யாழ்-18

IMG-20210214-WA0021-37a34e8e

யாழ்-18

யாழ்-18

யாழ்-18

அஷ்வின் கண்ணிற்கு மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றிருந்த ராஷ்மிகாவின் கண்களில் நீர் திரண்டது ஆனந்தத்தால். அஷ்வின் சென்ற பிறகு அவன் சென்றிருந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள் சிறிது நேரம் கழித்து வெளியே வர ரிஷியும் அவனுடைய ஆட்களும் அவளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

“என் ஃப்ரண்ட் சரண் எங்க?” ரிஷியிடம் ராஷ்மிகா கேட்க,

“அவர் கார்ல இருக்காரு” சொல்லியபடியே ரிஷி அழைத்துச் செல்ல, காரில் ஏறி அமர்ந்த ராஷ்மிகா,
“இங்க பாரு” தனது பழைய ஃபோனைக் காண்பித்து, “அஷ்வின் குடுத்தாரு” என்றாள்.

“ஓஹோ! அதுக்கு தான் அன்னிக்கு ஃபோன் பத்தி பேசும்போது அப்படி கவனிச்சாரா?” என்றவன் நீண்ட நாள் பேசாமலிருந்ந தோழியிடம் நிறைய பேச ராஷ்மிகாவும் இணைந்தாள்.

இருந்தாலும் மனம் அவ்வப்போது அஷ்வினை நினைத்தது. வழியில்
ஒரு வேலையாக சரண் இறங்கிக் கொள்ள நீலாங்கரைக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தாள் ராஷ்மிகா.

உள்ளே வந்தவளிடம் செல்வமணி ஏதோ கேட்க, அதற்கான பதிலை மட்டும் சொன்னவள், “நான் மேல போறேன் அத்தை” என்று தங்களுடைய அறைக்கு வந்தாள்.

அறைக்குள் வந்தவளுக்கு அஷ்வினின் ஞாபகமே ஆக்கிரமித்தன. அவன் அவளை வம்பிழுத்தது, திட்டியது, அதட்டியது அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு ஞாபகம் வந்து, இறுதியாக அவன் ப்ரபோஸ் செய்தது மனக்கண்ணில் வந்தது.

அவளால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அதற்கு அவன் குடுத்த கிப்ட்டும். வசனங்கள் இல்லை. அமைதியான சூழ்நிலை இல்லை. ஆனால், மூன்றே வார்த்தையில் நச்சென்று அவள் மனதில் காதலை அடித்துவிட்டுச் சென்றிருந்தான்.

அவனது கப்போர்ட்டைத் திறந்தவள் அவனுடைய சட்டை ஒன்றை கையில் எடுத்து, அதில் தன் இதழைப் பதிக்க அதில் இருந்து வந்த அவனுக்கே உரிய மணம், அவளை தலைவனின் வருகைக்காக ஏங்கும் தலைவியைப் போல ஏங்கச்செய்தது. அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்று ஆவல் பிறந்தது.

ஆனால், அவன் வந்தபின் தான் அவனைப் போலவே நேரில் சொல்ல வேண்டுமென்று நினைத்தவள், இப்போதைக்கு அவன் சட்டையை அணிந்து கொண்டு பெட்டில் அமர்ந்தாள்.

“உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் அஷ்வின்” முணுமுணுத்துத் தன்னைத் தானே இறுக கட்டிக்கொண்டு அமர்ந்தவளுக்கு அஷ்வினே உடன் இருப்பது போல இருந்தது.

கதவை யாரோ தட்ட, “ம்ம், வரேன்” எழுந்தவள் அப்படியே சென்று கதவைத் திறக்க, கீர்த்திதான் நின்றிருந்தாள்.

“வா கீர்த்தி” அவள் உள்ளே வர வழியே விட்டவள், அவள் அமர்ந்த பின்,

“ஏதாவது நியூ மூவிஸ் வச்சிருக்கியா?” என்று கேட்டாள்.

“ம்ம், இருக்கு அண்ணி”

“கீர்த்தி, நான் ஒண்ணு கேட்பேன். உண்மையை சொல்லு”  கேட்க கீர்த்திக்கோ, ஹர்ஷா விஷயம் தெரிந்துவிட்டதோ என்று நினைத்து திக்கென இருந்தது.

இருந்தாலும் அண்ணனின் இரத்தம் உள்ளே ஓடுகின்றது அல்லவா. முகத்தை சடுதியில் மறைத்து, “கேளுங்க” என்றாள்.

“உன் அண்ணனுக்காகத் தானே, என்னை அக்ஸப்ட் பண்ணி பேசிட்டு இருக்க?” ராஷ்மிகா வினவ,

“இல்லையே அண்ணி”

“அப்படியா, எனக்கே தெரியும் கீர்த்தி. நான் ஒரு சில டைம் அட்ஜஸ்ட் பண்ணி போக மாட்டேன். இங்க வந்ததுல இருந்து ஒரு சில விஷயம் நீ, எனக்காக ரொம்பவே அட்ஜஸ்ட் பண்ணிருக்க. தேங்க்ஸ் எ லாட்” என்றாள் அவளின் கைகளில் தன் கைகளை வைத்தபடி.

“எனக்கு பர்ஸ்ட் உங்களை பிடிக்கலதான். என்னால உங்களை அண்ணியாவே ஏத்துக்க முடியல, அந்த ராக்கிங் பிரச்சினையினால. பட், நீங்க அம்மாக்கிட்ட பேசும் போது நல்லா பழகுவிங்க. நிறைய டைம் கவனிச்சேன். நெக்ஸ்ட் கொஞ்ச நாள்ல நீங்களும் அண்ணனுமே சரி ஆகிட்டிங்க. அதான் நானும் உங்ககூட நார்மல் ஆகிட்டேன்” என்று சொன்னவளை ராஷ்மிகா கண்டு புன்னகைத்தாள்.

“ஆமா, என்ன எங்க அண்ணன் சட்டையைப் போட்டிருக்கிங்க?” கைகளை பின்னால் ஊன்றியபடி கீர்த்தி கேட்க,

“இது என் அஷ்வின் சட்டை” மிதப்பாக ராஷ்மிகா சொல்ல,

“ஓ, அப்ப என் அண்ணனை புடிக்குமோ?” கீர்த்தி வினவினாள்.
“ஆமா, கொஞ்சம்” முகத்தை சுருக்கி வைத்து சொன்ன ராஷ்மிகாவின் முகத்தில், அஷ்வினின் நினைவில் மலர்ச்சி பொங்கியது.

“ம்ம்.. ம்ம்.. நடந்துங்க நடத்துங்க” என்றவள், “சரி பை. நான் போய் அசைன்மென்ட் எழுதறேன்” கீர்த்தி அறைக்குச் செல்ல, ராஷ்மிகாவிற்கு அஷ்வினின் நினைவுகளே.

அடுத்து வந்த நாட்களில் ராஷ்மிகாவிற்கு ஃபைனல் இயர் ப்ராஜெக்ட் என அனைத்தும் பிசியாகச் சென்றது. அஷ்வினும் இல்லாததால் கீர்த்தியோடு காலேஜ் சென்று அவளுடனே வந்து கொண்டிருந்தாள். அஷ்வினும் மனைவி, தங்கை மேல் ஒருகண்ணை வைத்திருந்தான்.

ரிஷிதான் அவர்களுக்கு முழு பாதுகாப்பாகவே இருந்தான். வீட்டிற்கு வந்தால் மாமியாருடன் ஏதாவது சமையல் அறைக்குள் உருட்டுவது, அல்லது மாமனாருடன் ஸ்போர்ட்ஸ் பற்றி பேசுவதென எதையாவது பேசிக்கொண்டிருப்பாள் ராஷ்மிகா.

அவ்வப்போது வீட்டினருக்கும் பேசுவாள். சிவகுமார் வாரம் தவறாமல் மகளை எங்காவது பார்த்துவிடுவார். “ஏன் பெரியப்பா வீட்டுக்கே வர மாட்டேன்றீங்க?” ஒருநாள் ராஷ்மிகா கேட்க,

“இல்லாடா. உன்அப்பா வேற இன்னும் கோவமாதான் இருக்கான். உன்கிட்ட பேசறதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டான். ஆனா, நான் அங்க வந்தா அவனை மதிக்காத மாதிரி இருக்கும்டா” என்று மகளிற்கு புரிய வைத்தார்.

“அப்பா, என்னை பத்தி ஏதாவது கேட்பாரா பெரியப்பா?” ஏக்கமாகக் கேட்க சிவகுமாருக்கோ தர்ம சங்கடமாக இருந்தது.

“இல்ல” அவர் தலையை ஆட்ட ராஷ்மிகாவிற்கு தான் தந்தையின் நினைவில் வருத்தமாக இருந்தது. பின், சிவக்குமாரே அவளை பத்திரமாக டிரைவரோடு அனுப்பியும் வைத்துவிடுவார்.

அம்மா, பெரியம்மா, தம்பி என அனைவருடன் பேசும்போது தந்தையைப் பற்றி விசாரிக்கத் தவறமாட்டாள். அவளே நேராக சக்திவேல் செல்போனிற்கு அழைத்தாலும் முழுரிங் போய் கட்டாகும். எடுக்கவே மாட்டார் சக்திவேல்.

ஆனால், அலுக்காமல் தினமும் கூப்பிட்டுப் பார்த்து ஏமாந்து கொண்டிருந்தது ராஷ்மிகாவின் மனம். அவளின் சோகம் கொஞ்சநேரம் தாக்குப் பிடிக்காது. அஷ்வின் இரவு அழைத்துவிடுவான். ஸ்கைப்பில் இருவரும் பேசிக்கொண்டு இருக்க, ஒவ்வொரு சமயம் பேசப்பேச லேப்டாப்பை பெட்டில் வைத்தபடி தூங்கியும் விடுவாள் ராஷ்மிகா.

அங்கு ஏர்ப்போர்ட்டில் பேசியதை இருவரும் மறந்துகூடப் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், உள்ளுக்குள் இருவருக்கும் எப்போது நேரில் மீண்டும் பார்க்கப் போகிறோமென்ற ஆசைகள் வளர்ந்துகொண்டே சென்றது. அஷ்வின், அதை எளிதில் அடக்க ராஷ்மிகாதான், அவன் இல்லாமல் தவித்தாள். எவ்வளவு கோபம் இருந்ததோ இப்போது அதைவிட பலமடங்கு அவனை பிடிந்திருந்தது.

ஒருமாதம் எளிதாகப் பறந்தது.

“அஷ்வின் எப்பதான் வருவ?” மதியமே காலேஜ் முடிந்து வந்தவள் ஃபோனில் அவனிடம் வினவ,
“இன்னும் ஃபைவ் மன்த்ஸ் ஆகிடும் ராஷ்மி. லேட்டாகும்” அவன் சொன்ன பதிலில் முகம் சுருங்கியவள், “சரி அஸ்வின். ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு. நான் வைக்கிறேன்” கோபமாகச் சொல்லியவள் ஃபோனை வைத்துவிட்டாள்.

“என்ன அண்ணி ஒரு மாதிரி இருக்கீங்க?” இரவு உணவின் போது கீர்த்தி வினவ, “தலைவலி கீர்த்தி” என்று சமாளித்தாள் ராஷ்மிகா. இரவு வரை இருந்த கோபம் கொஞ்சம் குறைய, ‘வேலை முடிஞ்சிருந்தா வராம இருந்திப்பானா’ ராஷ்மிகாவின் மனசாட்சி உறைக்க அஷ்வினிற்கு அழைத்தாள்.

“ஸ்விட்ச் ஆஃப்” என்றுவர அவன் கோபம்கொண்டு விட்டான் என்று எண்ணி, அவளுக்கு இரவுவரை இருந்த கோபம் அழுகையாக மாறியது.

“ஸாரி” என்ற மெசேஜை அனுப்பிவிட்டுப் படுத்தவளுக்கு கண்ணீர் நின்றபாடில்லை. அழுவதற்கே பிடிக்காதவள் இன்று அஷ்வினிற்காக கண்ணீர்விட்டது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

காலை நான்கு மணிக்கே கண்களை மூடியவள், காலேஜ் கிளம்புவதற்காக காலை கண் விழித்தபோது, பின்னால் இருந்து அவளை அப்படியே இரு கரங்கள் அணைத்தது. அவளோ பயமே இல்லாமல் பின்னால் திரும்பி பார்த்துவிட்டு, “எப்பபாரு கனவுல இதே வேலைதான் அஷு உனக்கு” தூக்க கலக்கத்தில் உளற,

ராஷ்மிகா சொன்ன வார்த்தைகள் புரிந்தவன், “குட் மார்னிங்டி” என்றவாறே அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். அவன் செய்கையில் கனவில்லை நிஜமென்று உணர்ந்தவள், அவனிடம் இருந்து விலகி அமர்ந்து, “அப்ப பொய் சொன்னியா?” தலையணையால் கோபமாக அடிக்க, காலை நேரத்தில் வெண்மை நிற நைட் ட்ரெஸில் விரிந்திருந்த கூந்தலுடன் தன்னை அடிக்கும் மனைவியை ரசித்தபடி அவளை எளிதாகத் தடுத்தான்.

“ஏய்! ரௌடி நிறுத்து. உனக்கு சர்ப்ரைஸ் தரலாம்ன்னு தான், நேத்து வேணும்னே அப்படி சொன்னேன்” என்றவன் அவளைப் பார்த்து, “ஏமாந்துட்டியே ராஷ்மிகா” என்று, ‘உச்’ கொட்டி கேலி செய்தான்.

“ஆமா, நேத்து மதியம் எங்கிருந்து பேசுனிங்க? அப்புறம் ஏன் ஸ்விட்ச் ஆஃப்” 

“நான், நேத்து மதியமே துபாய் வந்துட்டேன். அங்கிருந்து எனக்கு லேட் ஈவ்னிங்தான் ப்ளைட். அதான், அந்த டைம்ல கூப்பிட்டேன்” என்று கண்ணடித்தான் அஷ்வின்.

“அப்படியே கண்ணை நோண்டிடுவேன்” என்றவள் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள். அவளின் செயலில் சிரித்தவன் கண்களைமூடி, பயண அலுப்பில் படுக்கையில் விழுந்தான்.

பல் விலக்கி வந்தவளிடம், “இன்னிக்கு காலேஜ் போறியா ராஷ்மி?” அஷ்வின் கேட்க,

“இல்ல” என்றாள்.

“ஏன்?” அஷ்வின் தனக்காக என்று சொல்லி விடமாட்டாளா என்ற எதிர்பார்ப்பில் கேட்க,
“ம்ம், அது வந்து, இன்னிக்கு என்ன ஒருத்தர் காலைலயே தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டாரு. சரி அவர்கிட்ட பேசலாம்னு” ராஷ்மிகா சுற்றி வளைத்து மூக்கைத் தொட, அவளது பதிலில் சிரித்த அஷ்வின், “ஏன் கண்ணு ஒரு மாதிரியிருக்கு?” என்று அப்போதுதான் அவள் கண்ணை கவனித்தவனாகக் கேட்டான்.

“அது நைட் சரியா தூங்கலை” பெட்டில் வந்து அவள் தலையணையில் ராஷ்மிகா விழ,

“நானும் இன்னிக்கு ஃபுல்லா தூங்கத்தான் போறேன். பேசாம நீயும் தூங்கு. ஆனா, அதுக்கு முன்னாடி ஒண்ணு இருக்கு. குளிச்சு கிளம்பி கீழே போலாம். நீ இன்னிக்கு சேரி கட்டு” அஷ்வின் அவளைக் கிளப்பி, கீழே அழைத்துக் வந்தான்.

சாப்பிட்டுவிட்டு அனைவரும் உட்கார அனைவருக்கும் வாங்கி வந்ததை எடுத்துத்தந்தான் அஷ்வின். “ஏன் குமரா? ராஷ்மிக்கு எதுவும் நீ வாங்கிட்டு வரலையா?”  ராஷ்மிகாவிற்கு எதுவும் தராததைக் கண்டு செல்வமணி கேட்க,

“அவளுக்கு நான் வச்சிருக்கேன்” என்றவன் தங்கையிடம் கண்களைக் காட்ட, ராஷ்மிகாவின் கண்களை மூடிய கீர்த்தியோ, “அண்ணி எந்திரிங்க” என்று அவளை நகர்த்தினாள்.

அவளை சிறிது எட்டு நடக்க வைத்த கீர்த்தி கண்களைத் திறக்க, “ஸாரி ராஷ்மிகா. அப்ப, அவசரத்துல உனக்கு அந்த மாதிரி பண்ணது எனக்கே உறுத்தது” என்றவன் கையில் கனமான தங்கத்தாலியை தன்னவளிடம் காண்பித்தான்.

அன்னை தந்தையின் மனதை நிரப்பியவன் தாலியையும் இன்னும் பிரித்துக் கோர்க்காததால் அவளிற்கு இன்று தங்கத் தாலியை அணிவித்தான்.

“ஹப்பாடா! நான், அன்னிக்கு சுடிதாரோட கல்யாணம் ஆகிடுச்சேனு நினைச்சேன். ஆனா, இன்னிக்கு சேரி” உதட்டை மடக்கி ராஷ்மிகா சிரிக்க, அஷ்வினோ அவளது இந்தக் கேலியில் முறைக்கத் தோற்று சிரித்தான்.

பின் சாப்பிட்டுவிட்டு இருவரும் வந்து உறக்கத்தைத் தேடி கண்களைமூட, இனித் தூங்கவே மாட்டோம் என்று நினைத்தார்களோ என்னமோ என்பதுபோல தூக்கத்தில் கிடந்தனர்.

மாலை நான்கு போல, யாரோ முனகும் சத்தம் கேட்டு கண்களை முழித்த அஷ்வின் சத்தம் வந்த திசையைப் பார்க்க ராஷ்மிகாதான் முனகிக் கொண்டிருந்தாள்.

“ராஷ்மி” அவள் அருகில் சென்றழைக்க,

“ம்ம்” சத்தமே வந்தது அவளிடமிருந்து.

“என்ன பண்ணுது” அஷ்வின் அவளை மெதுவாகத் திருப்பி வினவ,

“மன்த்லி சைக்கிள்தான் அஷ்வின். இன்னிக்கு மதியம்” கால்களை வலி தாங்கமுடியாமல் மடக்கிக்கொண்டு ராஷ்மிகா சொல்ல,

“கால் வலிக்குதா?” அக்கறையாகக் கேட்டான் அஷ்வின்.

“ம்ம்”

அவள் சொன்னவுடன், அவள் காலின் அருகில் சென்றவன் அவள் பாதங்களைத் தூக்கித் தன் மடியில் வைத்தான். கால்களை இழுக்கப் பார்த்தவளை, “ராஷ்மி” என்று அஷ்வின் அதட்ட பேசாமல் கால்களை நீட்டினாள் அவள்.

அவளது பாதங்களை சிறிதுநேரம் பிடித்து விட்டவன், “ராஷ்மி! கீர்த்தி இந்த மாதிரி டைம்ல ஹாட் வாட்டர்ல கால் வைப்பா. ஹாட் வாட்டர் எடுத்திட்டு வரட்டா?” அவளின் முகத்தைப் பார்த்தபடிக் கேட்க,

“அதெல்லாம் வேண்டாம்” என்றவள், “நீயே பிடிச்சுவிடு” வேண்டும் என்றெ ஜம்பமாகக் கால்களை இன்னும் நீட்டி வைக்க, அந்த நிலையிலும் அவளின் இந்தக் குணத்தைக் கண்டவன்,

“திமிரு. உடம்பெல்லாம் திமிரு” என்றவன் கால்களைப் பிடித்துவிடத் தவறவில்லை. சிறிதுநேரம் அஸ்வின் அவளது பாதத்தைப் பிடிக்க,

“போதும்” கால்களை ராஷ்மிகா இழுத்துக்கொள்ள அஷ்வினும் எதுவும் சொல்லவில்லை.

இருவரும் கீழே செல்ல, “ஏன்பா குமரா. நீயும் ராஷ்மியும் எங்காவது வெளியில போயிட்டு வர்றது ஒரு வாரத்துக்கு” என்று ஆரம்பித்தார் செல்வமணி.

“ஒருவாரம் போகட்டும்மா. எனக்கும் ஒருசில வேலை முடியணும். இவளுக்கும் இப்ப ஒரு வாரத்துக்கு முடியாது” அஷ்வின் சொல்ல, செல்வமணி புரிந்து கொண்டார்.

ஒருவாரம் சென்றது,

“ராஷ்மி எல்லாத்தையும் எடுத்து வச்சிக்க. சீக்கிரம் கிளம்பேன்டி. எவ்வளவு நேரம் மேக்கப் பண்ணுவ?” என்று அஷ்வின் பொறுமை இழந்தவனாய் சலிக்க,

“நான் இப்படிதான் ரெடியாவேன். கிளம்பு கிளம்பு”  ராஷ்மிகா பேச,

“எல்லாம் என் நேரம்டா” என்றான் அஷ்வின் தலையிலடித்தபடி.

கல்யாணமாகி ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இருவரும் ஹனிமூனிற்கு மால்தீவ்ஸ் செல்கிறார்கள். எத்தனையோ நாடுகள் கேட்டுப்பார்த்தும் இதுவே போதுமென்று பிடிவாதமாய் இருந்துவிட்டாள் ராஷ்மிகா. அதற்குத்தான் இந்த அக்கப்போர்.

“குமரா! பத்திரமா போயிட்டு வாங்க” அவர்கள் கிளம்பும்போது நாகேஷ்வரனும் செல்வமணியும் வழி அனுப்ப கீர்த்தியோ, ராஷ்மிகாவைக் கண்டு, “ஜமாய்” என்று அனுப்பி வைத்தாள்.

இருவரும் மால்தீவ்ஸ் வந்து இறங்க ராஷ்மிகாதான் தூங்கி வழிந்து கொண்டு இருந்தபடியே வந்தாள்.
அவர்களுக்காக புக் செய்திருந்த ரெசார்ட்டிற்கு வர, “அப்பாடா” என்று அயர்வாக பெட்டில் விழுந்தாள்.

ரெஸ்ட் ரூமிற்கு போய் வந்த, அஷ்வின் அவள் படுத்திருப்பதைப் பார்த்து, “என்ன படுத்துட்ட?”  சிரித்தபடியே அங்கிருந்த கர்ட்டனை விலக்க, மாலை நேர வெயில் அந்த கண்ணாடியறை வழியாக உள்ளே விழுந்து அவளின் கண்களைக் கூசச் செய்தது.

“அஷ்வின்..” சிணுங்கியபடி கண்களைத் திறந்தவள், அந்தக் கண்ணாடி அறை வாயிலாக தெரிந்த, பீச்-வ்யூ முழுதிலும் சொக்கித்தான் நின்றாள்.

எழுந்து வந்து கண்ணாடி அருகே அவள் நிற்க, சூரியன் அஸ்தமனமாக இருந்த நேரமோ வானத்தை குங்கும நிறமாய்க் காட்டியது. மாலைநேர கடற்கரையோ சூரிய ஒளி பட்டுத் தங்கமாய் மின்னிக் கொண்டிருந்தது. அவள் கண்ணாடி அருகே நிற்க, கண்ணாடியை ரிமோட் மூலம் அஷ்வின் திறக்க, அந்த கடற்கரைத் தென்றல் வந்து ராஷ்மிகாவின் தேகங்களில் மோதி அவள் கூந்தல் எல்லாம் அலைஅலையாகப் பறந்தது.

உறுதியான மரத்திலான பால்கனியில் வெளியே வந்து ராஷ்மிகா நிற்க, கடலோ அவள் காலுக்குக்கீழ் இருந்தது. அருகில் வந்து நின்ற அஷ்வினைக் கண்டவள் “சூப்பர் வ்யூ, அஷ்வின்” என்றாள் கண்களை எடுக்க முடியாமல்.

“எஸ், இட்ஸ் எ சூப்பர் வ்யூ!” என்றான் அவளையும், அவளது வலது பக்கமிருந்த கடலையும் ஒன்றாகக்கண்டு. ஆனால், ராஷ்மிகாதான் அதைக் கவனிக்கவில்லை.

“அஷ்வின் பசிக்குது” என்று ராஷ்மிகா தன் வயிற்றில் கடலாய் அமிலம் சுரப்பதை உணர்ந்து தொடங்க,

“சரி, டிரெஸ் மாத்திட்டுவா போலாம்” என்றவன், இயற்கையை ரசித்தபடி அங்கேயே நிற்க ராஷ்மிகா உள்ளே சென்று, த்ரீ போர்த் ஜீன்ஸையும், லூஸ் டீ-சர்ட்டையும் அணிந்து வந்தாள்.

“அஷ்வின் போலாம்” ராஷ்மிகா அழைக்கத் திரும்பியவன், அவள் உடலிற்கு கச்சிதமாக இருந்த உடையைக்கண்டு, அதில் தெரிந்த அவளின் அங்கங்களைக் கண்டு, அவன் கண்கள் போகக்கூடாத இடங்களுக்கெல்லாம் சென்றது.

அதைக் கவனிக்காமல் அவளது ஃபோனை சார்ஜில் இருந்தெடுத்த ராஷ்மிகா, “போலாம் அஷ்வின்” அழைக்க சுயநினைவிற்கு வந்தவன் அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அங்கிருந்த ரெஸ்ட்டாரண்டிற்கு இருவரும் செல்ல, “அஷ்வின், பீச் வ்யூவே போலாமே?” அவன் கைகளோடு தன்கைகளை ராஷ்மிகா கோர்த்துக்கொண்டு கேட்க, “சரிவா” என்று, அவளை அழைத்துக் கெண்டு போனான்.

“உனக்கு ஸீ ஃபுட் ஒத்துக்குமா?” அஷ்வின் மெனுவைப் பார்த்தபடி ராஷ்மிகாவிடம் வினவ,

“அதெல்லாம் ரொம்ப பிடிக்கும்” அவள் ஆர்டரை சொல்லிவிட்டுத் திரும்ப, அஷ்வினும் ஆர்டரை சொல்லி அனுப்பினான்.

“குண்டூஸ்” அஷ்வினின் குரலில், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த

ராஷ்மிகா, “யார சொன்னிங்க?” கேட்டு முறைத்தாள்.

“உன்னதான்.. உன்னதான்” என்று அவன் அங்கிருந்த தண்ணீரை எடுத்துப் பருகிக் கொண்டே கண்களால் அவளைக் கேலி செய்ய,

“நான் ஒண்ணும் குண்டு இல்ல.. ம்கூம்” அவள் முகத்தைத் திருப்ப அவளது கழுத்துக்குக் கொஞ்சம் கீழ்வரை இருந்த போனி டெயிலோ ஆடியது.

“அதாவது சப்பியா இருக்க ராஷ்மி” அஷ்வின் சொல்ல,

“இதுகூட ஓகேவா இருக்கு” அவள் அந்த அந்தப்பெயரை ஏற்றுக்கொள்ள அவனோ விடவில்லை.

“ஆனா, நான் உன்னை குண்டூஸ்னுதான் சொல்லப்போறேன்” அஷ்வின் சிரிப்பை அடிக்கியபடி சொல்ல, கடுப்பாகிய ராஷ்மிகா, “போடா!” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள்.

அவர்கள் ஆர்டர் செய்த உணவுவர, இருவரின் பேச்சும் திசைமாறி ஏதேதோ பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். பில்லைக் கட்டிவிட்டு பீச்சில் சிறிது நேரம் உட்காரலாம் என்று இருவரும் செல்ல, “ச்சி” என டக்கென்று முகத்தைத் திருப்பியவள், “அஷு, வேற எங்காவது போய் உட்காரலாம்” என்றழைக்க,

அஷ்வினோ அங்கு என்ன என்பதைப் போலப் பார்த்தான். அங்கு ஒரு ஃபாரின் கப்பில்ஸ் இதழ் முத்தத்தில் லயித்து இருக்க அஷ்வினுக்கோ சிரிப்பு தான் வந்தது.

“இங்கெல்லாம், எங்க போனாலும் இப்படித்தான் இருப்பாங்க. சொல்ல முடியாது இதைவிட மோசமா இருப்பாங்க” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்ல,

“அப்ப இது கசமுசா ஸ்பாட் அஸ்வின். திரும்பவே கூடாது போல எங்கேயும்” அவன் காதின் அருகில் சொன்னவளின் பேச்சில் அஷ்வின் வாய்விட்டே சிரித்தான்.

“நம்ம இங்க ஹனிமூன் வந்திருக்கோம். அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா?” அஷ்வின் கேட்க ராஷ்மிகாவிற்கே அப்போதுதான் ஞாபகம் வந்தது.

‘ஈஈஈஈ’ பல்லை வைத்தவள், “சரி, இப்ப அதுக்கு என்ன பண்ணனும்?” அவனை வம்பிழுத்தபடி கேட்டாள்.

“அதுவா, இங்க வா” அவளை அருகில் இழுத்த அஷ்வின் குனிய, அவன் வாயிலேயே அடி போட்டவள், “பப்ளிக் ப்ளேஸ். பப்ளிக் ப்ளேஸ்” என்று அவனை விட்டுத்தள்ளி நிற்க முயற்சி செய்ய, அஷ்வினின் உறுதி அவளை விடவில்லை.

“இல்லையே. இது என் ப்ளேஸ்தானே” அஷ்வின் அவளது இதழை தன் விரலால் வருட, ராஷ்மிகாவிற்கு ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்து உடலெல்லாம்.
ராஷ்மிகாவின் விழிகள் பதட்டத்தில் விரிய, அதை ரசித்தவன், “ரூம் போலாம் வா”  அவளின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். ரூமிற்கு வந்து ட்ரெஸை மாற்றியவள், “அஷ்வின், நாளைக்கு என்ன ப்ளான்?”  வினவியபடி படுக்கையில் படுத்தாள்.

“நாளைக்கு நைட்” தன் இருகைகளையும் தேய்த்தபடி அஷ்வின் தொடங்க,

“இல்ல.. இல்ல. நாளைக்கு மார்னிங்” அவசரமாய் ராஷ்மிகா கேட்க,

“நாளைக்கு சொல்றேன்” அஷ்வினும் படுத்துவிட்டான். அப்படி அஷ்வின் பேசினானே தவிர ராஷ்மிகா, அவள் காதலை சொல்வதற்கு காத்திருந்தான். அவள் காதலை சொன்ன பிறகுதான் அவளை அணுக வேண்டும் என்று உறுதியாகவும் இருந்தான்.

ராஷ்மிகாவிற்கு தூக்கமே வரவில்லை. “அஷ்வின்” என்றழைக்க அவனும் தூங்கவில்லை போல.

“ம்ம்” என்றான்.

“போர் அடிக்குது” ராஷ்மிகா தன் பெட்ஷீட்டை சுற்றியபடி சொல்ல,

“அதுக்கு..” என்று கண்களைத் திறந்த அஷ்வினிடம், “என் டேப்ல படம் இருக்கு. பாக்கலாமா?” என்று வினவினாள்.

“சரி பார்க்கலாம். என்ன படம் வச்சிருக்க?” அவன் வினவ,

“நிறைய கீர்த்தி ஷேர் பண்ணா. வாங்க, பாத்தா தெரியும்” டேப்பை எடுக்க, ஒரு நல்ல படத்தைக் க்ளிக் செய்தனர் இருவரும். படம் ஓடிக்கொண்டே இருக்க கடைசி பாடல் வரும்போது,

“படம் பாத்தே ரொம்ப நாளாச்சு.. இப்பதான் பாக்கறேன்” என்றான் அஷ்வின் டேப்பில் கண்களை வைத்தபடி.

“ஏன்?”

“பிசினஸ் வந்த அப்புறம் டைம் கிடைக்கிறதில்ல. அதுல கான்சன்ட்ரேஷன் வந்த அப்புறம் எதுலையும் இன்ட்ரஸ்ட் இல்லாம போச்சு” என்றான்.

“ஓஓ, முதல்ல எல்லாம் பாப்பிங்களா?” ராஷ்மிகா கேட்க, பாட்டும் முடிந்து கடைசி க்ளைமாக்ஸை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

படம் முடிந்தபின், “முதல்ல எல்லாம் பாப்பிங்களா?” ராஷ்மிகா மறுபடியும் கேட்க,

“அதெல்லாம் அடிக்கடி பாப்போம் ராஷ்மி”

“யாரு ஃபேன் நீங்க?”

“அப்படின்னு இல்ல. நல்ல படம்னா பார்ப்பேன்” என்றான்.

“வாவ் செம… பட், ஐம் விஜய் ஃபேன்” என்றாள்.

“ப்ரண்ட்ஸ் கூட எல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணி பாத்திருப்பிங்க இல்ல?” ராஷ்மிகா வினவியபடியே டேப்பை எடுத்து வைத்துவிட்டு படுக்கையில் அமர, அஷ்வினுக்கோ தேவா மற்றும் சிலர் நண்பர்களுடன் அடித்த கூத்து ஞாபகம் வந்தது. அவனோ சிரிப்பை அடக்க, “என்ன சிரிக்கறிங்க?” புரியாமல் கேட்டவளிடம்,

“ஒண்ணுமில்ல படு” அவன் சமாளிக்க,

“சொல்லு அஷ்வின்..” அவள் விடாமல் அவனைத் தொல்லை செய்ய,

“அது, நாங்க ப்ரண்ட்ஸ் நிறையபடம் பாத்திருக்கோம். ஆனா, என்ன நாங்க பாக்கிற படத்துக்கு மொழி தேவையில்ல” சொல்லிவிட்டு அவன் படுக்க, சிறிதுநேரம் கழித்தே ராஷ்மிகாவிற்கு புரிந்தது.

“ச்சி, கருமம்” என்றவள் அவனிடமிருந்து ஒரு அடி விலகிப் படுக்க,

“சீன் போடாதடி. ஒரு வாரம் இங்க என் கூடத்தான் இருக்கணும் நீ” என்றுவிட்டுத் திரும்பி படுத்துக்கொண்டான். அவளுக்கோ அவனின் பேச்சு நாணத்தையும், தாம்பத்தியத்தை நினைத்து சிறிது அச்சத்தையும் கொடுத்தது.

அடுத்தநாள் காலை இருவரும் சுற்றப்போக அவளிற்கு எல்லா இடத்தையும் சுற்றிக் காண்பித்தான். சில கடைகளில் அழகழகான பொருள்களைப் பார்த்தவள் அங்கேயே நிற்க, அஷ்வினும் அவளுடன் நின்றிருந்தான்.

ஏதோ உறுத்த திரும்பியவன் யாரே இருவர் ராஷ்மிகாவை வெறித்துக் கொண்டு நிற்பதைக் கண்டு அவனிற்கு கொலைவெறியே ஆனது. அதேசமயம் ராஷ்மிகாவும் அவர்களைப் பார்த்து விட்டாள்.

அருகிலிருந்த அஷ்வின் அவர்களை நோக்கிச் செல்வதைக் கண்ட ராஷ்மிகாவிற்கு திக்கென்றது.

“அஷ்வின்!” அவள் கூப்பிட, காது கேட்காதது போலச் சென்றவன், என்ன சொன்னானோ அவர்கள் விட்டால் போதுமென்று ஓட்டம் பிடித்தனர். திரும்பி வந்த அஷ்வின் முகத்தில் கொஞ்சமும் இறுக்கம் குறையவில்லை.

நேரமும் ஆறரை ஆகியிருக்க, “அஷ்வின், ரிலாக்ஸ்” அவள் சொன்னாலும் அப்படியே அமர்ந்திருந்தான்.

“அஷ்வின், ரூம் போலாம்” ராஷ்மிகா சொல்ல இருவரும் ரெசார்ட்டை நோக்கி நடந்தனர்.

உள்ளே நுழைந்ததும், “என்ன அஷ்வின்? எதுக்கு இந்தத் தேவை இல்லாத கோபம்?”  ராஷ்மிகா வினவினாள்.

அவள் அருகில் வந்து தோளைப்பிடித்த அஷ்வின், “பிக்காஸ் யூ ஆர் மைன்! முடியலடி. சத்தியமா முடியல. உன்ன இப்படி பக்கத்துல வச்சிட்டு என்னால நல்லவனாகூட நடிக்க முடியும். ஆனா, உன்ன இன்னொருத்தன் பார்க்கும்போது கெட்டவன் என்ன, கொலைகாரனா ஆயிடுவேன் போல” கத்தியவனை இமைக்காது பார்த்தாள் ராஷ்மிகா.

காதலில் அவன் காட்டிய வன்னை, மென்மையாய் அவளைத் தாக்கியது.

“அவனுக பார்த்தா என்ன பண்ண முடியும்? இப்படி ஆயிரம்பேர் ஆயிரம் பொண்ணுங்கள பாப்பாங்க அஷ்வின்.. ஏன் இவ்வளவு கோபப்படற?” என்றவள், அவன் அருகில் வந்து அவன் சட்டையை இரு கைகளாலும் பிடித்தவள்,

“நீ இவ்வளவு கோவப்பட அவசியமே இல்ல அஷ்வின். நான் உனக்கு தான். உனக்கு மட்டும்தான்” என்று அவனை அணைத்தவள், “ஐம் இன் லவ் வித் யூ அஷ்வின்” என்றாள்.

அவளது வார்த்தைகளில் உறைந்தவனின் கோபம் எங்கு சென்றது என்றே தெரியவில்லை. அவளை இறுக அணைத்தவன், அவளை மேலும் தன்னுள் அணைத்துப் புதைக்க யாரோ கதவைத்தட்டும் சத்தம் கேட்டது.

“ச்சு!” இருவருமே கட்டிப்பிடித்தபடி கதவைப் பார்த்துவிட்டு இருவர் முகத்தையும் பார்த்துக் கொண்டனர்.

அவளைவிட்டுப் பிரிந்த அஷ்வின், கதவை சென்று திறக்க அங்கிருந்த ரெசார்ட் மேனேஜர் அஷ்வினிடம் ஏதோ சொன்னார். அவரிடம் பேசிவிட்டு வந்தவன், “குண்டூஸ் ஒரு அர்ஜன்ட்வொர்க். வெரி ஸாரிடா” அவனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டவன்,

“இங்க நெட் கிடைக்காது. நான் கொஞ்சம் போயிட்டு வரேன். நீ யார் வந்தாலும் கதவைத் திறக்காத” என சென்றுவிட்டான். ராஷ்மிக்கும் ஏமாற்றம்தான். இருந்தாலும் இன்னும் ஆறுநாள் இருக்கிறதே என்று இருந்துவிட்டாள்.

“சொல்லு நிரஞ்சன்” அவன் பி.ஏவிடம் வீடியோகாலில் பேசிய அஷ்வின், அவன் கேட்டு அறிய சொன்ன விவரங்களை அறிந்து கொண்டான்.

“நிரஞ்சன், ரிஷிகிட்ட ஸ்பீக்கரை குடு. அன்ட் யூ கெட் அவுட் ஃப்ரம் தேர்” அஷ்வின் பணிக்க, ரிஷியிடம் ஸ்பீக்கர் அன்ட் ஹெட்ஃபோன் கைமாற, சில குரூரமான விஷயங்களைத் தெரிவித்தான் அஷ்வின்.

“ரிஷி! இது ரொம்ப ரகசியமா இருக்கட்டும். யாருக்கும் தெரியவேண்டாம். ஆள் ஸ்பாட் அவுட் ஆகணும்” சொல்லி முடித்தவன் தனது லேப்பை மூடிவிட்டுத் திரும்ப ராஷ்மிகாதான் நின்றிருந்தாள்.

அவள் தான் பேசியதைக் கேட்டுவிட்டாளோ என்று உள்ளுக்குள் அதிர்ந்தான்.

முகத்தில் எதையும் காட்டாமல் எழுந்தவன், “எதுக்குத் தனியா வந்த?” என்று கடிந்து அவளை இழுத்துக் கொண்டு ரெசார்ட்டிற்கு வந்தான்.

உள்ளே நுழைந்தவன், “நைட் டின்னர் ஆர்டர் பண்ணிடறேன். இங்கயே வரட்டும்” என்றவன் வெளியில் யாராவது இருக்கிறார்களா என்று செல்ல, ராஷ்மிகாவோ அவன் வர எப்படியும் நேரமாகுமென்று தெரிந்து குளிக்கச் சென்றாள்.

நீண்டநேரம் ஹாட் டப்பில் அலுப்புத்தீர உட்கார்ந்திருந்தவளுக்கு, நேரம் போனதே தெரியவில்லை. எழுந்து துண்டை சுற்றிக்கொண்டு வந்தவள் இன்னுமா அஷ்வின் வரவில்லை என்றபடி தனது பேக்கை எடுக்கப் போனாள்.

“குண்டூஸ், உன் ஐட்டம்ஸ் வந்திடுச்சு” என்று திடீரென அஷ்வின் உள்ளே நுழைய, ராஷ்மிகா வெடவெடத்துப் போனாள் என்றால், அஷ்வின் அவள் நின்றிருந்த கோலத்தில் பனிக்கட்டியாய் உறைந்தான்.

அன்று ஃபோனில் பார்த்ததை இன்று நேரிலேயே கண்டுவிட்டானே.

ஆண்மகனிற்கே உண்டான உணர்வுகள் எழ, கதவை அடைத்துத் தாழிட்ட அஷ்வின் கையிலிருந்த உணவுகளை தன்னையும் அறியாமல் எங்கோ வைத்துவிட்டுத் திரும்பினான்.

ராஷ்மிகாவோ கர்டனிற்கு பின் சென்று நின்று மறைந்து கொண்டு, “அஷ்வின், நான் ட்ரெஸ் மாத்தணும். வெளில போங்க” திக்கியபடி சொல்ல,

“சரி மாத்து. அதுக்கு நான் ஏன் போகணும்?” சிரித்தபடியே அருகில் சென்றான் அஷ்வின்.

கர்டன் அருகில் சென்றவன், கர்டனோடு அவளைக் கட்டியணைக்க, “அஷு, என்ன பண்றீங்க?” என்று வெட்கியவளிடம்,

“என்ன மரியாதையா பேசற?” அஷ்வின் கேட்க, அதில் சீண்டப்பட்டவள்,

“என்னடா பண்ற அஷ்வின்?” வேண்டுமென்றே ராஷ்மிகா கேட்டாள்.

அவளை கர்டனிலிருந்து வெளியே இழுத்தவன், “இந்தத் திமிருதான். இந்தத் திமிருதான்” என்று அவளை ரசித்தவன் அவளின் இதழை நோக்கிக் குனிந்து கவிதை எழுத ஆரம்பித்தான்.

இத்தனை நாளாய் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் கரை புரண்டு ஓட, அவளின் இதழை விடாமல் தன் இதழில் சேர்த்துக் கொண்டவன், அவள் உடல் நிற்க முடியாமல் தருமாறுவதை உணர்ந்தான்.

முகம் சிவந்து இருந்த மனையாளின், இதழை உரசியபடி அவளைத் தூக்கியவன், “எப்பா! நல்லா திம்ஸா வெயிட்டாதான்டி இருக்க” என்றவனை, “அப்ப ஏன்டா தூக்கற. கீழ விடு” என்றாள்.

“விடறதுக்கா தூக்கியிருக்கேன்” என்று மோகக் குரலோடு அவளைப் படுக்கையில் கிடத்தி, தாபமாய் அவன் கைகளை அவள் மேல் அலைய விட, ராஷ்மிகா முதலில் வெட்கத்தில் விலக, அவளை விடாக்கண்டனாய் அணைத்து அவன் ஆட்கொள்ள, ராஷ்மிகாவும் சிறிது நேரத்தில் அவனுள் அடங்கி, எந்தத் தடாவும் போடாமல் கணவனிற்கு அனுமதி வழங்கினாள்.

இத்தனைநாள் சன்னியாசியாய் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை அவளிடம் காமமும் காதலும் கலந்து கலவையாக தன்னவளிடம் அஷ்வின் காட்ட, அவனின் ஆசையையும் மூர்க்கத்தையும் கண்ட ராஷ்மிகா திணறித்தான் போனாள்.

காத்திருந்த இரு நெஞ்சங்களும் அழகிய இல்லறத்தை அந்த அழகிய தீவில் துவங்கினர்.

அஷ்வின், அவளை அழகாய் கையாண்டு இருக்க, தன்னை முழுச் சம்மதத்துடன் அவனிடம் ஒப்படைத்திருந்தாள் ராஷ்மிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!