும்மா விளையாட்டுக்கு..” அவளின் தோளைப் பிடித்து சமாதானம் செய்து, “சரிவா போலாம்” என்றான் அஷ்வின்.
“ச்சு, ஒரு ஸ்லிப்பரை உள்ளேயே விட்டுட்டேன்” என்றாள். அவள் அலறி அடித்துக் கொண்டு பயத்தில் வந்ததில் செருப்பு கழன்றதுகூடத் தெரியாமல் வந்திருந்தாள்.
அவளின் செயலில் வாய்விட்டே சிரித்த அஷ்வின், “வெறும் வாய் மட்டும்தான்” என்றவன், அங்கு வேலைசெய்யும் ஆளிடம் சொல்லி,அவர் எடுத்துவர, அவரிடம் சென்று வாங்கிய அஷ்வின் திரும்ப, செருப்பை வந்து டக்கென்று வாங்கியவள், “என்ன அஷ்வின்? இன்னொருத்தரோட ஸ்லிப்பரை எல்லாம் கைல எடுத்திட்டு..” என்றவள் காலணியை அணிந்தாள்.
அஷ்வின் எப்போதுமே தன் ஸ்டேட்டஸில் இருந்து இறங்கி வராத ஒருவன். அது அவனை சுற்றியிருக்கும் எல்லோருக்குமே தெரியும் அவனின் குடும்பம் உட்பட. அதாவது அவனுடைய டேர்ம்ஸிலிருந்து இறங்காதவன். அப்படியிருக்க அவளுடைய காலணியை எடுத்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு அதற்குக் காரணமும் தெரியவில்லை.
காலணியை அணிந்தவள், “போலாம் அஷ்வின்” என்றாள் புன்னகை முகத்துடன்.
“இரு. அம்மா அப்பாக்கு கால் பண்றேன். இங்கயே ஒரு செட்டிநாடு ரெஸ்டாரன்ட் இருக்கு. சாப்பிட்டு போலாம். நீ தர்ஷுக்கு ஃபோன் பண்ணி வரச்சொல்லு” ராஷ்மிகாவிடம் பணிக்க இருவரும் ஃபோனில் அழைக்க மூவரும் அங்குவந்து சேர்ந்தனர்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வர சக்திவேல் மேல் தளத்தில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தார்.
“ஏங்க, ராஷ்மிகா அப்பா” கணவருக்கு செல்வமணி காட்ட, நாகேஷ்வரன் அவரிடம் சென்றுபேசினார்.
“சம்மந்தி” அழைத்துக்கொண்டு நாகேஷ்வரன் செல்ல தன்னை அழைப்பதில் திரும்பிய சக்திவேல் சம்மந்தியுடன் சேர்த்து அனைவரையும் பார்த்தார்.
“நல்லா இருக்கீங்களா?” சக்திவேல் கேட்க, இருவரும் பரஸ்பரம் விசாரித்துக்கொண்டனர். சக்திவேல் ராஷ்மிகா அங்கிருந்ததை சட்டை செய்யவே இல்லை.
“நீங்க மட்டுமா வந்திங்க, வீட்டிலெல்லாம் வரலையா?” செல்வமணி கேட்க,
“இல்லம்மா. நான் இங்க ஒரு வசூலா வந்தேன்” என்றவர் அஷ்வின், ராஷ்மிகாவைத் தவிர அனைவரையும் பார்த்து பேசிவிட்டு சென்று விட்டார்.
தந்தை, தன் முகத்தைக்கூட பார்க்கவில்லை என்று எண்ணும்போதே ராஷ்மிகாவிற்கு நெஞ்சில் பாரமாக இருந்தது. தந்தை சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவளை அஷ்வின்தான் ஆதரவாகத் தோளைப் பிடித்து, கார்பார்க்கிங் வரை அழைத்து வந்தான்.
அவனுக்குமே இந்த விஷயத்தில் தனக்கும் பங்குண்டு என்பதை நினைக்கும் போது உறுத்தலாக இருந்தது. மற்றவர்களுக்காக முகத்தை மறைத்த ராஷ்மிகா, முகத்தை புன்னகையாவே வைத்தபடி வந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்த ராஷ்மிகா உடைமாற்ற ட்ரெஸிங் ரூமிற்குள் செல்ல, அஷ்வினோ பால்கனியில் சென்று.நின்றான். ராஷ்மிகா வர தானும் சென்று உடையை மாற்றிவிட்டு வந்தவன், ராஷ்மிகா பால்கனியில் நிற்பதை உணர்ந்து அவளருகில் சென்றான்.
“ராஷ்மிகா” முதல்முறையாக அவள் பெயரை சொல்லி அழைத்தான்.
“ம்ம்” என்று திரும்பியவள் முகத்தை மறைத்தாலும், அவள் கண்களே உணர்த்தியது அவளின் நிலையை.
“உன் அப்பாவை ரொம்ப மிஸ் பண்றியா?”
“ம்ம்” என்று தொண்டையடைக்க வேறுபக்கம் திரும்பினாள்.
“ஃபீல் பண்ணாத ராஷ்மிகா. நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்” அவன் ஆறுதலாய் அவள் கையைத் தன்கைக்குள் வைத்துச்சொல்ல, அவ்வளவு நேரம் ஏதோ ஒன்றின் அடைக்கலத்தைத் தேடி அமைதியாக இருந்தவள் அவனைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
“என்னால முடியல அஷ்வின் ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்பாவும் பேசறதில்ல. சரணும் அந்த பப் விஷயத்துக்கு அப்புறம், நான் பொய் சொல்லிட்டேன்னு பேச மாட்டிறான். ரொம்ப லோன்லியா இருக்கு அஷ்வின்” அவனைத் தன்னையறியாமல் கட்டிப் பிடித்து அவள் அழ, அஷ்வின்தான் நின்ற இடத்தில் சிலையானான்.
அவளுடைய கண்ணீரின் ஈரம் அவன் நெஞ்சில்பட இரும்பாய் இருக்கும் அவனின் இதயமும் உருகியது.
அவளது தலையை பிடித்தவன், “எல்லாம் சரியாகிடும் ராஷ்மிகா. அழாத. என்னால வந்த பிரச்சினையை நானே தீர்த்து வைப்பேன். கொஞ்சம் வெயிட் பண்ணு” அவளைத் தேற்றியவன், படுக்கைக்கு அழைத்து வந்து உறங்கச் சொல்லிவிட்டு தானும் படுக்கையில் விழுந்தான். அவனின் மனம் பலவாறாய் யோசித்தது.
பிசினஸ்மேன் அல்லவா?
நான்கு மாதங்கள் சென்றது.
ஒரு நாள் அஷ்வின், “ராஷ்மிகா, நான் பிசினஸ் விஷயமா மூணுமாசம் யூ.கே போறேன்” சொல்ல ராஷ்மிகாவோ, “ம்ம்” மட்டும் சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“என்ன? ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட?” புருவம் சுருக்கி அவன் வினவ,
“ஐ வில் மிஸ் யூ” என்றவள், அவன் என்ன நினைப்பானோ என நினைத்து, “ஒரு ஃப்ரண்டா, நான் உன்னை மிஸ் பண்ணுவேன் அஷ்வின்” என்றாள்.
“இந்த மூஞ்சி ராஷ்மிகா மூஞ்சி இல்லியே” அவளை கண்ணாடி முன் அழைத்துச் சென்று, “ராஷ்மிகா மூஞ்சி எப்போமே சிரிச்சுட்டே இருக்கும், இல்ல முறைச்சிட்டே இருக்கும். ஆனா, சோகமா இருக்காது” என்றான்.
அவனைத் திரும்பிப் பார்த்தவள், “ம்கூம்” அவனை விட்டுத்தள்ளி வந்தாள் புன்னகைத்தபடியே.
“அடிக்கடி ஃபோன் பண்ணுங்க” என்று வேறு அவள் சொல்ல,
“இது வைஃபா சொல்ற அட்வைஸா. இல்ல ஃப்ரண்டாவா?”
“எது வேனாலும் எடுத்திக்கலாம்” என்றாள் ராஷ்மிகா.
அடுத்தநாள் வீட்டினர் அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பியவன், “ராஷ்மிகா நீயும் கிளம்பு. வரும்போது கார்ட் யாராவதுகூட வந்திடு” அஷ்வின் அழைக்க, அவனுடன் சென்றாள். அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ கஷ்டமாகவே இருந்தது. அவனை அவமானப்படுத்தி பிரிய எண்ணியவளுக்கு இன்று அவன் பிரியும்போது மனம் கனத்தது.
ஏர்ப்போர்ட் சென்றவன், “உனக்கு ஒரு சின்ன கிப்ட் தரேன் இரு” என்றவன், அவளின் கண்களை மூடச் சொல்ல அவன் சொல்வதைத் தட்டாமல் செய்தாள் ராஷ்மிகா.
“கண்ணத் திற” அஷ்வின் சொல்ல சரண்தான் நின்றிருந்தான்.
“ஸாரி ராஷ்மி!” சரண் சொல்ல,
“நான்தான் பொய் சொல்லிட்டேன்னு நீ என்கிட்ட பேச மாட்டியே” சரணைக் குத்திக்காண்பித்தாள் ராஷ்மிகா.
“ஸாரி ராஷ்மி. உனக்கு அட்வைஸ் பண்ணேன் தவிர என்னால, நீ என்ன மைன்ட்செட்ல இருந்தேன்னு புரிஞ்சுக்க முடியல. உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் ஸாரி” சரண் கெஞ்சும் குரலில் பேச,
“இருஇரு. இதுக்கெல்லாம் இருக்கு உனக்கு. நாளைக்கு காலேஜ் வந்து பாத்துக்கறேன்” அவள் மிரட்ட பயந்த மாதிரி நடித்தவன், “நான் வெளில வெயிட் பண்றேன் வா” என்றவன் அஷ்வின் முன் தலையை ஆட்டிவிட்டு இருவருக்கும் தனிமையளித்து நகர்ந்தான்.
அவன் செல்வதை சிரிப்புடன் பார்த்துவிட்டு ராஷ்மிகா திரும்ப அஷ்வின், “ஐ லவ் யூ, ராஷ்மிகா” என்று அவள் கையில் அவளிடமிருந்து பிடுங்கிய ஃபோனை வைத்தான்.
“இது உன்னோட சென்டிமென்ட் ஃபோனாமே. சரண் சொன்னான்” என்றவன்,
“எவ்வளவோ காஸ்ட்லி கிப்ட் தேடினேன். சரணை மீட் பண்ணி பேசுனப்ப தான் தெரிஞ்சுது. ஸோ, இதைவிட ஒரு பெஸ்ட் கிப்ட் குடுத்து உன்னை ப்ரபோஸ் பண்ண முடியுமான்னு எனக்குத் தெரியல” என்ற அஷ்வின் அவளின் நெற்றியில் தன் முத்தத்தை பதித்து கணவனாய் அவளின் மனதில் பதிந்தான்.
கல்யாணமான புதிதில் அவள் இந்த ஃபோனைப் பற்றிக்கேட்ட போது, “அந்த ஃபோன் இப்ப எந்தக் குப்பைல இருக்கோ?” அஷ்வின் சொன்னது நினைவிற்கு வந்தது ராஷ்மிகாவிற்கு.
பேசவந்த ராஷ்மிகாவின் வாயில் கை வைத்தவன், “எதுவும் இப்பவே சொல்லாத. அப்புறம் என்னால ப்ளைட் ஏற முடியாது” என்றவன், “நான் இங்க வந்து லேண்ட் ஆகும்போது சொல்லு” என்று அவளை ஒரு கேசுவல் ஹக் செய்து கிளம்பிவிட்டான்.
ராஷ்மிகாதான் அவனின் இந்த மென்மையான பக்கத்தை உணர்ந்து சிலையாய் நின்றாள்.