யாழ்-19
யாழ்-19
யாழ்-19
கோபத்தில் பெண்ணவளின் தளிர் வதனத்தில் செவ்வரிகள் பரவி, ஆத்திரம் கொப்பளித்து, அணல் தெறிக்க நின்றிருந்தவளின் சுட்டெரிக்கும் பார்வையில், அவளின் பூக்கன்னத்தை விரலால் வருடியவன், அங்கு தன் இதழ் பதிக்க, அவனைவிட்டு விலகியவள் நகரப்பார்க்க, அவன் அவளை விட்டால்தானே?
இருகைகளையும் இருபுறமும் கைகொடுத்து அவளை ஏற்கனவே நகரவிடாது சிறை படுத்தியிருந்தவன், தற்போது உடலோடு உடல் உரச அவளை நெருங்கியிருந்தான்.
முகத்தைத் திருப்பி அவனைத் தன்னிடம் இருந்து தள்ளிவிட அவள் முயல, ஆறடி ஆண்மகனை எளிதில் அசைக்க முடியுமா?
இவனை நகர்த்துவது கடினம் என்று யோசித்தவள் ஒன்றும் பேசாது மீண்டும் திரும்பி தோட்டத்தைப் பார்த்தபடி நின்றுகொள்ள, அவளின் கழுத்தில் கிடந்த தாலியை சில நொடிகள் வருடியவன், “அதை ஏன் மறைச்சு வச்ச?” வஞ்சியவளின் கழுத்தில் அவனின் மீசை ரோமங்கள் ஊர் சுற்றிக்கொண்டிருக்க, அவனின் அதரங்கள் அவளிடம் கேள்வி கேட்டது.
அவனின் செய்கையில் அவளின் இளமை கண்டபடி அவளின் உணர்வுகளைத் தூண்டிவிட, “ப்ச்” அவஸ்தையும் சலிப்புமாக தன் கழுத்தை அவள் தன்னவனிடமிருந்து இழுக்க முயற்சிக்க, தன் கரத்தால் அவளின் முன் கழுத்தை பற்றிவன், அவளின் கழுத்தில் தன் மொத்த வதனத்தையும் புதைக்க, ஆடவணின் செய்கையில் ஒரு நொடி அரண்டு போனவளுக்கு, தன் இதயத்துடிப்பு தனக்கே கேட்பதுபோல இருந்தது.
அவளின் கழுத்தில் புதைந்திருந்தவனோ ஒரு கரத்தில் அவளின் இடையைப் பிடித்துக்கொண்டு அவளின் வெற்றிடையைத் தேட, பெண்ணவள் அணிந்திருந்த பிட்டான சுடிதார் அவனுக்கு வழி வகுக்கவிடமால் தடுத்து அவனின் ஈகோவைத் தூண்ட, அவளின் கழுத்தை மேலும் தன்னோடு சேர்த்துக் கொண்டவன், அவளின் கழுத்தில் முத்தங்கள் இட்டு, அவ்வப்போது கடித்தும் வைக்க, நிற்க முடியாமல் தவித்தவளுக்கு தெரிந்துபோனது, அவன் பதில் சொல்லும்வரை விடப்போவது இல்லையென்று.
“ப்ளீஸ் விடு. அதை உன்கிட்ட காட்டியிருந்தா மட்டும் இரண்டு பேரும் போய் அப்படியே ஹனிமூனை கொண்டாடிட்டு வந்திருப்போமா?” பல்லைக் கடித்துக்கொண்டு பேசியவளை தன்னை நோக்கித் திருப்பியவன்,
“நாம் நெக்ஸ்ட் வீக் கிளம்பறோம். நீ சொன்ன மாதிரியே கொண்டாடறோம். மூளை ரொம்ப சூடு ஆகிடுச்சு. ஸோ ஐ நீட் சம் சில்” என்று அவளை விடுவித்தவன் உடையை மாற்றச் செல்ல,
‘இவனை கல்யாணம் பண்ணதுக்கு பன்னி பண்ணை வச்சிருக்கலாம். இவனை மேய்க்கிறதை விட அதுகள மேய்க்கிறது ஈசி’ நினைத்தவள், உள்ளே வேகமாக வர, அவனோ மேல் சட்டை இல்லாமல் முட்டிவரை இருந்த ஷார்ட்ஸுடன் அவளுக்கு தனது அகன்று விரிந்த முதுகைக் காட்டி நின்று, கப்போர்டில் தனது டி சர்ட்டை தேடிக் கொண்டிருந்தான்.
‘ச்சை. இது வேறயா?’ நினைத்தவள் தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு, “எனக்கு எங்க வரவும் இஷ்டம் இல்ல. எனக்கு நிறைய வேலை இருக்கு” அவள் திட்டவட்டமாக கூற, அவள் கூறியது கேட்டாலும், நிதானமாக சட்டையை அணிந்துவிட்டுத் திரும்பியவன்,
“நாம அப்பபபபப பேசுன மாதிரி ஹனிமூன் ட்ரெஸ் எல்லாம் உனக்கு எடுத்து வச்சிடு. ஐ நீட் சம் சில் வித் ஹாட் கேர்ள்” குறும்பும் மோகமும் போட்டி போட பேசியவனின் விழிகளில் மொத்தத்தையும் கண்டவளுக்கு அவனின் நடவடிக்கை புரியவில்லை. அவனின், ‘அப்பபபப’ எது என்று அவளுக்குத் தெரியும். இருவரும் யூஎஸ்ஸில் இருந்த போதே அலைபேசிகளில் இரவு உரையாடும் போது கட்டி வைத்த கோட்டை இது.
யோசனையுடன் நின்றிருந்தவளின் அருகில் வந்தவன், “ரொம்ப யோசிக்காத. நீ மட்டும் வரல. நாளைக்கே உன் வீட்டுல இருந்து உனக்கு ஃபோன் வரும். ஐ மீன் என் அப்பத்தா மூலியமா உன் பாட்டி உனக்கு கால் பண்ணுவாங்க. எல்லாரு அட்வைஸையும் தாங்கறதுக்கு நீ என்கூட வந்திடலாம்” என்றவன் வெளியேறிவிட, அதுவரை யோசனையில் இருந்தவளுக்கு மின்னல்போல மூளையில் ஒன்று பளிச்சிட்டது.
நைட்டிடுக்கு மாறியவள், திவ்யபாரதியிடம் சென்று அவளுடன் நின்றவள், சமையலுக்கு சிறுசிறு உதவிகளை செய்து கொடுத்தபடியே, “அத்தை என்கிட்ட மொரிஷியஸ் பேக்கேஜ் இருக்கு. நீங்களும் மாமாவும் போயிட்டு வர்றீங்களா?” கேட்க, வெளியே டைனிங் ஹாலில் தண்ணீரை அருந்திக்கொண்டிருந்த வெற்றிக்கு இதைக் கேட்டே புரையேறிவிட்டது.
‘இந்த வயதில் அங்கு சென்று என்ன செய்வது?’ என்று யோசித்தவனுக்கு, ‘சென்றால் எப்படியிருக்கும்’ என்ற எண்ணமும் வர, நைசாக சமையல் அறைக்குள் மருமகள் அறியாமல் எட்டிப் பார்த்தவன், மனைவியிடம் சைகையில், இரு கைகளிலும் தம்ப்ஸ் அப் காண்பிக்க, கணவனை முறைத்த திவ்யபாரதி, யாழிடம்,
“நீயும் வித்யுத்தும் போயிட்டு வாங்க டா. உனக்கும் ரிலாக்ஸா இருக்கும்ல” என்றாள்.
“இல்ல அத்தை. நிறையா வொர்க்ஸ் இருக்கே?” யாழ்மொழி வாயில் வந்த காரணங்களை சொல்ல,
“இங்க இருக்க வேலையை நான் பாத்துக்கறேன். நீ வர்றதுக்குள்ள க்ளாஸ் ரெடியாகிடும் சரியா. நீ கவலைப்படாம போயிட்டு வா” என்றவர், “ஜூஸ் குடிக்கறியா?” என்று கேட்க, ‘இல்லை’ எனத் தலையாட்டியவள் யோசனையுடன் சமையலறையில் இருந்து வெளியேறினாள்.
வெளியே வந்தவள், அடுத்து வர்ஷித்திடம் சென்று கேட்க, அவனோ, பூஜாவின் நிலையை சுட்டிக்காட்டி, “இந்த டைம்ல அவ்வளவு தூரம் எப்படி யாழ்? பேசாம நீயும் வித்யுத்தும் போயிட்டு வந்திடறீங்களா?” அவன் சொல்ல,
“அது எனக்குத் தெரியாதா?” எரிச்சலுடன் கேட்டவள், நடந்து செல்லும் வேகத்தில் அவனின் காலை வேறு மிதித்துவிட்டுச் செல்ல, “அம்மா!” என்று வலியை சிறிய அலறலில் வெளிப்படுத்தியவன், “ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேங்கிற மாதிரி என்னத்தான்டா எல்லாரும் இஷ்டத்துக்கு பந்தாடறீங்க” புலம்பியவனை மகளின் குரல் அழைத்தது.
“அப்பா பாத்ரூம் போயிட்டேன்.. வாங்கககஅஅஅ” பாத்ரூமில் இருந்து மகளின் கத்தல் குரல் வர, “வந்துட்டேன் ம்மா” என்றவன், அடுத்து வரவிருக்கும் மகவை நினைத்து இப்போதே பயந்துகொண்டு ஓடினான்.
யோசையுடனே இருந்த யாழ்மொழி இறுதியாக சேனாதிபதியின் முன் சென்று நிற்க, “என்னடா?” என்றவரின் அருகே அமர்ந்தவள், “தாத்தா! என்கிட்ட…” மாமியார், வர்ஷித்திடம் கேட்டதையே அவள் அவரிடமும் கேட்க, சுற்றிமுற்றி பார்த்து மனைவி இல்லாததை உறுதி செய்து கொண்டவர், யாழ்மொழியை அருகே அழைத்து, அவள் செவியிடம் சென்று,
“மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்க சொல்றியேடாமா” கேட்டதுதான் தாமதம், யாழ்மொழி பெரும் சத்தத்தோடு வாய்விட்டுச் சிரித்ததில் அங்கு அனைவரும் கூடியேவிட்டனர்.
ஆளுக்கொருவர், “என்னாச்சு? என்னாச்சு?” என்று வினவ, பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவள், “ஒண்ணுமில்ல” என்றவளைப் பார்த்து, “மொரிஷியஸ்?” என்று ஒருசேர வினவினர் வர்ஷித்தும், திவ்யபாரதியும்.
வித்யுத்தும் அங்கிருக்க, யாழ்மொழி இருவரையும் சைகையால் அடக்க முயல, இதை எதையும் அறியாத வர்ஷித்தோ, “தாத்தா! நல்ல ஆபர். அதுவும் ப்ரியா தர்றேன்னு யாழ் வாய்ல வருது. பேசாம பாட்டியைக் கூட்டிட்டு மொரிஷியஸ் போயிட்டு வந்திடுங்க” சகோதரனின் வார்த்தையில் மனைவியை வித்யுத் முறைக்க, அதில் தலையை குனிந்து கொண்டவள்,
‘குடும்பம் மொத்தமும் லூசு. யாரு என்ன சொல்ல வர்றாங்க எதையும் கவனிக்காதுக போல’ உள்ளுக்குள் திட்டியவள், “ஹிஹிஹி” சமாளித்துவிட்டு, அறைக்குச் செல்ல அவள் பின்னேயே சென்ற வித்யுத் வருணன் கதவைப் படீரென்று அடித்துச் சாத்த, அதில் பெண்ணவளின் இதயமும் அடித்துக் கொண்டது.
அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் சென்றவன், “மொரிஷியஸ் மட்டும் கேன்சல் ஆச்சு. எதுவும் பண்ணமாட்டேன். எனக்கு இந்த ரூமே போதும்” என்றவனின் எச்சரிக்கும் குரலில் முறைத்தபடி நிமிர்ந்தவள்,
“நான்தான் வரப்புடிக்கலனு சொல்றேன்ல. அப்புறம் எதுக்கு கம்பல் பண்ற?” எரிச்சலாய்க் கேட்டவளின் அதரங்கள் அடுத்த நொடி அவனின் முரட்டு அதரங்களுக்குள் சிக்கியிருக்க, தன்னவனின் வன்மையான பிடியில் துள்ளித் திமிறயவள், அடுத்த சில நொடிகளில், தன்னவனின் அதரங்களுக்கு சொந்தக்காரியாய் மாறி, பாதங்களை எம்பிக் கொடுத்து அவனின் இதழ்களை அவனைவிட அதிகமாய் உரிமை கொண்டாடி பத்திரமே எழுதி வாங்கிவிட்டாள்.
பல மணித்துளிகள் கழிந்திருக்க, அந்த அறையின் நிசப்பத்தை கலைக்க யாருமில்லாது போக, தன்னை அறியாமல் அவனின் கழுத்தைச் சுற்றி கை போட்டிருந்தவள், அவனின் கழுத்தில் முகம் புதைத்திருக்க, திடீரென தான் நின்றிருக்கும் நிலை உணர்ந்தவள், திடுக்கிடலுடன் அவனை விட்டு விலக, பதட்டத்துடன் இருந்தவள் கால் தடுமாறி படுக்கையிலேயே விழ, அவளின் இரு பக்கமும் கை கொடுத்து அவளுடன் படுக்கையில் லேசாய் சாய்ந்தவன்,
“உனக்கு ஆசையிருக்கு. அப்புறம் ஏன்டி டைம் வேஸ்ட் பண்ற?” மோகத்துடன் கேட்டவனின் முகம் பார்க்க கூசி, வேறுபக்கம் முகத்தைத் திருப்பியவளின், கழுத்து வளைவில் இதழ் பதித்து, அவளின் முகம் திருப்பி, தன் முகம் காணச் செய்தவன்,
“கெட் ரெடி ஃபார் தி மொரிஷியஸ் ட்ரிப்” கண்ணடித்தவன், “நான் இரசிச்ச இரண்டும் குறைஞ்சிடுச்சுடி” குறைபட,
‘வாட்?’ உள்ளுக்குள் அதிர்ந்தவள், இரயிலைப் போல தடதடக்கும் இதயத்தை கட்டுப்படுத்தி, ஆத்திரத்துடன் அவனைத் திட்ட வாயைத் திறக்க,
“நான் கன்னத்தை சொன்னேன்” என்று ஒன்றும் தெரியாதவன் போல சொன்னவனின் சேட்டைகளும், இரட்டை அர்த்தப் பேச்சுகளும் அறியாதளா அவள்?
“யாழ்” இரவு உணவிற்காக திவ்யபாரதி குரல் கொடுக்க, “அத்தை கூப்பிடறாங்க விடு” என்றவளை விடாமல் பிடித்திருந்தவனின் கண்கள் தன் மேனியில் அலைமோதுவதைப் பார்த்தவள், ‘ஐயோ இருபத்தி நாலு மணிநேரமும் இப்படியே மாறிடுவான் போலயே” நினைத்தவள், அவனின் இடுப்பைப் பிடித்துக் கிள்ள, அது அவளுக்கே பாதகமாய் முடிந்தது.
அவள் கிள்ளியதில், “ஏய்!” கூசியவன் கைகள் இரண்டையும் விட, அவள் மேலேயே விழுந்திருந்தான். ஆறடி இருப்பவன் குறைந்தது எண்பது கிலோவாவது வரமாட்டான்?
ஐம்பத்தி மூன்று கிலோ எடையுள்ள பெண்ணவளின் மீது இவன் விழுந்தால் அவள் தாங்குவாளா?
“ஐயோ அத்தை” கத்தியவளின் குரல் கீழே கேட்க, “ஏன் மம்மி கத்தறாங்க?” தனு கேட்க, “வாயமூடுறி” மகளின் பம்மில் பூஜா அடிக்க, வெளுத்து வாங்க காத்திருக்கும் அடை மழையும் காத்திருக்குமா?
“ப்பாஆஆஆ” தனுஷ்யா கத்தி அழ ஆரம்பிக்க, கணவனை தள்ளிவிட்டு கீழே வந்தவள் தனுவை வாங்கி சமாதானம் செய்ய, அன்னையை ஒற்றை விரல் தூக்கி மிரட்டிய வாண்டு, “ம்கூம்” என்று சின்ன அன்னையின் கழுத்தில் புதைந்து கொண்டது.
யாழ்மொழி எவ்வளவோ பிரார்த்தித்தும் வித்யுத்துடன் அவள் மொரிஷியஸ் செல்லும் தினம் அவள் கண்ணிமைப்பதற்குள் வந்தது. மதுரையிலேயே வித்யுத் தன் குடும்பத்திற்கு டாட்டா காட்டியிக்க, சென்னை விமான நிலையத்தில் வந்தவர்களை வழியனுப்பக் காத்திருந்தார்கள் அஷ்வினின் மொத்த குடும்பமும்.
ஏர்ப்போர்ட் வந்து இறங்கியவுடன் தன் தோளில் கை போட்ட வித்யுத்தை திடுக்கிட்டு அவள் பார்க்க, “யாழ்” என்றபடி வந்து அணைத்துக் கொண்டார் செல்வமணி.
“பாட்டிஈஈஈ” என்று இறுக்கமாய் பாட்டியை அணைத்தவள், அவரின் கன்னத்தில் முத்தமிட்டு விலக, ராஷ்மிகா மருமகனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அஷ்வின் மருமகனையும் மகளையும் பார்த்துக் கொண்டே நிற்க, மருமகனை சீண்ட வேண்டும் என்று நினைத்தவன், மனைவியின் கையிலிருந்த யாழ்மொழியின் பாஸ்போர்டை வாங்கிப் பிரித்தான். பாஸ்போர்டை பார்த்தவன் விழிகளால் புன்னகைத்துக் கொண்டே, “யாழ்மொழி அஷ்வின்குமார்” என்று அழுத்தமாக உச்சரிக்க,
அதுவரை மாமனாரின் செய்கையையும் அவர் முகத்தில் தவழ்ந்த கர்வத்தையும், விழிகளில் வழிந்த புன்னகையையும் கண்ட வித்யுத், “எஸ். ஆஸ் ராஷ்மிகா சக்திவேல்” என்று கூற, ராஷ்மிகாவுக்கு பெருமையாக இருந்தது.
தந்தையின் பெயரை அவள் இன்னும் மாற்றவில்லை அல்லவா?
ஆனால், அந்தப் பூரிப்பை அவள் கணவனின் முன்னால் காட்ட முடியுமா?
மருமகனின் பேச்சில் மெச்சுதல் பார்வையை வீசியவன், சிறிது நேரம் சாதரணமாக மருமகனுடன் உரையாட, இருவரின் உரையாடலும் சாதாரணமாக இருந்தாலும், இருவரின் பார்வையும் யாழ்மொழியின் மீதே பதிந்து மீண்டு கொண்டிருந்தது.
இருவரின் பார்வையை உணர்ந்த ராஷ்மிகாவுக்கு மனம் பிசைய, “கிளம்பலாம்ங்க. ரொம்ப நேரம் நிக்க முடியல” சோர்வாக இருப்பதைப் போல நடித்து ஒரு பிட்டைப் போட்டவளின் அருகே வந்த அஷ்வின், “போதும்டி நடிச்சது” தன்னவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல, கணவனை நிமிர்ந்தும் பார்க்காமல் நடிப்பை அவள் தொடர்ந்து கொண்டிருக்க, மனைவியை தோளோடு அணைத்து அஷ்வின் விடைபெற, அவனின் பெற்றொரும் கூட விடைபெற, நம் ஜோடி மட்டுமே தனியாக விடப்பட்டனர்.
ஸ்லிம் பிட் ஜீன்ஸும், கையில்லாத டி சர்ட்டும் அணிந்து மேலே டெனிம் கோட்டை அணிந்திருந்தவள், தனது ட்ராலியைத் தள்ளிக் கொண்டு கணவனை கண்டுகொள்ளாமல் முன்னே செல்ல, விஷமத்துடன் தன்னவளின் பின்னழகை ரசித்துக் கொண்டே சிரிப்புடன் அவளைத் தொடர்ந்த வித்யுத் வருணன்,
‘மவளே! சுடிதாரா எடுத்திட்டு வர்ற ஹனிமூனுக்கு. ட்ராலியை மாத்தாம விட்டா நான் என்னடி உன் புருஷன்?’ மனதுக்குள் சிறு கோபமும் கேலியுமாக நினைத்தவன், அமைதியாய் நல்லபிள்ளையாக அவளைப் பின் தொடர்ந்தான்.
மொரிஷியஸ்!
மொரிசியசு அல்லது மொரிஷியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்திருக்க, ஏறக்குறைய ஐம்பத்தைந்தாயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற, பலர் இங்கு அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர்.
சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது நமக்கு பெருமையே!
தங்களுக்கு அளிக்கப்பட்ட தனித் தீவிற்கு வந்து சேர்ந்த இருவரும் அலுப்புத் தீரக் குளிக்க உள்ளே செல்ல, வித்யுத் வருவதற்குள் முன்னதாகவே குளித்து முடித்தவள், வெளியே தலையை மட்டும் நீட்டி பார்த்துவிட்டு, பாத்ரோபை சுற்றிக்கொண்டு வந்தவள், தனது ட்ராலியைத் திறக்க, குழம்பிப் போனாள்.
அவளது அழகு சாதனப் பொருட்களை தவிர உடைகள் அனைத்து வேறு. யோசனையுடன் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தவளுக்கு, அதில் இருந்த உடைகளைப் பார்த்தவுடன் புரிந்து போனது இது யாரின் வேலை என்று.
“இடியட்!” அவள் அதரங்கள் அழுத்தமாக முணுமுணுக்கும் போதே, இடையில் நீளமான வெள்ளைத் துண்டைச் சுற்றிக் கொண்டு தலையைக் கைகளால் தட்டியபடி, புஜங்கள் இறுக, மார்புகள் தின்னென்று இருக்க ஆண்மையின் இலக்கணமாய் வந்தவனைப் பார்த்தவளுக்கு, சில சில்மிஷ நினைவுகள் எட்டிப பார்க்க, முகத்தைத் திருப்பிக் கொண்டவள் அதிலிருந்த ஒரு இரவு உடையை எடுத்துக் கொண்டு ட்ரெஸிங் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
கையில்லாத வெள்ளை நிற லேசான டாப்ஸையும், தொடைக்கு மேலே இருந்த ஷார்ட்ஸையும் அணிந்தவள், கண்ணாடியில் தன்னைப் பார்க்க, அது அவளை படுபயங்கரமாக காட்டிக் கொண்டிருந்தது.
‘எப்படி வாங்கியிருக்கான் பாரு’ நினைத்தவள் ஸ்லைடிங் கதவை ஒரு இன்ச் திறந்து அது வழியாக ஒற்றைக் கண்ணை வைத்து எட்டிப் பார்த்தாள்.
அவன் அலைபேசியில் வெளிப்பக்கம் நின்று பேசிக் கொண்டிருப்பது புரிய, குடுகுடுவென்று ஓடி வந்தவள், போர்வையை கழுத்து வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்து கொண்டு, தான் சர்வ சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டு அமர்ந்தாள்.
என்னதான் தைரியமான பெண்களாக இருந்தாலும், கூச்சம் என்று வரும்பொழுது பயமும் உடன் சேர்ந்து வரத்தான் செய்கிறது. கூச்சமும் பயமும் சேர்ந்த அழகை யாராலும் படைக்க இயலாது, பெண்களைத் தவிர.
அலைபேசியை பேசிக் கொண்டிருந்தாலும் தனக்கு முன்னிருந்த ட்ரான்ஸ்ப்ரன்ட் கண்ணாடி வாயிலாக அவள் ஓடி வந்ததைப் பார்த்தவன், ‘இருடி வர்றேன்’ என்றபடி பேசி முடித்துவிட்டு அலைபேசியை வைத்துவிட்டுத் திரும்ப, பெண்ணவளின் முகமோ இறுகியிருந்தது.
இறுகியது போல வைத்துக் கொண்டிருந்தாள் என்று சொல்வதுதான் சரி.
இரவு உடைக்கு மாறியிருந்தவன் அவளின் முன் வந்து நின்று கொண்டு உடலை வளைத்து சோம்பலை முறித்துவிட்டு, தனது சட்டையைக் கழற்ற, அவனின் செயலில் உள்ளுக்குள் உதறிக் கொண்டிருந்தவளுக்கு அவன் சட்டையைக் கழற்றியதும், இதயம் வாய் வழியாக ஓவர் ப்ளோ ஆகிவிடுமோ என்றிருந்தது.
சட்டை அங்கிருந்த ஷோபாவில் வீசியவன், அவளின் போர்வையில் கை வைக்க, “ஏய் என்ன பண்ற?” பதைபதைப்புடன் கேட்டவளை, அறியா பிள்ளையைப் போல பார்த்தவன், “ரெஸ்ட் எடுக்க வேணாம்?” என்றுவிட்டு அவளின் போர்வையை தனக்கும் இழுத்தபடியே படுக்கையில் விழ, அவனின் செயலில் விதிர்விதிர்த்துப் போனாலும், அமைதியாய் தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
தன் மேல் வெறுப்பின் சிகரத்தில் இருப்பவன் ஏன் இவ்வாறு செய்கிறான் என்பதை நினைத்தவளுக்கு அவனின நடவடிக்கைகள் அனைத்தும் குழம்பியது.
அந்த நொடி, ‘உனக்கும் ஆசையிருக்கு?’ என்றவனின் வார்த்தை நினைவில் வர, அருகில் படுத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு, ‘என்னோட வயசு பீலிங்ஸை தீத்துக்க’ முதலிரவன்று அவன் கூறிய வார்த்தைககளும் மனக்கண்ணில் உலா வர, அதை நினைத்துப் பார்த்தவளுக்கு அவர்களின் காதலையே தவறாக நினைக்கத் தோன்றியது.
‘அப்ப இதுக்கு மட்டுமா லவ் பண்ணோம்?’ நினைத்தவளுக்கு அவளின் ஆழ் மனம் இல்லவே இல்லை என்று பதிலளித்தது.
ஆனால், தன்னவன் கூறிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்தவளுக்கு, ‘அப்போது அதற்காக மட்டும் தான் மொரிஷியஸ் வந்திருக்கிறோம்’ நினைத்தவள், ஒரு முடிவை எடுத்தவளாக தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உறங்கினாள்.
பயண அசதியில் இருந்தவர்களுக்கு இரவு உணவு என்பதே மறந்து போனது.
அடுத்தநாள் காலை ஐந்தரை மணியளவில் எழுந்தவன் தன்னருகே பார்க்க, பெண்ணவள் இருந்த இடம் வெறிச்சோடி இருந்தது. கடல் அலைகளின் சத்தத்திலும், பறவைகளின் கீச் சத்தத்திலும் கண் விழித்தவன், குளியலறைக்குள் புகுந்தான்.
அவர்களும் அவர்களுக்கு பணிவிடை செய்ய இருக்கும் ஆட்களைத் தவிர, யாருமற்ற அழகிய தீவு அந்தக் காலைப் பொழுதில் அழகாய் மின்னிக் கொண்டிருந்தது.
பெருங்கடலுக்கு நடுவே இருந்த அந்தத் தீவில், புள்ளினங்கள் கூவிக் கரைந்து கதிரவனை உசுப்பிக் கொண்டிருக்க, மெல்ல மெல்ல கடலுக்கு நடுவே இருந்து எழும் ஆதவன், தன் கதிர்களை கடலில் பரப்பி தங்கச் சமுத்திரத்தை நீரின் மேல் விரிக்க, தன்னவனின் செந்நிரக்கதிர்களை பெண்ணவளின் மேலும் அவன் வீசியிருக்க, கடலின் அருகே தங்கத் தடகமாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள், மதுரை வீரனின் அவனுக்கே சொந்தமான அவனின் மங்கை.
குளியலறைக்குள் ரிப்பரெஷ் ஆகி வந்தவன், தன்னவள் எங்கு சென்றிருப்பாள் என்று அறிந்தவனாய், மரத்தினால் செய்யப்பட்ட பின்கதவைத் திறக்க, ஆரஞ்சும் பொன் நிறமும் கலந்த செவ்வானம் அவனை வரவேற்க, அதற்குக் கீழே கவிதையாய் நீல நிற கடலும்.
சில அடிகள் நடந்தவன், கடல் நிறத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருந்த நீச்சல் குளத்தில் சத்தமில்லாது இறங்க, தன்னவன் வருகையை திரும்பாமலேயே உணர்ந்தவள், நீச்சல் குளத்தின் எல்லையில் நின்று கொண்டு சூரிய உதயத்தை ஆசையாய், ரசனையுடன் பார்த்திருந்தாள்.
தான் தேர்ந்தேடுத்து வாங்கிய கருப்பு நிற கட் அவட் ஸ்விம் சூட்டில், மேலிருந்து தொடைக்கு மேல்வரை கவ்வியிருந்த நீச்சல் உடையில் இடைப்பக்கம் மட்டும் நூல்களை மட்டும் கட்டியிருப்பது போன்று இடைவெளியிட்டு இடை தெரிவது போலிருக்க,
அதை கச்சிதமாக அணிந்து, ஹேர் பன் இட்டு நின்றிருந்த தன் மனைவியைக் கண்ட வித்யுத்திற்கு தன்னவளின் தூண்டலும், தென்றலின் தீண்டலும் போதுமானதாய் இருந்தது மோகத்தை கிளப்ப.
மெதுவாய் நீந்தியபடியே அவளிடம் சென்றவன், அவளின் பின்புறம் சென்று இருபக்கமும் கைகளைக் கொடுத்தபடி நிற்க, ஆதவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் தன்னவளின் மோன நிலையை கலைக்க விரும்பாதவன் அவளின் பக்கவாட்டில் சென்று நின்றுகொண்டு, தானும் சூரிய உதயத்தை பார்க்க ஆரம்பித்தான்.
ஆரஞ்சுப் பந்தாய் தகதகவென்று மின்னிக்கொண்டு சூரியன் முழுப் பந்தாய் கடலிலிருந்து பிறக்க, இருவரின் தண்ணீரில் நனைந்த மேனியும் மின்னத் துவங்க, தன்னவனைக் கண்டு அவள் மெல்ல புன்னகைக்க அவனும் புன்னகைத்தான்.
அந்த அமைதியின் சுகம் இருவரையும் இன்னிசையாய் கொஞ்ச, சிறிது நேரம் அங்கு நின்ற யாழ்மொழிக்கு உடல் வெடவெடப்பது போலத் தோன்ற, தன்னவன் தன்னைத் திரும்பிப் பார்க்கிறானா என்று திரும்பிப் பார்த்தபடியே அவள் எழுந்து செல்ல, அவளை சங்கடத்துக்குள்ளாக்க வேண்டாம் என்று எண்ணியவன், அவளை திரும்பிப் பார்க்கவில்லை.
அன்று காலை தனது ட்ராலியில் இருந்த வெளீர் நீல நிற ஜம்ப்ஸூட்டை அவள் அணிய, அவனும் அதே நிறத்தில் சட்டையும் முட்டி வரை இருந்த ப்ரான்டட் சாண்டல் ஷார்ட்ஸும்.
அன்று காலை அவளின் கரத்தோடு கரம் கோர்த்தவன் நாள் முழுக்க அவளின் கரத்தை விடாது சுற்றிக்கொண்டே இருக்க, ஆங்காங்கே கிடைத்த உணவுகளையும் பழச்சாறுகளையும் குடித்தவர்கள், கொஞ்சம் பேசவும் செய்தார்கள். அதாவது தேவையான இடங்களில் மட்டும்.
மாலைபோல அறைக்கு வந்து ஒரு மணி நேரம் தூங்கி எழுந்தவர்கள், இரவு உணவுக்கு தயாராகி வெளியே செல்ல நினைக்க, தனது ட்ராலியில் இருந்த லாவண்டர் நிற ப்ளோரல் மேக்ஸியை யாழ் எடுக்க, அவளைத் தடுத்தவன், தனது ட்ராலியில் இருந்த உடையை எடுத்து அவளிடம் தர, அதில் அவளுக்கு அளவுக்கதிகமாகத் தெரிந்தது அவனின் காதலா? தாபமா?
தன் மனதில் காதல் நிரம்பி இருக்க, அவனுக்காக அவள் தன்னையே முழுவதுமாய் கொடுக்கத் தயாராய் இருக்க, தன்னவனுக்கு இருப்பது காதலா காமமா என்று புரிந்துகொள்ள முடியாத பேதையவள், மனதில் பல குழப்பங்களைச் சுமந்துகொண்டிருக்க, அவளின் மென் வதனமும் அதையே பிரதிபலிக்க, அவன் விழிகளை நிமிர்ந்து பார்க்க தன்னவனின் இமை தட்டாது பார்வையில், பேதையவள் தடுமாறினாள்.
தன்னவளின் கரத்தில் உடையை வைத்தவன், சிகரெட்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்று நின்றுகொள்ள, அவளும் தன் கரத்தில இருந்த உடையுடன் ட்ரெஸிங் அறைக்குள் நுழைந்தாள்.